Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றத்தினை... நோக்கி, நகரும் போராட்டக்காரர்கள் – பாதுகாப்பினை பலப்படுத்த நடவடிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

நாடாளுமன்றத்தினை... நோக்கி, நகரும் போராட்டக்காரர்கள் – பாதுகாப்பினை பலப்படுத்த நடவடிக்கை.

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதற்காக இராணுவ கமாண்டோக்கள் குழுவொன்று வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்வதுவ சந்தியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்தநிலையிலேயே நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1291079

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்வதுவ சந்தியில் அமைதியின்மை

நாடாளுமன்றத்தை... அண்மித்த, பொல்வதுவ சந்தியில் அமைதியின்மை.

நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்வதுவ சந்தியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த நிலையில் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

https://athavannews.com/2022/1291076

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நாடாளுமன்றம் மீது தாக்குதல் மேற்கொண்டால்... பதில் தாக்குதலை நடத்துவதற்கு, அனுமதி வழங்குமாறு பாதுகாப்பு தரப்பினர் கோரிக்கை!

நாடாளுமன்றம் மீது தாக்குதல் மேற்கொண்டால், பதில் தாக்குதலை நடத்துவதற்கு தமக்கு அனுமதி வழங்குமாறு பாதுகாப்பு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.

எனினும், இந்தக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவில்லை என எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மான் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சந்திப்பில் முப்படைத் தளபதிகள் கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் மீது தாக்குதல் மேற்கொண்டால், பதில் தாக்குதலை நடத்துவதற்கு தமக்கு அனுமதி வழங்குமாறு முப்படையினர் இதன்போது கோரிக்கை விடுத்ததாகவும், இதற்கான அனுமதியை தம்மால் வழங்க முடியாது என தாம் தெரிவித்ததாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் நியமிக்கப்பட்டால் மாத்திரமே, தாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயார் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1291087

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100050725313019/videos/384020267164550 👈

பாராளுமன்றத்துக்குள் செல்லும் ஒரு வழி  என நினைக்கின்றேன்.
தவறென்றால்... மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/100050725313019/videos/384020267164550 👈

பாராளுமன்றத்துக்குள் செல்லும் ஒரு வழி  என நினைக்கின்றேன்.
தவறென்றால்... மன்னிக்கவும்.

ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே ......❤️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாடாளுமன்றம் மீது தாக்குதல் மேற்கொண்டால்... பதில் தாக்குதலை நடத்துவதற்கு, அனுமதி வழங்குமாறு பாதுகாப்பு தரப்பினர் கோரிக்கை!

உங்கள் கோரிக்கை உடனடியாகவே பரிசீலனைக்கு எடுத்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

இனி உங்கள் கடமையைச் செய்யுங்கள்.

1 hour ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/100050725313019/videos/384020267164550 👈

பாராளுமன்றத்துக்குள் செல்லும் ஒரு வழி  என நினைக்கின்றேன்.
தவறென்றால்... மன்னிக்கவும்.

எப்போதும் ஒருவழி வைத்திருக்க மாட்டார்கள்.

இப்படி ஏதாவது அவசரத்துக்கு ஓடுறதுக்கு சுரங்கபாதை என்றாலும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

JCP யெல்லாம் நாடாளுமன்ற திசையை நோக்கிப் போகின்றன . 

அனேகமாக ஞாயிறு அன்று நாடாளுமன்றம் ஆர்ப்பாட்டக்காறார்களிடம் இருக்கும்  என நம்புவோம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

அனேகமாக ஞாயிறு அன்று நாடாளுமன்றம் ஆர்ப்பாட்டக்காறார்களிடம் இருக்கும்  என நம்புவோம். 🤣

இந்த நாடாளுமன்றம் ராசி இல்லாதது.

கட்டிய நாளிலிருந்து ஒரே பிரச்சனை.

எனவே கொளுத்தி போட்டு புதியது எழுப்பணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

JCP யெல்லாம் நாடாளுமன்ற திசையை நோக்கிப் போகின்றன . 

அனேகமாக ஞாயிறு அன்று நாடாளுமன்றம் ஆர்ப்பாட்டக்காறார்களிடம் இருக்கும்  என நம்புவோம். 🤣

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தாலும்,
உள்நாட்டு சுற்றுலா பயணிகள்…..  ஜனாதிபதி மாளிகை, செயலகம், 
அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் போன்றவற்றை பார்க்க கொழும்புக்கு 
பெருமளவில் வருகிறார்கள். 
வாற கிழமையில் இருந்து… புதிய நாடாளு மன்றத்தையும் பார்ப்பார்கள் போலுள்ளது.
இதோடை… இலங்கை உள்ளூர்  உல்லாச பயணத்துறை மூலம்,
இலங்கையின் பொருளாதாரம் உயர்ந்து விடும். 😂 🤣

27 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த நாடாளுமன்றம் ராசி இல்லாதது.

கட்டிய நாளிலிருந்து ஒரே பிரச்சனை.

எனவே கொளுத்தி போட்டு புதியது எழுப்பணும்.

வாஸ்து பார்க்காமல், கட்டினால் இப்படித்தான்.
உடான்ஸ் சாமியிடம் @goshan_che என்ன பலகாரம் சாரி….
என்ன பரிகாரம் செய்ய வேணும் என்று கேட்க வேணும். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பல்குழல்களும்

பீரங்கிகளும்  முழங்கட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

பல்குழல்களும்

பீரங்கிகளும்  முழங்கட்டும்

நோயாளர் காவு வண்டிகள்… பெற்றோல் அடித்து, தயார் நிலையில் இருக்கட்டும்.😁

  • கருத்துக்கள உறவுகள்

சபாநாயகரின் வீடு சுற்றிவளைப்பு 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மக்கள் போராட்டம் இரத்தக் களரி இல்லாமல் இலக்கை அடைய வேண்டும்.பொருளாதர நெருக்கடியில் சிக்கி இருப்பது எமது அஙகிருக்கும் மக்களும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றே குலம் ஒற்றுமையே பலம். 

  • கருத்துக்கள உறவுகள்

The power of public

  • கருத்துக்கள உறவுகள்

போராடடக் காரர்களில் பலர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளால் , கண் எரிவிற்கு ஆளானதாகவும் காயப்பட்ட்தாகவும் ஒரு சில வீரர்கள்  இறந்து விட்ட்தாகவும்  அறியப்ப டுகிறது .

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, outdoors and text

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தாலும்,
உள்நாட்டு சுற்றுலா பயணிகள்…..  ஜனாதிபதி மாளிகை, செயலகம், 
அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் போன்றவற்றை பார்க்க கொழும்புக்கு 
பெருமளவில் வருகிறார்கள். 
வாற கிழமையில் இருந்து… புதிய நாடாளு மன்றத்தையும் பார்ப்பார்கள் போலுள்ளது.
இதோடை… இலங்கை உள்ளூர்  உல்லாச பயணத்துறை மூலம்,
இலங்கையின் பொருளாதாரம் உயர்ந்து விடும்
😂 🤣

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலங்கையில் விசேட இடங்களை பார்ப்பதற்கு கட்டணம் 1500 ,3000  ரூபாவாக இருந்தது (முன்பு) இலங்கையருக்கு 50- 100 ரூபா கட்டணம். ஆனால் இப்போது  ஜனாதிபதி மாளிகை நீச்சல்குளம்  செயலகம், பிரதமர் மாளிகை இவற்றை பார்க்க வருகின்ற உள்நாட்டு சுற்றுலா பயணிகள் எல்லாமே இலவசமாக தானே அனுபவிக்கிறார்கள் 😂

4 hours ago, தமிழ் சிறி said:

வாஸ்து பார்க்காமல், கட்டினால் இப்படித்தான்.

வாஸ்து பார்த்து கட்டியிருந்தாலும் பயன் இல்லை. சிங்களவர்களுக்கு நெருப்பு வைத்து கொளுத்துவது மிகவும் பிடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

உடான்ஸ் சாமியிடம் @goshan_che என்ன பலகாரம் சாரி….
என்ன பரிகாரம் செய்ய வேணும் என்று கேட்க வேணும்.

பலகாரம் …சை…பரிகாரம் என்னெவெண்டால்…

@நன்னிச் சோழன். ஐ ஜனாதிபதியாக்கி உடனே நாட்டை பிரிச்சு கொடுப்பதுதான்.

3 hours ago, ஈழப்பிரியன் said:

இவ எங்கட @பெருமாள்ட தோஸ்த்

பெரும்ஸ் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லி குடுத்திருக்கிறார்👌👏👏👏

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுவைப்பிரியன் said:

இந்த மக்கள் போராட்டம் இரத்தக் களரி இல்லாமல் இலக்கை அடைய வேண்டும்.பொருளாதர நெருக்கடியில் சிக்கி இருப்பது எமது அஙகிருக்கும் மக்களும் தான்.

உண்மைதான்.. ஆனால் நிலைமைகளை பார்க்கும் பொழுது குழு மோதல்கள் தொடங்கிவிட்டது.. இந்த போராட்டத்தின் நோக்கம் கூட இந்த மோதல்களால் பிழைக்க கூடும்.. யாருக்கு தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, goshan_che said:

பலகாரம் …சை…பரிகாரம் என்னெவெண்டால்…

@நன்னிச் சோழன். ஐ ஜனாதிபதியாக்கி உடனே நாட்டை பிரிச்சு கொடுப்பதுதான்.

எனது நிதி அமைச்சுப் போட்டியாளரின் கூற்றை நான் வழிமொழிகிறேன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.