Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் கருத்துக்களுக்கு... செவிசாய்க்கும் தலைவருக்கே, ஆதரவு – விக்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனவழிப்பின் மறு வடிவமே வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு- சர்வதேச மாநாட்டில் சி.வி. உரை!

தமிழர்களின் கருத்துக்களுக்கு... செவிசாய்க்கும் தலைவருக்கே, ஆதரவு – விக்கி

தமிழ் சமூகத்தின் கருத்துக்களுக்கு செவிசாய்க்கும் தலைவருக்கே ஆதரவு என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

சுதந்திரத்தின் பின்னரும் தமிழ் மக்கள் பல பிரச்சினைகளை தொடர்ந்தும் எதிர்நோக்கி வருவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

30 வருடங்களுக்கு மேலாக நிலவும் இந்த பிரச்சினைகளுக்கு மக்கள் போராட்டத்தின் பின்னராவது தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆகவே தாம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் பக்கச்சார்பற்ற முறையில் செயற்படவுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாண பாடுபடும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

https://athavannews.com/2022/1291364

  • Replies 54
  • Views 2.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

தமிழர்களின் கருத்துக்களுக்கு... செவிசாய்க்கும் தலைவருக்கே, ஆதரவு – விக்கி

70 வருசமாய் தமிழர் தரப்பு  காது  கேட்காதவனுக்கா கருத்து சொல்லிக்கொண்டிருக்கு....????

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

70 வருசமாய் தமிழர் தரப்பு  காது  கேட்காதவனுக்கா கருத்து சொல்லிக்கொண்டிருக்கு....????

இவர் ஒருவர்தான் இதையாவது சொல்கிறார்.

ஒரு கோஸ்டி ஏதோ இலங்கை அரசியலை தீர்மானிக்கும் தோரணையில் அலையுது.

மறு கோஸ்டி தங்கள் மறைமுக எஜாமனர்களுக்கு ஆபத்து என்றதும் ஓடி ஒழிந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிட்ட யாரையா அதையெல்லாம் கேட்டது. 

விக்கியர் தான் அரைச் சிங்களம் என்றவுடன் எப்படியும் கதைக்கலாம் என்று நினைக்கிறார் போல கிடக்குது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

எவ்வாறாயினும் தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாண பாடுபடும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இந்த கருத்தில் என்ன பிழை உண்டு  ?.   விக்கியார் ஒரு சிறந்த உண்மை நேர்மை உள்ள தலைவர்   பிரபாகரனுக்கு பின்னர் சிங்களம் பயப்பிடும் தமிழ் தலைவர் விக்கி தான்   சம்பந்தர்.  சுமந்திரன் மாவை...போன்றவர்கள் இருக்கும் வரை தமிழருக்கு தீர்வு கிடையாது  இவர்கள் அரசியலில் இருந்து அகற்றப்படவேண்டியவர்கள்.  கொழும்பில் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் மற்ற ஒன்றும் இந்தியா வெளிநாடுகளில் வேறு ஒன்றும் பேசுபவர்களிடம் தீர்வு காண்பதற்கு ஆன.  அடிப்படை தகுதியோ இல்லை ஆனால் விக்கி அப்படிபட்டவரில்லை எங்குமே ஒரே பேச்சு தான்   என்னுடைய மகன் உருவம்  தான் என்னை போல் ஆனால் செயல் சிந்தனைகள் கருத்துகள் முற்றிலும் வேறுபட்டவை. விக்கியின். மகன்கள் சிங்களத்திகளை திருமணம் செய்தவுடன்  விக்கியை அரை சிங்களம் என்று எப்படி அழைக்க முடியும்? 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kandiah57 said:

கந்தையர் உங்கள் கற்பனை உணர்வுக்கு அளவே இல்லை.  

"பிரபாகரனுக்கு பின்னர் சிங்களம் பயப்பிடும் தமிழ் தலைவர் விக்கி தான் " 🤣

விக்கியர் முழுத் தமிழன். அவர் பிள்ளைகள்தான் அரைச் சிங்களம் என்கிறீர்களா ? பகிடி விடாதேயுங்கோ கந்தையர். 

விக்கியர் வார்த்தை மாறிப் பேசாத காரணத்தால் விக்கியருக்கு முழுத் தகுதியும் உள்ளதெனக் கருதுகிறீர்கள் அப்படித்தானே ? 

நானோ அவர் நீதிபதியாக அல்ல சட்டத்துறை மாணவனாக சட்டம் படிப்பதற்கே தகுதி இல்லாதவரென என நம்புகிறேன்.  .

(இந்திய நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பிடப்பட்ட பிறேமானந்தாவை விடுதலை செய்யும்படி  இந்தியப் பிரதமரிடமே கோரிக்கையை முன்வைத்தவரல்லவா இந்த  பிரதம நீதியரசர்  😏)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாண பாடுபடும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பேன்

தமிழரைப்பற்றி யாரும் இன்னும் வாயே திறக்கவில்லையே? சிந்திக்கவுமில்லை. ஒருவேளை கடைசியில் நினைவு வந்து அணுகுவதென்றால் இந்த கொள்கையோடு என்னை எங்களை அணுகுங்கள் என்று சொல்கிறார் போலுள்ளது. தமிழரின் வாக்கு தேவையில்லை அவர்கள் இல்லாமல் ஆட்சியை பிடிக்கலாம் என்று கர்சித்தவருக்கு அந்த மக்களால் கற்பிக்கப்பட்ட பாடம் எல்லோருக்கும் பாடமாக இருக்க வேண்டும். இலங்கையில் தமிழன் இல்லாமல் அரசியல் முழுமை இல்லை, அரசியல் செய்வதற்கு ஏதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

விக்கியர் முழுத் தமிழன். அவர் பிள்ளைகள்தான் அரைச் சிங்களம் என்கிறீர்களா ? பகிடி விடாதேயுங்கோ கந்தையர். 

விக்கியரின் தாய் தந்தை முழுத் தமிழர்கள் எனவே… விக்கி முழுத் தமிழன் தான்   விக்கியரும்  அவரது மனைவியும் முழுத் தமிழர்கள் எனவே அவர்களின் மகனும் முழுத் தமிழன்..மேலும் விக்கியின் மகன் முழுத் தமிழன்  மருமகள் முழுத் சிங்களம் எனவே… பேத்தி அரை சிங்களம் அரை தமிழ்    இது பகிடி கிடையாது  உங்களுக்கு இவ்வளவு தூரம் விளக்கம் தரவேண்டிவருமென்று நான் எதிர்பார்க்கவில்லை நன்றி வணக்கம் 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

கந்தையா அண்ணேய்… இந்த வெக்கைக்கு, ரென்சன் ஆகாதேங்கோ. 😂
ஓரு கப் “ஐஸ் வாட்டர்” குடியுங்கோ…. கூல் டவுன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

கந்தையா அண்ணேய்… இந்த வெக்கைக்கு, ரென்சன் ஆகாதேங்கோ. 😂
ஓரு கப் “ஐஸ் வாட்டர்” குடியுங்கோ…. கூல் டவுன். 🤣

நாளையதினம் குடிப்போம். இப்போது 19.00மணிக்கு பிறகு குளிர்......    😂

  • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, Kandiah57 said:

விக்கியரின் தாய் தந்தை முழுத் தமிழர்கள் எனவே… விக்கி முழுத் தமிழன் தான்   விக்கியரும்  அவரது மனைவியும் முழுத் தமிழர்கள் எனவே அவர்களின் மகனும் முழுத் தமிழன்..மேலும் விக்கியின் மகன் முழுத் தமிழன்  மருமகள் முழுத் சிங்களம் எனவே… பேத்தி அரை சிங்களம் அரை தமிழ்    இது பகிடி கிடையாது  உங்களுக்கு இவ்வளவு தூரம் விளக்கம் தரவேண்டிவருமென்று நான் எதிர்பார்க்கவில்லை நன்றி வணக்கம் 🙏

கந்தையர் 

உத உவ்வளவு சீரியசா எடுப்பீங்களெண்டு எதிர்பார்க்கயில்ல. 

நான் சொல்ல வந்த விடயம், கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகளை முழுமையாக நம்ப முடியாது என்பதுதான். 

கொஞ்சம் பொறுங்கோ அண்ணர், 

காலை எழும்பினஉடன குத்தரிசி பழஞ்சோத்தில கொஞ்சம் உப்பும் தேசிப்புளியும் ஒரு வெங்காயம் மிளகாயோட ஒரு கடி கடியுங்கோ சூடு பறந்துவிடும். சரியே நாஞ்சொல்லுறது...

இல்லாட்டி ஒரு பனை மரத்த்துக் கள்ளில ரெண்டு பிளாவ மரத்தில இருந்து இரக்கின உடன, அதுவும் பொழுது புலரேக்க, அடிச்சீங்களெண்டா சூடு ஒரு கிழமைக்கு எட்டியும் பாராது. வசதி எப்படி ? 

😉

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

கந்தையா அண்ணேய்… இந்த வெக்கைக்கு, ரென்சன் ஆகாதேங்கோ. 😂
ஓரு கப் “ஐஸ் வாட்டர்” குடியுங்கோ…. கூல் டவுன். 🤣

உடற்பயிற்சி செய்தாலும் ரெஞ்சன் குறையும்.....:379:

  • கருத்துக்கள உறவுகள்
On 17/7/2022 at 22:51, Kapithan said:

விக்கியர் முழுத் தமிழன். அவர் பிள்ளைகள்தான் அரைச் சிங்களம் என்கிறீர்களா ? பகிடி விடாதேயுங்கோ கந்தையர். 

கற்ப்ஸ்,

முழுத்தமிழரனான கஜன்ஸ்சும், சம், சும், மாவை கிழித்து தொங்கவிட்டுட்டினம், விக்கியர் கிழிக்கவில்லை எண்டுறியளோ?

விக்கி மட்டும் அல்ல அவர் பிள்ளைகளும் முழு தமிழர் தான் பேரபிள்ளைகள்தான் அரை தமிழர் . 

ஆனால் தலைவர்களின் ரிசிமூலம், நதி மூலம் பார்க்காமல் - அவர்கள் கொள்கை, செயல்பாட்டை மட்டும் அல்லவா நாம் விமர்சிக்க வேண்டும் கற்ப்ஸ்.

இல்லாவிட்டால் தேவக்காரன் என்பதால் சுமந்திரனை சாடுவோர்க்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாது போய்விடும் அல்லவா?

4 hours ago, Kapithan said:

நான் சொல்ல வந்த விடயம், கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகளை முழுமையாக நம்ப முடியாது என்பதுதான். 

ஏன் இந்த அப்பட்டமான பிரதேசவாதம்?

தந்தை செல்வா கூட மலேசியாவில் பிறந்த பின் கொழும்பை மையமாக கொண்ட ஒருவர்தான்.

லண்டனை, மும்பையை மையமாக கொண்ட ஜின்னாதான் பாக்கிஸ்தானை உருவாக்கினார்.

டக்லசும், அங்கஜயன்ம், கஜனும், கஜனும், சிவாஜியும், அமிர்தலிங்கமும், சித்தரும், சங்கரியும் யாழ்/வடக்கு மைய அரசியல்வாதிகள் - இவர்களை விட விக்கி எந்தவகையில் நம்ப தகாதவர்?

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

கற்ப்ஸ்,

முழுத்தமிழரனான கஜன்ஸ்சும், சம், சும், மாவை கிழித்து தொங்கவிட்டுட்டினம், விக்கியர் கிழிக்கவில்லை எண்டுறியளோ?

விக்கி மட்டும் அல்ல அவர் பிள்ளைகளும் முழு தமிழர் தான் பேரபிள்ளைகள்தான் அரை தமிழர் . 

ஆனால் தலைவர்களின் ரிசிமூலம், நதி மூலம் பார்க்காமல் - அவர்கள் கொள்கை, செயல்பாட்டை மட்டும் அல்லவா நாம் விமர்சிக்க வேண்டும் கற்ப்ஸ்.

இல்லாவிட்டால் தேவக்காரன் என்பதால் சுமந்திரனை சாடுவோர்க்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாது போய்விடும் அல்லவா?

ஏன் இந்த அப்பட்டமான பிரதேசவாதம்?

தந்தை செல்வா கூட மலேசியாவில் பிறந்த பின் கொழும்பை மையமாக கொண்ட ஒருவர்தான்.

லண்டனை, மும்பையை மையமாக கொண்ட ஜின்னாதான் பாக்கிஸ்தானை உருவாக்கினார்.

டக்லசும், அங்கஜயன்ம், கஜனும், கஜனும், சிவாஜியும், அமிர்தலிங்கமும், சித்தரும், சங்கரியும் யாழ்/வடக்கு மைய அரசியல்வாதிகள் - இவர்களை விட விக்கி எந்தவகையில் நம்ப தகாதவர்?

ஐயோ ஐயோ ஐயோ,

நான் பிரதேசவாதம் கதைக்கவில்லை கோசான், எனது எழுத்து நான் சொல்ல வந்ததை தெளிவாக வெளிப்படுத்தவில்லை என நினைக்கிறேன். 

விடயம் இதுதான். 

கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் மற்றைய இனங்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்பைக்(பல வழிகளிலும்) கொண்டிருப்பதால் வடக்கு கிழக்கு தமிழர்களின் உண்மையான விருப்பைப் புரிந்துகொண்டு அவர்களின் அபிலாசைகளை முற்றிலுமாகப் பிரதிநிதிப்படுத்துதல் முடியாத காரியம் என்பதுதான் நான் கூற விரும்பியது. 

இங்கே பிரதேசவாதம் என்பது என் சிந்தனையில் துளியளவும் இல்லை. 

நடைமுறைச் சாத்தியமானதை மட்டுமே கூறுகிறேன்.. 

நாங்கள் எப்படித்தான் சம்பந்தரைக் கரிச்சுக் கொட்டினாலும், சம்பந்தரின் இடத்தை விக்கியராலோ அல்லது சுமந்திரனாலோ  (நேர்மையாக) நிரப்ப முடியும் என நம்புகிறீர்களா ? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

விக்கியரின் தாய் தந்தை முழுத் தமிழர்கள் எனவே… விக்கி முழுத் தமிழன் தான்   விக்கியரும்  அவரது மனைவியும் முழுத் தமிழர்கள் எனவே அவர்களின் மகனும் முழுத் தமிழன்..மேலும் விக்கியின் மகன் முழுத் தமிழன்  மருமகள் முழுத் சிங்களம் எனவே… பேத்தி அரை சிங்களம் அரை தமிழ்    இது பகிடி கிடையாது  உங்களுக்கு இவ்வளவு தூரம் விளக்கம் தரவேண்டிவருமென்று நான் எதிர்பார்க்கவில்லை நன்றி வணக்கம் 🙏

விக்கியர் ஒன்றும் தானாக அரசியலுக்கு வரவில்லை, அவரை இழுத்துக்கொண்டு வரும்போது அவர் கொழும்பு வாசியென்றோ, அரைச் சிங்களமென்றோ, சிங்களச்சம்பந்தியென்றோ யாருக்கும் தெரியவில்லை. தங்களை தக்கவைக்கும் தெய்வமாக தெரிந்தார். ஆனால் தங்களுக்கு அடிபணிந்து போகவில்லையென்றதும் இவற்றையெல்லாம் கண்டுபிடித்து அவரை ஓரங்கட்ட வெளிக்கிட்டார்கள். ஆனால் இதை கண்டுபிடித்து பரப்பியவரும் அதே ஓடத்தில் இருக்கிறார், அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. தணிக்கை. விக்கியர் ஒருபோதும் சிங்களவருடன் வாழ்வது பெரும் சந்தோசம் என்று சொல்லவில்லை, தமிழரின் தேவைகளை புறந்தள்ளிவிட்டு அடுத்தவரின் தேவையை முன்னிறுத்துவதில்லை, என்று மக்கள் அவரை தெரிந்தெடுத்தார்களோ அன்றே அவர்களோடு வாழ வந்துவிட்டார். ஏனோ விக்கியர் வாய் திறந்தால் சிலருக்கு பயம், கொதி வந்துவிடுகிறது. அவரை சாடுவோரின் பின்புலத்தை ஆராய்ந்தால், இவர்கள் அவர்கள் ஏதோ வகையில் அவரை விட சிங்கள அல்லது வேறு ஒரு இன நெருக்கம் கலப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். இது விக்கியரை விமர்சித்த பலபேரின் பின்புலம் அறிந்தபின் நான் தெரிந்துகொண்டது. அவரின் அரசியலை விமர்சிக்க முடியாவிடில் வாழ்க்கையை விமர்சித்து வெறுப்பேற்றுவது, விலகியிருக்கச்செய்வது, நாறடிப்பது. இது ஒரு பண்பற்றவரின் செயல். ஆத்தாதவன் செயல், அவரை எதிர்கொள்ள முடியாதவரின் செயல், பொறாமையாகக் கூட இருக்கலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

விக்கியரை... அரசியல் செய்ய விடாமல், சேறடிப்பதில் சுமந்திரன் முன்னுக்கு நிற்பார்.
வடமாகாண சபைக்கு... தமிழ் தேசிய கூட்டமைப்பு, எத்தனை அலுப்பு கொடுத்தார்கள்.
தங்களை மேவி.... விக்கியர் அரசியல் செய்யக் கூடாது என்பதில் இந்தக் கூட்டம்,
கீழ்த்தரமான அத்தனை வேலைகளையும் செய்யும். 

  • கருத்துக்கள உறவுகள்

[அவரை சாடுவோரின் பின்புலத்தை ஆராய்ந்தால், இவர்கள் அவர்கள் ஏதோ வகையில் அவரை விட சிங்கள அல்லது வேறு ஒரு இன நெருக்கம் கலப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். இது விக்கியரை விமர்சித்த பலபேரின் பின்புலம் அறிந்தபின் நான் தெரிந்துகொண்டது. ]

வெளிநாடுகளிலேயே தமிழ்தேசியம் பேசி கொண்டு குடும்பத்தில் சிங்களவர்களுடன் திருமணம் செய்து கொள்ளும் போது, பெரும்பான்மை சிங்களவர்களுடன் வாழும் இலங்கை நாட்டில் இது சாதாரணம் தானே.
ஆனால் விக்னேஸ்வரனை விமர்சிப்பவர்கள் சிங்கல கலப்பு தமிழர்கள் என்பது தான் வேடிக்கை. இனி அவரை யாழ்களத்தில் யாரும் விமர்சிக்க வர மாட்டார்கள் 😂

சுமந்திரனை  விமர்சிப்பவர்கள்  பச்சை தமிழர்கள் 😂

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி நம்ம சம்மந்தர் ஐயாவ கண்டதோ யாரும்🤔🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Kapithan said:

நாங்கள் எப்படித்தான் சம்பந்தரைக் கரிச்சுக் கொட்டினாலும், சம்பந்தரின் இடத்தை விக்கியராலோ அல்லது சுமந்திரனாலோ  (நேர்மையாக) நிரப்ப முடியும் என நம்புகிறீர்களா ? 

விக்கியர்ரை அரசியல் விசயத்திலை சம் சும் கொம்பனி ஊத்தை வேலை நரி வேலை பார்த்திரா விட்டால் நீங்கள் சொன்ன இடத்தை நிரப்பியிருப்பார்.

சுமந்திரன் கடைசியாக நடந்த தேர்தலில் சசிகலா ரவிராஜ்க்கு செய்த நரிவேலை தெரியும் தானே? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

விக்கியரை... அரசியல் செய்ய விடாமல், சேறடிப்பதில் சுமந்திரன் முன்னுக்கு நிற்பார்.
வடமாகாண சபைக்கு... தமிழ் தேசிய கூட்டமைப்பு, எத்தனை அலுப்பு கொடுத்தார்கள்.
தங்களை மேவி.... விக்கியர் அரசியல் செய்யக் கூடாது என்பதில் இந்தக் கூட்டம்,
கீழ்த்தரமான அத்தனை வேலைகளையும் செய்யும். 

வெளிநாடெல்லாம் போய் விக்கியர் பதவி விலக வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாய் உளறிக்கொண்டு திரிந்த சுமந்திரன், அனந்தி மீதும் பிற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுத்த சம்பந்தர் இந்த விடயத்தில் வாயை அடக்கிக்கொண்டிருந்த நடுவுநிலைமையும், முடிந்தால் கட்சியை விட்டு வெளியேறி தேர்தலில் நின்று வென்று காட்டட்டும் என்று சவால் விட்ட சுமந்திரன், அத்தனையையும் அமைதியாக, பண்பாக ஏற்று, வென்று காட்டியுள்ளார். சிலர் விக்கியரை விமர்சிப்பதால் தங்களை பிறர் விமர்சிப்பதை தவிர்க்கும் தற்காப்பாய் நினைக்கிறார்களோ? அல்லது தங்களை அதன்பின்னால் மறைப்பார்க்கிறார்களோ தெரியவில்லை? ஆனால் விமர்சிக்கப்படுபவரை விட ,விமர்சிக்கிறவர்களின் பின்புலத்தை ஆராய்ந்தால் உண்மைக் காரணி புரியும்!

1 hour ago, குமாரசாமி said:

விக்கியர்ரை அரசியல் விசயத்திலை சம் சும் கொம்பனி ஊத்தை வேலை நரி வேலை பார்த்திரா விட்டால் நீங்கள் சொன்ன இடத்தை நிரப்பியிருப்பார்.

சுமந்திரன் கடைசியாக நடந்த தேர்தலில் சசிகலா ரவிராஜ்க்கு செய்த நரிவேலை தெரியும் தானே? :cool:

சுமந்திரனைவிட வேறு யாருமில்லை என்று பலர் இங்கு வந்து கதை அளப்பது உண்டு. உண்மையில் இல்லை என்பதில்லை, யாரும் முன்வரமாட்டார்கள். காரணம் முன்னேற விடமாட்டார்கள், மாறாக நாறடித்து விடுவார்கள். காரணம் தாங்கள் செய்யாததை வேறு யாரும் செய்து மக்களிடம் நன்மதிப்பு பெறக்கூடாது, தங்களை விட யாரும் மேல் வரக்கூடாது என்கிற சுயநலம். அதற்காக மக்கள் இவர்களை தெரிந்தெடுத்து கதிரையில் உக்காத்திவிட்டு அவஸ்த்தை படவேணும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

தமிழர்களுக்கு மறதிக் குணம் என்றவுடன்...
தமிழர்களுக்கு எதிராக... இந்தக் கயவர்கள் செய்த நரிக் குணத்தை காலம் மன்னிக்காது.

முன்பு மாதிரி... பத்திரிகை செய்திகள் என்றால்...
இவர்கள் செய்த துரோகங்கள் மறக்கடிக்கப் பட்டிருக்கும்.

இப்போ இணைய வெளியில்... அவர்களின் நாடகங்கள் அனைத்தையும்,
எவரும் உடனே பார்க்கக் கூடியதாக இருப்பதால்...
இவர்களின் திருகு தாளம் இனியும் பலிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

விக்கியர்ரை அரசியல் விசயத்திலை சம் சும் கொம்பனி ஊத்தை வேலை நரி வேலை பார்த்திரா விட்டால் நீங்கள் சொன்ன இடத்தை நிரப்பியிருப்பார்.

சுமந்திரன் கடைசியாக நடந்த தேர்தலில் சசிகலா ரவிராஜ்க்கு செய்த நரிவேலை தெரியும் தானே? :cool:

கனகாலமென்றால் தமிழர் மறந்திருப்பினம். இது கடைசித்தேர்தல்லை சம்-சும் குழு ஆடின தப்பாட்டத்தை ஆரும் மறப்பினமே. நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

விக்கியர் ஒன்றும் தானாக அரசியலுக்கு வரவில்லை, அவரை இழுத்துக்கொண்டு வரும்போது அவர் கொழும்பு வாசியென்றோ, அரைச் சிங்களமென்றோ, சிங்களச்சம்பந்தியென்றோ யாருக்கும் தெரியவில்லை. தங்களை தக்கவைக்கும் தெய்வமாக தெரிந்தார். ஆனால் தங்களுக்கு அடிபணிந்து போகவில்லையென்றதும் இவற்றையெல்லாம் கண்டுபிடித்து அவரை ஓரங்கட்ட வெளிக்கிட்டார்கள். ஆனால் இதை கண்டுபிடித்து பரப்பியவரும் அதே ஓடத்தில் இருக்கிறார், அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. தணிக்கை. விக்கியர் ஒருபோதும் சிங்களவருடன் வாழ்வது பெரும் சந்தோசம் என்று சொல்லவில்லை, தமிழரின் தேவைகளை புறந்தள்ளிவிட்டு அடுத்தவரின் தேவையை முன்னிறுத்துவதில்லை, என்று மக்கள் அவரை தெரிந்தெடுத்தார்களோ அன்றே அவர்களோடு வாழ வந்துவிட்டார். ஏனோ விக்கியர் வாய் திறந்தால் சிலருக்கு பயம், கொதி வந்துவிடுகிறது. அவரை சாடுவோரின் பின்புலத்தை ஆராய்ந்தால், இவர்கள் அவர்கள் ஏதோ வகையில் அவரை விட சிங்கள அல்லது வேறு ஒரு இன நெருக்கம் கலப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். இது விக்கியரை விமர்சித்த பலபேரின் பின்புலம் அறிந்தபின் நான் தெரிந்துகொண்டது. அவரின் அரசியலை விமர்சிக்க முடியாவிடில் வாழ்க்கையை விமர்சித்து வெறுப்பேற்றுவது, விலகியிருக்கச்செய்வது, நாறடிப்பது. இது ஒரு பண்பற்றவரின் செயல். ஆத்தாதவன் செயல், அவரை எதிர்கொள்ள முடியாதவரின் செயல், பொறாமையாகக் கூட இருக்கலாம்!

வடமாகணசபையைத் தமது சொற்படி ஆடும் குரங்கென நினைத்த சம்-சும போன்றோருக்கு, அவர்களால் ஆட்டமுடியாமற்போனதால் அவரை செயற்படாது தடுத்து வெளியேற்றினார்கள். அதைவிட சிங்கள எசமான விசுவாசம் கரணியமாக 'தமிழினப் படுகொலை' தீர்மானத்தை நிறைவேற்றியதும் முக்கிய கரணியாமாக இருந்தது. இவையெல்லாம் பழைய கதையல்லவே. எல்லா அரசியல்வாதியளும் சமிபாட்டிலிருக்க சிங்களம் செய்யுதோ இல்லையோ குறைந்தபட்சம் கருத்தையாவது முன்வைத்தளமை வரவேற்கப்படவேண்டியதே.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/7/2022 at 01:13, தமிழ் சிறி said:

ஆகவே தாம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் பக்கச்சார்பற்ற முறையில் செயற்படவுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

1. வாக்களிக்காமல் விடல்
2. ரனிலுக்கு வாக்களித்தல்
3.டலசுக்கு வாக்களித்தல்
4.  அநுரவுக்கு வாக்களித்தல்

உங்களின் தேர்வு என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nunavilan said:

தமிழ் அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

1. வாக்களிக்காமல் விடல்
2. ரனிலுக்கு வாக்களித்தல்
3.டலசுக்கு வாக்களித்தல்
4.  அநுரவுக்கு வாக்களித்தல்

உங்களின் தேர்வு என்ன? 

எனது வாக்கு இலக்கம்  1 க்கே

2 hours ago, nochchi said:

வடமாகணசபையைத் தமது சொற்படி ஆடும் குரங்கென நினைத்த சம்-சும போன்றோருக்கு, அவர்களால் ஆட்டமுடியாமற்போனதால் அவரை செயற்படாது தடுத்து வெளியேற்றினார்கள். அதைவிட சிங்கள எசமான விசுவாசம் கரணியமாக 'தமிழினப் படுகொலை' தீர்மானத்தை நிறைவேற்றியதும் முக்கிய கரணியாமாக இருந்தது. இவையெல்லாம் பழைய கதையல்லவே. எல்லா அரசியல்வாதியளும் சமிபாட்டிலிருக்க சிங்களம் செய்யுதோ இல்லையோ குறைந்தபட்சம் கருத்தையாவது முன்வைத்தளமை வரவேற்கப்படவேண்டியதே.

சிங்களம் செய்யுதோ இல்லையோ குறைந்தபட்சம் கருத்தையாவது முன்வைத்தளமை வரவேற்கப்படவேண்டியதே.

உண்மை.

Edited by Kapithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.