Jump to content

இலங்கை நெருக்கடி: குலுக்கல் முறையில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படுமா? - அரசியல் சட்டம் என்ன சொல்கிறது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: குலுக்கல் முறையில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படுமா? - அரசியல் சட்டம் என்ன சொல்கிறது?

  • எம். மணிகண்டன்
  • பிபிசி தமிழ், இலங்கையிலிருந்து
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

நாடாளுமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகி புதிய அதிபரைத் தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில், யார் அதிபராவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இலங்கையின் அரசியல் சட்டப்படி, தேர்தல் இல்லாமல் நாடாளுமன்றம்தான் புதிய அதிபரைத் தேர்வு செய்யப்போகிறது. ஆனால் அதில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்ற தெளிவான முடிவு கிடைக்காத நிலையில், குலுக்கல் முறையில் அதிபரைத் தேர்வு செய்யும் சூழல் ஏற்படும்.

அதிபர் பதவிக்கான வேட்பு மனுக்கள் வரும் 19-ஆம் தேதி பெறப்படுகிறது. 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கும். அன்றே யார் அதிபர் என்பது தெரிந்துவிடும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் அதிபர் பதவியில் இருந்து விலகி அதன் பிறகு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த வாக்கெடுப்பில் போட்டி இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. தற்போது அதிபரின் பொறுப்புகளை தற்காலிகமாக மேற்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த டலஸ் அழகம்பெரும உள்ளிட்ட பலர் இதில் போட்டியிடுவார்கள் என்பது தெரியவருகிறது.

இலங்கை அரசியல் சட்டப்படி இடைக்காலத்தில் புதிதாகத் தேர்வு செய்யப்படும் அதிபர், முந்தைய அதிபரின் பதவிக் காலத்தை நிரப்பும் வகையிலேயே செயல்படப் போகிறார். அதனால் முழு பதவிக் காலமும் புதிய அதிபருக்குக் கிடைக்காது.

அதிபர் பதவி காலியானது முதல் ஒரு மாதத்துக்குள்ளாக புதிய அதிபரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று இலங்கை அரசியல் சட்டம் கூறுகிறது. இந்த நடைமுறைகள்தான் இப்போது தொடங்கியிருக்கின்றன.

 

போராட்டம்

அதிபர் தேர்வுக்கான வாக்கெடுப்பு எப்படி நடக்கும்?

அறிவிக்கப்பட்டபடி வரும் 20-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடியதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் வாக்குப்பெட்டி வைக்கப்படும். பின்னர் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் அழைத்து அவர்களுக்கு நாடாளுமன்ற தலைமைச் செயலாளர் வாக்குச் சீட்டு ஒன்றை அளிப்பார். இதில் வேட்பாளர்கள் பெயர்களும் அவற்றுக்கு எதிரே கட்டங்களும் இருக்கும்.

இந்த வாக்கெடுப்பு விருப்ப வாக்கு முறையில் (Preferential voting) நடக்கும். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் அதிபர் பதவிக்குப் போட்டியிடும்போது ஒவ்வொருக்கும் ஒன்று முதல் எண்கள் முறையில் வரிசைப்படுத்தி விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் எந்த வேட்பாளர் அதிபராக வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவரது பெயருக்கு நேரே உள்ள கட்டத்தில் ஒன்று எனக் குறிப்பிட வேண்டும். இதேபோல அடுத்தடுத்த விருப்பங்களை இரண்டு, மூன்று என வரிசைப்படுத்த வேண்டும்.

ராமசாமி, குப்புசாமி என இருவர் போட்டியிடுகிறார்கள் என்றால் ராமசாமிக்கு 1 என்றும் குப்புசாமிக்கு 2 என்றும் தனது விருப்பத்தேர்வை அளிக்கலாம். இதற்கு என்னவென்றால், ராமசாமி தனது முதல் விருப்பம் என்றும் குப்புசாமி இரண்டாவது விருப்பம் என்பதும் இதற்குப் பொருள்.

வாக்குப் பதிவு முடிந்த பிறகு ஒன்று என்ற விருப்பத் தேர்வின் அடிப்படையில் வாக்குகள் எண்ணப்படும். 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றிருந்தால் அவரே அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்.

மாறாக யாருக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்க வில்லை என்றால், குறைந்த எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றவர் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். அவரது வாக்குகளில் இரண்டாவது விருப்பத் தேர்வு யாருக்கு இருக்கிறது என்ற அடிப்படையில் அந்த வாக்குகள் மற்றவர்களுக்குப் பிரித்து அளிக்கப்படும்.

அதனால் ஒரே ஒரு முறை அளிக்கப்பட்ட வாக்குகள் அடுத்தடுத்த சுற்றுகளாக எண்ணப்படும்.

 

ரணில்

பட மூலாதாரம்,PM OFFICE

எப்போது குலுக்கல் முறையில் அதிபர் தேர்வு செய்யப்படுவார்?

விருப்பத் தேர்வு முறையின் இறுதியில் வாக்குகள் எண்ணப்படும்போது 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

அப்படி யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றவர் அதிபராகத் தேர்வு செய்யப்படுவார்.

ஒருவேளை வாக்கு எண்ணிக்கை முடிவில் இரண்டும அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு ஒரே எண்ணிக்கையிலான வாக்குகள் கிடைத்து சமநிலை ஏற்பட்டால் குலுக்கல் முறையில் அதிபர் தேர்வு செய்யப்படுவார். அதாவது சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அதிலிருந்து ஒருவரை அதிபராகத் தேர்வு செய்யும் நிலை ஏற்படும்.

"இதுவரை இலங்கை வரலாற்றில் யாரும் குலுக்கல் முறையில் அதிபராகத் தேர்வு செய்யப்படவில்லை. இந்த முறையும் அப்படி நடப்பதற்கான வாய்ப்புக் குறைவுதான்" என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் நாள்தோறும் புதிய திருப்பங்களைக் காண்டும் இலங்கை அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதுவும் பல முனைப் போட்டியாக அதிபர் தேர்தல் மாறும் சூழலில் இது நடக்கவே நடக்காது என்று உறுதியாகக் கூற முடியாது.

அப்படியொரு சூழல் ஏற்படக்கூடும் என்றுதான் இலங்கையின் அரசியல் சட்டமே குலுக்கல் முறையில் அதிபர் தேர்ந்தெடுக்கும் முறையை வரையறுத்திருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

இலங்கை நெருக்கடி: குலுக்கல் முறையில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படுமா? - அரசியல் சட்டம் என்ன சொல்கிறது.

May be a cartoon of text that says 'FINISH START f'

யார் ஜனாதிபதி என்று, அமெரிக்கா பல மாதங்களுக்கு முன்பே தீர்மானித்து விட்டது.
இனி... நடப்பவை எல்லாம், சம்பிரதாய நிகழ்வுகளே.  🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் குலுக்கல் என்டவுடன் வந்து பாத்தால் இப்படியாச்சே.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நானும் குலுக்கல் என்டவுடன் வந்து பாத்தால் இப்படியாச்சே.😄

சார் இந்த நெனப்புல..??????? 😁

Oru Kuchi Oru Kulfi Ft. Sivaji Ganesan | Kalakaldigar Thilagam | HipHop  Thamizha... | Gfycat

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறுபத்தொன்பது லட்ஷம் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் நிலைக்கேல, ஓடி ஒளிச்சு திரியுறார். இனி குலுக்கல் முறையில் தெரிவாகுபவர் எத்தனை நாளைக்கு நிலைக்கப்போகிறார்? இன்னும் நாட்டின் இக்கட்டான நிலை புரியாமல் விளையாடுகிறார்கள், வெளிநாடுகள் கைகொடுக்கும் எனும் கனவில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சார் இந்த நெனப்புல..??????? 😁

Oru Kuchi Oru Kulfi Ft. Sivaji Ganesan | Kalakaldigar Thilagam | HipHop  Thamizha... | Gfycat

சிவாஜி(?) தாத்தா தூக்கி விளையாடும் இந்த பாட்டியின் பெயர் என்ன? (சும்மா பொது அறிவை வளர்க்கத்தான்😎).

6 hours ago, ஏராளன் said:

குலுக்கல் முறையில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும்

பேசாமல் தேசிய லொத்தர் சபை மூலம் டிக்கெட் வித்து ஒருவரை தேர்ந்து எடுக்கலாம்.

பாராளுமன்றில் இருக்கும் 225 கதிரை-சுமைகளை விட அவர்கள் ஒன்றும் மோசமான தெரிவாக இருக்க மாட்டார்கள்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.