Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலுக்கும், டக்ளஸ் தேவானந்தாவுக்கும்...  இடையில் சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் மூன்று நாள் விஜயம்!

ரணிலுக்கும், டக்ளஸ் தேவானந்தாவுக்கும்...  இடையில் சந்திப்பு!

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள சில முஸ்லிம் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்பாக மெத்தனமான கொள்கையை கடைப்பிடிக்குமாறு பதில் ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

தடை செய்யப்பட்டுள்ள சில அமைப்புக்கள் இலங்கைக்கு முதலீடுகளை கொண்டு வந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக.. செயற்பட்ட அமைப்புக்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2022/1291525

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது எதிர்வு கூறப்பட்டுள்ளது இச்சந்திப்பின் மூலம். 

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கை நான் கவனித்துக்கொள்கிறேன். வடக்கை நீ கொஞ்சம் அடக்K வாசிக்கப் பாருங்கோ..சரியா ?

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழர்க்கு ரணில் இதனால் கூறிக்கொள்வது என்னவெனில் சிங்களம் தமிழர் இனப்பிரச்சனை விடையத்திலான எமது அணுகுமுறை எப்போதும்போலவே  இருக்கும் என்பதாகும்.

அதாவது டேவிட் கமரோன் இலங்கை வந்தபோது தமிழர் தரப்பை அதுவும் வடமாகாண முதலமைச்சரை யாழ் நூலகத்தில் சந்தித்தார் அதன் குறியீடு என்னவெனில் தமிழர் தரப்பது அரசியல் இருப்பு வடக்கில் இருக்கு அதனால் அந்த அரசியல் இருப்பை இங்கிலாந்து அங்கீகரிக்கிறது அல்லது மதிப்பளிக்கிறது என்பதாகும்.

தவிர நரேந்திர மோடி இலங்கை வந்தபோது யாழ்ப்பாணத்துக்கும் வந்தார் ஆனால் தமிழர் தரப்பை யாழில் வைத்துச் சந்திக்கவில்லை இறுதி நேரத்தில் அதுவும் போகும்போது கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தில் வெறும் பதினைந்து நிமிடங்கள் சந்த்தித்தார் அதன் பொருள் நாம் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தைல் உள்ளவர்களை விட உங்களை முக்கியமானவர்களாகவோ அல்லது நட்பானவர்களாகவோ அல்லது உங்கள் பிரச்சனையில் கரிசனை உள்ளவர்களாகவோ இலங்கையின் ஆட்சியாளர்களுக்குப் புரிந்து கொள்ளக்கூடயதாக நடக்க விரும்பவில்லை என்பதாகும்.

அதுபோலவே டக்ள்சைச் சந்திப்பது சிங்களத்துடன் ஒத்திசைவாக இருப்பவர்களையே நாம் எதிகாலத்தில் நட்புடன் இருப்போம் என்பதாகும்.

இனிமேல் தமிழர் தரப்பு தங்களது கோரிக்கைகளை இப்போதைய எவரிடமும் வைக்கத் தேவையில்லை என்பதே இதன் பொருள்.

ஆனால் வெதம் ரோசம் மானம் கெட்ட சம் சும் விக்கி மாவை சுரேஸ் வகையறாக்கள் வரிசைகட்டி நிக்குங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம்.. உவர் குத்தியருக்கு சொறீலங்கா பாராளுமன்றில் 50 பேர் எம் பி இருக்கினம். அதுதான் ரணில் சந்திச்சு ஆதரவு கேட்டிருப்பார்.

ரணில் ஒரு குள்ள நரி.. ஏதோ குறுகிய தேவைக்காக.. இந்த கொலைஞரை சந்திச்சிருப்பார். யாரை எங்கவைச்சு தட்டப் போறாய்ங்களோ. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nedukkalapoovan said:

ஆமாம் ஆமாம்.. உவர் குத்தியருக்கு சொறீலங்கா பாராளுமன்றில் 50 பேர் எம் பி இருக்கினம். அதுதான் ரணில் சந்திச்சு ஆதரவு கேட்டிருப்பார்.

ரணில் ஒரு குள்ள நரி.. ஏதோ குறுகிய தேவைக்காக.. இந்த கொலைஞரை சந்திச்சிருப்பார். யாரை எங்கவைச்சு தட்டப் போறாய்ங்களோ. 

வெள்ளை வான் திறப்பை… டக்ளசிடம் கொடுத்திருப்பார்.
ரணிலுக்கு… இப்போ, இப்படிப் பட்ட ஆட்கள் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nedukkalapoovan said:

ஆமாம் ஆமாம்.. உவர் குத்தியருக்கு சொறீலங்கா பாராளுமன்றில் 50 பேர் எம் பி இருக்கினம். அதுதான் ரணில் சந்திச்சு ஆதரவு கேட்டிருப்பார்.

ரணில் ஒரு குள்ள நரி.. ஏதோ குறுகிய தேவைக்காக.. இந்த கொலைஞரை சந்திச்சிருப்பார். யாரை எங்கவைச்சு தட்டப் போறாய்ங்களோ. 

ஒரு ஆசனமுள்ள விக்கியரே துள்ளி குதிக்கும் போது

இரு ஆசனமுள்ளவன் சும்மா இருப்பானா?

8 minutes ago, தமிழ் சிறி said:

வெள்ளை வான் திறப்பை… டக்ளசிடம் கொடுத்திருப்பார்.
ரணிலுக்கு… இப்போ, இப்படிப் பட்ட ஆட்கள் தேவை.

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.

கஜன் கோஸ்டியை யாரும் தேடலையோ?

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர்களில் 93.8 % பேர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டம் (university degrees) ஒன்றை தங்களது குறைந்த பட்ச கல்வித் தகைமையாக கொண்டு இருக்கிறார்கள்.
நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களில் 90 % பேர் பல்கலைக்கழக பட்டம் ஒன்றை தங்களது குறைந்த பட்ச கல்வித் தகமையாக கொண்டு இருக்கிறார்கள்.
பிரித்தானியா பாராளுமன்றத்திற்கு குறித்த நாட்டு மக்களால் தெரிவு செய்யபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் 85 % பேர் பல்கலைக்கழக பட்டம் (university degrees) ஒன்றை தங்களது குறைந்தபட்ச கல்வி தகமையாக கொண்டு இருக்கிறார்கள்.
அவுஸ்திரேலியா பாராளுமன்ற உறுப்பினர்களில் 75 % பேர் பல்கலைக்கழக பட்டம் (university degrees) ஒன்றை தங்களது குறைந்தபட்ச கல்வி தகமையாக கொண்டு இருக்கிறார்கள்.
இது மட்டுமின்றி மேற்குறித்த நாடுகளில் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் கல்வி தகமைகளோடு, நேர்மறையான விழுமியங்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அனுபவங்களையும் கொண்டு இருக்கிறார்கள்.
இதனால், சட்டவாக்க சபைகள் என சொல்லப்படும் பாராளுமன்றங்களில் குறித்த நாட்டின் வளர்ச்சி குறித்து ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்தவும் காத்திரமான தீர்மானங்களை எடுக்கவும் முடிக்கின்றது.
நாட்டின் நலன் சார்ந்த சட்டங்களை உருவாக்க முடிக்கின்றது
குறித்த நாட்டில் வசிக்கும் சகல மக்களும் சமமாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்த முடிகின்றது.
பேச்சு சுதந்திரம் உட்பட்ட மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முடிகின்றது.
அரசியல் தலையீடுகள் அற்ற அரச நிருவாகத்தை ஏற்படுத்த முடிகின்றது.
இதனூடாக மேற்குறித்த நாடுகள் பல்வேறு துறைகளில் வெற்றி பெறவும் சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி நகரவும் பங்களிக்கிறார்கள்.
குறிப்பாக நியூசிலாந்து பாராளமன்றத்தில் அங்கம் வகிக்கும் மருத்துவத்துறை சார்ந்த நிபுணர்கள் கோவிட் 19 பெரும் தொற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள பங்களித்தவர்களில் முன்னணியில் இருந்தார்கள்.
ஆனால்,
அண்மைய தகவல்களின் அடிப்படையில் இலங்கை பாராளுமன்றதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 225 பாராளமன்ற உறுப்பினர்களில் (Legislators) 94 பேர் GCE O/L Level பரீட்சையில் சித்தி பெற தவறியவர்களாக இருக்கிறார்கள் . அதாவது 42 % மான இலங்கை பாராளமன்ற உறுப்பினர்கள் GCE O/L Level பரீட்சையில் கூட சித்தி பெறவில்லை.
இதுமட்டுமின்றி இலங்கையில் கொலை குற்றாவளிகள் , போதைப்பொருள் வியாபாரிகள் , ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் என சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள் பலரும் பாராளமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகிறார்கள்.
வடக்கு கிழக்கிலும் இதே நிலைமை தான் இருக்கிறது
குழந்தைகளை பணத்திற்காக கடத்தி கொலை செய்த பிள்ளையான் வடக்கு கிழக்கில் அதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார்
யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகின்றார்.
உலகில் எங்காவது இது சாத்தியமா ? அதாவது சட்டவாக்க சபையாக கருதப்படும் பாராளமன்றத்தில் தெரிவு செய்யப்படும் மேற்குறித்த கிரிமினல் குற்றவாளிகள் தான் சட்டங்களை உருவாக்குகின்றார்கள்
அங்கயன் இராமநாதன், வியாழேந்திரன் போன்றோர் 19 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிதார்கள்
வெறும் 2 ஆண்டுகளில் அதற்கு முரணான 20 ஆம் திருத்த சட்ட திருத்திற்கும் ஆதரவாக வாக்களிக்கிறார்கள்.
17 ஆம் திருத்தம் , 18 ஆம் திருத்தம் , 19 ஆம் திருத்தம் , 20 ஆம் திருத்தம் என ஒன்றுக்கு ஒன்று முரணான சட்ட திருத்தங்களுக்கு ஆதரவாக ஆட்சியில் இருக்கும் தரப்புகளை திருப்திப்படுத்த டக்ளஸ் தேவானந்தா வாக்களிக்கிறார். இப்போது 21 ஆம் திருத்தும் முன்மொழியப்பட்டால் அதற்கும் ஆதரவாக வாக்களிப்பார்கள் . இவர்கள் யாருக்கும் எந்த குற்ற உணர்வும் இல்லை
இதே நிலை தான் தெற்கிலும் இருக்கின்றது இவ்வாறான கிரிமினல்களை சொந்த இலாபங்களை வாக்களித்து விட்டு புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை
Parliament not a place for thugs and hooligans
Copied
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Ahasthiyan said:

எங்கேயோ எப்போதோ நானும் இதைத்தான் கூறினேன்
ஈழத்திலும் இலங்கையிலும் மக்கள் திருந்த வேண்டும்
இலங்கையில் திருந்திவிட்டார்கள்
ஈழத்தில் இன்னும் திருந்தவேயில்லை
இப்போதும் நாங்கள் எப்படித்   தப்பி அங்கிருந்து வந்தோமோ அதே போல அவர்களும் தப்பி வந்து வாழ நினைக்கின்றார்கள்
யாரை குற்றம் கூறுவது என்று தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் யாருக்காவது வழக்குரைஞருக்கான சான்றிதழ் தேவைஎனில் யாழ்ப்பாணத்தில ஒருவர் இருக்கிறார் 10 லட்சம் கொடுத்தால் ஒறிஜினல் சேட்டிபிக்கற் வரும். ஆனால் என்ன கோர்ட்டில வாய்தா வாங்கத்தான் முடியும் மற்றப்படி எதுவும் ச்ய்ய முடியாது. விரும்பினால் கூட்டமைப்பில சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆகலாம்.

வசதி எப்படி!

தவிர பின்லாந்தில் ஒரு அரசியல் கட்சி இருக்கு அதன் பெயர் அடிப்படைவாத பின்லாந்தியர்கள் என்பதாகும் அதில் முக்கிய் அபதவிகளில் உள்ளவர்கள் எல்லாம் கிரிமினல்கள் குடிவருவோருக்கு எதிர்ப்பானவர்கள் களவு கொள்ளை வேலை வெட்டி இல்லாதிருப்பது இவர்களது வேலை ஆனால் என்ன கேவலம் என்றால் இந்த நாட்டில் இதுதான் மூன்றாவது பெரிய கட்சி. கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வைத்திருக்கு. 

உலகின் வயது குறைந்த பெண் பிரதமர் சன்ன மரின் அவரது தாயார் ஓருபால் ஈர்ப்பாளர் அவரே இதைப் பொது வெளியில் கூறியிருக்கிறார்.
சரி அதை விடுங்கோ 
வெளிநாட்டு அலுவல்கள் மந்திரி  ஒரு பால் ஈர்ப்பாளர் 

அதையும் விடுங்கோ 

இந்த நாட்டின் அதிபர் 69 வயதில ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தார் 

ஆனாலும் இந்த நாடு உலகின் மகிழ்சியானவர்கள் வாழும் நாட்டின் வரிசையில் முதலாவதாக மூன்றுதடவை தொடர்ச்சியாஅக வருகுது.

ஆனால் நான் இங்கு மகிழ்சியாக இல்லை

ஆழ்பவர்களும் சட்டத்தை அமூல் படுத்துபவர்களும் ஒழுங்காக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.

மலிவு விலைக்கடையில் பத்துப் பைசாவுக்கு இனிப்பு வாங்கினால் 14 விகிதன் விற்பனை வரியைக்க்ட்டிவிட்டுத்தான் நான் இனிப்பை வாயில போடவேண்டும் அதாவது 1.4 சென்ற் அரசுக்குக் கொடுக்க வேண்டும் நீங்கள் வாழும் புலம்பெயர் நாடுகளிலும் இதுதான் விடையம்.

இலங்கையில் போராட்டம் ஆரம்பிக்க முதலேயே இந்தியாவில் ஒரு லீற்றர் பெற்றோல் விலை இலங்கைக் காசுக்கு நாநூறு ரூபாக்கு மேல் ஆனால் அப்போது இலங்கையில் பெற்றோல் விலை அரைவாசியாகும் அப்போ எல்லாருடைய ............யும் மோட்டார் சைக்கிளிலதானே இருக்கும்  சோம்பேறிகள் வாழும் நாடு இலங்கை.

யாழில் விசேட பாடசாலைகள் வரிசையில் காட்லிக் கல்லூரியும் யாழ் இந்துவும் முதலிடம் ஆனால் அங்கு படிக்கும் மாணவர்கள் ரியூசனுக்குப் போகாமல் விடுகிறார்களா இல்லையே.

நான் அறிய ஒரு பாடசாலை வாத்தியா கொடில்களில்ரியூசன் கொடுக்கிறார் கபொத சாதாரண உயர்தர்ப் பெறுபேறுகள் வந்தால் அவரது படமும் தேர்ச்சிபெற்ற மாணவர்களது படமும் கட் அவுட்டில கட்டித்தொங்கப்போடப்படும் ஆனால் அவர் படிப்பித்த பாடசாலையில் அவரிடம் அதே பாடம் எடுத்த மாணவர்கள் எத்தனைபேர் தேர்ச்சி பெற்றார்கள் என்றால் பதில் இல்லை.

இன்னுமொரு ஆசிரியர் 
பிந்தங்கிய பகுதியில் ஐந்து வருடம் வேலை செய்ய வேண்டும் மல்லாவிக்கு மாத்திவிட்டாங்கள் ஆனால் யாரையோ பிடித்து வேலைனைக்கு மாறிவிட்டார் ஏனெண்டால் அதுவும் பிந்தங்கிய பகுதியாம் அவரது தந்தையும் ஓய்வுபெற்ற ஆசிரியர் அதுவும் யாழில் பிரபலமான ஒரு பாடசாலையில் படிப்பித்து ஓய்வுபெற்றவர் அவரிடம் நான் கேட்டேன் ஏன் மல்லாவிக்கும் போகலாம்தானே என அவர் அதற்குச் சொன்ன பதில் "அங்க அவனுக்கு ஒரு பம்பலும் இல்லை" என ஆக அரசாங்கத்தில காசை வாங்கிக்கொண்டு பிந்தங்கிய பகுதியில இருக்கும் மாணவர்களது கல்வி உரிமையை குறிப்பிட்ட ஆசிரியர் அறுக்கிறார்.

இந்த ஆசிரியர் அண்மையில் இலங்கையின் அரச தொலைக்காட்சியில் நான் அடுத்த பிறவியிலும் ஆசிரியராகப் பிறக்கவே விரும்புகிறேன் எனப்பேட்டி கொடுக்கிறார்,

இப்படியான மக்கள் இருந்தால் நாடு வங்குரோத்து நிலையை அடையுமா இல்லையா.

கொசுறாக மண் எண்ணை மகேஸ்வரனது தம்பி துவாரகீஸ்வரன் வருடா வருடம் கட்டும் வரி ஆகக்குறைந்த அளவே ஆகும் என ஒரு அரச வரி மதிப்பாளர் புலம்புகிறார்.

புலம்பெயர் தமிழ் லூசுப்பயல்கள் இவற்றுக்கெல்லாம்தான் காசு அனுப்புகினம்.

எனது கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2022 at 19:39, தமிழ் சிறி said:

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எதுவும் மாறாது விட்ட இடத்திலிருந்து தொடரும் எனும் செய்தி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.