Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர தின உரையில் பிரதமர் மோதி பட்டியலிட்ட 5 உறுதிமொழிகள் என்னென்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தின உரையில் பிரதமர் மோதி பட்டியலிட்ட 5 உறுதிமொழிகள் என்னென்ன?

15 ஆகஸ்ட் 2022, 02:08 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

PMO India

இந்தியாவின் 76வது சுதந்திர தினம் இன்று, ஆக. 15 நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார். பின்னர் 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

பின் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோதி, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா, வளர்ந்த நாடாக வேண்டும் என்றும் அதற்கு மக்கள் 5 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஐந்து உறுதிமொழிகள்:

  • முதலாவது நாம் பெரிய இலக்குகளுடன் முன்னேறிச் செல்ல வேண்டும். அந்த இலக்கு இந்தியாவை வளர்ந்த தேசமாக்குவது.
  • இரண்டாவது உறுதிமொழி, எல்லா வகையான அடிமைத்தனத்தையும் வேரறுக்க வேண்டும்.
  • மூன்றாவது நமது பாரம்பரியத்தை நினைத்து எப்போதும் பெருமிதம் கொள்ள வேண்டும்.
  • நான்காவதாக, ஒற்றுமையின் பலத்தை உறுதியாக பற்றிக் கொள்வோம்.
  • கடைசியாக நாம் ஏற்க வேண்டிய ஐந்தாவது உறுதிமொழி குடிமகனின் கடமைகளை ஆற்றுவது. முதல்வர்களுக்கும், பிரதமருக்கும் கடமை இருக்கிறது என பிரதமர் தெரிவித்தார்.
Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

மேலும் தனது சுதந்திர தின உரையில், "இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு நீண்ட நெடியது. உலகின் எல்லா பகுதிகளிலும் இந்திய தேசியக் கொடி பறக்கிறது. ஆருடம் அனைத்தையும் தகர்த்து தேசியக்கொடி பறக்கிறது. வளர்ச்சியை நோக்கி விரைவாக பயணிக்க வேண்டிய நேரமிது" என குறிப்பிட்டார் மோதி.

 

மேலும், அம்பேத்கர், மங்கள் பாண்டே, தாத்யா தோபே, பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத், அஸ்பகுலா கான், ராம் பிரசாத் பிஸ்மில் உள்ளிட்டோரை பிரதமர் மோதி நினைவுகூர்ந்தார்.

சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த பெண்களை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோதி, ஜான்சி ராணி லஷ்மிபாய், ஜல்கரி பாய், சென்னம்மா, மேகம் அஸ்ரத் மஹால் உள்ளிட்டோரை நினைவுகூர்ந்தார்.

மேலும், "டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், எஸ்.பி.முகர்ஜி, லால் பகதூர் சாஸ்திரி, தீனதயாள் உபாத்யாயா, ஜே.பி.நாராயண், ஆர்.எம்.லோஹியா, வினோபா பாவே, நானாஜி தேஷ்முக், சுப்பிரமணிய பாரதி உள்ளிட்ட சிறந்த ஆளுமைகளின் முன் நாம் தலைவணங்கும் தினம் இது" என அவர் குறிப்பிட்டார்.

"சுதந்திர போராட்டம் குறித்து நாம் பேசும்போது, பழங்குடி சமூகம் குறித்து நாம் மறக்கக்கூடாது. பகவான் பிர்சா முண்டா, அல்லூரி சீதாராம ராஜூ, கோவிந்த் குரு என சுதந்திர போராட்டத்தின் குரலாக மாறிய எண்ணற்றோர் உள்ளனர்.

ஒவ்வொருவரின் தியாகங்களும் போற்றப்பட வேண்டும்" என பிரதமர் தெரிவித்தார்.

மேலும், "நாம் சுதந்திரம் அடைந்தபோது நமது வளர்ச்சிப் பாதையில் பலருக்கும் சந்தேகங்கள் இருந்தன. ஆனால், இந்நாட்டு மக்களிடம் வித்தியாசமான ஒன்று இருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த மண் விசேஷமானது என்பது அவர்களுக்குத் தெரியாது" என அவர் கூறினார்.

"நாடு இரண்டாக பிரிக்கப்பட்டபோது மக்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர். 75 ஆண்டுகளை கடந்த சுதந்திரம் நாட்டின் புதிய தொடக்கம். சுதந்திரத்திற்கு பிறகு பிறந்தவன் என்றாலும் தியாகங்களை உணர்ந்துள்ளேன்.

பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட சுதந்திர வீரர்களை வெளிக்கொணர்வோம். உலக ஜனநாயகத்தின் தாய்நாடு இந்தியாதான்.

நாடு இரண்டாக பிரிக்கப்பட்டபோது மக்கள் கடும் இன்னல்களை சகித்துக்கொண்டனர். சுதந்திரம் பெற்ற இந்த 75 ஆண்டுகளில் மக்கள் பல இன்னல்களை சகித்துக்கொண்டனர். கடுமையான போராட்டத்தால் சுதந்திரம் பெற்று வளர்ச்சிப் பாதையில் நாட்டு மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். பஞ்சம், போர், பயங்கரவாதம் என அனைத்தையும் தாண்டி இந்தியா ஜனநாயக பாதையில் முன்னேறுகிறது.

பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமை. கடைசி மனிதனுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே இலக்கு." என்றும் அவர் கூறினார்.

மேலும், "ஒவ்வொரு இல்லத்திலும் தேசியக் கொடியை ஏற்றி மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர்" என அவர் தெரிவித்தார்.

நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூர் 200 கோடி டோஸ்களை தாண்டியுள்ளது எனவும் பிரதமர் மோதி கூறினார்.

சுதந்திர தின நிகழ்ச்சியில் இந்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், முப்படைத் தளபதிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பல்வேறு நாடுகளின் தூதர்கள், அமைச்சர்கள், அதிகாரிகளும் பங்கேறுள்ளனர். செங்கோட்டையில் 10,000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டையை சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்கு பட்டம், ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டைக்கு செல்வதற்கு முன்னதாக காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோதி மரியாதை செலுத்தினார்.

 

சுதந்திர தினம்

பட மூலாதாரம்,ANI

 

படக்குறிப்பு,

காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோதி மரியாதை

பிரதமர் மோதி 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக இன்று சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடி ஏற்றுவது குறிப்பிடத்தக்கது.

டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுவதற்கு முன்னதாக, பிரதமர் மோதி ட்விட்டரில் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்கள் தங்கள் இல்லங்களில் மூவர்ணக் கொடியை ஏந்தி கொண்டாட வேண்டும் என பிரதமர் மோதி முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார். https://www.bbc.com/tamil/india-62545045

  • கருத்துக்கள உறவுகள்

உலக ஜனநாயகத்தின் தாய்வீடு இந்தியா : எதிர்வரும் 25 ஆண்டுகளில் அனைத்தும் பெற்ற நாடாக இந்தியா இருக்கும் - பிரதமர் மோடி

15 AUG, 2022 | 08:34 PM
image

நாடு சுதந்திரம் பெற்ற கடந்த 75 ஆண்டுகளில் பல ஏற்றத்தாழ்வுகளை இந்தியா சந்தித்து உள்ளது. உலக ஜனநாயகத்தின் தாய்வீடு இந்தியாதான். உலகின் ஜனநாயகம் பிறந்தது இந்தியாவில்தான் என்பதை நாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எதிர்வரும் 25 ஆண்டுகளில் அனைத்தும் பெற்ற நாடாக இந்தியா இருக்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

298201197_698256508335251_66392822440234

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினவிழாவுக்கு பலத்த பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

சுதந்திர தின விழாவில் பங்கேற்க இந்தியப் பிரதமர் மோடி அதிகாலையிலேயே வீட்டில் இருந்து புறப்பட்டார். டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து செய்தியை வெளியிட்டார்.

இதையடுத்து டெல்லி செங்கோட்டைக்கு புறப்பட்டு வந்தார். அங்கு அவரை மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், ராஜாங்க மந்திரி அஜய்பட் இருவரும் வரவேற்றனர். அதை ஏற்றுக்கொண்டு முப்படை அணிவகுப்புகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

299138920_698256551668580_56108460057280

பின்னர் டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக மேடைக்கு சென்று பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது 4 ஹெலிகொப்டர்கள் தாழ்வாக பறந்து வந்து மலர் தூவின.

தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி அங்கிருந்த மேடையில் நின்றபடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். 

இதன்போது உரையாற்றிய இந்தியப் பிரதமர் மோடி,

298495953_698809434946625_90958691654961

இன்று வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த நாள். நாட்டுக்காக உழைத்த மகாத்மா காந்தி, நேரு, வல்லபாய் படேல், பகத்சிங், மங்கள் பாண்டே, சந்திரசேகர் ஆசாத், சபியுல்லாகான், சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், சவர்க்கர், பாரதியார், வேலுநாச்சியார் போன்றோர்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வேகமான வளர்ச்சியை நோக்கி நாம் அடியெடுத்து வைக்க வேண்டிய காலம் இது. ஒவ்வொரு இந்தியனும் வளர்ச்சிக்காக வேகமாக அடியெடுத்து வைக்க வேண்டும்.

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இந்திய தேசிய கொடி பட்டொளி வீசி பறக்கிறது. இந்திய பெண்கள் தங்களது சக்தியை இந்த உலகுக்கு எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். சுதந்திர போராட்டத்தில் பெண்கள் பழங்குடி இன மக்களின் பங்கு மகத்துவமானது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரின் தியாகமும் போற்றப்பட வேண்டும்.

 

நாட்டில் உள்ள 140 கோடி மக்களையும் தேசிய கொடி ஒருங்கிணைக்கிறது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் வெளியில் தெரியாதபடி புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு நாம் போற்ற வேண்டும். அவர்களது சிறப்பை நாம் வெளியில் கொண்டு வர வேண்டும். அவர்களது கனவு போற்றப்பட வேண்டும்.

298607143_698809321613303_64008290396559

நாடு சுதந்திரம் பெற்ற கடந்த 75 ஆண்டுகளில் பல ஏற்றத்தாழ்வுகளை இந்தியா சந்தித்து உள்ளது. உலக ஜனநாயகத்தின் தாய்வீடு இந்தியாதான். உலகின் ஜனநாயகம் பிறந்தது இந்தியாவில்தான் என்பதை நாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

 

உணவு பாதுகாப்பு, இயற்கை பேரழிவு, பஞ்சம், போர், தீவிரவாதம் ஆகிய அனைத்தையும் கடந்து நமது நாடு மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள பன்முக தன்மையே நமது வலிமையாகும். சுதந்திர போர் நிறைவில் நாடு 2 ஆக பிரிந்தபோது மக்கள் கடும் இன்னலை சந்தித்தனர். இதை கருத்தில் கொண்டு மகளிர் மற்றும் பழங்குடி இன மக்கள் முன்னேற்றத்திற்காக அனைவரும் பாடுபட வேண்டும்.

298427703_698809411613294_56110653235753

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் குறிப்பாக கடைநிலை மனிதனுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே எனது இலக்காகும். காந்தியும் இந்த கனவைத்தான் கண்டார். அதை நிறைவேற்றுவது எனது லட்சியம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துள்ளேன். சுதந்திர போராட்டத்தின்போது நாம் ஒற்றுமையாக இருந்ததால் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆட்டம் கண்டது. அதேபோல் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

 

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இனியும் வளர்ச்சிக்காக நாட்டு மக்களை மேலும் காத்திருக்க செய்ய முடியாது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற சரியான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது நிறைவேற்றப்படும்.

298652195_698809298279972_17620849731472

75-வது சுதந்திர தின நிறைவையொட்டி ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்து இருந்தேன். அதை ஏற்று மக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளனர். எனது கோரிக்கையை ஏற்றதற்காக மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்.

 

நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது அனைத்து பணியாளர்களும் ஒருங்கிணைந்து அதை எதிர்கொண்டோம். இன்று நாம் அதில் வெற்றி பெற்று இருக்கிறோம். நாட்டில் 200 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. நமது நாட்டின் அரசியல் நிலைத்தன்மையால்தான் இது சாதிக்க முடிந்தது.

298843748_698256451668590_75746338573464

அரசியல் நிலைத்தன்மை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகுக்கு இந்தியா காட்டி உள்ளது. ஒருங்கிணைந்த உணர்வுதான் இந்தியாவின் பலம். அனைவருக்கும் நல்லாட்சி, அனைவருக்கும் வளர்ச்சி என்பதே மத்திய அரசின் இலக்காகும்.

 

இந்திய வரலாற்றில் அடுத்த 25 ஆண்டுகள் மிக முக்கியமான காலக்கட்டமாகும்.

 

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக இருக்க வேண்டும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற ஒவ்வொரு இந்தியரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இதற்கான உறுதிமொழியை ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

299183830_698256655001903_54183935186536

இந்தியா சுதந்திரத்தின் 100-வது ஆண்டை கொண்டாடும்போது நமது சுதந்திர போராட்ட வீரர்கள் என்னென்ன கனவுகளை கண்டிருந்தார்களோ அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். இளைஞர்கள் இதற்காக தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். நாம் ஒருங்கிணைந்து செயல்படுவோம். நமது ஒற்றுமையே நமது பலம்.

 

நிலையான அரசு, சிறப்பான கொள்கை மூலம் நாம் அனைத்தையும் சாதித்து காட்ட வேண்டும்.

 

உலக நாடுகள் தங்கள் பிரச்சினைகளை இந்திய வழியில்தான் தீர்வு காண தொடங்கி உள்ளன. ஒட்டுமொத்த உலகின் உற்பத்தி மையமாக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. எனவே இனி பெரிய இலக்குகளை நிர்ணயிப்பது மட்டுமே இந்தியாவின் வளர்ச்சிக்கு கை கொடுப்பதாக இருக்கும்.

 

அன்னிய ஆட்சியாளர்களின் தாக்கங்களை நாம் முழுமையாக அகற்ற வேண்டும். வெளிநாட்டு அடிமைத்தனத்தை வேரறுத்து விரட்ட வேண்டும். நாட்டின் பாரம்பரியத்தை கர்வத்துடன் பாதுகாக்க வேண்டும்.

299434656_698256668335235_71241572359464

2047-ம் ஆண்டுக்குள் சுதந்திர போராட்ட வீரர்களின் அத்தனை கனவும் நிறைவேறி இருக்க வேண்டும்.

 

நமது பாரம்பரியம் மிக மிக சிறப்பானது. அதை நினைத்து நாம் ஒவ்வொருவரும் பெருமைபட வேண்டும். அதை அடிப்படையாக கொண்டு ஒற்றுமை, ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த வேண்டும். சுதந்திர நூற்றாண்டின்போது இந்தியா வல்லரசாக இருக்க வேண்டும்.

 

நாட்டில் உள்ள அனைவருக்கும் மின்சாரம், குடிநீர் வழங்குவதில் வெற்றி காணப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக அனைத்தும் பெற்றாக வேண்டும். இதற்காக என்னுடன் சேர்ந்து நீங்களும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்.

 

இந்தியாவில் பல மொழிகள் இருப்பது நமக்கு இருக்கும் பெருமையாகும். ஒவ்வொரு மொழி குறித்தும் நாம் பெருமை கொள்ள வேண்டும். ஆனால் மொழி தடையால் திறமை வெளிப்படுவது பாதிக்கப்படுகிறது. புவி வெப்பம் ஆவதை தடுக்க நமது முன்னோர்கள் வழிகாட்டி உள்ளனர். அந்த வழியில் சென்று உலகுக்கு வழிகாட்ட வேண்டும்.

299552127_698075811686654_54359498300880

பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். பெண்களை அவமரியாதை செய்வதை ஒருபோதும் ஏற்க கூடாது. இன்று நாம் ஒவ்வொரு குடிமகனையும் சுய சார்பு உள்ளவராக மாற்றி இருக்கிறோம். சுய சார்பு ஏற்பட்டதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் 300 பொருட்களை தவிர்த்து இருக்கிறோம்.

 

இந்தியா உற்பத்தியின் மையப்புள்ளியாக மாறியதால்தான் இதை சாதிக்க முடிந்தது. புதிய கண்டுப்பிடிப்புகள் மூலம் நாட்டை மேலும் வலிமைப்படுத்த முடியும்.

 

ஐ.டி. மற்றும் ஸ்டார்ட் அப் துறைகளில் இந்தியா சிறந்து விளங்குகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் நமது சக்தி மேலும் அதிகரிக்கும். ரசாயனமில்லாத விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் இணைய தள வசதியை 5 ஜி, ஸ்பெக்ட்ரம் உருவாக்கும்.

 

சிறு குறு விவசாயிகள், சிறு வியாபாரிகளுக்கு உதவிகளை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் நாடு மேலும் வளர்ச்சி பெறும்.

 

ஊழலும், வாரிசு அரசியலும்தான் இந்தியாவின் மிகப்பெரிய சவால்களாக உள்ளன. இந்த இரண்டையும் அகற்ற வேண்டும். ஊழலுக்கு எதிராக பலமான நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஊழலை ஒழிக்கும் விசயத்தில் அரசுக்கு மக்கள் ஆசீர்வாதம் தர வேண்டும். ஆதரவு தர வேண்டும்.

 

ஊழலை ஒழிப்பதில் மக்களின் ஆதரவு எனக்கு தேவை. குடும்ப வாரிசு அரசியலும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. வாரிசு அரசியல் காரணமாக அரசியலில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு ஏற்படுகிறது. வாரிசு அரசியலால் நாட்டில் நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவை அனைத்துக்கும் தீர்வு காண வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

உலக ஜனநாயகத்தின் தாய்வீடு இந்தியா : எதிர்வரும் 25 ஆண்டுகளில் அனைத்தும் பெற்ற நாடாக இந்தியா இருக்கும் - பிரதமர் மோடி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

அப்ப இன்டியன்ஸ் எல்லோருக்கும் 2047ல்ல கக்கூசு கிடைக்குமென எதிர்பார்க்கலாம்! இல்லை எதிர்பார்க்கலாமா?😂

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

298843748_698256451668590_7574633857346471179_n.jpg

2025´ம் ஆண்டில்... கச்சதீவும், இந்திய வரை படத்தில் இடம் பெற வேண்டும்.  
ஆனால் பார்க்கிற மாதிரிக்கு... அருணாச்சல், சிக்கிம் மாநிலம் எல்லாம்.. 
சீன வரைபடத்தில் வந்திடும் போலை இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100009323496686/videos/1002981287036929  👈

🇮🇳 தேசியக் கொடியை... எப்படி பிடிப்பது என்று தெரியாமல் தடுமாறும் அரசியல்வாதிகள். 🇮🇳

  • கருத்துக்கள உறவுகள்

75 ஆவது இந்திய சுதந்திர தினத்தினை கொண்டாடும் அனைத்து யாழ்கள் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

இந்திய பிரதமர் கூறுவது போல இந்தியா 25 ஆண்டுகளில் அபிவிருத்தியடைந்த நாடாவதற்கு வாய்ப்புள்ளதா?

தற்போது இந்தியாவினை வறிய மற்றும் நடுத்தர வர்க்க பொருளாதார நாடு என வரையறுக்கின்றனர்.

ஆனாலும் அபிவிருத்தியடைந்த நாடு எனும் நிலையினை எட்ட தற்போதுள்ள பொருளாதார நிலையினை விட 3 மடங்கு பொருளாதார ரீதியில் இந்தியா வளர்ச்சியடைய வேண்டும்.

அது 25 வருடத்தில் சாத்தியமா?

உறுதியாக முடியும், என நம்புகிறேன்.

தற்போதய பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% உள்ளது, இந்த வளர்ச்சி விகிதம் குறையாமல் பேணப்பட்டால் 20 வருடத்டிற்குக்குறைவாகவே இந்தியாவினால் அந்த இலக்கினை எட்ட முடியும்.

அனால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி ஆரம்பத்தில் அதிகமாகக்காணப்பட்டு பின்னர் குறைவடைய ஆரம்பிக்கும்.

தற்போதே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% விகிதமாக உள்ளது என்பது சிந்திக்க வைக்கின்ற விடயமாக உள்ளது ( எனது அபிப்பிராயம் மட்டுமே, தவறாக இருக்கலாம்).

இந்தியாவின் பெருமளவான உறபத்தி பொருள்களின் மூலப்பொருள்களுக்கு சீனாவிலும், மருந்து பொருள்களின் மூலப்பொருளிற்கு ஐரோப்பாவிலும் தங்கியுள்ளது, அத்துடன் இந்தியாவின் ஆழ்கடல் கப்பல் போக்குவரத்து இலங்கை கொழும்பு துறைமுகத்தில் தங்கியுள்ளது, கொழும்பு துறைமுகத்தின் 85% பங்குகள் சீனா வசம் உள்ளதாகக்கூறுகிறார்கள்.

அபிவிருத்தி என்பது வெறுமனே பொருளாதார அபிவிருத்தியில் தங்கிவிடுவதில்லை, சமூக அபிவிருத்தியிலும் உள்ளடங்கியுள்ளது.

உலகில் 2 வது மிகப்பெரும் பொருளாதாரமான சீனா கூட அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்னும் நிலையில்தான் உள்ளது.

அத்துடன் வருமானப்பங்கீடு மிக மோசமான அளவில் ஏற்றத்தாழ்வு நிலை காணப்படுகிறது, இந்த நிலை நீடித்தால் இந்தியா அபிவிருத்தி அடைந்த நாடாக முடியாது.

ஆனாலும் கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வளர்ச்சி மிக சீரான அளவில் உள்ளது, இந்த சாதனையினை நிகழ்த்தின அனைத்து இந்தியர்களும் பெருமைக்குரியவர்களே.

தற்போதய உலகில் இந்தியாவை ஒரு தீர்மானிக்கும் சக்தியாக (பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும்) மாற்றியமைக்கு ஒவ்வொரு இந்திய குடிமகனது கடின உழைப்பே காரணம்.

தற்போது உலகளவில் இந்தியாவினை மதிப்பிற்குரிய நாடாகவே பார்க்கிறார்கள் என்பதனால் அனைத்து இந்தியர்களும், தாம் இந்தியர் என்பதில் தாராளமாகப்பெருமை கொள்ளலாம்.

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

மேலுள்ள கட்டுரைகளை முழுமையாக வாசிக்கவில்லை. இந்த 5 உறுதிமொழிகளையும் பின்பற்றினால் நிச்சயம் இந்தியா முன்னேற முடியும். ஆனால் மத்திய அரசு இவற்றைப் பின்பற்றுவதுபோல் தெரியவில்லை. குறிப்பாக இரண்டாவது உறுதிமொழியிலதான் இந்தியாவின் ஆட்சியே நடக்கிறது.

நேற்று முந்தினம் இந்து பத்திரிகை 1960 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இந்தியாவை ஏனைய நாடுகளுடன் சில ஓப்பீடுகளைச் செய்துள்ளது. இவற்றில் சனத்தொகைப் பெருக்கத்தைத் தவிர ஏனையற்றில் அநேகமான நாடுகள் இந்தியாவைப் பின்தள்ளி முன்னேறிச் செல்கின்றன.

https://www.thehindu.com/data/data-75-years-of-independence-a-comparison-of-indias-growth-with-other-nations-across-ten-indicators/article65768693.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.