Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய எலிசபெத் மகாராணி மரணம் - பக்கிங்காம் அரண்மணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

Queen Elizabeth II has died, Buckingham Palace announces

2 minutes ago
 
 

HM Queen Elizabeth II

Queen Elizabeth II, the UK's longest-serving monarch, has died at Balmoral aged 96, after reigning for 70 years.

Her family gathered at her Scottish estate after concerns grew about her health earlier on Thursday. 

The Queen came to the throne in 1952 and witnessed enormous social change.

With her death, her eldest son Charles, the former Prince of Wales, will lead the country in mourning as the new King and head of state for 14 Commonwealth realms.

In a statement, Buckingham Palace said: "The Queen died peacefully at Balmoral this afternoon.

"The King and the Queen Consort will remain at Balmoral this evening and will return to London tomorrow."

All the Queen's children travelled to Balmoral, near Aberdeen, after doctors placed the Queen under medical supervision.

Her grandson, Prince William, is also there, with his brother, Prince Harry, on his way.

Queen Elizabeth II's tenure as head of state spanned post-war austerity, the transition from empire to Commonwealth, the end of the Cold War and the UK's entry into - and withdrawal from - the European Union.

Her reign spanned 15 prime ministers starting with Winston Churchill, born in 1874, and including Liz Truss, born 101 years later in 1975, and appointed by the Queen earlier this week. 

She held weekly audiences with her prime minister throughout her reign.

The Queen was born Elizabeth Alexandra Mary Windsor, in Mayfair, London, on 21 April 1926.

https://www.bbc.co.uk/news/uk-61585886

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......!

  • கருத்துக்கள உறவுகள்

எனது பள்ளி செல்லும்  பிள்ளைகள் இது எப்போது நிகழும் எனக் காத்திருந்தனர். 

😉

  • கருத்துக்கள உறவுகள்

மனிசன்காரர் பதிநான்கு மாதத்துக்கு முன்னர் செத்தபிறகு, மனிசி மெதுவாக போய்கொண்டிருந்தார்.

நீண்டகால ஆட்சி.... கவலைப்பட ஒன்றும் இல்லை.

இரண்டாவது மகனின் குழப்படியால், கிழவி கொஞ்சம் நிம்மதி இழந்திருந்தார்.

8 minutes ago, Kapithan said:

எனது பள்ளி செல்லும்  பிள்ளைகள் இது எப்போது நிகழும் எனக் காத்திருந்தனர். 

😉

Public holiday?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ராணி போனார்.... ராசா வந்தார்... டும்... டும்... டும்...

QEII போனார், King Charles III வந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலாம் சார்லஸ் மன்னர் ஒரு கிறுக்கர்.

அரசர்கள் ஆளுவதற்காக இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் என்று நினைத்து அதற்கு அமைய நடந்து, பாராளுமன்றத்தினை மதித்து நடவாமையால், பாராளுமன்ற ஆதரவாளர்கள், அரசரின் ஆதரவாளர்கள் என்று இராணுவம் இரண்டாக்கியது. 

பலத்த போரின் பின்னர் மன்னர் சிறைபிடிக்கப்பட்டார்.

சிறையில் இருந்த போதும் மன்னர், விட்டுக்கொடுக்க முன்வராததால், சிரச்சேதம் செய்யப்பட்டார். (1649)

King Charles I of England Executed | History On This Day

இங்கிலாந்து அரச குல வரலாறில் இவ்வாறு கொல்லப்பட ஒரே மன்னர் இவர் மட்டுமே.

அதன் பின்னர் ஒலிவர் குரோம்வெல் என்பவர் தலைமையில் சுமார் 11 ஆண்டுகாலம், இங்கிலாந்து ஒரு குடியரசாக, வரலாறில் முதன்முறையாக இருந்தது.

இடையே இறந்த மன்னர் மகன் சார்லஸ், ஸ்காட்லாந்தில் மன்னராக பின்னர் படை திரட்டிக்கொண்டு வந்தாலும், வெல்ல முடியவில்லை.

பின்னர் சார்லஸ் நெதர்லாந்து தப்பி ஓடி விட்டார். தப்பி ஓடும் வழியில், இவரும், இவரது படைத்தளபதியும் ஒரு ஓக் மரத்தின் மேலே இரவு ஒளிந்து இருந்து, மறுநாள், ஒலிவரின் படைகள் நகர்ந்த பின், ஓடினார்.

The Royal Oak and the Daring Escape of King Charles II | Nonfictioness

ஒலிவர் மரணித்த பின்னர், மக்கள் அரசர் தேவை என கருதிய பின்னர், இந்த இளவரசர், இரண்டாவது சார்லஸ் மன்னராக முடி சூட்டினார். 1660

Charles II Hides In Oak Tree To Escape Oliver Cromwell's Army – Right Royal  Roundup

ஒளிந்திருந்த மரத்தின் வம்ச மரம் இது என இன்றும் வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் வரிசையில் மூன்றாவது சார்லஸ் மன்னராக, எலிசபெத் ராணியின் மகன் அரியணைக்கு வருகிறார். 2022

King Charles III' Chosen as Title of Britain's New Monarch - Bloomberg

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இரண்டாவது மகனின் குழப்படியால், கிழவி கொஞ்சம் நிம்மதி இழந்திருந்தார்.

பேரன்… ஹரியின் குழப்படியும், மனிசியை… கவலைப் பட வைத்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர், அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம்…
மகாராணிக்கு சிறு வயதில், கணக்கு கற்பித்ததாகவும்….
மகாராணி ஒரு முறை கொழும்பு வந்திருந்த சமயம்… தனது ஆசிரியரை சந்தித்த போது,
கையுறையை… கழட்டி விட்டு, கை குலுக்கியதாகவும்  சொல்வார்கள்.
(இதில் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. கேள்விப் பட்ட செய்தி மட்டுமே.)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார், பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

 
 

ராணி எலிசபெத் II

பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார்.

வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில் கூடினர்.

1952இல் அரியணைக்கு வந்த ராணி, மிகப்பெரிய சமூக மாற்றத்தை தன் வாழ்நாளில் கண்டார்.

அவரது மரணத்துடன், முன்னாள் வேல்ஸ் இளவரசரான அவரது மூத்த மகன் சார்ல்ஸ், புதிய அரசராக இருந்து 14 காமன்வெல்த் நாடுகளுக்குத் தலைவராகவும் விளங்கி நாட்டை துக்க காலத்தில் வழிநடத்துவார்.

பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி அமைதியாக மறைந்தார். அரசர் மற்றும் அவரது துணைவியான அரசி இன்று மாலை பால்மோரலில் தங்குவார்கள். நாளை அவர்கள் லண்டனுக்குத் திரும்புவார்கள்," என்று கூறப்பட்டுள்ளது. 

ராணியை மருத்துவ கண்காணிப்பில் மருத்துவர்கள் வைத்த நிலையில், அவரது பிள்ளைகள் அனைவரும் அபெர்தீனுக்கு அருகே உள்ள பால்மோரலுக்கு பயணம் மேற்கொண்டனர். 

ராணியின் பேரனான இளவரசர் வில்லியமும் அங்கு இருக்கிறார். அவரது சகோதரர் இளவரசர் ஹாரி அங்கு சென்று கொண்டிருக்கிறார். 

ராணி எலிசபெத் II அரச தலைவராக இருந்த காலம் போருக்குப் பிந்தைய சிக்கன நடவடிக்கையின்போது நடந்தது. பேரரசில் இருந்து காமன்வெல்த் ஆக நாடு மாற்றம் அடைந்தது, பனிப்போரின் நிறைவுக்காலம், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்தது மற்றும் வெளியேறிய காலம் அதில் அடங்கியது.

ராணியின் ஆளுகை, 1874இல் பிறந்த வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி 101 ஆண்டுகளுக்குப் பிறகு 1975இல் பிறந்த லிஸ் டிரஸை இந்த வாரத்தில் புதிய பிரதமராக நியமிக்கும்வரை 15 பிரதமர்களைக் கண்டது. 

தமது ஆட்சிக்காலம் முழுவதும் தமது பிரதமருடன் வாராந்திர சந்திப்புகளை அவர் நடத்தி வந்தார். 

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில், ராணியின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளுக்காகக் காத்திருந்த மக்கள், அவரது மரணத்தைக் கேள்விப்பட்டதும் அழத் தொடங்கினர். அரண்மனையின் உச்சியில் இருந்த யூனியன் கொடி பிரிட்டன் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு அரைக்கம்பத்தில் இறக்கப்பட்டது.

ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர், லண்டனில் உள்ள மேஃபேரில் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி பிறந்தார்.

 

https://www.bbc.com/tamil/global-62841288

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Queen Elizabeth II received new Prime Minister Liz Truss

இரண்டு நாளுக்கு முதல் தானே இந்த சந்திப்பு நடந்தது?????

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

மனிசன்காரர் பதிநான்கு மாதத்துக்கு முன்னர் செத்தபிறகு, மனிசி மெதுவாக போய்கொண்டிருந்தார்.

நீண்டகால ஆட்சி.... கவலைப்பட ஒன்றும் இல்லை.

இரண்டாவது மகனின் குழப்படியால், கிழவி கொஞ்சம் நிம்மதி இழந்திருந்தார்.

Public holiday?

அமாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

மனிசன்காரர் பதிநான்கு மாதத்துக்கு முன்னர் செத்தபிறகு, மனிசி மெதுவாக போய்கொண்டிருந்தார்.

நீண்டகால ஆட்சி.... கவலைப்பட ஒன்றும் இல்லை.

இரண்டாவது மகனின் குழப்படியால், கிழவி கொஞ்சம் நிம்மதி இழந்திருந்தார்.

Public holiday?

LIZ: தரலாம்

  • கருத்துக்கள உறவுகள்

மகாராணிக்கு நல்ல சாவு. முந்த நாள்... சக்கர நாற்காலியிலோ (கருணா), 
இருவர் இரு பக்கமும் கைத்தாங்கலாக  பிடித்த படி நிற்காமலோ(சம்பு)... 
சொந்தக் காலில் நின்ற மனிசி, படுக்கையில் இருந்து... உத்தரிக்காமல், 
அமைதியாக உலகை விட்டுப் பிரிந்தது நல்ல விடயம். 
அப்படி... இறப்பதற்கும், கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

என்னை போல் பல ஈழ தமிழருக்கு அடைக்கலம் குடியுரிமை  தந்த நாட்டையும் அதன் மகாராணியாரையும் அன்றும் இன்றும் என்றும் நன்றியுடன் பார்க்கிறேன்.
ஆத்மா சாந்தியடையட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Ahasthiyan said:

என்னை போல் பல ஈழ தமிழருக்கு அடைக்கலம் குடியுரிமை  தந்த நாட்டையும் அதன் மகாராணியாரையும் அன்றும் இன்றும் என்றும் நன்றியுடன் பார்க்கிறேன்.
ஆத்மா சாந்தியடையட்டும்

வரலாற்றை மறக்கக்கூடாது  ராசாக்கள்

நாம் ஏன்   அகதியானோம்???

சிங்கப்பூர்  பார்த்து பொறாமைப்பட்ட  நாடு இப்ப  எப்படி  இருக்கு???

இதற்கெல்லாம்  காரணம்  யார்??

அனைத்தும்  அறிந்த  ஒரேயொருவர்  இந்த  அம்மணி  தான்

இவரது  காலத்தில் தமிழருக்கு  செய்யவில்லை  என்றால் ....???

போகட்டும்  மீண்டும்  வரவே வேண்டாம்😡

 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

வரலாற்றை மறக்கக்கூடாது  ராசாக்கள்

நாம் ஏன்   அகதியானோம்???

சிங்கப்பூர்  பார்த்து பொறாமைப்பட்ட  நாடு இப்ப  எப்படி  இருக்கு???

இதற்கெல்லாம்  காரணம்  யார்??

அனைத்தும்  அறிந்த  ஒரேயொருவர்  இந்த  அம்மணி  தான்

இவரது  காலத்தில் தமிழருக்கு  செய்யவில்லை  என்றால் ....???

போகட்டும்  மீண்டும்  வரவே வேண்டாம்😡

 

நியாயமான கோபம், விசுகர். 

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் பூதவுடல் 10 நாட்களின் பின் நல்லடக்கம்

By T. SARANYA

09 SEP, 2022 | 02:52 PM
image

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் பூதவுடல் 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் வைக்கப்படவுள்ளது.

பிரித்தானிய  மகாராணி இரண்டாம் எலிசபெத்  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணி உயிரிழந்ததையடுத்து பிரித்தானியாவின் புதிய மன்னராக இளவரசர் 3 ஆம் சார்ளஸ் அரியணை ஏறியுள்ளார். 

பிரித்தானிய மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராணி எலிசபெத்தின் பூதவுடல் நல்லடக்கம் 10 நாட்களுக்கு பின் நடைபெறும் எனவும், 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் ராணியின் பூதவுடல் வைக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/135358

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பரேசன் லண்டன் பிரிட்ஜ்- லண்டன் பிரிட்ஜ் இஸ் டவுன் - இவற்றிற்கும் மகாராணியின் மறைவிற்கும் உள்ள தொடர்பு என்ன?

By RAJEEBAN

09 SEP, 2022 | 12:56 PM
image

 

london_bridge.jpg

ஒப்பரேசன் லண்டன் பிரிட்ஜ்

 

இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு பின்னர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான திட்டங்களின் பெயர் அது.

1952 முதல் மகாராணி அரசசிம்மானசனத்தில் வீற்றிருக்கின்றார்.பிரிட்டனின் வரலாற்றில் எந்த முடிக்குரிய தலைவரும் இவ்வளவு காலம் ஆட்சிபுரிந்ததில்லை.

 

download__2_.jpg

தனது காலத்தில் இரண்டாவது எலிசபெத் மகாராணி பல பிரிட்டிஸ் பிரதமர்களையும் 20க்கும்மேற்பட்ட ஒலிம்பிக்போட்டிகளையும் ஆறுமேற்பட்ட பாப்பரசர்களையும் சந்தித்துள்ளார் எதிர்கொண்டுள்ளார்.

பொதுநலவாயத்தின் மூலக்கல்  அவர்- 600க்கும் மேற்பட்ட அமைப்புகள் தொண்டுநிறுவனங்களின்போசகர் அவர்.உலகின் பல நாடுகளுடனான ஐக்கியஇராச்சியத்தின் உறவுகளில் முக்கிய பங்காற்றுகின்றார்.

ஆகவே அவரது மறைவு பல மாற்றங்களை கொண்டுவரும்,ஐக்கிய இராச்சியத்திற்கு மாத்திரமில்லை முழு உலகிற்கும்.

இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவின் பின்னர் என்ன நடக்கும்?

அவரது அந்தரங்க செயலாளர் எட்வேட் யங் மரண செய்தியை உடனடியாக பிரதமருக்கு அறிவிப்பார்.

அந்த செய்தி அனேகமாக இவ்வாறானதாக காணப்படும் லண்டன் பிரிஜ் இஸ் டவுன்

இதன் பின்னர் பிரதமர் ஒப்பரேசன் லண்டன் பிரிட்ஜினை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்குவார்.

அடுத்த சில நிமிடங்களில் மகாராணி இன்னமும் நாட்டின் தலைவராக உள்ள 15 நாடுகளிற்கு இந்த செய்தியை பிரதமர் பாதுகாப்பான வழிமுறைகள் ஊடாக அறிவிப்பார்.அதன் பின்னர் இந்த அறிவிப்பை உலகின் 36 பொதுநலவாய நாடுகள் அதன் தலைவர்களிற்கு பிரதமர் தெரிவிப்பார்.

download__1_.jpg

பின்னர் பங்கிங்காம் அரண்மணையின் வாயில்கதவில் கறுப்பு நிறத்தில் இந்த செய்தி காட்சிப்படுத்தப்படும்.அதேநேரத்தில் உலகின் ஊடகங்களிற்கு இந்த செய்தி தெரிவிக்கப்படும்.

ஒவ்வொரு ஊடக நிறுவனங்களும் இந்த செய்திக்காக தயாராக உள்ளன,ஒவ்வொரு வானொலி நிலையத்திலும் இவ்வாறான தேசிய பேரிடரை அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன.

பிபிசியின் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறுத்தப்படும்.

செய்திவாசிப்பவர்கள் எந்நேரமும் தயாராக உள்ள கறுப்புநிற ஆடைகளிற்கு மாறுவார்கள்.

வழமையாக சிவப்பு நிறத்தில் காணப்படும் பிபிசி என்பது கறுப்பு நிறத்திற்கு மாறும்.

செய்திதாள்கள் தொலைக்காட்சிகள் வானொலி நிலையங்கள் பல நாள் ஒலிஒளிபரப்பிற்கு தயாராகஉள்ளன.

இரண்டாவது எலிசபெத் மகாராணி உயிரிழந்த அதேதினத்தில் அவரது மூத்த புதல்வர் சார்ல்ஸ் உடனடியாக மன்னராவார்.

மகாராணியின் மறைவினை குறிக்கும் விதத்தில் பங்குசந்தைகள் வர்த்தக நிலையங்கள் போன்றவை மூடப்படலாம்.

 

இறுதி நிகழ்விற்கு முன்னர்

மகாராணி மறைந்த மறுநாள் சார்ல்ஸ் உரையாற்றுவார் அது நேரடியாக ஒலிபரப்பாகும், ஹைட் பார்க் லண்டனில் 41 பீரங்கி வேட்டுகளின் மத்தியில் அரசாங்கம் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும்,அதன் பின்னர் சார்ல்ஸ் மன்னர்  ஐக்கிய இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் ஒவ்வொரு நாட்டினதும் தலைவர்களை தலைநகரங்களில் சந்திப்பார், பின்னர் லண்டன் திரும்புவார்.

இந்த காலப்பகுதியில் தொலைக்காட்சிகள் ஏற்கனவே தயாரித்துவைக்கப்பட்டுள்ள மகாராணி குறித்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும்.

மகாராணிக்கு மரியாதை செய்யும் விதத்தில் பிபிசி நகைச்சுவை நிகழ்ச்சிகளை இடைநிறுத்தும்.

மகாராணியின் மறைவிற்கு நான்கு நாட்களின் பின்னர் மகாராணியின் உடல் இராணுவமரியாதையுடன் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மினிஸ்டர் ஹோலிற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும்.

அடுத்த நான்கு நாட்களிற்கு அவரது உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்படும். மன்னர் சார்ல்ஸ் குடு;ம்பத்தினர் விசேடபிரமுகர்கள்  அஞ்சலி செலுத்துவார்கள்.

அதன் பின்னர் மகாராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களிற்காக கதவுகள் திறக்கப்படும்.

இறுதி நிகழ்வுகள்

BUxMsLAI.jpg

பிரிட்டிஸ் மகாராணி காலமாகி பத்து அல்லது 12 நாட்களிற்கு பின்னர் இறுதி நிகழ்வுகள் இடம்பெறும்.

இறுதிநிகழ்வு இடம்பெறும் நாள் ஐக்கிய இராச்சியம் முழுவதும் விடுமுறை தினமாக காணப்படும் என்பது உறுதி.இரண்டு வாரங்களில் இரண்டாவது தடவை பங்குசந்தை மூடப்படும்,பல வர்த்தக நடவடிக்கைள் இடம்பெறாது,

11 மணிக்கு பின்பென் ஒலிக்கும்- நாடு மௌனமாகும், மகாராணியின் பிரேதப்பெட்டி வெஸ்ட் மினிஸ்டர் அபேயின் உள்ளே கொண்டுவரப்படும்,அங்கு காத்திருக்கும் விசேடமாக அழைக்கப்பட்ட 2000 பேர் தங்கள் தலைகளை தாழ்த்தி அஞ்சலி செலுத்துவார்கள், மதநிகழ்வுகளின் பின்னர்அவரது உடல்  windsor castle  எடுத்துச்செல்லப்படும் அதன் பின்னர் இறுதியாக  st george's chapelஎடுத்துச்செல்லப்படும் அங்கு தனது தந்தைக்கு அருகில் எலிசபெத் மகாராணி நிரந்தரமாக ஓய்வெடுப்பார்.

இறுதி நிகழ்விற்கு பின்னர்

இறுதிநிகழ்வு இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னர் மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டும் நிகழ்வு இடம்பெறலாம்.

எதிர்வரும் மாதங்களில் ஐக்கிய இராச்சியத்தில் நூற்றுக்கணக்கான மாற்றங்கள் நிகழக்கூடும்,மன்னரின் படத்துடன் பிரிட்டனின் புதிய நாணயம் வெளியாகும்,மகாராணியின் படத்துடனான நாணயம் மெல்லமெல்ல பயன்பாட்டிலிருந்து அகற்றப்படும்.

முத்திரைகள் கடவுசீட்டுகள் பொலிஸ் இராணுவசீருடைகள் போன்றவையும் இந்த மாற்றங்களை சந்திக்கும்.

தேசியகீதம் கோட் சேவ் த கிங் என மாற்றப்படும்.

https://www.virakesari.lk/article/135360

  • கருத்துக்கள உறவுகள்

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வல பாதையும் இறுதிச்சடங்கு திட்டமும்

9 செப்டெம்பர் 2022
 

கிரீடம்

பிரிட்டனில் மிக நீண்ட காலமாக முடியாட்சி செலுத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில், அவரது குடும்பத்தினர் சூழ ராணி அமைதியாக மறைந்தார்.

இனிவரும் நாட்களில், அவரது உடல் பொதுமக்கள் மரியாதை செலுத்துவதற்காக எப்படி வைக்கப்படும், அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் முறைகள் என்னென்ன என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பொதுமக்கள் மரியாதைக்காக வைக்கப்படும் ராணியின் உடல்

ராணியின் சவப்பெட்டி லண்டன் வந்தடைந்தவுடன், இறுதிச் சடங்குக்கு முன்பு, நான்கு நாட்களுக்கு வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் பொதுமக்கள் மரியாதை செலுத்த வைக்கப்படும்.

இந்த பிரமாண்ட மண்டபம், பிரிட்டன் அரசின் மையப்புள்ளியாக விளங்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் மிகவும் பழமையான பகுதி.

இதற்கு முன்பு, கடைசியாக அரச குடும்பத்தைச் சேர்ந்த நபர், பொதுமக்கள் மரியாதை செலுத்த வைக்கப்பட்டது 2002ஆம் ஆண்டில் ராணியின் தாயார் மறைந்தபோது தான். அவருக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில் நின்று மரியாதை செலுத்தினர்.

 

ராணியின் தாயார் இறுதி மரியாதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ராணியின் தாயாருக்கு இறுதி மரியாதை செலுத்த வரிசையில் காத்திருந்த மக்கள்

ராணி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டி, 11ஆம் நூற்றாண்டு மண்டபத்தின் மரக்கூரைக்குக் கீழே, கேடஃப்ல்க் எனப்படும் உயர்வான மேடையில் வைக்கப்படும். இந்த மேடையின் ஒவ்வொரு முனையையும், அரசு குடும்பத்திற்குச் சேவை செய்யும் வீரர்கள் பாதுகாப்பார்கள்.

ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு, ராணுவத்தினர் அணிவகுக்க அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உடன் வர ஊர்வலமாகக் கொண்டு வரப்படும்.

லண்டனில் ஊர்வலம் செல்லும்போது, வீதிகளில் நின்று பொதுமக்கள் அதைப் பார்க்க முடியும். லண்டனில் அரச குடும்ப பூங்காக்களில், இந்த ஊர்வல நிகழ்ச்சி பெரிய திரையில் ஒளிபரப்பப்பட உள்ளது.

அவரது சவப்பெட்டி, அரச குடும்பத்தின் கொடியால் சுற்றப்பட்டிருக்கும். வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தை வந்தடைந்ததும் அரச குடும்பத்தின் கிரீடம், சிலுவை ஏந்திய கோளச்சின்னம் மற்றும் செங்கோல், ராணியின் சவப்பெட்டி மீது வைக்கப்படும்.

இந்த மண்டபத்தில் முறையாக அவரது சவப்பெட்டி வைக்கப்பட்டவுடன், பிரார்த்தனை நடைபெறும். அதன்பிறகு, அவருக்கு மரியாதை செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

 

ராணியின் சவப்பெட்டி

ராணியின் இறுதிச் சடங்கு எப்போது?

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு, வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் இரண்டு வாரங்களுக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான தேதி அரசு குடும்பத்தினரால் உறுதி செய்யப்படும்.

வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. ஏனென்றால், 1953ஆம் ஆண்டு ராணியாக முடிசூட்டப்பட்டது உட்பட அங்குதான் பிரிட்டன் அரசர்களும் அரசிகளும் முடிசூட்டிக் கொண்டனர். 1947ஆம் ஆண்டு, இளவரசர் ஃபிலிப்பை ராணி இரண்டாம் எலிசபெத் திருமணம் செய்துகொண்டதும் இந்த தேவாலயத்தில்தான்.

 

வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

18ஆம் நூற்றாண்டு முதல், இந்த தேவாலயத்தில் அரசர்களில் இறுதி சடங்கு சேவை நடைபெறவில்லை என்றாலும், 2002ஆம் ஆண்டு, ராணியின் தாயாருக்கான இறுதிச் சடங்கு மட்டும் அங்கு நடைபெற்றது.

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாட்டைச் சேர்ந்த தலைவர்கள், ராணியின் வாழ்க்கை குறித்தும் அவரது சேவை குறித்தும் நினைவுகூர, அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் பங்கேற்பார்கள். இதில் பிரிட்டனைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்களும் முன்னாள் பிரதமர்களும் பங்கேற்பர்.

அன்றைய நாள், ராணியின் சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்திற்கு, ராயல் கடற்படையின் வாகனத்தில் (Gun carriage) கொண்டு செல்லப்படும்.

 

இறுதிக்கிரியை சேவை

இந்த வாகனம், கடந்த 1979ஆம் ஆண்டு, இளவரசர் ஃபிலிப்பின் உறவினர் லார்ட் மவுன்ட்பேட்டனின் இறுதிச் சடங்கில் பயன்படுத்தப்பட்டது. இதை அரச குடும்பத்தைச் சேர்ந்த கடற்படையின் 142 மாலுமிகள் இயக்கினார்கள்.

புதிய அரசர் உட்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்கள், இந்த ஊர்வலத்தில் பங்கேற்பார்கள்.

வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தின் சமயகுரு டெவிட் ஹோய்லே இந்த சேவையை நடத்துவார். கேன்டர்பெரி தேவாலயத்தின் பேராயர் ஜஸ்டீன் வெல்பே சமய சொற்பொழிவை ஆற்றுவார். பிரதமர் லிஸ் டிரஸ் பேச அழைக்கப்படலாம்.

 

வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு உள்ளே

இறுதி சடங்கு நடைமுறையைத் தொடர்ந்து, லண்டனில் ஹெடே பூங்கா முனையில் தேவாலயத்தில் இருந்து வெலிங்டன் ஆர்ச்சுக்கு ராணியின் சவப்பெட்டி இறுதி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். அதன்பிறகு, வின்ட்சருக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்படும்.

அன்றைய பிற்பகல், வின்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு ராணியின் சவப்பெட்டி கொண்டு செல்லப்படும்.

 

விண்ட்சரை நோக்கி இறுதி ஊர்வலம்

வின்ட்சர் கோட்டையில் உள்ள சதுக்கத்தில் நடக்கும் ஊர்வலத்தில், அரச குடும்பத்தைச் சேர்ந்த புதிய அரசரும் மூத்த உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு இறுதி சேவைக்கு (committal service) ராணியின் சவப்பெட்டி கொண்டு செல்லப்படும்.

அரச குடும்பத்தினர் வழக்கமாக திருமணம், ஞானஸ்நானம், இறுதிச் சடங்குக்கு செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தைத் தேர்வு செய்வார்கள். இங்குதான் சஸ்ஸெக்ஸின் கோமகன் இளவரசர் ஹேரி மற்றும் கோமகள் மேகன் திருமணம் செய்து கொண்டனர். ராணியின் கணவர் இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு இங்குதான் நடைபெற்றது.

 

செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தின் உள்ளே

செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்குள் அமைந்துள்ள அரசர் ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படுவதற்கு முன், ராயல் வால்ட்டில் இறக்கி வைக்கப்படும்.

https://www.bbc.com/tamil/global-62850899

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'South Africa Stolen from.. India Kenya Egypt Nigeria Barbados Australia Fiji'

அட... போட்டிருக்கிறது எல்லாம், ஆட்டையை போட்டதா?
செத்தவரை... இப்பிடி சொல்லக் கூடாது என்று ஒரு கோஷ்டி வர முதல், நாம எஸ்கேப் ஆகிடுவம். 😁

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 7 people and people standing
 
நடவடிக்கை "லண்டன் பாலம்" அடுத்து என்ன? விரிவான திட்டம்.
 
லண்டன்: பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமான நிலையில், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த திட்டத்தை 1960களில் இருந்தே பிரிட்டன் அரசு திட்டமிட்டு வைத்துள்ளது.
 
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்துள்ல நிலையில், இது உலகம் முழுவதும் எதிரொலிக்கும். இரண்டாம் எலிசபெத் உயிரிழக்கும் போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது அனைத்தும் ஏற்கனவே முன்கூட்டியே திட்டமிடப்பட்டு உள்ளன. இதனை ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ் என்று குறிப்பிடுகின்றனர். 1960கள் முதலே இந்தத் திட்டம் தயார் நிலையில் உள்ளது. எலிசபெத் மகாராணி உயிரிழந்துள்ளதால், அங்கு வரும் நாட்களில் துக்கம் அனுசரிக்கப்படும்.
 
லண்டன் பிரிட்ஜ் இஸ் டவுன் பிரிட்டன் பிரதமர் எலிசபத் மகாராணி உயிரிழக்கும் போது, அது முதலில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் அது அவரது தனிப்பட்ட செயலாளருக்குத் தெரிவிக்கப்படும். அவர் பாதுகாப்பான தொலைப்பேசி இணைப்பில் பிரதமரைத் தொடர்பு கொண்டு, "லண்டன் பிரிட்ஜ் இஸ் டவுன்" என்ற வாக்கியத்தைத் தெரிவிப்பார். அதன் பின்னர் அமைச்சரவை செயலாளர் மூலம் மற்ற அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்படும்.
 
பிபிசி பிரிட்டன் அரசு ஊடகமான பிபிசி டிவி மற்றும் ரேடியோ மூலம் அவரது மரணம் குறித்து செய்தி பொதுமக்களிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அனைத்து பிபிசி ஊடகங்களிலும் பிற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, எலிசபெத் மகாராணி இறுதிச்சடங்கு குறித்த நேரலை செய்யப்படும். பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயில்களிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்படும். இளவரசர் சார்ல்ஸ் மற்றும் பிரிட்டன் பிரதமர் பொதுமக்களிடம் உரையாற்றுவார்கள். அரசு கட்டிடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அங்கு அவரது அரசு இறுதிச் சடங்கு செய்யப்படும். மகாராணி இப்போது ஸ்காட்லாந்தில் உள்ள நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார் ஆப்ரேஷன் யூனிகார்ன் என்ற திட்டம் செயல்படுத்தப்படும்
 
இரண்டாம் நாள் காலை, பிரிட்டன் கவுன்சிலின் உறுப்பினர்கள் சார்லஸை புதிய அரசராக அறிவிப்பார்கள். செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை மற்றும் ராயல் எக்ஸ்சேஞ்சில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும். நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்துவார்கள். ராணியின் உடல் அரசு ரயில் அல்லது ராயல் ஏர்ஃபோர்ஸ் மூலம் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்து வரப்படும்.
 
சுற்றுப்பயணம் மூன்று மற்றும் நான்காம் நாளில் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ள சார்லஸ் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, பெல்பெஸ்ட் பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். மறுபுறம் லண்டனில் மகாராணி எலிசபெத் இறுதிச் சடங்கிற்கான ஒத்திகைகள் மேற்கொள்ளப்படும். ஐந்தாம் நாளில், பக்கிங்ஹாம் அரண்மனையில் தொடங்கி, நாடாளுமன்ற மாளிகை வரை ஊர்வலம் நடைபெறும்.
 
அடுத்து வரும் நாட்கள் அதைத் தொடர்ந்து எம்பிகள் அஞ்சலி செலுத்த ஏதுவாக ராணியின் உடல் வைக்கப்படும். அதைத் தொடர்ந்து 6 முதல் 9ஆம் நாட்கள் வரை மன்னர் சார்லஸ் அடுத்து வெல்ஷ் நாடாளுமன்றத்திற்குச் சென்று கார்டிஃப் லியாண்டாஃப் கதீட்ரல் செல்வார். மறுபுறம் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை அடையும். பக்கிங்ஹாம் அரண்மனையில் பொதுமக்கள் கூடுவார்கள்.
 
10ஆம் நாள் அதைத்தொடர்ந்து 10ஆம் நாளில் இறுதிச்சடங்கு நடைபெறும். எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் இரு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படும். இது தவிர எலிசபெத் மகாராணி உயிரிழந்தால் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். மேலும், நாடாளுமன்றம் அப்போது நடந்து கொண்டு இருந்தால் அதுவும் ரத்து செய்யப்படும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிசியின்ரை செத்தவீடு எப்ப முடியிறது......நாங்கள் எப்ப நிம்மதியாய் ரிவி பேப்பர் பாக்கிறது?????

அங்கம் அங்கமாய் ஆராயிறாங்கள்....😎

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

மனிசியின்ரை செத்தவீடு எப்ப முடியிறது......நாங்கள் எப்ப நிம்மதியாய் ரிவி பேப்பர் பாக்கிறது?????

அங்கம் அங்கமாய் ஆராயிறாங்கள்....😎

அதுக்கு இன்னும் 1௦ நாட்கள் பொறுத்திருக்க வேணும்

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, people standing and text that says 'பாட்டி செத்து போச்சி சார் ரெண்டு நாள் லீவு வேணும். அப்பாவ பெத்த பாட்டியா? அம்மாவ பெத்த பாட்டியா?? எலிசபத் பாட்டி சார். mt'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.