Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர் பிரச்னை: இந்தியாவின் ஐ.நா. நிலைப்பாட்டில் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர் பிரச்னை: இந்தியாவின் ஐ.நா. நிலைப்பாட்டில் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ரணில் விக்கிரமசிங்க மற்றும் நரேந்திர மோதி

பட மூலாதாரம்,HINDUSTAN TIMES/ GETTY IMAGES

இனப் பிரச்னைக்கு உரிய வகையில் அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டவில்லை என ஐநா சபையில் இந்தியா கவலை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 51வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிலையிலேயே, இந்தியா இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துதல் ஆகியவற்றின் ஊடாக இனப் பிரச்னைக்கு உரிய வகையில் அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டவில்லை என இந்தியா அந்த கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளது.

மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளடங்கலாக அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் எனவும் இந்தியா கூறுகின்றது.

 
 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை

பட மூலாதாரம்,FABRICE COFFRINI/ GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இதன்படி, அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடாத்துதல் ஆகியவற்றின் ஊடாக இனப்பிரச்னைக்கு உரியவாறான அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டைப் பூர்த்திசெய்வதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமை தொடர்பில் இந்தியா சார்பில் உரையாற்றிய பிரதிநிதி கரிசனத்தையை வெளிப்படுத்தினார்.

மேலும் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான நீதி, சமாதானம், சமத்துவம் மற்றும் சுயகௌரவம் ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடியவாறான அரசியல் தீர்வை வழங்குவதே இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது என குறிப்பிட்ட அவர், தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியானது கடன்களை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் பொருளாதாரத்தின் மட்டுப்பாடுகள் மற்றும் அதனால் மக்களின் வாழ்க்கைத்தரம் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்பவற்றைத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு உள்ளடங்கலாக அரசியலமைப்பின் 13வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மாகாண சபைத் தேர்தல்கள் விரைவாக நடாத்தப்பட வேண்டுமெனக் குறிப்பிட்ட இந்தியப் பிரதிநிதி, அதன்மூலம் அனைத்து இலங்கையர்களாலும் சுபிட்சமான எதிர்காலத்தை முன்னிறுத்திய தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்றும், எனவே இவ்விடயத்தில் இலங்கை உடனடியானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்தியாவின் கருத்து "ஒரு கானல் நீர் கரிசனை"

 

மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா

பட மூலாதாரம்,SIVARAJA

 

படக்குறிப்பு,

மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா

இந்தியாவின் இந்த கரிசனமானது, ஒரு கானல் நீர் கரிசனம் என இலங்கையை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

தமிழர்களுக்கு குறைந்தபட்ச தீர்வு இதுவென இந்தியா கருதிய போதிலும், உண்மையில் தமிழர்களுக்கான தீர்வு இது கிடையாது என அவர் கூறுகின்றார்.

''வருடா வருடம் இதே விடயத்தையே இந்தியா கூறுகின்றது. தமிழர்களுக்கு குறைந்த பட்ச தீர்வு இதுவென இந்தியா கருதுகின்றது. ஆனால் உண்மையில் அது தீர்வு அல்ல. மாகாண சபை இவ்வளவு காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலே இல்லை. மாகாண சபை இயங்கவில்லை. இப்படியான சூழ்நிலையிலும், தமிழ் மக்கள் முன்னர் போன்றேதான் வாழ்கின்றார்கள். மாகாண சபை ஒத்தி வைத்தமையினால், தமிழர்களுக்கு பாதிப்பு வரவில்லை. அப்படியே மூடி மறைக்கும் வேலையை தான் அரசாங்கம் செய்யும். கோட்டாபய ராஜபக்ஸ இருக்கும் போது, மாகாண சபைத் தேர்தல் தேவையில்லை என சொல்லப்பட்டது. அவர் அதற்கு பதில் சொல்லவில்லை. அவர்கள் எடுத்த நிலைப்பாட்டை தான் ஜெனீவாவில் ரணில் இன்று அறிவித்திருக்கின்றார். அதனால், பெரிய மாற்றங்கள் வராது. ரணில் புதிதாக ஒன்றும் செய்ய மாட்டார். பொருளாதார ஸ்திரதன்மை, அரசியல் ஸ்திரதன்மை இல்லாமல், அவரால் செய்ய முடியாது" என ஆர்.சிவராஜா குறிப்பிடுகின்றார்.

தமிழர்களுக்கான தீர்வு என்ற விடயமானது, ஓர் இழுத்தடிப்பு வேலையாகவே காணப்படுகின்றது எனவும் அவர் கூறுகின்றார்.

இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், இந்தியா தொடர்ந்தும் பாரிய உதவிகளை வழங்கி வருகின்ற இந்த பின்னணியிலேயே, தமிழர் பிரச்னைக்கான தீர்வு குறித்து இந்தியா கரிசனை வெளியிடுகின்றமை, மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை கொண்டு வருமா? என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜாவிடம் வினவினோம்.

''மாற்றத்தை ஏற்படுத்தவே படுத்தாது. தமிழர் பிரச்னை குறித்து இந்தியா பேசுகின்ற போதிலும், இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் அதனூடாக எந்தவித நன்மையும் இல்லை. அதுவொரு நிலைபாடு. வழமை போல் இந்தியாவின் ஓர் அறிவிப்பு. அவ்வளவு தான்" என அவர் கூறுகிறார்.

இந்தியாவின் கருத்து இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

 

பேராசிரியர் ராமு மணிவண்ணன்

 

படக்குறிப்பு,

பேராசிரியர் ராமு மணிவண்ணன்

சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசுகையில், "ராஜதந்திர அழுத்தம் காரணமாகத்தான் இந்திய பிரதிநிதி இவ்வாறு ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் தெரிவித்திருக்க வேண்டும். உண்மையில் இலங்கை தமிழர்கள் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என இந்தியா நினைத்திருந்தால் அதனை எப்போதோ கொண்டு வந்திருக்கலாம். அப்படி பல வாய்ப்புகள் இருந்தும் அதனை இந்தியா செய்யவில்லை." என்றார்.

"இப்போது இலங்கை தன் கட்டுப்பாட்டை மீறியோ அல்லது தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதால் இந்தியா ஒரு அழுத்தத்தை விளைவிக்க இவ்வாறு கூறியிருக்கலாம். இலங்கை மீதான பல குற்றச்சாட்டுகளை கடந்து அந்த நாட்டுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்த இந்தியா, இவ்வாறு கூறுவது மிகப் பெரிய அளவில் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது."

"2009-ல் இருந்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களிலும் இலங்கைக்கு ஆதரவாகத்தான் இந்தியா செயல்பட்டு வருகிறது. இலங்கைக்கு ராஜதந்திர ரீதியாக நெருக்கடியான நிலையை இந்தியா கொடுக்கக்கூடும் என்பதைவிட, அப்படி நெருக்கடியை கொடுக்கும் நாடு இந்தியா அல்ல. எங்களால் அழுத்தம் தர முடியும் என்று காண்பிக்கக்கூடிய நாடுதான் இந்தியாவே தவிர, உண்மையில் அத்தகைய அழுத்தத்தை இந்தியாவால் ஏற்படுத்த முடியாது. இலங்கைக்கு ராஜதந்திர ரீதியாக ஒரு செய்கையை காண்பிக்கிறார்கள், அவ்வளவுதான். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது மற்ற நாடுகளைவிட இந்தியாதான் அதிகமாக உதவி செய்தது. அப்படி இருக்கையில் எப்படி ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா இலங்கைக்கு எதிராக செயல்பட முடியும்?" என்றார் ராமு மணிவண்ணன்.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு இலங்கையில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இலங்கையை பொறுத்தவரை இந்தியாவின் ராஜதந்திரம் என்பது 'வட இந்திய' அரசியல்தான். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இந்தியா இலங்கைக்கு நட்பு நாடு. ஆனால், தமிழகமோ அல்லது தென்னிந்திய அரசியலில் இருந்து பார்க்கும்போது அது உண்மை கிடையாது. இலங்கை ஏறக்குறைய முழுமையாக சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுக்கு செல்லும்போது இந்தியப் பெருங்கடலில் புவிசார் மாற்றங்கள் நிகழும்போது இந்திய அரசாங்கத்தின் பார்வையில் ஒரு மாற்றத்தை அவதானிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனை ஒரு முழுமையான கட்டாயமாக இந்தியா எதிர்பார்க்கவில்லை. ராஜதந்திர அரசியலில் இந்தியாவைவிட பலமடங்கு முன்னோடி நாடாக இலங்கை இருக்கிறது. தேவைப்படும்போது இந்தியாவை புறக்கணிப்பதும் மற்ற தருணங்களில் மிக மிக நெருக்கமாக இருப்பதும் இலங்கைக்கு கடினமான ஒன்று அல்ல" என அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-62889017

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:

சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசுகையில், ராஜதந்திர அரசியலில் இந்தியாவைவிட பலமடங்கு முன்னோடி நாடாக இலங்கை இருக்கிறது. தேவைப்படும்போது இந்தியாவை புறக்கணிப்பதும் மற்ற தருணங்களில் மிக மிக நெருக்கமாக இருப்பதும் இலங்கைக்கு கடினமான ஒன்று அல்ல" என அவர் தெரிவித்தார்.

ராஜதந்திர விடயத்தில்… இந்தியா, இலங்கையிடம்…. பிச்சை வாங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

எங்களால் அழுத்தம் தர முடியும் என்று காண்பிக்கக்கூடிய நாடுதான் இந்தியாவே தவிர, உண்மையில் அத்தகைய அழுத்தத்தை இந்தியாவால் ஏற்படுத்த முடியாது

உண்மை  இன்று வரை திட்டமிட்டவகையில் செய்கிறார்கள்    ஆனால் எங்கள் அரசியல் வாதிகளுக்கு இது புரியவில்லை 

1 hour ago, ஏராளன் said:

இலங்கையை பொறுத்தவரை இந்தியாவின் ராஜதந்திரம் என்பது 'வட இந்திய' அரசியல்தான்.

இந்த நிலை மாறி தென் இந்தியா அரசியல் என்று வந்தால் இலங்கை தமிழருக்கு அரசியல் தீர்வு கிடைக்குமா? 

  • கருத்துக்கள உறவுகள்

சிறிமாவோ தொடங்கி, ஜேஆர், அந்தாள் மருமகன் ரணில் ராஜபக்சே வரை இந்தியா கோட்டை விடுவதே வேலையாய் போட்டுது.

ஜெனிவாவில, சிங்களத்தை சீனாக்காரன் கை விடமாட்டான் என்று தெரிந்ததும், இப்ப புது வேசம் போட்டு வெருட்டப் பார்த்தால், கொழும்பில் கீழால காத்துப்பறிய சிரிப்பாங்கள்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவில் இந்திய நிலைப்பாடு

14 SEP, 2022 | 04:23 PM
image

 

இனப்பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்த பிரகாரம் அரசியல் தீர்வைக் காண்பதில் ' மதிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ' காணமுடியவில்லை என்று ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  51வது கூட்டத்தொடரின் கருத்துப்பகிர்வு அமர்வில்  கடந்தவாரம் ( செப்.12) இந்தியா வெளிப்படுத்திய விசனம் அரசியல் வட்டாரங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கிறது.அரசாங்கத்திடமிருந்து  பிரதிபலிப்பு வரவில்லை என்றபோதிலும், அரசியல் தீர்வு முயற்சிகளில் முன்னேற்றம் இல்லையென்று இந்தியா ஜெனீவாவில் முதற்தடவையாக குறிப்பிட்டிருப்பதால் இத்தடவை இந்திய நிலைப்பாட்டில் ஒரு  வித்தியாசத்தை அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம்  விரைவில் வாக்கெடுப்புக்கு விடப்படக்கூடிய சாத்தியம் இருக்கும் நிலையில், இந்தியாவிடமிருந்து இக்கருத்து வெளிவந்திருக்கிறது.தீர்மானத்தின் வரைவு  பேரவையின் உறுப்புநாடுகள் மத்தியில் சுற்றுக்கு விடப்பட்டிருக்கிறது.அதில் மனித உரிமைகள் நிலைவரம், பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை  என்று பெருவாரியான விடயங்களுக்கு  மத்தியில் தமிழ் மற்றும்  முஸ்லிம் மக்களின்  நீண்டகால மனக்குறைகளையும் கோரிக்கைகளையும் தீர்த்துவைப்பதில் முன்னேற்றம் இல்லாதிருப்பது குறித்தும்மனித உரிமைகள்  பேரவை விசனம் கொண்டுள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.

206120_1.jpg

2009 க்கு பிறகு இலங்கை மீதான ஜெனீவா தீர்மானங்களுக்கு   ஆதரவாக இந்தியா மூன்று தடவைகள் வாக்களித்தது. அவற்றில் இரு தீர்மானங்கள் இலங்கையை கடுமையாக கண்டிப்பவையாக அமைந்தன.2014, 2021 தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.

" ஐக்கிய நாடுகள் சாசனத்தின் வழிகாட்டலின் பிரகாரம் மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாப்பதும் ஆக்கபூர்வமான சர்வதேச  பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை முன்னெடுப்பதும் அரசுகளின் பொறுப்பு என்று இந்தியா எப்போதும் நம்புகிறது.இதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை பரவலாக்கி விரைவாக மாகாணசபை தேர்தல்களை நடத்தி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காண்பதில் மதிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாமல் இருப்பது குறித்து இந்தியா விசனமடைகிறது " என்று  இந்திய இராஜதந்திரி  பேரவையில் குறிப்பிட்டார்.

WhatsApp_Image_2022-09-14_at_16.04.38.jp

பொருளாதார மீட்சியுடன் அதிகாரப்பரவலாக்கல் உறுதிமொழியை தொடர்புபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட இந்தியா விரைவில் தேர்தல்களை நடத்தி மாகாணசபைகளை செயற்படவைப்பதன் மூலமாக சுபிட்சமான எதிர்காலம் ஒன்றுக்கான தங்களின் அபிலாலைகளை மக்கள்  அடையக்கூடியதாக இருக்கும்.இது விடயத்தில் நம்பகமான உடனடி நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

இந்தியா இத்தகைய நிலைப்பாட்டை எடுத்ததற்கு சீன  ஆய்வுக்கப்பலை புதுடில்லியின் ஆட்சேபத்துக்கு மத்தியிலும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கு கொழும்பு வழங்கிய அனுமதி உட்பட புவிசார் அரசியலுடன் தொடர்புடைய சர்ச்சைகளை சாத்தியமான காரணங்களாக அவதானிகள் கூறுகிறார்கள்.ஆனால், இந்தியா அரசியல் தீர்வு குறித்து நீண்டகாலமாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.அதை இலங்கை கவனத்தில் எடுக்காமல் காலத்தை இழுத்தடிக்கிறது என்பது ஒன்றும் புதியவிடயம் அல்ல.    

அரசியல் தீர்வு விடயத்தில் குறிப்பாக, 13  வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இரு தரப்பு ஊடாட்டங்கள் மூலமாக இலங்கையை இணங்கச் செய்வதில் இந்தியா நம்பிக்கை இழந்த நிலையில்தான் ஜெனீவாவில்  பிரச்சினையை கிளப்புவதற்கு தீர்மானித்ததோ என்ற கேள்வியும் எழுகிறது.உண்மையில் இந்திய -- இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பிறகு 35 வருடங்கள் கடந்த நிலையில் இதுவரையில் இலங்கை அரசாங்கங்கள் 13 வது திருத்தத்தை ஒழுங்காக நடைமுறைப்படுத்துவதை இந்தியாவினால் உறுதிப்படுத்தமுடியாமல் போய்விட்டது. இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்புக்களின்போது அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுவதும் பிறகு இலங்கை தலைவர்கள் அதைப் பற்றி அக்கறை காட்டாமல் விடுவதும் வழமையாகிவிட்டது.

மாகாணசபைகள்  தேர்தல் கடந்த நான்கு வருடகாலமாக நடத்தப்படாத நிலையில் அவற்றின் நிருவாகம் ஜனாதிபதியின் பிரதிநிதிகளான ஆளுநர்களின் கீழ் இருந்துவருகிறது.சில தமிழ் அரசியல் கட்சிகள்  தேர்தல்களை நடத்தவேண்டும் என்று இடைக்கிடை கோரிக்கைகளை முன்வைக்கின்றனவே தவிர,தென்னிலங்கையில் மாகாண சபைகளைப் பற்றி எந்த அக்கறையையும் காணவில்லை. 

நான்கு மாதங்களாக இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சியின்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு, புதிய அரசியல் கலாசாரம் மற்றும் முறைமை மாற்றம் உட்பட பெருவாரியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால்,நான்கு வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாணசபை தேர்தல்களை வலியுறுத்தும் கோரிக்கை அந்த கிளர்ச்சியி்ன்போது எவராலும் முன்வைக்கப்பட்டதாக இல்லை. பிரதான சிங்கள அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை, பாராளுமன்றத்துக்கு அடுத்ததாக இரண்டாம் மட்டத்தில் அரசியல் செல்வாக்கை  வலுப்படுத்துவதற்கான ஒரு ஏற்பாடாகவே மாகாணசபைகளை அவை கையாண்டு வந்திருக்கி்ன்றன.

Accord.jpg

மாகாணசபைகள் முறை அறிமுகப்படுத்தப்பட்டு மூன்றரை தசாப்தங்கள் கடந்துவிட்ட நிலையில் அவை என்றைக்காவது முழுமையான அதிகாரங்களுடன் செயற்படக்கூடிய அரசியல் சூழ்நிலை நாட்டில் உருவாகும் என்று நம்பமுடியவில்லை. கடந்த நூற்றாண்டில்  இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண்பதற்கு என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களின் தலைவர்களுடன் ஒப்பந்தங்களைச் செய்த இலங்கை பிரதமர்கள் சிங்கள இனவாத சக்திகளிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்புக்கு மத்தியில் அவற்றை கிழித்தெறிந்தார்கள். மாகாணசபைகளை அறிமுகப்படுத்திய 1987 ஜூலை சமாதான உடன்படிக்கை இந்தியாவுடன் செய்யப்பட்டது என்பதால்தான் அதை ஜனாதிபதிகளினால் அதை கிழித்தெறிய முடியாமல் இருக்கிறது.அந்த உடன்படிக்கையும் மாகாணசபைகளும் இந்தியாவினால் இலங்கை மீது  திணிக்கப்பட்டவை என்பதே சிங்கள அரசியல் சமுதாயத்தின்  பெரும் பகுதியின்  பரவலான அபிப்பிராயம்.

1983 ஜூலையில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவன்செயலுக்கு பின்னரான சூழ்நிலைகளில் இந்திய அரசாங்கத்தின் நெருக்குதல்கள்  காரணமாகவே அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட முன்வந்தார்.உடன்படிக்கையின் ஏற்பாடுகளுக்கு  எவ்வாறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துவது என்பதையும் தீர்மானித்துக்கொண்டுதான் அவர் அதில் கைச்சாத்திட்டார் என்பதை கடந்த கால அரசியல் நிகழ்வுப் போக்குகளை திரும்பிப்பார்த்தால் புரிந்துகொள்ளமுடியும்.

கடந்த 35 வருடங்களாக பதவியில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் மாகாணசபைகள் முழுமையான அதிகாரங்களுடன் ஒழுங்காக இயங்காதிருப்பதை உறுதிசெய்வதிலேயே கவனம் செலுத்தின.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவியில் இருந்து இறங்கிய பின்னர் ராஜீவ் காந்தி பற்றி முன்னாள் இந்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர்  எழுதிய நூலொன்றின் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ள ஒரு தடவை புதுடில்லி சென்றார்.  அந்த நிகழ்வில் இடம்பெற்ற கலந்துரையாடலில்  அவர்  இனப்பிரச்சினை பற்றி குறிப்பிட்டபோது இலங்கையில் பதவிக்கு வந்த சகல அரசாங்கங்களுமே இந்திய --இலங்கை   சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாதிருப்பதை உறுதிசெய்துகொண்டன என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.தனது அரசாங்கத்தையும் சேர்த்தே அவர் கூறினார். அந்தளவுக்காவது ஒரு அரசியல் ' நேர்மை ' திருமதி குமாரதுங்கவிடம் இருந்தது.

CG_ed1dc733-dimage_story.jpg

13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற வலியுறுத்தல்  இந்தியாவிடமிருந்து மாத்திரமல்ல, அண்மைய வருடங்களில் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளின் அனுசரணையுடன்  ஜெனீவா தீர்மானங்களிலும் இடம்பெற்றிருக்கிறது.என்றாலும் கூட இலங்கை அரசாங்கம் அதில் அக்கறை காட்டவில்லை. 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை யை ஒழிப்பதானால் 13 வது திருத்தத்தையும் இல்லாமல் செய்யவேண்டும் என்று சிங்கள தேசியவாத சக்திகள் கூறிவந்திருக்கின்றன. ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஆளுநர்கள் ஊடாக மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படுவதால் ஜனாதிபதி பதவியை ஒழித்தால் நாட்டின் ஐக்கியத்துக்கும் ஒருமைப்பாட்டுக்கும்   ஆபத்தை ஏற்படுத்தும் ; அதனால்  ஜனாதிபதி ஆட்சிமுறையையும் அந்த திருத்தத்தையும் ஏககாலத்தில் ஒழிக்கவேண்டும் என்று அந்த சக்திகள் விசித்திரமான ஒரு முடிச்சைப் போடுகின்றன. தற்போதைய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச அந்த நிலைப்பாட்டின் முக்கியமான ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால், எதிர்காலத்திலும் 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படக்கூடிய சூழ்நிலை வருமா என்பது சந்தேகமே.இது விடயத்தில் இந்தியாவினால் இலங்கையை வழிக்கு கொண்டுவர முடியவில்லை. பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு நிதயுதவிக்கு இலங்கை முற்றுமுழுதாக நம்பியிருக்கும் சர்வதேச சமூகத்தினால் இதை சாதிக்க இயலுமா?

https://www.virakesari.lk/article/135637

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

ராஜதந்திர விடயத்தில்… இந்தியா, இலங்கையிடம்…. பிச்சை வாங்க வேண்டும்.

காலை கழுவி குடித்தாலும் வராது🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

காலை கழுவி குடித்தாலும் வராது🤣

ஆகா... நல்ல உதாரணம். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, உடையார் said:

காலை கழுவி குடித்தாலும் வராது🤣

மணி.....😁  👍🏼

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

ராஜதந்திர விடயத்தில்… இந்தியா, இலங்கையிடம்…. பிச்சை வாங்க வேண்டும்.

இதனால்த் தான் ரணில் ஜனாதிபதி ஆவதை இந்தியா விரும்பவில்லை என்கிறார்கள்.

சயித் வந்திருந்தால் தாம் ஆட்டி படைக்கலாம் என்ற கனவு கலைந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

ராஜதந்திர விடயத்தில்… இந்தியா, இலங்கையிடம்…. பிச்சை வாங்க வேண்டும்.

கைலாகு கொடுப்பதில் கூட உடல் மொழிகூற்றை பின்பற்றும் நரி, இந்தியா வல்லரசு என்று இந்தியாதான் தானாக சொல்லிக்கொள்கிறது. 

1988 அல்லது 1989 யூலை 29 முன்னர் இந்திய இராணுவம் வெளியேறாவிட்டால் இலங்கை அடித்து துரத்தும் என பிரேமதாசா கூறியதாக நினைவுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இ்ந்திரா காந்திக்குப் பின்னர், இலங்கை விடயத்தில் ஒரு தெளிவான கொள்கை இல்லை. ரொமேஸ் பண்டாரி முதல், சுப்பிரமணிய சுவாமி, சோ, ராம் போன்ற சிங்களத்தின் ஊழல் வலையில் விழும் விண்ணாதி விண்ணர்கள் செல்வாக்கு செலுத்திய உருப்படியில்லாத கொள்கை திட்டங்கள்.

வல்லரசு விளங்கீடும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2022 at 12:54, ஏராளன் said:

ராஜதந்திர அரசியலில் இந்தியாவைவிட பலமடங்கு முன்னோடி நாடாக இலங்கை இருக்கிறது. தேவைப்படும்போது இந்தியாவை புறக்கணிப்பதும் மற்ற தருணங்களில் மிக மிக நெருக்கமாக இருப்பதும் இலங்கைக்கு கடினமான ஒன்று அல்ல" என அவர் தெரிவித்தார்.

சிறிலங்கா இந்தியாவை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்கிறது.
அண்மைய சீனக்கப்பல் விடயம் மிகச்சிறந்த உதாரணம்.வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவை சிங்களம் காட்டியும் கொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

2022 முடிவின் மிகச் சிறந்த பகிடி.

On 13/9/2022 at 17:54, ஏராளன் said:

இலங்கையை பொறுத்தவரை இந்தியாவின் ராஜதந்திரம் என்பது 'வட இந்திய' அரசியல்தான்.

 

On 13/9/2022 at 17:54, ஏராளன் said:

இலங்கை ஏறக்குறைய முழுமையாக சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுக்கு செல்லும்போது இந்தியப் பெருங்கடலில் புவிசார் மாற்றங்கள் நிகழும்போது இந்திய அரசாங்கத்தின் பார்வையில் ஒரு மாற்றத்தை அவதானிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனை ஒரு முழுமையான கட்டாயமாக இந்தியா எதிர்பார்க்கவில்லை.

இதில் தெரிவது தமிழர் என்றால் கிந்தியவிடம் ஓர் வெறுப்பு கலந்த எதிர்பு நிலை இருக்கிறது. அந்த வெறுப்பு கட்டமைப்பு அடிப்படை கொண்டது.

உ.ம். அமைந்தோட்டையில், போர்ட் சிட்டி  இல் சீன கடன் கொடுத்து நிர்மாணித்து நிரந்தரமாக ஊன்றுவது தெரிந்தும் வாய்மூடி ஒன்றும் தெரியாது போல இருந்தது.

அதே சீன, தேவைக்கு பகுதிகளில் மின்சார உற்பத்தி சிறிய கட்டுமானந்த்தை மட்ட முன்வந்த போது, கிந்தியா  வெளிப்படையாக முன்னின்று சிங்களத்துக்கு போர்விமானகளை தீவு பகுதியில் உள்ள இலங்கை எல்லைககுள்  கடல் மேல் உள்ள வான் பரப்பின் பலமுறை அச்சுறுத்தல் பாணியில் பறந்து சிங்களத்தை வெருட்டி தடுத்தது.

தமிழரில் உள்ள சில முட்டாள் அரசியல் பகுதியினர்,ம் கிந்தியாவுக்கு ஒத்து ஊதினர் என்பது வேறு விடயம். 

 

15 hours ago, ஏராளன் said:

அதனால், எதிர்காலத்திலும் 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படக்கூடிய சூழ்நிலை வருமா என்பது சந்தேகமே.

15 hours ago, ஏராளன் said:

இது விடயத்தில் இந்தியாவினால் இலங்கையை வழிக்கு கொண்டுவர முடியவில்லை.

 

சிங்களம் வழிக்கு  வராதது,   தமிழர் மீத கட்டமைக்கப்பட்ட வெறுப்பு கலந்த எதிர்ப்பு கிந்திய  கொள்கையின் ஒரு பகுதி.

இந்திராகாந்தியும் இதே கட்டமைப்பு அடிப்படை கொண்ட வெறுப்பு கொள்கையையே வைத்து, இல்லை கிந்தியா வைத்து இருந்தது.

இந்திராகாந்தி கொள்கையை செயல்படுத்தும் முறையில், தமிழர்களை கண்டிப்பதை உள்ளே வைத்து, வெளிப்படையாக சிங்களத்தை கண்டித்தார். அனால், தமிழருக்கான கண்டிப்பும், கறாரும் சிங்களவரை கண்டிப்பதை  விட கடுமையாகவே இருந்தது.   

இந்திராகாந்தி - அமிர், இந்திராகாந்தி - அமிர், சிவசிதம்பரம், இந்திராகாந்தி - அமிர், சிவசிதம்பரம், யோகேஸ்வரன் என்று 3 சந்திப்புகளின் நடைபெற்றது.

இதில் எல்லாம் உத்தியோகபூர்வம் இல்லை, அறிக்கை வரவும் இல்லை.

எல்லாவற்றிலும் பார்த்தசாரதி இருந்தார்.

இந்திராகாந்தி, பேச்சுக்களில் முதலில் சுட்டு பொசுக்கியது  தமிழீழத்தை (இதுவே மிக முக்கிய காரணம், கூட்டணி தமீழீத்தை கைவிடுவதற்கு).

இதற்கும் மேலால், இந்திராகாந்தி வற்புறுத்தியது, சிங்களத்துடன் ஓர் இணக்கப்பட்டுக்கு வருமாறு. கூட்டணி மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலில் நின்றதற்கு மிக முக்கிய காரணம் கிந்தியா, இந்திராகாந்தி.

கூட்டணி தமிழ் மக்களின் அரசியல் நம்பிக்கையை இழந்ததற்கு  முக்கிய காரணம் கிந்தியா, இந்திராகாந்தி.    

(பின்னோக்கி பார்க்கும் போது, மாவட்ட அபிவிருத்தி சபையை, இந்திராகாந்தி கூட்டணியை ஏற்க சொல்லி வற்புறுத்தியது, இந்திராகாந்தி மற்றும் கிந்தியாவின் அரசியல் கணக்கு, அதாவது தமிழரிடம் உள்ள அரசியல் பலத்தை காவ்ர்களை கொண்டே தேர்தல் வழியாக சிதைக்க, உண்மையில் அது நடந்தது. ஆனால், இயக்கங்கள் இவ்வளவு ஆயுத அடிப்படையில் முன்னேறும் என்று கிந்தியா கனவிலும் நினைக்கவில்லை. இயக்கங்கள் முன்னேறி இருக்காவிட்டால், மாவட்ட அபிவிருத்தி சபையும் அத்துடன் செத்து  இருக்கும், கிந்தியாவில் திட்டப்படி. தேர்தல் அடிப்படையில் ஒரு போதுமே அரசியல் பலத்தை கட்டி எழுப்பி இருக்க முடியாது, கூட்டணியின் சிதைவின் பின்னர் என்பது வெளிப்படை)        

கிந்தியாவின் தமிழர் மீதான வெறுப்பு என்பது கட்டமைப்பு (structural) அடிப்படை கொண்டது. மாறாக, புலிகள், தமிழர்கள் கிந்தியவை எதிர்த்தது ஒன்றில் எதிர்வினையாக, அல்லது உணர்ச்சியில். 

கிந்தியா முதலில் இரு கதைகள் விட்டது இந்த வெறுப்பை மறைப்பதற்காக

ஒன்று தமிழீழம் அமைந்தால் தமிழ்நாடு பிரிவுக்குவழிவகுக்கும்  என்பது.

 மற்றது, தமிழருக்கு ஆதரவாக தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக நின்றால், சிங்களம் நிரந்தர பகையாளி அகி, வேறு எவராவது இலங்கைத் தீவில் ஊன்றி விடுவார்கள் என்பது.

இவை இரண்டும், இப்பொது எந்தவித தத்துவ உதாணரத்துக்கும் தேவை இல்லாமல் இவைகள் நிதர்சனமாக பொய் என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது.    

கிந்தியா செய்வது அதன் வழமையான கொள்கையான தமிழர் மீதான கட்டைக்கப்பட்ட வெறுப்பு - வடிவம் சூட்சுமாக வேறாக உள்ளது.

கிந்தியா, சிங்களத்திற்கு  காலமும், களமும் அமைத்து கொடுக்கிறது வடகிழக்கில் எஞ்சி இருக்கும் தமிழர்களை கட்டமைப்பு இனப்படுகொலைக்குள் உள்ளாக்குவதற்கு, தமிழ் மக்களுக்கு (எலும்புத் துண்டிலும், ஒன்றுமே  இல்லாத கேவலமான) தீர்வை தேடுதல் எனும் போர்வையில்.  அதன் மூலம்  சிங்களத்தை  குளிர்வித்து, மனம் , மதியை வென்று, சிங்களம், கிந்தியவுடன் நிரந்தர உறவுக்கு மனமிரங்கி மற்றும் இறங்கி வரவேண்டும் எனும் குறிக்கோளை அடைவதற்கு.  

அந்த குறிக்கோளை அடைய முடியுமா என்பது வேறு பிரச்சனை .

கிந்தியவின்   வெறுப்பு கலந்த எதிர்பு நிலையை , , புலிகளுடன் வன்மையான, வன்முறையத்தன்மையான கருத்து வேறுபாடு கொண்ட Robert  Blake, பல முறை அவதனித்ததாக கூறி இருந்தார். மிக முக்கியமாக, நாராயணன் பெயரை சொல்லி வரின் அவதானத்தை பதிவு செய்து இருந்தார்.  
கிந்தியாவின் கொள்கை ஒரு போதுமே மாறவில்லை. மாறப்போவாவதும் இல்லை. ஏனெனில், கட்டமைக்கப்பட்ட வெறுப்பு ஒரு போதும் மாற்றப்பட முடியாதது  (எதிர் வளமான உ.ம். அமெரிக்கா இஸ்ரேல் மீது கொண்டுள்ள கட்டமைக்கட்ட பரிவு).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.