Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, vasee said:

வேறு ஒரு திரியில் இதனை பற்றி குறிப்பிடும்போது இது மன்னாரில் என தவறாக குறிப்பிட்டுள்ளேன், இந்த கட்டுரையில் புத்தளத்தில் என்பதனை பார்க்கும் போது தவறினை உணருகிறேன்.

புத்தளம் மாவட்டத்தில் இரணவில எனும் இடத்தில் இருக்கிறது.

  • Replies 619
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலிகளை மீட்டுவரும் நடவடிக்கை

Mohandas

கே மோகன்தாஸ்

தமிழ்நாட்டு பொலீஸ் மா அதிபர் கே மோகன்தாஸைச் சந்தித்த இலங்கைத் தூதுக்குழுவின் தலைவர் ருத்ரா ராஜசிங்கம் கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டிருந்த பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் இலங்கைக்கு நாடுகடுத்துமாறு கேட்டுக்கொண்டார். தனது கோரிக்கைக்கு வலுச் சேர்ர்கும் முகமாக அவர்கள் இருவர் மீதும் இருந்த குற்றச்சாட்டுக்களின் பட்டியலை ருத்ரா, மோகந்தாஸிடம் காண்பித்தார். அவர்கள் செய்த குற்றத்திற்காக அவர்கள் இருவர்மீதும் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்ற் ருத்ரா கூறினார்.

ஆனால், சமயோசிதமாக இந்தக் கோரிக்கையினை மறுத்துவிட்ட மோகன்தாஸ், நாடுகடத்தும் விவகாரம் மத்திய அரசாங்கத்தின் கைகளில் இருப்பதால் தான் இதுகுறித்து எதுவும் செய்யமுடியாது என்று  ருத்ராவிடம் கூறினார். ஆனால், மத்திய அரசாங்கம் இதற்கு இணங்கும் பட்சத்தில் தான் இதுதொடர்பாக இலங்கையதிகாரிகளுக்கு உதவத் தயாரக இருப்பதாகவும் கூறினார்.

புது தில்லியில், வெளிவிவகார அதிகாரிகள் இலங்கையின் வேண்டுகோளினை கண்ணியமாக மறுத்துவிட்டார்கள். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடர்பான ஏற்பாடுகள் எதுவும் இல்லாமையினால், அவர்களை நாடுகடத்துவது முடியாத காரியம் என்று அவர்கள் கூறினார்கள்மேலும், அவர்கள் இருவரும் அமைதிக்குப் பங்கம் விளைவித்தமை, கொலை முயற்சி, இந்திய வெடிபொருள் மற்றும் ஆயுதங்கள் சட்டத்திற்கெதிரான குற்றங்கள் ஆகியவற்றுக்காகக் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள். ஆகவே, இக்குற்றச்சட்டுக்கள் குறித்து தமிழ்நாட்டு நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்டு தீர்ப்பு வழங்கியதன் பின்னரே இலங்கையின் நாடுகடத்தும் கோரிக்கை குறித்துத் தம்மால் சிந்திக்க முடியும் என்றும் கூறிவிட்டார்கள்.

 Saturday Review nameplate.jpg

ராஜசிங்கம் வெறுங்கைய்யுடன் நாடு திரும்பினார். யாழ்ப்பாணத்திலிருந்து வாரந்தோறும் வெளிவரும் சட்டர்டே ரிவியூ எனும் ஆங்கில பத்திரிக்கை இலங்கையரசின் முயற்சி குறித்து ஏளனத்துடன் "புலிகளை மீட்டுவரும் நடவடிக்கை" எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் 1973 ஆம் ஆண்டு குட்டிமணியை இந்தியா விருப்பத்துடனேயே நாடு கடத்தியிருந்தமைக்கும், இன்று பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் நாடு கடத்துவதற்கு இந்தியா காட்டிவரும் எதிர்ப்பையும் ஒப்பிட்டும் செய்தி வெளியிட்டிருந்தது. அன்று, பிரதமாரகவிருந்த சிறிமா மிகவும் தீவிரமாக அணிசேராக் கொள்கையினை கடைப்பிடித்து வந்தமையும், இலங்கை தொடர்பாக இந்தியா எதுவிதமான பாதுகாப்பு அச்சுருத்தல்களையும் கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும், அக்காலத்தில் தமிழ் இளைஞர்களின் ஆயுத எழுச்சியென்ற ஒன்றே இலாதிருந்ததும், தமிழர் மீதான அரச பயங்கரவாதம் இன்றிருப்பதுபோல மிகத் தீவ்ரமாக இருக்கவில்லையென்பதும் மற்றைய காரணமாகும். ஆனால், ஜெயவர்த்தன பதவியேற்றதன் பின்னர் நிலைமை முற்றாக மாறியிருந்தது. ஜெயாரின் அமெரிக்கா நோக்கிய சாய்வும், தமிழர்கள் மீது அவரால் ஏவிவிடப்பட்ட ராணுவ பொலீஸ் அராஜகங்களும் இந்தியா தனது நிலைப்பாட்டினை மாற்றவேண்டிய சூழ்நிலையினை உருவாக்கியிருந்தது.

ஆவணி 6 ஆம் திகதி இரு போராளித் தலைவர்களையும் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பொலீஸார் சமாதானத்திற்கு ஊறுவிளைவித்தமை மற்றும் அனுமதிப் பத்திரம் இன்றி ஆயுதங்களை வைத்திருந்தமை ஆகிய பிணையில் எடுக்கக்கூடிய குற்றங்களை அவர்கள் மீது சுமத்தியிருந்தார்கள். நிபந்தனை அடிப்படையிலான பிணையில் இருவரையும் விடுவித்த நீதிமன்றம், வழக்கு முடியும்வரை இருவரும் தமிழ்நாட்டின்  வேறு வேறு நகரங்களில் இருக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டது. பிரபாகரன் மதுரையைத் தெரிவுசெய்ய, உமா மகேஸ்வரன் சென்னையில் இருக்க ஒப்புக்கொண்டார். பிரபாகரன் நெடுமாறனுடனும், உமா மகேஸ்வரன் பெருஞ்சித்திரனாருடனும் தங்கிக்கொண்டார்கள். நீதிமன்றம் கட்டளையிட்டதன்படி அவர்கள் நகர எல்லைக்குள் வசிப்பதை உறுதிசெய்ய  உதவிப் பொலீஸ் பரிசோதகர் ஒருவரும், மூன்று கொன்ஸ்டபிள்களும் அவர்களுடன் தங்கியிருந்தார்கள். பிரபாகரனுக்கு அவர்களுடன் தொடர்பாடுவதில் எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. சிறிது நாட்களிலேயே அவர்கள் பிரபாகரனின் அபிமானிகளாக மாறிவிட்டார்கள். அவர் நகருக்கு வெளியே சென்றபோது அவர்கள் கண்டும் காணாததுபோல இருந்துவிடுவார்கள். அவரைப் பின் தொடர்வதைக் கைவிட்டார்கள். ஒவ்வொரு நாளும் பொலீஸ் நிலையத்திற்குச் சென்று அவர் கைய்யொப்பம் இடவேண்டும் என்கிற நீதிமன்றத்தின் கட்டளையினையும் அவர்கள் காற்றில் பறக்கவிட்டார்கள். 

ஒரேயொரு முறை மட்டுமே பொலீஸார் பிரபாகரனின் அறையினைச் சோதனை செய்யவேண்டி ஏற்பட்டது. பிரபாகரன் செய்தித் தாள்களை வெட்டி, கோப்பாக பராமரித்து வருவதை அவதானித்த பொலீஸார் அதனை என்னவென்று பார்க்க விரும்பினர். அதில் ஒன்று அல்பேர்ட் துரையப்பாவின் கொலை. அக்கொலை தொடர்பாக பிரபாகரனை தேடி இலங்கைப் பொலீஸார் நடத்திய தேடுதல் வேட்டைகள் குறித்த செய்திகளும் அதில் காணப்பட்டன.

"இந்த செய்தித் தால்களை எதற்காக வெட்டி வைத்திருக்கிறீர்கள்? அவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று பொலீஸார் அவரை கேட்டனர்.

இவ்வாறு அவர்கள் கேட்டது பிரபாகரனுக்குச் சினத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும், " ஆம், எனக்கு அவரைத் தெரியும். நான் தான் அந்த நபர்" என்று அவர் பதிலளித்தார்.

பிரபாகரனின் ஒப்புதல் வாக்குமூலத்தைக் கேட்டதும் பொலீஸார் ஒருகணம் அதிர்ந்துபோனார்கள். பொலீஸாரில் ஒருவர் நெடுமாறனிடம் இதுகுறித்துப் பேசியதுடன், கொலைகாரர் ஒருவருக்குத் தஞ்சம் கொடுத்திருக்கிறீர்கள் என்றும் முறையிட்டார். நெடுமாறனின் அறைக்குச் சென்ற அந்தப் பொலீஸ்காரர், "ஐயா, நீங்கள் ஒரு ஆபத்தான மனிதரை இங்கே தங்கவைத்திருக்கிறீர்கள். தான் ஒரு கொலைகாரன் என்று அவரே கூறுகிறார்" என்று கூறினார்.

அந்தப் பொலீஸ்காரரைத் தொடர்ந்து பிரபாகரனும் நெடுமாறனின் அறைக்குச் சென்றார். தனது அறையினை பொலீஸ் காரர் தனது அனுமதியின்றிச் சோதனையிட்டதாக அவர் நெடுமாறனிடம் புகாரளித்தார். இதனையடுத்து அந்தப் பொலீஸ்காரரைப் பார்த்துப் பேசிய நெடுமாறன், "இந்த வீட்டில் எந்தவொரு அறையினையும் எனது அனுமதியின்றிச் சோதனையிட உங்களுக்கு அதிகாரம் இல்லை" என்று கூறினார். மேலும், அந்தப் பொலீஸ்காரரின் நடவடிக்கை குறித்து அவரின் உயரதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தினார்.

Pazha Nedumaran again confirms LTTE Chief Prabhakaran is Alive

பிரபாகரனைப் பொறுத்தவரையில் நெடுமாறனின் வீட்டில் அவர் தங்கியிருந்த 7 மாதங்களும் இனிதே அமைந்திருந்ததுடன், அவரால் பல செயற்பாடுகளையும் முன்னெடுக்க உதவியிருந்தது. நெடுமாறனின் குடும்பத்தில் ஒருவராக அவர் நடத்தப்பட்டதுடன், நெடுமாறனின் மனைவியார் சமைத்த சைவ உணவுவகைகளையும் அவர் விரும்பி உண்டார். நெடுமாறனின் பிள்ளைகளோடு மிகவும் அன்பாகப் பழகிய பிரபாகரன், அவ்வபோது நெடுமாறனின் 6 வயது மகளுடன் கரம் விளையாட்டிலும் ஈடுபட்டார். பிள்ளைகள் படுக்கைக்குச் செல்லுமுன் அவர்களுக்குக் கதைகள் சொல்லித் தூங்கவைப்பதிலும் அவர் தன்னை ஈடுபடுத்தினார். பிரபாகரன் அவர்களுக்குக் கூறிய பெரும்பாலான கதைகள் தமிழர்களின் வீரத்தை அடிப்படையாக வைத்துக் கூறப்பட்டவை. இலங்கையில் தமிழர்கள் மேற்கொண்டுவரும் விடுதலைப் போராட்டம் தொடர்பான கதைகளையும் அவர் நெடுமாறனின் பிள்ளைகளுக்குக் கூறினார். அவ்வாறு ஒருநாள் பிரபாகரன் 1958 ஆம் ஆண்டு பாணதுறையில் சிங்களவர்களால் உயிருடன் எரிக்கப்பட்ட சைவ மதகுருவின் கதை பற்றிக் கூறியபோது, கண்ணீருடன் அதனைக் கேட்டுக்கொண்டிருந்த நெடுமாறனின் மகன், "அந்த ஈனச் செயலைச் செய்த அரக்கர்களை அழிக்க உங்களுடன் நானும் வந்து சேரப்போகிறேன்" என்று உணர்வுபொங்கக் கூறியிருக்கிறார். அவரின் கண்ணீரைத் துடைத்துவிட்டுக்கொண்டே பேசிய பிரபாகரன், "நீங்கள் நன்றாகப் படியுங்கள். நாங்கள் அந்த அரக்கர்களுக்குச் சரியான தண்டனையினை வழங்குவோம் " என்று கூறினார்.

மதுரையில் அவர் தங்கியிருந்த 7 மாதங்களும் பிரபாகரனைப் பொறுத்தவரையில் அவரது வாழ்நாளில் மிகவும் பயனுள்ள காலங்களாக இருந்தன என்றால் அது மிகையில்லை. அவரும் அவரது போராளிகளும் மதுரையிலேயே தங்கிவிட்டதுடன், ஆரம்ப மாதங்களை தம்மைச் சுய விமர்சனம் செய்வதிலேயே கழித்தனர். பின்னர், தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து திட்டங்களை வகுத்தனர். நாங்கள் என்ன செய்திருக்கிறோம்? எங்கே தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன? தற்போது நாம் இருக்கும் நிலையிலிருந்து எப்படி முன்னேறப்போகிறோம்? ஆகிய கேள்விகளைத் தாமே கேட்டுக்கொண்டதுடன் அதற்கான பதில்களையும் தேடத் தொடங்கினார்கள்.

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உமாவைக் கொல்வதில்லை என்று உறுதியளித்த பிரபாகரன்
main-qimg-55a8d8fef56b09fb8cf0169f0a8f7e88-lq

அக்காலத்தில் மதுரையில் இயங்கிவந்த  சுபாஷ் சந்திரபோஸ் சங்கத்தினர் தமது கூட்டமொன்றிற்கு நெடுமாறன் அவர்களையும் அழைத்திருந்தனர். சந்திரபோஸின் தீவிர அபிமானியாகவிருந்த பிரபாகரனும் நெடுமாறனுடன் இக்கூட்டத்திற்குச் சென்றிருந்தார்.  கூட்டத்தில் பேசிய பலரும் சுபாஸ் சந்திரபோசையும் அவரது இந்தியத் தேசிய ராணுவத்தையும் புகழ்ந்து பேசியபோது உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார். இந்தியத் தேசிய ராணுவத்தின் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மண்டபத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று ராணுவ வீரர்கள் அதிகாரிகளுக்குக் கொடுக்கும் ராணுவ வணக்கத்தினை ஒத்த சைகையைச் செய்தபோது பிரபாகரனும் உணர்வுபொங்க எழுந்துநின்றார். கூட்டம் முடிவுற்று வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் நெடுமாறனுடன் பேசிய பிரபாகரன், தன்னையும் அக்கூட்டத்திற்கு அழைத்துச் சென்றதற்காகக் அவருக்கு நன்றி கூறினார். மேலும், "சுபாஸ் சந்திரபோசிற்கு அவரின் வீரர்கள் விசுவாசத்துடன் அளித்த வணக்கத்தைப் போன்று, நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளின் ராணுவ அணிவகுப்பினைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்" என்றும் கூறினார்.

Image Credit :https://sathyasaiwithstudents.blogspot.com/2016/08/subhas-chandra-bose-and-his-exemplary.html

தனது ராணுவ வீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடும் சுபாஸ் சந்திரபோஸ்

பிந்நாட்களில் பேசிய நெடுமாறன், அன்றைய சுபாஸ் சந்திரபோஸின் நிகழ்வு பிரபாகரனின் வாழ்வில் ஏற்பட்ட மிக முக்கியமான ஒரு திருப்பம் என்று கூறுகிறார். அன்றிலிருந்து புலிகள் இயக்கத்தை இரு ராணுவ வல்லமையாகக் கட்டியெழுப்ப வேண்டும் என்கிற தனது விருப்பத்தினை பிரபாகரன் செயற்படுத்தத் தொடங்கினார். புலிகளின் கொடியினை வடிவமைத்த பிரபாகரன் அவர்களுக்கான சீருடைகளையும் தானே வடிவமைத்தார். பரிசோதனைகள் மூலம் தான் அதுவரையில் பயன்படுத்தி வந்த புலிகளுக்கிடையிலான சங்கேத தொலைத்தொடர்பு முறையினை அவர் மேலும் மெருகூட்டினார். மேலும், தனது போராளிகளுக்கு தொலைத்தொடர்புக் கருவிகளான வோக்கி - டோக்கி களைப் பயன்படுத்தும் பயிற்சிகளையும் வழங்கவேண்டும் என்று தீர்மானித்தார்.

remembering-the-sacrifice-of-tamil-revolutionary-lt-col-v0-obrkp9ftvmp91.jpg?s=32660f651cfc6529c15a957895675a06546c8f5c

நவீன தொலைத் தொடர்புக் கருவியுடன் தியாக தீபம் - லெப்டினன்ட் கேணல் திலீபன்

தனது இயக்கத்திற்கான நவீன தொடர்பாடல் வலையமைப்பை உருவாக்கும் திட்டத்தினை பிரபாகரன் வகுத்தார்.

அக்காலத்தில் பிரபாகரன் எடுத்த தீர்மானங்கள் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானது, டெலோ அமைப்பிலிருந்து பிரிந்து சென்று சுயமாக இயங்குவது எனும் தீர்மானமாகும். இதனை, தமிழ்நாட்டில் புலிகளுக்கான தனியான முகாம்களை அமைப்பதிலிருந்து ஆரம்பித்து வைத்தார். தமிழ்நாட்டின் சிறுமலை, பொள்ளாச்சி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் புலிகளுக்கான முகாம்கள் பிரபாகரனால் அமைக்கப்பட்டன.  இந்த முகாம்களிலேயே புலிகளின் போராளிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி உட்பட்ட கெரில்லா ராணுவம் ஒன்று கற்றுக்கொள்ளவேண்டிய அடிப்படை உபாயங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இந்தப் பயிற்சிகளுக்காக ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய ராணுவ அதிகாரிகளை பிரபாகரன் பணிக்கு அமர்த்தினார். இம்முகாம்களுக்கு அடிக்கடி சென்றுவந்த பிரபாகரன் தனது போராளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பயிற்சிகளை மேற்பார்வை செய்து வந்ததோடு, தனது பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.

தனது போராளிகளை சுபாஸ் சந்திரபோசின் இந்திய தேசிய ராணுவத்திற்கு நிகரான ஒரு போராட்ட அமைப்பாக உருவாக்கும் வேலைகளில் பிரபாகரன் மும்முரமாக ஈடுபட்டு வந்தவேளையில், சென்னையில் தன்னை வந்து சந்திக்குமாறு அமிர்தலிங்கத்திடமிருந்து பிரபாகரனுக்கு அழைப்பொன்று வந்திருந்தது. சென்னையில் அமிர்தலிங்கம் தங்கியிருந்த விடுதியொன்றில் அவரைச் சந்தித்தார் பிரபாகரன். பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே நிலவிவந்த பிரச்சினையினைத் தீர்ப்பதே தனது சென்னை பயணத்தின் முக்கிய நோக்கம் என்று அமிர்தலிங்கம் பிரபாகரனிடம் கூறினார். ஆனால் , அமிர்தலிங்கம் பேசி முடிக்கும் முன்பே மிகக் கோபத்துடன் பேசிய பிரபாகரன் "அது எப்படிச் சாத்தியமாகும்? புலிகள் இயக்கத்தின் கொள்கையினை அவர் மீறிவிட்டார். அதற்கு மேலதிகமாக எனது ஆதரவாளர்களையும் அவர் கொன்றிருக்கிறார்" என்று கூறினார். அமிர்தலிங்கத்தின் மீது அவர் வைத்திருந்த மரியாதையின் நிமித்தம், பெருஞ்சித்திரனார் வீட்டில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொள்ள அவர் இணங்கினார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - தமிழ் விக்கிப்பீடியா

பெருஞ்சித்திரனார்

தனது போராளிகள் மீதும், ஆதரவாளர்கள் மீது பிரபாகரன் வைத்திருந்த பாசமும், அக்கறையும் ஆளமானது. மேலும், தனது போராளிகளையும் ஆதரவாளர்களையும் கொல்பவர்களை ஒருபோதும் அவர் மன்னித்ததில்லை. பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்று சரியாக ஒரு வாரத்தின் பின்னர், 27 வயது நிரம்பிய . இறைக்குமரன எனும் தமிழீழ விடுதலைச் செயற்ப்பாட்டாளர் அளவெட்டிப் பகுதியில் 7 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் சுடப்பட்டார். இறைக்குமரன் சுடப்பட்டதை நேரில் கண்ட அவரது நண்பரான 28 வயதுடைய .உமாகுமரனும் அந்தக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அளவெட்டியின் வயற்பகுதி ஒன்றிலிருந்து இவ்விரு இளைஞர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.

விவசாய அதிகாரியாகப் பணியாற்றிவந்த இறைக்குமரன் தமிழ் இளைஞர் பேரவை விடுதலை அணி எனும் அமைப்பின் செயலாளராகக் கடமையாற்றி வந்தார். இதற்கு முன்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இளைஞர் பிரிவில் சேர்ந்து செயற்பட்டு வந்த அவர், 1976 இல் முன்னணிக்குச் சார்பான பத்திரிக்கையான இளைஞர் குரலின் ஆசிரியராகவும் செயலாற்றியிருந்தார். ஆனால், ஜெயாரின் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்றுக்கொள்வதென்று அமிர்தலிங்கம் எடுத்த முடிவினால் அதிருப்தியடைந்த இறைக்குமரன், முன்னணியிலிருந்து விலகி தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக இயங்கத் தொடங்கினார். இறைக்குமரனினதும், உமாகுமரனினதும் கொலைகளுக்கு பழிவாங்கியே தீரவேண்டும் என்று எண்ணிய போதும் பிரபாகரன், உமாவைக் கொல்வதைத் தவிர்க்க விரும்பினார்.

தமிழ்நாட்டில் உமா மகேஸ்வரன் தங்கியிருந்த பெருஞ்சித்திரனாரின் வீட்டினைக் கண்காணிக்க சில போராளிகளை பிரபாகரன் நிறுத்தியிருந்தார். புலிகளின் போராளிகள் தனது வீட்டிற்கருகில் நடமாடித் திரிவதை அவதானித்த பெருஞ்சித்திரனார், சுமார் ஒன்றரை மாதங்களுக்கு உமாவை வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என்று பணித்திருந்தார். உமாவின் பாதுகாப்புக் குறித்து அச்சமடைந்திருந்த பெருஞ்சித்திரனார் உமாவைக் கொல்லவேண்டாம் என்று பிரபாகரனிடம் கேட்கும்படி அமிர்தலிங்கத்தை வேண்டியிருந்தார்.

பெருஞ்சித்திரனாரின் வீட்டிற்கு தனது மெய்ப்பாதுகாவலர்கள் இருவருடன் பிரபாகரன் சென்றார். உமாவுடன் கைகொடுப்பதை அவர் தவிர்த்துவிட்டார். உமாவுடனான பிரச்சினையைத் தீர்க்குமாறு அமிர்தலிங்கம் பிரபாகரனைப் பார்த்து மன்றாட்டமாகக் கேட்டார். ஆனால், பிரபாகரன் தனது முடிவில் உறுதியாக நின்றார். எவர்மீதும் தனக்கு எந்த வெறுப்பும் இல்லையென்று பிரபாகரன் அங்கு கூறினார். இயக்கத்தின் கொள்கைகளை எவரும் மீறுவதை தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று கூறினார். இக்கூட்டத்தில் எவரினதும் பெயர்களைக் குறிப்பிட்டுக் கூறுவதை பிரபாகரன் முற்றாகத் தவிர்த்திருந்தார்.

 அதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், "உமாதான் இப்போது உங்களின் இயக்கத்தில் இல்லையே?" என்று பிரபாகரனைப் பார்த்துக் கேட்டார்.

அமிரைப் பார்த்துப் பேசிய பிரபாகரன், "இயக்கத்தை விட்டு வெளியேறுவது மட்டுமே போதுமானது அல்ல. இயக்கத்தை விட்டு வெளியேறியவர்கள், விடுதலைப் போராட்டத்தில் இருந்தும் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும். இயக்கத்தின் விதிகளின்படி, போட்டியாக இன்னொரு அமைப்பைத் தொடங்குவதும் குற்றமே. இயக்கத்தின் யாப்பும், கொள்கையும் கூறுவது அதையே. எவரும் இதற்கு விதிவிலக்கில்லை. இதை எவராவது மீற விரும்பினால், மரணத்தை விரும்பி அழைக்கிறார்கள் என்று பொருள்" என்று மிகவும் தீர்க்கமாகக் கூறினார்.

இதைக் கேட்டதும் பெருஞ்சித்திரனார் மிகுந்த வருத்தமடைந்தார்.

"இப்படிப் பேசாதீர்கள். நீங்கள் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது உண்மைதான். ஆனால், உங்களுடன் நின்று, இயக்கத்திற்கான தொடர்பாடல் வேலைகளைச் செய்ததும், இன்று புலிகள் இயக்கம் பற்றி உலகம் அறிந்துகொள்ளவும் உதவியது உமாதான்" என்று பெருஞ்சித்திரனார் பிரபாகரனைப் பார்த்துக் கூறினார்.

முன்னர், தனது வீட்டிற்கு வந்த பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் தமது அன்றாடச் செலவுகளுக்கு சிறுதொகைப் பணத்தினை அவ்வப்போது பெற்றுச் சென்றதை பெருஞ்சித்திரனார் பிரபாகரனுக்கு நினைவுபடுத்தினார். பெருஞ்சித்திரனாரின் வீட்டிலேயே புலிகள் இயக்கம் பணத்தினை சேமித்து வைத்திருந்தது. புலிகளின் பணத்தினைப் பத்திரமாகப் பாதுகாத்து வைப்பதே பெருஞ்சித்திரனாரின்  பணியாக இருந்தது. "இப்போது ஒருவரையொருவர் கொல்லப்போவதாக மிரட்டுகிறீர்களா? அதைச் செய்யவேண்டாம்" என்று பிரபாகரனைப் பார்த்துக் கூறினார் பெருஞ்சித்திரனார்.

 

Why did CN Annadurai, the founder of DMK, part ways with Periyar?

சி.என்.அண்ணாத்துரையுடன் ராமசாமிப் பெரியார்

மேலும் பேசிய பருஞ்சித்திரனார், ராமசாமிப் பெரியார் மணியம்மையை மணந்தபோது, திராவிட முன்னேற்றக்கழகத்தை அமைத்தவரான அண்ணாத்துரை கூறியதை நினைவுபடுத்தினார். "இருகட்சிகளாக இருந்தபோது, இருகுழல்த் துப்பாக்கியாக இயங்கலாம் என்று அன்று அண்ணாத்துரை கூறியதுபோல, நீங்களும் இயங்கலாம்" என்று அவர் கூறினார்.

பெருஞ்சித்திரனார் கூறியதை வழிமொழிந்த அமிர்தலிங்கம், "ஐயா கூறுவதன்படியே செய்யுங்கள்" என்று அவர்கள் இருவரையும் பார்த்துக் கூறினார்.

பின்னாட்களில் பிரபாகரனின் தீவிர அபிமானியாக மாறிப்போன பெருஞ்சித்திரனார் என்னுடன் ஒருமுறை  பேசும்போது, அன்று தனது வீட்டில் இடம்பெற்ற கூட்டம் ஓரளவு பலனை அடைந்ததாகக் கூறினார். தானும், அமிர்தலிங்கமும் இணைந்து, பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் ஒருவரையொருவர் கொல்வதில்லை எனூம் உறுதிப்பாட்டை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடிந்ததாகக் கூறினார்.

" தான் கொடுத்த வாக்குறுதியை பிரபாகரன் இறுதிவரை கடைப்பிடித்து வந்தது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எனது வீட்டைச் சுற்றி தான் நிறுத்தியிருந்த தனது போராளிகளை அவர் விலக்கிக் கொண்டார். அதற்குப் பின்னர் உமாவைக் கொல்ல அவர் ஒருபோதும் எத்தனிக்கவில்லை. எனது நன்றியை தெரிவிக்க பிரபாகரனை நான் சந்திக்க முடியாது போனமைக்காக வருந்துகிறேன்" என்று பெருஞ்சித்திரனார் கூறினார். அதன் பிறகு, அவர் இறக்கும்வரை பிரபாகரனைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.

உமா மகேஸ்வரனைத் தான் கொல்லாமல் இருப்பதற்கு, பிரபாகரன் ஒரு நிபந்தனையினை விதித்தார். அதாவது, உமா மகேஸ்வரன் தனது அமைப்பை நடத்தலாம், ஆனால் ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக உரிமைகோர முடியாது என்று கூறினார்.

ஏழுமாதங்கள் வரை பிணையில் தமிழ்நாட்டில் தங்கியிருந்த பிரபாகரன், 1983 ஆம் ஆண்டு, மாசி மாதம் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்பதை பொலீஸார் நன்கு அறிந்தே இருந்தனர். ஆனாலும், அறிக்கையினைச் சமர்பிப்பதற்காக அவர் தங்கியிருந்ததாகக் கருதப்பட்ட பெங்களூர் மற்றும் பாண்டிச்சேரி வீடுகளை அவர்கள் சோதனையிட்டனர்.

பிரபாகரன் அன்று யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிச் செல்வதற்கான காரணம் ஒன்று இருந்தது. தான் மனதில் வரைந்துவைத்திருந்த சுபாஸ் சந்திரபோஸின் இந்தியத் தேசிய ராணுவத்தைப்போன்ற இலட்சிய உறுதியும், தியாக மனப்பான்மையும் கொண்ட கெரில்லா ராணுவம் ஒன்றை உருவாக்குவதே அது.

 

 

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தாக்குதலில் இறங்கிய புலிகள்

 நெல்லியடித் தாக்குதல்

 சுபாஸ் சந்திரபோஸின் இந்தியத் தேசிய ராணுவத்தை ஒத்த படையொன்று தனக்கும் அமையவேண்டும் என்ற பிரபாகரனின் விருப்பம் இயல்பானதே. ஏனென்றால், அவர் தனக்கு விசுவாசமான போராளிகளை தன்னுடன் சேர்த்து வைத்திருந்தார். சுமார் 25 போராளிகள் நன்கு பயிற்றப்பட்ட நிலையில் தமது அச்சுவேலி முகாமில் ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்கள். ஜெயவர்த்தனவின் பொலீஸாருக்கும், இராணுவத்தினருக்கும் கடற்படைக்கும் அவர்களின் பாணியிலேயே பதிலளிக்கும் சந்தர்ப்பத்தை அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

 மாத்தையாவின் தலைமையில் தயாராகிய புலிகளின் தாக்குதல் அணி, மூன்றுவகையான கெரில்லாப் போர்த் தந்திரங்களைப் பரீட்சித்துப் பார்த்திருந்தது. பதுங்கியிருந்து தாக்குவது, கண்ணிவெடிகளை வெடிக்கவைத்துத் தாக்குவது மற்றும் இராணுவ நிலைகளைத் தாக்குவது ஆகியவையே அவர்கள் பரீட்சித்துப் பார்த்தவை. இதற்கான பயிற்சிகளை அவர்கள் ஆடி 2 ஆம் திகதி முதல் ஐப்பசி 27 வரையான காலப்பகுதியில் மேற்கொண்டிருந்தனர். இதற்கு முன்னர், சீலன் 1981 ஆம் ஆண்டு ஐப்பசி 15 ஆம் திகதி ராணுவத்தினர் மீது நடத்தியிருந்த தாக்குதலைத் தவிர, புலிகள் பெரும்பாலும் பொலீஸ் பரிசோதகர்கள், உளவாளிகள், பொலீஸாரோடு சேர்ந்து இயங்குபவர்கள் மீதே தமது தாக்குதல்களை நடத்தி வந்திருந்தார்கள். ஆனால், புலிகளின் தற்போதைய அணி புதிய தாக்குதல் உத்திகளைப் பரீட்சித்துப் பார்த்ததுடன், குறுகிய நேரத்தில் எதிரிக்கு அதிக இழப்பினை ஏற்படுத்தும் தாக்குதல் முறைகளையும் பரீட்சித்திருந்தார்கள். 

மறைந்திருந்தும் தாக்குதலுக்கு பொறுப்பாக ஷங்கர் நியமிக்கப்பட்டார். கண்ணிவெடித் தாக்குதல்களுக்கு செல்லக்கிளி பொறுப்பாக நியமிக்கப்பட்டதோடு, சீலன் ராணுவ நிலைகள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். ஷங்கர், செல்லக்கிளி, சீலன் ஆகிய போராளிகள் பிரபாகரனால் புத்திசாதூரியம் கொண்டவர்களாகவும், துணிந்தவர்களகவும், செயற்திறன் மிக்கவர்களாகவும் கணிக்கப்பட்டிருந்தனர்.

 See the source image

செல்வச்சந்திரன் சத்தியநாதன் - ஷங்கர்

 பிரபாகரன் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு அண்மையில் இருக்கும் கம்பர்மலையில் ஆசிரியிரகாப் பணியாற்றிவந்த செல்வச்சந்திரன் அவர்களின் புத்திரனே ஷங்கர் என்று அழைகப்பட்ட சத்தியநாதன் ஆகும். சுரேஷ் என்றும் அழைகப்பட்ட ஷங்கருக்கு இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர். கம்பர்மலை பொதுநூலகத்திற்கு அருகிலிருந்த பண்டிதரின் வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர்கள் தூரத்தில் ஷங்கரின் வீடு அமைந்திருந்தது. பண்டிதரோடு ஒன்றாகப் படித்துவந்த ஷங்கர், தனது 20 ஆம் வயதில் புலிகளோடு தன்னை இணைத்துக்கொண்டார். ஷங்கர்,1961 ஆம் ஆண்டு ஆனி 19 ஆம் திகதி பிறந்தார்.  1981 ஆம் ஆண்டு சென்னையில் வாழ்ந்துவந்த ஷங்கரை பொலீஸார் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக பிரபாகரன் 1982 ஆம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பிவைத்தார். புலிகள் இயக்கத்தின் நற்பெயரையும், சரித்திரத்தினை உமா மகேஸ்வரன் உரிமைகோறுவதை தடுத்து நிறுத்துவதற்கு, புலிகள் பாரியதொரு தாக்குதலில் ஈடுபடவேண்டும் என்று பிரபாகரன் விரும்பிமார்.

ஆனைக்கோட்டை பொலீஸ்நிலையம் மீதான தாக்குதல், கிளிநொச்சி வங்கிக் கொள்ளை ஆகிய நடவடிக்கைகளுக்குப் பின்னர் புளொட் அமைப்புப் பற்றியும் தமிழ் மக்கள் பேசத் தொடங்கியிருந்தனர். 

1981 ஆம் ஆண்டு இராணுவத்தினர் மீதான தாக்குதலையடுத்து சீலனின் பெயர் பிரபலமாகி வந்ததையடுத்து, ஷங்கருக்கும் வாய்ப்பொன்று அளிக்கப்பட்டது. அதன்படி அவர் மறைந்திருந்து தாக்கும் திட்டத்தை வகுத்தார். 

வல்வெட்டித்துறைப் பகுதியைச் சுற்றி இரவு ரோந்தில் ஈடுபடும் பொலீஸ் அணிமீது தாக்குவதென்று அவர்கள் முடிவெடுத்தார்கள். சுமார் ஒருவாரகாலமாக இந்த இரவுநேரப் பொலீஸ் ரோந்து அணியின் நடமாட்டங்களை அவதானித்து வந்த ஷங்கரும் அவரது தோழர்களும், நெல்லியடிச் அந்திக்கு அண்மையாக அமைந்திருந்த ஆளரவமற்ற பகுதியில் தமது தாக்குதலை நடத்துவதென்று முடிவெடுத்தார்கள். 

அன்றிரவு ஷங்கரும், அவரது தோழர்களும் வீதியின் இருமருங்கிலும் மறைந்துகொண்டு பொலீஸ் ரோந்து அணிக்காகக் காத்திருந்தனர். சுமார் 7:30 மணியளவில் தொலைவில் தெரிந்த பொலீஸ் வாகனத்தின் விளக்குவெளிச்சத்தைக் கண்டதும் அவர்களுக்கு உற்சாகம் பற்றிக்கொண்டது. தனது தோழர்களை நிலையெடுத்து ஆயத்தமாகுமாறு ஷங்கர் பணித்தார். பொலீஸாரின் ஜீப் வண்டி அவர்கள் மறைந்திருந்த பகுதிக்கு அண்மையாக வந்தபோது, ஷங்கர் வாகனத்தை ஓட்டிவந்த கொன்ஸ்டபிள் ஆரியரத்ன மீது துப்பாக்கியால் சுட்டார். அவரின் தலையைத் துளைத்துக்கொண்டு சன்னம் பாய, வாகனத்தின் தடுப்புக்களை பலமாக அழுத்திக்கொண்டே அவர் சாய்ந்து உயிர்விட்டார். கடுமையாக அதிர்ந்துகொண்டு ஓய்விற்கு வந்தது பொலீஸாரின் ஜீப் வண்டி. 

வாகனத்திலிருந்த ஏனைய பொலீஸார் சுதாரிக்கு முன், மீண்டும் அவர்களை நோக்கிச் சுட்டார் ஷங்கர். வாகனத்திலிருந்த கொன்ஸ்டபிள் குணபாலா கொல்லப்பட, மீதமிருந்தவர்களில்  அருந்தவராஜா, மல்லவராச்சி ஆகிய பொலீஸ் கொன்ஸ்டபிள்களை ஷங்கரின் தோழர்கள் சுட்டுக் கொன்றனர்.  சாரதிக்கு அருகில் அமர்ந்துந்த பொலீஸ் பரிசோதகர் திருச்சிற்றம்பலம், மற்றும் கொன்ஸ்டபிள்கள் சிவராஜா , ஆனந்த ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

பொலீஸாரிடமிருந்த துரிதகதியில் ஆயுதங்களை களைந்த புலிகள், வீதியால் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றினை மறித்து, சாரதியையும் பயணியையும் இறக்கிவிட்டு, அதில் ஏறித் தப்பிச் சென்றனர். வழமைபோல, இத்தாக்குதலுக்குப் பழிவாங்க பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தியது இலங்கைப் பொலீஸ் படை. நெல்லியடி, அல்வாய், வதிரி, கரவெட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளையும், கடைகளையும், வாகனங்களையும் எரித்த பொலீஸார், அப்பகுதியிலிருந்து சந்தேகத்தின் பேரில் 20 இளைஞர்களையும் இழுத்துச் சென்றனர். 

பொலீஸார் மீது நெல்லியடியில் புலிகள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து மறுநாளே அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் அறிக்கையொன்றினை வெளியிட்டனர். தமிழர் ஐக்கிய விடுதலைக் முன்னணியின் தலைவர்களால் விடுக்கப்பட்ட கண்டனத்தை அமைச்சர் சிறில் மத்தியூ வரவேற்றிருந்தார். தாம் ஒருபோதும் வன்முறையினை ஆதரிக்கப்போவதில்லை என்று தமிழர் ஐக்கிய முன்னணி கூற, "பயங்கரவாதிகளின் வன்முறைகளை கண்டித்தமைக்கு நன்றி" என்றி சிறில் மத்தியூ அவர்களைப் பாராட்டினார். சிறில் மத்தியூவின் இந்த பாராட்டுதல்கள் வழமையானதாகத் தெரிந்தாலும், போராளிகளுக்கும் முன்னணியினருக்கும் இடையே உருவாகி வந்த பிளவினை ஆளமாக்கும் ஜெயாரின் கைங்கரியமே இதன்பின்னாலும் இருந்தது என்றால் அது மிகையில்லை.

 

 

 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிசுபிசுத்துப்போனன் கண்ணிவெடித் தாக்குதல்

 See the source image

சதாசிவம் செல்வநாயகம் - செல்லக்கிளி

சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர், புரட்டாதி 19 ஆம் திகதியன்று, ஜனாதிபதி ஜெயவர்த்தன தேர்தல்ப் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தார். இந்தநாளே, செல்லக்கிளி தலைமையிலான புலிகளின் முதலாவது தோல்விகரமான கண்ணிவெடித் தாக்குதல் எத்தனிக்கப்பட்டது. ஜெயாரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவுக்கும் முகமாக, தமிழ் ஈழ விடுதலை முன்னணி, ஈழ மாணவர் அமைப்பு மற்றும் கொம்மியூனிஸ்ட் அமைப்புகள் ஒழுங்குசெய்த ஹர்த்தால் நிகழ்விற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் இந்தக் கண்ணிவெடித் தாக்குதலை புலிகள் திட்டமிட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், யாழ்நகரிலிருந்து 2 கிலோமீட்டர்கள் தொலைவில்  அமைந்திருந்த விவசாயக் கிராமமான  கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர் செல்லக்கிளி. புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினராக இருந்த செல்லக்கிளி, பஸ்டியாம்பில்லை மீதான துணிகரமான திடீர்த் தாக்குதலின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர். தம்மைக் கைதுசெய்ய வந்திருந்த பஸ்டியாம்பிள்ளை தலைமையிலான பொலீஸ் குழுவினரை கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு வீழ்த்தியவர். பஸ்டியாம்பிள்ளை தேநீர் அருந்த எத்தனிக்கும்போது, அவரின் இயந்திரத் துப்பாக்கியைப் பறித்து அதனாலேயே அவரைச் சுட்டுக் கொன்றவர். செல்லக்கிளியின் துரித அசைவுகளுக்காகவும், சூழ்நிலையினை அவதானித்துச் செயற்படும் விவேகத்திற்காகவும் பிரபாகரன் அவரை கண்ணிவெடித் தாக்குதல்களுக்குப் பொறுப்பாக நியமித்திருந்தார். 

வீதியில் கண்டெடுக்கப்பட்ட வெடிக்காத நிலையிலிருந்த கண்ணிவெடியைப் பரிசோதித்த ராணுவ குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அது புலிகளால் உருவாக்கப்பட்டதுதான் என்பதை உறுதிப்படுத்தினர். 

அக்குண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. உள்ளே அடைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளும் சரியான முறையில் அடைக்கப்பட்டிருக்கவில்லை. உருக்கு இரும்பிலான கோதுகளினுள் ஐந்து கிலோகிராம் வெடிபொருட்களும்,இரும்புத் துண்டுகளும்  அடைக்கப்பட்டிருந்தது. ஹொண்டா மின்பிறப்பாக்கியொன்றிலிருந்து இக்குண்டினை வெடிக்கவைக்க மின்சாரக் கம்பிகள் இணைக்கப்பட்டிருந்தன. 

பொண்ணாலை வீதியூடாக தினம் தோறும் பயணிக்கும் கடற்படையினரின் ரோந்தைக் குறிவைத்து தமது முதலாவது பரீட்சார்த்த கண்ணிவெடித் தாக்குதலை நடத்தலாம் என்று செல்லக்கிளியும் தோழர்களும் தீர்மானித்தார்கள்.

See the source image

 காரைநகர் கடற்படை முகாமினுள் குடிநீர் இருக்கவில்லை. முகாமினுள் உப்புத்தண்ணிர்ரே கிடைத்தது. ஆகவே, முகாமின் பாவனைக்காக யாழ்ப்பாணப் பெருநிலப்பரப்பில் அமைந்திருந்த மூளாய்க் கிராமத்திலிருந்தே குடிநீர் கடற்படையினரால் எடுத்து வரப்பட்டது. ஒவ்வொருநாள் காலையும் இதற்காக முகாமிலிருந்து மூன்று தண்ணீர்த் தாங்கி வாகனங்கள் வெளிக்கிளம்பிச் செல்லும். 

 புரட்டாதி 29 ஆம் திகதி, காலை 6:30 மணிக்கு வழமை போல மூன்று தண்ணீர் தாங்கி வண்டிகளுடன் கடற்படை அணியொன்று கிளம்பிச் சென்றது. இந்த அணிக்கு கடற்படை அதிகாரியான செல்வரட்ணம் பொறுப்பாக இருந்தார். 

முன்னால் சென்ற இரு ஜீப் வண்டிகளில் 12 கடற்படை வீரர்கள் ஏறிக்கொள்ள, கடற்படை வாகனத் தொடரணி மெதுவாக  பொன்னாலை வீதியூடாக நகர்ந்துசெல்லத் தொடங்கியது.

Causeway to Karainagar being widened | Mapio.net

காரைநகர் பொன்னாலை வீதி

புரட்டாதி மாதம் என்பது பொதுவாக யாழ்க்குடாநாட்டைப் பொறுத்தவரையில் வறட்சியான காலமாகும். வட கிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலம் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு மழைவீழ்ச்சியைக் கொண்டுவரும் காலம் புரட்டாதி மாதத்திற்குப் பின்னரே ஆரம்பிக்கிறது. யாழ் ஏரியினால் உருவாக்கப்பட்ட மணற்திட்டுக்கள் அவ்வீதியின் இருமரங்கிலும் தொடர்ச்சியாகக் காணப்படும். சில மணற்திட்டுக்களில் சிறிய பற்றைகளும் அவ்வபோது வளர்ந்திருக்கும். வீதியின் தென்முனையிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் நான்கு அகழிகளை செல்லக்கிளியும் தோழர்களும் வெட்டினார்கள். இந்த அகழிக்குள் அவர்களால் கொண்டுவரப்பட்ட கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன. புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளுக்கு இணைக்கப்பட்ட நீண்ட மின்கம்பிகள் மணற்மேட்டின் பற்றைகளுக்குப் பின்னால் மறைத்துவைக்கப்பட்டிருந்த மின்பிறப்பாக்கிக்கு இணைக்கப்பட்டிருந்தன. மின்கம்பிகள் வெளித்தெரியாவண்ணம் அவற்றின் மீது தாரும், மணலும் கொட்டப்பட்டு உருமறைப்புச் செய்யப்பட்டிருந்தது. 

மின்பிறப்பாக்கிக்கு அருகில் ஒளிந்திருந்த செல்லக்கிளி கையில் கண்ணிவெடியினை இயக்கும் கருவியை வைத்திருந்தார். மின்பிறப்பாக்கியை இயக்குவதற்குப் பொறுப்பாக அருணாவும் அருகில் இருந்தார். 

வழமைபோல, அதே நேரத்திற்கு கடற்படையின் வாகனத் தொடரணி அவ்வீதியூடாக வந்தது. வாகனங்களின் வேகத்தைத் தவறாகக் கணிப்பிட்ட செல்லக்கிள், தொடரணியில் முன்னால் வந்துகொண்டிருந்த ஜீப் வண்டி சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் வரும்போதே கண்ணிவெடியின் இயக்கு கருவியை அழுத்திவிட்டார். முதலாவது கண்ணிவெடி வெடித்துச் சிதறியபோது உள்ளிருந்த இரும்புத் துண்டுகளும், கற்களும் மணலும் நாலாபுறமும் வெடித்துச் சிதறின. அவ்வெடிப்பு சுமார் ஒரு மீட்டர் ஆளமான அகழியொன்றை வீதியில் ஏற்படுத்தியது. ஆனால், மீதி மூன்று கண்ணிவெடிகளும் வெடிக்கத் தவறிவிட்டன.

 தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, தன்னுடன் இருந்த அனைவரையும் தாம் வந்திருந்த மினி பஸ் நோக்கி ஓடுமாறு கட்டளையிட்டார் செல்லக்கிளி. அருணா மின்பிறப்பாக்கியையும் தூக்கிக் கொண்டு ஓடினார். ஆனால், பாரம் மிகுதியால் அவர் சிரமப்பட்டதுடன், ஏரிக்கரை மண்ணில் அவரது கால்கள் புதைய ஆரம்பித்தன. ஆகவே, வேறு வழியின்றி, மின்பிறப்பாக்கியை அவ்விடத்திலேயே விட்டு அவர் ஓடத் தொடங்கினார். கடற்படை அணிக்கு முன்னால் 50 இலிருந்து 100 மீட்டர்கள் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த புலிகளை நோக்கிக் கடற்படையினர் ஒரு துப்பாக்கி வேட்டையேனும் தீர்க்க நினைக்கவில்லை. இத்தாக்குதல் குறித்த விசாரணையில் சாட்சியளித்த செல்வரட்ணம், தனது வீரர்கள் அனைவரும் தமக்கு முன்னால் நடப்பதைப் பார்த்து அதிர்சிக்குள்ளாகி விக்கித்து நின்றுவிட்டதாகக் கூறினார். 

No photo description available.

யாழ்ப்பாணத்தில் பிரபலமான மிட்சுபிஷி ரோசா மினிவான்

 

கடற்படையினர் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு நடப்பதை அறியமுன்னர், புலிகள் அங்கிருந்து மறைந்துவிட்டார்கள்.

சுமார் 400 மீட்டர்கள் வரை ஏரிக்கரை மணலில் ஓடி, தமக்காகக் காத்து நின்ற ரோசா பஸ் வண்டியில் ஏறி மூளாய் நோக்கித் தப்பொஇச் சென்றது புலிகளின் அணி.

முதல் நாள் இரவு கடத்தப்பட்ட அந்த பஸ்வண்டியில் மூளாயிலிருந்து பொன்னாலைப் பகுதிக்கு புலிகளின் தாக்குதல் அணி வந்திருந்தது. தாக்குதல் தோல்வியின் பின்னர், மயிரிழையிலேயே அவர்கள் தப்பிச் சென்றார்கள். கடற்படை சுதாரித்துக்கொண்டு தாக்குதலில் இறங்கியிருந்தால் புலிகளின் தாக்குதல் அணியில் அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள். இத்தாக்குதல் தொடர்பாக நடந்த விசாரணைகளில் செல்வரட்ணத்தை விசாரித்த உயரதிகாரி, "நீங்கள் அன்று சுட்டிருந்தால், புலிகளின் முதுகெலும்பை முறித்திருக்கலாம்" என்று ஆத்திரத்துடன் கத்தினார்.

 புலிகளின் முதலாவது கண்ணிவெடித் தாக்குதல் தோல்வியடைந்தது. ஆனால், இந்தத் தோல்வியே கண்ணிவெடித் தாக்குதலை புலிகளின் தாக்குதல் முறைகளில் இலங்கை படைகளுக்கு கடுமையான உயிரிழப்பை ஏற்படுத்தும் ஆயுதமாக நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கும் உத்வேகத்தினைக் கொடுத்திருந்தது. பின்னாட்களில் நடைபெற்ற புலிகளின் பல வெற்றிகரமான கண்ணிவெடித் தாக்குதல்களையடுத்து, தெற்கின் ஊடகங்கள் உள்நாட்டுப் போரினை. "கண்ணிவெடிப் போர்" என்று அழைக்கும் நிலையும் உருவாகியிருந்தது. இராணுவத்தைக் கட்டுப்படுத்தவும், அவர்களின் நடமாட்டத்தை முடக்கவும் கண்ணிவெடித் தாக்குதல்களை புலிகள் மிகவும் துல்லியமாகப் பாவிக்கத் தொடங்கினர்.

செல்லக்கிளியைப் பொறுத்தவரையிலும் இத்தாக்குதலின் தோல்வி அரிய சந்தர்ப்பம் ஒன்றினைத் தவறவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது. அரசாங்கம் மீதும் கடுமையான தாக்கத்தைச் செலுத்தக்கூடியதும், தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெறுவதற்கான இன்னொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரக்கூடியதுமான ஒரு தாக்குதலை புலிகளால் வெற்றிகரமாக நடத்திமுடிக்க முடியாது போய்விட்டது.

 See the source image

யாழ்ப்பாணக் கோட்டை 2019 இல்

 

ஆனால், இத்தாக்குதல் தோல்வியினால் எல்லாமே இழந்துவிட்டதாகவும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. யாழ்ப்பாணக் கோட்டையில் அன்று காலைவரை தங்கியிருந்த ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கு இக்கண்ணிவெடி முயற்சி பற்றி உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் மிகவும் சினமடைந்து காணப்பட்டார். இக்கண்ணிவெடித்தாக்குதல் பற்றி ஆராய்வதற்கு தேசிய பாதுகாப்புச் சபையினை அவர் உடனடியாகக் கூட்டியிருந்தார். இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்க, பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம், வடமாகாண இராணுவத் தளபதி சிறில் ரணதுங்க, வடமாகாண உதவி ராணுவத் தளபதி லயனல் பலகல்ல, கப்டன் சரத் முனசிங்க, யாழ்ப்பாணத்திற்கான ராணுவப் புலநாய்வுத்துறையின் தளபதி உட்பட பல மூத்த ராணுவ பொலீஸ் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

TamilNet: 10.07.98 New military spokesman

இலங்கை ராணுவத்தின் பேச்சாளராகப் பின்னாட்களில் கடமையாற்றிய கேணல் சரத் முனசிங்க

ஜெயவர்த்தன மிகவும் கோபத்துடன் காணப்பட்டார். புலிகளின் மீளெழுச்சி பற்றி தனக்குத் தெரியத் தராமைக்காக கப்டன் சரத் முனசிங்கவை அவர் கடுமையாக வைதார்.

 

முனசிங்கவைப் பார்த்து ஜெயார் பின்வருமாறு கேட்டார், "பிரபாகரன் தற்போது எங்கே?". "அவர் மதுரையில் இருக்கிறார்" என்று முனசிங்க பதிலளித்தார். கண்ணிவெடித்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாரென்று கேட்டறிந்துகொண்ட ஜெயார், "இந்த சிக்கலை நாம் முளையிலேயே கிள்ளி எறியாதுவிட்டால், எமக்குப் பெரும் பிரச்சனையாக இது மாறச் சந்தர்ப்பம் இருக்கிறது" என்று அவர் கூறினார்.

ஆனால், தனக்கெதிராக நடத்தப்பட்ட ஹர்த்தாலினாலோ, அல்லது தனது வருகையினையொட்டு நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலினாலோ ஜெயார் பயந்து ஓடிவிடவில்லை. தனது திட்டத்தின்படியே யாழ்ப்பாணம் முத்தவெளியரங்கில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த தேர்தல்ப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஜெயாருக்கு முன்னதாக காமிணி திசாநாயக்க மேடையில் பேசினார். தனது பேச்சின் நிறைவில் , "எமது தலைவர் இப்போது உங்கள் முன் உரையாற்றுவார். அவர் உங்களிடத்தில் முக்கியமான விடயம் ஒன்றுபற்றிப் பேசுவார்" என்று கூறி முடித்தார்.

 அடுத்ததாக ஜெயவர்த்தன பேசத் தொடங்கினார். தமிழர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் பற்றித் தனக்குத் தெரியும் என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடனான பேச்சுவார்த்தைகளினூடாக தான் தமிழர்களின் பிரச்சினை குறித்து அறிந்துகொண்டதாக அவர் கூறினார். 1977 ஆம் ஆண்டின் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவற்றை உள்ளடக்கியிருந்ததாகவும் அவர் கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கானஅடிப்படைகளை தான் உருவாக்கியிருப்பதன் மூலம் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவிருப்பதாக அவர் கூறினார். தனது அடுத்த இலக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்துவதே என்று கூறிய ஜெயார், அதற்கான மக்களை ஆணைக்காகவே தான் தமிழ் மக்களிடம் வந்திருப்பதாகவும் கூறினார்.

 ஈரோஸ் அமைப்பினரால அனுப்பப்பட்ட இளைஞர் ஒருவர் கூட்டத்தில் இருந்து எழுந்து, "அப்படியானால், பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து எதற்காகப் பாதயாத்திரை சென்றீர்கள்?" என்று ஜெயாரைப் பார்த்துக் கேட்டார்.

 அதற்குப் பதிலளித்த ஜெயார், "ஆம், நான் எதிர்த்தேன். இனிமேலும் யாராவது அந்த ஒப்பந்தத்திற்கு புத்துயிர் கொடுக்க நினைத்தாலும், நான் மீண்டும் கண்டிக்குப் பாத யாத்திரை போவேன்" என்று அகம்பாவத்துடன் அந்த இளைஞனைப் பார்த்துக் கூறினார். 

ஆனால், ஜெயார் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரது மேடையைச் சுற்றியிருந்த தூண்களுடன் இணைத்துக் கட்டப்பட்டிருந்த கயிறுகளை சில ஈரோஸ் இளைஞர்கள் அறுத்தெறிந்தார்கள். இதனையடுத்து மேடை சரிந்துவிழ, மேடையிலிருந்த காமிணியும், ஜெயாரும் கீழே விழுந்தார்கள். ஆனால், ஜெயாருக்கு உடம்பில் காயங்கள் எதுவும் படவில்லை. ஆனால், அவரது இதயத்தில் பலமான அடியொன்று விழுந்துவிட்டது. 79 வயதான ஜெயாரின் 50 வருடகால அரசியல் வாழ்க்கையில் அன்றுபோல் என்றுமே அவர் அவமானப்பட்டதில்லை. ஆகவே, தமிழருக்குச் சரியான பாடம் ஒன்றினைக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்கிற அவரது வெறி இன்னும் இன்னும் அதிகமாகியது.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாவகச்சேரி பொலீஸ் நிலையத் தாக்குதல்

Seelan_%28Charles_Lucas_Anthony%29.jpg

 சீலன்

 

இராணுவ புலநாய்வுத்துறையினரின் செயற்பாடுகளை ஜெயார் கடுமையாக விமர்சித்திருந்தபோதிலும், 1981 ஆம் ஆண்டிலிருந்து பிரிகேடியர் சிறில் ரணதுங்கவின் தலைமையின் கீழ் இயங்கிவந்த புலநாய்வுத்துறை திறமையாகவே செயற்பட்டு வந்தது. புலநாய்வுத்துறையினை சீரமைக்க கப்டன் முனசிங்கவை சிறில் ரணதுங்க யாழ்ப்பாணத்திற்கு வரவழைத்திருந்தார். கைதுசெய்யப்பட்டிருந்த மூத்த புளொட் உறுப்பினர்கள் மூலம் பெருமளவு தகவல்களை புலநாய்வுத்துறை பெற்றிருந்தது. தமக்குத் தகவல்களை வழங்கும் புளொட் உறுப்பினர்களுடன் மிகவும் சிநேகமாக சிறில் ரணதுங்க நடந்துகொண்டார். ஜெயவர்த்தன யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, மூன்று மூத்த புளொட் உறுப்பினர்களை யாழ் குருநகர் முகாமில் ராணுவம் தடுத்து வைத்திருந்தது. அவர்கள் மூவரும் அன்டன், அரங்கநாயகம், அரபாத் ஆகியோராகும். தாம் பங்கெடுத்த கொலைகள், கிளிநொச்சி மக்கள் வங்கி உட்பட வங்கிக்கொள்ளைகள் பற்றிய பல விபரங்களை இவர்கள் மூவரும் ராணுவத்திற்கு வழங்கியிருந்தனர். தனது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தின் பூஞ்செடிகளைப் பராமரிப்பதற்கு இவர்கள் மூவரையும் சிறில் ரணதுங்க பாவித்து வந்தார்.

 ஐப்பசி 26 ஆம் திகதி, ரணதுங்கவின் பூந்தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தருணம் இவர்கள் மதின்மேல் ஏறித் தப்பிச் சென்றிருந்தார்கள். ஆனால், அன்டனும் அரங்கநாயகமும் மூன்று மணிநேரத்தில் பொலீஸாரால் மீண்டும் கைதுசெய்யப்பட்டபோதும்
 அரபாத் தப்பிச் சென்றுவிட்டார். அன்றிரவு குருநகர் முகாமில் ராணுவ உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை நடத்திவிட்டுக் காலை 5:30 மணியளவில்  கலைந்து செல்லும் தறுவாயில் அவர்களுக்குச் செய்தியொன்று வந்திருந்தது. சாவகச்சேரி பொலீஸ் நிலையம் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருப்பதாக அச்செய்தி கூறியது.

ஆகவே, அரபாத்தைக் கைதுசெய்யும் தமது எண்ணத்தை அப்போதைக்குத் தள்ளிவைத்துவிட்டு அனைவரும் சாவகச்சேரி நோக்கி விரைந்தார்கள். அவர்கள் அங்கு வந்து சேர்வதற்கிடையில், சீலன் தலைமையில் சாவகச்சேரி பொலீஸ் நிலையம் மீது தாக்குதலை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தாம் வந்த மினிபஸ்ஸிலேயே தப்பிச் சென்றுவிட்டது புலிகளின் தாக்குதல் அணி. இத்தாக்குதலை விசாரித்த பொலீஸாரும் ராணுவத்தினரும் இத்தாக்குதல் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு, வெறும் 15 நிமிடங்களிலேயே திறமையாக நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்கள். கார்த்திகை 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த உத்தரதேவி ரயிலில் மீசாலையில் ஏறிக்கொண்ட அரபாத்தை பணிமுடிந்து வீடு செல்லும் ராணுவத்தினர்  கைதுசெய்தனர். அன்டனும், அரங்கநாயகமும் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலையின்போது சிறை அதிகாரிகளால் கொல்லப்பட்டனர்.

 சாவகச்சேரி பொலீஸ் நிலையம் இரு மாடிகளைக் கொண்டது. சாவகச்சேரியூடாகச் செல்லும் பிரதான வீதியான கண்டி வீதியில் இப்பொலீஸ் நிலையம் அமைந்திருந்தது. 1981 ஆம் ஆண்டு ஆடி 27 ஆம் திகதி ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையம் புளொட் அமைப்பினரால் தாக்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாணத்திலிருந்த அனைத்து பொலீஸ் நிலையங்களுக்கும் இரவு பகலாகக் காவல் போடப்பட்டிருந்தது. ஐப்பசி 27 ஆம் திகதி இரவு இரு கொன்ஸ்டபிள்களான கருனநாதனும், கந்தையாவும் காவலுக்கு நின்றார்கள். அவர்கள் இருவரிடமும் ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளே இருந்தன.

41 Volcanic Factory Engraved Carbine - Revivaler ரிப்பீட்டர் ரக துப்பாக்கி

இத்தாக்குதலுக்கான திட்டத்தினை சீலன் மிகவும் திறமையாக வகுத்திருந்தார். இப்பொலீஸ் நிலையத்திற்கு இருமுறை சென்றிருந்த சீலன், பொலீஸ் நிலையத்தின் உள்ளமைப்பையும், கட்டிடங்களின் விபரங்களையும் அவதானித்திருந்தார். பொலீஸ் நிலையத்தில் பணிபுரிந்துவந்த சிவிலியன் ஒருவரின் ஊடாக ஆயுதங்களையும் தொலைத்தொடர்புக் கருவிகளையும் பாதுகாப்பாக வைக்கும் பகுதிபற்றிய விபரங்களையும் அவர் அறிந்துகொண்டார்.

 main-qimg-9b07697b101307a84223ab117df9abfd

சந்தோசமும் புலேந்திரனும்

 "தாக்குதலுக்கான எமது இலக்கு நோக்கி நாம் செல்லுமுன், பொலீஸ் நிலையம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் நன்கு தெரிந்து வைத்திருந்தோம். எமது தாக்குதல் அணியை இரு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்ட நாம், ஒவ்வொரு பிரிவுக்கும் கொடுக்கப்பட்ட வேலையைச் சரிவரச் செய்துமுடித்தோம். எனக்கும் சங்கருக்கும் வழங்கப்பட்ட பணி பொலீஸார் தங்கியிருக்கும் பொலீஸ் நிலையத்தின் பிற்பகுதிக்குச் சென்று அங்கிருக்கும் பொலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்துவது" என்று இத்தாக்குதலில் பங்குகொண்டவரும் எனது ஊரான அரியாலையினைச் சொந்த இடமாகவும் கொண்டவருமான சந்தோசம் என்னிடம் கூறினார். அவரது தந்தையாரான கணபதிப்பிள்ளை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர்.

சீலனும் ரகுவும் இணைந்து ஒரு அணியை உருவாக்கினார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி, காவலுக்கு நிற்கும் பொலீஸார் மீது தாக்குதல் நடத்துவது, முதலாவது மாடியில் இருக்கும் தொலைத் தொடர்புக் கருவிகளை அழிப்பது பின்னர் பொலீஸாரின் உறங்கும் விடுதியில் இருக்கும் பொலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவது. சந்தோசமும் சங்கரும் பொலீஸ் நிலையத்தின் பிற்பகுதியில் பொலீஸாரின் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. பஷீர் காக்கவுக்கும், மாத்தையாவுக்கும் கொடுக்கப்பட்ட பணி, பொலீஸ் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியத்தை உடைத்து அங்கிருக்கும் ஆயுதங்களைக் கைப்பற்றுவது. புலேந்திரனுக்கும் அருணாவுக்கும் வழங்கப்பட்ட பணி, கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும், காயப்பட்ட போராளிகளையும் வாகனத்திற்குக் கொண்டுவருவது.

 "நாங்கள் அனைவரும் நன்கு பராமரிக்கப்பட்ட இயந்திரம் ஒன்றைப்போல் ஒருங்கிணைந்து இயங்கினோம்" என்று சந்தோசம் கூறினார். 

29 சிறி 7309 எனும் இலக்கத் தகடுடைய மிட்சுபிஷி ரோசா மினி பஸ்ஸை அருணாவும் புலேந்திரனும் ஒழுங்குசெய்திருந்தார்கள். ஐப்பசி 25 ஆம் திகதி கோப்பாயில் வசித்துவந்த பஸ் ஓட்டுநரான தவராஜாவைச் சந்தித்துப் பேசிய அவர்கள், ஐப்பசி 27 ஆம் திகதி தில்லையம்பலம் கோயிலிக்குச் செல்வதற்காக பஸ் ஒன்று தேவைப்படுவதாகக் கூறியதுடன், முற்பணமாக 100 ரூபாய்களைக் கொடுத்துவிட்டு இருபாலையில் இருக்கும் வீடொன்றிற்கு  தம்மை வந்து ஏற்றும்படியும் கூறிவிட்டுச் சென்றார்கள். 

தாக்குதல் நடைபெற்ற மறுநாள் இராணுவ புலநாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்ட தவராஜா பேசும்போது, தன்னிடம் வந்து பஸ்ஸை ஒழுங்குசெய்தவர்கள் கூறியபடி இருபாலையில் இருந்த வீடொன்றிற்கு தானும் தனது உதவியாளர்களும் சென்றபோது, அங்கிருந்த இளைஞர்கள் தம்மை இன்னொரு வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைத்துவைத்ததாகக் கூறினார். மேலும், அவர்களின் கண்களைக் கட்டிய புலிகள், அன்றிரவு கோப்பாய்ப் பகுதிக்கு அழைத்துச் சென்று வீதியில் இறக்கிவிட்டுச் சென்றதாகவும் அவர் கூறினார்.

சாவகச்சேரித் தாக்குதலுக்காக எட்டுப் புலிகள் பயணமானார்கள். சீலன், மாத்தையா, அருணா, சங்கர், புலேந்திரன், ரகு, சந்தோசம் மற்றும் பஷீர் காக்கா ஆகிய எண்மருமே அவர்களாவர். அவர்களிடம் ஒரு எஸ் எம் ஜி துப்பாக்கியும், ஒரு ஜி 3 துப்பாக்கியும், ஒரு ரிப்பீட்டர் துப்பாக்கியும், இரு சுழற்துப்பாக்கிகளும் சில கைய்யெறிகுண்டுகளும் மாத்திரமே இருந்தன.

sterling-sub-machine-gun-l2a3-mk4-vintage-british.jpg

 எஸ் எம் ஜி துப்பாக்கி

Military-HK-G3-RIA.jpg

ஜி 3 துப்பாக்கி

காலை 5:30 மணியளவில் அவர்கள் பயணம் செய்த மின்பஸ் சாவகச்சேரி பொலீஸ் நிலையப் பகுதியை அடைந்தது. பொலீஸ் நிலையத்தின் முன்னால் பஸ் வந்ததும், தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது. பஸ்ஸிலிருந்து குதித்த சீலனும் ரகுவும் காவலுக்கு நின்ற கொன்ஸ்டபிள்கள் மீது தாக்குதல் நடத்தினர். கருனநந்தன் அவ்விடத்திலேயே விழுந்து உயிர்விட்டார். ஆனால், சில மீட்டர்கள் பின்னால் ஓடிச்சென்ற கந்தையா, முழங்காலில் இருந்து தனது ரிப்பீட்டர் துப்பாக்கியால் புலிகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினார். ஆனால், அவரை முந்தி ஓடிச்சென்ற புலிகளின் உறுப்பினர் ஒருவர் அவர்பக்கம் திரும்பி அவரைச் சுட்டுக் கொன்றார். 

சீலனும், ரகுவும் பொலீஸ் நிலையத்தின் முதலாவது மாடிக்கு ஓடிச் சென்றார்கள். அங்கிருந்த தொலைத் தொடர்புக் கருவிகளை அவர்கள் அழித்தார்கள். பின்னர்,  மாடியில் இருந்த பொலீஸாரின் தூங்கும் அறைக்குச் சென்றார்கள். அவ்வேளை அங்கு 6 பொலீஸார் இருந்திருக்கிறார்கள். கட்டிலின் கீழே ஒளித்திருந்த பொலீஸ் சாரதி திலகரத்னமீது சீலன் துப்பாக்கிச் சூடு நடத்தினார். 

தாக்குதல் ஆரம்பமானதையடுத்து மாடியிலிருந்து குதித்துத் தப்பிச்செல்ல கொன்ஸ்டபிள் ஜயதிலக்க முயன்றபோது, அவரது கால் முறிந்தது. இன்னொருவர் தனது கட்டிலின் கீழே ஒளிந்துகொண்டதால் புலிகளின் பார்வையிலிருந்து தப்பிவிட்டார். தன்னுடன் சுழற்துப்பாக்கியொன்றை வைத்திருந்த கொன்ஸ்டபிள் வீரக்கோன் கதவொன்றின் பின்னால் மறைந்து நிலையெடுத்துக்கொண்டு சீலனும் ரகுவும் மாடியில் இருந்து கீழிறங்கும்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். அவர்கள் இருவர் மீதும் சூடு வீழ்ந்தது. சீலனின் முழங்காலினூடாக சன்னம் பாய அவர் கீழே விழுந்தார். ரகுவின் வலது கையில் சன்னம் பட்டு எலும்பு முறிந்தது.

பொலீஸ் நிலையத்தின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட பொலீஸாரின் விடுதி நோக்கி ஓடிச்சென்ற சந்தோசமும், சங்கரும், ஆயுத அறையைக் காப்பற்ற பொலீஸார் வராது தடுத்தனர். ஆனால், அவர்கள் பொலீஸார் மீது தாக்குதல் நடத்தை எத்தனிக்கவில்லை. அங்கிருந்த பொலீஸார் தாக்குதல் ஆரம்பமானதையடுத்து அங்கேயே ஒளிந்துவிட்டார்கள். ஆயுதவறையினை உடைத்த மாத்தையாவும் பஷீர் காக்காவும் அங்கிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டனர். சீலன் மீதும் ரகு மீதும் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்படுவதையும், அவர்கள் இருவரும் அலறுவதையும் கேட்ட அருணாவும் புலேந்திரனும் அவர்களுக்கு உதவுவதற்காக அவர்கள் நோக்கி ஓடிச் சென்றனர். கீழே வீழ்ந்திருந்த சீலனை அருணா மினிபஸ்ஸிற்குக் கொண்டுவர, மறைந்திருந்து வீரக்கோன் மீண்டும் தாக்க, புலேந்திரனின் தோற்பட்டையில் சூடுபட்டது. 

காலைவேளையில் நடத்தப்பட்ட துணிகரமான இத்தாக்குதலில் மூன்று பொலீஸார் கொல்லப்பட்டனர். உடுவிலைச் சேர்ந்த கருனநாதன், மிருசுவில்லைச் சேர்ந்த கந்தையா, கேகாலையைச் சேர்ந்த திலகரத்ன ஆகியோரே அந்த மூவரும் ஆகும். மேலும் இத்தாக்குதலில் சார்ஜன்ட்கந்தையா, கொன்ஸ்டபிள் ஜயதிலக்க மற்றும் சிவில் பணியாளர் கந்தையா செல்வம் ஆகியோரும் காயப்பட்டனர். இவர்களுள் சிவில் பணியாளரான கந்தையா செல்வம் பின்னர் விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டார்.

Lee-enfield-303-rifle-WikiCommons-Armemuseum 

.303 ரைபிள்

Colt Detective-JH01.jpg

0.38 சுழற்துப்பாக்கி

இத்தாக்குதலின்போது புலிகள் இரு உப இயந்திரத் துப்பாக்கிகளையும், ஒரு 0.38 சுழற்துப்பாக்கியையும், ஒன்பது 0.303 ரைபிள்களையும், 19 ரிப்பீட்டர் துப்பாக்கிகளையும் கைப்பற்றிச் சென்றனர். மொத்தத் தாக்குதலுமே 15 நிமிடத்தில் முடிக்கப்பட்டதோடு, புலிகள் தாம் வந்த மினி பஸ்ஸிலேயே மீசாலை நோக்கித் தப்பிச் சென்றனர். பின்னர், அந்த மினிபஸ் கைவிடப்பட்ட நிலையில் நவாலிப் பகுதியில் பொலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சிங்கராயரின் கைது

மினிபஸ்ஸினைக் கைவிடுமுன்னர் அச்செழுப் பகுதியில் இயங்கிவந்த மெதடிஸ்த்த தேவாலயத்திற்கு ஓட்டிச் சென்ற மாத்தையா அங்கிருந்த கிறிஸ்த்தவ மதகுரு ஜயதிலகராஜாவைச் சந்தித்தார். தேவாலயத்தின் பின்னால் இருந்த மதகுருவின் வாசஸ்த்தலத்திற்குக் காயப்பட்ட போராளிகள் கொண்டுசெல்லப்பட்டனர். ஏனையவர்கள் அந்த மினிபஸ்ஸில் தமது முகாம் நோக்கிச் சென்றார்கள். முகாமின் அருகில் அவர்கள் இறங்கியபின்னர், போராளிகளில் ஒருவர் அதனை நவாலி வரை ஓட்டிச் சென்று விட்டுவிட்டு முகாம் திரும்பினார். 

காயப்பட்ட போராளிகளின் நிலையினை அவதானித்த மதகுரு ஜயதிலக்கராஜா, காயப்பட்ட போராளிகளையும், மாத்தையாவையும் தனது காரில் ஏற்றிக்கொண்டுபுத்தூர் மெதடிஸ்த்த வைத்தியசாலையில் பணிபுரிந்த தனது சகோதரரான வைத்தியர் ஜயகுலராஜாவிடம் அழைத்துச் சென்றார். காயப்பட்ட போராளிகளுக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யப்படவேண்டும் என்று மாத்தையாவிடம் கூறிய ஜயகுலராஜா, கடுமையாகக் காயப்பட்டிருந்த சீலனின் உடலில் இருந்து பெருமளவு குருதி வெளியேறியுள்ளதால், அவர் தொடர்ச்சியாக வைத்தியர்களால் கண்காணிக்கப்பட்டுப் பராமரிக்கப்படவேண்டும் என்று கூறினார். மேலும், சீலனைப் பரிசோதித்த ஜயகுலராஜா, சீலனின் முழங்காலில் ஐந்து குண்டுச்சிதறல்கள் பாய்ந்திருப்பதாக கூறினார். அவரது முழங்காலின் ஒரு பகுதியூடாக மூன்று சன்னங்கள் வெளியேறியிருக்கும் காயங்களைக் காட்டிப் பேசிய ஜயகுலராஜா, இன்னும் இரு சன்னங்கள் முழங்காலுக்குள் சிக்கியிருப்பதாகவும் கூறினார். அக்குண்டுகளை அறுவைச் சிகிச்சை ஒன்றின் மூலமே வெளியே எடுக்கமுடியும் என்கிற நிலையிருந்தது. 

ரகுவையும், புலேந்திரனையும் முகாமிற்கு அழைத்துச் செல்லலாம் என்று மாத்தையாவிடம் கூறிய ஜயகுலராஜா, சீலனை தனக்குத் தெரிந்த இன்னொரு  வீட்டில் வைத்து பராமரிக்க முடியும் என்றும் கூறினார். ஆரம்பச் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியர் ஜயகுலராஜாவின் விடுதியில் தங்கவைக்கப்பட்ட சீலன், இரவானதும் வைத்தியருக்குப் பரீட்சயமான குடும்பம் ஒன்றுடன் தங்கவைக்கப்பட்டார்.

THJC RAJANITHIRANAGAMA11

ரஜினி திரணகம

சீலனைப் பாதுகாப்பாக பராமரிக்க அனுப்பப்பட்ட வீடு, இலக்கம் 330, நாவலர் வீதி , யாழ்ப்பாணம் எனும் முகவரியை உடைய நிர்மலா நித்தியானந்தனின் வீடாகும். அக்காணியில் இரு வீடுகள் கட்டப்பட்டிருந்தன. காணியின் மத்தியில் பெரிய வீடொன்றும், ஓரத்தில் இன்னொரு சிறிய வீடும் கட்டப்பட்டிருந்தது. நிர்மலா நித்தியானந்தன் மற்றும் அவரது கணவர் முத்துப்பிள்ளை நித்தியானந்தன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர்களாகக் கடமையாற்றி வந்தவர்கள். அக்காணியிலிருந்த சிறிய வீட்டிலேயே அவர்கள் தங்கியிருந்தார்கள். நிர்மலா நித்தியானந்தனின் பெற்றோரான ராஜசிங்கம் தம்பதிகள் பெரிய வீட்டில் தங்கியிருந்தனர்.

preview-kartik-aef-001.jpg

நிர்மலா நித்தியானந்தன்

நிர்மலாவின் வீட்டிற்கு அன்றிரவு சீலனை அழைத்துச் சென்ற வைத்தியர் ஜயகுலராஜா, நிர்மலாவையும், அவரது தங்கையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வைத்தியராகக் கல்வி கற்றுவந்தவருமான ரஜனியையும் அழைத்து சீலனின் காயங்கள் பற்றியும், அவரது மருத்துவ தேவைபற்றியும் விளங்கப்படுத்தினார். நித்தியானந்தன் தம்பதிகள் பயன்படுத்திய இரட்டைக் கட்டிலில் சீலன் கிடத்தப்பட்டார். அவரது முழங்காலில் இருந்து இன்னமும் இரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. அவர்களுக்கு இன்னொரு கண்டிப்பான கட்டளையினையும் ஜயகுலராஜா இட்டார். தானோ அல்லது ராஜனோ அன்றி வேறு எவரும் இவ்வீட்டினுள் அனுமதிக்கப்படக் கூட்டது என்பதே அது. இங்கே ராஜன் என்று அவர் கூறியது மாத்தையாவைத்தான். மாத்தையாவின் இளம்பராயப் பெயர் ராஜன் என்பது குறிப்பிடத் தக்கது. மாத்தையா வைத்தியர் ஜயகுலராஜாவிடமிருந்து மருந்துகளையும், அறிவுருத்தல்களையும் எடுத்துக்கொண்டு நிர்மலாவின் வீட்டிற்குச் சைக்கிளில் சென்றுவந்தார்.

rajasinghamsin1990parentsofdrrajani.jpg?ssl=1

 ராஜசிங்கம் தம்பதிகள்

தமது குடும்பத்தில் ஒருவரைப்போல சீலனைக் கவனித்து வந்தார்கள் நிர்மலாவும் அவரது கணவர் நித்தியானந்தனும். சீலனின் சிறுபராய வாழ்க்கையின் கஷ்ட்டங்களையும், போராட்டத்தின் மீது அவர் வைத்திருந்த அர்ப்பணிப்பையும் கண்டபோது அவர்மீது அவர்களுக்கு இரக்கமும், இனம்புரியாத பாசம் ஏற்பட்டு விட்டது. தனது குடிகாரத் தந்தையாலும், வேலைவாய்ப்பின்றி சுற்றித் திரிந்த அண்ணனாலும் தனது சிறுபராயத்தில் ஏற்பட்ட கஷ்ட்டங்கள் குறித்து சீலன் அவர்களிடம் கூறியிருந்தார். தனது குடும்பத்தை தனது தாயாரே மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் கவனித்து வந்ததாகக் கூறிய சீலன், அவரைத் தனியே தவிக்கவிட்டு வந்ததற்காக மனம் வருந்துவதாகவும் கூறியிருந்தார்.  மேலும், புலிகள் இயக்கத்தில் சேர்வதற்காக மதகுரு சிங்கராயரே தனக்கு ஊக்கம் தந்ததாகவும் அவர் கூறினார். சீலனைப் பராமரித்து வந்த நிர்மலா, சீலனின் வலியைத் தடுக்கும் ஊசிகளைக் கேட்டபோது, சிங்கராயர் தனக்குத் தெரிந்த மருந்தகம் ஒன்றிலிருந்து அவற்றினைப் பெற்று மாத்தையாவிடம் வழங்கினார். 

நிர்மலாவிடமும், நித்தியானந்திடமும் பேசிய சீலன், தனது வீட்டின் ஏழ்மையினைப் போக்குவதைக் காட்டிலும், தமிழ் மக்களின் விடுவிற்காகப் போராடுவதே அவசியமானது என்று தான் நினைத்ததாலேயே தான் வீட்டை விட்டு வெளியேறி புலிகளுடன் இணைந்ததாகக் கூறினார். பிரபாகரன் போன்ற உன்னதமான தலைவர் ஒருவரின் கீழ் செயற்படுவது தான் அடைந்த பாக்கியம் என்று சீலன் கூறினார். "பிரபாகரன் ஒரு மேன்மையான தலைவர்" என்று சீலன் அவர்களிடம் அடிக்கடி கூறிக்கொள்வார். 

பிரபாகரனின் மேன்மை பற்றி விளக்குவதற்காக சீலன் ஒரு சம்பவத்தை அவர்களுக்குக் கூறினார். ஒருமுறை போராளி ஒருவர் வாந்தியெடுக்கும் நிலையில் இருந்தபோது, பிரபாகரன் தனது கைகள் இரண்டையும் சேர்த்து அவற்றிற்குள் வாந்தியெடுக்கும்படி அந்தப் போராளியிடம் கூறியிருக்கிறார். ஆனால், அதனைச் செய்ய அப்போராளி தயங்கியபோது, "நாம் தோழர்கள், நீ தயங்காது வாந்தியெடு" என்று பிரபாகரன் அப்போராளிக்குத் தைரியமூட்டியதாக சீலன் அவர்களிடம் கூறினார்.

 BATTLE FRONT

வலதுபக்கத்தில் சரத் முனசிங்க

 பின்னாட்களில் பயங்கரவாதி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்கிற குற்றச்சாட்டில் நிர்மலாவும், அவரது கணவர் நித்தியானந்தனும் ராணுவத்தால் குருநகர் முகாமில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது இதுகுறித்து நிர்மலா சரத் முனசிங்கவிடம் கூறியிருக்கிறார். முனசிங்க தான் 2000 இல் எழுதிய  "ஒரு ராணுவ வீரரின் பார்வையிலிருந்து" எனும் புத்தகத்தில் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். தனது புத்தகத்தின் இறுதி நகலை என்னிடம் படித்துப் பார்த்துக் கூறுங்கள் என்று முனசிங்க என்னிடம் கேட்டிருந்தார். ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தினைப் பாவித்து அவரிடமிருந்து பல தகவல்களை நான் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. சாவகச்சேரி பொலீஸ் நிலையம் மீதான தாக்குதல் தொடர்பாக அவர் மேற்கொண்ட விசாரணை, மீசாலை பகுதியில் அவர் நடத்திய தேடுதலின்போது ஏற்பட்ட சீலனின் மரணம், திருநெல்வேலித் தாக்குதல் ஆகியவை தொடர்பான பல விடயங்களை நான் அறிந்துகொள்ள முடிந்தது. சீலன் தன்னிடம் கூறிய போராளி ஒருவரின் வாந்திபற்றிய சம்பவத்தை நிர்மலா முனசிங்கவிடம் விபரிக்கும்போது குறுக்கிட்ட முனசிங்க, "உங்களின் சீலனை நான் விரைவில் பிடிப்பேன்" என்று கூறவும், "தயவுசெய்து அதைச் செய்யாதீர்கள், ஏனென்றால் அவரை உங்களால் உயிருடன் பிடிக்க முடியாது" என்று நிர்மலா கூறியிருக்கிறார்.

 Anton-Sinnarasa-Philip-300x173.jpg

அன்டன் சின்னராசா பிலிப்

 சீலன் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு இரு நாட்களுக்குப் பின், கார்த்திகை 20 ஆம் திகதி நிர்மலாவின் வீட்டைத் தாம் சோதனையிட்டதாக முனசிங்க என்னிடம் கூறினார். தாம் தற்செயலாகவே சீலனை நித்தியானந்தன் தம்பதிகள் பராமரித்து வருவதை தெரிந்துகொண்டதாகக் கூறினார். ராணுவ புலநாய்வுத்துறைக்குக் கிடைத்த தகவல்களின்படி இரு கத்தோலிக்கப் பாதிரியார்களான சிங்கராயரும், சின்னராசாவும் புலிகளின் பிரச்சார வேலைகளில் மும்முரமாக செயற்பட்டு வருவதையும் , அவர்களின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை கவனித்துவருவதையும் தாம் அறிந்துகொண்டதாகக் கூறினார். ஆகவே இவர்கள் இருவரையும்  ராணுவப் புலநாய்வுத்துறை தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்தது.

 

 

Edited by ரஞ்சித்
  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீலன் பற்றிய தகவல்களை எமக்கு வழங்கியது கத்தோலிக்க மதகுரு ஆபரணம் சிங்கராயரே - கப்டன் முனசிங்க

கத்தோலிக்க மதகுருக்களுக்கெதிரான உறுதியான ஆதாராங்களைப் பெற்றுக்கொண்ட பின்னர், அவர்கள் பணிபுரிந்த ஆலயங்களையும்,  தங்கியிருந்த விடுதிகளையும் சோதனையிடுவதற்கான அனுமதியினை பாதுகாப்பு அமைச்சிடமிருந்து இராணுவத்தினரும் பொலீஸாரும் பெற்றுக்கொண்டனர். பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியும், இராஜாங்க அமைச்சராக வீரப்பிட்டியவும் இத்தேடுதல் நடவடிக்கைகளினால் கத்தோலிக்க மக்களிடையே அதிருப்தி ஏற்படாது இருக்கத் தேவையானவற்றைச் செய்ய எத்தனித்தனர். ஆகவே, இத்தேடுதல் நடவடிக்கைகளுக்கு தகுந்த சூழ்நிலையினை மக்களின் மனங்களில் விதைக்கும் பொறுப்பு லேக் ஹவுஸ் பத்திரிக்கையான டெயிலி நியூஸிடம் கொடுக்கப்பட்டது.

 மேலும், அவர்களைக் கைதுசெய்வதற்கான சூழ்நிலையும் ஒரேவேளையில் உருவாக்கப்பட்டு வந்தது. இதன் முதற்படியாக, குறிப்பிட்ட சில கத்தோலிக்கக் குருக்கள் யாழ்க்குடாநாட்டில் புலிகளின் செயற்பாடுகளுக்கு உத்வேகமான பங்களிப்பினை வழங்கிவருவதாக செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது. இச்செய்தியினைத் தொடர்ந்து இம்மதகுருக்களின் ஆலயங்களையும், விடுதிகளையும் சோதனையிடும் நடவடிக்கைகள் குறித்து பொலீஸாரும், இராணுவத்தினரும் சிந்தித்து வருகிறார்கள் என்றும் செய்தி பரப்பப்பட்டது. இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக பத்திரிக்கையில் வாசகர்கள் கருத்து எனும் பெயரில் அரசின் திட்டமிட்ட பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இவ்வாறான "வாசகர்" கருத்துக்களில் பெரும்பாலானவை அம்மதகுருக்களைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தன. இவ்வாறான ஒரு வாசகர் கடிதத்தில், "சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமே, மதகுருக்கள் உட்பட" என்று எழுதப்பட்டிருந்தது.

தமிழ்க் கத்தோலிக்க மதகுருக்களுக்கெதிரான உணர்வுகளை மக்களிடையே தூண்டிவிட்டபின்னர் அவர்களைக் கைதுசெய்யும் அனுமதியினைப் பாதுகாப்பு அமைச்சு வழங்கியது. ஆனால், கைது நடவடிக்கைகளும், தேடுதல்களும் கத்தோலிக்க மக்களின் உணர்வுகளைப் பாதிக்காத வண்ணம் நிகழ்த்தப்படவேண்டும் என்று பொலீஸாரும் இராணுவத்தினருக்கும் அறிவுருத்தப்பட்டது. இதன்படி, கத்தோலிக்கப் பாதிரியாரான ஆபரணம் சிங்கராயர் அவர்களின் ஆலயமான கரையூரில் அமைந்திருந்த அமல உற்பவம் எனும் ஆலயத்தில் முதலாவதாகச் சோதனையினை நடத்துவதென்றும், இச்சோதனைக்கு கத்தோலிக்க ராணுவ அதிகாரி ஒருவரை பொறுப்பாக நியமிக்கலாம் என்றும் இராணுவத்தால் தீர்மானிக்கப்பட்டது. பொலீஸ் அதிகாரிகள் வட்டத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கத்தோலிக்கராக இருந்தார், அவர் ஒரு உப பொலீஸ் அத்தியட்சகர். ஆரம்பத்தில் அவ்வதிகாரியை சோதனையிடும் குழுவிற்கு தலைமைதாங்குவதைப் பலர் எதிர்த்தபோதும், அவர் தலைமையிலேயே சோதனை இடம்பெற்றது.

 பாதிரியார் சிங்கராயருக்கும் புலிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கம் தம்மிடம் கிடைத்திருப்பதாக இராணுவத்தினர் கூறினர். கார்த்திகை 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட சிங்கராயர் குருநகர் இராணுவ முகாமிற்கு விசாரணைக்காக இழுத்துச் செல்லப்பட்டார். மறுநாள் நெடுந்தீவு புனித் யோவான் ஆலயம் சோதனையிடப்பட்டதுடன் அவ்வாலயத்தின் பங்குத் தந்தையான பாதிரியார் பிலிப் அன்டன் சின்னையா கைதுசெய்யப்பட்டார். விசாரணைக்காக அவரையும் இராணுவம் குருநகர் ராணுவ முகாமிற்கு இழுத்துச் சென்றது.

மதகுருக்களைக் கைதுசெய்த விடயம் மக்களிடையே ஆத்திரத்தினை ஏற்படுத்தவே ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான மாணவர்கள், மதகுருக்கள், கன்னியாஸ்த்திரிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் உண்ணாவிரத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாண ஆயராக இருந்த தியோகுப்பிள்ளை தனது கடுமையான கண்டனத்தை ஜனாதிபதிக்குத் தெரிவித்திருந்தார்.

Bastiampillai_Deogupillai.jpg

 தியோகுப்பிள்ளை

1982 ஆம் ஆண்டு கார்த்திகை 18 ஆம் திகதியளவில் பாதிரியார் சிங்கராயரிடமிருந்து வாக்குமூலத்தினைப் பொலீஸார் முழுதாகப் பெற்றுக்கொண்டனர். சிங்கராயருடன் நீண்டநேரம் முனசிங்க மறுநாள் உரையாடியிருந்தார். அவ்வுரையாடலின்போது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் குறித்தும், கிராமப்புறங்களில் இளைஞர்கள் எதிர்நோக்கும் கஷ்ட்டங்கள் குறித்தும் முனசிங்கவிடம் பேசியிருந்தார் சிங்கராயர். நள்ளிரவு வரை இந்த சம்பாஷணைகள் இடம்பெற்றிருந்தன. 

முக்கியமான தகவல் 

"மறுநாள் காலை என்னுடம் பேசவேண்டும் என்று சிங்கராயர் கூறியிருந்தார். நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் நடுங்கிக்கொண்டிருந்தார். நான் உங்களிடம் ஒரு விடயத்தைக் கூறவேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். நான் அவரை ஆசுவாசப்படுத்தினேன். அவர் கதிரையில் அமர்ந்துகொண்டார். எனது கைகளை இறுகப் பற்றிக்கொண்ட அவர் பேசத் தொடங்கினார். அவரது உடலில் இன்னமும் நடுக்கம் தெரிந்தது".

 "மெதொடிஸ்த்த மதகுருவான ஜயதிலகராஜாவின் சகோதரரான மருத்துவர் ஜயகுலராஜாவே இன்றுவரை சீலனுக்கு மருத்துவ சிக்கிச்சையினை வழங்கிவருகிறார்" என்று அவர் என்னிடம் கூறினார். நான் அவரிடம் அந்த விலாசத்தினைக் கேட்க அவரும் அதனை என்னிடம் கூறினார்" என்று முனசிங்க என்னிடம் கூறினார். 

"அது எனக்குப் போதுமானதாக இருந்தது. இந்த விசாரணைகளில் ஒரு திருப்புமுனையாக சிங்கராயர் வழங்கிய தகவல் அமைந்திருந்தது" என்று முனசிங்க கூறினார். "நான் உடனடியாகவே அச்செழுவில் அமைந்திருந்த மெதொடிஸ்த்த ஆலயத்திற்கு இன்னும் ஒரு அதிகாரியையும், இரு ராணுவ வீரர்களையும் அழைத்துக்கொண்டு சென்றேன். நாங்கள் சிவில் உடையிலேயே இருந்தோம். மதகுரு ஜயதிலகராஜா அங்கிருக்கவில்லை. பின்னர் அங்கிருந்து புத்தூரில் அமைந்திருந்த புனித லூக்கு தேவாலயத்திற்கு நாம் சென்றபோது வைத்தியர் ஜயகுலராஜா  அங்கிருந்தார். அவர் தனது காரினைக் கழுவிக்கொண்டிருந்தார். எம்மைக் கண்டதும் அவர் பதற்றமடைந்தார். "நீங்கள் பொலீஸிலிருந்து வருகிறீர்களா?" என்று எங்களைப் பார்த்துக் கேட்டார். நாங்கள் இராணுவத்தினர் என்று கூறவும், அவரது பயம் இரட்டிப்பானது".

"நான் நேராகவே அவரிடம் கேட்டேன், "நீங்கள் சீலனுக்கு சிகிச்சையளித்து வருகிறீர்களா?"

 "ஆம் என்று ஒத்துக்கொண்ட வைத்தியர் ஜயகுலராஜா, தனது சகோதரனான பாதிரியார்  ஜயதிலகராஜாவினாலேயே  சீலனுக்கு சிகிச்சையளிக்க வேண்டி ஏற்பட்டதாக அவர் கூறினார்".

 "இப்போது சீலன் எங்கே?" என்று முனசிங்க அவரைப் பார்த்துக் கேட்டார். 

"அவர் சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டார்" ன்று வைத்தியர் ஜயகுலராஜா பதிலளித்தார். 

"ஏனைய காயப்பட்டவர்கள்?" என்று முனசிங்க அவரிடம் மீண்டும் கேட்டார். 

"அவர்களையும் இந்தியாவிற்கு சிகிச்சைக்காக அனுப்பி விட்டார்கள், அவர்களின் பெயர்கள் புலேந்திரனும், ரகுவும் ஆகும்" என்று வைத்தியர் பதிலளித்தார். 

"சீலன் இந்தியாவுக்குச் செல்லுமுன் எங்கே தங்கியிருந்தார்" என்று முனசிங்க வைத்தியரிடம் கேட்டார். 

"புலிகளின் அனுதாபிகள் என்று அறியப்பட்ட ஒரு குடும்பத்துடன் அவர் தங்கியிருந்தார்" என்று வைத்தியர் பதிலளித்தார். 

மேலும் நேரத்தை விரயமாக்குவதைத் தவிர்க்க எண்ணிய முனசிங்க இரு சகோதரர்களையும் இழுத்துச் சென்று விசாரிக்க முடிவெடுத்தார்.

தன்னுடன் வந்திருந்த அதிகாரியையும், ஒரு ராணுவ வீரரையும் வைத்தியரின் காரினை ஓட்டிவருமாறு பணித்துவிட்டு, தனது ஜீப்பில் வைத்தியரை ஏற்றிக்கொண்டு அச்செழுவில் அமைந்திருக்கும் மெதொடிஸ்த்த ஆலயத்திற்குச் சென்றார் முனசிங்க. அச்செழுவில் ஆலயத்தின் பின்னால் அமைந்திருந்த மதகுருவின் விடுதிக்குச் சென்று தாம் ராணுவத்திலிருந்து வந்திருப்பதாக முனசிங்க கூறவும் மதகுரு ஜயதிலக ராஜா அதிர்ந்த்து போனார். 

"என்னை எதற்காகச் சந்திக்க வந்தீர்கள்?" என்று பாதிரியார் முனசிங்கவைப் பார்த்துக் கேட்டார். 

"புலிகளுடனான உங்களின் தொடர்புபற்றி விசாரிக்கவே வந்திருக்கிறேன்" என்று முனசிங்க பதிலளித்தார். 

புலிகளுடன் தனக்கு தொடர்புகள் எதுவும் இல்லையென்று பாதிரியார் ஜயதிலகராஜா மறுத்தார். மேலும், காயப்பட்ட மூன்று புலிகளுக்கும் தான் மருத்துவ சிகிச்சையளிக்க உதவியதாக ராணுவத்தினர் கூறிய குற்றச்சட்டையும் அவர் மறுத்தார். இது நடந்துகொண்டிருக்கும்போது மற்றைய ராணுவத்தினருடன் அங்கு வந்துசேர்ந்த அவரது சகோதரரான வைத்தியர் ஜயகுலராஜா, தனது சகோதரனைப் பார்த்து ராணுவத்திடம் உண்மையைக் கூறும்படி அறிவுருத்தினார்.

"நான் அவர்களிடம் எல்லா உண்மைகளையும் கூறிவிட்டேன், நீங்களும் அப்படியே செய்யுங்கள்" என்று தனது சகோதரனுக்கு அறிவுரை கூறினார் வைத்தியர். 

இதன்பின்னர் மதகுரு ஜயதிலகராஜா உண்மையைக் கூறினார். மாத்தையாவையும் இன்னும் சில புலிப்போராளிகளையும் தனக்கு சிலகாலமாகத் தெரிந்திருந்ததாகவும், ஆகவேதான் காயப்பட்ட போராளிகளை மாத்தையா தன்னிடம் அழைத்துவந்தபோது தான் அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒழுங்குகளை தனது சகோதரரூடாக  மேற்கொண்டதாக அவர் கூறினார். மேலும், ரகுவையும் புலேந்திரனையும் சிறிய சிக்கிச்சைகளுக்குப் பின்னர் புலிகளின் முகாமிற்கு தனது சகோதரரான வைத்தியர் அனுப்பிவிட்டதாகவும், சீலனைத் தொடர்ந்தும் சிகிச்சையளித்துப் பராமரிக்க தனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றுடன் வைத்துக்கொண்டதாகவும் கூறினார்.

அதன்பின்னர், சீலனை வைத்துப் பராமரித்துவந்த குடும்பம் பற்றி சகோதரர்களிடம் விசாரித்தார் முனசிங்க. பாதிரியார் ஜயதிலகராஜா அக்குடும்பத்தின் பெயர்களையும் விலாசத்தினையும் முனசிங்கவிடம் கொடுத்தார். அக்குடும்பத்தின் பெயர் நிர்மலா நித்தியானந்தன் என்றும் அவர்கள் நல்லூரில் வசித்துவருவதாகவும் பாதிரியார் கூறினார். பின்னர் அக்குடும்பத்தின் விலாசமான 330, நாவலர் வீதி, நல்லூர் என்பதையும் பாதிரியார் முனசிங்கவிடம் கொடுத்தார். 

உடனடியாக குருநகர் முகாமிற்கு தொலைபேசியூடாக அழைப்புவிடுத்த முனசிங்க, மேலதிகப் படையினரை வருமாறு அழைத்தார். சுமார் 45 நிமிடங்களின் பின்னர் ராணுவ அதிகாரியும், ராணுவக் கொமாண்டோ வீரர்கள் சிலரும் ஜீப் வண்டியில் வந்திறங்கினர். முனசிங்க தன்னுடன் பாதிரியார் ஜயதிலகராஜாவை ஜீப்பில் அழைத்துக்கொண்டு நல்லூரில் அமைந்திருந்த நிர்மலா நித்தியானந்தனின் வீட்டிற்குச் சென்றார். முதலாவது ஜீப் வண்டியில் இரு ராணுவ வீரர்களுக்கு நடுவில் பாதிரியார் அமர்த்தப்பட்டிருந்தார். இரண்டாவது ஜீப் வண்டியில் மேலதிக ராணுவ வீரர்கள் அவர்களைப் பிந்தொடர்ந்து பயணித்தனர். 

"நான் முன்னால் சென்றேன். நாம் நாவலர் வீதியை அடைந்தவுடம் பாதிரியார் ஜெயதிலகராஜா நிர்மலாவின் வீட்டினைக் காட்டினார். நான் ஜீப்பிலிருந்து இறங்கி வீட்டின் கேட்டினைத் திறந்தேன். எனது கொமாண்டோ வீரர்கள் சிரமமின்றி வீட்டினுள் நுழையும்வகையில் இரு கேட்டுக்களையும் நான் அகலத் திறந்துவிட்டேன். வாயிலில் இருந்து தொலைவாகவும், சிறிய வீட்டின் அருகிலுமாக எனது ஜீப் வண்டியை நான் நிறுத்திக்கொண்டேன். பின்னால் வந்த கொமாண்டோ அணியின் வாகனம் வந்துசேர்வதற்கு சில நேரம் எடுத்தது. அவ்வீட்டினை கொமாண்டோக்கள் சுற்றிவளைத்துக்கொண்டனர். ஒரு வீரர் சிறிய வீட்டின் பின்கதவு நோக்கி ஓடிச்சென்றார். கையில் துப்பாக்கியை ஏந்தியபடி நான் அவரின் பின்னால் விரைந்தேன். சிறிய வீட்டின் பின்கதவினூடாக ஒருவர் தப்பியோடுவதற்கு எத்தனிப்பதை நான் கண்டேன். என்னுடன் நின்ற கொமாண்டோ வீரர் தான் வைத்திருந்த MP5A3 துப்பாக்கியால் தப்பிச்செல்ல முயன்ற நபர் மீது சுட்டார். ஓரிரு வேட்டுக்கள் அந்தநபர் மீது பட்டிருக்கவேண்டும், ஆனாலும் அவர் தப்பிவிட்டார்" என்று முனசிங்க என்னிடம் கூறினார்.

Schweiz Suisse Swiss Army - MP5 A5.jpg

 MP5A3 - தானியங்கித் துப்பாக்கி

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

புலிகளின் முதலாவது மாவீரர் 

Lt-Sankar-757x1024.jpg

தமது பிரதான வீட்டின் விறாந்தையில் அமர்ந்திருந்த ரஜனி ராஜசிங்கம் , தமது வளவினுள் இராணுவத்தினரின் ஜீப் வண்டியொன்று நுழைவதைக் கண்ணுற்றார். உடனே வீட்டின் பின்புறம் நோக்கி ஓடிச்சென்று தனது மூத்த சகோதரியான நிர்மலாவைப் பார்த்து, "நிர்மலா அக்கா, ஆமி ஜீப்பொன்று வருகிறது" என்று கத்தினார். 

தனது சகோதரியைப் பற்றி நன்கு அறிந்துவைத்திருந்த ரஜனி, அக்கணத்தில் வீட்டினுள் புலிகளின் போராளியான சங்கரும் இருந்ததை அறிந்திருந்தார். நிர்மலாவின் பராமரிப்பில் இருந்துவந்த சீலனை தாம் பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைத்துவிட்டோம் எனும் தகவலைச் சொல்வதற்காக சங்கர் நிர்மலாவின் வீட்டிற்கு அப்போது வந்திருந்தார். மேலும், தன்னை பல நாட்களாக தமது வீட்டில் தங்க வைத்து, அக்கறையுடன் பார்த்துக்கொண்டதற்காக நிர்மலாவிற்கும், நித்தியானந்தனிற்கும், ரஜனிக்கும் தனது நன்றியைத் தெரிவித்து விடுமாறு சீலன் சங்கரைக் கேட்டிருந்தார், ஆகவேதான் சங்கர் அன்று நிர்மலாவின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். 

சங்கர் நிர்மலாவின் வீட்டிற்கு வந்த நேரம் மதியமாதலால், அவரை தம்முடன் மதிய உணவில் கலந்துகொள்ளுமாறு நிர்மலா கேட்டிருந்தார். "இன்று நான் கோழிக்கறி சமைத்திருக்கிறேன். அதைச் சாப்பிட்டு விட்டு உங்களின் தலைவரின் கோழிக்கறி போல் சுவையானதா என்று கூறுங்கள்" என்று நிர்மலா சங்கரிடம் வேடிக்கையாகக் கூறினார். ஏனென்றால், பிரபாகரனின் கோழிக்கறி பற்றி சீலன் பல தடவைகள் நிர்மலாவிடம் பேசியிருக்கிறார். நிர்மலா, சங்கரின் உணவுக் கோப்பையில் இரு கோழிக்கறித் துண்டுகளைப் பரிமாறியிருந்தார். முதலாவது துண்டினை சங்கர் சுவைக்க ஆரம்பிக்கும்போதே ராணுவத்தின் வருகை தொடர்பான  ரஜனியின் கூக்குரல் அவர்களுக்குக் கேட்டது. 

உடனே சுதாரித்துக்கொண்ட சங்கர், பின்கதவூடாக வெளியேறி மதில் நோக்கி ஓடுகையிலேயே வீட்டின் பின்புறமாக ஓடிவந்த ராணுவக் கொமாண்டோ வீரனின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானார். அவரது வயிற்றுப் பகுதியில் சன்னம் பாய்ந்தது. வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து இரத்தம் ஓடிக்கொண்டிருக்க, அதனை ஒரு கையினால் அழுத்துப் பிடித்துக்கொண்ட சங்கர் ஓடத் தொடங்கினார். சுமார் மூன்று கிலோமிட்டர்கள் வரை ஓடி, தமது மறைவிடம் ஒன்றினுள் அடைக்கலமாகியபின்னர் தனது கைத்துப்பாக்கியை சகபோராளிகளிடம் கொடுத்துவிட்டு மயங்கிச் சரிந்தார் சங்கர். எதிரியிடம் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடாதெனும் உறுதியும், தனது ஆயுதத்தை உயிரைக் கொடுத்தாவது காத்துக்கொள்ள வேண்டும் என்கிற இயக்கத்தின் கொள்கையும் சங்கரை ஆட்கொள்ள கடுமையான இரத்த இழப்பிற்கூடாகவும் அவர் மிகுந்த சிரமங்களைத் தாங்கி தனது சகாக்களிடம் வந்து சேர்ந்திருந்தார்.

சங்கரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. ஆகவே, அவரைப் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்குக் கூட்டிச்சென்று மருத்துவ உதவியினைப் பெற்றுக்கொடுக்கும் சிரமமான பணி மூத்த போராளியான அன்டன் எனப்படும் சிவகுமாருக்குக் கொடுக்கப்பட்டது. அன்டன், சங்கரை தமிழ்நாட்டின் கோடியாக்கரை எனும் போராளிகளுக்கு மிகவும் பரீட்சயமான பகுதிக்கு படகுமூலம் பாதுகாப்பாகக் கொண்டுசென்றார். அங்கு, புலிகளின் மறைவிடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்ட சங்கருக்கு மருத்துவ உதவிகளை மருத்துவர் ஒருவரூடாகப் பெற்றுக்கொடுத்தார். பின்னர், மதுரைக்கு உடனடியாக சங்கரை அழைத்துச் சென்ற அன்டன், மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தார். 

மதுரையில் சங்கரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்தனர். 

புலிகளின் பயிற்சி முகாம்கள் ஒன்றில் அப்போது தங்கியிருந்த பிரபாகரனுக்கு சங்கரின் நிலைபற்றி அறிவிக்கப்பட்டது. உடனடியாக சங்கரைப் பார்க்க வந்தார் அவர். சங்கர் பராமரிக்கப்பட்டு வந்த மருத்துவமனை அறையினுள் பிரபாகரன் நுழையும்போது பேபி சுப்பிரமணியமும் அங்கிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து மிகவும் துல்லியமாக அவர் என்னுடன் பின்னர் பேசியிருக்கிறார். பிரபாகரன் மிகவும் மனவேதனையுடன் காணப்பட்டார். சங்கரின் கைகளை தனது கைகளில் ஏந்திக்கொண்ட பிரபாகரன், அவற்றினை தனது கன்னங்களில் வைத்து அழுத்தினார். பின்னர் சங்கரின் கைகளை மெதுவாக அவரருகில் வைத்துவிட்டு, அவரின் தலைமாட்டில் அமர்ந்துகொண்டு, சங்கரின் தலையினை தனது மடியில் தூக்கி வைத்துக்கொண்டார். சங்கரின் தலைமுடியினை மென்மையாக பிரபாகரன் வருடிக்கொண்டிருக்க, சங்கர் அண்ணாந்து பிரபாகரனைப் பார்த்தார். தனது தலைவர் தன்னைப் பார்க்க வந்திருப்பதை சங்கர் அப்போதுதான் உணர்ந்துகொண்டார். சங்கரின் உதடுகள் "தம்பி, தம்பி, தம்பி" என்று முணுணுக்கத் தொடங்கின. பிரபாகரனுக்கு இயக்கத்தினுள் இருந்த செல்லப்பெயர் "தம்பி". ஆனால், அவரிலும் வயதில் குறைந்தவர்கள் கூட அவரைச் செல்லமாகத் தம்பி என்றே அழைத்தனர். சங்கர் பிரபாகரனைக் காட்டிலும் 6 வருடங்கள் இளையவர்.

  இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொருவர் நெடுமாறன். இச்சம்பவம் தொடர்பான தத்ரூபமான விபரிப்பினை அவர் பல செவ்விகளிலூடாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். அப்படியான ஒரு செவ்வியில், "அவர்கள் ஒருவரையொருவர் பாசத்துடன் பார்த்துக்கொண்டார்கள். அந்தப்பொழுதில் அவர்களின் மனங்களில் எவ்வாறான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்பதை இலகுவில் கணித்துவிடமுடியாதிருந்தது. சங்கரை மிகவும் இரக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த பிரபாகரனின் முகம் கூறிய ஒரே செய்தி, தயவுசெய்து எம்மை விட்டுப் பிரிந்துவிடாதே என்பதாக எனக்குத் தெரிந்தது" என்று அவர் கூறியிருக்கிறார்.

பிரபாகரனின் உடல்மொழி அவர் மிகவும் வருத்தத்துடன் இருந்தார் என்பதைச் சொல்லியது. தனது முதலாவது போராளியின் மரணத்தை காண்பது அவரை மிகவும் வருத்தியிருந்தது. வெறும் 22 வயதே நிரம்பியிருந்த இளைஞர், வாழ்வின் சுகபோகங்களை தேசத்தினதும், இனத்தினதும் மீட்சிக்காகவும் கெளரவத்திற்காகவும் தியாகம்செய்து இன்று உயிரையும் கொடுக்கும் நிலையில் இருப்பதைக் கண்டு பிற்பாகரன் மிகவும் மனமுடைந்து போயிருந்தார். பிரபாகரனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அவரது கன்னங்களின் மேல் ஓடியது. சங்கரின் உயிர்விளக்குச் சிறுகச் சிறுக அணைந்துகொண்டிருந்தது.

Edited by ரஞ்சித்
spelling
  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 சங்கரின் மறைவு

 

கார்த்திகை 20 ஆம் திகதி நிர்மலா நித்தியானந்தனின் வீட்டிற்குச் செல்லும் பொழுதுவரை சங்கர் "ஒரு உண்மையான மனிதனின் கதை" எனும் ரஸ்ஸிய நாவலைப் படித்துக்கொண்டிருந்தார். சரியாக 7 நாட்களின் பின்னர், கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ்த்தேசத்தின் விடுதலைக்காக தனதுயிரை அவர் ஆகுதியாக்கியிருந்தார். இந்த நாளே வீரத்திற்கும், தியாகத்திற்குமான நாளாக நினைவுகூரப்பட்டு வருகிறது. தான் படித்து வந்த நாவலான "ஒரு உண்மையான மனிதனின் கதை" இல் வரும் நாயகனைப் போன்றே சங்கரும் தனதுயிரைத் தமிழ்த்தேசத்திற்காகக் கொடுத்திருந்தார்.

 A Story About A Real Man

ஒரு உண்மையான மனிதனின் கதை - ரஸ்ஸிய நாவல்

 

மதுரையின் இடுகாடு ஒன்றில் சங்கரின் உடல் தீயுடன் சங்கமமானது. சங்கரின் இறுதிக் கிரியைக்குத் தானும் போகவேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். ஆனால், அவரோடு இருந்தவர்கள் அவரைத் தடுத்து விட்டார்கள். பிரபாகரனின் பாதுகாப்பு அவர்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால், கிட்டு, பேபி சுப்பிரமணியம், பொன்னம்மான் ஆகியோர் உட்பட சிலர்  சங்கரின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டனர். நெடுமாறனும் இந்த இறுதிநிகழ்வில் கலந்துகொண்டார். அது ஒரு மிக முக்கியமான நாளாகக் கருதப்பட்டது. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் துடிப்பான இளைஞர் ஒருவரின் உயிரினை முதன்முதலாக இழந்திருந்தது. 

சங்கரின் மரணம் புலிகளால் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த இழப்பினை அறிவிப்பதனூடாக பொலீஸாரும், இராணுவத்தினரும் போராளிகள் மீதான தமது நடவடிக்கைகளை அதிகப்படுத்தலாம் என்று பிரபாகரன் எண்ணினார். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டிருந்த புலிகளின் எண்ணிக்கை அன்றைய காலத்தில் வெறும் 30 மட்டும் தான். 

மேலும், சங்கரின் மரணத்தை அறிவிப்பதனால் தமிழ் மக்களின் மனவுறுதி பாதிக்கப்படும் அதேவேளை புலிகளுடன் இணைந்துகொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கையினையும் பாதிக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், சங்கரின் இழப்பு அவரது தந்தையாரான ஆசிரியர் செல்வச்சந்திரனுக்கு புலிகளால் அறிவிக்கப்பட்டது. ஒரு நாள் இரவு தனது வீட்டிற்கு வந்த இரு "புலிகளின் பொடியள்" சங்கரின் இறப்புப் பற்றி தன்னிடம் அறியத் தந்ததாக அவர் என்னிடம் பின்னர் கூறியிருந்தார். 

சங்கரின் முதலாம் ஆண்டு நிறைவின்போது புலிகள் அவரது மறைவினை யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாக அறிவித்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தின் சுவர்கள் சங்கரின் திரு உருவப்படத்துடன் அஞ்சலிச் செய்தியைக் காவிக்கொண்டிருந்தன. 

சங்கரின் வாழ்க்கை, அவரது திறமைகள், துணிவான செயற்பாடுகள் பற்றிய தகவல்களைக் காவிய துண்டுப்பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தில் மக்களிடையே விநியோகிக்கப்பட்டன. சரத் முனசிங்க என்னுடன் பேசும்போது சங்கரின் மரணம் தொடர்பான விடயங்களை தாம் சில மாதங்களின் பின்னர் அறிந்துகொண்டதாகக் கூறினார். இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு சங்கரின் இறப்பினை முதலாவது தமிழ்ப் போராளியின் மரணம் என்று பதிவுசெய்திருந்தது. 

சங்கர் மரணமடைந்து ஏழு வருடங்களின் பின்னர் அவரது நினைவுநாளினை மாவீரர் நாளாக அறிவித்தார் பிரபாகரன். வன்னிக் காட்டிற்குள் ஒதுக்கப்பட்டு, இந்திய அமைதிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த தனது போராளிகளுக்கு முற்றுகையினை உடைக்கும் மனோதைரியத்தையும், உத்வேகத்தையும் கொடுக்கவும், தனது இயக்கத்திற்கு மேலும் இளைஞர்களை இணைத்துக்கொள்ளவும் ஊக்கப்படுத்த தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த போராளிகளை நினைவுகூருவது அவசியம் என்று அவர் கருதினார். தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பது போன்று, தமிழரின் கலாசாராத்தில் ஊறிப்போயிருந்த, பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த தியாகங்களுக்கெல்லாம் சிகரமான தேசத்திற்காக உயிர்கொடுக்கும் நினைவேந்தலிற்கு மீண்டும் உயிர்கொடுத்தார். தமிழுக்காகவும், தமிழ்த் தேசத்திற்காகவும் உயிர்கொடுத்த வீர மறவர்களைக் கெளரவிக்கும் நடைமுறையான நடுகல் நிறுவி வழிபடும் முறையினை பிரபாகரன் மீளவும் கொண்டுவந்தார். தமிழ்ச் சங்க கால இலக்கியங்களில் மக்களையும், போர்வீரர்களையும் உணர்வெழுச்சியுடன் வைத்திருக்க அக்காலத்தில் நடைமுறையில் இருந்த நடுகல் வழிபாட்டினை பிரபாகரனும் பின்பற்றினார்.

பிரபாகரனின் நடுகல் வழிபாட்டு முறையின் மீள் உருவாக்கம் எதிர்ப்பர்த்ததுபோலவே மக்களிடையே அதீத ஈடுபாட்டினை ஏற்படுத்தியது. மாவீரர்களாகிப்போன போராளிகளின் பெற்றோர், மனைவி, கணவன், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் உணர்வுகளை மாற்றிப்போட்டது. இழந்த தமது உறவுகளுக்காக இரங்குவது மட்டுமே தம்மால் செய்யக்கூடியது எனும் நிலையிலிருந்து, அவ்வீர மறவர்களின் கெளரவத்திலும், பெருமைகளிலும் பங்குகொள்ளும் மனநிலையினை இது உருவாக்கியது. மாவீரராகிப்போன குடும்பங்கள் புலிகள் இயக்கத்திடம் இருந்து விலகிச் செல்வதற்குப் பதிலாக அவர்களை நோக்கி நெருங்கிவர இந்த மாவீரர் நாட்களும், கெளரவித்தல்களும் வழிசமைத்துக் கொடுத்தன. ஆதி தமிழ்க் கலாசாரத்தில் நடைமுறையில் இருந்த மாவீரருக்கான வணக்கத்தினை ஒட்டுமொத்த மக்களின் உணர்வெழுச்சியுடன் மீட்டுவந்து நிறுத்தியது. இந்த மாவீரர் வழிபாட்டின் உச்ச நிகழ்வாக 2000 ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வினைக் குறிப்பிட முடியும். மாவீரர் கெளரவம் தொடர்பான புலிகளின் பிரச்சாரத்தினைக் கேட்டுக்கொண்டிருந்த பல தாய்மார்கள் உணர்வுப் பெருக்கத்தால் ஆட்கொள்ளப்பட்டு, தமது பிள்ளைகளின் நெற்றியில் திலகமிட்டு, நாட்டிற்காகப் போராடும்படி கூறி புலிகளுடன் அனுப்பிவைத்திருந்தார்கள். ஆதித் தமிழ்க் கலாசாரத்தில் மாவீரராகிப் போன தமது கணவன்மாரின் நிகழ்வில் தமது ஆண்பிள்ளையின் நெற்றியில் சந்தனத்தால் வீரத் திலகமிட்டு போர்க்களத்திற்கு அனுப்பிவைக்கும் தாய்மாரின் செயலினை இது ஒத்திருந்தது.

சிங்களவர்களும், தமிழ்க் கலாசாரத்துடன் சம்பந்தப்பட்டிருக்காத இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் மாவீரர்களைக் கெளரவிக்கும் கலாசாரத்தினை விளங்கிக்கொள்ளவோ அல்லது மதிக்கவோ தவறிவிட்டனர். தமிழ்ச் சமூகத்தில் பரவிவந்த ஆரிய இந்துக் கலாசாரம் இந்த மாவீரர் வழிபாட்டு முறையினை சிறுகச் சிறுக மழுங்கடித்து விட்டிருந்தது. ஆனால், தமிழ்க் காலாசாரத்தின் வேரிற்குள் சென்று மீண்டும் மாவீரர் கெளரவிப்பினை பிரபாகரன் மீட்டு வெளியே எடுத்து வந்தார். 

Prabakaran 1989 Prabhakaran

முதலாவது மாவீரர் நாளில் தலைவர் பிரபாகரன் - 1989

1989 ஆம் ஆண்டு, சங்கல் மரணித்த நாளான கார்த்திகை 27 ஆம் திகதியினை மாவீரர் நாளாக அறிவித்தார் பிரபாகரன். முல்லைத்தீவு மாவட்டத்தின் காட்டுப்பகுதியான நித்திகைக்குளத்தில் ராணுவச் சீருடை அணிந்த 600 ஆண் மற்றும் பெண் போராளிகள் அணிவகுத்து நிற்க அதுவரை தாய்நாட்டின் விடுதலைக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் தமதுயிரை ஈந்த 1307 மாவீரகளுக்கான வணக்கம்  செலுத்தப்பட்டது. போரில் காவியமான மாவீரர்களின் திரு உருவப் படங்கள் நடுகற்களில் வீற்றிருக்க, அவர்களின் பாதங்களின் மீது  மலர்கள் தூவப்பட்டு, பிரபாகரன் முதலாவது விளக்கினை ஏற்ற, தொடர்ச்சியாக அனைத்து மாவீரர்களுக்கும் விளக்கேற்றப்பட்டது. ஈகைச் சுடர் ஏற்றல் எனும் மிகவும் இயல்பான இந்த நிகழ்வு இன்று விரிவான, உணர்வுபூர்வமான, ஒட்டுமொத்த மக்களின் உணர்வெழுச்சியுடனான  சடங்காக மாறிப்போனது.  தான் ஆரம்பித்த மாவீரர் வணக்க நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக போராளிகளால் அனுஷ்ட்டிக்கப்பட்டது கண்டு நெகிழ்ந்த பிரபாகரன் தனது முதலாவது மாவீரர் நாள் உரையினை தனது உணர்வுகளின் குவியலாக எடுத்துரைத்தார். 

மிகவும் சிறிய பேச்சாக அமைந்த பிரபாகரனின் முதலாவது மாவீரர் நாள் உரை மாவீரர்களை வணங்கும் நிகழ்வு ஏன் அவசியம் என்கிற விளக்கத்தோடு ஆரம்பித்திருந்தது. "எமது போராட்டத்தில் இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாள். தமிழ் ஈழம் எனும் உயரிய இலட்சியத்தை அடைய தமது இன்னுயிரை அர்ப்பணித்த 1307 மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாளாக இந்த மாவீரர் தினத்தினை நாம் உருவாக்கினோம். இன்றே இதனை முதன்முறையாகச் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். பல நாடுகளில் மரணித்த தமது விடுதலைப் போராளிகளுக்கான கெளரவத்தினை அவர்கள் வழங்கிவருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நாமும் எமது மாவீரர்களை மனதில் நிறுத்தி வணகுவதென்று முடிவெடுத்திருக்கிறோம். எமது இயக்கத்தில் முதலாவது மாவீரரான சங்கரின் நினைவுநாளினை, தாயக விடுதலையில் வித்தாகிப்போன அனைத்து மாவீரகளுக்குமான வணக்க நாளாக இன்றுமுதல் நாம் அனுஷ்ட்டிப்போமாக" என்று கூறினார்.

  

 

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

எனது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு  வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்காகவும், என் இனத்திற்காகவும், என் தேசத்தின் விடுதலைக்காகவும் நீங்கள் எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளுக்காகவும் சாமானியன் எனது நன்றிகள் ஐயா!!!

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உன்னதமான தலைவருக்கு வீரவணக்கங்கள்.......! 

நன்றி ரஞ்சித்.....!

  • Thanks 1
Posted

தலைவர்  மாண்புமிகு பிரபாகரனுக்கு வீரவணக்கம்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கிறேன் . தொடருங்கள் ரஞ்சித்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எம் இனம்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய தானைத்தலைவனுக்கு வீரவணக்கங்கள்! 🙏

நன்றி ரஞ்சித். தொடருங்கள்!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"எமது மக்கள் உயரிய பதவிகளை வகித்தவர்களையும், வசதியான வாழ்க்கையினை வாழ்ந்தவர்களையும் தான் நினைவில் வைத்திருக்கிறார்கள். ஆனால், நாம் தலைவர்களுக்கென்று விசேடமான அந்தஸ்த்து எதுவுமே வழங்கப்படக் கூடாதென்று முடிவெடுத்திருக்கிறோம். இந்தப் புனிதமான போராட்டத்தில் தமதுயிரை அர்ப்பணித்த அனைத்துப் போராளிகளையும் நாம் சமமாகவே நோக்குகிறோம். எமது தாயக விடுதலைப் போராட்டத்தில் மாவீரராகிய அனைத்துப் போராளிகளையும் ஒரே நாளில் நினைவுகூர்வ்தன் மூலம் எமது போராட்டத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் ஆற்றிய அர்ப்பணிப்பிற்காக நாம் அவர்களுக்கு நன்றியினையும் கெளரவத்தினையும் செலுத்த முடியும். அவ்வாறில்லையென்றால், காலப்போக்கில் ஓரிரு போராளிகளின் அர்ப்பணிப்புக்கள் மட்டுமே பேசப்படுவதோடு, மற்றையவர்களின் தியாகங்கள் புறக்கணிக்கப்பட்டு, மறக்கப்பட்டு விடும். தமது வீரர்களையும், வீராங்கனைகளையும் கெளரவிக்கத் தவறும் எந்தத் தேசமும் காட்டுமிராண்டிகளின் தேசமாகிவிடும். மற்றைய நாடுகளைப் போலல்லாமல் எமது தேசம் பெண்களுக்கு மிகுந்த கெளரவத்தினை வழங்கிவருகிறது.  இவ்வகையான கெளரவத்தினை நாம் எமது வீரர்களுக்கு வழங்குவது கிடையாது. ஆனால், நாம் இன்று ஒரு மாற்றத்தினைக் கொண்டுவந்திருக்கிறோம். நாம் எமது மாவீரர்களுக்கான கெளரவத்தினை வழங்கும் முறையினை ஆரம்பித்து வைத்திருக்கிறோம். 

இன்றுவரை நாம் எமது மாவீரர்களுக்கான கெளரவத்தினை வழங்கவில்லை. ஆனால், இன்று அதனை நாம் மாற்றியிருக்கிறோம். இன்று எமது மாவீரர்களுக்கு கெளரவம் செலுத்தும் நாள் ஒன்றினை நாம் உருவாக்கியிருக்கிறோம். இன்று எமது தேசம் உலகின் முன்னால் தலை நிமிர்ந்து நிற்க முடிகின்றதென்றால், அது எமது 1307 மாவீரர்களின் அர்ப்பணிப்பினாலும், தியாகத்தினாலுமே சாத்தியமானது. தமது வாழ்க்கைபற்றிச் சிந்திக்காது, தேசத்தின் விடுதலைபற்றி மட்டுமே சிந்தித்து அவர்கள் போராடியதாலேயே உலகின் மரியாதையினை நாம் பெற முடிந்திருக்கிறது. இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் இந்த மாவீரர் நாளினை நாம் அனுஷ்ட்டிப்போம், இந்த நாள் எமது வாழ்க்கையின் மிக முக்கிய நாளாக அமைய நாம் உறுதியெடுத்துக் கொள்வோம்" 

- தலைவரின் முதலாவது மாவீரர் நாள் உரையிலிருந்து

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted


தன்னையும், தனது அடுத்தலைமுறையையும் அர்பணித்துவிட்டுத் தமிழரது மனமெங்கும் வாழும் வீரத்தலைவன் 'மேதகு' வே.பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்பார்ந்த நட்புடன் றஞ்சித் அவர்களுக்கு மிகச்சிறந்ததொரு செயலைச் செய்துவருகின்றீர்கள். எமது தலைமுறை  அறியாத அரசியல் வரலாற்று நகர்வுகளையும், எமது அடுத்தலைமுறை அறிந்து தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டிய அரசியற் தந்திரோபாயங்களையும் கொண்டதாக இந்தத் வரலாற்று விரிப்புத் திகழ்கிறது. முழுமையடையும்போது இதனை யாழ்க்களம் சார்பாகப் பிரதியாக்கம் செய்து கைகளிற் கிடைக்கச் செய்தால் சிறப்பாக இருக்கும். நிதியை நாமே போட்டுச் செய்துவிடலாம். 

உங்கள் பொன்னான நேரத்துக்கு கரங்களை நன்றியோடு பற்றுகின்றேன்.  தமிழினம் கொண்டாடும் ஒரு வரலாற்று நாயகனின் காலத்தில் தமிழினத்திற்காக எதையுமே செய்யாது ஓடிவந்தோமே என்ற வருத்தமும் மேலெழுந்து வாட்டுகிறது. கருத்துகளைப் பதியாவிடினும் படிக்கின்றோம்.  தொடருங்கள்....  உழைப்பிற்கான பெறுமதியைக் காலம் பதிவுசெய்யும். 
 
நன்றி

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/4/2023 at 08:19, vasee said:

அமிர்தலிங்கம் ஜே ஆரிற்கு ஏற்ப சாதுரியமாக நடந்துள்ளார், இதுவரை காலமும் இவர் தொடர்பாக அறியாமையினால் கொண்டிருந்த தோற்றபாட்டிலிருந்து வித்தியாசமாக உணரமுடிகிறது.

 

On 10/4/2023 at 11:10, ரஞ்சித் said:

அமிர் சில விடயங்களை வேண்டுமென்றே செய்ததாக நான் நம்பவில்லை. இந்திய இலங்கை அதிகாரவர்க்கத்திற்கின் அழுத்தங்களே அவரை தமிழர் விடுதலைப் போராட்டத்திலிருந்து வெளித்தள்ளின என்று நினைக்கிறேன். எமது விடுதலைக்காகப் போராடிய முக்கியமான ஜனநாயகப் போராளிகளில் அவரும் ஒருவர் என்றே படுகிறது. 

உண்மையில் இந்தத் வரலாற்றுத் தொடரைப் படிக்கும்போது திரு அமிர்தலிங்கம் அவர்களது நிலையை அறியமுடிகிறது. இங்குதான் உண்மைகளை அறிந்தவர்கள் அது எதுவாயினும் தயங்காது பதிவிடுவது தெளிவை ஏற்படுத்தும். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாகவச்சேர் காவல்நிலைய தாக்குதல் தொடர்பாக பசீர் காக்கா எழுதிய ஆக்கம் முன்னர் படித்திருப்பேன் என கருதுகிறேன், அதில் உள்ள தகவல் அனைத்தும் மறந்துவிட்டேன், அதில் குறிப்பாக ஒரு விடயம் மட்டும் நினைவில் உள்ளது, காவல்நிலையத்தில் இருந்த தொலைபேசி இணப்பை துண்டிக்க ஒரு கொழுவி ஒன்றில் ஈனைக்கப்பட்ட கயிற்றின் மூலம் முயற்சிப்பார் ஆனால் அவரால் அதனை அறுக்க முடியவில்லை எனவும் (தான் அப்போது ஒல்லியாக இருந்தமையால் முடியவில்லை என நகைசுவையாக குறிப்பிட்டிருந்தார்) வீதியால் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவரின் துணையுடன் பின்னர் அதனை செய்து முடித்தாக  நினைவுள்ளது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தலைவரின் மாவீரர் நாள் உரையின் முக்கியத்துவம்

Prabhakaran – a Pioneer in Military Discipline – Ilankai Tamil Sangam

பிரபாகரன் அன்று ஆற்றிய அசாத்தியமான உரையே மாவீரர் நாள் பேருரையாக பிற்காலத்தில் உருப்பெற்றது. ஆண்டுதோறும் பிரபாகரனினால் வழங்கப்படும் மாவீரர் நாள் உரையின் முக்கியத்துவம் வலுப்பெற்று வந்ததோடு, அண்மைய வருடங்களில் இதன் முக்கியத்துவம் பலமாக உணரப்பட்டது. அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமான நிகழ்வாக இது கருதப்பட்டது. மேலும் மாவீரர் நாள் நிகழ்வுகளும் 1990 ஆம் ஆண்டு இடம்பெற்றதைக் காட்டிலும், இந்தியப் படை தமிழர் தாயகத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அப்பகுதிகள் புலிகள் வசம் வந்தபின்னர் மிகவும் விமரிசையாக இடம்பெறத் தொடங்கின. 1994 ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆறு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தபோதும், 1995 ஆம் ஆண்டு, புலிகள் யாழ்க்குடாவை விட்டு வெளியேறிச் சென்றபின்னர் மூன்று நாட்களாகக் குறைக்கப்பட்டன.

ltte-cemetery.jpg

மாவீரர் துயிலும் இல்லங்கள்

மாவீரர் நாளுடன் தொடர்புடைய நிகழ்வுகள் கார்த்திகை மாத ஆரம்பத்திலேயே தொடங்கிவிடும். கலை, இலக்கியம், விளையாட்டு ஆகிய துறைகளில் கிராம மட்டங்களில் மாவீரர் நாள் தொடர்பான போட்டிகளும், நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வந்தன. இவ்வாறான போட்டிகளில் மாவீரர் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டன. மாவீரர் துயிலும் இல்லங்கள் சுத்தம் செய்யப்பட்டு, வர்ணப் பூச்சுக்களால் அலங்கரிக்கப்பட்டு இறுதிநாள் நிகழ்வுகளுக்காக ஆயத்தப்படுதப்பட்டன. இவ்வாறான முக்கியமான மாவீரர் துயிலும் இல்லங்கள் ஒன்றின் நிகழ்வில் பிரபாகரன் கலந்துகொள்ள, ஏனைய துயிலும் இல்லங்களில் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்த்தர்கள் கலந்துகொள்வார்கள். மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்கள் கைகளில் மலர்த்தட்டுக்களையும், சைவர்கள் அல்லது கிறீஸ்த்தவர்கள் என்பதற்கேற்ப தேங்காய் எண்ணெய் விளக்குகளையோ அல்லது மெழுகுவர்த்திகளையோ ஏந்தி வரிசையாக நிற்பர். மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரதான தியாகச் சுடரினை ஏற்றுவதற்கு ஏதுவாக போராளியொருவரால் மரதன் ஓட்டமுறையில் காவிவரப்படும் சுடரொன்று பிரபாகரனிடத்திலோ அல்லது அந்தந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் நிகழ்வினை நடத்தும் புலிகளின் முக்கியஸ்த்தரிடமோ வழங்கப்படும். தீயாகச் சுடர் சங்கர் இறந்த நேரமான  மாலை 6:04 மணிக்கு பிரபாகரனால் ஏற்றிவைக்கப்படும். இதன் பின்னர் மாவீரர் குடும்பங்கள் தமது மாவீரரின் சமாதியின் முன்னால் தாம் கொண்டுவந்த விளக்கினையோ அல்லது மெழுகுதிரியினையோ வைத்து வணங்குவர். இறுதிச் சுடரேற்றும் நிகழ்விற்கு முன்னர் பிரபாகரன் தனது வருடாந்த மாவீரர் தினை உரையினை நிகழ்த்துவார்.

heroes_day_selvanagar.jpg

மாவீரர் ஒருவருக்காக கண்ணீர்விடும் அவரது குடும்பம் 

 

நித்தியானந்தன் தம்பதிகளின் கைது

வயிற்றில் குண்டடிபட்ட சங்கர் காயத்தை அழுத்துப் பிடித்துக்கொண்டே மூன்று கிலோமீட்டர்தூரம் ஓடிச் சென்று, பாதுகாப்பான இடம் ஒன்றினை அடைந்திருந்தார். அவரைத் துரத்திச் சென்ற ராணுவக் கொமாண்டோக்களால் அவரைப் பிடிக்க முடியவில்லை. சங்கருக்கு அந்த இடம் மிகவும் பரீட்சயமாக இருந்தது. ஒழுங்கைகளும், குச்சொழுங்கைகளும் அவர் அடிக்கடி வலம் வந்த இடங்கள்தான். சங்கர் தப்பிச் சென்றதையடுத்து அவரைப் பிடிக்கும் முயற்சியைக் கைவிட்ட ராணுவத்தினரும் சரத் முனசிங்கவும் நேரே நிர்மலாவின் வீட்டிற்குச் சென்றனர்.

முனசிங்க என்னிடம் பேசும்போது நிர்மலா கோபமாகக் காணப்பட்டதாகக் கூறினார். அவர்களைப் பார்த்து நிர்மலா திட்டியதாகக் கூறினார் அவர். "எவ்வளவு துணிவிருந்தால் எனது வீட்டிற்குள் நுழைவீர்கள்? எனது வீட்டைச் சோதனை செய்ய உங்களுக்கு அனுமதி இருக்கின்றதா?" என்று அவர் ராணுவத்தினரைப் பார்த்துக் கேட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரகாரம் சோதனையிடுவதற்கான அனுமதி எதுவும் தேவையில்லை என்று ராணுவத்தினர் நிர்மலாவிடம் கூறியபோதும், அவர் தொடர்ந்தும் தம்முடம் கோபமாகப் பேசியதாக முனசிங்க கூறினார். "எனது வீட்டினைச் சோதனை செய்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை, நான் ஜனாதிபதியுடன் பேசுகிறேன்" என்று அவர் அவர்களைப் பார்த்துக் கூறினார்.

"அவரின் கூச்சல்களுக்கு மத்தியிலும் நாம் அவரது வீட்டைச் சோதனையிட்டோம். காயங்களுக்குக் கட்டுப்போடும் ஒரு சில துணிகள் மற்றும் ஒரு சோடி ஊன்றுகோல்களைத் தவிர வேறு எதுவும் அங்கு இருக்கவில்லை".

ஊன்று கோல்களைக் காட்டி, "இவற்றினை ஏன் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்?" என்று நிர்மலாவைப் பார்த்துக் கேட்டார் முனசிங்க .

"எமது நாடக ஒத்திகைகளுக்காக இவற்றை நான் பாவிக்கிறேன்" என்று நிர்மலா பதிலளித்தார்.

இராணுவத்தினரைத் தொடர்ந்து நிர்மலாவின் வீட்டிற்கு வந்த பொலீஸாரினாலும் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அவர்கள் இரட்டைப் படுக்கை கொண்ட கட்டிலின் மெத்தையைப் புரட்டிப் போட்டார்கள்.

அதில் பெரிய இரத்தக் கறையொன்றினை அவர்கள் கண்டார்கள்.

"இது எப்படி வந்தது?" என்று முனசிங்க நிர்மலாவைப் பார்த்துக் கேட்டர்.

"எனக்கு கடந்தவாரம் இரத்தப் போக்கு ஏற்பட்டிருந்தது" என்று நிர்மலா பதிலளித்தார். 

"உங்களுக்கு இந்த அளவு இரத்தப் போக்கு ஏற்பட்டிருந்தால் நீங்கள் இன்று உயிருடன் இருக்க மாட்டீர்கள்" என்று பதிலளித்த முனசிங்க அவர்கள் இருவரையும் கைதுசெய்து மேலதிக விசாரணைகளுக்காக குருநகர் இராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்றார்.

கடுமையான சித்திரவதைக் கூடம் என்று யாழ்ப்பாணத்து மக்களால் பேசப்பட்ட குருநகர் முகாமிற்கு போராளிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் இழுத்துச் செல்லப்படும் பல இளைஞர்கள் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்திருந்தார்கள். ஆரம்பத்தில் எதனையும் பேச மறுத்த நித்தியானந்தன் தம்பதிகள் பின்னர் ஒருவாறு பேசத் தொடங்கியதாக முனசிங்க கூறினார். போராளிகள் என்று சந்தேகத்தின்பேரில் இழுத்துச் செல்லப்பட்டுக், கடுமையாகத் தக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பல இளைஞர்கள் இறுதியில் தமக்குத் தெரிந்தவற்றைக் கூறியிருந்தார்கள்.

 

Edited by ரஞ்சித்
spelling
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 12/5/2023 at 14:18, ரஞ்சித் said:

சீலன் பற்றிய தகவல்களை எமக்கு வழங்கியது கத்தோலிக்க மதகுரு ஆபரணம் சிங்கராயரே - கப்டன் முனசிங்க

கத்தோலிக்க மதகுருக்களுக்கெதிரான உறுதியான ஆதாராங்களைப் பெற்றுக்கொண்ட பின்னர், அவர்கள் பணிபுரிந்த ஆலயங்களையும்,  தங்கியிருந்த விடுதிகளையும் சோதனையிடுவதற்கான அனுமதியினை பாதுகாப்பு அமைச்சிடமிருந்து இராணுவத்தினரும் பொலீஸாரும் பெற்றுக்கொண்டனர். பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியும், இராஜாங்க அமைச்சராக வீரப்பிட்டியவும் இத்தேடுதல் நடவடிக்கைகளினால் கத்தோலிக்க மக்களிடையே அதிருப்தி ஏற்படாது இருக்கத் தேவையானவற்றைச் செய்ய எத்தனித்தனர். ஆகவே, இத்தேடுதல் நடவடிக்கைகளுக்கு தகுந்த சூழ்நிலையினை மக்களின் மனங்களில் விதைக்கும் பொறுப்பு லேக் ஹவுஸ் பத்திரிக்கையான டெயிலி நியூஸிடம் கொடுக்கப்பட்டது.

 மேலும், அவர்களைக் கைதுசெய்வதற்கான சூழ்நிலையும் ஒரேவேளையில் உருவாக்கப்பட்டு வந்தது. இதன் முதற்படியாக, குறிப்பிட்ட சில கத்தோலிக்கக் குருக்கள் யாழ்க்குடாநாட்டில் புலிகளின் செயற்பாடுகளுக்கு உத்வேகமான பங்களிப்பினை வழங்கிவருவதாக செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது. இச்செய்தியினைத் தொடர்ந்து இம்மதகுருக்களின் ஆலயங்களையும், விடுதிகளையும் சோதனையிடும் நடவடிக்கைகள் குறித்து பொலீஸாரும், இராணுவத்தினரும் சிந்தித்து வருகிறார்கள் என்றும் செய்தி பரப்பப்பட்டது. இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக பத்திரிக்கையில் வாசகர்கள் கருத்து எனும் பெயரில் அரசின் திட்டமிட்ட பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இவ்வாறான "வாசகர்" கருத்துக்களில் பெரும்பாலானவை அம்மதகுருக்களைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தன. இவ்வாறான ஒரு வாசகர் கடிதத்தில், "சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமே, மதகுருக்கள் உட்பட" என்று எழுதப்பட்டிருந்தது.

தமிழ்க் கத்தோலிக்க மதகுருக்களுக்கெதிரான உணர்வுகளை மக்களிடையே தூண்டிவிட்டபின்னர் அவர்களைக் கைதுசெய்யும் அனுமதியினைப் பாதுகாப்பு அமைச்சு வழங்கியது. ஆனால், கைது நடவடிக்கைகளும், தேடுதல்களும் கத்தோலிக்க மக்களின் உணர்வுகளைப் பாதிக்காத வண்ணம் நிகழ்த்தப்படவேண்டும் என்று பொலீஸாரும் இராணுவத்தினருக்கும் அறிவுருத்தப்பட்டது. இதன்படி, கத்தோலிக்கப் பாதிரியாரான ஆபரணம் சிங்கராயர் அவர்களின் ஆலயமான கரையூரில் அமைந்திருந்த அமல உற்பவம் எனும் ஆலயத்தில் முதலாவதாகச் சோதனையினை நடத்துவதென்றும், இச்சோதனைக்கு கத்தோலிக்க ராணுவ அதிகாரி ஒருவரை பொறுப்பாக நியமிக்கலாம் என்றும் இராணுவத்தால் தீர்மானிக்கப்பட்டது. பொலீஸ் அதிகாரிகள் வட்டத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கத்தோலிக்கராக இருந்தார், அவர் ஒரு உப பொலீஸ் அத்தியட்சகர். ஆரம்பத்தில் அவ்வதிகாரியை சோதனையிடும் குழுவிற்கு தலைமைதாங்குவதைப் பலர் எதிர்த்தபோதும், அவர் தலைமையிலேயே சோதனை இடம்பெற்றது.

 பாதிரியார் சிங்கராயருக்கும் புலிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கம் தம்மிடம் கிடைத்திருப்பதாக இராணுவத்தினர் கூறினர். கார்த்திகை 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட சிங்கராயர் குருநகர் இராணுவ முகாமிற்கு விசாரணைக்காக இழுத்துச் செல்லப்பட்டார். மறுநாள் நெடுந்தீவு புனித் யோவான் ஆலயம் சோதனையிடப்பட்டதுடன் அவ்வாலயத்தின் பங்குத் தந்தையான பாதிரியார் பிலிப் அன்டன் சின்னையா கைதுசெய்யப்பட்டார். விசாரணைக்காக அவரையும் இராணுவம் குருநகர் ராணுவ முகாமிற்கு இழுத்துச் சென்றது.

மதகுருக்களைக் கைதுசெய்த விடயம் மக்களிடையே ஆத்திரத்தினை ஏற்படுத்தவே ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான மாணவர்கள், மதகுருக்கள், கன்னியாஸ்த்திரிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் உண்ணாவிரத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாண ஆயராக இருந்த தியோகுப்பிள்ளை தனது கடுமையான கண்டனத்தை ஜனாதிபதிக்குத் தெரிவித்திருந்தார்.

Bastiampillai_Deogupillai.jpg

 தியோகுப்பிள்ளை

1982 ஆம் ஆண்டு கார்த்திகை 18 ஆம் திகதியளவில் பாதிரியார் சிங்கராயரிடமிருந்து வாக்குமூலத்தினைப் பொலீஸார் முழுதாகப் பெற்றுக்கொண்டனர். சிங்கராயருடன் நீண்டநேரம் முனசிங்க மறுநாள் உரையாடியிருந்தார். அவ்வுரையாடலின்போது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் குறித்தும், கிராமப்புறங்களில் இளைஞர்கள் எதிர்நோக்கும் கஷ்ட்டங்கள் குறித்தும் முனசிங்கவிடம் பேசியிருந்தார் சிங்கராயர். நள்ளிரவு வரை இந்த சம்பாஷணைகள் இடம்பெற்றிருந்தன. 

முக்கியமான தகவல் 

"மறுநாள் காலை என்னுடம் பேசவேண்டும் என்று சிங்கராயர் கூறியிருந்தார். நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் நடுங்கிக்கொண்டிருந்தார். நான் உங்களிடம் ஒரு விடயத்தைக் கூறவேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். நான் அவரை ஆசுவாசப்படுத்தினேன். அவர் கதிரையில் அமர்ந்துகொண்டார். எனது கைகளை இறுகப் பற்றிக்கொண்ட அவர் பேசத் தொடங்கினார். அவரது உடலில் இன்னமும் நடுக்கம் தெரிந்தது".

 "மெதொடிஸ்த்த மதகுருவான ஜயதிலகராஜாவின் சகோதரரான மருத்துவர் ஜயகுலராஜாவே இன்றுவரை சீலனுக்கு மருத்துவ சிக்கிச்சையினை வழங்கிவருகிறார்" என்று அவர் என்னிடம் கூறினார். நான் அவரிடம் அந்த விலாசத்தினைக் கேட்க அவரும் அதனை என்னிடம் கூறினார்" என்று முனசிங்க என்னிடம் கூறினார். 

"அது எனக்குப் போதுமானதாக இருந்தது. இந்த விசாரணைகளில் ஒரு திருப்புமுனையாக சிங்கராயர் வழங்கிய தகவல் அமைந்திருந்தது" என்று முனசிங்க கூறினார். "நான் உடனடியாகவே அச்செழுவில் அமைந்திருந்த மெதொடிஸ்த்த ஆலயத்திற்கு இன்னும் ஒரு அதிகாரியையும், இரு ராணுவ வீரர்களையும் அழைத்துக்கொண்டு சென்றேன். நாங்கள் சிவில் உடையிலேயே இருந்தோம். மதகுரு ஜயதிலகராஜா அங்கிருக்கவில்லை. பின்னர் அங்கிருந்து புத்தூரில் அமைந்திருந்த புனித லூக்கு தேவாலயத்திற்கு நாம் சென்றபோது வைத்தியர் ஜயகுலராஜா  அங்கிருந்தார். அவர் தனது காரினைக் கழுவிக்கொண்டிருந்தார். எம்மைக் கண்டதும் அவர் பதற்றமடைந்தார். "நீங்கள் பொலீஸிலிருந்து வருகிறீர்களா?" என்று எங்களைப் பார்த்துக் கேட்டார். நாங்கள் இராணுவத்தினர் என்று கூறவும், அவரது பயம் இரட்டிப்பானது".

"நான் நேராகவே அவரிடம் கேட்டேன், "நீங்கள் சீலனுக்கு சிகிச்சையளித்து வருகிறீர்களா?"

 "ஆம் என்று ஒத்துக்கொண்ட வைத்தியர் ஜயகுலராஜா, தனது சகோதரனான பாதிரியார்  ஜயதிலகராஜாவினாலேயே  சீலனுக்கு சிகிச்சையளிக்க வேண்டி ஏற்பட்டதாக அவர் கூறினார்".

 "இப்போது சீலன் எங்கே?" என்று முனசிங்க அவரைப் பார்த்துக் கேட்டார். 

"அவர் சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டார்" ன்று வைத்தியர் ஜயகுலராஜா பதிலளித்தார். 

"ஏனைய காயப்பட்டவர்கள்?" என்று முனசிங்க அவரிடம் மீண்டும் கேட்டார். 

"அவர்களையும் இந்தியாவிற்கு சிகிச்சைக்காக அனுப்பி விட்டார்கள், அவர்களின் பெயர்கள் புலேந்திரனும், ரகுவும் ஆகும்" என்று வைத்தியர் பதிலளித்தார். 

"சீலன் இந்தியாவுக்குச் செல்லுமுன் எங்கே தங்கியிருந்தார்" என்று முனசிங்க வைத்தியரிடம் கேட்டார். 

"புலிகளின் அனுதாபிகள் என்று அறியப்பட்ட ஒரு குடும்பத்துடன் அவர் தங்கியிருந்தார்" என்று வைத்தியர் பதிலளித்தார். 

மேலும் நேரத்தை விரயமாக்குவதைத் தவிர்க்க எண்ணிய முனசிங்க இரு சகோதரர்களையும் இழுத்துச் சென்று விசாரிக்க முடிவெடுத்தார்.

தன்னுடன் வந்திருந்த அதிகாரியையும், ஒரு ராணுவ வீரரையும் வைத்தியரின் காரினை ஓட்டிவருமாறு பணித்துவிட்டு, தனது ஜீப்பில் வைத்தியரை ஏற்றிக்கொண்டு அச்செழுவில் அமைந்திருக்கும் மெதொடிஸ்த்த ஆலயத்திற்குச் சென்றார் முனசிங்க. அச்செழுவில் ஆலயத்தின் பின்னால் அமைந்திருந்த மதகுருவின் விடுதிக்குச் சென்று தாம் ராணுவத்திலிருந்து வந்திருப்பதாக முனசிங்க கூறவும் மதகுரு ஜயதிலக ராஜா அதிர்ந்த்து போனார். 

"என்னை எதற்காகச் சந்திக்க வந்தீர்கள்?" என்று பாதிரியார் முனசிங்கவைப் பார்த்துக் கேட்டார். 

"புலிகளுடனான உங்களின் தொடர்புபற்றி விசாரிக்கவே வந்திருக்கிறேன்" என்று முனசிங்க பதிலளித்தார். 

புலிகளுடன் தனக்கு தொடர்புகள் எதுவும் இல்லையென்று பாதிரியார் ஜயதிலகராஜா மறுத்தார். மேலும், காயப்பட்ட மூன்று புலிகளுக்கும் தான் மருத்துவ சிகிச்சையளிக்க உதவியதாக ராணுவத்தினர் கூறிய குற்றச்சட்டையும் அவர் மறுத்தார். இது நடந்துகொண்டிருக்கும்போது மற்றைய ராணுவத்தினருடன் அங்கு வந்துசேர்ந்த அவரது சகோதரரான வைத்தியர் ஜயகுலராஜா, தனது சகோதரனைப் பார்த்து ராணுவத்திடம் உண்மையைக் கூறும்படி அறிவுருத்தினார்.

"நான் அவர்களிடம் எல்லா உண்மைகளையும் கூறிவிட்டேன், நீங்களும் அப்படியே செய்யுங்கள்" என்று தனது சகோதரனுக்கு அறிவுரை கூறினார் வைத்தியர். 

இதன்பின்னர் மதகுரு ஜயதிலகராஜா உண்மையைக் கூறினார். மாத்தையாவையும் இன்னும் சில புலிப்போராளிகளையும் தனக்கு சிலகாலமாகத் தெரிந்திருந்ததாகவும், ஆகவேதான் காயப்பட்ட போராளிகளை மாத்தையா தன்னிடம் அழைத்துவந்தபோது தான் அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒழுங்குகளை தனது சகோதரரூடாக  மேற்கொண்டதாக அவர் கூறினார். மேலும், ரகுவையும் புலேந்திரனையும் சிறிய சிக்கிச்சைகளுக்குப் பின்னர் புலிகளின் முகாமிற்கு தனது சகோதரரான வைத்தியர் அனுப்பிவிட்டதாகவும், சீலனைத் தொடர்ந்தும் சிகிச்சையளித்துப் பராமரிக்க தனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றுடன் வைத்துக்கொண்டதாகவும் கூறினார்.

அதன்பின்னர், சீலனை வைத்துப் பராமரித்துவந்த குடும்பம் பற்றி சகோதரர்களிடம் விசாரித்தார் முனசிங்க. பாதிரியார் ஜயதிலகராஜா அக்குடும்பத்தின் பெயர்களையும் விலாசத்தினையும் முனசிங்கவிடம் கொடுத்தார். அக்குடும்பத்தின் பெயர் நிர்மலா நித்தியானந்தன் என்றும் அவர்கள் நல்லூரில் வசித்துவருவதாகவும் பாதிரியார் கூறினார். பின்னர் அக்குடும்பத்தின் விலாசமான 330, நாவலர் வீதி, நல்லூர் என்பதையும் பாதிரியார் முனசிங்கவிடம் கொடுத்தார். 

உடனடியாக குருநகர் முகாமிற்கு தொலைபேசியூடாக அழைப்புவிடுத்த முனசிங்க, மேலதிகப் படையினரை வருமாறு அழைத்தார். சுமார் 45 நிமிடங்களின் பின்னர் ராணுவ அதிகாரியும், ராணுவக் கொமாண்டோ வீரர்கள் சிலரும் ஜீப் வண்டியில் வந்திறங்கினர். முனசிங்க தன்னுடன் பாதிரியார் ஜயதிலகராஜாவை ஜீப்பில் அழைத்துக்கொண்டு நல்லூரில் அமைந்திருந்த நிர்மலா நித்தியானந்தனின் வீட்டிற்குச் சென்றார். முதலாவது ஜீப் வண்டியில் இரு ராணுவ வீரர்களுக்கு நடுவில் பாதிரியார் அமர்த்தப்பட்டிருந்தார். இரண்டாவது ஜீப் வண்டியில் மேலதிக ராணுவ வீரர்கள் அவர்களைப் பிந்தொடர்ந்து பயணித்தனர். 

"நான் முன்னால் சென்றேன். நாம் நாவலர் வீதியை அடைந்தவுடம் பாதிரியார் ஜெயதிலகராஜா நிர்மலாவின் வீட்டினைக் காட்டினார். நான் ஜீப்பிலிருந்து இறங்கி வீட்டின் கேட்டினைத் திறந்தேன். எனது கொமாண்டோ வீரர்கள் சிரமமின்றி வீட்டினுள் நுழையும்வகையில் இரு கேட்டுக்களையும் நான் அகலத் திறந்துவிட்டேன். வாயிலில் இருந்து தொலைவாகவும், சிறிய வீட்டின் அருகிலுமாக எனது ஜீப் வண்டியை நான் நிறுத்திக்கொண்டேன். பின்னால் வந்த கொமாண்டோ அணியின் வாகனம் வந்துசேர்வதற்கு சில நேரம் எடுத்தது. அவ்வீட்டினை கொமாண்டோக்கள் சுற்றிவளைத்துக்கொண்டனர். ஒரு வீரர் சிறிய வீட்டின் பின்கதவு நோக்கி ஓடிச்சென்றார். கையில் துப்பாக்கியை ஏந்தியபடி நான் அவரின் பின்னால் விரைந்தேன். சிறிய வீட்டின் பின்கதவினூடாக ஒருவர் தப்பியோடுவதற்கு எத்தனிப்பதை நான் கண்டேன். என்னுடன் நின்ற கொமாண்டோ வீரர் தான் வைத்திருந்த MP5A3 துப்பாக்கியால் தப்பிச்செல்ல முயன்ற நபர் மீது சுட்டார். ஓரிரு வேட்டுக்கள் அந்தநபர் மீது பட்டிருக்கவேண்டும், ஆனாலும் அவர் தப்பிவிட்டார்" என்று முனசிங்க என்னிடம் கூறினார்.

Schweiz Suisse Swiss Army - MP5 A5.jpg

 MP5A3 - தானியங்கித் துப்பாக்கி

குறிப்பு;

கரையூர் என்பதும் குருநகர் என்பதும் ஒரே ஊரையே குறிக்கும். 

அமலோற்பவம் என்பது கத்தோலிக்க ஆலயம் அல்ல. அது கத்தோலிக்க மதகுருக்கள், குறிப்பாக, வயது முதிர்ந்த-ஓய்வுபெற்ற கத்தோலிக்க  குருக்கள் தங்கியிருக்கும் இடம்.

அதன்  அமைவிடம், சுவாமியார் வீதி, கொழும்புத்துறை. தற்போது இவ்விடம் வளன்புரம் என அழைக்கப்படுகிறது. 

 

Edited by இணையவன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழ்ப் போராளி அமைப்புக்களை ஒன்றுபடுத்த முயன்ற அருளர் என்கின்ற அருட்பிரகாசம்

யாழ்ப்பாணத்தில் பொலீஸார் மீதும் இராணுவத்தினர் மீதும் புலிகள் தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தத் தொடங்கியிருந்த அதே நேரம் போராளி அமைப்புக்களை ஒரு அணியாக சேர்க்கும் முயற்சிகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஆரம்பத்தில் பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே இருந்த பிணக்கினைச் சரிசெய்ய அமிர்தலிங்கம் மற்றும் பெருஞ்சித்திரனார் ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் 1982 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் அருளரால் மேலும் விரிவாக்கப்பட்டன.

See the source image

. ஆர். அருட்பிரகாசம்

"தமிழரின் பூர்வீகத் தாயகம்" எனும் நூலினை எழுதிய அருளரிடம் எனக்கு பேசும் வாய்ப்புக் கிடைத்திருந்தது. அவரது இந்த நூலினை சரிபார்ப்பதிலும் அவர் பின்னாட்களில் எழுதிய நூலான "பொருளாதாரச் சுரண்டல்" எனும் நூலின் ஆக்கத்திலும் நான் அவருக்கு உதவியிருந்தேன். "இந்த நூல்களை எதற்காக எழுதினீர்கள்?" என்று அவரைக் கேட்டேன். "எல்லாம் வயிற்றுப் பசிக்காகத்தான்" என்று சிரித்துக்கொண்டே அவர் கூறினார். "நாம் வெறும் வயிற்றுடன் தூங்கிய நாட்களும் இருந்தன " என்று அவர் என்னிடம் கூறினார்.

Image result for Traditional Homelands of the Tamils Arudpragasam

"அப்படியான ஒரு இரவிலேயே நாம் அனைவரும் ஒன்றாக இயங்குவது குறித்துச் சிந்தித்தேன். அப்படி ஒன்றாவதன் மூலம் உமா கிளிநொச்சி வங்கியில் கொள்ளையடித்த பெருந்தொகைப் பணத்தினை எமக்குள் பங்கிட்டிருக்க முடியும் என்று நினைத்தேன்" என்று அவர் கூறினார்.

"உமா அன்று தான் கொள்ளையிட்ட பணத்தினை வேறு எந்த போராளி அமைப்புடனும் பகிர்ந்து கொண்டாரா?" என்று நான் அருளரைக் கேட்டேன்.

"இல்லை, நான் அதுபற்றிப் பேசும்போதெல்லாம் எனது பேச்சை அவர் தட்டிக் கழித்து விட்டார்" என்று அவர் கூறினார்.

ஆனால், போராளிகளை ஒன்றிணைக்கும் தனது முயற்சிபற்றி அருளர் சிறிதும் கவலைப்படவில்லை. பொலீஸ் அதிகாரி பஸ்டியாம்பிள்ளையின் கொலை மற்றும் 1978 ஆம் ஆண்டு கண்ணாடிப் பண்ணை மீதான பொலீஸாரின் தேடுதல்கள் ஆகியவற்றின் பின்னர் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றிருந்த அருளர், போராளி அமைப்புக்களிடையேயான ஒற்றுமையின் அவசியத்தை நன்கு உணர்ந்தே இருந்தார்.

தான் தமிழ்நாட்டில் தங்கியிருந்த நாட்களில் அங்கு வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர்கள் மற்றும் தேசியத்திற்கு ஆதரவான தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்று அனைவருமே தன்னிடம் முன்வைத்த ஒரே கேள்வி, "ஏன் உங்களால் ஒன்றாகச் செயற்பட முடியாமல் இருக்கிறது?" என்பதுதான் என்று கூறிய  அருளர், அதற்கான பதில் தன்னிடம் இருக்கவில்லை என்றும் கூறுகிறார்.

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுரையின் நாரந்தனைப் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட அருளர் 1949 ஆண்டு பிறந்தவர். அவரது தகப்பனார் அருளப்பு ஆசிரியராகக் கடமையாற்றி வந்ததுடன் தந்தை செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சியிலும் தீவிரமாகச் செயற்பட்டு வந்தவர். 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற காலிமுகத்திடல் சத்தியாக் கிரகத்திலும் தந்தை செல்வாவுடன் சேர்ந்து பங்கெடுத்தவர். காலிமுகத்திடல் போராட்டம் சிங்களக் காடையர்களால் அடித்துக் கலைக்கப்பட்ட பின்னர் முறிந்த கையுடன் வீடுவந்த தனது தகப்பனார், "எனது மொழிக்குச் சமாமான அந்தஸ்த்துக் கோரி கால்களை மடித்து தரையில் இருந்து கடவுளைப் பார்த்து வேண்டியதற்காக எனக்குத் தரப்பட்ட தண்டனை இது" என்று தன்னிடம் கூறியதாக அருளர் கூறினார். சில வருடங்களுக்குப் பின்னர், 1964 ஆம் ஆண்டு வன்னிக்கு இடம்பெயர்ந்து சென்ற அருளரின் தந்தையார், தமிழர் தாயகத்தின் மீது அடாத்தாக மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கும் நோக்கில் சமஷ்ட்டிக் கட்சியினரால் எல்லையோரக் கிராமங்களில் அமைக்கப்பட்ட கண்ணாடிப் பண்ணை எனப்படும் கிராமத்தில் குடியேறினார்.

 

See the source image

காலிமுகத்திடல் சத்தியாக் கிரகம்

லெபனானில் தனது பயிற்சியை முடித்துக்கொண்டு திருச்சியூடாக பாலாலி வருவதற்காக திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்தவேளை அருளருக்கு அவசரச் செய்தியொன்று வந்திருந்தது. அதாவது, பலாலியில் அருளர் கைதுசெய்யப்படப் போகிறார் என்பதும், அவரது தகப்பனாரின் கண்ணாடிப் பண்ணை மீது பொலீஸாரின் அடாவடிகளும் தேடுதல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பதுமே அச்செய்தி. ஆகவே அவர் சென்னைக்குச் சென்று அங்கேயே தங்கிவிடத் தீர்மானித்தார். லெபனானின் பெய்ரூட் விமான நிலையத்திலும் அவர் இரு வாரங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. குண்டுகளைத் தயாரிக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த அருளர், தான் இலங்கை மீளும்போது தன்னுடன் குண்டுகளைத் தயாரிக்கும் பொருட்களையும் இரகசியமாக தனது பயணப் பையில் கொண்டுவர முயன்றிருந்தார். பெய்ரூட் விமான நிலையத்தில் இவற்றினைக் கண்டுகொண்ட சுங்க அதிகாரிகள் அருளரைக் கைதுசெய்திருந்தனர். ஆனால், லெபனானில் இயங்கிவந்த செல்வாக்குள்ள  பலஸ்த்தீன ஆயுதக் குழுவான அல் பத்தா அமைப்பின் போராளி ஒருவர், அருளரைத் தனக்குத் தெரியும் என்றும், அவர் ஒரு இயந்திரவியலாளர் என்றும், கற்களை வெடிக்கவைப்பதற்காகவே குண்டு தயாரிக்கும் பொருட்களைத் தன்னுடன் கொண்டு வந்தார் என்றும் சுங்க அதிகாரிகளிடம் பேசி நம்பவைத்து அருளரை விடுவித்திருந்தார்.

Fatah logo.png

Al-Fatah Group

"அது ஒரு கடிணமான வேலை" என்று போராளி அமைப்புக்களை ஒன்றாக்க தான் முயன்றது குறித்துப் பேசும்போது அருளர் கூறினார். 1982 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த அமைப்புக்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்திருந்தது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் ஈழப் புரட்சிகர மாணவர் அமைப்பு ஆகியவையே அந்த ஐந்து அமைப்புக்களும் ஆகும். இந்த அமைப்புக்களின் தலைவர்களிடையே பகைமைகள் காணப்பட்டபோதிலும், பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே இருந்தது போன்று தீவிரமானவையாக அவை இருக்கவில்லை. பி ஆர் எல் எப் அமைப்பின் தலைவரான பத்மநாபாவுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையிலும் பிணக்குகள் இருந்தன. அமைப்புக்களின் தலைவர்களுக்கிடையேயும், போராளிகளுக்கிடையேயும் சூழ்ச்சிகளும் காலை வாரிவிடும் செயற்பாடுகளும் அப்போது சர்வசாதாராணமாகவே நடைபெற்று வந்திருந்தன.

போராளி அமைப்புக்களுக்கிடையிலான இந்த பூசல்கள் சிலவேளைகளில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களால் ஆதரிக்கப்பட்டதுடன், சில சமயங்களில் இந்தப பூசல்கள் ஆழமாவதற்குக் காரணமாகவும் அவர்களது நடவடிக்கைகள் அமைந்திருந்தன. பழ நெடுமாறனின் தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் மற்றும் கே வீரமணியின் திராவிட கழகம் ஆகிய அரசியற் கட்சிகள் புலிகளுக்கு ஆதரவளித்து வந்தன. டெலோ அமைப்பின் தலைவர் தனது இயக்கத்தைனை மு கருநாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கி இழுத்துச் சென்றிருந்தார். புளொட் அமைப்பிற்கு பெருஞ்சித்திரனாரின் தனித் தமிழ் இயக்கமும், ரஸ்ஸியச் சார்புக் கம்மியூனிஸ்ட் கட்சியும் ஆதரவு வழங்க, சீனச் சார்பு இந்தியக் கம்மியூனிஸ்ட் கட்சி பி ஆர் எல் எப்  அமைப்பிற்கு ஆதரவு வழங்கி வந்தது.

 தமிழ் போராளி அமைப்புக்களில் ஈரோஸ் அமைப்பு மாத்திரமே தமிழ்நாட்டு அரசியற் கட்சிகள் எவற்றுடனும் தொடர்புகளைப் பேணாது தனித்துச் செயற்பட்டு வந்தது.

தமது அரசியல்த் தத்துவார்த்த ரீதியிலும் தமிழ்ப் போராளி அமைப்புக்கள் வேறுபட்டுக் காணப்பட்டன. எல்லா அமைப்புக்களுமே மார்க்ஸிஸம், சோஷலிஸம் என்கிற அடிப்படையில் தமது அரசியலை வகுத்திருந்த போதிலும் அவற்றுக்கான முக்கியத்துவத்தை ஒவ்வொரு அமைப்பும் வேறுபட்ட அளவிலேயே வழங்கி வந்தன. புலிகளைப் பொறுத்தவரையில் மார்க்ஸிஸம் என்பது மேலெழுந்தவாரியாக மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. புலிகளைப் பொறுத்தவரையில் சாதீய வேறுபாடுகளைக் களைவது, சீதனக் கொடுமைகளைக் களைவது உட்பட சமூகத்தில் காணப்பட்ட கொடுமையான நடைமுறைகளை அழிப்பது என்பதே பிரதானமான சமூகம் சார்ந்த செயற்பாடாகக் காணப்பட்டது. ஆனால், பி ஆர் எல் எப் அமைப்பானது அடிப்படையில் மார்க்ஸிஸ அமைப்பாகச் செயற்பட்டு வந்ததோடு சமூகத்தின் பல்வேறுபட்ட மக்கள் பிரிவுகளான பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் ஆகியோரை போராட்டத்திற்காகத் திரட்டும் நோக்கத்தினைக் கொண்டிருந்தது. 

"இந்தப் பிரச்சினை பற்றி நான் ஆராய்ந்தபோதே அதன் ஆழம் குறித்து அறிந்துகொண்டேன்" என்று அருளர் என்னிடம் கூறினார். ஒவ்வொரு அமைப்பினதும் தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை இவ்வமைப்புக்கள் ஒவ்வொன்றையும் எப்படி ஒரு குடையின் கீழ் கொண்டுவருவது என்பதுபற்றிச் சிந்திக்கத் தொடங்கினோம் என்று அருளர் கூறினார். "எம்மைப்பொறுத்தவரை பாலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் செயல்முறை சிறந்ததாகத் தெரிந்தது" என்றும் அவர் கூறினார்.

ஆகவே பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தினை ஒத்த திட்டத்தினை முன்மொழிந்த அருளர், அதற்கு ஈழம் விடுதலைக் கமிட்டி என்று பெயரிட்டார். இந்த அமைப்பு ஐந்து கமிட்டிகளின் தலைவர்களை உள்ளடக்கிய உயர் பீடத்தைக் கொண்டிருக்கும்.

"எனது திட்டத்தினை அனைத்து போராளி அமைப்புக்களும் ஏற்றுக்கொண்டது எனக்கு மகிழ்வினைத் தந்திருந்தது" என்று அருளர் கூறினார்.

ஜெயவர்த்தனவின் அரச பயங்கரவாதத்திற்கெதிராகச் செயற்படுவதற்கு போராளி அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணையவேண்டும் என்று இலங்கையிலும், வெளிநாடுகளில் இருந்தும் கல்விமான்கள், ஆதரவாளர்கள், முக்கியஸ்த்தர்கள் ஆகியோரிடமிருந்து தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த அழுத்தங்களையடுத்து அருளரின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதைத் தவிர வேறு தெரிவுகள் போராளித் தலைவர்களுக்கு அப்போது இருக்கவில்லை.

பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கம் ராணுவப் பிரிவிற்குப் பொறுப்பாகவும், உமா மகேஸ்வரன் தலைமையிலான புளொட் அமைப்பு அரசியல்ப் பிரிவிற்குப் பொறுப்பாகவும், பாலகுமாரன் தலைமையிலான ஈரோஸ் அமைப்பு பொருளாதார துறைக்குப் பொறுப்பாகவும், சிறி சபாரட்ணம் தலைமையிலான டெலோ அமைப்பு வெளிவிவகாரத் தொடர்புகளுக்குப் பொறுப்பாகவும், பத்மநாபா தலைமையிலான பி ஆர் எல் எப் அமைப்பு உள்நாட்டுப் பாதுகாப்புத்துறைக்குப் பொறுப்பாகவும் இருக்கும் என்று கூறப்பட்டது.

ஜெயவர்த்தனாவுடம் சேர்ந்தியங்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை ஓரங்கட்டுவது தொடர்பாக போராளி அமைப்புக்களால் எடுக்கப்பட்ட தீர்மானம் பற்றியும் அருளர் என்னுடன் பேசினார் .

"1983 ஆம் ஆன்டு இடைத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்குப் போட்டியாக சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் நாம் அவர்களை ஓரங்கட்டியிருக்க முடியும்.  சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவதாக ஜெயவர்த்தன அறிவித்தபோது அது எமக்குச் சாதகமாகவே தெரிந்தது" என்று அருளர் கூறினார்.

அருளரால் முன்மொழியப்பட்ட இணைந்த போராளிகள் அமைப்பு, ஜெயவர்த்தனவின் அரசாங்கம், முன்னணியுடன் பேசுவதைத் தவிர்த்து  இனிமேல் தம்முடனேயே நேரடியாகப் பேச வேண்டும் என்றும் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியது. 1983 ஆம் ஆண்டு பங்குனியில் இந்த இணைந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், தமிழர்களின் பிரச்சினைகளைக்குத் தீர்வான ஈழத்திற்கு மாற்றீடான தீர்வொன்றினை ஜெயவர்த்தனவின் அரசாங்கம் முன்வைக்குமிடத்து அதனைச் சாதகமான முறையில் பரிசீலிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகளுக்கான நடவடிக்கைகளை ஜெயவர்த்தன அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டிருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை ஓரங்கட்டும் தமது திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த முயற்சி போராளி அமைப்புக்களின் கூட்டினால் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக அருளர் மேலும் கூறினார்.

ஆனால், போராளி அமைப்புக்களின் கூட்டினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையினை ஜெயவர்த்தனவும் அமிர்தலிங்கமும் முற்றாக நிராகரித்திருந்தனர். ஜெயாரைப் பொறுத்தவரை அமிர்தலிங்கத்துடனான தனது தொடர்பினை அப்போதுதான் மீளவும் புதுப்பித்திருந்தார். அமிர்தலிங்கமோ மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போயிருந்ததன் மூலம் மக்களின் உணர்வுகளையோ போராளிகளின் மனோநிலையினையோ சரியாகக் கணிப்பிடத் தவறியிருந்தார்.

 

10 hours ago, Kapithan said:

குறிப்பு;

கரையூர் என்பதும் குருநகர் என்பதும் ஒரே ஊரையே குறிக்கும். 

அமலோற்பவம் என்பது கத்தோலிக்க ஆலயம் அல்ல. அது கத்தோலிக்க மதகுருக்கள், குறிப்பாக, வயது முதிர்ந்த-ஓய்வுபெற்ற கத்தோலிக்க  குருக்கள் தங்கியிருக்கும் இடம்.

அதன்  அமைவிடம், சுவாமியார் வீதி, கொழும்புத்துறை. தற்போது இவ்விடம் வளன்புரம் என அழைக்கப்படுகிறது. 

 

இது திரு சபாரட்ணம் குறிப்பிட்ட விடயங்கள். எனது தரவுகள் இல்லை. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
 

Edited by ரஞ்சித்
spelling
  • Thanks 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - இப்படிக்கு  BBC  🤣 The Guardian  பத்திரிகைச் செய்தி - 2012 ல்  Syrian rebels accused of war crimes Human Rights Watch says it has documented more than a dozen summary executions of prisoners Ian Black, Middle East editor Mon 17 Sep 2012 13.22 BST Opposition groups in Syria have been accused of committing war crimes including torture and the summary execution of prisoners, and the UN has been warned of a growing number of human rights violations and the presence of foreign Islamist fighters ranged against the regime of Bashar al-Assad. Human Rights Watch said it had documented more than a dozen executions by rebels in the northern provinces of Idlib and Aleppo and the coastal region of Latakia. Three opposition leaders who were confronted with evidence of extrajudicial killings said the victims had deserved to die, HRW reported. https://amp.theguardian.com/world/2012/sep/17/syrian-rebels-accused-war-crimes
    • 15 DEC, 2024 | 11:12 AM   யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கரவெட்டி - தில்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.   காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை (14) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இளைஞனுக்கு எலிக்காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் காணப்பட்டதாகவும், இளைஞனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், பரிசோதனை முடிவிலேயே எலிக்காய்ச்சலா என்பதனை உறுதிப்படுத்த முடியும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.  கடந்த சில தினங்களில் காய்ச்சல் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் முல்லைத்தீவை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று உயிரிழந்த இளைஞனுடன் உயிரிழப்பு 8ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை உயிரிழந்த மூவருக்கு எலிக்காய்ச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  அதேவேளை யாழில் சுமார் 70 பேர் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201311
    • 15 DEC, 2024 | 09:41 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயறபாடுகளை விரிவுப்படுத்துவது குறித்து சீனா ஆர்வம் செலுத்தியுள்ளது. குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான இணக்கப்பாட்டை கடந்த அரசாங்கத்துடன் எட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஹம்பாந்தோட்டையில் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பாரிய முதலீட்டில் நிர்மாணிக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.  தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தை ஹம்பாந்தோட்டையில் உருவாக்கி இந்த பிராந்தியத்தில் எண்ணெய் ஆதிக்கத்தை மாற்றுவதற்கான   திட்டமாகவே இது உள்ளது. மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது  துறைமுக நகர் குறித்தும் ஆலோசிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. குறிப்பாக துறைமுக நகர் அபிவிருத்தி நடவடிக்கைகளை விரைவாக துரிதப்படுத்த சீனா  தீர்மானித்துள்ளது. மேலும் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் மூலோபாய ஒத்துழைப்புகளை முன்னிலைப்படுத்தி சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கான விசேட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் பிரகாரம் பல சீன கப்பல்கள் இலங்கைக்கு வந்தன. இருப்பினும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் ஏற்பட்ட இராஜதந்திர  நெருக்கடியால் சீனக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைவது ஒரு வருட காலத்திற்கு நிறுத்தப்பட்டது. அந்த  கால எல்லை எதிர்வரும் ஜனவரி  மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதன்படி ஜனவரி 15 ஆம் திகதிக்கு பின்னர் சீன கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய முடியும். ஆனால் சீன கப்பல்களுக்கு எத்தகைய அனுமதியை அரசாங்கம் கொடுக்கும் குறித்து உறுதியான நிலைப்பாடு இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை. மறுபுறம் இலங்கையை மையப்படுத்திய இந்திய - சீன இராஜதந்திர அழுத்தங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அரசாங்கத்தின் விசேட குழு ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201301
    • மஹிந்தவின் பாதுகாப்புக்காக மாத்திரம் 326 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக தகவல்! 14 DEC, 2024 | 05:37 PM (எம்.வை.எம்.சியாம்) முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக வருடமொன்றுக்கு 1,100 மில்லியன் ரூபாவும் அதில் 326 மில்லியன் ரூபா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக மாத்திரம் செலவிடப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் செலவினத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் 116 பேர் பொலிஸ் கடமைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  மேலும் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 60ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகரிப்பதா அல்லது குறைப்பதா என்பது தொடர்பில் மீள ஆராயப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்துக்கு அமைய முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.  இந்த குழுவினால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பில் ஆராயப்பட்டது.  இதன்போது முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடமொன்றுக்கு 1100 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரம் அதில் வருடமொன்றுக்கு 326 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செலவினத்தை கட்டுப்படுத்தும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 60ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள  ஆயுதம் ஏந்திய படை தொடர்ந்தும் கடமையில் இருக்கும் எனவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகரிப்பதா அல்லது குறைப்பதா என்பது தொடர்பில் மீள ஆராயப்படும் எனவும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். மேலும் பொலிஸ் சேவையில் 24 ஆயிரம் பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இதற்கு முன்னர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவுகளில் கடமையாற்றிய 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் பொலிஸ் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். அத்துடன் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களது பாதுகாப்பு நிமித்தம் கடமைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீள பெறப்படவில்லை எனவும் அதனையும் பரிசீலனை செய்து குறைப்பதன் ஊடாக குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட இதர பொலிஸ் கடமைகளுக்காக அவர்களை  ஈடுபடுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/201275
    • பட மூலாதாரம்,DCP, WHITEFIELD படக்குறிப்பு, ஹரியாணா மாநிலம் குருகிராமில் அதுல் சுபாஷின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லா சதீஷ் பதவி, பிபிசி செய்தியாளர் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். பெங்களூருவில் பொறியாளர் அதுல் சுபாஷின் தற்கொலை வழக்கில் அவரது மனைவி நிகிதா சிங்கானியாவை பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளனர். மேலும் நிகிதாவின் தாய் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரையும் காவல்துறை கைது செய்துள்ளது. "ஹரியானா மாநிலம் குருகிராமில் நிகிதா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தாயும் சகோதரரும் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்", என்று பெங்களூரு ஒயிட்ஃபீல்டு துணை போலீஸ் கமிஷனர் சிவகுமார் பிபிசி ஹிந்தியிடம் கூறியுள்ளார். "அவர்கள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்", என்றும் அவர் கூறினார். அதுல் சுபாஷ் இறப்பதற்கு முன், 24 பக்க தற்கொலை கடிதத்தை எழுதி வைத்துள்ளார். மேலும் சுமார் ஒரு மணி நேர வீடியோ பதிவையும் செய்துள்ளார். அதில், தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியிருந்தார். என்ன நடந்தது? "வழக்கு முடியும் வரை எனது சாம்பலைக் கரைக்க வேண்டாம். எனக்கு நீதி கிடைக்காவிட்டால், எனது சாம்பலை நீதிமன்றத்திற்கு அருகே உள்ள குப்பைக் கிடங்கில் எறிந்துவிடுங்கள்.'' பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தனது தற்கொலை கடிதத்தில் எழுதிய வரிகள் இவை. மனைவி, மனைவியின் குடும்பத்தினர் மற்றும் மாஜிஸ்திரேட் ஆகியோரின் தொல்லையாலேயே, தான் தற்கொலை செய்து கொள்வதாக அதுல் எழுதிய கடிதம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுல் சுபாஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவில் ஆண்கள் மீதான சட்டப்பூர்வ படுகொலை நடைபெறுகிறது" என்று குறிப்பிட்டு ஒரு மணிநேரம் 20 நிமிடம் நீளம் கொண்ட ஒரு வீடியோவையும், "இந்த ஏடிஎம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது" என்று தலைப்பு வைக்கப்பட்ட 24 பக்க தற்கொலை கடிதத்தையும் வெளியிட்டு, தற்கொலை செய்துகொண்டார். பட மூலாதாரம்,ATULSUBASH/X படக்குறிப்பு, தனது தற்கொலைக்கு முன்பாக, அதுல் சுபாஷ் ஒரு மணிநேரம் 20 நிமிட நீளம் கொண்ட வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். நகரின் மையப்பகுதியின் அடித்தளத்தில் சிறை, கண்ணி வெடிகள் - சிரியா உளவு அமைப்பின் ரகசிய இடம் எப்படி இருக்கும்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சாவர்க்கர், ஏகலைவன் பற்றி ராகுல் காந்தி பேசியது என்ன? நேரு, இந்திராவை குறிப்பிட்டு மோதி விமர்சனம்14 டிசம்பர் 2024 'நீதி கிடைக்க வேண்டும் (Justice is Due)' என்று ஆங்கிலத்தில் எழுதிவிட்டு அதுல் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு அடுத்ததாக இறக்கும் முன் செய்ய வேண்டிய காரியங்களின் சரிபார்ப்புப் பட்டியலை அலமாரியில் ஒட்டி, அனைத்தையும் செய்ததைப் போல் டிக் செய்துள்ளார். அதுலின் சகோதரர் விகாஸ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு மாரத்தஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்ற எண் 0682இன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், அதுலின் மனைவி நிகிதா சிங்கானியா, அத்தை நிஷா சிங்கானியா, மைத்துனர் அனுராக் சிங்கானியா, மாமா சுஷில் சிங்கானியா ஆகியோரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள ஜான்பூர் முதன்மை குடும்பநல நீதிமன்ற மாஜிஸ்திரேட்டின் பெயரை தனது தற்கொலைக் கடிதத்தில் அதுல் குறிப்பிட்டு இருந்தாலும், விகாஸ் அந்த மாஜிஸ்திரேட்டின் பெயரை புகாரிலோ அல்லது முதல் தகவல் அறிக்கையிலோ குறிப்பிடவில்லை. அந்தப் புகாரில், டிசம்பர் 9ஆம் தேதி அதிகாலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததாக அதுலின் சகோதரர் எழுதியுள்ளார். கடிதத்தில் என்ன இருக்கிறது? அதுல் எழுதிய 24 பக்க கடிதத்தில் சில தகவல்கள், கடந்த கால வழக்குகளின் விவரங்கள், வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளின் ஸ்க்ரீன்ஷாட்கள் மற்றும் வேறு சில புகைப்படங்கள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் 'நீதி கிடைக்க வேண்டும்' என்ற பெரிய தலைப்பு உள்ளது. தனது பணத்தை எடுத்துக்கொண்டு அதே பணத்தில் தனது குடும்பத்தினருக்கு எதிராக போராட அனுமதிக்க மாட்டேன் என்றும், நீதிமன்றத்தில் லஞ்சம் கேட்டதாகவும், ஆனால் ஊழல் செய்ய விரும்பவில்லை என்றும் கடிதத்தில் எழுதியுள்ளார். தனது குழந்தையை ஆயுதமாகப் பயன்படுத்தி, பராமரிப்புப் பணம் என்ற பெயரில் பணம் திருடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தென் மாவட்டங்களில் வெள்ளம்: எத்தனை நாட்களுக்கு மழை தொடரும்?13 டிசம்பர் 2024 சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் தமிழக வீரர்கள்: இந்தியாவின் செஸ் மையமாக தமிழ்நாடு உருவானது எப்படி?14 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுல் கடிதத்தில் கூறியுள்ள மற்ற விஷயங்கள் என்ன? அதுல் மீது அவரது மனைவி தாக்கல் செய்த 6 வழக்குகளின் விவரம், விரைவு விசாரணைக்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்கள், கூடுதல் பணத்திற்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு என மொத்தம் 9 மனுக்கள். இந்தக் கடிதத்தில் அவரது மனைவி இரண்டு முறை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதாக சில உரையாடல்கள் உள்ளன. அவர்களின் உரையாடல்கள் அனைத்தும் இந்தியில் விரிவாக எழுதப்பட்டுள்ளன. பணம் கேட்டதாக நீதிமன்ற ஊழியர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆவணத்தில் அவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் கோரியதாகக் கூறப்படும் குறிப்பிட்ட தொகைகள் உள்ளன. ஜான்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த கேள்விகள், தீர்ப்பில் உள்ள சில அம்சங்கள் மீதான தனது ஆட்சேபனைகளை விரிவாக எழுதியுள்ளார். இந்தப் பிரிவில் மொத்தம் 17 விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பின்பற்றப்படவில்லை, பராமரிப்புத் தொகையை முறையாக நிர்ணயம் செய்யவில்லை, நீதிபதி ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டார் எனப் பல குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், பிபிசியால் இந்த விஷயங்களை சுயாதீனமாகச் சரிபார்க்க இயலவில்லை. அமேசானின் 'கொதிக்கும் நதி': மனித குலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக ஆய்வாளர்கள் கருதுவது ஏன்?14 டிசம்பர் 2024 அமெரிக்காவில் ரூ.237 கோடிக்கு ஏலம் போன ஒரு ஜோடி காலணி - அதில் என்ன சிறப்பு?9 டிசம்பர் 2024 அதுலின் கோரிக்கைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அவரது வழக்குகளின் விசாரணை பொதுவெளியில் (நேரலையில்) நடத்தப்பட வேண்டும். அவரது தற்கொலை கடிதம் மற்றும் வீடியோக்களை அவரது இறப்புச் சான்றிதழாக எடுக்க வேண்டும். உத்தர பிரதேச நீதிமன்றங்களைவிட பெங்களூரு நீதிமன்றங்கள் சிறந்தவை. அவரது வழக்கை இங்கு மாற்ற வேண்டும். அவரது குழந்தையை, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். அவரது மனைவி மற்றும் மனைவியின் உறவினர்களை அவரது சடலத்தின் அருகில் அனுமதிக்கப்படக் கூடாது. நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு வரும் வரை அவரது சாம்பலை நதிகளில் கரைக்க வேண்டாம். அவருடைய மனைவியும், ஊழல் செய்த நீதிபதியும் தண்டிக்கப்படாவிட்டால், "என் சாம்பலை நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள குப்பையில் போடுங்கள்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னைத் துன்புறுத்தியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தனது குடும்பத்தைத் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் எழுதியுள்ளார். அவரது மனைவி பொய் வழக்குகள் போட்டதாக ஒப்புக்கொள்ளும் வரை, அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளாமல், வழக்குகளை வாபஸ் பெற அனுமதிக்காதீர்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடிதத்தில், சட்டங்கள் பெண்களுக்குச் சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றை எழுதியதோடு, அதுல் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நிகிதாவோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ பதிலளிக்கவில்லை. அவர்கள் பதிலளித்தால் அது இங்கு இணைக்கப்படும். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பலர் நிகிதாவின் லிங்க்ட்-இன் தளத்தில் இருந்த அவரது சுயவிவரத்தில் உள்ள தகவல்களையும் புகைப்படங்களையும் சேகரித்து இணையத்தில் வெளியிட்டனர். அவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி அவர் பணிபுரியும் நிறுவனத்தை டேக் செய்து குறிப்பிட்டனர். தற்போது, நிகிதா தனது அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் மறைத்து வைத்துள்ளார் அல்லது முடக்கியுள்ளார். ஆனால் இறுதியாக ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு அவரது தரப்பு வாதத்தைக் கேட்க வேண்டும் என்று இணையதளத்தில் சிலர் கூறுவதைக் காண முடிந்தது. காட்ஸிலா: 70 ஆண்டுகளாக மிரட்டும் மான்ஸ்டர் - ஜப்பானால் மட்டுமே உருவாக்க முடிந்தது ஏன்?7 டிசம்பர் 2024 நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!12 டிசம்பர் 2024 இந்தியாவில் ஆண்களின் தற்கொலைகள் அதிகரிக்கிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திருமண முரண்பாடு காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களைவிட இரு மடங்கு அதிகம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதுலின் தற்கொலை நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் இந்தியாவில் ஆண்களின் உரிமைகள் குறித்துப் பெரிய விவாதம் நடந்து வருகிறது. குறிப்பாக இந்திய சமூகத்தில் துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள், "காலப்போக்கில் சாபமாக மாறிவிட்டது" என்று வாதிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தச் சட்டங்களை எதிர்த்துப் போராடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பல தன்னார்வ நிறுவனங்கள் போராடி வருகின்றன. நாட்டில் ஆண்களுக்கு எதிரான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு அதுலின் தற்கொலை வழக்கு ஒரு முக்கிய உதாரணம் என்று அத்தகைய அமைப்புகள் அனைத்தும் இப்போது சுட்டிக்காட்டுகின்றன. ஆண், பெண் பாகுபாடு இல்லாத சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும், சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏகம் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் துன்புறுத்தல்களால் ஏற்பட்ட ஆண்களின் இறப்பு சம்பவங்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கைப்படி, 2023ஆம் ஆண்டில் மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவர் தொடர்பான 306 வழக்குகளில், 213இல் திருமணத்திற்கு வெளியிலான உறவுகள் சார்ந்த விவகாரங்கள் காரணமாகவும், 55இல் குடும்பத் தகராறு காரணமாகவும், மீதமுள்ளவை பிற காரணங்களுக்காகவும் நிகழ்ந்துள்ளன. அதே ஆண்டில் அவர்கள் ஆய்வு செய்யப்பட்ட 517 தற்கொலை வழக்குகளில், 235 ஆண்கள் மன உளைச்சலால் இறந்துள்ளனர். அதோடு, 22 பேர் குடும்ப வன்முறையால், 47 பேர் திருமணத்திற்கு வெளியிலான உறவு விவகாரங்களால், 45 பேர் பொய் வழக்குகளால் மற்றும் 168 பேர் பிற காரணங்களால் இறந்துள்ளனர் என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த உளவியல் ரீதியான துன்புறுத்தல்களில் பெரும்பாலானவை பொய் வழக்குகள், குற்றச்சாட்டுகள் மற்றும் மனைவி அல்லது அவரது பிரதிநிதியால் சிறைவைக்கப்படுவதாக அச்சுறுத்தப்படுவது ஆகியவை அடங்குவதாக அந்த அறிக்கை கூறுகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, 2022இல் இந்தியாவில் 1,70,924 பேர் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் 31.7 சதவீத ஆண்களும், பெண்களும் குடும்பப் பிரச்னைகளாலும், 4.8 சதவீதம் பேர் திருமணம் தொடர்பான பிரச்னைகளாலும், 4.5 சதவீதம் பேர் காதல் விவகாரங்களாலும் உயிரிழந்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டின் தரவுகளும் கிட்டத்தட்ட இதே சதவீதத்தில் உள்ளது. அதாவது பெண்களைவிட ஆண்கள் அதிகமாகத் தற்கொலை செய்து கொள்வதாக இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதே சூழலில், வரதட்சணை கொடுமை, குழந்தை இல்லாமை உள்ளிட்ட திருமணம் தொடர்பான பிரச்னைகளால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவு கூறுகிறது. குகேஷ் தொம்மராஜு: மகனின் சதுரங்க கனவுக்காக மருத்துவப் பணியைக் கைவிட்ட தந்தை13 டிசம்பர் 2024 இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது?12 டிசம்பர் 2024 ஆண்களுக்கும் சட்டங்கள் தேவை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆண், பெண் பாகுபாடு இல்லாத சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும், சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுல் போன்றவர்கள் இன்று உயிரிழக்கக் காரணம், பாலின பாகுபாட்டுடன் உருவாக்கப்பட்ட சட்டங்களே என்றும், இதனால் ஆண்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் ஏகம் நியாய அறக்கட்டளையின் நிறுவனர் தீபிகா நாராயண பரத்வாஜ் தெரிவித்துள்ளார். "தற்போது இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பிற்காக ஆறுக்கும் மேற்பட்ட சட்டங்கள் உள்ளன. ஆனால் ஆண்களுக்கு எதுவும் இல்லை. இந்த நாட்டில் ஆண்களுக்கு எதிராகவும் குடும்ப வன்முறைகள் நடக்கின்றன. தங்கள் கணவரைத் துன்புறுத்தும் மனைவிகளும் உள்ளனர். ஆனால் அவர்களுக்காக சட்டம் இல்லை. இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அதற்காக சட்டங்கள் இயற்றக்கூடாதா?" என்று தீபிகா நாராயண் பரத்வாஜ் கேள்வி எழுப்புகிறார். "ஒன்றல்ல இரண்டல்ல... அதுலின் மனைவி ஒரே நேரத்தில் 9 வழக்குகளைப் பதிவு செய்துள்ளார். கணவர் மீது மட்டுமின்றி கணவர் குடும்பத்தினர் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அதனால்தான் அதுலின் வழக்குக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்தது," என்று தீபிகா பரத்வாஜ் பிபிசியிடம் கூறினார். இதெல்லாம் பெண்களுக்கு எதிராகச் செய்யப்படவில்லை என்றும், ஆண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே தான் கூறுவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். 60 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக 50 பேர் மீது புகார் - கணவரின் உத்தரவின் பேரில் செய்ததாக வாக்குமூலம்13 டிசம்பர் 2024 டியாகோ கார்சியா: ரகசிய ராணுவத் தீவில் சிக்கித் தவித்த இலங்கை தமிழ் பெண் - குழந்தைகளுடன் உயிர் பிழைத்தது எப்படி?9 டிசம்பர் 2024 உச்சநீதிமன்றம் பலமுறை தெரிவித்துள்ளது பட மூலாதாரம்,GETTY IMAGES பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், புதிய சட்டங்களையோ திருத்தங்களையோ அரசு கொண்டு வந்த நிகழ்வுகள் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் லட்சுமிநாராயணா கருத்து தெரிவித்தார். "சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான பிரச்னை அனைத்து வகையான சட்டங்களிலும் உள்ளது. ஆனால், பெண்கள் தொடர்பான வழக்குகளில், இது சமீபகாலமாக அதிகரித்து வருவதாகத் தெரிகிறது,'' என்றார் லட்சுமி நாராயணா. இதைத் தான் சொல்லவில்லை என்றும், உச்சநீதிமன்றமே பலமுறை கூறியுள்ளதாகவும், இதற்கு உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். " விசாரணையின்போது, அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, காவல்துறையினர் முதலில் 41ஏ நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியது. உண்மையில் வரதட்சணை கொடுமை சார்ந்த வழக்குகள்தான் அந்த விதிக்குக் காரணம்," என விளக்கமளித்தார். "அர்னேஷ் குமார், பிகார் அரசு இடையிலான வழக்கில், இந்தப் புகாரின் அடிப்படையில் யாரேனும் சிக்கிக் கொள்ளும் போதெல்லாம் கைது செய்யப்படுவதைத் தடுக்க உச்சநீதிமன்றம் 41A சட்டப்பிரிவை வழங்கியது. இந்த வழக்கு பெண்கள் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தியதன் உச்சகட்டம்" என்று லட்சுமிநாராயணன் பிபிசியிடம் தெரிவித்தார். புஷ்பா 2: சேஷாசல செம்மரங்களுக்கு சீனா, ரஷ்யாவில் அதிக தேவை இருப்பது ஏன்? எப்படி கடத்தப்படுகிறது?5 டிசம்பர் 2024 நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 'பல்வேறு சட்டங்கள் மூலம் ஆண்கள் நீதிமன்றத்திற்கு செல்லலாம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், புதிய சட்டங்களையோ திருத்தங்களையோ அரசு கொண்டு வந்த நிகழ்வுகள் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் லட்சுமிநாராயணா கருத்து தெரிவித்தார். அதுல் சுபாஷ் வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு வழக்கின் அடிப்படையில் அனைத்து 498A வழக்குகளையும் பொய் வழக்குகள் என்று சொல்வது சரியல்ல என்று பெண் உரிமை ஆர்வலர் தேவி கூறினார். "நாங்கள் பெண்களுக்கான சங்கமாக இருந்தாலும், பல ஆண்கள் பாதிக்கப்பட்டவர்களாக எங்களிடம் வருகிறார்கள். அவர்களுக்குத் துணையாக நின்று உதவுவோம்," என்றும் அவர் குறிப்பிட்டார். மேற்கொண்டு பேசியவர், "எந்தவொரு வழக்கும் அதன் உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். சட்டங்கள் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றால், நூற்றுக்கணக்கான வழக்குகளுக்கு என்னால் உதாரணம் கொடுக்க முடியும். இப்படி அராஜகமான முறையில் பெண்கள் துன்புறுத்தப்பட்டு கடைசியில் நீதி கிடைக்காமல் போன நூற்றுக்கணக்கான உதாரணங்கள் என்னிடம் உள்ளன. கணவர் அடித்தாலும், ரத்தம் வந்தாலும் வழக்குகள் பதிவு செய்யப்படாத நிலை உள்ளது. " என்று பிபிசியிடம் தேவி கூறினார். "தேசிய குடும்ப கணக்கெடுப்பின்படி, ஒரு கணவர் தனது மனைவியை அடிப்பது தவறு இல்லை என்று 30% சதவீதம் பெண்கள் நினைப்பதாகக் கூறுகிறது. அத்தகைய சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆண்கள் உண்மையில் ஏதேனும் சட்டங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அவர்கள் மற்ற சட்டங்கள் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்யலாம் மற்றும் நீதிமன்றங்களுக்குச் செல்லலாம்," என்று தேவி கூறினார். முக்கியத் தகவல் மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019 - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cn4xwe28lp2o
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.