Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க துணைத் தூதர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20221026_154318-600x338.jpg

அமெரிக்க துணைத் தூதர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

அமெரிக்க துணைத் தூதர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக அமெரிக்க துணை தூதர் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண சபை அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தரப்புக்கள் தனியாகவும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ், வாசுகி சுதாகர் ஆகியோர் தனியாகவும் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது சமகால நிலைமைகள் தொடர்பில் அமெரிக்க துணைத் தூதர் அரசியல் பிரதிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

https://athavannews.com/2022/1307171

  • கருத்துக்கள உறவுகள்

சமகால நிலைமைகள் குறித்து அமெரிக்க துணைத் தூதர் அரசியல் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

By VISHNU

26 OCT, 2022 | 08:40 PM
image

( எம்.நியூட்டன்)

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்று (26) புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார்.

IMG-20221026-WA0017.jpg

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக அமெரிக்க துணை தூதர் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண சபை அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தரப்புக்கள் தனியாகவும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ், வாசுகி சுதாகர் ஆகியோர் தனியாகவும் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது சமகால நிலைமைகள் தொடர்பில் அமெரிக்க துணைத் தூதர் அரசியல் பிரதிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

https://www.virakesari.lk/article/138481

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க துணைத்தூதுவர் மயிலிட்டிக்கும் சென்றாா்

October 26, 2022

spacer.png

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட நிலையில் ,மாலை வலி வடக்கு மயிலிட்டி துறைமுகத்துக்கு சென்று, துறைமுக அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பொருளாதார நிலைமை தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டார்.

அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள மண்ணெண்ணெய் பிரச்சினை  மீனவர்கள் எதிர்கொள்கிற முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது தொடர்பில் , இதன்போது அவர் மீனவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார்.

அத்துடன் மயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு சென்ற அவர், அங்கு மீள்குடியேற்ற குழுவினரை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பிலும் பொதுமக்களுடன் காணிகள் அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் இருக்கின்றது தொடர்பிலும் அவருக்கு வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் தெளிவு படுத்தினர்.

இது தொடர்பில் அவர் தான் ஜனாதியுடன் பேசி ஒரு நல்லதொரு முடிவினை பெற்று தருவதாக கூறியுள்ளார்

spacer.png

spacer.png

https://globaltamilnews.net/2022/182863/

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம அரசியல வித்தகர்கள் சைனாகாரன் வந்தாலும் புத்துக்குள் ஒளியிரானுகள் அமரிக்கா காரன் வந்தாலும் புத்துக்குள் கிந்தியா வந்தால் தான் வெளியில் வருகிறான்கள் .

நாம் சொல்லுவது சும் சாணக்கியன் கூட்டம் 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக அமெரிக்க துணை தூதர் சந்தித்து கலந்துரையாடினார்.

இதுவரை இந்தியா கூட்டமைப்பை மாத்திரமே சந்தித்தது.

இவர் கொஞ்சம் வித்தியாசமாக தனித்தனி கட்சிகளை சந்திக்கிறார்.

என்ன பேசினார்கள் என்பதை விட இப்படி ஒவ்வோருவருடனும் பேசியது வரவேற்கத்தக்கது.

கொஞ்சநாள தமிழர் பிரதேசங்கள் உலகத்தால் கவனிக்கப்படுகிறது.

இந்தியாவுக்கு இந்த அணுகுமுறை வெறுப்பாக இருக்கலாம்.

@Kapithan சொன்னது போல ஏதோ தீர்வுதிட்டம் நடக்குதோ?

4 hours ago, பெருமாள் said:

நம்ம அரசியல வித்தகர்கள் சைனாகாரன் வந்தாலும் புத்துக்குள் ஒளியிரானுகள் அமரிக்கா காரன் வந்தாலும் புத்துக்குள் கிந்தியா வந்தால் தான் வெளியில் வருகிறான்கள் .

நாம் சொல்லுவது சும் சாணக்கியன் கூட்டம் 

பெருமாள் எங்கே பெரும் தலைகளைக் காணவில்லையே என்று நானும் யோசித்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

நம்ம அரசியல வித்தகர்கள் சைனாகாரன் வந்தாலும் புத்துக்குள் ஒளியிரானுகள் அமரிக்கா காரன் வந்தாலும் புத்துக்குள் கிந்தியா வந்தால் தான் வெளியில் வருகிறான்கள் .

நாம் சொல்லுவது சும் சாணக்கியன் கூட்டம் 

5 hours ago, ஈழப்பிரியன் said:

பெருமாள் எங்கே பெரும் தலைகளைக் காணவில்லையே என்று நானும் யோசித்தேன்.

வேண்டும் என்றே…. அமெரிக்க, சீன தொடர்புகளை கூட்டமைப்பின் சிலர் தவிர்ப்பது தெரிகின்றது.
மாவையரும்… ஒளிச்சுட்டார். 🤣
அவ்வளவுக்கு இந்திய விசுவாசம் கண்ணை மறைக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

மாவை சேனாதிராஜா, சம்பந்தன்  உதயன் சரவணபவன், மட்டக்களப்பு யோகேஸ்வரன் இவர்கள் எல்லோரும் இந்தியாவின் அடிவருடிகள்.. இதில் உதயன் சரவணபவன் தான் ஆகலும் மோசம் 

Edited by பகிடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

@Kapithan சொன்னது போல ஏதோ தீர்வுதிட்டம் நடக்குதோ?

பெருமாள் எங்கே பெரும் தலைகளைக் காணவில்லையே என்று நானும் யோசித்தேன்.

அமெரிக்கா சென்ற சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அரசியல் தீர்வு குறித்து  காங்கிரஸ் உறுப்பினருடன் பேச்சு | Virakesari.lk

சுமந்திரன் குழு...  அமெரிக்கா, கனடா   போன போதும்...
கபிதன்....   ஒரு பெரிய மாற்றத்துக்கு, அமெரிக்காவுடன் சேர்ந்து  
சும்... அலுவல் பார்க்கிறார் என்று சொன்னவர்.

ஆனால்.. அமெரிக்க தூதுவர், யாழ்ப்பாணத்துக்கு வந்தவுடன்,   சுமந்திரன் தலைமறைவு.

  • கருத்துக்கள உறவுகள்

1.நரிக் சொல்கைமின் வரவு
2.ரணிலுடனான இணைவு
3.தமிழக முதலர்வருடனான சந்திப்பும் நாடிபிடிப்பும்
4.நாளை ஏதாவதொரு தீர்வு முயற்சியின் போது எப்படி தமிழின அழிப்பின்போது தமிழகத்தை கட்டுப்படுத்தியபோல், இரண்டாம் முள்ளிவாய்காலுக்குமான ஆதரவை உறுதிசெய்தல். 
5.நரிக்சொல்கைமைத் தமிழர் தரப்புகள் நிராகரிக்கலாம் என்பதால் அமெரிக்கா நேரடியாக களத்தில்
6.தொடரும் ரஸ்ய - உக்ரேன் போரால் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையும், அமெரிக்க முதலீடுகளை இலங்கையில் தக்கவைத்தலும், இந்து மாவாரிப் பகுதியில் அமெரிக்க படைகளுக்கான சேவைகளைப் பேணல்.  
7.இந்திய - சீன தரப்புகள் விரும்பாத நகர்வு

எல்லாம் ஒன்றோடொன்று தொடர்பான அமெரிக்க - மேற்குக் கூட்டணியின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளானவையாக நகர்கின்றன.

1 hour ago, தமிழ் சிறி said:

ஆனால்.. அமெரிக்க தூதுவர், யாழ்ப்பாணத்துக்கு வந்தவுடன்,   சுமந்திரன் தலைமறைவு.

கிந்தியாவும் சீனாவும் பெரிய பெட்டியாக் காட்டியிருப்பினமோ!

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்கா சென்ற சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அரசியல் தீர்வு குறித்து  காங்கிரஸ் உறுப்பினருடன் பேச்சு | Virakesari.lk

சுமந்திரன் குழு...  அமெரிக்கா, கனடா   போன போதும்...
கபிதன்....   ஒரு பெரிய மாற்றத்துக்கு, அமெரிக்காவுடன் சேர்ந்து  
சும்... அலுவல் பார்க்கிறார் என்று சொன்னவர்.

ஆனால்.. அமெரிக்க தூதுவர், யாழ்ப்பாணத்துக்கு வந்தவுடன்,   சுமந்திரன் தலைமறைவு.

எல்லா மாற்றங்களும் ஓர் இரவில் இடம்பெறாது. ஆனாலும் மாற்றங்கள் ஏற்பட்டாகத்தானே வேண்டும். 

ஏதேனும் நல்லது நடக்கும் என்கிற உங்களது நப்பாசை எனக்குள்ளும் இருப்பது இயல்பானதுதானே.

😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஆனால்.. அமெரிக்க தூதுவர், யாழ்ப்பாணத்துக்கு வந்தவுடன்,   சுமந்திரன் தலைமறைவு.

உண்மையாகவே தமிழர் நலன் கருதி அமெரிக்கா போயிருந்தால், அவர்கள் இங்கு வரும்போது இவரல்லவா அவர்களை வரவேற்று பேசுவார்த்தையிலீடுபட்டிருக்க வேண்டும், அதேநேரம் அவர்களும் சுமந்திரனோடு மூடிய கதவுக்குள் பேசியதை இப்போ பகிரங்கமாக பகிர்ந்திருக்கலாமே? எல்லாமே ஏமாற்று வித்தை, அதே நேரம் அவர்கள் ஆஸ்த்தான குருவான இந்தியாவுக்கு இது ஒரு கசப்பான விடயம் ஆகவே இவர்களுக்கும் கசக்கத்தான் செய்யும்! 

ஆனால் சில காலத்துக்கு முன் இங்கொருவர் சுமந்திரன் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை, இந்தியாவுக்கு சுமந்திரனை பிடிக்காது என்று கதை எழுதிக்கொண்டு திரிந்தவர், இப்போ என்னடா என்று பாத்தால் எல்லாம் தலைகீழ்! 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பாவம் தாடியர்! அவரை சந்திக்க யாரும் வரவில்லையோ,  விரும்பவில்லையோ? ஓஓ ..... அவர் அரசு சார்பானவர் எல்லோ.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

உண்மையாகவே தமிழர் நலன் கருதி அமெரிக்கா போயிருந்தால், அவர்கள் இங்கு வரும்போது இவரல்லவா அவர்களை வரவேற்று பேசுவார்த்தையிலீடுபட்டிருக்க வேண்டும், அதேநேரம் அவர்களும் சுமந்திரனோடு மூடிய கதவுக்குள் பேசியதை இப்போ பகிரங்கமாக பகிர்ந்திருக்கலாமே? எல்லாமே ஏமாற்று வித்தை, அதே நேரம் அவர்கள் ஆஸ்த்தான குருவான இந்தியாவுக்கு இது ஒரு கசப்பான விடயம் ஆகவே இவர்களுக்கும் கசக்கத்தான் செய்யும்! 

ஆனால் சில காலத்துக்கு முன் இங்கொருவர் சுமந்திரன் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை, இந்தியாவுக்கு சுமந்திரனை பிடிக்காது என்று கதை எழுதிக்கொண்டு திரிந்தவர், இப்போ என்னடா என்று பாத்தால் எல்லாம் தலைகீழ்! 

இப்போதும் அவர் அமெரிக்காவின்  செல்லபிள்ளைதான்.  

அம்பை நோவதுதான் உங்கள் வழக்கம் சாத்.  இனியாவது எய்தவனைத் தேடுங்கள். 

குளத்தோடு கோவித்துக் குண்.. கழுவாவிட்டால் நாறப்போவது குளமல்ல, நாம்தான். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்கா சென்ற சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அரசியல் தீர்வு குறித்து  காங்கிரஸ் உறுப்பினருடன் பேச்சு | Virakesari.lk

சுமந்திரன் குழு...  அமெரிக்கா, கனடா   போன போதும்...
கபிதன்....   ஒரு பெரிய மாற்றத்துக்கு, அமெரிக்காவுடன் சேர்ந்து  
சும்... அலுவல் பார்க்கிறார் என்று சொன்னவர்.

ஆனால்.. அமெரிக்க தூதுவர், யாழ்ப்பாணத்துக்கு வந்தவுடன்,   சுமந்திரன் தலைமறைவு.

@Kapithan க்கு உள்ளுக்கிருந்து யாரோ நம்பகமான தகவல்களை வழங்குகிறார்கள்.

பல விடயங்கள் அவர் சொன்னது போலவே நடக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

@Kapithan க்கு உள்ளுக்கிருந்து யாரோ நம்பகமான தகவல்களை வழங்குகிறார்கள்.

பல விடயங்கள் அவர் சொன்னது போலவே நடக்கின்றன.

என்ன, போட்டுக் கொடுக்கும் எண்ணமோ? 

🤣

எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர் 2009 ஆரம்பத்திலேயே பல விடயங்களை எதிர்வு கூறியவர். அவரது கூற்றின்படியே அனேகமான அடிப்படை மாற்றங்கள் இடம்பெறுகின்றதன. . 

அது தனியே இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியாவையும், குறிப்பாக தமிழ்நாட்டையும் சேர்த்துத்தான். இந்தியாவின் உடைவு  தென்னிந்தியாவில் இருந்துதான் ஆரம்பமாகும் எனக் கூறினார்.

அதுக்கும் சேர்த்துத்தான் நம்மள் எரிக்கார் அங்க போய் நிக்கார்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

@Kapithan க்கு உள்ளுக்கிருந்து யாரோ நம்பகமான தகவல்களை வழங்குகிறார்கள்.

பல விடயங்கள் அவர் சொன்னது போலவே நடக்கின்றன.

உறவுக்குள் இருந்து என்றுதான் வந்திருக்க வேண்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

இப்போதும் அவர் அமெரிக்காவின்  செல்லபிள்ளைதான்.

செல்லப்பிள்ளை என்பதைவிட எடுப்பார் கைப்பிள்ளை என்பதே பொருத்தமாக இருக்கும். அமெரிக்காவின் செல்லப்பிள்ளை  ரணிலை எதிர்த்து இந்தியாவின் செல்லப்பிள்ளையை ஜனாதிபதியாக  ஆதரித்தவர்கள் ஆயிற்றே  சுமந்திரன் குழு.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, satan said:

செல்லப்பிள்ளை என்பதைவிட எடுப்பார் கைப்பிள்ளை என்பதே பொருத்தமாக இருக்கும். அமெரிக்காவின் செல்லப்பிள்ளை  ரணிலை எதிர்த்து இந்தியாவின் செல்லப்பிள்ளையை ஜனாதிபதியாக  ஆதரித்தவர்கள் ஆயிற்றே  சுமந்திரன் குழு.

6 hours ago, satan said:

உறவுக்குள் இருந்து என்றுதான் வந்திருக்க வேண்டும்! 

சாத், 

தகவல்கள் எங்கிருந்து  வருகின்றன என்பது உங்கள் பிரச்சனையா அல்லது தகவல்களின் நம்பகத்தன்மை உங்களின் பிரச்சனையா ?

ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதான் வளர்ச்சி என்று சொல்லத்தான் விருப்பம். ஆனால், தமிழர்  நலன் என்று வரும்போது, இருவரும் ஒரே புள்ளியில் இணைகிறோமே, அதனால் அதனைத் தவிர்க்கிறேன்.

😀

  • கருத்துக்கள உறவுகள்

எனது பிரச்னையென்னவென்றால்; ஒரு சுண்டெலி குறுக்கும் மறுக்கும் ஓடுவதேன்?  எனக்கு இப்போ ஒன்று தெரிந்தாகணும்! அதாவது சுமந்திரன் இந்தியாவின் ஊதுகுழலா அல்லது அமெரிக்காவின் செல்லப்பிள்ளையா? அப்படியாயின் அமெரிக்க துணை  தூதரை வரவேற்று சந்திக்காதது ஏன்? என்பதே எனது கேள்வி, அவரை அந்த நாட்டுக்கு பேச அழைத்தவர் இங்கு வரும்போது அவரை சந்திக்க  முக்கியத்துவம் கொடுக்காதது ஏன் என்பதே! அமெரிக்கா சிபாரிசு செய்தவரை ஒதுக்கி இந்தியா விரும்பியவரை ஆதரித்தது ஏன்? இதற்கு நம்பகமான விளக்கம் உங்களால் மட்டுமே தரமுடியும் என நான் நினைக்கிறன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இதற்கு விடை கிடைத்தால் தங்களது அறிவுப் பசி தீர்ந்துவிடுமா ? 

அறிவுப் பசி தீருமென்றால் காரணத்தை அறிந்து சொல்ல முனைகிறேன். 😏

  • கருத்துக்கள உறவுகள்

உள்வீட்டுப்பிள்ளையோ? உறவுப்பிள்ளையோ? எடுக்கும் முயற்சிகள் தமிழர்க்கு வெற்றியளிக்குமா இல்லையா என்பதற்கு மேல், சம்பந்தப்பட்டவர்களுடன் உங்களின் இறுக்கமான, நெருக்கமான, செய்தியை உடனுக்குடன்  வெளியிடுமளவுக்கு தொடர்பு இருக்கென்று சொல்லவந்தேன்! எனது ஆதங்கம் என்னவென்றால்; நெய் திரண்டு வரும்போது இதுகள் கூடி  தாழியை உடைத்து, கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் செய்து போடுவார்களோ என்பதே. ஏனெனில் இவர்கள் யாரும் எம்மக்களின் அவலங்களில் அனுபவமோ, உணர்வை புரிந்து கொள்ளக்கூடியவர்களோ, மக்களோடு நெருக்கமானதொடர்போ உடையவர்கள் அல்லர். அவர்களது பேச்சு, மூச்சு எல்லாம் சிங்களத்தை காப்பாற்றுவதாகவே இருந்துள்ளது இன்றுவரை!

9 hours ago, Kapithan said:

காரணத்தை அறிந்து சொல்ல முனைகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு இப்ப தேவை வெளிநாட்டு விசா.ஏற்ப்பாடு பண்ணுவீங்களா ஆபீசர்.😜

  • கருத்துக்கள உறவுகள்

 சில மாதங்களுக்கு முன் அமெரிக்க பெண் தூதுவர் நாடுமுழுவதும் சூறாவளிப்பயணம் மேற்கொண்டு நாடே அல்லோல கல்லோலப்பட்டு அடங்கி முடியமுதல், இவர் வடக்கில் அலையிறார். என்ன நடக்கபோகுதோ குருவாரூரப்பா!

  • கருத்துக்கள உறவுகள்
On 10/28/2022 at 02:08, satan said:

 எனக்கு இப்போ ஒன்று தெரிந்தாகணும்! அதாவது சுமந்திரன் இந்தியாவின் ஊதுகுழலா அல்லது அமெரிக்காவின் செல்லப்பிள்ளையா? அப்படியாயின் அமெரிக்க துணை  தூதரை வரவேற்று சந்திக்காதது ஏன்? 

சுமந்திரன் ஆரம்பத்தில் இந்தியாவைப் பகைக்காத அமெரிக்காவின் செல்லப்பிள்ளை. இந்தியா ஆரம்பத்தில் சுமத்திரணை விரும்பவில்லை. காரணம் இவர் கிறிஸ்தவர். ஒரு முறை இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் இதை மிகவும் வெளிப்படையாகவே ஒரு பேட்டியில் கூறினார். அவர் ஒரு பெரும் புள்ளி இல்லை என்றாலும் இது தான் ஆளும் இந்திய அதிகார வர்க்கத்தின் நிலைப்பாடு என்று ஓரளவு புரிந்து கொள்ளாலாம்.

அதே நேரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கை சம்பந்தமான பல விடயங்களில் ஒத்துப் போனாலும் இரண்டு தரப்பும் ஒருத்தருக்கொருத்தர் குழி வெட்டும் வேலையை செய்கிறார்கள்.

கோத்தபயவுக்கு பின்னர் யார் இலங்கை ப்ரெசிடெண்ட் என்பதில் இப்போதைக்கு சுமந்திரன் இந்தயா பக்கம் நிற்க வேண்டிய அளவுக்கு அவருக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டு உள்ளது என்று தான் நம்ப வேண்டி உள்ளது.இந்த நிலை தொடர்ந்து நீட்டிக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.