Jump to content

உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும் – அமெரிக்கத் தூதுவர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும் – அமெரிக்கத் தூதுவர்

உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும் – அமெரிக்கத் தூதுவர்

உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியு என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத்தை மட்டக்களப்பில் உள்ள அவரது பங்களாவில் விசேட சந்திப்பின் போது தூதுவர் உறுதியளித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

இந்த விசேட சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், கிழக்கு மாகாண சுற்றுலா துறை தலைவர், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது கிழக்கு மாகாணம் விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ளதனால் விவசாயத்தினூடாக மாகாணத்தை தன்னிறைவுடைய மாகாணமாக பிரகடனப்படுத்த முடியும் என அவர் எதிர் பார்ப்பதாகவும் உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியுமெனவும் நம்பிக்கை தெரிவித்ததுடன்.

இலங்கையின் கடன் மறுசீர்ரமைப்பினை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கும் தேவையான சகல வசதிகளையும் அமெரிக்க அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1309689

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, தமிழ் சிறி said:

உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும் – அமெரிக்கத் தூதுவர்

உலகத்துக்கே கோதுமை,நவதானியம் வழங்கிற உக்ரேன் எண்டு பீலா விட்டு முடிஞ்சுது. இனி உலகத்துக்கே அரிசி வழங்கிற கிழக்கு மாகாணம்.....என்னமோ நடத்துங்கோ....நடத்துங்கோ....🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, குமாரசாமி said:

உலகத்துக்கே கோதுமை,நவதானியம் வழங்கிற உக்ரேன் எண்டு பீலா விட்டு முடிஞ்சுது. இனி உலகத்துக்கே அரிசி வழங்கிற கிழக்கு மாகாணம்.....என்னமோ நடத்துங்கோ....நடத்துங்கோ....🤪

அமெரிக்கன்.... வாயை திறந்தால் பொய் சொல்லி, 
ஆருக்கும் ஆப்படிக்கிற வேலையை மட்டும்தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றான்.

கிழக்கு மாகாணத்தின் வயல் பரப்பளவு எவ்வளவு.
அதில் விளைந்த அரிசி, உலகத்துக்கே போதுமாம் என்று  பொய் சொன்னாலும்..
அதை  நம்பக் கூடிய மாதிரி சொல்ல வேண்டாமோ... 😂

அமெரிக்கா எண்டால் "அரிச்சந்திரன் பூமி" எண்ட அர்த்தம் கண்டியளோ.....:458: :hahaha:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரசாயன உரங்களை அள்ளி வழங்கி விவசாயியை சோம்பேறியாக்கி, கடைசியா விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்கள் வாங்கி அரிசிக்கு அவங்கள் சொல்வது தான் விலையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கபிதன் சொன்ன அமெரிக்காவிலிருந்து தீர்வு இது தானோ??

இந்தியன் என்றால் கோமியத்தை குடிப்பவன் என்று சொல்லலாம். சிலவேளை ராத்திரி அடித்த ரஸ்சியன் வொட்காவாக இருக்குமோ. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, குமாரசாமி said:

உலகத்துக்கே கோதுமை,நவதானியம் வழங்கிற உக்ரேன் எண்டு பீலா விட்டு முடிஞ்சுது. இனி உலகத்துக்கே அரிசி வழங்கிற கிழக்கு மாகாணம்.....என்னமோ நடத்துங்கோ....நடத்துங்கோ....🤪

நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஒட்டு மொத்த இலங்கைக்குமாவது நெல்லை உற்பத்தி செய்ய வதற்கு சாத்தியம் உள்ளது ஆனால் அதற்கான நடவடிக்கை அரசு செய்ய வேண்டும் அதாவது உரிய விலை பசளை,எண்ணெய் விலைகள்,டீசல்   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, குமாரசாமி said:
3 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்கன்.... வாயை திறந்தால் பொய் சொல்லி, 
ஆருக்கும் ஆப்படிக்கிற வேலையை மட்டும்தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றான்.

கிழக்கு மாகாணத்தின் வயல் பரப்பளவு எவ்வளவு.
அதில் விளைந்த அரிசி, உலகத்துக்கே போதுமாம் என்று  பொய் சொன்னாலும்..
அதை  நம்பக் கூடிய மாதிரி சொல்ல வேண்டாமோ... 😂

Expand  

அமெரிக்கா எண்டால் "அரிச்சந்திரன் பூமி" எண்ட அர்த்தம் கண்டியளோ

ஒருதடவை சொன்னா

நுhறு தடவை சொன்ன மாதிரி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஒட்டு மொத்த இலங்கைக்குமாவது நெல்லை உற்பத்தி செய்ய வதற்கு சாத்தியம் உள்ளது ஆனால் அதற்கான நடவடிக்கை அரசு செய்ய வேண்டும் அதாவது உரிய விலை பசளை,எண்ணெய் விலைகள்,டீசல்   

மட்டக்களப்பும் திருகோணமலையும் ஒட்டுமொத்த இலங்கைக்கும் படியளக்கும் எண்டது எனக்குத் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மட்டக்களப்பில உலாவி என்ன களேபரத்தை உண்டுபண்ணபோறாவோ தெரியலையே? கடைசியில திருகோணமலை துறைமுகத்துக்கு ஆப்போ யார் கண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, குமாரசாமி said:

மட்டக்களப்பும் திருகோணமலையும் ஒட்டுமொத்த இலங்கைக்கும் படியளக்கும் எண்டது எனக்குத் தெரியும்.

அம்பாரையை விட்டுட்டீங்க சிங்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அம்பாரையை விட்டுட்டீங்க சிங்கம் 

அம்பாரையா. ? அம்பாரையா  ?அது எங்கே இருக்கிறது   ?.  உங்களுக்கு தமிழ் ஈழம் தரப்பட முடியாது 🤣🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.