Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்

Featured Replies

இந்த யோசனையில் சில சிக்கல்கள் இருந்தாலும் இந்த யோசனையை வரவேற்கலாம் முக்கியமான செயல் திரனை ஊக்குவித்து புதிய ஆக்கங்களை கொண்டு வரும் ஒரு ஊக்கியாக இது அமையும் என நம்புவதால்...

இதில் மிக முக்கியமாக்க செயலாக்கங்களை ஊக்குவிக்கும் பொருட்டும், வேண்டாத பிணக்குகள் உருவாவதை தவிர்க்கும் பொருட்டு , நிறைகளை மட்டுமே சொல்லப்பட வேண்டும் எனும் ஒரு கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் எண்று கேட்டுக்கொள்கிறேன்....!! குறைகள் நிறைகளிடத்தில் அடி பட்டு போகட்டும்....!

Edited by தயா

  • Replies 912
  • Views 67.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி.

இவ்வாறே வலைப்பூக்களில் நடப்பது போன்று நட்சத்திரப் பதிவுகளாக ஒவ்வொரு உறுப்பினரையும் செய்யச் சொன்னால் என்ன? அப்படிச் செய்யும் பட்ச்த்தில் ஒவ்வொருவருடைய சுய ஆக்கங்களும் அதிகரிப்பதற்கும், வெட்டிஒட்டுதல், அரட்டை போன்றவை குறைய வாய்ப்புண்டு.

அப்படித் தயார் என்றால் வலைப்பூக்களில் அனுபவமுள்ள, தூயா, சின்னக்குட்டி,சாத்திரி, கானாபிரபா, சயந்தன், வசந்தன், சினேகிதி, அற்புதன், போன்றவர்களே ஆரம்பித்து வைக்கலாம்.

ஆனால், அவ்வாறன செயற்திட்டம் இருப்பின், ஒரு மாத இடைவெளியை உறுப்பினர்களுக்கு வழங்குவதோடு, முழு அனுமதியையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் 1வது பட்டிமன்றத்தில் அந்தச் சிக்கல் நடந்தது. அதில் உறுப்பினர்கள் தங்களிடைய அனுமதி பெறவில்லை என்று குறைப்பட்டதோடு, பலர் கட்சி மாறுதல் உற்பட்ட பல விடயங்களில் ஈடுபட்டும், காலத்தை இழுத்தடித்ததாலும் எப்போது பட்டிமன்றம் முடியும் என்றாகியிருந்தது.

இனியவள்

அடுத்த ஆளைத் தெரிவு செய்யவில்லையே?

Edited by தூயவன்

[quote name='தூயவன்' date='Jun 25 2007, 02:50 AM' post='318140'

இனியவள்

அடுத்த ஆளைத் தெரிவு செய்யவில்லையே?

பதில் இல்லையே இனியவள்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இனிமையானளே மன்னிக்கவும் இனியவளே!

உங்கள் தொகுப்பு பிரமாதம், களநிர்வாகத்தினரின் இந்த திட்டமும் வரவேற்கத்தக்கது.

அனைவருக்கும் முதலில் எனது பாராட்டுக்கள். இதில் என்னைப்பற்றியும் ஏதோ குறிப்பிட்ட மாதிரியுள்ளது, இதில் நான் எந்தஅபிப்பிராயமும் தெரிவிக்க விரும்பவில்லை.

நாம் எல்லோரும் சராசரி மனிதர்கள், அதற்குரிய சகல உணர்ச்சிகளும் இருக்கத்தான் செய்யும். ஆகவே யாரிலும் நான் குறை கூறவிரும்பவில்லை.

முக்கியமாக களத்தின் நடப்புக்களை சரியான முறையில் அவதானித்திருந்த எனது நண்பி இனியவளுக்கு மீண்டும் எனது பாராட்டுக்கள்.

Edited by Valvai Mainthan

சிறந்த யோசனை அண்ணா! வரவேற்க்ககூடிய விசயங்கள்!

எழுத்தாற்றலை வளர்க்க சிறந்த வழி! உறவுகளிற்க்கிடையே நடபு புரிந்துணர்வு ஆகியவற்றை உருவாக்க உதவும்.

இந்த யோசனையில் சில சிக்கல்கள் இருந்தாலும் இந்த யோசனையை வரவேற்கலாம் முக்கியமான செயல் திரனை ஊக்குவித்து புதிய ஆக்கங்களை கொண்டு வரும் ஒரு ஊக்கியாக இது அமையும் என நம்புவதால்...

இதில் மிக முக்கியமாக்க செயலாக்கங்களை ஊக்குவிக்கும் பொருட்டும், வேண்டாத பிணக்குகள் உருவாவதை தவிர்க்கும் பொருட்டு , நிறைகளை மட்டுமே சொல்லப்பட வேண்டும் எனும் ஒரு கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் எண்று கேட்டுக்கொள்கிறேன்....!! குறைகள் நிறைகளிடத்தில் அடி பட்டு போகட்டும்....!

தயா அண்ணா! நிகழ்ச்சிநிரல்களைப் பற்றி எழுதும் போது குறைகள் நிறைகள் யாவும் வரும். நிறைகளை விட்டு குறைகளை மட்டும் எழுத முடியாது. அதே போல் குறைகளை விட்டு நிறைகளை மட்டும் எழுத முடியாது. குறைகள் நிறைகள் யாவும் கலந்தே வரும். அது தவிர்க்க முடியாது. :P அதை மற்றவர்கள் நிதானமாக எடுத்து குறைகளை நிவர்த்தி செய்ய முயல வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலைஞன் அண்ணா இது ஒரு நல்ல முயற்சி...இனியவள் அக்கா நீங்க நல்லா பதிந்துள்ளீங்க..ஆரம்பமே இனிமை....அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

வல்வையின் கருத்தும் வரவேற்கத்தக்கது...வானவில்...உங

Edited by eelanila

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சியைப் பாராட்டலாம் இனியவள்.

நீங்கள் கவனிக்க வேண்டியவை...

1. எழுத்துப் பிழை.

2. விமர்சனம் என்ற வகையில் உங்கள் தனிப்பட்ட கருத்தை மேலதிகமாக விடயத்துக்கு வெளியில் கொணரக் கூடாது.

(ஆண்களுக்கான அழகுக் குறிப்பில் ஆண்களை பொய்யர்கள் என்று சாடி இருப்பது இங்க ஆகாது.. காரணம் உங்கள் கூற்றை இங்க அப்படி இல்ல என்று நாம் வாதாட முடியாது.)

3. களத்தின் ஒவ்வொரு பகுதியிலும் எது முக்கியம் பெறுகிறது என்று கண்டு அவை குறித்து முன்னிலைப்படுத்தி எழுதுவது வாசகர்களின் கவன ஈர்ப்பையும் விடயங்கள் அவர்களை சென்றடையும் விரைவையும் கூட்டும்..!

உ+ம்: புலம்பகுதியில் பிரித்தானியாவில் கைதுகள்.. தாயகத்தில் வார அரசியல் மற்றும் போர் நிலவரங்கள்...! தொடர்பானது..! இப்படி..! (பிரித்தானியா விடயம் குறிப்பிட்டிருந்தீர்கள் பாராட்டலாம். அதில் உங்கள் கருத்தையும் செய்ய வேண்டிய பங்களிப்பின் உங்கள் கருத்தையும் சொல்லி இருக்கலாம்)

மற்றும் படி உங்கள் முதல் முயற்சி வெகுவாக பாராட்டத்தக்கதாகவே உள்ளது எமது பார்வைக்கு. :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிடிக்கல்லா,பிடிக்கல்லா...

விமர்சனம் முன் வைக்கும் பொழுது அந்த விமர்சனத்தை பிளஸ் வடிவில் எதிர்பார்க்கும் யாழ் கொம்மில், இப்படிப்பட்ட கண்ணாடிகள் உடைய்ந்து போகும். (மட்டுறுத்தினர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குறீயளோ??)

அதைவிட கள உறுப்பினர்களை இடிக்ககூடா சா தாக்க கூடா குத்தகூடாது, குடையகூடாது என்ற விதிமுறைகள் இருக்கு (நல்லம் இருக்கட்டும்), நாளைக்கே எண்ட முறை வந்து ஏதாச்சும் எழுதனும் எண்டு வைச்சுப்போமே? அந்த கருத்தை எழுத எவ்வளவு நேரத்தை நான் செலவு செய்யனும்? அட ஏனெண்டால் நான் எழுதுற கருத்தை உப>>>>>> நிர்வாகியிண்ட ஞானக்கண்ணுக்கு எப்படி படுது? நிர்வாகியின் கண்ணுக்கு எப்படி தெரிது? அதைவிட பெண் உறுப்பினர்கள் அந்த கருத்தை எப்படி எடுத்துக்குறாங்க, யாழ், ஜம்பாவானுகளை அந்த கருத்து உதைக்குதா? எண்டு சிந்திச்சு எழுதனுமெல்லோ??

ஆக மொத்தம் கூட்டி கழிச்சு பெருக்கி அள்ளிப்போட்டால்............................ :( பிடிக்கல்ல பிடிக்கல்லா.. வலைஞனின் ஆடு புலி ஆட்டம் பிடிக்கல்லா... B)

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

இனியவளே தொடரட்டும் உங்கள் பணி.....

  • தொடங்கியவர்

தயா அண்ணா! நிகழ்ச்சிநிரல்களைப் பற்றி எழுதும் போது குறைகள் நிறைகள் யாவும் வரும். நிறைகளை விட்டு குறைகளை மட்டும் எழுத முடியாது. அதே போல் குறைகளை விட்டு நிறைகளை மட்டும் எழுத முடியாது. குறைகள் நிறைகள் யாவும் கலந்தே வரும். அது தவிர்க்க முடியாது. :P அதை மற்றவர்கள் நிதானமாக எடுத்து குறைகளை நிவர்த்தி செய்ய முயல வேண்டும்

நீங்கள் இதை என் குறையாக சொல்லி இருந்தால் நான் நிறைவாக எடுத்து கொள்கிறேன்...! :P

யாழ் களத்துக்குள் ஒருவரோடு ஒருவருக்கு பிரச்சினைகள் எங்கு ஆரம்பிக்கிறது, மட்டுறுத்துனரின் வெட்டுக்கள் எங்கு வந்து முடித்து வைக்கிறது என்பது எல்லாம் ஒருவரின் குறைகளை மற்றவர் சொல்ல முற்படும் போது இல்லை எண்று நீங்கள் சொன்னால், அதைப்பற்றி நான் சொன்ன குறைகளை, நிற்றைவான மனத்துடன் குறைவில்லாமல் மன்னிப்பு வேண்டிக்கொள்கிறேன்.....! ;)

Edited by தயா

இனியவளின் பணி மகத்தானது. வாழ்த்துக்கள்

இனியும் அவள் பணி தொடரட்டும்.

ஒரு வாரத்து யாழின் அசைவுகளை கவிதையாகவும் கனமாகவும் வரைந்தளித்தமை மிகமிக வரவேற்கத்தக்கது.

நட்புடன் பரணீதரன்

நல்லதொரு முயற்சி வாழ்த்துகள் இனியவள் தொடரட்டும் உங்கள் பணி...........நாளை மறுதினம் குறிபிட்ட ஆளை சொல்லுவீங்கள் என்று குறிபிட்டு இருந்தீர்கள் அந்த நபரை அறிய ஆவலாக இருகிறது..........அத்துடன் சின்ன விண்ணப்பம் இந்த பக்கத்தில் விமர்சனம் செய்யாமல் அதற்கு வேறொரு பக்கம் ஆரம்பித்தால் வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும் என்பது சிறிய விண்ணப்பம்.......

வாழ்த்துகள்

;)

1. எழுத்துப் பிழை

நீங்கள் சொல்லுவதை நான் நிச்சயமாக ஒத்துகொல்லத்தான் வேண்டும்,

இந்த களத்திற்க்கு வந்த பின் அதி பல முன்னேற்றங்கள் தெரிகின்ரன!!!!

சிறுவயதிலே நம் நாட்டை விட்டு வந்து இங்கு

வளர்ந்து வரும் என்னை போன்ற இளைஞர்களை ஊக்குவிக்கும் கடமை உங்களை போன்ற பெறியோறுக்கு உண்டு!!!

நாங்கள் மற்றவர் போல் எங்கள் மொழியை மறக்கவில்லை அதை கற்றுக்கொள்ள ஆர்வத்தில் இருக்கின்றேம்..

குற்றம் மட்டும் கண்டு பிடிக்காமல் இப்படி பட்ட விடையத்தில் எங்களை ஊக்குவியுங்கள், வருங்கால சந்ததியினர் உங்களுக்கு ஒரு ஓப்போடுவார்கள்................ போடுவார்கள்!!! :(

2. விமர்சனம் என்ற வகையில் உங்கள் தனிப்பட்ட கருத்தை மேலதிகமாக விடயத்துக்கு வெளியில் கொணரக் கூடாது.

இந்த விமர்சனம் என்பது ,என்னால் எழுதப்பட்டது!!!

என் கண்காணிப்புகளைத்தான் என்னால் எழுத முடியும்

அது யார் தலைப்பாக இருந்தாலும் ............................... என் பார்வைக்கு பட்டவைகளை ,நகைச்சுவையாக இங்கு குறிப்பிட்டு இருந்தேன்!! இதில் யார் மனதையும் நான் புண்படுத்தவில்லை!!!

உங்களுக்கும் காலம் வரும் கவலை வேண்டாம் !!! :D:D

மற்றும் படி உங்கள் முதல் முயற்சி வெகுவாக பாராட்டத்தக்கதாகவே உள்ளது எமது பார்வைக்கு.

சொல்லுவதை சொல்லிவிட்டு கடைசியில்..................... நான் சும்மா.... :D:(

நன்றி

Edited by இனியவள்

விமர்சனம் முன் வைக்கும் பொழுது அந்த விமர்சனத்தை பிளஸ் வடிவில் எதிர்பார்க்கும் யாழ் கொம்மில்

உங்கள் வயதை நாங்கள் எட்டும் போது,

நிச்சயமாக அது ஒரு பிளஸ்சாக யாழ் கொம்மில் இருக்கும் என்ற நம்பிக்கையை நாங்கள் இழக்கவில்லை!!!

நாங்கள் வாழ்வில் எதை மறந்தாலும்,

எப்படி கடினப்பட்டு முன்னேறினோம் என்பதை மறக்க கூடாது!!!!!

எங்கள் முன்னேற்றத்திற்கு இப்படி பட்ட தடைகள் இருந்தாலும்

நாங்கள் முன்னேற்றம் அடைவோம் என்ற நம்பிக்கையை இந்த ஈழத்துப்பெண் இழக்கவில்லை!!

இது ஈழத்தில் உருவாகிய பாடலில் கூட இருக்கின்றது................... தெரியுமா ???

அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள் smile.gif

எங்கள் வாழ்க்கையில் பிடித்தவைகள் சில, பிடிக்காத விடையங்கள் அதிகம்!!

எல்லோருக்கும் எல்லாம் பிடிக்கனும் என்ற கட்டாயம் நிச்சயமாக இல்லை!!!

பிடிக்காததை தவிர்ப்பது மனிதனுக்கு அழகு!!!

நன்றிகள்

Edited by இனியவள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு முயற்சி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதில் இல்லையே இனியவள்

அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்கான உறுப்பினரை நான் தெரிவுசெய்யும் நேரம் நெறுங்கிவிட்டது!!!

யாரை ??? அது தானுங்க நம்ம ஊர்குருவி............................ இப்ப புரிந்துவிட்டதா யார் என்று ???

இல்லையா ??? அது தானுக்க நம்ம கறுப்பி அக்கா!!!

வலைஞன் அவர்களே,

மிக நல்ல பணி. இனியவள் நீங்களும் மிக அருமையாகத் தொகுத்தளித்திருக்கின்றீர்க

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்,

தமிழில் பலரும் இடரும் இடங்களில் தான் நீங்களும் தடக்கி இருக்கிறீர்கள். அவையாவன,

1) ல, ள, ழ

2) ர, ற

3) ந, ன, ண

உதாரணமாக,

சிறுவயதிலே நம் நாட்டை விட்டு வந்து இங்கு

வளர்ந்து வரும் என்னை போன் இளைஞர்களை ஊக்குவிக்கும் கடமை உங்களை போன்ற பெரியோருக்கு உண்டு!!!

நாங்கள் மற்றவர் போல் எங்கள் மொழியை மக்கவில்லை அதை கற்றுக்கொள்ள ஆர்வத்தில் இருக்கின்றோம்..

குற்றம் மட்டும் கண்டு பிடிக்காமல் இது போன்ற விடையத்தில் எங்களை ஊக்குவியுங்கள், வருங்காந்ததியினர் உங்களுக்கு ஒரு ஓ................... போடுவார்கள்!!!

(உங்களுக்கு ஓ......நன்றாக வருகின்றது!)

இந்த விமர்சனம் என்பது ,என்னால் எழுதப்பட்டது!!!

என் கண்காணிப்புகளைத்தான் என்னால் எழுத முடியும்

அது யார் தலைப்பாக இருந்தாலும் ............................... என் பார்வைக்கு பட்டவைகளை ,நகைச்சுவையாக இங்கு குறிப்பிட்டு இருந்தேன்!! இதில் யார் மனதையும் நான் புண்படுத்தவில்லை!!!

உங்களுக்கும் காலம் வரும் கவலை வேண்டாம் !!!

உங்கள் வயதை நாங்கள் எட்டும் போது,

நிச்யமா அது ஒரு பிளஸ்சாக யாழ் கொம்மில் இருக்கும் என்ற நம்பிக்கையை நாங்கள் இக்கவில்லை!!!

நாங்கள் வாழ்வில் எதை மறந்தாலும்,

எப்படி கடினப்பட்டு முன்னேறினோம் என்பதை மறக்க கூடாது!!!!!

எங்கள் முன்னேற்றத்திற்கு இப்படி பட்ட தடைகள் இருந்தாலும்

நாங்கள் முன்னேற்றம் அடைவோம் என்ற நம்பிக்கையை இந்த ஈத்துப்பெண் இக்கவில்லை!!

இது ஈத்தில் உருவாகிய பாடலில் கூட இருக்கின்றது................... தெரியுமா ???

அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள் smile.gif

எங்கள் வாழ்க்கையில் பிடித்தவைகள் சில, பிடிக்காத விடையங்கள் அதிகம்!!

எல்லோருக்கும் எல்லாம் பிடிக்கனும் என்ற கட்டாயம் நிச்சயமாக இல்லை!!!

பிடிக்காததை தவிர்ப்பது மனிதனுக்கு அழகு!!!

இது உங்களுக்கும் பலருக்கும் நன்மை தரும் என்ற நோக்கில் எனக்கு தெரிந்தவரை திருத்தியுள்ளேன். அதிலும் தவறுகள் இருப்பின் இனி வருபவர்கள் திருத்துவார்கள்!

அன்புடன்,

Edited by சாணக்கியன்

ஆஹா இப்படி ஒன்று ஆரம்பமாகி இருக்குதா? அந்ன்றி வலஞன் அண்ணா.

இனியவள் நல்லாக சொல்லி இருக்கிறீங்க. .

பாராட்டுக்கள் இனியவளக்கா! நல்லாச் செய்துள்ளீங்க...நன்றி வலைஞன் அண்ணா...நல்ல திட்டம்..

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்,

தமிழில் பலரும் இடரும் இடங்களில் தான் நீங்களும் தடக்கி இருக்கிறீர்கள். அவையாவன,

1) ல, ள, ழ

2) ர, ற

3) ந, ன, ண

உதாரணமாக,

இது உங்களுக்கும் பலருக்கும் நன்மை தரும் என்ற நோக்கில் எனக்கு தெரிந்தவரை திருத்தியுள்ளேன். அதிலும் தவறுகள் இருப்பின் இனி வருபவர்கள் திருத்துவார்கள்!

அன்புடன்,

உண்மை தான் , உங்கள் உதவிக்கு நன்றிகள்!!!! :rolleyes::D:D

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி மேமின் காலக்கண்ணாடி.. பூதக்கண்ணாடி..! (பூதக்கண்ணாடி.. விடயங்களை விபரமாகப் பார்க்க உதவுவது.. நுணுக்குக்காட்டி என்றும் அழைக்கப்படும்) :)

அதுசரி.. எல்லாரும் நெடுக்ஸ் முயலுக்கு மூன்று கால் என்று வாதிடுபவர் என்று சொல்லினம்.. நீங்க மட்டும் 4 கால் என்றீங்களே.. முயலுக்கா நெடுக்ஸுக்கா..??! :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சகோதரி கறுப்பி!

மிகவும் சுருக்கமாக விடயத்திற்கு நேராகவே வந்துள்ளீர்கள். எந்தவிதமான, சலசலப்புமில்லாமல் கறுப்பிக்கு கறுப்பி தான் நிகர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்...

தொடருட்டும் உங்கள் பணி.

கப்பி அக்கா பேஷ் பேஷ் நல்லா இருந்துச்சு................மாயகண்ணாடி ஆ ஆ மன்னிக்கவும் காலகண்ணாடி...............அப்ப வரட்டா..............

:)

காலக்கண்ணாடி நல்லாயிருக்கு கடைசியில என்னை மாட்டி விட்டீங்க பாருங்க அது மட்டும் நல்லாவே இல்லைங்க. பறவாயில்லை முயற்சி செய்கிறேன். :)

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.