Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாற்ற கண்ணாடியும் அழகு.கு.சா அண்ணே எங்கையுங்கோ கண்ணாடியைக் காணாம்? இன்று திங்களாயிற்று. :wub:

  • Replies 912
  • Views 67.5k
  • Created
  • Last Reply

:unsure: ஒவ்வொருவரும் அனுமதியோடு பெயர்மொழியப்படவேண்டும்..

அதே போன்றும்.. பெயர் மொழியப்படும் சிறிது.. கடமையுணர்வோடு செய்ய வேண்டும்..

காலக்கண்ணாடி வரவர களையிழந்து போவது போலவும்.. ஆர்வமில்லாமல் ஆனதுபோலவும் தெரிகிறது..

உரியவர்கள்..மெருகேற்றினால் எல்லோருக்கும் பயனே..

குமாரசாமி அண்ணா எப்ப கண்ணாடியை காட்டுவேள்...

தவிர்க்க முடியாத காரணத்தால் குமாரசாமியால் கடந்த வாரத்துக்குரிய காலக்கண்ணாடியை தொகுத்து வழங்கமுடியவில்லை. ஞாயிறு இரவு தனிமடலில் அறிவித்திருந்தார். உடனடியாக வேறு ஒருவரை ஒழுங்குபடுத்த முடியவில்லை. உடனடியாக வேறு ஒருவரால் காலக்கண்ணாடியை (7 - 14 ஒக்ரோபர்) இன்று அல்லது நாளை செய்யமுடிந்தால் அறியத் தரவும். அல்லது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு கிழமைக்கான காலக்கண்ணாடியை ஒன்றாகத் தொகுக்கலாம். :unsure:

கண்ணடிய எல்லாரும் ஆகவும் சீரியசாக எதிர் பார்ப்பதும், மற்றது மற்றையவர்களின் கண்ணாடியுடன் ஒப்பிட வெளிக்கிடுவதும் தான் இப்படி பிரச்சனை வரக் காரணம் என்டு நினைக்கிறன்.

வேறு ஒருவரும் செய்ய முன்வராவிட்டால் கு.சா அண்ணா செய்ய வேண்டிய கண்ணாடிய கு.சா அண்ணா சார்பாக நான் ஒரு அதிரடி கண்ணாடியா நாளைக்கு செய்து தரலாம்.

மாப்ஸ் இருக்கக் கவலையேன்:-) அதிரடியா பார்ப்பம் பார்ப்பம்.!

  • கருத்துக்கள உறவுகள்

காலக்கண்ணாடி செய்பவர்கள், அடுத்த காலக்கண்ணாடி செய்பவரை தனிமடலில் கேட்டு அவர் விரும்பினால் தான் அடுத்ததாகக் காலக்கண்ணாடி செய்ய கேட்கவேண்டும். என்னை ஜெனனி அவர்கள் தனிமடலில் கேட்டார். நான் ஒம் என்று பதில் அளித்தபின்பு அவர் தனது காலக்கண்ணாடி வெளியுடும் போது அடுத்ததாக கந்தப்பு செய்வார் என்று எழுதி இருந்தார். அவ்வாறே நானும் எனது காலக்கண்ணாடி செய்யமுன்பு யாழ்கள உறவு ஒருவரை அடுத்த காலக்கண்ணாடியைச் செய்வீர்களா என்று தனிமடலில் கேட்க, அதற்கு அந்தக் கிழமை நேரமில்லை என்று பதில் அளித்தார். இதனால் நான் சுகன் அவர்களைக் கேட்டேன். அவர் ஒம் என்றதும் எனது காலக்கண்ணாடி வெளியிடும் போது சுகன் அடுத்ததாகச் செய்வார் என்று எழுதினேன்.

காலக்கண்ணாடி செய்பவர்கள், அதைச் செய்யமுன்பே, அடுத்து யாரை அழைப்பது என்று தனிமடலில் கேட்டு அவர் ஒம் என்றபின்பு காலக்கண்ணாடியில் அடுத்து செய்பவரின் பெயரை எழுத வேண்டும்.

இன்னும் காலக்கண்ணாடி செய்யாத செய்யக்கூடிய சிலரின் பெயர்கள் - நெடுக்காலபோவான், இரசிகை, சினேகிதி, மணிவாசகன், நாரதர், சாத்திரி, யமுனா, புத்தன், இலக்கியன், இவள்,குறுக்காலபோவான்,பண்டிதர

அதிர அதிர

அதிரடியாய்

காலக்கண்ணாடி அருமை. கலைஞன் காலக்கண்ணாடி மீண்டும் கலக்கல்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் உங்கள் காலக்கண்ணாடி அழகு.

அதிரடியாய் வந்த கண்ணாடி என்னையும் சேர்த்தே அதிர வைத்தது.

வாழ்த்துகள் .

இந்த வேகமும்...விவேகமும்..கலைஞன் ஒருவருக்கே சாத்தியம்..

கலக்கீட்டேடா....கலைஞா..

வாழ்த்துகள்....

அதிரடியா பல இடங்களிளும் நுழைந்து தகவலை பெற்று அதிரடியா தந்து காலகண்ணாடியை உடைக்காம தன்னுடைய விம்பத்துடன் கு.சா தாத்தா மற்றும் தாத்தாவின் 5 வகுப்பு காதலி :blink: பரிமளம் பாட்டி ஆகியோரையும் உள்ளடக்கி காலகண்ணாடியை அதிரடியாகவும் நேர்தியாகவும் தந்து சென்ற விதம் அருமை பாராட்டுகள் ஜெனரல்!! :lol:

ஜம்மு பேபி காலகண்ணாடி பற்றிய பார்வை!!

ஜெனரலின் காலகண்ணாடி பெயரை கேட்டாலே சும்மா அதிருதிலலல :D !!அதிரடியா வந்த காலகண்ணாடி சும்மா அதிருது ஜெனரல் வாழ்த்துகள்!! :)

அப்ப நான் வரட்டா!!

நள்றி மாப்பு,

ஆதிக்கும் மிக இக்கட்டான காலகட்டத்தில் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. காலக்கண்ணாடி என்பது களத்தில் ஏற்பட்ட வாத விவாதங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதவேண்டியது. எல்லோராலும் அவ்விடயத்தைச் சிறப்பாக எழுத முடியாது. மற்றது இங்கு இடப்படும் வாதவிவாதங்களை சரியாக கிரகித்து யாழ்க்கண்ணாடியைத் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான விடயம்.

முதலில் கு.சா விடம் ஆதி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆதி தெரிவு செய்யப்பட்டவிதமும் இவ்விதமே, ஆதலால் இதுதான் நடைமுறையில் உள்ளது என்று நினைத்துவிட்டேன்.

கலைஞன் காலக்கண்ணாடி பற்றிய பல தெளிவான கருத்துகளை முன் வைத்திருக்கிறீர்கள். வரும் நாட்களில் ஆரோக்கியமான நடைமுறையைக் காணலாம் என்று நம்புகிறோம்.

கற்பனை நாயகியாக பரிமளாத்தையும் புகுத்தி நல்லாக சில மணித்தியாலங்களுள் குமாரசாமி தாத்தாவுக்காக அவரோடும் பரிமளாத்தோடும் சம்பாசனை செய்வது போல அனைத்து பகுதிகளுக்கும் சென்று தொகுத்த விதம் அருமை. கலைஞனுக்கு நிகர் கலைஞனே. வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு.. காலக் கண்ணாடி பிரகாசம். நன்றிகளுடன்.. கு.சாவுக்காக..! :blink:

கலைஞனுக்கு எனது வாழ்த்துக்களும்..........

முதலில் கு.சா விடம் ஆதி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆதி தெரிவு செய்யப்பட்டவிதமும் இவ்விதமே, ஆதலால் இதுதான் நடைமுறையில் உள்ளது என்று நினைத்துவிட்டேன்.
வணக்கம் ஆதிவாசி.உங்களை கேட்கமால் தான் உங்கள் பெயரை குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் உடனே உங்களுக்கு தனிமடல் மூலம் தெரியப்படுத்தி உங்களால் முடியாவிட்டால் சொல்லுங்கள் வேறு யாரையாவது போடுகின்றேன் என்று கேட்டிருந்தேன். நீங்கள் அதற்கு எவ்வித பதிலும் தரவில்லை. ஆகவே நான் நினைத்தேன் நீங்கள் செய்வீர்கள் என்று. உங்களுக்கு கஸ்டம் என்றால் அறியத்தந்து இருக்கலாம். (தனிமடல் கிடைக்கவில்லை என்று மட்டும் சொல்லாதீர்கள்.)

ஆதிவாசியின் காலக்கண்ணாடி மற்றும் கலைஞனின் அதிரடி காலக்கண்ணாடி நன்றாக இருக்கின்றது.வாழ்த்துக்கள்.

Edited by RaMa

photo-3376.jpg

கருத்துக்கள் சொன்ன, சொல்லப்போகும் அனைவருக்கும், கு.சா அண்ணா, பரிமளம் அக்கா, மற்றும் எனது பணிவன்புடன் கூடிய நன்றிகள்!

வருகின்ற ஒக்டோபர் 21, 2007 அடுத்த யாழ் காலக்கண்ணாடியை வடிவமைக்க என்னால் அன்புடன் அழைக்கப்பட்டு, இணக்கம் தெரிவித்து இருப்பவர்..

யாழ் டைகர் பமிழி (தலைவர்)

யாழ் சிட்னி நண்பர் அமைப்பு (உப தலைவர்)

யாழ் சுதந்திர கருத்தாளர் சங்கம் (உறுப்பினர்)

யாழ் பம்பர்ஸ் அணியும் சங்கம் (தலைவர்)

யாழ் சும்மா வந்து போகும் சங்கம் (ஆலோசகர்)

யாழ் காதல் வளர்ப்பு சங்கம் (ஆலோசகர்)

யாழ் நேசக்கர அமைப்பு (உறுப்பினர்)

வருங்கால அவுஸ்திரேலிய பிரதமர்!!

இவ்வளவு பெருமைகளை தன்னகத்தே கொண்ட உங்கள் ஜம்மு பேபி...

Edited by கலைஞன்

ஜம்மு பேபி இவ்வளவு சங்கத்திலும் தலையிடுறாரா? :rolleyes:

ஜம்மு உங்கள் காலக்கண்ணாடி ஜொலிக்க வாழ்த்துக்கள். :unsure:

Edited by வெண்ணிலா

அட அட இவ்வளவு சங்கத்திலையும் நாம இருகிறது இன்றைக்கு தான் எனக்கே தெரியும் என்றா பாருங்கோ :unsure: !!ஜம்மு பேபியை எல்லாம் காலகண்ணாடி செய்யவிட்டா கண்ணாடியை உடைத்து போடும் என்று தெரிந்தும் கூப்பிட்ட ஜெனரலை நினைக்க பாவமா இருக்கிறது!! :):D

நிலா அக்கா மக்கள் நலன் கருதி இவ்வளவு சங்கத்திலையும் நாம இணைந்து கொண்டோம் மக்கள் சேவை மகேசன் சேவை என்றபடியா தான்!!நிலா அக்கா வாழ்த்துகளிற்கு நன்றி ஜொலிப்பதை பற்றி நேக்கு தெரியாது பார்போம்!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"கண்ணாடியில முகத்தை பார்க்கலாம் ஆனா காலத்தை கண்ணாடியில பார்கிறது என்ற அது யாழ்கால கண்ணாடி" :)

'Oct 1 2007, 02:39 AM' post='348883']

யாழ் காலக்கண்ணாடி - ரமா

அடுத்து வில்லிசை பாட சீ யாழ் காலக் கண்ணாடியை தொகுத்து வழங்க நாம் அழைப்பது வாலை பறிகொடுத்து அடர் அவையில் படுத்து உறங்கி கொண்டிருக்கும் "ஆதிவாசியை"

வணக்கம் ஆதிவாசி.உங்களை கேட்கமால் தான் உங்கள் பெயரை குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் உடனே உங்களுக்கு தனிமடல் மூலம் தெரியப்படுத்தி உங்களால் முடியாவிட்டால் சொல்லுங்கள் வேறு யாரையாவது போடுகின்றேன் என்று கேட்டிருந்தேன். நீங்கள் அதற்கு எவ்வித பதிலும் தரவில்லை. ஆகவே நான் நினைத்தேன் நீங்கள் செய்வீர்கள் என்று. உங்களுக்கு கஸ்டம் என்றால் அறியத்தந்து இருக்கலாம். (தனிமடல் கிடைக்கவில்லை என்று மட்டும் சொல்லாதீர்கள்.)

ஆதிவாசியின் காலக்கண்ணாடி மற்றும் கலைஞனின் அதிரடி காலக்கண்ணாடி நன்றாக இருக்கின்றது.வாழ்த்துக்கள்.

ஏன் ரமா அனாவசியமா டென்சன் ஆகிறீங்க?

நீங்க உங்க காலக்கண்ணாடியில் ஆதியின் பெயரை முன்மொழிந்த பின்னர்தானே ஆதிக்குத் தகவல் அனுப்பியிருந்தீர்கள். நீங்கள் முன்பே ஆதியிடம் பேசிவிட்டல்லவா ஆதியின் ஒப்புதலுடன் ஆதியைத் தெரிவு செய்திருக்கவேண்டும். அப்படி நீங்கள் செயற்பட்டிருந்தால் ஆதியும் இப்படி ஒரு கருத்தை எழுதி இருக்க மாட்டேன்.

எனக்கு உங்களுடைய மடல் கிடைத்த நேரம் 2ந்திகதி 2:05pm

உங்களுடைய காலக்கண்ணாடி இணைக்கப்பட்ட திகதியை நேரத்தை பாருங்கள்.

Edited by வலைஞன்
திருத்தம் செய்யப்பட்டுள்ளது!

வணக்கம் கருத்துக்கள உறவுகளே,

காலக்கண்ணாடியின் அடுத்த தொகுப்பாளரை அழைப்பதற்கு முதல் அவரின் சம்மதத்தை தனிமடலூடாக உறுதிப்படுத்திவிட்டு - அதன்பின்னர் கருத்துக்களத்தில் பெயரைக் குறிப்பிடுதல் நல்லதே. காலக்கண்ணாடியை தொடங்கும் போது இதனை விசேடமாக நாம் குறிப்பிடவில்லை. கருத்துக்கள உறவுகள் தாமாகவே கதைத்து ஒழுங்குபடுத்தி முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதால் விட்டுவிட்டோம். அதுவே, தவறான புரிதல்கள் - தாமதங்கள் ஏற்பட காரணமாக அமையக்கூடாது என்பதால் - இதனைக் கவனத்தில் கொள்வோம்.

உதாரணமாக, அடுத்த கிழமை காலக்கண்ணாடியைத் தொகுக்க கருத்துக்கள உறவு ஒருவர் அழைக்கப்பட்டால் - அவர் தனக்கு அடுத்ததாக தான் அழைக்க இருப்பவரோடு இப்போதே தொடர்புகொண்டு - அவரின் சம்மதத்தை உறுதிப்படுத்திவிட்டு - தனது காலக்கண்ணாடியில் அவரின் பெயரைக் குறிப்பிடலாம்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள். அத்தோடு ஒவ்வொருவரும் தமக்கான தனித்துவத்தோடு சிறப்பாகவே செய்கிறார்கள். அதிகநேரம் செலவழித்து இதனை செய்யவேண்டும் என்பதல்ல நோக்கம் - தாம் வாசித்ததை, தாம் இரசித்ததை, மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்காகவே இது. எனவே, பெரியளவில் செய்யவேண்டும் என்கிற தயக்கங்கள் தேவையே இல்லை - தயக்கமின்றி உற்சாகமாக வாருங்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் உங்களின் திடீர் காலக்கண்ணாடியை பார்த்தேன், ரசித்தேன்.

சிறப்பாகவுள்ளது, பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரின் காலக்கண்ணாடி நன்றாக இருக்கிறது. யாழில் சென்ற வாரம் வந்த பல விடயங்களை இக்காலக்கண்ணாடியினைப் பார்ப்பதன் மூலம் அறியக்குடியதாக இருக்கிறது. இக்காலக்கண்ணாடி பார்த்து விட்டு தான் நான் சென்ற வாரம் பார்க்காத சில ஆக்கங்களை சென்று பார்த்தேன் (உ+ம் - சின்னக்குட்டியாரின் அப்பன் மவனே சிங்கமடாவின் 365 வது நாட்களைக் கடந்த ஒலி,ஒளிவடிவங்கள்). கு.சாமி சென்றவாரம் சொன்ன கருத்துக்களை இணைத்து, அதற்கு நகைச்சுவையாகப் பதில் அளிக்கும் பரிமளம் பாத்திரம் மிகவும் நன்றாக இரசிக்கக் கூடியதாக இருக்கிறது. அத்துடன் கலைஞரின் முக்கிய கருத்துக்கள் நன்றாக இருக்கிறது. கலைஞர் மறுபடியும் காலக்கண்ணாடியினை அழகாகப் படைத்திருக்கிறார். பாராட்டுக்கள்.

கலக்கண்ணாடி சிறப்பாக உள்ளது. ரசிக்கும் படியாக ஒரு உரையாடல் மூலம் பல விசயங்களை தொட்டு சென்றுள்ளீர்கள். பல கருத்துக்களையும் முன்வைத்து நல்லமுறையில் வழங்கியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

கலைஞரின் காலக்கண்ணாடி நன்றாக இருக்கிறது. அக்காலக்கண்ணாடியைப் பார்த்து தான் நான் எனது நியூசிலாந்து தொடருக்கு 100 கருத்துக்கள் பதியப்பட்டதை அறிந்தேன்.

குறுகிய கால அவகாசத்தில் சிறப்பான முறையில் திடீர் காலக் கண்ணாடியைத் தயாரித்த கலைஞனுக்கு எனது பாராட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.