Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்

Featured Replies

பேபி உங்களின் காலக்கண்ணாடி மிகவும் அருமையாக உள்ளது,என்ன அனைத்தையும் படிக்க பொருமையில்லாத நிலைக்கு தல்லப்பட்டாலும்,அனைத்தையும் வாசித்தேன்..............

வாழ்த்துக்கள் பேபி!!!

  • Replies 912
  • Views 67.5k
  • Created
  • Last Reply

ஜமுனா, அடுத்த காலக்கண்ணாடியை யார் செய்யினம்.... ? :unsure:

காலக்கண்ணாடி எழுதாதா சில உறுப்பினர்கள் :

சகோதரம் (தயா அண்ணா)

தூயவன் அண்ணா

நெடுக்ஸ் அண்ணா

சாணக்கியன் அண்ணா

நுணாவிலான்

பண்டிதர்

குறுக்கால போவான்

இணையவன்

இறைவன்

அஜீவன் அண்ணா

சுண்டல் அண்ணா

டன் அண்ணா

இவள் அக்கா

இளைஞன்

ஈழவன்85

ஈழத்திருமகன்

சுவி

பனங்காய்

வாசகன்

பூஸ் குட்டி

இப்படி என்னும் எழுதாக பல உறுப்பினர்கள் இருக்கினம்.... இவர்கள் ஒவ்வொரு நாளும் யாழ் வருபவர்கள்.இவர்களில் ஒருவர் தானாக முன்வரலாமே ? :D

ஜமுனா சங்கம் எல்லாம் ஆரம்பிச்சனீங்கள்.... எல்லா சங்கமும் நித்திரையோ .... ஹிஹி உங்கள் சங்கங்கள் இதையும் பார்க்கலாமே.... :) சங்கத்தின் தலைவர் சொன்னால் சங்கத்திலுள்ள உறுப்பினர்கள் கேப்பினம் தானே? உங்கள் சங்கத்திற்கு சாணக்கியன் அண்ணாவ தலைவர் ?எங்க சாணக்கியன் அண்ணா ? :lol:

நெடுக்ஸ் அண்ணா, நீங்கள் ஒவ்வொரு காலக்கண்ணாடிக்கும் வந்து பாராட்டுத் தெரிவுக்கிறனீங்க... ஒவ்வொரு நாளும் வாறனீங்க.... இந்த கிழமை காலக்கண்ணாடியை நீங்கள் செய்யலாமே ? :lol::)

Edited by அனிதா

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் அன்புக்கு நன்றி அனிதா. ஆனால் காலக்கண்ணாடியில் முதல் தணிக்கை பெற்ற பெருமை எமக்கு வேண்டாமே என்று பார்க்கின்றேன்.

ஒருவர் தனிநபர் தாக்குதல், கருத்து விதி முறைகளை மீறியமை என்று பட்டியல் வளர்ப்பார், மற்றவர் எதுக்கெடுத்தாலும் பண்பற்ற வசனம் என்று எதையும் நீக்கி அர்த்தம் கற்பிப்பார். இந்த ரோதனை வேணுமா?

தயா அண்ணா என்ன முடிவு எடுக்கி;றார் என்று தெரியல்லை, ஆனால் நான் எழுதுவதாக இல்லை.

யமுனா அவர்கள் மிக விரிவான ஒரு காலக்கண்ணாடியை தொகுத்துள்ளார், பாராட்டுக்கள்.

யமுனாவை விளையாட்டுப்பிள்ளை என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் விபரம் அறிந்தபிள்ளை என்று நிரூபித்திருக்கிறார். எல்லாவற்றையும் வாசிப்பது என்பது எல்லாராலும் முடியாது. உண்மையில் யமுனாவை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

ஜமுனாவிடம் நல்ல ஆற்றல்கள் இருக்கின்றது. கீழே அவரின் பதிவுகளில் இரண்டு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=27157

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26570

தொடர்ந்து அவர் தனது தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்த வாழ்த்துக்கள்.

யமுனா மிகப் பொறுமையாக பதிவுகளை எல்லாம் வாசித்து தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். சுகன் சொன்னது போல உங்களின் தனித்துவமான திறமைகளை தொடர்ந்தும் வெளிப்படுத்துங்கள்.

என் பேபியின் வழமையான ரசையில்

பொறுமைக் ஒரு முத்திரை பதித்து

வலம் வந்த விதம் அருமை எப்போதும்

பேபியின் முத்திரை தனித்துவம் தான்

வாழ்த்துக்கள்.......

இறந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியதில் தமிழ்தேசியத்தின்பால் உள்ளஈடுபாடு தெரிந்தது

பெற்ற தாயை மதித்ததில் தாயை மதிக்கும் பண்பு புரிந்தது

முழுவதையும் அலசி ஆராய்ந்து எழுதி முடித்ததில் தன்நம்பிக்கை வெளிப்பட்டது. முடிவில் தன்னடக்கம் தெரிந்தது

மொத்தத்தில் அசத்தலோ அசத்தல் ஜம்மு

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

வாழ்க வளர்க

ஜம்மு காலக்கண்ணாடி சுப்பர்! எப்படி வாழ்த்துகிறது என்றே தெரியவில்லை! வாழ்த்துக்கள்

சென்ற வாரத்தின் எல்லா ஆக்கங்களையும் விவரித்து விரிவான முறையில் காலக்கண்ணாடியைத் தயாரித்த ஜமுனாவிற்குப் பாராட்டுக்கள்.

ஆனால் எல்லாவற்றையும் வாசிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் சுருக்கமாக இருந்தால், யாழ் களத்தில் ஒரு வாரத்தில் நடந்தவற்றை சுலபமாக அறிந்து கொள்ளலாமல்லவா ?

நாளை (சனிக்கிழமை) காலை வரை யாரும் இவ் வாரக் காலக்கண்ணாடியைத் தயாரிக்க முன்வராவிட்டால் நான் செய்கிறேன்.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

பேராண்டி.. ஜம்மு.. காலக் கண்ணாடி தூள்...!

சுக்குநூறாக்கின தூள் அல்ல.. மற்றது..! :D:D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா, நீங்கள் ஒவ்வொரு காலக்கண்ணாடிக்கும் வந்து பாராட்டுத் தெரிவுக்கிறனீங்க... ஒவ்வொரு நாளும் வாறனீங்க.... இந்த கிழமை காலக்கண்ணாடியை நீங்கள் செய்யலாமே ?

நன்றி புள்ள தாத்தாவையும் ஞாபகம் வைச்சிருக்கிறதுக்கு. தாத்தாவுக்கு காலம் சரியில்லைப் புள்ள. உள்ள சோழி காணாது என்று இது வேறை தலையிடியாகிடும். வயசான காலத்தில சரியா கண்ணும் தெரியுதில்லப் புள்ள. உங்க தானே இளம் பெடி பெட்டை நிறைய இருக்குது. அதுகளட்ட விட்டிருங்க. அவைதான் திறமையை வளர்க்க கற்றுக்க வேண்டியவை. எங்க காலம் இப்ப அவைட கையிலதானே புள்ள இருக்கு. அவைதான் முதன்மையா செயற்பட வேணும். திறமைகளை வெளிக்கொணரனும். :D

பேபி உங்களின் காலக்கண்ணாடி மிகவும் அருமையாக உள்ளது,என்ன அனைத்தையும் படிக்க பொருமையில்லாத நிலைக்கு தல்லப்பட்டாலும்,அனைத்தையும் வாசித்தேன்..............

வாழ்த்துக்கள் பேபி!!!

நன்றி இனி உங்களின் வாழ்த்துகளிற்கு!!பொறுமையா வாசித்ததிற்கு மிக்க நன்றிகள்!! :D

ஜமுனா, அடுத்த காலக்கண்ணாடியை யார் செய்யினம்.... ?

காலக்கண்ணாடி எழுதாதா சில உறுப்பினர்கள் :

சகோதரம் (தயா அண்ணா)

தூயவன் அண்ணா

நெடுக்ஸ் அண்ணா

சாணக்கியன் அண்ணா

நுணாவிலான்

பண்டிதர்

குறுக்கால போவான்

இணையவன்

இறைவன்

அஜீவன் அண்ணா

சுண்டல் அண்ணா

டன் அண்ணா

இவள் அக்கா

இளைஞன்

ஈழவன்85

ஈழத்திருமகன்

சுவி

பனங்காய்

வாசகன்

பூஸ் குட்டி

இப்படி என்னும் எழுதாக பல உறுப்பினர்கள் இருக்கினம்.... இவர்கள் ஒவ்வொரு நாளும் யாழ் வருபவர்கள்.இவர்களில் ஒருவர் தானாக முன்வரலாமே ?

ஜமுனா சங்கம் எல்லாம் ஆரம்பிச்சனீங்கள்.... எல்லா சங்கமும் நித்திரையோ .... ஹிஹி உங்கள் சங்கங்கள் இதையும் பார்க்கலாமே.... சங்கத்தின் தலைவர் சொன்னால் சங்கத்திலுள்ள உறுப்பினர்கள் கேப்பினம் தானே? உங்கள் சங்கத்திற்கு சாணக்கியன் அண்ணாவ தலைவர் ?எங்க சாணக்கியன் அண்ணா ?

நெடுக்ஸ் அண்ணா, நீங்கள் ஒவ்வொரு காலக்கண்ணாடிக்கும் வந்து பாராட்டுத் தெரிவுக்கிறனீங்க... ஒவ்வொரு நாளும் வாறனீங்க.... இந்த கிழமை காலக்கண்ணாடியை நீங்கள் செய்யலாமே ?

அனிதா பாட்டி (அக்கா) அடுத்த காலகண்ணாடியை யார் செய்யீனம் என்று நேக்கு தெரியாதுங்கோ!!மற்றும் நீங்க குறிபிட்ட உறவுகள் சிலரிடம் நான் கேட்டேன் அவர்களிற்கு தற்போது நேரம் இல்லை பிறிதொரு பொழுது செய்கிறோம் என்று சொன்னவர்கள்!!நீங்கள் பெயர் குறிபிட்டவர்களிள் ஒருவர் தாமகவே முன்வந்து செய்தால் மிகவும் நல்லது என்று நினைக்கிறேன் அவரை வருக வருக என வரவேற்கிறேன்!! :D

மற்றும் அனிதா பாட்டி (அக்கா) ஒருவருக்கு மடல் அனுப்பி கேட்கும் போது அவர் முடியுமா அல்லது இல்லையா என்று கூறிய பின் தான் மற்றவருக்கு மடல் அனுப்பமுடியும் ஏனேனின் இவர் தான் வந்து செய்கிறேன் என்று சொல்லிட்டா!!ஆகவே அவர் மடலில் என்ன சொல்கிறார் என்று பார்த்து தான் மற்றவருக்கு மடல் அனுப்பமுடியும் (மற்றவர்களை பற்றி தெரியாது நான் இந்த முறையில் தான் மடல் அனுப்புவேன்)இப்படி ஒருவர் வந்து சொல்லி பிறகு மற்றவருக்கு வெயிட் பண்ணி அவரும் இல்லை என்று சொல்ல இன்னொருவருக்கு அனுப்ப என்பது எல்லாம் கடினம் என்று நினைக்கிறேன் அவர்களே தாமாக முன்வந்து இந்த காலபகுதியில் தன்னால் முடியும் என்று கொடுத்தா இலகு என்று நினைக்கிறேன்!!

அனிதா பாட்டி (அக்கா) சங்கம் எல்லாம் நித்திரை இல்லையுங்கோ நேக்கு மொண்டசூரியில எக்சாம் அந்த நேரத்திலையும் கலைஞன் கேட்டதிற்கிணங்க காலகண்ணாடியை செய்தேன்!!பலருக்கு தனிமடல் அனுப்பி பார்தேன் இதற்கு மிஞ்சி என்னால் மிணகடமுடியவில்லை ஏனேனின் எக்சாமில மார்க்ஸ் குறைந்தா மம்மி ஏசுவா!!எனி வந்துட்டேன் தானே ஆனா சங்கம் இதனை பார்க்கமுடியாது ஏனெனில் இது அவர்களின் தனிபட்ட விருப்பு வெறுப்பு இதில் நாங்கள் தலையிடமாட்டோம்!!நாங்கள் சொன்னா கேட்க வேண்டும் என்பதில் தலைமையின் வெற்றி இல்லை என்பது உங்களுக்கு புரியும் ஆகவே எம் சங்கத்தில் எல்லாரும் ஒன்று அனிதா பாட்டி (அக்கா),சாணக்கியன் அண்ணாவிடம் கேட்டனான் அவருக்கு தற்போது வேலையில் சற்று பிசி என்பதால் பிறிதொரு பொழுது செய்கிறேன் என்று சொன்னவர்!! :D

நெடுக்ஸ் தாத்தா செய்தா நல்லா இருக்கும் எங்கே நெடுக்ஸ் தாத்தா!!

யமுனா அவர்கள் மிக விரிவான ஒரு காலக்கண்ணாடியை தொகுத்துள்ளார், பாராட்டுக்கள்.

ஜமுனாவிடம் நல்ல ஆற்றல்கள் இருக்கின்றது. கீழே அவரின் பதிவுகளில் இரண்டு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=27157

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26570

தொடர்ந்து அவர் தனது தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்த வாழ்த்துக்கள்.

நன்றி சுகன் அண்ணா உங்களின் வாழ்த்துகளிற்கு!! :lol:

யமுனா மிகப் பொறுமையாக பதிவுகளை எல்லாம் வாசித்து தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். சுகன் சொன்னது போல உங்களின் தனித்துவமான திறமைகளை தொடர்ந்தும் வெளிப்படுத்துங்கள்.

மிக்க நன்றிகள் இளைஞன் அண்ணா தங்களின் கருத்திற்கு நிச்சயமாக தொடர்ந்து வரும் காலங்களிள் வெளிபடுத்துகிறேன்!! :lol:

என் பேபியின் வழமையான ரசையில்

பொறுமைக் ஒரு முத்திரை பதித்து

வலம் வந்த விதம் அருமை எப்போதும்

பேபியின் முத்திரை தனித்துவம் தான்

வாழ்த்துக்கள்.......

கஜந்தி அக்கா எப்படி சுகம் கண்டு கனகாலம் மிக்க நன்றி அக்கா தங்களின் வாழ்த்துகளிற்கு!! :lol:

இறந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியதில் தமிழ்தேசியத்தின்பால் உள்ளஈடுபாடு தெரிந்தது

பெற்ற தாயை மதித்ததில் தாயை மதிக்கும் பண்பு புரிந்தது

முழுவதையும் அலசி ஆராய்ந்து எழுதி முடித்ததில் தன்நம்பிக்கை வெளிப்பட்டது. முடிவில் தன்னடக்கம் தெரிந்தது

மொத்தத்தில் அசத்தலோ அசத்தல் ஜம்மு

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

வாழ்க வளர்க

சிவா அண்ணா அசத்தலாக இருக்குதோ நீங்க சொன்னா சரி உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றிகள் சிவா அண்ணா!! :lol:

ஜம்மு காலக்கண்ணாடி சுப்பர்! எப்படி வாழ்த்துகிறது என்றே தெரியவில்லை! வாழ்த்துக்கள்

கவி ஆண்டி சூப்பரா இருக்குதோ எப்படி வாழ்த்துகிறது என்று தெரியவில்லையோ சிட்னில்லு வாறதா கேள்விபட்டேன் வரக்க பேபிக்கு லொலிபொப் கொண்டு வந்தா சரி கவி ஆண்டி மிக்க நன்றிகள் வாழ்த்துகளிற்கு!! :)

சென்ற வாரத்தின் எல்லா ஆக்கங்களையும் விவரித்து விரிவான முறையில் காலக்கண்ணாடியைத் தயாரித்த ஜமுனாவிற்குப் பாராட்டுக்கள்.

ஆனால் எல்லாவற்றையும் வாசிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் சுருக்கமாக இருந்தால், யாழ் களத்தில் ஒரு வாரத்தில் நடந்தவற்றை சுலபமாக அறிந்து கொள்ளலாமல்லவா ?

நாளை (சனிக்கிழமை) காலை வரை யாரும் இவ் வாரக் காலக்கண்ணாடியைத் தயாரிக்க முன்வராவிட்டால் நான் செய்கிறேன்.

நன்றி இணையவன் அண்ணா!!கூடுதலாக எழுதிவிட்டேனா எனி வரும் காலங்களிள் நீங்கள் சொன்னதையும் கவனத்தில் எடுகிறேன் (யூனியில சின்ன விசயத்தையும் அலசி எழுத சொல்லுவாங்க அந்த பழக்கதோஷம் தான் இணையவன் அண்ணா)!!

மிக்க நன்றிகள் இணையவன் அண்ணா நீங்களாகவே முன் வந்து காலகண்ணாடியை செய்ய ஒத்துகொண்டமைக்கு!! :)

பேராண்டி.. ஜம்மு.. காலக் கண்ணாடி தூள்...!

சுக்குநூறாக்கின தூள் அல்ல.. மற்றது..!

நெடுக்ஸ் தாத்தா தூளா மிக்க நன்றிகள்.......சுக்கு நூறாக்கிய தூள் அல்ல என்று சொல்லி இருக்கிறீங்க தாத்தா மிக்க நன்றி ஆனா என்னை வைத்து காமேடி கீமேடி பண்ணவில்லை தானே தாத்தா!! :)

Edited by Jamuna

ஆதிக்கு அடர் அவை மாதிரி யம்முப்பே(ய்)ப் இற்கு யுனிதான் ஞாபகம்.

யம்மு பேருக்கு ஏற்றாப் போல யம் பண்ணித் திரிஞ்சிருக்கா என்றது விளங்குது. ஆனா ஏன் சுண்டலை இழுத்துத் திரிஞ்சா என்றதுதான் விளங்கேல்லை???

யம்முப்பே(ய்)ப், காலக்கண்ணாடில எல்லாருடைய விம்பமும் தெரியுது. கெட்டிக்காரி:D

ஜமுனா சங்கம் எல்லாம் ஆரம்பிச்சனீங்கள்.... எல்லா சங்கமும் நித்திரையோ .... ஹிஹி உங்கள் சங்கங்கள் இதையும் பார்க்கலாமே.... சங்கத்தின் தலைவர் சொன்னால் சங்கத்திலுள்ள உறுப்பினர்கள் கேப்பினம் தானே? உங்கள் சங்கத்திற்கு சாணக்கியன் அண்ணாவ தலைவர் ?எங்க சாணக்கியன் அண்ணா ?

அனிதா தங்கா,

என்னை பற்றி என்ன சொன்னாலும் எனக்கு வலிக்காது, வலிச்சாலும் தாங்கிக்கொள்ளுவன், ஆனா எங்கடை சு.க.சங்கத்தை இந்த காலக்கண்ணாடி என்ற ஒரு சின்ன விசயத்தை வைச்சு சவால் விடுகிறதுதான் ரொம்பவே வலிக்குது!

சாணக்கியன் அண்ணாவிடம் கேட்டனான் அவருக்கு தற்போது வேலையில் சற்று பிசி என்பதால் பிறிதொரு பொழுது செய்கிறேன் என்று சொன்னவர்!! smile.gif

வேலைப்பழு சற்று தணிந்துள்ளது, மேலும் சங்கத்தை வேறை வம்புக்கிழுத்ததால காலக்கண்ணாடி உடைஞ்சாலும் பறவாயில்லை நானே செய்யிறதெண்டு தீர்மாணிச்சிருக்கிறன்.

இப்படி காலக்கண்ணாடி என்ற உடனேயே எல்லாரும் துண்டைக்காணேம் துணியக்காணோம் என்று ஓடுற நிலைக்கு தெரிந்தோ தெரியாமலோ நீங்க(செய்த ஆட்கள்), நாங்கள்(செய்யாத ஆட்கள்) எல்லோரும்தான் காரணம்! ஏனென்றா அவரவர் தங்கட திறமைய காட்டவெளிக்கிட்டு அதை பார்த்து எல்லோரும் பயந்து விறைச்சு போய் இருக்கினம். ஏன் எங்கடை தளபதி நெடுக்கே பெண் பயங்கரவாதம், அறிவியல் விஞ்ஞானம் என்றவுடன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு முன்னுக்கு வாரவர், காலக்கண்ணாடி என்றவுடன் எப்பிடி அமுக்கமா பின்வாங்கினார் என்று பார்த்தீர்கள் தானே. விக்கி விதிவிதிர்த்து வயசு போயிட்டு, கண்தெரியேல்ல என்று பின்வாங்கேக்க நிலமையின்ரை விபரீதம் உங்களுக்கு நல்லா விழங்குதுதானே.

என்ன பொறுத்தவரை காலக்கண்ணாடி என்கிறது ஒருவார யாழ்கள நிகழ்வு பற்றி ஒவ்வோரு உறுப்பினருடைய பார்வை அவ்வளவுதான். அதில் அவர் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து ஒரு சுருக்கமாக தரவேண்டும். அதை அவர் அவைஅவையின்டை ஒலி, ஒளி, சித்திர, எழுத்து, கலை, கவி திறமைகளுடன் வரையலாம். அதிலை தப்பில்லை! ஆனா அதே மாதிரி நானும் செய்ய வேணும் என்று நினைக்கிறதிலதான் பிரச்சினை வருகுது. அதுவும் கூட பிழையில்லை, ஏன் என்றால் எல்லாருக்கும் ஏதோ ஒரு திறமை கட்டாயம் இருக்கும், அதைதான் அவை வளர்க்க வேணும், உதாரணமா எனக்கு கவிதை வராது அதுக்காக அதை பற்றி நான் தாழ்வா நினைக்கவில்லை. என்னட்டை வேற பல திறமைகள் இருக்கு. அதை நான் இங்க வெளிகாட்ட முடியாம இருக்கலாம். அதைப்பற்றி பிரச்சனை இல்லை. அல்லது இல்லாத திறமைய வளர்க்க இதை ஒரு வாய்ப்பா கருதி துணிஞ்சு இறங்க வேண்டும். அப்பதான் திறமை புதிய திறமை ஒன்று உங்களிடம் வந்து சேரும். திறமையை உருவாக்க இரண்டு விசயம்தான் தேவை, ஒன்று கொஞ்சுண்டு துணிவு, மற்றது கொஞ்சுண்டு முயற்சி அவ்வளவுதான்!

என்னால் முடிஞ்சதை செய்வேன்!

நாளை (சனிக்கிழமை) காலை வரை யாரும் இவ் வாரக் காலக்கண்ணாடியைத் தயாரிக்க முன்வராவிட்டால் நான் செய்கிறேன்.

இன்று சனிக்கிழமை காலை, ஆகவே உங்களுக்கு அடுத்த தடவை அதிர்ஸ்டம் உண்டாகட்டும்!

அன்புடன்,

வணக்கம்!

யாழ் சுதந்திர கருத்தாளர் சங்கத்தலைவரின் இந்த துணிகரமான முடிவை யாழ் சும்மா வந்து சும்மா போவோர் சங்கம், மற்றும் யாழ் காதல் வளர்ப்பு சங்கத்தின் தலைவர் என்ற வகையில் வரவேற்று எமது சங்கம் சார்பாக நன்றிகளையும், ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இணையவன் நீங்கள் அடுத்த காலக்கண்ணாடியை - வார கிழமைக்குரியதை செய்யுங்கோ. இப்போதைக்கு இரண்டு கிழமைகளிற்கு காலக் கண்ணாடிக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைத்துள்ளது.

இரண்டு கிழமைகள் முடிந்த பிறகுதான் மிச்சம் விளையாட்டு இருக்கு. யார் முன்வந்து கண்ணாடியை செய்யப்போகின்றார்கள் என்று..

மட்டறுத்துனர்கள் சார்பில் இணையவன் மட்டும் செய்யாது, வலைஞன், யாழ்பிரியா, யாழ்பாடி, எழுவான் ஆகியோரும் விரைவில் காலக்கண்ணாடிகளை செய்து ஊக்குவிக்கவேண்டும் என்பதே யாழ் சும்மா வந்து சும்மா போவோர் சங்கம், மற்றும் யாழ் காதல் வளர்ப்பு சங்கம் ஆகியவற்றின் தலைவரான எனது அன்பான வேண்டுகோள் ஆகும்.

நன்றி!

ஆதிக்கு அடர் அவை மாதிரி யம்முப்பே(ய்)ப் இற்கு யுனிதான் ஞாபகம்.

யம்மு பேருக்கு ஏற்றாப் போல யம் பண்ணித் திரிஞ்சிருக்கா என்றது விளங்குது. ஆனா ஏன் சுண்டலை இழுத்துத் திரிஞ்சா என்றதுதான் விளங்கேல்லை???

யம்முப்பே(ய்)ப், காலக்கண்ணாடில எல்லாருடைய விம்பமும் தெரியுது. கெட்டிக்காரி:)

ஆதி எங்கே இருந்து சடின் அபியர் அடரவையில உங்க பிரண்ட்ஸ் எல்லாம் செளக்கியமா!! :( பின்னே பேபி என்றா யம் பண்ணி தானே திரியும் ஆதி!!ஓ சுண்டல் அண்ணாவையோ அதை தப்பா எல்லா நினைக்க கூடாது அவர் நல்ல அண்ணா தானே அது தான் அவரை இழுத்து கொண்டு போனனான் எவ்வளவு தான் என்ன சொன்னாலும் அவர் ஒன்றுமே சொல்ல மாட்டார் ரொம்ப நல்லவர்!! :)

ஆதி (பழைய குரு) என்னை வாழ்த்தியதில் மிக்க மகிழ்ச்சி நன்றி ஆதி :) !!அதிலும் என்னை கெட்டிகாரி (அட நல்லா இருக்கு) என்று சொன்னது நேக்கு அழுகை அழுகையா வருது!! :( (ஆனந்த கண்ணீர் :) )

அப்ப நான் வரட்டா!!

வேலைப்பழு சற்று தணிந்துள்ளது, மேலும் சங்கத்தை வேறை வம்புக்கிழுத்ததால காலக்கண்ணாடி உடைஞ்சாலும் பறவாயில்லை நானே செய்யிறதெண்டு தீர்மாணிச்சிருக்கிறன்.

என்னால் முடிஞ்சதை செய்வேன்!

சாணக்கியன் அண்ணாவின் இந்த முடிவை நான் இட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் :) சங்கத்திற்கு கலங்கம் வரகூடாது என்று சவாலாக எடுத்து கொண்டதை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன்!!உங்கள் காலகண்ணாடி பிராசிக்க ஜம்மு பேபியின் வாழ்த்துகள் உரித்தாகட்டும்!! :)

அப்ப நான் வரட்டா!!

அனைவரது காலக் கண்ணாடியும் அருமை தம்பியின் காலக்கண்ணாடி சும்மா அதிருதில்ல...... :)

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா உங்கள் காலக்கண்ணாடி அழகு .

எல்லா பக்கங்களுக்கும் போய் அவற்றுக்கும் போய் பார்வையிட அழகாய் தொடுப்பு கொடுத்தது அதைவிட அழகு.

வாழ்த்துகள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா பேபி "சும்மா நுனிப்புல் மேயுறதெண்டு" நினைச்சுகொண்டிருந்த எல்லாருக்கும்(எனக்கும் தான்), சாட்டை அடியாக உள்ளது உள்ளது உங்கள் காலக்கண்ணாடி. வாழ்த்துக்கள்.

உங்களின் அன்புக்கு நன்றி அனிதா. ஆனால் காலக்கண்ணாடியில் முதல் தணிக்கை பெற்ற பெருமை எமக்கு வேண்டாமே என்று பார்க்கின்றேன்.

ஒருவர் தனிநபர் தாக்குதல், கருத்து விதி முறைகளை மீறியமை என்று பட்டியல் வளர்ப்பார், மற்றவர் எதுக்கெடுத்தாலும் பண்பற்ற வசனம் என்று எதையும் நீக்கி அர்த்தம் கற்பிப்பார். இந்த ரோதனை வேணுமா?

அண்ணா, உங்கள் பதிலுக்கு நன்றி! இதிலையும் தணிக்கை வரும் என்று நினைக்கிறீங்களா?இதுக்கு முதல் எப்படி எழுதியிருக்கினம் எண்டு பாருங்க....அவர்கள் எழுதியது போல் எழுதலாம்.ஒரு கிழமையில் நடந்ததை எழுதுறதானே .... சரி அண்ணா உங்களுக்கு எப்ப காலக்கண்ணாடி செய்யனும் எண்டு தோணும் போது செய்யுங்க! அதுவரை உங்கள் காலக்கண்ணாடியை காண காத்திருக்கிறேன். :)

நன்றி புள்ள தாத்தாவையும் ஞாபகம் வைச்சிருக்கிறதுக்கு. தாத்தாவுக்கு காலம் சரியில்லைப் புள்ள. உள்ள சோழி காணாது என்று இது வேறை தலையிடியாகிடும். வயசான காலத்தில சரியா கண்ணும் தெரியுதில்லப் புள்ள. உங்க தானே இளம் பெடி பெட்டை நிறைய இருக்குது. அதுகளட்ட விட்டிருங்க. அவைதான் திறமையை வளர்க்க கற்றுக்க வேண்டியவை. எங்க காலம் இப்ப அவைட கையிலதானே புள்ள இருக்கு. அவைதான் முதன்மையா செயற்பட வேணும். திறமைகளை வெளிக்கொணரனும். :D

ஆஹா கண்ணு தெரியலியா ? பயத்தில் நழுவுறமாதிரியே இருக்கு தாத்தா ? :( யாழ் காலக்கண்ணாடி செய்யிறதுக்கு ஏன் எல்லாரும் நழுவினம் எண்டு தெரியலியே..... :) ஒவ்வொரு கிழமையும் நடந்த சில முக்கியமானவைகளை மட்டும் குறிப்பிடலாம். இதுக்கு ஏன் பயம் ? நெடுக்ஸ் தாத்தா இளம் பெடி பெட்டை எல்லாரும் செய்திருக்கினம் அத விட உங்கள மாதிரி வயதுள்ளவையுளும் (கந்தப்பு ,சின்னக்குட்டி). செய்திருக்கினம். .வயதிலும் அனுபவத்திலும் சரி நீங்கள் எங்களை விட மூத்தவர்,திறமையானவர் எண்டு தெரியும். நீங்கள் யாழ் காலக்கண்ணாடி செய்தால் உங்களைப் பார்த்து இளம் பெடி பெட்டையாக்களும் பார்த்திட்டு எழுத முன்னுக்கு வருவினம் தானே ? நீங்களே பின்னுக்கு நிண்டால்.... :) (சரி இணையவனுக்கு அடுத்ததாக காலக்கண்ணாடி செய்யுங்கோ :) )

அனிதா தங்கா,

என்னை பற்றி என்ன சொன்னாலும் எனக்கு வலிக்காது, வலிச்சாலும் தாங்கிக்கொள்ளுவன், ஆனா எங்கடை சு.க.சங்கத்தை இந்த காலக்கண்ணாடி என்ற ஒரு சின்ன விசயத்தை வைச்சு சவால் விடுகிறதுதான் ரொம்பவே வலிக்குது!

ஆஹா .... சாணக்கியன் அண்ணா.... ஸாரி.... உண்மையா உங்களையோ சங்கத்தையோ குறை சொல்லி சாவால் விடயில்லை அண்ணா...! :) ஆனால் யாழில் சங்கம் எண்டு இருந்தால் சின்ன விசயமோ பெரிய விசயமோ அதில் கள உறவுகள் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தால? நீங்கள் முன்னிண்டு அதை தீர்த்து வைக்க வேணாமா ? தனிய கருத்து வெட்டுப்பட்டால் மட்டும் நியாயம் கேட்பதோடு நிற்காமல் இப்படியான விசயங்களையும் உங்கள் சங்கம் எடுத்து செய்ய வேணும்.

அடுத்ததாக நீங்களே காலக்கண்ணாடி செய்யப்போறீங்கள் எண்டு எழுதியிருந்தீர்கள் சந்தோசமாயிருந்தது. உங்களின் துணிச்சலான இந்த முடிவைப் பார்த்து நானும் உங்கள் சு.க.சங்கத்தில் உறுப்பினராக சேர முடிவெடுத்துள்ளேன். :(

அனிதா பாட்டி (அக்கா) அடுத்த காலகண்ணாடியை யார் செய்யீனம் என்று நேக்கு தெரியாதுங்கோ!!

அனிதா பாட்டி (அக்கா) ஒருவருக்கு மடல் அனுப்பி கேட்கும் போது

அனிதா பாட்டி (அக்கா) சங்கம் எல்லாம் நித்திரை இல்லையுங்கோ நேக்கு மொண்டசூரியில எக்சாம்

யமுனா ,

அனிதா

அனிதா பாட்டி

அனிதா அக்கா

இதில் 3 ல் எதாவது ஒன்றை எழுதலாமே எல்லாத்தையும் எழுதி கஸ்டப்படுறீங்கள் :) எப்படிக் கூப்பீட்டாலும் பிரச்சனையில்லை ... எதாவது ஒன்றை எழுதுங்க... :)

Edited by அனிதா

அனைவரது காலக் கண்ணாடியும் அருமை தம்பியின் காலக்கண்ணாடி சும்மா அதிருதில்ல......

அண்ணா எங்கே அடிகடி காணகிடைகுதில்லை பிசியோ (அது தான் வீட்டை சமைக்கிற :) ) எப்படி சுகங்கள் தங்களின்!!அதிருதோ நல்ல காலம் கீழே விழவில்லை அண்ணா மிக்க நன்றிகள் அண்ணா!! :)

ஜமுனா உங்கள் காலக்கண்ணாடி அழகு .

எல்லா பக்கங்களுக்கும் போய் அவற்றுக்கும் போய் பார்வையிட அழகாய் தொடுப்பு கொடுத்தது அதைவிட அழகு.

வாழ்த்துகள் .

கறுப்பி அக்காவை கொஞ்ச நாட்களா காணவில்லை எப்படி சுகம் கறுப்பி அக்கா :) !!கறுப்பி அக்காவின் வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி கறுப்பி அக்கா!!

ஜமுனா பேபி "சும்மா நுனிப்புல் மேயுறதெண்டு" நினைச்சுகொண்டிருந்த எல்லாருக்கும்(எனக்கும் தான்), சாட்டை அடியாக உள்ளது உள்ளது உங்கள் காலக்கண்ணாடி. வாழ்த்துக்கள்.

சபேஷ் மாமா எப்படி சுகம் ரொம்ப நன்றி வாழ்த்துகளிற்கு மாமா :) !!"அது சரி மாமா குழந்தைகளின்(18 மாதம்) தலை ஏன் வியர்கிறது? இந்த கேள்விக்கு விடையை கண்டு பிடித்துவிட்டீங்களா" :) !!அட பேபி "நுனிபுல்" எல்லாம் மேயாது பாப்பா தான் குடிக்கும் பீடிங் போத்திலில்!! :(

யமுனா ,

அனிதா

அனிதா பாட்டி

அனிதா அக்கா

இதில் 3 ல் எதாவது ஒன்றை எழுதலாமே எல்லாத்தையும் எழுதி கஸ்டப்படுறீங்கள் எப்படிக் கூப்பீட்டாலும் பிரச்சனையில்லை ... எதாவது ஒன்றை எழுதுங்க...

அனிபாட்டி (அக்கா) பேபி எல்லாத்தையும் கூப்பிடுவன் ஏனேனில் பொலிஸ் மாமா வருவார் அது தான் (அதற்காக பொலிஸ்மாமாவிற்கு பயம் என்று நினைக்க கூடாது :) )நீங்களே எப்படி கூப்பிடாலும் பிரச்சினை இல்லை என்று சொன்னபடியா எனி ரெஸ்பட் பண்ணுவன், சோ எனி அனிதா அக்கா என்று மரியாதையா கூப்பிடுறேன் :( !!அத்துடன் எங்கள் சங்கத்தில் இணைந்ததை இட்டு மிக்க மகிழ்ச்சி அடைக்கிறேன் வாங்கோ அனிதா அக்கா!! :)

அப்ப நான் வரட்டா!!

சாணக்கியன்..

காலக்கண்ணாடியை காலத்துக்கு இணைத்தமை...

எல்லாளன்.. மீண்டும் எல்லோரையும் யாழுக்குள்ளும்.. நம்பிக்கை;குள்ளும் இழுத்து வந்திருக்கிறார்..

அழகாக செய்திருக்கும் உங்கள் காலக்கண்ணாடிக்கு பாராட்டுகள்..

சாணக்கியன் அண்ணா சங்கத்தின் மானத்தை காப்பாற்ற களத்தில் இறங்கி சாதித்துவிட்டீர்கள் வாழ்த்துகள் அண்ணா!! <_<

ஜம்மு பேபி காலகண்ணாடி பற்றிய பார்வை!!

குறுகிய காலத்தில் அழகான விம்பத்துடனான காலகண்ணாடி சிறப்பு வாழ்த்துகள் அண்ணா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

மிகவும் தெளிவான முறையில் இவ்வாரக் காலக் கண்ணாடி பிரதிபலிக்கிறது. பதிவுகளை நேர்த்தியான முறையில் தொகுப்பதில் தனது திறமையை வெளிப்படுத்திய சாணக்கியனுக்குப் பாராட்டுக்கள்.

கொஞ்ச நாட்களுக்குள் ஒருவாரத்தில் நடந்தவற்றை அபப்டியே சொல்லி இருக்கிறீங்க. பாராட்டுக்கள் சாணாக்கியன்.

அந்த பிறேம்க்குள்ளேயே அழகாக எழுதி இருக்கலாமோ என தோணுது. இன்னும் வழிவாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.