Jump to content

விசேட பாதுகாப்புக்கு மத்தியில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பரில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம்!

விசேட பாதுகாப்புக்கு மத்தியில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

விசேட பாதுகாப்புக்கு மத்தியில் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இதனையடுத்து, வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 22ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், இம்மாதம் 23ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வரை வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் மீதான விவாதம் நடத்தப்படவுள்ளது.

டிசம்பர் 08 ஆம் திகதி பிற்பகல், வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

எந்தவொரு காரணத்திற்காகவும் அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை இழந்தால், அரசியலமைப்பின் 7 (2) வது பிரிவின்படி அமைச்சரவை கலைக்கப்பட வேண்டும்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்ட அரசாங்கச் செலவு 7,885 பில்லியன் ரூபாயாகும். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது 29.2வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் சந்தை, ஏற்றுமதிச் சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், சமூக சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக வரவு செலவுத் திட்ட இலக்குகள் எட்டப்படவுள்ளன.

புதிய உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையை ஆரம்பித்து, இளைஞர்களுக்கு நல்ல நாட்டிற்கு தேவையான புதிய வேலைத்திட்டம் வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் மூலம் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தைத் தவிர இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் முதலாவது வரவு செலவுத் திட்டமாக வரலாற்றில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1310315

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பட்ஜெட் 2023: பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள உதவுமா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண்பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்னையிலிருந்து மீண்டெழுவதற்கு, நாடாளுமன்றத்தில்  இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், ஏனைய வரவு செலவுத் திட்டங்களை விடவும் மிக முக்கியமானதொரு வரவு செலவுத் திட்டமாக காணப்படுகின்றது.

அத்துடன், ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஒருவர் தலைமையில் 29 வருடங்களின் பின்னர் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டமாக இது அமைகின்றது.

இலங்கையின் நான்காவது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி வகித்த டி.பி.விஜயதுங்கவின் தலைமையில் 1993ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ஒருவரின் கீழ் இறுதியாக வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதன்பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதியாக ஒருவரும் பதவிக்கு வராத நிலையில்,  29 வருடங்களின் பின்னர் அந்த கட்சி சார்பில் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்வினால் இம்முறை வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

 

சுதந்திர இலங்கையில் பொருளாதார ரீதியில் நாடு பாதாளத்திற்கு வீழ்ந்துள்ள தருணத்தில், நாட்டை கட்டியெழுப்பும் உறுதிமொழியுடன் ஜனாதிபதி பதவிக்கு வந்த ரணில் விக்ரமசிங்கவினால், நிதி அமைச்சர் என்ற விதத்தில் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று சமர்பிக்கப்படவுள்ளது.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர், முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சி காலத்தில் மூடிய பொருளாதார கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், 70ம் ஆண்டு காலப் பகுதியிலும் இலங்கை பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியிருந்தது.

பொருட்களுக்கான தட்டுப்பாடு, வரிசை யுகம் என இதே போன்றதொரு நிலைமை 70ம் ஆண்டு காலப் பகுதிகளில் இலங்கையை பாதித்திருந்தது.

இதையடுத்து, 78ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் ஊடாக, தற்போதைய இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகிக்கின்ற ரணில் விக்ரமசிங்கவின் மாமனாரான ஜே.ஆர்.ஜெயவர்தன, அப்போதைய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.

 

 

ரணில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூடிய பொருளாதார கொள்கையை திறந்த பொருளாதார கொள்கையாக மாற்றி, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிகளை மேற்கொண்டு, நாட்டை ஓரளவு முன்னேற்ற பாதைக்கு அவர் கொண்டு சென்றதாக வரலாறு கூறுகிறது.

எனினும், 70ம் ஆண்டு காலப் பகுதி என்பது உலக மயமாக்கல் ஏற்பட ஆரம்பித்த காலப் பகுதி என்ற போதிலும், தற்போது அது முழுமையாக உலக மயமாக்கல் ஏற்பட்ட காலப் பகுதியாக காணப்படுகின்றது.

அந்த காலப் பகுதிக்கும், தற்போதைய காலப் பகுதிக்கும் பல்வேறு வேறுபாடுகள் காணப்பட்டாலும், பிரச்னை ஒன்றாகவே காணப்படுகின்றது.

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அன்று ஜே.ஆரின் முயற்சியை, இன்று அவரது மருமகன் நிறைவேற்றுவாரா என்ற கேள்வி எழுகின்றது.

சர்வதேசத்துடன் தொடர்புகளை பேணி ஜே.ஆரை போன்றே, ரணிலும் அதே காய்நகர்த்தலை முன்னெடுப்பாரா என பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்து வருகின்றன.

 

இந்த நிலையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரவு செலவுத் திட்டமாக இந்த வரவு செலவுத்திட்டம் அமையுமா என்பது குறித்து, பிபிசி தமிழ், கொழும்பு பல்கலைக்ககழத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தியிடம் வினவியது.

இம்முறை தாக்கல் செய்யப்படுகின்ற வரவு செலவுத் திட்டம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

'இந்த வரவு செலவுத்திட்டத்தில் பெரியதொரு பங்களிப்பு வழமையாகவே நிதி அமைச்சுக்கு வழங்கப்படும். இரண்டாவதாக பொது நிர்வாக அமைச்சுக்கும், மூன்றாவதாக பாதுகாப்பு அமைச்சுக்கும் இதன் பங்களிப்பு காணப்படும். அபிவிருத்தி சார்ந்த வரவு செலவுத்திட்டமாக இதனை பார்க்க முடியாது. கடன்களை செலுத்துவதாக தெரிவித்து, நிதி அமைச்சுக்கு பாரியதொரு தொகை ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. வழமையாக நாட்டிலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய அமைச்சுக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் நிதி ஒதுக்கீடுகள் காணப்படுவதாக தென்படவில்லை. நிவாரணம் தருணம் வரவு செலவுத்திட்டமாக இதனை பார்க்க முடியாது.

 

 

எம்.கணேசமூர்த்தி

இந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஏனைய வருடங்களில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டங்களை விடவும் மாறுபட்ட ஒரு வரவு செலவுத்திட்டமாக இது அமையக்கூடுமா?

இல்லை. அப்படி சொல்ல முடியாது. ஏற்கனவே இருக்கிற நிகழ்ச்சி நிரலுக்கு மாறி போகும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை. வழமை போன்று குறிப்பிட்ட சில அமைச்சுக்களுக்கு மாத்திரமே ஒதுக்கீடுகள் பெரிய அளவில் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு நன்மை தரக்கூடிய அமைச்சுக்களுக்கோ, வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய அமைச்சுக்களுக்கோ நிதி போதிய அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பொதுமக்களுக்கு நிவாரணம் தேவைப்படுகின்ற காலப் பகுதி இது. ஏனெனில், வறுமை பெரியளவில் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. இலங்கை 2009ம் ஆண்டு இருந்த நிலைமைக்கு வறுமை பின்நோக்கி சென்றுள்ளது. அப்படியான நிலைமையில், பொதுமக்களுக்கான நிவாரணங்கள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

 

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு என்ன நடக்கும்?

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு இந்த காலப் பகுதியில் கட்டாயம் உதவி செய்வது அவசியமானது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளே, இலங்கையில் 70 வீத கைத்தொழில் துறையாக காணப்படுகின்றது. அவர்களுக்கு நிவாரணம் என்ற விதத்தில் குறைந்த சலுகைகளுடனான கடன்கள் உள்ளிட்ட சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும்.

அது மாத்திரமன்றி, குறிப்பிட்ட காலப் பகுதிக்கு இந்த நிறுவனங்களுக்கு வரி சலுகைகள் வழங்கப்பட வேண்டும். முன்மொழியப்பட்டுள்ள வரி விதிப்பின் படி, ஒரு லட்சம் ரூபா என்பது இந்த காலப் பகுதியில் பெரிய பணம் கிடையாது. ஒரு லட்சம் ரூபாவிற்கு மேலதிக வருமானத்தை பெறும் நிறுவனங்களிடமிருந்து வரியை அறவிட வேண்டும் என்றால், அவர்களினால் நிச்சயமாக தாக்குபிடிக்க முடியாது. ஏனெனில், உற்பத்தி செலவு ஒரு பக்கத்தில் அதிகரித்துள்ளது. மறுபுறத்தில் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

சாதாரண தொழில் முயற்சி ஒன்றில் மாதாந்தம் ஒரு லட்சம் ரூபாவிற்கு அதிகமான வருமானத்தை பெற முடியும். வருமானம் என்பது இலாபம் கிடையாது. லாபத்தின் மீதான வரி இல்லை இது. இது வருமான வரி. செலவுகளுடன் ஒப்பிட்டு பார்த்தே, வருமானத்தை பார்க்க வேண்டும். இங்கு வருமானத்தை மாத்திரமே பார்க்கின்றார்கள். செலவை பார்ப்பது இல்லை. வருமானத்திற்கு வரியை செலுத்த சொல்கின்றார்கள். செலவை பார்த்தால் தானே லாபத்தை பார்க்க முடியும்.

வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு வரியை அறவிடுவதன் மூலம், செலவை கருத்திற் கொள்ளாது வரியை அறவிடுகின்ற போது, இலாபம் என்ற ஒன்றே சாதாரண தொழில் முயற்சியாளர்களுக்கு இல்லாது போகும் வாய்ப்புக்கள் அதிகளவில் இருக்கின்றது. முழுமையாகவே இல்லாது போகும் வாய்ப்பு உள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் எதிர்கால வர்த்தக நடவடிக்கைகள் கேள்வி குறியாகியுள்ளது.

 

ஏற்றுமதிகள் மீதான வரி அதிகரிப்பு குறித்து?

'ஏற்றுமதி மீதான வரி அதிகரிப்பை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. எங்களுக்கு அந்நிய செலாவணி தற்போது முக்கியமாக தேவைப்படுகின்றது. டாலர் நாட்டிற்குள் வர வேண்டும்.

இலங்கையிலுள்ள பொருட்களின் விலை அதிகரிப்பு தற்போது சுமார் 70 வீதமாக காணப்படுகின்றது. இலங்கையிலிருந்து வெளியில் செல்கின்ற பொருட்களின் விலை அதிகரிப்பு 70 சதவீதம் என்றால், ஏற்றுமதி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு என்ற கருத வேண்டும். அதற்கு மேலதிகமாக மற்றுமொரு வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமாயின், இலங்கையின் பொருட்கள் சர்வதேச சந்தையில் போட்டி தன்மை வாய்ந்ததாக இருக்காது.

எதிர்பார்க்கப்படுகின்ற ஏற்றுமதி வருமானத்தை திரட்டுவது கடினமாக இருக்கும். ஏற்றுமதி சந்தையை இழக்க வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம். எல்லா பக்கத்திலும் நெருக்கடிகள் காணப்படுகின்ற நிலையிலேயே, இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது." என கூறுகின்றார்.

வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாயின், இலங்கையின் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கும்.

இதனால், வேலையின்மை பிரச்னை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகிறது.

2026ம் ஆண்டு வரை இலங்கை பொருளாதாரம் வளர்ச்சி அடையாது என கணிப்பீடு ஒன்று காணப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே இந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள வேண்டும்.

 

 

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

2023ம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டமானது, கடந்த காலங்களில் இலங்கையர்கள் எதிர்நோக்கிய பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும் சாத்தியம் உள்ளதா?

''இல்லை... இல்லை... நிச்சயமாக இல்லை. எந்தவொரு பிரச்னைக்கும், எதிர்வரும் வரவு செலவுத்திட்டம் தீர்வாக அமையாது. இதனை வெளிப்படையாகவே சொல்ல முடியும். இப்போது காணப்படுகின்ற பொருளாதாரத்தை இதே மட்டத்தில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு என்ன செய்யலாம் என்பதை பார்க்கின்றார்களே தவிர, மீண்டெழுவதற்கான வரவு செலவுத்திட்டமாக பார்க்க முடியாது.

கடன் வழங்கிய நாடுகளான இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மற்றும் கடன் வழங்கவுள்ள சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிற்கு அடிபணிந்த வரவு செலவுத் திட்டமாக இந்த வரவு செலவுத் திட்டம் அமையுமா?

இல்லை. அப்படி சொல்ல முடியாது. ஏனென்றால், இந்த வரவு செலவுத்திட்டத்தின் முன்மொழிகளுக்கு அமைய, சில வேளைகளில், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு அமைய, வரி திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால், கடந்த காலத்தை நாங்கள் பார்க்க வேண்டும். சில அரசாங்கங்கள் வந்து, சர்வதேச நாணய நிதியத்தை காரணம் காட்டி, தங்களின் சொந்த தேவைக்காக வரிகளை அதிகரித்த சந்தர்ப்பங்கள் உண்டு.

1970ம் ஆண்டு காலப் பகுதியில் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சி காலத்தில் அவர் தான் நினைத்த பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக சர்வதேச நாணய நிதியத்தை ஒரு சாட்டாக பயன்படுத்தினார். கட்டாயமாக நாங்கள் இந்த வேலையை செய்ய வேண்டும், சர்வதேச நாணய நிதியம் பணம் தருவதாக சொல்லியிருக்கின்றது. அதை செய்யாவிட்டால், சர்வதேச நாணய நிதியம் பணத்தை வழங்காது. ஆகவே, அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சொன்னார். இவரும் அதையே தான் சொல்லுகின்றார்.

இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி வந்திருக்கின்றது. அதிலிருந்து மீண்டெழுவதற்கு அரசாங்கத்திற்கு பணம் தேவைப்படுகின்றது. ஆகவே வரியை கட்டாயம் அதிகரிக்க வேண்டும் என்றே ரணில் விக்ரமசிங்க சொல்கின்றார். சர்வதேச நாணய நிதியத்தை பகடை காயாக பயன்படுத்தி, தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதாகவும் இருக்கலாம். கடந்த கால அனுபவங்கள் அப்படி இருந்தன. அடிபணிகின்றது என்பது வேறு. இலங்கைக்கு டாலரும் கிடையாது. ரூபாவும் கிடையாது. அதனால், கடன் வழங்குநர்கள் கூறுகின்ற நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த சூழ்நிலையில் இருக்கின்றது. இது அடிபணிந்து போகின்றது என்று சொல்வதற்கு இல்லை. வழியில்லாத ஒரு நிலைமை இது.

 

1993ம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஜனாதிபதி ஒருவரின் ஆட்சியின் கீழ் சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு செலவுத்திட்டமாக இந்த வரவு செலவுத்திட்டம் அமைகின்றது. இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு?

 

ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு செலவுத்திட்டமாக இதனை பார்க்கக்கூடாது. தற்போது ஆட்சியிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இதற்கு பின்னணியில் உள்ளது. ஆனால் ஒரு சில அம்சங்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் விடயங்கள் அதில் இருக்கின்றன. வரி தொடர்பிலான விடயங்கள், தனியார் துறையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான உள்ளீடுகள் போன்றவை ஐக்கிய தேசியக் கட்சியின் விடயங்களாகப் பார்க்கலாம். மற்றும்படி, துறைசார் அலகுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி தொடர்பில் பார்க்கும் போது, வழமையாக இருந்து வருகின்ற அதே நிலைமை தான் காணப்படுகின்றது. வளர்ச்சியை ஊக்குவிக்கும் விடயங்கள் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் உள்ளதாக காணப்படுகின்றது என இதுவரை வெளியான தகவல்களின் படி உறுதிப்படுத்தப்படவில்லை.

 

தற்போதைய ஜனாதிபதியின் மாமாவான முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் வரவு செலவுத் திட்டத்தை ஒத்ததாக, அவரது மருமகனின் வரவு செலவுத் திட்டம் அமையுமா? ஏனெனில், ரணில் விக்ரமசிங்க, தனது மாமனாரான முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவிடமே அரசியலை கற்றுக்கொண்டார். ஜனாதிபதியாக முதல் தடவையாக தெரியாவாகியுள்ள ரணில் விக்ரசிங்க, தனது மாமனாரை பின்பற்றி வரவு செலவுத் திட்டத்தை தயாரித்திருப்பாரா?

 

இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. அதை இந்த வரவு செலவுத் திட்டத்துடன் ஒப்பிடுவது கடினம். இந்த வரவு செலவுத்திட்டத்தை அப்படி ஒப்பிட முடியாது. ஏனென்றால், அப்போது இருந்த சூழ்நிலை வேறு. அப்போது இருந்த நிலைமைகள் வேறு. அப்போது அந்த வரவு செலவுத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட பங்களிப்பு வேறு. ஒரு சில முக்கிய பங்களிப்புக்கள் அங்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இப்போது அதை அப்படி பார்ப்பது கஷ்டம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை உள்ளுர் நிபந்தனைகளை விடவும், வெளிநாட்டு நிபந்தனைகளையே நம்புகின்றார். சில வேளைகளில் அந்த ஆலோசனைகள் பெறப்பட்டிருக்கலாம்.  ஆனால், பொருளாதார வளர்ச்சிக்காக உடனடி தீர்வுகளை வழங்குவதாக தெரியவில்லை.

 

பணவீக்கம் அதிகரிக்கவில்லை. பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன என்பதை காட்ட வேண்டிய கட்டாய தேவையில் தற்போதைய அரசாங்கம் உள்ளது. பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் குறைவடைந்துள்ளதாக அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக காட்டப்படுகின்றது. மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறது. அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

 

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாணய மாற்று விதத்தை பிடித்து வைத்திருக்கின்றார்கள். சந்தையிலுள்ள நாணய மாற்ற விகிதமாக தோன்றவில்லை. இதனூடாக அனைத்து நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்புகின்றது என்பதை காட்டுகின்ற நடவடிக்கையாக இருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் நிதி எதிர்வரும் மார்ச் மாதத்தில் கிடைக்கும் என்றால், அதற்கு இடைப்பட்ட காலப் பகுதியில் இலங்கைக்கு சுமார் 850 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகின்றன. இந்த நிதியை எவ்வாறு திரட்டுவது என்பது யோசிக்கப்படுகின்றது. வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டாலும், அதற்கான நிதியை திரட்டிக் கொள்வது மிக மிக கடினமானது .

இது வளர்ச்சிக்கான வரவு செலவுத்திட்டம் கிடையாது. இடுப்பு பட்டியை மேலும் இருக்கமாக கட்டும் ஒரு வரவு செலவுத் திட்டமாகவே இந்த வரவு செலவுத்திட்டத்தை பார்க்க முடியும். ஆனால், அது எந்தளவிற்கு போகும் என்பதை கூற முடியாது.

https://www.bbc.com/tamil/articles/cnew4kpermjo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration

 

May be a cartoon of text

 

May be an illustration of standing

 

May be a cartoon of child

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் 2023 வரவு செலவு திட்டம் மானியங்களை இலக்குவைக்கின்றது - தனியார் துறையை வலுப்படுத்த முயற்சி

By Rajeeban

14 Nov, 2022 | 11:15 AM
image

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக மானியங்களை இலக்குவைப்பதாகவும் தனியார் துறை தலைமையிலான பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாகவும் இலங்கையின் 2023 வரவு செலவுதிட்டம் காணப்படும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை தனது கடன்களை தொடர்ந்தும்பேணுவதற்கும்   பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதற்கும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இளைஞர் எழுச்சிக்கான வாய்ப்புகளை தடுப்பதற்குமான நடவடிக்கைகளை இன்னமும் எடுக்காத நிலையில்  நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க இன்று வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பார்.

Budget.jpg

விக்கிரமசிங்கவின் வரவுசெலவு திட்டத்தில் பெரும்பாலும் சர்வதேச நாணயநிதியத்தின் உள்ளடக்கம் காணப்படும் முக்கியமாக நிதி தொடர்பான இறுக்கமான கொள்கைகளை கொண்டதாக அது காணப்படும்.

இந்த கொள்கைகள் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கான அரச செலவீனங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை கொண்டிருக்கும் இது முதலீட்டாளர்களின் நம்பிக்கைகளை அதிகரிப்பதற்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு மேலும் சர்வதேச உதவிகளை பெறவும் உதவக்கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் மிக முக்கியமான நான்கு வருடகால 2.9 பில்லியன் டொலர்களை பெற உதவக்கூடும்.

நீண்டகால மற்றும் பொருளாதார ஸ்திரதன்மையை அடிப்படையாக கொண்டதே 2023 வரவு செலவு திட்டம் என  ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மூலதன சந்தை ஏற்றுமதி சந்தை தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் சந்தை குறித்து இந்த வரவுசெலவுதிட்டம் விசேட கவனத்தை செலுத்தியுள்ளது சமூகசந்தை பொருளாதாரத்தின் மூலம் இந்த இலக்குகளை அடைய எண்ணியுள்ளது என ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமூகநலன்புரி நன்மைகள் அதிகளவிற்கு தேவைப்படுகின்ற மக்களிற்கு அதனை வழங்குவது குறித்தே இந்தவருட வரவு செலவுதிட்டம் கவனம் செலுத்தும் தனியார்துறையினரை நாட்டின் பொருளாதாரத்தினை முன்னோக்கி செலுத்தும் சக்தியாக கட்டியெழுப்புவதற்கான கொள்கை சூழலை முன்வைக்கும் எனவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிதறடிக்கப்பட்ட நம்பிக்கைகள்

மில்லியன் கணக்கான இலங்கை மக்கள் சிதறடிக்கப்பட்ட நம்பிக்கைகளுடன் ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவு திட்டத்தை எச்சரிக்கையுடன் வரவேற்பார்கள் - ஏனென்றால் 22 மில்லியன் மக்கள் நாளாந்தம் ஒரு நேர உணவையாவது கைவிடவேண்டிய நிலைக்கும்,வாழ்க்கையை சமாளிப்பதற்காக மேலதிக வேலையை தேடவேண்டிய நிலைக்கும் ஈடுபட்டுள்ளனர்.

கொள்கை அடிப்படையிலான வரிச்சலுகைகள் இரசாயன உரத்தடை போன்ற முன்னைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகள் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளன.

முந்தைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட அனேகமாக சீனாவின் உதவியுடனான பயனற்ற உட்கட்டமைப்பு திட்டங்கள் பெருப்பிக்கப்பட்ட அரசசேவை மத்திய வங்கியின் தடையற்ற பணம் அச்சிடுதல் ஆகியன நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு காரணம்.

வலதுசாரி ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க தொடர்ச்சியாக தனியார் பொருளாதாரத்தை வலுப்படுத்துவற்கான நடவடிக்கைகளை எடுத்தார் ஆனால் அவருக்கு போதிய மக்கள் ஆதரவு இல்லை.

சர்வதேச நாணயநிதியம் பணம் அச்சிடுவதை நிறுத்துமாறு கேட்டுள்ளதை தொடர்ந்து வரி வருமானத்திலிருந்து அரசஊழியர்களிற்கு சம்பளம் வழங்கும் நிலையில் அரசாங்கம் இல்லாததால் ரணில்விக்கிரமசிங்க அரசசேவையை குறைப்பார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர் அரசதுறையை குறைப்பதுடன் மாத்திரமல்லாமல் அரசசேவையின் ஊழல் மற்றும் வீண் செலவு போன்றவற்றை அவர் குறைக்கவேண்டும் என்கின்றார் கொழும்பை தளமாக கொண்ட பொருளாதார ஆய்வாளர் .

வரிப்பணம் அரசதுறையில் அதிகளவிற்கு வீணடிக்கப்படுகின்றது என மக்கள் கருதுவதால் அவர்கள் வரிகளை செலுத்த விரும்பவில்லை இதன் காரணமாக அரசதுறை செலவீனங்களை கட்டுப்படுத்தாத பட்சத்தில் ஜனாதிபதியால் வரிசெலுத்துவதை ஊக்குவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

 

https://www.virakesari.lk/article/139953

 

 

Link to comment
Share on other sites

வரவு செலவுத் திட்ட உரை - ஒரே பார்வையில்!

வரவு செலவுத் திட்ட உரை - ஒரே பார்வையில்!

 

பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (14) பிற்பகல் ஆரம்பமானது.

இதன்போது 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தினார்.

வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி தெரித்த விடயங்களை முழுமையாக இங்கே காண்க,
 

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரை by Ramesh RK on Scribd

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை புதியதோர் எதிர்காலத்தை நோக்கி - 2023 ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் முழுமையான உரை

14 NOV, 2022 | 05:01 PM
image

 

2023 ஆண்டுக்கான வரவுசெலவுதிட்ட முன்மொழிவுகள் மீது நாட்டின் சாதகமான வேறுபாட்டினை உருவாக்குகின்ற பயணத்தில்  கைகோர்க்குமாறும் உறுதுணையைளிக்குமாறும் நான் உங்கள்  அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என ஜனாதிபதியும் நாட்டின்  23 ஆவது நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன் நாம்  இம்முன்மொழிவுகளை  பின்னணியாக்கி கொண்டு, புதிய பொருளாதார அடிப்படை ஒன்றினை தயார்படுத்துவோம். அதற்கென தேசிய  பொருளாதார கொள்கை கட்டமைப்பை  உருவாக்கிக் கொள்வோம். அடுத்து வரும் 25 ஆண்டுகள் முழுவதும் அக்கொள்கைக் கட்டமைப்பை நடைமுறைபடுத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.

HE_arrival_20221114__6_.jpeg

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதியும் நாட்டின் 23 ஆவது நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை (14) பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து  உரையாற்றிய பின்னரே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த பயணத்திற்கு பங்களிப்பு வழங்குவதற்கு தேவையான பின்னணியை  இப்போது நான்  இந்த பாராளுமன்றத்திற்கு வழங்கியுள்ளேன்.  

ஒரு பக்கத்தில் பாராளுமன்றத்தின் துறைசார் செயற் குழுக்கள்,  மறுபக்கத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் என்ற மக்கள் சபை,  அதற்கு மேலதிகமாக  அரச நிதி மற்றும் அரச நிதி சேவை  பற்றிய செயற் குழுக்கள் பலவற்றை நாம் முன்மொழிந்துள்ளோம். 

நான் அண்மையில் சபாநாயகரின் கவனத்தை ஈர்த்தது போன்று,  இந்த செயற்குழு இதுவரையிலும் இந்த பாராளுமன்றத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

விசேடமாக நான் சமர்ப்பித்துள்ள வரவு - செலவுத்திட்ட முன்மொழிவு அரச உத்தியோகத்தர்களின் மூலம் அரச  பொறிமுறைகளினூடாக நடைமுறைப் படுத்தும் போது துறைசார் செயற்குழுக்களுக்கு பாரியளவு வேலைகளை நிறைவேற்ற முடியும். 

அரசாங்க செலவினத்தை குறைத்துக்கொள்ளும்  முயற்சிக்கும் நிதி பற்றிய செயற்குழுக்களுக்கு பயன்மிக்க விதத்தில் தலையீடு செய்யவும் முடியும். 

அதனால், அந்த சகல செயற்குழுக்களையும் துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு நான் இந்த பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கின்றேன்.  அப்போது புதிய பயணத்திற்கு, புதிய தோற்றத்தின் முயற்சிக்கான  சந்தர்ப்பத்தை எமக்கு உருவாக்கிக் கொள்ள முடியும்.

அந்த சந்தர்ப்பத்திலிருந்து அதிகபட்ச பயனைப்பெற்று நாம் எமது  உண்மையான தேசிய வளங்களுக்கு, எமது இளைஞர்  பரம்பரைக்கு சிறந்த எதிர்காலமொன்றை  உருவாக்கிக்கொடுப்பதற்கு  முயற்சிப்போம்.

 அதற்கமைவாக புதிய பொருளாதார அடிப்படையினூடாக நாட்டை மீண்டும் உயர்த்தி வைக்கும்  முயற்சிக்கு செயல் வடிவிலான மற்றும் செயல் ரீதியான பங்களிப்பை வழங்குமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கிய ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவின் 2023 ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முழுமையன உரைக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://cdn.virakesari.lk/uploads/medium/file/194828/77th_Budget_Speech-2023__Tamil_.pdf

https://www.virakesari.lk/article/140016

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பட்ஜெட் 2023: முக்கிய அறிவிப்புகள் என்ன?

 

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

46 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையில் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சராக இருக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று சமர்பித்தார்.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 அளவில் கூடிய வேளையில் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்டது.

இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், அடுத்த வருடத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப உதவியளிக்குமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளது.

நிலையான மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

 

2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், மூலதனச் சந்தை, ஏற்றுமதி சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகள் குறித்து, இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சமூக சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக வரவு செலவுத்திட்ட இலக்குகளை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரவு செலவுத்திட்டத்தில் சமூக நலன்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக தனியார் துறையை கட்டியெழுப்புவதற்கான கொள்கை பின்புலத்தை உருவாக்குவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் மூலம் நவீன உலகிற்கு ஏற்ற நவீன பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையை ஆரம்பிப்பதன் மூலம் இளைஞர்களுக்கான நாட்டை கட்டியெழுப்பும் புதிய வேலைத்திட்டத்தை உருவாக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.

அடுத்த வருடம் பொருளாதாரத்தை ஸ்திரதன்மைக்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய அறிவிப்பு

  • நிதி அமைச்சர் என்ற விதத்தில், ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய அம்சங்களின் தொகுப்பு.
  • ஏற்றுமதி ஊடான பொருளாதாரம், சுற்றாடல் ஆகியவற்றை இலக்காக கொண்ட டிஜிட்டலை மையப்படுத்திய பொருளாதாரத்தை உருவாக்குவது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யும் வகையிலான சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • பொருட்களின் விலை குறைப்பு, நிவாரணம் போன்றவை இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.
  • வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு முதலீடு இல்லாது போயுள்ளமை தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச வர்த்தகத்தின் ஊடாக இலாபத்தை தமதாக்கிக் கொள்ள உலக சந்தையில் தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கு சீனா, இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • உலக நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுடன் தொடர் வர்த்தக தொடர்புகளை முன்னெடுக்க கலந்துரையாட எதிர்பார்க்கப்படுகின்றது.
  • முதலீட்டுக்கான சூழலை உருவாக்குவதற்கு அவசியத்தை ஏற்படுத்துவதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • தொழிற்சங்கங்கள், தனியார் உரிமையாளர்களை உள்வாங்கி, விவசாயத்துறைக்கு தனியார் சட்டத்தை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • நவீன விவசாய ஏற்றுமதியை ஊக்குவிக்க எதிர்த்துள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
 

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உருவாக்கி, மேம்படுத்துவதற்கு விசேட நிபுணர் குழுவொன்றை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
  • கறுவா ஏற்றுமதியை ஊக்குவிக்க பிரத்தியேக திணைக்களமொன்றை ஸ்தாபிப்பதற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சுற்றுலாத்துறையை மேம்படுத்துவற்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில், 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • அரச சேவை பிரிவுகள் குறித்து பரிசீலனை செய்வதற்கு புதிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
  • வரி மறுசீரமைப்பு குறித்து புதிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • தனியார் துறையில் பாதிக்கப்படுவோரை பாதுகாக்கும் வகையில் விசேட காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவை உருவாக்குவதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
  • இரத்தினக்கல் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு புதிய வலயங்களை உருவாக்குதல் மற்றும் புதிய தொழில்பயிற்சிளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • முதலீட்டு ஊக்குவிப்புக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • காலநிலை தொடர்பில் சர்வதேச பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை ஊக்குவித்து, இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு 50 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
  • விநியோக உலகத்தின் முதல் 70 நாடுகளுக்கு மத்தியில் இலங்கையை கொண்டு செல்வதற்காக 2023ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரையான மூன்று ஆண்டு காலத்திற்கு விநியோக சேவை வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • நீண்டகால நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • இலத்திரனியல் மோட்டார் வாகனங்களை தயாரித்தல் மாத்திரமன்றி, இலத்திரனியல் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • 18 வருட சேவை காலத்தை நிறைவு செய்த படையினருக்கு ஓய்வூதியத்தை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • வரி அறவீடுகளை அதிகரிப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. வட் வரி அதிகரிப்பு கட்டாயம் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த வரி அதிகரிப்பின் ஊடாக பணம் அச்சிடுவதை நிறுத்த முடியும் என அவர் கூறுகின்றார்.

https://www.bbc.com/tamil/articles/cy0n45rzk3do

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாள்களை கையிலேந்தி சபைக்கு வந்த நிதியமைச்சர் : ஒரு தடவை கூட கைதட்டு பெறாத வரவு - செலவுத் திட்ட உரை

By VISHNU

14 NOV, 2022 | 05:30 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்,ஆர்.எம்.வசீம்)

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (14) திங்கட்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் சபையில் சமர்ப்பித்த ஜனாதிபதியும், நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் உரையாற்றினார். ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றி நிறைவு செய்தததை தொடர்ந்து ஆளும் தரப்பினர் மாத்திரம் மேசையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

BBOT0088.jpg

BBOT0026.jpg

பலத்த பாதுகாப்பு

சபாநாயகர் தலைமையில் இன்று (14) பாராளுமன்றம் கூடிய போது பாராளுமன்றத்தினதும், பாராளுமன்ற சுற்று வட்டத்தினதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டன. ஆயுதமேந்திய இராணுவத்தினர் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

BBOT0040.jpg

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

இன்று பிற்பகல் 01.30 மணியளவில் படைகள சேவிதல் செங்கோலை ஏந்திய வண்ணம் சபையின் பிரதான வாயிலாக சபைக்கு வருகை தந்தார். படைகள சேவிதருடன் சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம்,பிரதி செயலாளர் நாயகம் ஆகியோர் வருகை தந்தனர்.

முதல் தடவையாக பாடசாலை மாணவர்களுக்கு அனுமதி

BBOT0035.jpg

BBOT0033.jpg

BBOT0031.jpg

BBOT0028.jpg

பாராளுமன்றம் இன்று பிற்பகல் 01.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக கூடியது. வழக்கமாக வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது பொது மக்கள் கலரி மூடப்பட்டு அரச அதிகாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை முதல் தடவையாக குறிப்பிட்ட சில பாடசாலைகளை சேர்ந்த 450 பாடசாலை மாணவ தலைவர்கள் நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்ட உரையை அவதானிப்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதேபோன்று வழக்கத்திற்கு மாறாக சபாநாயகர் கலரியிலும் வெளிநாடுகளின் தூதுவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் என 40 இற்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்தனர்.

தாள்களை கையிலேந்தி சபைக்கு வந்த நிதியமைச்சர்

வழக்கமாக வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றுவதற்காக நிதியமைச்சர் சபைக்குள் வருகை தரும் போது கையில் வரவு செலவுத் திட்ட உரை அடங்கிய பெட்டியை அல்லது கோப்பினை கொண்டு வருவார். ஆனால் தற்போதைய நிதியமைச்சரான ரணில் விக்கிரமசிங்க தனது வரவு செலவுத் திட்ட உரை அடங்கிய தாள்களையே கையில் கொண்டு வந்தார்.

01 மணித்தியாலமும்,15 நிமிட உரை

பாராளுமன்றம் பிற்பகல் 01.30ற்கு கூடிய நிலையில் சபாநாயகர் தின பணிகளை முடித்து நிதியமைச்சரை வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றுமாறு அறிவித்ததை தொடர்ந்து அரச தரப்பினரின் வரவேற்புடன் அமைச்சர்கள் புடைசூழ சபைக்குள் வந்த நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான தனது வரவு செலவுத் திட்ட உரையை பிற்பகல் 01.35 மணிக்கு ஆரம்பித்து 1 மணிநேரமும்,15 நிமிடங்களும் உரையாற்றி 2.50 இற்கு நிறைவு செய்தார்.

ஒரு தடவை கூட கைதட்டு பெறாத உரை

BBOT0013.jpg

வழக்கமாக வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் நிதியமைச்சர்கள் மக்கள் சார்ந்த நிவாரன அறிவிப்புக்கள் மேலும் சில அறிவிப்புக்களை வெளியிடும் போது அரச தரப்பினர் சில வேளைகளில் எதிர்க்கட்சியினர் கூட அந்த அறிவிப்புக்களை மேசைகளில் தட்டி வரவேற்பது வழக்கம். ஆனால் இன்று நிதியமைச்சரின் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் நீண்ட உரையின் போது அவரின் ஒரு அறிவிப்பிற்கு கூட அரச தரப்பினரோ, எதிர்க்கட்சியினரோ கைதட்டவில்லை. மாறாக இரு தரப்பினரும் இருகிய முகங்களுடன் உரையை செவிமெடுத்துக் கொண்டிருந்தனர்.

சபைக்கு வராத தலைவர்களும், தாமதமாக வந்த தலைவர்களும்

வரவு செலவுத் திட்ட உரை இடம்பெற்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஷ்வரன், இ.பி.டி.பியின் தலைவரும், அமைச்சருமான டக்லஸ் தேவானந்தா ஆகியோர் சபைக்கு வருகை தராத நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பமாகி 40 நிமிடங்களுக்கு பின்னரும், அதே போன்று சில அமைச்சர்களும் சபைக்கு தாமதமாகவே வருகை தந்தனர்.

வெற்றிடமான நிலையில் பல ஆசனங்கள்

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போது எதிர்க்கட்சி தரப்பினரின் ஆசனங்கள் மட்டுமன்றி, ஆளும் தரப்பிலும் பல  ஆசனங்கள் வெறிச்சோடி கிடந்தன. நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சில உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்ட உரையின் போது இடை நடுவில் எழுந்து சென்ற போதும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ போன்றவர்கள் இறுதி வரை அமர்ந்திருந்து உரையை செவிமெடுத்தனர்.

தேநீர் உபசாரம் இரத்து

BBOT0102__2_.jpeg

 

வரவு செலவுத் திட்ட உரையை நிறைவு செய்யும் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்களை தேநீர் உபசாரத்தில் பங்கேற்றுமாறு நிதியமைச்சர் அழைப்பு விடுப்பது வழக்கம். ஆனால் இம்முறை தேநீர் உபசாரம் இரத்து செய்யப்பட்டதால், நிதியமைச்சரால் அழைப்பு விடுக்கப்படவில்லை.

https://www.virakesari.lk/article/140019

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரி மேல் வரி விதிப்பை மக்களால் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும் : வரவு - செலவுத் திட்டம் குறித்து சஜித் கேள்வி   

By DIGITAL DESK 2

14 NOV, 2022 | 05:56 PM
image

 

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

 

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத்  திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதிலில்லை, வரி மேல் வரி விதிப்பை மக்களால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்.

மக்களுக்காக அரசாங்கம் என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (நவ. 14)  ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் எவ்வித பதிலுமில்லை.

பாதிக்கப்பட்டுள்ள மக்களை அரசாங்கம் முழுமையாக புறக்கணித்துள்ளது,நடுத்தர மக்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

Sajith-Premadasa-02.jpg

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவுத்  திட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உள்வாங்கப்படவில்லை.

பாரம்பரியமான வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில் வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். நாட்டு மக்களின் நலனுக்காகவே அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதை அவர் விளங்கிக் கொள்ளவில்லை.

வரிக்கு மேல் வரி விதிப்பு இதனை மக்களால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும். நிவாரணத்தை தவிர்த்து நாட்டு மக்கள் சுயமாக முன்னேற்றமடையும் யோசனைகள் குறிப்பிடப்படவில்லை.சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை பாதிப்பிற்குள்ளாக்கி பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்றார்.

https://www.virakesari.lk/article/140026

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவு - செலவுத் திட்டத்தில் ஒன்றரை ரில்லியன் வரி வருமானத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் உத்தேசிப்பு -  அநுரகுமார

By DIGITAL DESK 2

14 NOV, 2022 | 05:38 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்,ஆர்.எம்.வசீம்)

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரனம் வழங்கும் பரிந்துரையை ஜனாதிபதி முன்வைக்கவில்லை. 2023ஆம்  ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக ஒன்றரை ரில்லியன் வரி வருமானத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (14) ஜனாதிபதியால் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டதன் பின்னர் பாதீடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக ஏதேனும் நிவாரனம் கிடைக்கப் பெறுமா என பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்பு முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டம் பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணிக்கும் வகையில் காணப்படுகிறது.

Anura-Kumara-Dissanayaka.jpg

பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு குறைந்தப்பட்சமேனும் நிவாரனம் வழங்கும் எவ்வித பரிந்துரைகளும் வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.

மாறாக வரி அதிகரிப்பை மாத்திரம் வரவு செலவுத் திட்டம் பிரதான இலக்காகக் கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு வரி அதிகரிப்பின் ஊடாக மாத்திரம் ஒன்றரை ரில்லியன் ரூபா அரச வருமானத்தை ஈட்டிக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வரி அதிகரிப்பு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும். பொருளாதார ரீதியில் இருந்து நாட்டு மக்களை மீட்டெடுக்கும் நடைமுறை திட்டங்கள் உள்ளடக்கப்படவில்லை.

மறுபுறம் இலாபம் பெறும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தி அரச வருமானத்தை குறுகிய காலத்தில் ஈட்டிக் கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

கடன் பெறுவது அரசாங்கத்தின் பிறிதொரு கொள்கையாக உள்ளது. நாட்டு மக்களுக்கு பயனற்ற வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்துவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/140018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - மு.கா. தலைவர் ஹக்கீம்

By VISHNU

14 NOV, 2022 | 08:38 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

மக்கள் அன்றாடம் வாழமுடியாத நிலையில் வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்கு மொத்த வரவு செலவு திட்டத்தில் 10வீதம் ஒதுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (14) அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர், அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் கொள்கை அடிப்படையில் புதிய சீர்திருத்தங்களை மேற்காெள்ள ஜனாதிபதி எடுத்து வரும் முயற்சியை பாராட்டுகின்றோம்.

ஆனால் மக்கள் பாரிய வறுமை கோட்டின் கீழ் இருக்கும் நிலையில் மக்களுக்கு மானியங்கள் எதுவும் இல்லாத நிலையில் பாதுகாப்பு பாரியளவில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக வரவு செலவு திட்டத்தின் மொத்த தொகையில் 10வீதத்தை பாதுகாக்குக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இந்தளவு நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்குவதற்கு பாரிய அச்சறுத்தல்கள் எதுவும் இல்லை.

அத்துடன் இந்தியாகூட பாதுகாப்புக்கு வரவு செலவு திட்டத்தில் 9வீதமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. எனவே மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் சிந்தித்திருக்கலாம் என்றார்.

https://www.virakesari.lk/article/140036

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

குறிப்பாக வரவு செலவு திட்டத்தின் மொத்த தொகையில் 10வீதத்தை பாதுகாக்குக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இந்தளவு நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்குவதற்கு பாரிய அச்சறுத்தல்கள் எதுவும் இல்லை.

இப்போ எந்த நாட்டோட போராட பாரிய நிதி ஒதுக்கீடு பாதுகாப்புச்சபைக்கு? தமிழர் பிரதேசத்தில் கட்டிவைத்திருக்கிற படைக்கு தீனி  போட வேண்டாமோ?  அதை விலக்கபோவதில்லையாம் ஆனால் தமிழர் பிரச்சனையை தீர்க்கப்போகினமாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

இப்போ எந்த நாட்டோட போராட பாரிய நிதி ஒதுக்கீடு பாதுகாப்புச்சபைக்கு? தமிழர் பிரதேசத்தில் கட்டிவைத்திருக்கிற படைக்கு தீனி  போட வேண்டாமோ?  அதை விலக்கபோவதில்லையாம் ஆனால் தமிழர் பிரச்சனையை தீர்க்கப்போகினமாம்!

இராணுவத்தில் 18வருடம் சேவை செய்தவர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கப்படுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of text that says 'BUDGET UDG Ayyane IndraJill'

 

May be an illustration of one or more people

May be a cartoon of one or more people and people standing

 

 

May be a cartoon

 

May be a cartoon of text

 

May be a cartoon

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon

 

May be a cartoon of text

 

May be a cartoon

 

May be a cartoon of text that says 'Budget strives to rejuvenate economy Budget,a basis to buill economy in 2023 Not people-friendly budget good well.. proposals Budget has as New hope emerges with this budget Unsuçcessful budget-! Futanah'

 

 

May be a cartoon

 

May be an illustration of standing

 

No photo description available.

 

May be a cartoon

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொருளாதார நெருக்கடி: கடந்த கால ஆட்சியாளர்களின் தவறுகள் ரணில் விக்ரமசிங்கவை அச்சுறுத்துகிறதா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,PARLIAMENT OF SRI LANKA

 

படக்குறிப்பு,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை மீட்டெடுக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் திங்களன்று சமர்ப்பிக்கப்பட்டது.

நிதி அமைச்சர் என்ற விதத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

நிவாரணங்கள் அற்ற ஒரு வரவு செலவுத்திட்டமாக இது அமைந்துள்ளதாக நிதி அமைச்சர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்திருந்தார்.

எனினும், கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கப்பட்ட ஓரிரு நிவாரணகள், அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் கூறுகின்றார்.

2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவுமா?

இந்த விடயம் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கத்தை பிபிசி தமிழ் தொடர்புக் கொண்டு வினவியது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்பிக்கப்பட்டுள்ள 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், பொருளாதாரத்தை மீட்டெடுக்குமா?

''இது பாரிய சிக்கல்களுக்குரிய காலப் பகுதி. கொள்கை மட்டும் எங்களுக்கு வெற்றியை தராது. கொள்கை அமலாக்கம் முக்கியம். ஸ்ரீலங்கா அரசாங்கம் மூன்று விடயங்களை கூறுகின்றார்கள். இலங்கையை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றுவது, 1977ம் ஆண்டிலிருந்து அந்த விடயம் காணப்படுகின்றது. ஆனால் உரிய வகையில் அது சென்றடையவில்லை. கிரின்-புளு எக்கனோமி (பச்சை-நீள பொருளாதாரம்) என்ற சொல்கின்றார்.

சூழலுக்கு பாதிப்பு இல்லாதது. அது இப்போது உலகம் முழுவதும் இருக்கின்றது. அடுத்தது டிஜிட்டல் பொருளாதாரத்தை பற்றி கூறுகின்றார். அதில் இலங்கை பின்தங்கியுள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த நிபுணர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறி வருகின்றார்கள். சம்பளம் இல்லை, வேலை வாய்ப்பு இல்லை. இப்படியான காரணங்களினால் வெளிநாடுகளை நோக்கி அவர்கள் செல்கின்றார்கள். இதில் கடுமையான பிரச்னைகள் காணப்படுகின்றன. எந்தளவு தூரம் இது பிரச்னையை தீர்க்கும் என்பதை எங்களால் உடனடியாக சொல்ல முடியாது."

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கள், அவர் கூறிய விதத்திலேயே அமலாக்கப்படும் பட்சத்தில், இலங்கை எத்தனை வருடங்களில் மீண்டெழ முடியும்?

''இதில் பெரியதொரு பிரச்னை இருக்கின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளின் அனுபங்களை பார்த்தால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை முதலாவதாக இருக்க வேண்டும். அதைபற்றி அவர் கூறவே இல்லை. இலங்கையை அழித்தது ஊழல். வீண்விரயம் போன்றவற்றை பற்றி கதைக்கவே இல்லை. கல்விக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாக அதிகரிக்கப்பட வேண்டும். அதை செய்யவில்லை. அதற்கு இவர் மீது பிழை சொல்ல முடியாது. இவருக்கு முன்பிருந்தவர்கள் செய்த தவறுகள் இவரின் தலையில் இப்போது வீழ்ந்துள்ளது. எங்களுக்கு சந்தேகமாக இருக்கின்றது. இப்படியாக பட்ஜெட்டை நாங்கள் எத்தனை தடவைகள் பார்த்திருக்கின்றோம்.

70 வருடங்களாக ஒன்றுமே நடக்கவில்லை. மக்கள் அரசாங்கத்தை எதிர்பார்க்கின்றார்கள். அவர்கள் பின்தங்கியுள்ளார்கள். இது 40ம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து இருக்கின்றது. அது இன்னும் மாற்றவில்லை. இவரும் நீண்ட காலம் ஆட்சியில் இருந்திருக்கின்றார். 78ம் ஆண்டு தொடக்கம் 94 வரை இவர் ஆட்சியில் இருந்தார். 2001ம் ஆண்டில் ஆட்சியில் இருந்தார். 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தார். அதனால், இவரும் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். அப்படியாக கடுமையான பிரச்னைகள் உள்ளன. கொள்கை அவசியம். ஆனால், கொள்கை மட்டும் வெற்றியை தராது. அதனை அமல்படுத்த வேண்டும். அமலாக்கத்தை பிந்த செய்தால், ஒன்றுமே சரி வராது."

ஏற்றுமதி பொருளாதாரம் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் தொடர்புடைய நிறைய விடயங்கள் இந்த பட்ஜெட்டில் உள்வாங்கப்பட்டுள்ளது. இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் இது சாத்தியப்படுமா?

''1948ம் ஆண்டு முதல் 77ம் ஆண்டு வரை தேயிலை, இறப்பர் ஏற்றுமதி நடைபெற்றது. அது எல்லாம் இலகுவான பயிர்கள். மலிவான ஊழியர்களை மையப்படுத்தியது. 77ம் ஆண்டு முதல் இன்று வரை நாங்கள் ஆடைக்கு மாறினோம். அதுவும் மலிவான ஊழியர்களை மையப்படுத்தியது. வியட்நாம் என்ற ஒரு நாடு, 90ம் ஆண்டே தமது பொருளாதாரத்தை வலுப்படுத்த ஆரம்பித்தது. 90ம் ஆண்டில் விவசாய பொருட்களும், இயற்கை வளங்களையும் அந்த நாடு ஏற்றுமதி செய்தது. அதன்பிறகு ஆடைக்கு மாறியது. வெறுமனே 10 வருடங்களில் அந்த நாடு பாரிய வளர்ச்சியை கண்டுள்ளது.

இலங்கை 78ம் ஆண்டு முதல் இன்று வரை ஆடையை தான் ஏற்றுமதி செய்கின்றது. அங்கு தான் அந்த சிக்கலை நான் அடையாளம் காண்கின்றேன். நீங்கள் வெறுமனே கொள்கை பிரகடனத்தை மாத்திரம் வாசிக்க கூடாது. கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் கல்விக்கு முதலாவது இடத்தை கொடுக்க வேண்டும். இன்று வரை இலங்கை அரசாங்கத்தை அதை அடையாளம் காணவே இல்லை. பிலிப்பைன்ஸில் கல்விக்கு முதல் இடம். சிங்கப்பூர் 64ம் ஆண்டே அதனை அடையாளம் கண்டுக்கொண்டது. தாய்லாந்து அடையாளம் கண்டுள்ளது. வியட்நாம் அடையாளம் கண்டுள்ளது. வங்கதேசம் இப்போது அதனை அடையாளம் காண்கின்றது. இலங்கை இன்று வரை அதனை அடையாளம் காணவில்லை"

 

கோபாலபிள்ளை அமிர்தலிங்கம்

பட மூலாதாரம்,KOPALAPILLAI AMIRTHALINGAM FB

இலங்கை கல்விக்கு முன்னுரிமை கொடுக்காமைக்கான காரணம் என்ன? ''ஒரு காரணம், இலங்கை பாதுகாப்புக்கான நிதியை குறைப்பதற்கு தயாராக இல்லை. பாதுகாப்பு அமைச்சுக்கு நிதியை குறைப்பதற்கு ரணில் விக்ரமசிங்க கூட தயாராக இல்லை. அடுத்தது, வருமானத்தை பற்றி பார்க்காது, செலவு மற்றும் வீண்விரயம் அதிகளவில் செல்கின்றது. அரச நிறுவனங்கள் முழுமையாக நட்டத்தில் இயங்குகின்றது. பெட்ரோலிய கூட்டுதாபனம், ஏயார் லங்கா போன்ற அனைத்து நிறுவனங்களும் நட்டத்தில் இயங்குகின்றன.

அவர்களின் எண்ணம் வேறு திசையில் உள்ளது. அவசியமானதற்கு பயன்படுத்துவதில்லை. கல்விக்கு பயன்படுத்த வில்லை. கல்வியை அடையாளம் காண்பதற்கு முற்படுவதாக தெரியவில்லை. சரியான திசையில் பட்ஜெட் இருந்தாலும், எந்தளவு தூரத்திற்கு இதன் அமலாக்கம் இருக்க போகின்றது என்பது சந்தேகம். கல்விக்கு என்ன முடிவு, ஊழலுக்கு என்ன நடவடிக்கை ஆகியவற்றுக்கு எந்த கதையும் இல்லை. அது எல்லாம் சந்தேகத்தை கொடுக்கின்றது".

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அமல்படுத்திய கொள்கை காரணமாக, நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது. அதனை ஜே.ஆர் ஓரளவு வழமைக்கு கொண்டு வந்தார். அந்த நேரத்தில் கொண்டு வரப்பட்ட பட்ஜெட்டை அவரது மருமகன் ரணில் விக்ரமசிங்க, ஜே.ஆரின் பட்ஜெட்டை பின்பற்றுகின்றாரா? பட்ஜெட் வாசிப்பின் போது அவர் இதனை கூறினார்.

'ஜே.ஆரின் கொள்கை வந்தாலும், 94ம் ஆண்டு வரை ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியில் இருந்தது. ரணில் விக்ரமசிங்கவும் அமைச்சராக இருந்தார். ஆரம்பம் சிறப்பாக இருந்தாலும்;, 83ம் ஆண்டு யுத்தம் ஆரம்பித்தது. அதனால், வெளிநாட்டு முதலீடுகள் வராது போனது. ஊழலுக்கு எதிராக தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர் போன்று நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை. இப்போது யுத்தம் இல்லை. ஆனால், மோசமான நிலைமை உள்ளது. இவ்வளவு காலம் நடைபெற்ற விடயங்களினால் நாடு மோசமாகியுள்ளது. ஏனைய நாடுகள் மிக வேகமாக முன்னோக்கி செல்கின்றது. நாங்கள் நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியாது அல்லவா?.

ஜே.ஆர் அந்த காலத்தில் பட்ஜெட் கொண்டு வந்த காலப் பகுதியில் தென் ஆசியாவில் மூடிய பொருளாதார கொள்கை காணப்பட்ட காலப் பகுதி. பாகிஸ்தான், பங்களதேஷ், லத்தின் அமெரிக்கா, முழுமையாக மூடப்பட்ட பொருளாதாரம். அதனை திறந்த பொருளாதாரமாக மாற்றியதை, அந்த காலப் பகுதியில் மாபெரும் புரட்சியாக பார்க்கப்பட்டது. அதன்பின்னர் வேலையின்மை குறைந்தது. வறுமை குறைந்தது. வரிசைகள் குறைந்தன. அது எல்லாம் உண்மை தான். ஆனால், குறிப்பிட்ட காலப் பகுதிக்கு பின்னர் அந்த கொள்கைகள் சரியான திசையை நோக்கி செல்லவில்லை. ஏனெனில், யுத்தம் ஆரம்பித்து விட்டது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்தன. யுத்தம் காரணமாக வெளியேறிவிட்டார்கள். யுத்தம் தான் சீரழித்தது.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,PARLIAMENT OF SRI LANKA

சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பட்ஜெட், வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் சாத்தியம் உள்ளதா?

''வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்க வேண்டுமாக இருந்தால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தொழிலாளர் சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வருவதாக சொல்லியிருக்கின்றார். அது நல்லதொரு விடயம். வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்தியாவிற்கு போவதா, பங்களதேஷிற்கு போவதாக, இலங்கைக்கு போவதா என சிந்திப்பார்கள். ஏனைய நாடுகளை விட இலங்கையின் சட்டத்திட்டங்கள் சரியானதாக இருக்க வேண்டும். இங்கு ஆர்ப்பாட்டங்கள் செய்துகொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது. 1000 கோடி முதலீடு வரும் போது, அந்த நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்துகொண்டிருந்தால் என்ன செய்வது?"

நிவாரணம் அற்றதொரு பட்ஜெட் என கூறப்படுகின்றது. இலங்கையில் இது முதல் தடவையா?

''நிவாரணம் இல்லாதது என்பது உண்மை தான். அதையும் நம்ப முடியாது. ஏனென்றால், அடுத்த வருடம் தேர்தல் வருகின்றது. தேர்தல் வரும் போது திரும்பவும் நிவாரணத்தை கொண்டு வருவார்கள். ஒரு வருடத்தில் எதையும் சாதிக்க முடியாது. தேர்தலின் போது பழையபடி நிவாரணத்தை வழங்கினால், என்ன செய்வது? நீண்ட காலத்திற்கு பிறகு நிவாரணம் இல்லாமல் வந்த பட்ஜெட். எனினும், சில நிவாணரங்கள் இதில் இருக்கிறது. சமுர்த்தி எல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றது. நிவாரணம் இருக்கின்றது, எனினும், ஒப்பிட்டளவில் குறைவாக இருக்கின்றது."

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனவா?

''பட்ஜெட் அறிவிப்புக்கு முதலிலேயே, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். வரி அதிகரிப்பு சம்பந்தமானது. சம்பள அதிகரிப்பு கொடுக்காமை. ராணுவம் குறிப்பிட்ட காலப் பகுதியில் ஓய்வூ பெறுவது. அது எல்லாம் ஆளணியை குறைப்பது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் பலவற்றை முதலிலேயே செய்து விட்டார்கள். இந்த பட்ஜெட்டின் வரிகளில் மாற்றங்களை கொண்டு வரவில்லை. நட்டமடையும் நிறுவனங்களை சீர் செய்வதாக சொல்கின்றார். அது சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள் தான். சர்வதேச நாணய நிதியத்தின் பல்வேறு விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/crgj8855d9eo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பிற்கு அதிக நிதி - ஆய்வாளர்கள் அதிருப்தி

By RAJEEBAN

16 NOV, 2022 | 11:17 AM
image

இலங்கையின் 2023ம் ஆண்டிற்கான வரவு செலவுதிட்டத்தில் பாதுகாப்பு செலவீனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து  வரவு செலவுதிட்ட ஆய்வாளர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.

பாதுகாப்பு செலவீனங்கள் அதிகரிக்கப்பட்டமை அரசசெலவீனங்களை நியாயப்படுத்துவதற்கான காரணத்தை வழங்குகின்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் நிதியமைச்சர் என்ற அடிப்படையில் திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க 2023 ம் ஆண்டிற்கான வரவு செலவுதிட்டத்தை சமர்ப்பித்தார்.

பாதுகாப்பு அமைச்சராகவும் உள்ள விக்கிரமசிங்க பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு என 539 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கினார்.

அதேவேளை சுகாதாரத்திற்கு 322 பில்லியனும் கல்விக்கு 232 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வரவு செலவுதிட்ட ஆவணம் தெரிவிக்கின்றது.

நாட்டின் பாதுகாப்பு படையினர் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளிற்கு எதிராக போரில் ஈடுபடாத ஒரு சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பிற்கு என பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை விசேட பிரிவில் உள்ளவர்கள் தவிர பாதுகாப்பு படையை சேர்ந்த ஏனையவர்கள் 18 வருட சேவையின் பின்னர் ஒய்வு பெறுவதற்கான அனுமதி வரவு செலவுதிட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னர் இது 22 வருடகாலமாக காணப்பட்டது.

அறையில் உள்ள யானை பாதுகாப்பு செலவீனமே என தெரிவித்தார் பிரைஸ்வோர்ட்டர் கூப்பர் ஹவுசின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுஜீவ முதலிகே.

கொழும்பில் வரவு செலவு திட்டம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்து 13 வருடங்களாகிவிட்டன- வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பிற்கு என அதிக நிதியை ஒதுக்குவது குறித்து மறுஆய்வு தேவை பாதுகாப்பிற்கு பெருந்தொகையை ஒதுக்குவதன் மூலம் நீங்கள் பாதுகாப்பாக இருக்கமுடியும் என கருத முடியாது என வும் அவர் தெரிவித்தார்

பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியனில் பத்து வீதத்தை எடுத்து சமுர்த்தி சுகாதாரம் அல்லது கல்விக்கு ஒதுக்கலாம் இந்த துறைகளிற்கு மேலும் 50 மில்லியன் கிடைத்தால் நாடு என்ன மாற்றத்தை அடையும் என சிந்தித்து பாருங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் இறுதி வருடங்கள் முதல் இலங்கை வரவு செலவுதிட்டத்தில்  பாதுகாப்பிற்கு என அதிகளவு நிதியை ஒதுக்கிவருகின்றது,யுத்தத்தின் போது சேர்க்கப்பட்ட பெருமளவு படையினர் காரணமாக பெருமளவு நிதியை இலங்கை பாதுகாப்பு செலவீனங்களிற்கு ஒதுக்கீடு செய்கின்றது.

எனினும் தற்போது யுத்தம் என்ற எதுவும் இல்லாததன் காரணமாக ஆயுதபடையினருக்கு  அதிக நிதியை ஒதுக்கீடு செய்வது குறித்து மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.இது அர்த்தபூர்வமான நடவடிக்கையான என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஜனாதிபதி இளைஞர்கள் தலைமையிலான பொருளாதாரம் குறித்து கருத்து வெளியிட்டார்,அவ்வாறான நிலையில் இளைஞர் தொழில்பயிற்சிக்கு என மேலும் 50 பில்லியனை ஒதுக்குவது குறித்து சிந்தித்து பாருங்கள் என தெரிவித்த முதலிகே இன்னமும் சில வருடங்களில் எங்களின் பாதுகாப்பு செலவீனம் டிரிலியனாக  காணப்படும் இது குறித்து மறுஆய்வு அவசியம் எனவும் தெரிவித்தார்.

18 வருட சேவையை பூர்த்தி செய்த படையினர் ஓய்வு பெறலாம் என்ற அறிவிப்பை நாங்கள் வரவேற்கின்றோம்,இதனை பத்து வருடங்களாக குறைக்கவேண்டும் , 45 வயதிற்கு மேல் அவர்களிற்கு பயிற்சி  வழங்குவது கடினம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

defencebudget.jpeg

யுத்தத்தின் இறுதி தருணங்களின் பின்னர் எந்த அரசியல்வாதியும் இராணுவத்தை பகைத்தது இல்லை,யுத்தத்தின் இறுதி தருணங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகளிற்காக அழைப்பு விடுக்கப்படுகின்ற போதிலும் பொதுமக்கள் அவர்களிற்கு ஆதரவாக காணப்படுகின்றனர்.

யுத்தத்தின் பின்னர் பேரிடர் நேரங்களில் மீட்பு நடவடிக்கைகளில் இராணுவம் முக்கிய பங்கை வகித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஜூலை மாதம் இராணுவம் தாக்குதலை மேற்கொண்டு அவர்களை அங்கிருந்து அகற்றியதை தொடர்ந்து படையினர் குறித்த எதிர்மறையான எண்ணம் உருவாகியுள்ளது.

images__11_.jpg

பொதுதுறை செலவீனங்களை நியாயப்படுத்துவது கடினமான விடயம், செலவீனங்களை குறைப்பதற்கான ஆரம்பகட்டமாக  பாதுகாப்பு செலவீனங்களை பார்க்கவேண்டும் என நான்  விரும்புகின்றேன் என தெரிவித்த பிரைஸ்வோர்ட்டர் கூப்பர் ஹவுசின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுஜீவ முதலிகே பொருளாதாரம் நெருக்கடியில் உள்ள வேளை 64 வீத வருமானம் என்பது மிகவும் கடினமான ஒரு இலக்கு எனவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/140179

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தமில்லாத நாட்டில் இராணுவத்திற்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கம் - செல்வம் அடைக்கலநாதன்

By DIGITAL DESK 2

16 NOV, 2022 | 03:11 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்து.

யுத்தம்  இல்லாத  நாட்டில் ஏன் இவ்வளவு இராணுவம்? ஏன் இந்தளவு இராணுவ முகாமக்கள்? ஏன் இந்தளவு நிதி ஒதுக்கம் எனக்கேள்வி எழுப்பிய   தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான வாக்களிப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்தே வாக்களிக்கும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (நவ.16) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மீதான 2ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Selvam-Adaikalanathan.jpg

 

மேலும் அவர் குறிப்பிட்டதாவது,

இலங்கையில் முப்படைகளையும் சேர்த்து 9 இலட்சம் வரையிலான படை வீரர்கள் உள்ளனர். இவர்களில்  பெருமளவானோர் வடக்கில் உள்ளனர்.

இவர்களின் முகாம்களுக்காக மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள், விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அபகரிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தில்  மக்களின் காணிகளில் இராணுவத்தினரே வசிக்கின்றனர். விவசாயிகளின் காணிகளில் இராணுவத்தினரே  விவசாயம் செய்கின்றனர்.

உணவகங்களை, சலூன்களைக்கூட இராணுவத்தினர்தான் நடத்துகின்றனர். நாட்டின் வேறு ஏதாவது பகுதிகளில் இவ்வாறு நடக்கின்றதா? வடக்கில் மட்டும் ஏன் இந்த நிலை?

 யுத்தம்  இல்லாத இலங்கையில் ஏன் இவ்வளவு இராணுவம்? ஏன் இந்தளவு இராணுவ முகாமக்கள்? ஏன் இந்தளவு நிதி ஒதுக்கம் ? இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.பாதுகாப்பு  அமைச்சுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான வாக்களிப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிர்த்தே வாக்களிக்கும் .

இதேவேளை, ஜனாதிபதியினால் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட  தமிழ் அரசியல் கைதிகளில் கிருபாகரன், எல்.நிமலன், குகதாசன் ஆகியோர் மீது பதுளை மற்றும் கொழும்பு நீதிமன்றங்களால் புதிதாக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. எனவே இதுதொடர்பில் ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/140224

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரச நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படும் அல்லது சேவையாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர் - மஹிந்த அமரவீர

By DIGITAL DESK 2

16 NOV, 2022 | 03:14 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

 

 

15 இலட்சம் அரச சேவையாளர்களின் எண்ணிக்கை அரச நிர்வாகத்தில் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது. அரச நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படும் அல்லது சேவையாளர்களுக்கு நட்டஈடு வழங்கி பதவி நீக்கம் செய்ய நேரிடும்.

வெற்றிடமாகியுள்ள அத்தியாவசிய அரச சேவைகளுக்கான நியமனங்களை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (நவ. 16) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான செயற்பாட்டை அரசாங்கத்தினால் மாத்திரம் தனித்து முன்னெடுக்க முடியாது. எதிர்க்கட்சியும்,ஆளும் தரப்பினுரரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரம் நெருக்கடியான சூழலை வெற்றிக் கொண்டு நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்.

 

Mahinda-Amaraweera.jpg

 

நாடு எதிர்க்கொண்டுள்ள தற்போதைய இக்கட்டான நிலையில் இருந்து எவரும் விடுப்பட முடியாது. ஆளும் மற்றும் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும்.

நடந்தவறை மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் ஒருபோதும் தீர்வு காண முடியாது. அரசியல் கட்சிகள் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

தேசிய பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் சபையில் உரையாற்றினார்.

தேசிய பிரச்சினை தொடர்பில் காலம் காலமாக பேசப்படுகிறது.தேசிய பிரச்சினைக்கு இந்த அரசாங்கத்தில் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண முடியும்.

தற்போதைய பாராளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ,மைத்திரிபால சிறிசேன உள்ளார்கள், தேசிய பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்கு அறிவார். கட்சியை பலப்படுத்துவதை விட தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கம் இவர்களுக்கு உண்டு.

தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ் அரசியல் தரப்பினரும் ஒருசில விடயங்களில் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும்.புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க வேண்டும்.

சிறைச்சாலையில் பல ஆண்டு காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் சிறைகைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆகவே கூட்டமைப்பினர் நம்பிக்கையுடன் இலங்கையர் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.

இவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். வடக்கு மாகாணத்தில் உழுந்து பயிர்ச் செய்கை அதிகளவில் உற்பத்தி செய்யடுகிறது. சகோதரத்துவத்துவடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாட்டை முன்னேற்ற முடியும்.

அரச வருமானத்தை தடுக்கும் வகையில் போராட்டங்கள் இடம்பெற்றால் நாட்டில் மீண்டும் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும்.

போராட்டங்கள் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைய கூடாது.சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மேம்படுத்தப்பட்டால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

நாட்டுக்கு டொலர் அனுப்ப வேண்டாம்,அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என அரசியல்வாதிகள் குறிப்பிடுவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.  பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் குறிப்பிப்படும் கருத்துக்கள் நாட்டுக்கு செய்யும் துரோகமாக கருதப்படும்.

அரச சேவையின் ஊழியர்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். தற்போதைய 15 இலட்சம் அரச சேவையாளர்கள் அரச கட்டமைப்பில் தாங்கிக் கொள்ள முடியாமல் உள்ளது.

ஒரு சில அரச நிறுவனங்களை ஒன்றிணைக்க வேண்டும் அல்லது நட்டஈடு வழங்கி அரச சேவையாளர்களை குறைக்க நேரிடும். மறுபுறம் அத்தியாவசிய அரச பதவிகளில் வெற்றிடம் காணப்படுகிறது.

வெற்றிடமாக உள்ள அரச பதவிகளுக்கான நியமனங்களை கூட வழங்க முடியாத நிதி நெருக்கடி காணப்படுகிறது.அரச சேவை தொடர்பில் பேச்சுவார்த்தை ஊடாக உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/140228

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன்பெற்று விருந்து உண்பதை தவிர்க்கும் புதிய பொருளாதார முறை

By T. SARANYA

16 NOV, 2022 | 04:08 PM
image

ரொபட் அன்டனி

மிகவும் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் நாட்டின் 77 ஆவது மற்றும் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த பொருளாதார நடைமுறைகளை மாற்றியமைத்து புதிய சமூக பாதுகாப்பு திறந்த பொருளாதார முறை என்ற அடிப்படையிலான ஒரு பொருளாதார முறைமையை ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 2023 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

அதாவது வழமைப்போன்று இதுவரை காலமும் முன்வைக்கப்பட்டு வந்த பொருட்களின் விலையைக் குறைத்தல், சம்பள அதிகரிப்பு, மற்றும் நிவாரணம் போன்ற பிரபல்யமிக்க தீர்மானங்களை எடுக்காமல் நீண்டகால அபிவிருத்தியை நோக்கிய கட்டமைப்பு மாற்றத்துக்கான திட் டங்கள் அதிகளவில் பட்ஜட்டில் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும் வரவு செலவுத்திட்டத்தின் இலக்குகளை பார்க்கும்போது 7-8 சதவீத பொருளாதார வளர்ச்சி, சர்வதேச வர்த்தகத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 100 சதவீதமாக அதிகரித்தல், 2023-2032 வரை புதிய ஏற்றுமதி ஊடாக டொலர் 3 பில்லியன் வருடாந்தம் அதிகரித்துக்கொள்ளல், வருடாந்தம் டொலர் 3 பில்லியன் நேரடி வெளிநாட்டு முதலீடுகளாக பெறல், எதிர்வரும் பத்து ஆண்டுகளினுள் உயர்தேர்ச்சிபெற்ற சர்வதேசளவில் போட்டிமிக்க தொழிற்படையை உருவாக்குதல் ஆகிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக ஜனாதிபதி பரிந்துரைத்துள்ள இந்த புதிய சமூக பாதுகாப்பு திறந்த பொருளாதார முறையில் மூன்று விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டி, இரண்டாவதாக சூழல் நட்பான பசுமை மற்றும் நீல பொருளாதாரம் மற்றும் மூன்றாவதாக டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும் பொருளாதார சுமை மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு என்பனவற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, குறிப்பாக மாதம் சம்பளம் பெறுகின்றவர்கள், சிறிய நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள், முறைசாரா வர்த்தக முயற்சியாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு உடனடி நிவாரணங்கள் பட்ஜட்டில் முன்வைக்கப்படவில்லை என்பது பொருளாதார நிபுணர்களின் மதிப்பீடாக காணப்படுகின்றது.

மாறாக சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடைகின்ற 2048 ஆம் ஆண்டு ஆகின்றபோது அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை உருவாக்குவதற்கான பின்னணியுடன் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜட் தயாரிக்கப்பட்டுள்ளதாக வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்த ஜனாதிபதி ரணில் அறிவித்திருக்கிறார். மிக முக்கியமாக வெளிநாடுகளிலிருந்து கடன்பெற்று விருந்து உண்பதற்கு இவ்வரவுசெலவுதிட்ட ஊடாக எதிர்பார்க்கவில்லை என்று ஜனாதிபதி மிகவும் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.

இது இவ்வாறு இருக்க கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் சமுத்திர வளங்கள், கைத்தொழில், வியாபாரம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு வெளிநாட்டு உறவுகள், போன்ற அனைத்தும் நவீனமயப்படுத்தபடவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசாங்க வருமானத்தை 2025 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15 சதவீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கின்றது. அது தற்போது 8.3 வீதமாக காணப்படுகின்றது,. முக்கியமாக வரி வருமானத்தை அதிகரிப்பதன் ஊடாக இந்த அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் தற்போது 60 வீதத்தை தாண்டியுள்ள பணவீக்கமானது நடுத்தர காலத்தில் குறைக்கப்படும் என்றும் இவற்றுக்கு இசைவாக, வங்கி வட்டி வீதங்களும் படிப்படியாக மிதமான மட்டத்தினை கொண்டுசெல்லப்படும் என்றும் பட்ஜட்டில் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் மிகவும் நெருக்கடியான சவாலான காலகட்டத்தில் 2023 ஆம் ஆண்டு 2 க்கான வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு காலகட்டத்தில் பட்ஜட் ஒன்றை தாக்கல் செய்வது என்பது இலகுவான விடயமல்ல. எப்படி முன்வைத்தாலும் அவற்றின் விளைவுகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை தவிர் 2 க்க முடியாது. மறுசீரமைப்பு யோசனைகள்

இந்நிலையில் நீண்டகால பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள மறுசீரமைப்பு செயற்பாடுகள் முக்கியமானதாகவே காணப்படுகின்றன. முக்கியமாக பொருளாதாரத்தை, பொருளாதார அபிவிருத்தியை நோக்கியதாக பல்வேறு மறுசீரமைப்பு மற்றும் நீண்டகால திட்டங்கள் காணப்படுகின்றன. 

எனினும் பொருளாதார நிபுணர்கள் மற்றும் எதிர் தரப்பினரின் விமர்சனத்துக்கு உள்ளாகி இருப்பது இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக தற்போது பாதிக்கப்பட்ட இருக்கின்ற மற்றும் பொருளாதார ரீதியாக கடுமையான சவால்களை எதிர்நோக்கியிருக்கின்ற மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் இதில் முன்வைக்கப்படவில்லை என்பதாகும். எனவே இது குறித்து கவனம் செலுத்தப்படவேண்டும். காரணம் தற்போதைய நிலைமையில் நாடு நீண்டகால பொருளாதார அபிவிருத்தியை நோக்கி பயணிப்பது மட்டுமன்றி உடனடியாக பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கான மீட்சித் திட்டங்களும் அவசியமாகின்றன. அந்தவகையில் இந்த குறைபாட்டை அடுத்து வரும் காலங்களில் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய சமூக திறந்த பொருளாதார முறைமை ஒன்றை இதனூடாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதில் அவர்களுக்கு கசினோவுக்கு வரி விதித்தல், நிறுவன ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தல், வரி முகாமைத்துவம், தனியார்மயப்படுத்தல் செயற்பாடுகள், ஏற்றுமதி இறக்குமதியில் காணப்படும் கட்டுப்பாடுகளை தளர்த்தல், வெளிநாட்டு முதலீடுகளில் காணப்படுகின்ற கட்டுப்பாடுகளை தளர்த்தல், செஸ் வரிகளை படிப்படியாக நீக்குதல், சர்வதேசத் வர்த்தகத்துக்கு உகந்த சூழலை உருவாக்குதல், வரி வருமானத்தை அதிகரித்தல் போன்ற பல்வேறு யோசனைகளை முன்வைத்திருக்கிறார்.

சமூக நிவாரணம்?

ஆனால் இங்கு சமூக நீதி அதாவது தற்போதைய சூழலில் பாதிக்கப்பட்டு இருக்கின்ற மக்களுக்கான நிவாரணங்கள் எங்கே என்பது முக்கியமான விடயமாகவுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கின்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பொருளாதார நிபுணர் ஹர்ஷ டி, சில்வா பொருளாதார ரீதியில் இந்த வரவு செலவுத்திட்டம் சிறந்ததாக காணப்படுகிறது. ஆனால் அந்த வரவு செலவுத்திட்டத்தின் சமூக ரீதியான அரசியல் ரீதியான நிவாரணம் எங்கே? அந்த இந்த வரவு செலவுத் திட்டம் சமூக நீதியை தவற விட்டு விட்டது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் தாக்கம், நாடு முடக்கப்பட்டமை, டொலர் நெருக்கடி, பொருட்களின் விலை அதிகரித்தமை, எரிபொருட்கள் விலை அதிகரிப்பு, சேவைகளின் பொருட்களின் கட்டணங்கள் விலைகள் கடுமையாக உயர்வடைந்தமை, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டமை 70 வீதத்தை தாண்டிய பணவீக்கம் போன்ற பல நெருக்கடிகள் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மாத சம்பளம் பெறுகின்ற மக்கள், அன்றாடம் தொழில் செய்து பிழைப்பை நடத்திக்கொண்டுள்ள மக்கள் கடுமையானதொரு பொருளாதார நெருக்கடியை சந்தித்துவருகின்றனர். இந்த மக்களுக்கான உடனடி மீட்சித்திட்டங்கள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என்ற விடயம் முன்வைக்கப்படுகிறது. எனினும் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் நிவாரண உதவிகளை மேற்கொள்வதற்கான திட்டங்கள் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது. பட்ஜட் மீதான நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நிவாரணங்கள் வழங்கப்படும் என்ற விடையத்தை வெளிப்படுத்தியிருந்தார். நிவாரண உதவி கோரியுள்ள

37 இலட்சம் குடும்பங்கள்

அதாவது அரசாங்கம் கடந்த மாதம் அரசாங்கத்தின் நிவாரண உதவி தேவைப் படுகின்ற மக்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நாட்டில் காணப்படுகின்ற 57 இலட்சம் குடும்பங்களில் 37 லட்சம் குடும்பங்கள் தமக்கு நிவாரண உதவிகள் அவசியம் என்றுகோரி விண்ணப்பித்துள்ளன. ஜனவரி மாதமளவில் இது தொடர்பான தெரிவுகள் இடம்பெற்று ஏப்ரல் மாதத்தில் இருந்து தகுதியான குடும்பங்களுக்கு வாழ்வதற்கான நிவாரண உதவி பெற்றுக் கொடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவித்துள்ளார். அந்தவகையில் அந்த செயற்பாடுகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். அவை தாமதப்படுத்தப்படாமல் தகுதியானவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான பொருளாதார மற்றும் உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கான நிவாரண உதவிகள் வழங்கப்படுவது இன்றியமையாதது.

இதேவேளை 2023 க்ககான வரவு-செலவுத் திட்டத்தின் பிரகாரம் அடுத்த வருடத்திற்கு சமுர்த்தி கொடுப்பனவுக்காக 20750 மில்லியன் ரூபாவும் முதியோருக்கான கொடுப்பனவுக்காக 3000 மில்லியன் ரூபாவும் குறைந்த வருமானம் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவியாக 250 மில்லியன் ரூபாவும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவுக்காக 200 மில்லியன் ரூபாவும் மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி உதவிக்காக 18800 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த செயல்பாடு விரிவுபடுத்தப்பட்டு நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். மேலும் சிறுவர் போஷாக்குக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இளம் பெண் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்க 250000 ரூபா சலுகைக் கடன் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயங்கள்.

ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல்

ஏற்றுமதி வருமானத்தை வருடாந்தம் மூன்று பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கைக்கு வருடாந்தம் 10 முதல் 12 பில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருமானமாக கிடைக்கின்றன. அதனை தற்போது 15 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைத்திருக்கின்றார். ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும் தற்போது வருமான வரி விகிதம் 30 வீதத்தை தாண்டிய எல்லையில் அமைந்திருக்கிறது. அதாவது 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமாக வருமானம் உழைக்கின்ற சகலரும் 30 வீதத்தை தாண்டி வரி செலுத்தவேண்டும். இவ்வாறு அதிகளவு வரியை விதிக்கும்போது எவ்வாறு ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. அதேபோன்று சுங்க வரிகள் 0, 5, 10, 15, வீதமாக இருந்த நிலையில் தற்போது அவை 0, 10, 15, 20 என்ற அடிப்படையில் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. எனவே இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் நிலைமை இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆடை துறையிலேயே அதிகளவு ஏற்றுமதி வருமானம்

பெறப்படுகின்றது. ஆனால் அதற்கான உள்ளீடுகள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவேண்டும். அந்த மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும்போது இந்த சுங்கவரி அதிகரிக்கப்படுமாயின் அதுவும் ஏற்றுமதி வருமானத்தில் தாக்கத்தை செலுத்தும். இந்த பட்ஜட் தொடர்பாக பொருளாதார நிபுணர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பொருளியல் துறை விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி இவ்வாறு விபரிக்கிறார். அதாவது நடுத்தர வர்க்க பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த வரவுசெலவுத்திட்டம் பூர்த்திசெய்யவில்லை. நீண்டகால ரீதியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய வண்ணம் இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய உடனடி பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. உழைக்கும் வர்க்கம் வாழ்க்கைச் செலவு உயர்வினால் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. அவர்களை 2024ஆம் ஆண்டு வரை பொறுத்திருக்குமாறு இந்த வரவு செலவுத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் 2024 ஆம் ஆண்டு வரை அவர்கள் எவ்வாறு உயிர் வாழ்வது என்பது இங்கு கூறப்படவில்லை. அதேபோன்று மறுசீரமைப்புக்கள் இருக்கின்றன. 8 வீத பொருளாதார வளர்ச்சி, முதலீடுகளை அதிகரித்துக்கொள்ளல், ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல் என்பன முன்வைக்கப்பட்டுள்ளன. அவை இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலப்பகுதியில் இருந்து முன்வைக்கப்படுகின்ற யோசனைகளாகும். ஆனால் அது எவ்வாறு அடையப்படும் என்று விபரமில்லை. மேலும் இறக்குமதி சுங்க வரியும் அதிகரிக்கப்படுகிறது. இதனால் இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் இருக்கின்றது. இந்த பட்ஜட்டில் வரி வருமானத்தை அதிகரிப்பது ஒரு நோக்கமாக கொண்டு இருப்பதாக காணமுடிகிறது. வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டுமானால் அது படிப்படியாக செய்யப்பட வேண்டும். இன்றேல் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு கணேசமூர்த்தி கூறுகிறார்.

பொருளாதார சுமையை குறைக்கவேண்டும்

எப்படியிருப்பினும் நெருக்கடியான காலகட்டத்தில் தற்போது இந்த வரவு செலவுத் திட்டம் முன் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் நீண்டகால பொருளாதாரத் திட்டங்களை தவிர் 5 க்க முடியாது. அதற்கான பொருளாதார கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். ஆனால் அதேநேரம் தற்போது உடனடியாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கான நிவாரண உதவிகள் உறுதிப்படுத்தப்படுவதும் அவசியமாகும். இந்நிலையில் வரவு செலவுத்திட்டம் விவாதிக்கப்பட்டுவருகின்றது. டிசம்பர் மாதம் நடுப்பகுதிவரை விவாதம் நடைபெறும் நிலையில் அந்த விவாதங்களின் ஊடாக முன்வைக்கப்படுகின்ற விடயங்களை ஆராய்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். வாழ்க்கை செலவு உயர்வினால் நசுங்கிப் போயிருக்கும் மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் உள்ளடக்கப்பட வேண்டியதும் அவசியமாக இருக்கின்றது. நீண்டகால மற்றும் குறுகியகால திட்டங்கள் என்பன சமாந்தரமாக பயணிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.

https://www.virakesari.lk/article/140245

Link to comment
Share on other sites

இந்த அறிக்கையின் முன் பகுதி நன்றாக ஆரம்பிக்கின்றது. இலங்கை மக்கள் எப்படி உழைக்கும் வலுவை இழந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. அதற்கு உதாரணமாக : மின் லிளக்குகளை வீதிகளில் ஒளிரவிட மக்கள் சந்தோசமடைந்தனர். ஆனால் அந்த மின்சாரத்தை எப்படி அபிவிருத்தி செய்வது என்பது கவனத்தில் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்த அவர்கள் சோம்பேறி ஆனார்கள் என்ற கருத்தை ஏற்க முடியாது. ஐரோப்பாவில் இதற்கு மேலான வசதிகளை ஏற்படுத்தித் தந்தபோதும் அவர்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள்.

அதன்பின் உப்புச்சப்பில்லாத வழக்கம்போல் ஏனைய நாடுகளைப் போலவே பசுமை, சுற்றாடல், தொழில்நுட்பம், டிஜிட்டல் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. 

இது முற்றிலும் சிங்கள மக்களைக் குறிவைத்தால்போல்தான் ஆக்கப்பட்டுள்ளது. ஓரு இடத்தில் புத்தர் முன்னேற்றத்துக்காகக் கடன் வாங்குமாறு சொன்னதாகவும் உள்ளது. 🤣

எந்த இடத்திலும் இலங்கயின் முன்னேற்றத்துக்குப் பிரதான தடையாய் இருக்கும் இனப்பிரச்சனை பற்றிச் சொல்லப்படவில்லை. பிரதான ஏற்றுமதிக்கு உழைக்கும் மலையகத் தமிழருக்கான மேம்பாடு பற்றி நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் புலம்பெயர்ந்த தமிழரின் முதலீடுகளை உள்வாங்குவதற்கான திடமான நோக்கம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

போரில் பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கான உதவித்தொகை தவிர இராணுவம் பற்றி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இராணுவத்திற்கு/பாதுகாப்பிற்கென பாரிய நிதியினை ஒதுக்கும் போது கடன் வழங்கும் நாடுகள் ஒன்றும் கேட்பதில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon

 

 

No photo description available.

 

May be a cartoon

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகல அரச நிறுவனங்களின் பட்டியலை முதன்முறையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

By DIGITAL DESK 2

17 NOV, 2022 | 08:58 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

 

 

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சகல அரச நிறுவனங்களின் பட்டியலை முதல் தடவையாக இன்று (நவ. 17) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். வரவு - செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்த பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று (நவ. 17) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு அரச நிறுவன பட்டியலை சபைக்கு சமர்ப்பித்தார்.

Ranil.jpg

இதற்கமைய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 1283 ஆகும். இதில் 29 அமைச்சுகளும் மற்றும் 99 திணைக்களங்களும் உள்ளடங்குகின்றன. அத்துடன் 420 அரச கூட்டு நிறுவனங்களும் அதில் உள்ளடங்கியுள்ளன.

19 செலவீன தலைப்பின் கீழ் வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்படும் நிறுவனங்களில் 29 அமைச்சுக்கள், 99 திணைக்களங்கள், 25 மாவட்டச் செயலகங்கள், 9 மாகாண சபைகள்,341 உள்ளூராட்சி செயலகங்கள் மற்றும் 341 உள்ளூராட்சி அரச நிறுவனங்கள் அடங்குகின்றன.

https://www.virakesari.lk/article/140394

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

 

May be a cartoon

 

May be a cartoon of text

 

May be a drawing

 

 

May be a cartoon

 

May be a cartoon

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.