Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் இறந்தபின் உங்கள் உடலை எரிப்பதையா அல்லது புதைப்பதையா நீங்கள் விரும்புகின்றீர்கள்?

இறந்தபின் எமது உடலை என்ன செய்யலாம்.. ?? 34 members have voted

  1. 1. நீங்கள் இறந்ததும் உங்கள் உடலை மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என விரும்புகின்றீர்கள்?

    • எரித்தல்!!
      10
    • புதைத்தல்!!
      2
    • தானம் செய்தல்!!
      5
    • என்னாவது செய்யட்டும்!!
      4
    • நான் சாக மாட்டேன்.. !!
      6
    • இனித்தான் இதைப்பற்றி யோசிக்க வேண்டும்!!
      7

Please sign in or register to vote in this poll.

Featured Replies

வணக்கம்...

இது ஒரு வித்தியாசமான சிந்தனை... :P சிலருக்கு (பலருக்கு?) இதைப்பற்றி கதைப்பது பிடிக்காது. :huh:

எனக்கு இன்று தூக்கத்தால் எழுந்ததும் இந்த எண்ணம் மனதில் ஓடியது. எனது மனதில் வந்த, சிந்தித்தவற்றை இங்கு எழுதுகின்றேன்..

அதாவது நாங்கள் இறந்தபின் எங்கள் உடலை மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே இந்த கருத்தாடலின் தலைப்பு...

சரி.. எனது விருப்பங்களை சொல்கின்றேன்..

எனக்கு எனது உடலை இறந்தபின் புதைப்பது கீழ்க்கண்ட காரணங்களால் பிடிக்காது..

ஆ... கற்பனை செய்து பார்க்கவும் பயமாய் இருக்கிறது. :mellow: அதாவது என்னதான் நாங்கள் இறந்துவிட்டாலும், பூமிக்கு அடியில் பத்து அடி ஆழத்தில் - பல்வேறு ஜந்துக்கள் வாழும் மண்ணில் எனது உடலை புதைப்பது எனக்கு விருப்பம் இல்லை.

இறந்ததும் எனது உடல் புதைக்கப்பட்டால் என்ர உடல் மண்ணுக்குள்ள மாதக்கணக்கில இருந்து அழுகி உக்கல் அடைய வேண்டும்...

என்னால் எனது உடம்பில் ஒரு இளையான் மொய்த்தாலே சகிக்க முடியாது. :angry: இந்த நிலையில் ஆயிரம், ஆயிரம் புழுக்கள் எனது உடலை வைத்து நோண்டி நோண்டி உண்டு அழுக வைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.. :(

ஒரு முறை மண்ணுக்குள் இருந்து அழுகிய ஒரு பூனையை பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதைப் பார்த்தபின்பே எனது உடல் புதைக்கப்படக்கூடாது என்ற தீர்மானத்திற்கு வந்தேன்.

என்ன இருந்தாலும் எங்கள் உடம்பை வைத்துத்தானே நாங்கள் ஒருவரை ஒருவர் இனம் காண்கின்றோம்? இந்த உடம்பு மூலம் தானே இந்த உலகில் மனித வாழ்க்கை சாத்தியமானது. அப்படிப்பட்ட உடம்பை பூச்சி, புழுக்களிற்கு தின்ன தானமாகக் கொடுப்பது எமது உடம்பை அவமரியாதை செய்வது போல் இல்லையா?

ஆனால்..

இறந்தபின் எமது உடலை எரிக்கும் போது இந்தப் பிரச்சனைகள் இல்லை.. அதாவது, சவக்காலையில் உள்ள அந்த அதி உயர் மின் வலுவுள்ள (ஹை வோல்ட்டேஜ்) போரணையில் வைத்து எரிக்கும்போது ஒரீரு செக்கன்களில் எமது உடல் சாம்பலாகி அதன் சரித்திரம் முடிந்துவிடும்.. :P

புதைப்பது, எரிப்பது தவிர உங்களுக்கு வேறு ஏதாவது ஐடியாக்கள், கற்பனைகள் தோன்றினாலும் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யலாம்.. சில காரணங்களால் எனது இறந்த உடலை மருத்துவபீடம் போன்றவற்றுக்கு தானம் செய்வது எனக்கு விருப்பம் இல்லை..

எகிப்தில் உள்ள பிரமிட்டுக்களில் இறந்த மனித உடலை பாதுகாப்பாக வைப்பார்கள். இது ஒரு நல்ல சூப்பர் ஐடியாவாக தெரிகின்றது. ஆனால், எனக்கு பிரமிட்டு கட்டித்தர யாரை போய் பிடிப்பது? மேலும் பிரமிட்டை எங்கே கொண்டுபோய் கட்டுவது? இந்தக் காலத்தில் இறந்த ஒரு உடலைப் புதைப்பதற்கே இடம் கிடைக்கிது இல்லை..

உங்கள் விருப்பங்கள் என்ன? இங்கே பகிர்ந்து கொள்ளவும்.. நன்றி!

பி/கு: இப்படி எழுதுவது, கதைப்பது எனது அம்மாவிற்கு சுத்தமாக பிடிக்காது. வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவனே இப்படி எல்லாம் கதைப்பான், சிந்தனை செய்வான் அடிக்கடி என்று சொல்லுவா. :lol:

Edited by கலைஞன்

  • Replies 84
  • Views 9.9k
  • Created
  • Last Reply

ஆமாம் கலைஞன் அண்ணா நல்ல சிந்தனையாக இருக்குதே,

விடிய எழும்பின உடனேயே உதை தான் நினைச்சியளா? நல்லா இருக்கு உங்க நினைப்பு.

என்னால் எனது உடம்பில் ஒரு இளையான் மொய்த்தாலே சகிக்க முடியாது. :huh: இந்த நிலையில் ஆயிரம், ஆயிரம் புழுக்கள் எனது உடலை வைத்து நோண்டி நோண்டி உண்டு அழுக வைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.. :angry:

ஓ இலையான் மொய்த்தாலே சகிக்க முடியாதா? உங்கு இலையானே இல்லையா? ம்ம் நல்ல விசயம்.

ஆனால் இறந்தபின் இலையான் மொய்ச்சால் உங்களூக்கு தெரியுமா?

இறந்தபின் எமது உடலை எரிக்கும் போது இந்தப் பிரச்சனைகள் இல்லை.. அதாவது, சவக்காலையில் உள்ள அந்த அதி உயர் மின் வலுவுள்ள (ஹை வோல்ட்டேஜ்) போரணையில் வைத்து எரிக்கும்போது ஒரீரு செக்கன்களில் எமது உடல் சாம்பலாகி அதன் சரித்திரம் முடிந்துவிடும் :P

சிரிப்பை பார்க்க உந்த வழிதான் பிடிச்சிருக்கு போல. பேசாமல் அபப்டியே செய்ய சொல்லுறதுதானே.

புதைப்பது எரிப்பது மருத்துவ பீடம் கொடுப்பது பிரமிட் கட்டுவது இவற்ரை விட வேறென்ன வழி இருக்குது?

ஆமா உங்கம்மா சொன்னது போல இன்னும் கூட திட்டணும் போல இருக்குங்கோ. :angry: :mellow:

  • தொடங்கியவர்

இறந்தபின் இளையான் எமது உடலில் மொய்த்தால் எமக்கு தெரியாது என்று எப்படி கூறுவது? நாங்கள் செத்தபின்பு தானே இதைப்பற்றி தெரியும்? :mellow:

இறந்தபின் உணர்வு இருக்காது என்று எப்படி உங்களால் கூறமுடியும்? தற்செயலாக அதை உணரக்கூடியதாக இருந்தால் - அதாவது புழுக்கள் எங்கள் உடலை சாப்பிடுவதை உணரக்கூடியதாக இருந்தால், அந்த நேரத்தில் யாரை உதவிக்கு அழைப்பது? அந்த நேரத்தில் பாவிகள் எனக்கு அந்தியேட்டி, மற்றும் செலவு செய்து எனது பெயரில் மூக்கு முட்டத் திண்டு கொண்டு இருப்பாங்கள்.. :angry:

வேறு சிறந்த வழிகள் தெரியாததால் இப்போதைக்கு எரிப்பதையே விரும்புகின்றேன். ஆனாலும், என்னை எரிப்பதும் எனக்கு பெரிதாக விருப்பம் இல்லை... :huh: யாராவது வேறு நல்ல ஐடியா சொல்லுங்கோ... பிளீஸ்..

Edited by கலைஞன்

ஜெனரல் படுக்க போகிற நேரத்தில இப்படி எல்லாம் தலைப்பை போட்டு பயம் காட்டுறீங்க................பேபிக்கு பயமா இருக்கு சரி நாளைக்கு வந்து விடை சொல்லுறன் ஜெனரல் அவர்களே.......... :P

Edited by Jamuna

குருவே படுக்க போனனான் அதுகுள்ள ஒரு சின்ன சந்தேகம் அதை கிளியர் பண்ணுங்கோ நான் வந்து மற்றது விடை சொல்லுறன்................அதாவது நீங்க உங்களை எரிக்க பயம் என்று சொன்னீங்க அப்ப குருவே எரிவிபத்தில நீங்க எரிந்து போனீங்க என்றா............மற்றது சுனாமி வந்து உங்களை கொண்டு போய் அதுவும் பூனைகுட்டி நிகழ்ந்த மாதிரி நிகழ்ந்தா இதை பற்றி தான் எனக்கு ஒரே யோசனையா இருந்தது கேட்டு போட்டேன் நிம்மதியா படுக்கலாம் மிச்சம் நாளைக்கு கேட்கிறேன்......... :P :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடியப்பறமாயிருந்தும் கருத்தும் கண்னியமாயிருந்து கருத்தெழுதும் எங்கள் ஜமுனனுக்கு(செல்லமாய்) வாழ்த்துக்கள் :mellow:

  • தொடங்கியவர்

எரி விபத்தில மண்டைய போடவேண்டி வந்தா பெருந்துன்பம் தான்!

சுனாமி வந்து அள்ளிக்கொண்டுபோய் கடைசில எண்ட உடம்ப மீனுகள் திண்டாலும் பெருந்துன்பம் தான்!

விபத்தால் ஏற்படும் மரணங்களை விட இயற்கை மரணத்தில் ஓரளவு சுகம் இருக்கின்றது என்று நினைக்கின்றேன்..

சாகும்போது உடல் துன்பப்பட்டு, துடிதுடித்து மரணம் அடைவது மிகவும் கொடுமையானது.

சாவு வரும்போது அதை தூக்கம் வருவது போல் சுகமான அனுபவமாக எதிர்கொள்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்..

தானம் தானம் தானம்

இறந்தபிறகும் மற்றவனுக்கு பயன் படனும்

எனவே தானம் தானம் தானம்

:huh::mellow:

  • தொடங்கியவர்

சின்னப்பு நீங்கள் முன்னுக்கு தானம் செய்யுங்கோ... மிச்சாக்கள் உங்களுக்கு பின்னால வருவீனம்.. :P

ஆனா, நானும் ஜமுனாவும் உடல் தானம் செய்ய வரமாட்டம்... என்ன ஜமுனா நான் சொல்லிறது சரிதானே? :huh::lol:

எண்ட உடலை தானம் செய்யுறன் எண்டு சொன்னால்.. பிறகு சனம் எப்ப நான் சாவன், எண்ட உடல் உறுப்புக்களை அறுக்கலாம் எப்ப எண்டு இரவு பகலா எதிர்பார்த்து காத்திருக்கும்... :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த உடலை பழுதுபடாமல் லிக்குயிட் நைட்ரஜனில் வைத்துப் பாதுகாத்தால் விஞ்ஞானம் வளர்ச்சியடையும் காலத்தில் திரும்பவும் உயிரூட்ட வசதியாக இருக்கும். அப்போது நாமெல்லாம் புத்துயிர்பெற்று எழுந்து வருவோம். அதற்கேற்றமாதிரி ஸ்ரோர்களைக்கட்டி இடவசதி செய்துகொடுத்தால் பலரும் காசுகட்டித் தங்களுக்கென ஒரு இடத்தை வாங்கிக்கொள்வார்கள். எனக்கும் ஒரு இடம் வாங்க விருப்பம்.

கண்தானம் போன்றவை மிகப் பயனுள்ளவை. இறந்தபின் அவ்வாறான ஒன்றை நான் விரும்புகிறேன். எரிப்பதில் பல நன்மை இருக்கிறது. ஒன்று சுகாதாரம். மற்றது நாம் விட்டுச் செல்பவர்கள் எம்மைபற்றி தொடர்ந்து நினைத்து அழாமல் இருப்பார்கள். புதைத்த இடத்தில் வந்து பார்க்கும் போது திரும்பத் திரும்ப நினைவுகள் கிளறப்படும்.

இனித்தான் இதைப்பற்றி யோசிக்க வேண்டும்!! :wacko: :ph34r:

புதைத்தால் மண் தின்னுற அல்லது எரிக்கிறபோது நொருப்புத் தின்னுற இந்த உடற்பாகங்கள் மற்றவர்களிற்கு பயன்படுமாக இருந்தால் அதைக்கட்டாயம் கொடுப்பது நல்லது.

தானம் கொடுத்த பின்னர் மிஞ்சியவற்றை எரித்தால் என்ன புதைத்தால் என்ன. உறவினர்களிற்கு எப்படி விருப்பமோ அப்படியே செய்யட்டுமென்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.................இதை யெல்லாம் போட்டு ஏனுங்கோ பயப்படுத்துறீங்க

  • கருத்துக்கள உறவுகள்

தானம் தானம் தானம்

இறந்தபிறகும் மற்றவனுக்கு பயன் படனும்

எனவே தானம் தானம் தானம்

:(:mellow:

அத்து இதுதானே வேனாமுங்குறது, தானம் செய்யிறது என்னத்துக்கு? ஜவுளிக்கடையில ரவுசரை போட்டு, சேர்ட்டையும் மாட்டிவிட்டு வாசலில வணக்கம் சொல்லுவதற்கா? :angry: மருத்துவ மாணவர்களுக்கு பயன் படும், அல்லது விஞ்ஞானிகள், மருத்துவர்களுக்கு பயன் படும் என்பதற்காவே, மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களுக்கு பயன் படும் எண்டு சொன்னது எதுக்காக? அவர்களின் வீட்டு பாத்திரத்தை கழுவி வைக்கவும், உடுப்புகளை தோய்த்து போடவா? இல்லை, உள்ளூக்குள் இருக்கும் உறுப்புகளை ஆராச்சி செய்யவும், அல்லது அந்த உறுப்புகளை மற்றையவரின் உடலுக்குள் பொருத்துவதற்குமே, பல அவயங்கள் இருக்கு அதுதான், கிட்னி, சட்னி எண்டு, அதுகள் இருக்கிறவையள் தான் உடலை தானம் செய்யனும்,

இப்ப புரிஞ்சுதா என்ன சொல்லவாறன் எண்டு? 24 மணி நேர மப்** மைந்தர்களுக்கு இதெல்லாம் இருக்குமென்றீங்க?? சும்மா போங்கப்பு காமெடி பன்னிக்கொண்டு... :huh::lol::D :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் தான் சிந்திக்க வேண்டும். திடீரென இறந்தால் குடும்பத்தவர்கள் எப்படி வேண்டுமானாலும் செய்யட்டும்.தமிழீழத்தில் இறந்த போராளிகளை புதைக்கிறார்கள்.நிச்சயமாக ஒரு நல்ல காரணம் இருக்க வேண்டும். கலைஞன், ஏன் இப்படி விசித்திரமாக சிந்திக்கின்றீர்கள்?" காடு வா வீடு போ " என்பவர்களே போற நேரம் போகட்டும் என்று இருக்கிறார்கள்.நீங்கள் மட்டும்?????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சாகவேணும்' என்று கோழைத்தனமாக கதைப்பது தான் தவறு! அன்றேல் 'சாவு" பற்றிக் கதைப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை!. 'சித்தார்த்தர் இப்படித்தான் சிந்தனைகளால் புத்தரானார்" மாப்பிள்ளை கலைஞன் ஆனார் இனி?!!! ;)

உண்மையில் கண் தானம் செய்வது மிகச் சிறந்தது!. நிச்சயம் நான் தானம் செய்வேன். அத்தோடு என் உடலை எரிப்பதே எனக்கு விருப்பம். இந்த உடல் இந்துக்களின் முறைப்படி எரிதகனம் செய்ய வேண்டும், பஞ்ச பூதங்களோடும் எம் உடல் கலக்கப்பட வேண்டும்!.

வீரமரணம் என்பது 'சாகாவரம்"! போன்றது! "இயற்கை மரணம் என்பதும் கூட ஒரு வரம்!.

"கலைஞா! இதைப்பற்றி அதிகமாய் சிந்திச்சுப்போடாதீங்கோ!! பிறகு ஜம்மு அழைப்பது மாதிரி 'நீங்கள் 'குரு" ஆகிடுவீங்கள் எல்லோருக்கும்!. :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இறக்கமாட்டேன் எண்டு போட்டிருக்கிறன்.

தற்செயலாக நான் மறந்துபோய் இறந்தால் யாராவது எழுப்பிவிடவும். :mellow:

விடியப்பறமாயிருந்தும் கருத்தும் கண்னியமாயிருந்து கருத்தெழுதும் எங்கள் ஜமுனனுக்கு(செல்லமாய்) வாழ்த்துக்கள் :mellow:

நன்றி கு.சா தாத்தா எனக்கு வெட்கமா இருக்கு .............. :huh: :P

குருவே உடல் தானம் செய்ய நானும் வரமாட்டேன் நேற்று இரவு தான் இதை பற்றி யோசித்து கொண்டு படுத்தனான்...........அப்ப தான் யோசித்தன் இவங்களுக்கு கொடுத்தா கண்ட இடத்திலையும் வெட்டுவாங்க எனக்கு நோகும் என்று அதனால தானம் கொடுகிறது இல்லை என்று ஒரு முடிவிற்கு வந்துவிட்டேன் :( ............அதன் பிறகு தான் யோசித்தேன் எப்படி என்ன செய்யிறது என்று இரவு முழுவதும் நித்தாவே வரவில்லை பாவிகள் நான் கஷ்டபட நல்லா அயல் ஆட்கள் சொந்தகாரர்கள் தாற சாப்பாட்டை ரசித்து சாப்பிடுவங்கள் பில்டப்பிற்கு படதிற்கு மட்டும் வைத்து தேவராம் வேற பாடுவாங்க இருகிற நேரம் நம்மளிற்கு முன்னால் தேவராம் பாடி இப்படி படைத்து யாரும் செய்தா சூப்பரா இருக்கும் குருவே................ :P

புதைப்பது எனக்கும் பிடிக்கவில்லை................மூச்சும் விட ஏலாம பூச்சிகடி எல்லாம் தாங்கி கொண்டு எப்படி இருகிறது...........அதில வேற பூனை மாதிரி எல்லாம் வரும் என்றா நினைத்து கூட பார்க்க முடியாது தான் குருவே..............மற்றது நம்ம உடலை எல்லாம் 5நாள் எல்லாம் வைத்து ஒன்றுகூடல் நடத்தாம் யாழின்ட பெயரில நடத்திற மாதிரி நடத்தாம அடுத்த நாள் இல்லாட்டி அன்றைக்கே ஏதாவது செய்திட வேண்டும் இலாட்டி இலையான் தொல்லை என்னாலையும் தாங்க ஏலாது தான் ஆனா சிட்னியில இலையான் இல்லை ஆனா கோலில வைத்து போட்டு குறிபிட்ட நேரதிற்கு தான் வரூவீனம் மற்ற பேய்களோட நான் எப்படியப்பா இருகிறது கொஞ்ச கூட அறிவில்லையா குரு இவர்களிற்கு...........நாமளே பேயோ என்றாலும் அதில படுத்து இருக்க பயம் தானே குருவே................ :D

மற்றது சுற்றி இருந்து அழுது தலையை போட்டு நம்ம உடம்பில அடித்து நமக்கு நோக பண்ணாம ஒரு சிவாஜியில இருந்து ஒரு நல்ல பாட்டையும் போட்டு கொஞ்சம் மின்விசிறியையும் போட்டுவிட்டா நல்லா இருக்கு பக்கத்தில ஒரு கதை புத்தகமும் வைக்கலாம் தானே நாம வாசிக்க மாட்டோம் என்று அவர்களிற்கு எப்படி தெரியும்.........நமக்கு புத்தகம் எல்லாம் வேண்டாம் லாப்டோப்பை தந்து இன்டநேட் கனக்சனோட இருக்க வேண்டும் சொல்லிட்டன் பக்கத்தில வைத்துவிட்டா சந்தோசமா யாழிற்கு வருவேனல........... :mellow:

மற்றது பேச்சுக்கு கூட பசிக்குது என்று கேட்காம நல்லா சாப்பிடுவாங்க..........சாமி எல்லாம் பால் குடிக்கும் போது எங்களுக்கு ஒருக்கா ஊத்தி பார்த்தா தானே தெரியும் சாப்பிடுவோமா இல்லையா என்று கரக்டா எனக்கு செய்யுங்கோ நான் சாப்பிடுவன்.........மற்றது எனக்கு இந்த ஜயர் எல்லாம் வரவேண்டாம் சொல்லிட்டன் நிம்மதியாக படுத்து இருக்கும் போது புகை போட்டு மந்திரம் எல்லாம் சொல்லி டிஸ்சர்ப் பண்ணி கொண்டு..............புகை வேற மூக்குள்ள வரும் தும்ம கஷ்டம் என்று இவைக்கு தெரியாதோ............ :angry:

பிறகு பெட்டியை மூடும் போது உடனே மூடாம "எஸ்கியூஸ் மீ" பெட்டியை மூடுவா என்று ஒரு பேச்சுக்காவது கேட்கிறீங்களா கட்டாயம் ஒரு வோமல்டிக்காகவது என்னிட்ட கேளுங்கோ சொல்லிட்டன் இல்லாடி பேபிக்கு கெட்ட கோபம் வரும்............. :huh:

மற்றது கடைசியா கொண்டு போகும் போது கொஞ்ச தூரம் கொண்டு போங்கோ அந்த இடத்தில வைத்து அழுது கொண்டு இருக்காம..............பல இடங்களிற்கு டிரிப்பா கொண்டு போகலாம் நானும் சந்தோசமா

எல்லா இடங்களையும் பார்த்து ரசித்ததா போகும் அதைவிட்டு போட்டு ஒரே இடத்தில் இருந்து அழுறது சுத்த போர் சொல்லிட்டன்.............

அடுத்த விசயம் என்னவென்றா பெட்டிகுள்ள கொஞ்சம் உடுப்பு,பவுடர்,சென்ட்,தண்ணி போத்தல் ஒரு ஆறு மாசதிற்கு தேவையான சாப்பாடு சுவீட்ஸ் அப்படி தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் வைத்து மற்றது கதை புத்தகம் எல்லாம் வைத்து விட வேண்டும் இவைக்கு தெரியுமா பெட்டிகுள்ள மூடினா பிறகு எவ்வளவு போராக இருக்கும் என்று..முக்கியாமாக வானொலி மற்றது சீடிகள் பாட்டு சீடி எல்லாம் வைத்து விட்டா சந்தோசமாக நாம அதுகுள்ள இருக்கலாம்................. :lol:

மற்றது பெட்டியில ஓட்டை போட்டு வையுங்கோ முச்சுவிட உங்களுக்கு தெரியுமா நாம மூச்சு விடுறோமா இல்லையா என்று சோ கட்டாயம் இதை எனக்கு செய்யுங்கோ............இவ்வளவு ஒழுங்கா செய்தாலே எனக்கு காணும் பிறகு குருவுன்ட டவுட்டிற்கு வருவோம் இப்ப எரிகிறதா அல்லது புதைகிறதா இரண்டுமே சரியில்லை என்பது என்னுடைய தீர்பு............தானம் கொடுத்தாலும் உடம்பு நோகும் அதுவும் என்னால முடியாது............அப்ப என்ன தான் இதுக்கு வழி.........

image002dx0.jpg

image001ws2.jpg

image005tv1.jpg

இந்த படத்தில இருகிற மாதிரி செய்துவிட்டீங்க என்றா நீங்களும் கவலைபட தேவையில்லை நாமளும் கவலைபட மாட்டோம் தானே.............ஒரு பிரச்சினையும் இல்லை சுகமாக இருக்கலாம் என்பது என்னுடைய தீர்பு......குருவே இது சரி தானே உங்களுக்கும் இது சரியா இல்லாட்டி வேற ஏதாவது செய்ய வேண்டுமா...............ஜம்மு பேபி சப்போஸ் இன்றைக்கோ நாளைக்கோ மண்டையை போட்டா யாழ்கள மெம்பர்ஸ் மறக்காம இப்படி செய்து விடுங்கோ............குருவே உங்களுக்கு ஏதாச்சும் என்றா நான் கட்டாயம் செய்து விடுகிறேன் நீங்க ஒன்றுக்கும் யோசிக்காம போயிற்று வாங்கோ........... :P

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

++

இவ்வளவு சொன்ன பேபி பஞ் ஒன்று கொடுக்காம போனா நல்லா இருக்காது தானே சோ ஜம்மு பேபி பஞ் டைம்..................

ஜம்மு பேபி பஞ் - குழந்தை,ஞானி இருவர் தவிர இங்கு சுகமாக இருப்பவர் யார் காட்டு (குரு & ஜம்மு பேபி)

ஜீவன் இருக்க மட்டும் வாழ்க்கை நமக்கு மட்டும் இது தான் ஜம்மு பேபி பாட்டு..........

தாயை தேர்ந்தெடுக்கும் தந்தையை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை

(ஜம்மு பேபியை தவிர)

முகத்தை தேர்தெடுக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை..

(சின்னா தாத்தா)

பிறப்பை தேர்தெடுக்கும் இறப்பை தேர்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை.........

(குருவே)

வெறும் கம்பன் களி தின்றவனும் மண்ணுகுள்ள-தங்கபஸ்பம்

தின்றவனும் மண்ணுகுள்ள இந்த வாழ்கை வாழ தான் -நாம்

பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல........... (நிலா அக்கா)

எண்ணி பார்க்கும் வேளையில் உந்தன் வாழ்கை மட்டும் உந்தன் கையில்

உண்டு அதை வென்று எடு (யாழ்கள மெம்பர்ஸ்)

================================================================================

====

*பி .கு - இந்த பக்கம் என்ட அம்மா மட்டும் வந்து பார்க்கவே கூடாது மற்றது அக்கா இரண்டு பேரும் பார்த்தா ஏச்சு,அடி எல்லாம் விழும்........ஆகவே யாழ்கள் மெம்பர்ஸ் நாம சடினா டெட் ஆகிட்டா இப்படி எல்லாம் செய்ய வேண்டும் அத்தோட பேர்டேக்கு கேக் வெட்டுறீங்க டெட் டேக்கு எனி கேக் வெட்ட வேண்டும் என்பதை இன்றிலிருந்து நான் அமுலுக்கு கொண்டு வருகிறேன் இதனை ஜெனரல் அவர்கள் ஆமோதிப்பார் என்று நினைக்கிறேன்...........

அப்ப வரட்டா...................ஆகா செத்த வீட்டுக்கு போனாலும் ஜெயிலிற்கு போனாலும் வாரேன் என்று சொல்ல கூடாது தானே அப்ப அதை வாபஸ் பெற்று கொள்கிறென்............. :P

Edited by Jamuna

  • தொடங்கியவர்

இறந்த உடலை பழுதுபடாமல் பாதுகாத்தால் விஞ்ஞானம் வளர்ச்சியடையும் காலத்தில் திரும்பவும் உயிரூட்ட வசதியாக இருக்கும் எண்டு சொல்லுறீங்கள். அப்போது நாமெல்லாம் புத்துயிர்பெற்று எழுந்து வருவம்... அதற்கேற்றமாதிரி ஸ்ரோர்களைக்கட்டி இடவசதி செய்துகொடுத்தால் பலரும் காசுகட்டித் தங்களுக்கென ஒரு இடத்தை வாங்கிக்கொள்வார்கள்.. இப்படி சொல்லி இருக்கிறீங்கள்.. இது ஒரு நல்ல ஐடியாவா தெரியுது. இனித்தான் இதைப் பற்றி பரிசீலனை செய்யவேண்டும்.. :huh:

நானும் இப்படியான விசயங்களை விஞ்ஞானப் புனைகதைகளில் வாசித்து உள்ளேன். நவீன விஞ்ஞானம் மனிதனுக்கு இறந்தபின்னும் வாழ்வை கொடுக்கும் என்று புனைகதைகளில் சொல்லப்படுகிது.. யாருக்கு தெரியும்.. சில வேளைகளில் சாத்தியப்படலாம்.

நான் சாகமாட்டேன் என்று போட்டதற்கு மேலுள்ள காரணமும் ஒன்று...

தமிழ்தங்கை,

"சாகவேணும்' என்று கோழைத்தனமாக கதைப்பது தான் தவறு! அன்றேல் 'சாவு" பற்றிக் கதைப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை!. 'சித்தார்த்தர் இப்படித்தான் சிந்தனைகளால் புத்தரானாரா? ஆனால்..

மாப்பிள்ளை கலைஞன் ஆனார்.. இனி?

இனி கலைஞன் புத்தராக மட்டும் நிச்சயம் மாறமாட்டார். ;) நான் சிலவேளைகளில் பல விசயங்களை பின்னிருந்து முன்னாகத்தான் யோசிப்பேன். என்றபடியால்.. மாப்பிளை போய் கலைஞன் போய் எனது அடுத்த கட்ட வளர்ச்சி ஒரு போக்கிரியாக உருவாவதை நோக்கியதாக இருக்கலாம்..

இதைப்பற்றி அதிகமாய் சிந்திக்கக் கூடாதோ? :lol:

நான் பல தடவைகளில் யோசித்து இருக்கிறேன்.. ஏன் இப்போது உயிருடன் இருக்கின்றேன். முன்பே செத்து இருக்கலாம் எண்டு.. (இதைப்பற்றிய - எனது சாவு அனுபவங்களை இன்னொரு தலைப்பில் ஆரம்பிக்கின்றேன்.. )

அதாவது சாவு எமக்கு ஒரு நிரந்தர அமைதியை தருகின்றது. எனது இந்த சின்ன மூளையை வைத்துக்கொண்டு உலக வாழ்க்கையை எவ்வளவு காலம்தான் நான் தாக்குப்பிடிக்க முடியும்? :mellow: ஆனால், சாவு வரும் போது எமது சப்டர் குலோசாகி எமக்கு ஒரு நிரந்தர அமைதி கிடைத்துவிடும். சாவின் பின் மேலதிக துன்பங்கள், கவலைகள், யோசனைகள் எம்மை வாட்டி எடுக்கப்போவது இல்லை என்று நினைக்கின்றேன்.

எனவே, சாவு ஒரு வகையில் வரவேற்கத்தக்க விடயமே! :P

யமுனா ஏதோ பெரிசா எழுதி போட்டு இருக்கிறீங்கள்.. பதில் சொல்ல பிறகு வாறன்.. :(

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

ஜெனரல் யமுனா.. :huh:

உங்கள் சாவு பற்றிய பார்வை சூப்பரா இருக்கு... ஹாஹா... :lol:

என்ன நேற்று இரவு படுக்க இல்லையோ? :( நானும் தான் படுக்க இல்லை.. இரவிரவா இருந்து இதைப் பற்றிய் ஆராய்ச்சிதான்... இன்னும் முடியவில்லை.. ;)

நீங்கள் சொன்னது எல்லால் நியாயபூர்வமான ஆசைகளாகவும், நடைமுறைக்கு சாத்தியமானவையாகவும் இருக்கின்றன. என்றபடியால், புத்து மாமா மற்றும் இன்னும் தெரிந்த ஓரிருவரிடம் இப்பவே சொல்லி வையுங்கோ. ஆனால்...

யாழுக்கு வருவதற்கு பெட்டியினுள் வயர்லஸ் இண்டர்நெட் இணைப்பு எடுத்து, அதனுள் ஒரு லப்டொப்பையும் வைப்பது நல்ல ஐடியாவாக தெரியவில்லை..

எனினும், நான் தான் முன்னுக்கு சாவேன். நான் செத்தால் நீங்கள் சொன்ன மாதிரியே எனக்கும் செத்தவீடு செய்து வையுங்கோ. எனக்கு தேவாரமெல்லாம் போடக்கூடாது. சிவாஜி படப்பாடல்கள் ஆகவே ஆகாது. நான் யாழில் இணைத்துள்ள ஆங்கிலப் பாடல்களை எனது செத்தவீடன்று போடலாம்.. :P

இறந்தபின் எமது உடலை என்ன செய்யலாம் என்று ஓரளவு தீர்மானிச்சாச்சு. செத்தவீடு எப்படி செய்வதென்றும் தீர்மானிச்சாச்சு. இனி எமது அடுத்த இலக்கு என்ன? :D

சாகும் முன், சாவை சந்திக்கும்வரை உலகில் எப்படி வாழுவது? :mellow:

ஜமுனாவின் ஜடியா நல்லா இருக்கே இப்படியே எனக்கும் செய்யுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சாக மாட்டேன் என்று வாக்கழித்துள்ளேன். பார்ப்பம் என்ன நடக்குது என்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.