Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யா உக்ரேனிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் - தீர்மானம் நிறைவேற்றியது ஐநா - இலங்கை வாக்கெடுப்பை தவிர்த்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா உக்ரேனிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் - தீர்மானம் நிறைவேற்றியது ஐநா - இலங்கை வாக்கெடுப்பை தவிர்த்தது

By RAJEEBAN

15 NOV, 2022 | 12:24 PM
image

உக்ரேனிற்கு ரஸ்யா இழப்பீடு செலுத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்;ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இலங்கை தவிர்த்துள்ளது.

யுத்தம் தொடர்பில் ரஷ்யா உக்ரைனிற்கு இழப்பீடு செலுத்தவேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கியநாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது.

சேதம், இழப்பு காயம் ஆகியவற்றிற்கு இழப்பீடு வழங்குவது குறித்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுளது.  ஐம்பது நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தன,

ukraine_damage.jpg

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், தென்னாபிரிக்கா, நேபாளம், பங்களாதேஸ் உட்பட பல நாடுகள் இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை தவிர்த்துள்ளன.

தீர்மானத்திற்கு ஆதரவாக 94நாடுகள் வாக்களித்துள்ளன,14 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன.

இந்த தீர்மானம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐநாவிற்கான உக்ரைரேன் இராஜதந்திரி சர்வதேச சட்டங்களை மீறியமைக்காக ரஷ்யாவை பொறுப்புக்கூறச்செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/140071

  • கருத்துக்கள உறவுகள்

""The resolution was supported by 94 countries in the 193-member world body vote on Monday. Some 73 more states abstained, while 14 countries voted against. Among others, those voting against the resolution included Russia itself, as well as China, Iran, and Syria.""

73 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. 

ஆகவே, உக்ரேன்  விவகாரத்தில் உலகம் சரி பாதியாகப் பிரிந்து நிற்கிறது. 

6 minutes ago, Kapithan said:

நிச்சயமாக இல்லை!

தேர்தல் நடக்கும்போது வாக்களிக்காதவர்களைக் கணக்கில் எடுக்கக் கூடாது. 94 நாடுகள் ஆதரவாகவும் 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன, அவ்வளவுதான்.

வாக்களிக்காத 74 நாடுகளைத் தந்திரமாக எதிராக வாக்களித்ததாகக் கூறுகிறீர்கள். இது முற்றிலும் தவறான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

ரஷ்யா உக்ரேனிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் - தீர்மானம் நிறைவேற்றியது ஐநா - இலங்கை வாக்கெடுப்பை தவிர்த்தது

Curly Hair GIFs | Tenor

ஐநா’வாவது... Hair ஆவது. 😂 🤣
ரஷ்யா ஒரு  சதம் கூட, உக்ரைனுக்கு கொடுக்கக் கூடாது.
அமெரிக்காதான்... ரஷ்யாவுக்கும் சேர்த்து இழப்பீடு கொடுக்க வேண்டும்.  

ஐநா... நிறைவேற்றிய  தீர்மானத்தை வைத்து, நாக்கு வழிக்கட்டும். 😛

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா உக்ரேனிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் - தீர்மானம் நிறைவேற்றியது ஐநா - இலங்கை வாக்கெடுப்பை தவிர்த்தது.தீர்மானத்திற்கு ஆதரவாக 94 நாடுகள் வாக்களித்துள்ளன.👌
14 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன.
மேற்குலநாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் ரஷ்யாவுக்கு ஆதராவாக தங்களால் வாக்களிக்க முடியவில்லையே என்று ஆழ்ந்த கவலை அடைந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

2009 இறுதி போரில் ஐ நா ஓடி ஒழிந்து விட்டு பெரிய ஆள் போல கருத்து  சொல்ல வெட் க்கப்பட வேண்டும்.
 ஐ நாவை மனிதன் மதிப்பானா?

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, இணையவன் said:

நிச்சயமாக இல்லை!

தேர்தல் நடக்கும்போது வாக்களிக்காதவர்களைக் கணக்கில் எடுக்கக் கூடாது. 94 நாடுகள் ஆதரவாகவும் 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன, அவ்வளவுதான்.

வாக்களிக்காத 74 நாடுகளைத் தந்திரமாக எதிராக வாக்களித்ததாகக் கூறுகிறீர்கள். இது முற்றிலும் தவறான கருத்து.

உங்கள் புரிதல் வியப்பூட்டுகிறது 😀

உலகம் இரண்டாகப் பிளவுண்டு நிற்கிறது என்றுதான் எழுதியிருக்கிறேன்.  ஆதரவாக வாக்களித்தாக நான் எழுதவில்லை. 

காமாலைக் கண்ணணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது இதைத்தானோ 😀

27 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ரஷ்யா உக்ரேனிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் - தீர்மானம் நிறைவேற்றியது ஐநா - இலங்கை வாக்கெடுப்பை தவிர்த்தது.தீர்மானத்திற்கு ஆதரவாக 94 நாடுகள் வாக்களித்துள்ளன.👌
14 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன.
மேற்குலநாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் ரஷ்யாவுக்கு ஆதராவாக தங்களால் வாக்களிக்க முடியவில்லையே என்று ஆழ்ந்த கவலை அடைந்தனர்.

உங்கள் எழுத்துக்ஜளைப்பார்த்தால் நீங்கள் முற்றுமுழுதாக தமிழருக்கெதிராகவே கதைக்கிறீர்கள். ஏன் ?

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

"that the resolution intended to legalize the seizure of Russian assets previously frozen by Western countries""

இதுதான் மூல காரணமாக இருக்க முடியும். 

ஆனால் பிச்சையெடுத்துக்கொண்டு இருக்கும் ஆப்கானின் பணத்தை US இன்னும் தடுத்து வைத்திருக்கிறது. 

😀

8 minutes ago, Kapithan said:

உங்கள் புரிதல் வியப்பூட்டுகிறது 😀

உலகம் இரண்டாகப் பிளவுண்டு நிற்கிறது என்றுதான் எழுதியிருக்கிறேன்.  ஆதரவாக வாக்களித்தாக நான் எழுதவில்லை. 

காமாலைக் கண்ணணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது இதைத்தானோ 😀

உங்கள் எழுத்துக்ஜளைப்பார்த்தால் நீங்கள் முற்றுமுழுதாக தமிழருக்கெதிராகவே கதைக்கிறீர்கள். ஏன் ?

இரண்டாகப் பிரியவில்லை. பெரும் ஆதரவுடன் வாக்கெடுப்பு வென்றுள்ளது.

உங்கள் கணக்குப்படி பார்த்தாலும் வாக்களிக்காதவர்களை இரண்டாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். அதாவது வாக்களிக்காதவர்களில் அரைவாசிப்பேர் ஆதரவாக இருந்து வாக்களிக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா ? 

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்புக்கெதிராக மிகவும் முக்கியமக நிற்க வேண்டியவர்கள் மேற்குலநாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள். ஆனால் நம்பவே முடியவில்லை அதில் சில  இலங்கை தமிழர்கள் தலை கீழாக நடக்கின்றனர்.

40 minutes ago, இணையவன் said:

வாக்களிக்காதவர்களில் அரைவாசிப்பேர் ஆதரவாக இருந்து வாக்களிக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா ? 

வாக்களிக்காதவர்கள் எல்லோருமே கொடுங்கோல் ரஷ்யாவுக்கு ஆதரவாக தான்  இருந்திருப்பார்கள் ஆனால் வாக்களிக்கவில்லை என்று நினைத்து சந்தோசபட விட மாட்டீர்கள்😄

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானுஸ்தானையும், ஈராக்கையும் சின்னாபின்னாமாக்கிய நேட்டோ இழப்பீடு வழங்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இரண்டாகப் பிரியவில்லை. பெரும் ஆதரவுடன் வாக்கெடுப்பு வென்றுள்ளது.

உங்கள் கணக்குப்படி பார்த்தாலும் வாக்களிக்காதவர்களை இரண்டாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். அதாவது வாக்களிக்காதவர்களில் அரைவாசிப்பேர் ஆதரவாக இருந்து வாக்களிக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா ? 

வாலைப் பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள் இணை. 

சாராம்சத்தை புரிந்துகொண்டு கருத்தெழுதுங்கள். 

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்புக்கெதிராக மிகவும் முக்கியமக நிற்க வேண்டியவர்கள் மேற்குலநாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள். ஆனால் நம்பவே முடியவில்லை அதில் சில  இலங்கை தமிழர்கள் தலை கீழாக நடக்கின்றனர்.

வாக்களிக்காதவர்கள் எல்லோருமே கொடுங்கோல் ரஷ்யாவுக்கு ஆதரவாக தான்  இருந்திருப்பார்கள் ஆனால் வாக்களிக்கவில்லை என்று நினைத்து சந்தோசபட விட மாட்டீர்கள்😄

வெள்ளையாயிருப்பவன் பொய்சொல்ல மாட்டான்

😀

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே கணக்கு போட்டாச்சு! 

அருமையான வரவேற்கத்தக்க தீர்மானம்!👏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஐநா’வாவது... Hair ஆவது. 😂 🤣
ரஷ்யா ஒரு  சதம் கூட, உக்ரைனுக்கு கொடுக்கக் கூடாது.
அமெரிக்காதான்... ரஷ்யாவுக்கும் சேர்த்து இழப்பீடு கொடுக்க வேண்டும்.  

ஐநா... நிறைவேற்றிய  தீர்மானத்தை வைத்து, நாக்கு வழிக்கட்டும். 😛

ரஷ்ய தொழில் அதிபர்களின் வெளிநாட்டு சொத்துக்களை ஆட்டைய போட்டாச்சு. இனி ரஷ்ய இயற்கை வளங்களை சுரண்டப்போறாங்கள்......மற்ற நாடுகளை சுரண்டி/களவெடுத்து வாழ்க்கை நடத்துறதுதானே மேற்குலக பழக்க வழக்கம்.😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.