Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் 14 வயதுச் சிறுமி குழந்தை பிரசவம் – 73 வயது முதியவர் விளக்கமறியலில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறியவருக்கு சிறைத்தண்டனை!

யாழில் 14 வயதுச் சிறுமி குழந்தை பிரசவம் – 73 வயது முதியவர் விளக்கமறியலில்!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் வசித்துவந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்ற சந்தேகத்தில் 73 வயதான முதியவர் ஒருவர் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட முதியவர் சிறுமியின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், சிறுமியுடன் நெருங்கி பழகியவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்றையதினம் யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

https://athavannews.com/2022/1314656

  • கருத்துக்கள உறவுகள்

இவரை மறியலில் வைக்காமல் குருநகர் வீட்டு திட்டத்துக்கு திருப்பி அனுப்பி இருந்தால் - நாளை காலை வழக்கின் தீர்ப்பு வந்திருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இவரை மறியலில் வைக்காமல் குருநகர் வீட்டு திட்டத்துக்கு திருப்பி அனுப்பி இருந்தால் - நாளை காலை வழக்கின் தீர்ப்பு வந்திருக்கும்.

சிறுமி..  குழந்தை பெறும் மட்டும்,
சிறுமியின் பெற்றோர்  ஏன் பொறுத்து இருந்தார்கள் என்று தெரியவில்லை.
ஆரம்பத்திலேயே கருக்கலைப்பு செய்து, சிறுமியை கொஞ்சம் பாடசாலை பருவத்தை அனுபவிக்க விட்டிருக்கலாம்.
இப்பவே தாயாகி… இன்னும் கஸ்ரப் படப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சிறுமி..  குழந்தை பெறும் மட்டும்,
சிறுமியின் பெற்றோர்  ஏன் பொறுத்து இருந்தார்கள் என்று தெரியவில்லை.
ஆரம்பத்திலேயே கருக்கலைப்பு செய்து, சிறுமியை கொஞ்சம் பாடசாலை பருவத்தை அனுபவிக்க விட்டிருக்கலாம்.
இப்பவே தாயாகி… இன்னும் கஸ்ரப் படப் போகுது.

ம்ம்ம்… அந்தளவு பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வு இருக்கு பெற்றார் எண்டா பிள்ளையை இந்த கிழவன் இம்சித்ததை கவனியாமல் விட்டிருப்பாகளா?

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

ம்ம்ம்… அந்தளவு பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வு இருக்கு பெற்றார் எண்டா பிள்ளையை இந்த கிழவன் இம்சித்ததை கவனியாமல் விட்டிருப்பாகளா?

நியாயமான கேள்வி👌

  • கருத்துக்கள உறவுகள்

கிழட்டுத் ……….. மகன்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சிறுமி..  குழந்தை பெறும் மட்டும்,
சிறுமியின் பெற்றோர்  ஏன் பொறுத்து இருந்தார்கள் என்று தெரியவில்லை.
ஆரம்பத்திலேயே கருக்கலைப்பு செய்து, சிறுமியை கொஞ்சம் பாடசாலை பருவத்தை அனுபவிக்க விட்டிருக்கலாம்.
இப்பவே தாயாகி… இன்னும் கஸ்ரப் படப் போகுது.

இலங்கை சட்டத்தின் பிரகாரம் கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம் என நினைக்கின்றேன். 

குழந்தை பிரசவத்தின் போது சிறுமி வைத்தியசாலைக்கு சென்றதால் வீட்டினுள் மறைத்து வைக்கப்பட்ட சங்கதி வெளியில் விசாரணைக்கு வந்து குழந்தையின் தகப்பன் தேடப்பட்டாரோ என்னவோ. 

73 வயசு சிங்கனே உண்மையில் தந்தை எனில் இவருக்கு கட்டாய குடும்பக்கட்டுப்பாட்டு சிகிச்சை செய்துவிட வேண்டியதுதான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கை சட்டத்தின் பிரகாரம் கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம் என நினைக்கின்றேன். 

குழந்தை பிரசவத்தின் போது சிறுமி வைத்தியசாலைக்கு சென்றதால் வீட்டினுள் மறைத்து வைக்கப்பட்ட சங்கதி வெளியில் விசாரணைக்கு வந்து குழந்தையின் தகப்பன் தேடப்பட்டாரோ என்னவோ. 

73 வயசு சிங்கனே உண்மையில் தந்தை எனில் இவருக்கு கட்டாய குடும்பக்கட்டுப்பாட்டு சிகிச்சை செய்துவிட வேண்டியதுதான். 

இலங்கையில்… கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம் என்று,
இன்று தான்… கேள்விப் படுகின்றேன்.
அது உண்மையானால்… மக்கள் தவறான வழிகளில் கருக்கலைப்பு செய்ய முனைவார்கள்.
அது…. உயிரிழப்பில் முடியும் சாத்தியங்களை அதிகரிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்புணர்வு அற்ற தன்மை தான் காரணம்

பிள்ளைகளாக இருந்தாலென்ன

பெற்றோராக இருந்தால் என்ன

வயதானவர்களாக இருந்தால் என்ன??

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கையில்… கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம் என்று,
இன்று தான்… கேள்விப் படுகின்றேன்.
அது உண்மையானால்… மக்கள் தவறான வழிகளில் கருக்கலைப்பு செய்ய முனைவார்கள்.
அது…. உயிரிழப்பில் முடியும் சாத்தியங்களை அதிகரிக்கும்.

இலங்கையில் பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே கருக்கலைப்பு செய்யலாம். 

பாலியல் வன்கொடுமை மூலம் உருவாகிய சிசு என்றாலும் சுமக்கத்தான் வேண்டும்😡

அதே போல் மனைவியின் அனுமதி இன்றி கணவன் அவருடன் உறவு கொள்வதும் கூட இலங்கையில் குற்றம் இல்லை.

நாம் இனவாதம் தவிர்ந்து ஏனைய வழிகளில் முன்னேற்றகரமான நாட்டில் இருந்து வருகிறோம் என நினைக்ககூடும். 

ஆனால் தலிபான் தனமான பல காட்டுமிராண்டி சட்டங்கள் இலங்கையில் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

14 வயது

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 73 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி குழந்தையைப் பிரசவித்துள்ளார். இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முதியவர் சிறுமியின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த முதியவர் சிறுமியுடன் நெருங்கி பழகினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் விசாரணைகள் நடைபெறுகின்றன என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

16 வயது மாணவி

இரு பாடசாலை மாணவிகள் வன்புணர்வு..! யாழில் இடம்பெற்ற துயரச் சம்பவம் | 16 Year Old Student Sexual Abuse Srilanka

யாழ்ப்பாணம் சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயது மாணவி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் 72 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

பாதிப்புக்குள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் விசாரணைகளின் பின்னரே முழுமையான விவரம் கிடைக்கப் பெறும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

https://ibctamil.com/article/16-year-old-student-sexual-abuse-srilanka-1670466956

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இலங்கையில் பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே கருக்கலைப்பு செய்யலாம். 

பாலியல் வன்கொடுமை மூலம் உருவாகிய சிசு என்றாலும் சுமக்கத்தான் வேண்டும்😡

அதே போல் மனைவியின் அனுமதி இன்றி கணவன் அவருடன் உறவு கொள்வதும் கூட இலங்கையில் குற்றம் இல்லை.

நாம் இனவாதம் தவிர்ந்து ஏனைய வழிகளில் முன்னேற்றகரமான நாட்டில் இருந்து வருகிறோம் என நினைக்ககூடும். 

ஆனால் தலிபான் தனமான பல காட்டுமிராண்டி சட்டங்கள் இலங்கையில் உண்டு.

அப்ப இவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் நீங்க சொல்லுன் கா  பாஸ் ?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

அப்ப இவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் நீங்க சொல்லுன் கா  பாஸ் ?

திருப்பி வீடமைப்பு திட்டத்தில் கொண்டு போய் விடச்சொல்லி உள்ளேனே? 🤣

பகிடிக்கு அப்பால் சட்டம் என்று பார்த்தால் என் பதில்:

1. இவர்தானா குற்றவாளி என உண்மையில் நிறுவ வேண்டும். இதை வீட்டுக்குள்ளேயே ஒருவர் செய்துவிட்டு ஒரு அதிகம் விளக்கம் இல்லாத ஒரு 71 வயசு கிழவர் மேல் பழியை போட்டு இருக்கவும் கூடும். ஆகவே நியாயமான விசாரணை அவசியம்.

2. அப்படி நியாயமான விசாரணைக்கு இவருக்கு வாதாட ஒரு வக்கீல் அவசியம்

3. குற்றம் தீர்க்கப்பட்டால் - சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் வன்கொடுமைக்கு இலங்கைக்குள் இருக்கும் அதிக பட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

4. கல்லால் அடித்து கொல்லல், உறுப்பை நீக்குதல், போன்ற வதைகள் தேவையில்லை. 

நான் சொல்லுவது பலருக்கு கடுப்பை கிளப்பும். ஆனால் முன்பும் இதை ஒத்த திரிகளிலும் இப்படிதான் எழுதியுள்ளேன்.

இப்படியான உணர்சியான வழக்குகளில்தான் நாம் ஒரு சமூகமாக கூர்ப்படைந்துள்ளோமா அல்லது இன்னும் தலிபான் தனமாகவே உள்ளோமா என்பதை அறிந்து கொள்ளலாம்.

நான் மேலே எழுதியதை நான் வாழும் நாட்டில் 75% வரை ஏற்பார்கள் என நினைக்கிறேன்.

எனது சமூகத்தில் 50% கூட ஏற்குமா என்பது சந்தேகம்தான்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

3. குற்றம் தீர்க்கப்பட்டால் - சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் வன்கொடுமைக்கு இலங்கைக்குள் இருக்கும் அதிக பட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

 சார் அந்த அதிக பட்ச தண்டனை எது இலங்கையில் ?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

 சார் அந்த அதிக பட்ச தண்டனை எது இலங்கையில் ?

10-20 ஆண்டுகள் கடூழிய சிறை + அபராதம்+ இழப்பீடு.

செக்சன் 364

https://www.lawnet.gov.lk/penal-code-amendment-5/

பெருமாள் இப்போ உங்களிடம் நான் ஒரு கேள்வி.

இவர்தான் குற்றவாளி என தீர்ப்பாகி விட்டது. நீங்கள்தான் தண்டனை வழங்கும் ஜட்ஜ். என்ன தண்டனை கொடுப்பீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சம்பந்தப்பட்ட ஆண்கள் இருவரும்.. 70 வயதை தாண்டியவர்கள்.  இவர்களின் தவறான நடத்தைகள்.. வயதானவர்கள் மீதான ஒட்டுமொத்த பார்வைக்கும் அசிங்கத்தை ஏற்படுத்தும். மேலும்.. வயதை வைச்சு ஆக்களை எடைபோடுதல் தவறென்பது உணரப்படனும். எச்சரிக்கை எப்பவும் அவசியம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

10-20 ஆண்டுகள் கடூழிய சிறை + அபராதம்+ இழப்பீடு.

செக்சன் 364

https://www.lawnet.gov.lk/penal-code-amendment-5/

இது காணுமா எங்களின் சொந்த உறவென்றால் ?

  • கருத்துக்கள உறவுகள்

இதை முன்னைய திரி ஒன்றில் எழுதி உள்ளேன். சொந்த உறவென்றால் நான் மறியல் உள்ளே போய் கழுத்தை வெட்டுவேன்.

ஆனால் சட்டம் அப்படி இருக்க முடியாது. சட்டம், சட்ட கோவை என்ன சொல்கிறதோ அந்த தண்டனையைதான் கொடுக்க வேண்டும்.

மேலே கேட்டபடி நீங்கள்தான் ஜட்ஜ் - என்ன தண்டனை எப்படி குரூரமாயும் கொடுக்க்கலாம்.

என்ன தண்டனை கொடுப்பீர்கள்?

8 minutes ago, பெருமாள் said:

இது காணுமா எங்களின் சொந்த உறவென்றால் ?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பெரும்ஸ் @பெருமாள் கோப்பி குடிக்க போட்டியளோ?🤣.

நீங்கள் ஜட்ஜ் எண்டால் என்ன தண்டனை கொடுப்பியள்?

  • கருத்துக்கள உறவுகள்

1. இவர்தானா குற்றவாளி என உண்மையில் நிறுவ வேண்டும். இதை வீட்டுக்குள்ளேயே ஒருவர் செய்துவிட்டு ஒரு அதிகம் விளக்கம் இல்லாத ஒரு 71 வயசு கிழவர் மேல் பழியை போட்டு இருக்கவும் கூடும். ஆகவே நியாயமான விசாரணை அவசியம்.

2. அப்படி நியாயமான விசாரணைக்கு இவருக்கு வாதாட ஒரு வக்கீல் அவசியம்

3. குற்றம் தீர்க்கப்பட்டால் - சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் வன்கொடுமைக்கு இலங்கைக்குள் இருக்கும் அதிக பட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

4. கல்லால் அடித்து கொல்லல், உறுப்பை நீக்குதல், போன்ற வதைகள் தேவையில்லை. 

🚫 

4 hours ago, goshan_che said:

நாம் இனவாதம் தவிர்ந்து ஏனைய வழிகளில் முன்னேற்றகரமான நாட்டில் இருந்து வருகிறோம் என நினைக்ககூடும். 

ஆனால் தலிபான் தனமான பல காட்டுமிராண்டி சட்டங்கள் இலங்கையில் உண்டு.

உண்மை.
அதன் சாயல்களை வெளிநாடுகளுக்கு வந்தவர்களிடமும் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இவர்தானா குற்றவாளி என உண்மையில் நிறுவ வேண்டும். இதை வீட்டுக்குள்ளேயே ஒருவர் செய்துவிட்டு ஒரு அதிகம் விளக்கம் இல்லாத ஒரு 71 வயசு கிழவர் மேல் பழியை போட்டு இருக்கவும் கூடும். ஆகவே நியாயமான விசாரணை அவசியம்.

எனக்கும் இதே கேள்வி இருக்கு.

குடும்பத்தில் யாரையோ காப்பாற்றுகிறாரோ?

1 hour ago, goshan_che said:

இவர்தானா குற்றவாளி என உண்மையில் நிறுவ வேண்டும். இதை வீட்டுக்குள்ளேயே ஒருவர் செய்துவிட்டு ஒரு அதிகம் விளக்கம் இல்லாத ஒரு 71 வயசு கிழவர் மேல் பழியை போட்டு இருக்கவும் கூடும். ஆகவே நியாயமான விசாரணை அவசியம்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் இதே கேள்வி இருக்கு.

குடும்பத்தில் யாரையோ காப்பாற்றுகிறாரோ?

இருக்க வாய்ப்பிருக்கு. Vulnerable victim, vulnerable witness போல குற்றம்சாட்ட பட்டவரும் vulnerable ஆக இருக்கும் சந்தர்பங்கள் உண்டு.

குறிப்பாக வயது ஒரு முக்கியமான விடயம். அதுவும் டிமென்சியா அல்லது learning difficulties உள்ளவர்கள், குற்றம் செய்யாவிட்டால் கூட “நீதானே செய்தாய்” என மிரட்டி கேட்டால் ஓம் என்று சொல்ல கூடிய நிலையில் பலர் உள்ளார்கள்.

இதனால்தான் ஒவ்வொரு குற்றம் சாட்டபட்டவருக்கும் ஒரு வக்கீல் அவசியமாக தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் இதே கேள்வி இருக்கு.

குடும்பத்தில் யாரையோ காப்பாற்றுகிறாரோ?

நீங்கள் சொன்ன மாதிரி குடும்பத்தில் குற்றம் செய்த ஒருவரை இவர் காப்பாற்றுவதற்காகவும் இருக்கலாம்,
மற்றவர்கள் இவர் மேல் பழியை போட்டு குற்றம் செய்தவரை காப்பாற்றுவதற்காகவும் இருக்கலாம்.

நியாயமான விசாரணைக்கு இவருக்கு வாதாட ஒரு வக்கீல் அவசியம்

  • கருத்துக்கள உறவுகள்

14 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம் : வங்கி முகாமையாளருக்கு விளக்கமறியல்!

09 DEC, 2022 | 10:06 AM
image

14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட தனியார் வங்கி ஒன்றின் முகாமையாளரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயது மாணவியை பொது வாகன நிறுத்துமிடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 50 வயதுடைய தனியார் வங்கி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

மாணவி  தொடர்ந்தும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/142598

  • கருத்துக்கள உறவுகள்

ஹொரணையில் 15 வயதான மாணவனை முத்தமிட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த 42 வயது ஆசிரியைக்கு பிணை!

10 DEC, 2022 | 01:55 PM
image

15 வயதான  மாணவனை  முத்தமிட்டு பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற  குற்றச்சாட்டில் கைதாகி  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியை  தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு ஹொரணை நீதிமன்ற நீதவான் சந்தன கலன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சாட்சிகளுக்கு அழுத்தம் வழங்கக் கூடாது என்றும் நீதவான் உத்தரவிட்டார்.

ஹொரணை கல்வி வலய அலுவலகத்துடன் இணைந்த பாடசாலை ஒன்றில் 10ம் தர ஆசிரியையான 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/142726

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.