Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பஸ்ஸில் மீட்கப்பட்ட தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு ; கல்முனையில் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்ஸில் மீட்கப்பட்ட தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு ; கல்முனையில் சம்பவம்

By T. SARANYA

14 DEC, 2022 | 02:17 PM
image

பஸ்ஸில் சக பயணி தொலைத்த தங்கச்சங்கிலியை கண்டுபிடித்துக்கொடுத்த நபரை கல்முனை பொலிஸ் தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.

கல்முனை  பஸ் நிலையத்திலிருந்து மட்டக்களப்பை நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் தவறவிடப்பட்ட சங்கிலியை பயணியொருவர் மீட்டு ஒப்படைத்துள்ளார்.

இந்த சங்கிலி செவ்வாய்கிழமை பொலிஸார் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Gold05.jpg

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

கல்முனை பஸ் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (13) காலை  மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி சென்ற களுவாஞ்சிக்குடி டிப்போவிற்கு சொந்தமான அரச பஸ் ஒன்றில் ஒலுவில் பகுதியைச் சேர்ந்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் தனது மகளுடன் பயணம் செய்துள்ளார்.

இவ்வாறு பயணம் செய்த நிலையில் அதே பஸ்ஸில் பெரிய கல்லாறு பகுதியில் இருந்து காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி வங்கியில் கடமையாற்றும் மற்றுமொரு  பயணியும்  பயணித்துள்ள நிலையில் 2 பவுண் பெறுமதியான தங்க சங்கிலி அவரை அறியாமல் பஸ்ஸில் தவறி விழுந்துள்ளது.

இவ்வாறு தவறவிட்ட தங்க சங்கிலியை சக பயணியாக பயணித்த   தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர்  கண்டெடுத்து  பஸ் நடத்துனருக்கு தெரியப்படுத்தியதுடன்  உரிய நபரிடம்  ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு  கோரியுள்ளார்.

Gold04__1_.jpg

இந்நிலையில் தனது கழுத்தில் இருந்த தங்க மாலை தவறவிடப்பட்டதை அறிந்த பயணி உடனடியாக அலுவலகத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று  தொலைந்த தங்க மாலையை தேடியுள்ளார்.

பின்னர் மாலை   அங்கும்  கிடைக்காமையினால் உடனடியாக தான் பயணம் செய்த பஸ் நினைவுக்கு வரவே பஸ்ஸில் வழங்கப்பட்ட  டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு குறித்த பஸ் நடத்துநரிடம் விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்போது பஸ் நடத்துனரும்  மாலை ஒன்று பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும்  அதை கண்டெடுத்தவர் உரியவரிடம் ஒப்படைக்க விரும்புவதாகவும் அவரை தொடர்பு கொண்டு  உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய தவறவிடப்பட்ட தங்க மாலையை கண்டெடுத்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு  கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தங்க மாலையின் உரிமையாளரான பெண் பயணி  தான் கொண்டு வந்த ஆதாரங்களை பொலிஸார் முன்னிலையில் சமர்ப்பித்துள்ளார்.

இதன் போது கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில்  கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் உள்ளிட்டோர் முன்னிலையில் தவறவிடப்பட்ட தங்க மாலை தொடர்பான ஆதாரங்கள்  பரிசீலிக்கப்பட்ட   பின்னர் சுமார்  3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக பெறுமதி கொண்ட தங்க சங்கிலி பொலிஸார் முன்னிலையில் உரிமையாளரான பெண் பயணியிடம்  ஒப்படைக்கப்பட்டது.

Gold19.jpg

மேலும் பஸ்ஸில் தவறவிடப்பட்ட 2 பவுண் பெறுமதியான தங்க மாலையை பொலிஸார் முன்னிலையில் உரிமையாளிடம் ஒப்படைக்க முயற்சி செய்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தரை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி. எம். எல். புத்திக ,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்,  குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் உள்ளிட்டோர் முன்னிலையில்  கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/143067

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

என்ன அருமையான பத்திரிகை வீரகேசரி.

பொலிஸ் நிலைய அதிகாரி, அங்கு பிராக்குபார்க்கும் கான்ஸ்டபிள், உள்ளே ரிமாண்டில் இருக்கும் பிற்பொக்கட் காரன் வரை பெயரை பிரசுரித்து விட்டு, சங்கிலியை ஒப்படைத்த நேர்மையாளர் பெயரை வெள்ளி திரையில் காண்க என்று விட்டுள்ளனர்?🤣.

இல்லாட்டில் நாந்தான் வடிவா வாசிக்கேல்லையோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

படம்போட்டதோட கடமை முடிந்ததாக நினைத்தார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

படம்போட்டதோட கடமை முடிந்ததாக நினைத்தார்களோ?

ஏற்கனவே எனது நண்பர் முகநூலில் பகிர்ந்தவர் மாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக கல்முனை டிப்போவிலிருந்து

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

பஸ்ஸில் சக பயணி தொலைத்த தங்கச்சங்கிலியை கண்டுபிடித்துக்கொடுத்த நபரை கல்முனை பொலிஸ் தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் தனது கழுத்தில் இருந்த தங்க மாலை தவறவிடப்பட்டதை அறிந்த பயணி உடனடியாக அலுவலகத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று  தொலைந்த தங்க மாலையை தேடியுள்ளார்.

மேலும் பஸ்ஸில் தவறவிடப்பட்ட 2 பவுண் பெறுமதியான தங்க மாலையை பொலிஸார் முன்னிலையில் உரிமையாளிடம் ஒப்படைக்க முயற்சி செய்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தரை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி. எம். எல். புத்திக ,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்,  குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் உள்ளிட்டோர் முன்னிலையில்  கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/143067

6 hours ago, goshan_che said:

என்ன அருமையான பத்திரிகை வீரகேசரி.

பொலிஸ் நிலைய அதிகாரி, அங்கு பிராக்குபார்க்கும் கான்ஸ்டபிள், உள்ளே ரிமாண்டில் இருக்கும் பிற்பொக்கட் காரன் வரை பெயரை பிரசுரித்து விட்டு, சங்கிலியை ஒப்படைத்த நேர்மையாளர் பெயரை வெள்ளி திரையில் காண்க என்று விட்டுள்ளனர்?🤣.

இல்லாட்டில் நாந்தான் வடிவா வாசிக்கேல்லையோ?

7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஏற்கனவே எனது நண்பர் முகநூலில் பகிர்ந்தவர் மாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக கல்முனை டிப்போவிலிருந்து

வீரகேசரியின்  செய்தி தலைப்பில் தங்கச் சங்கிலியாக இருந்து,
பின் தங்க மாலையாக மாறிய  அதிசயத்தை கண்டீர்களா?

நான் நினைக்கின்றேன்.... இரண்டு பேர் சேகரித்த செய்தியை, 
ஒன்றாக்கி உள்ளார்கள் போலுள்ளது.

இப்படியானவற்றை ஆழ்ந்து வாசித்தால்... நமக்குத்தான் மண்டை விறைக்கும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

இப்ப பத்திரிகைகளை பெரிதாக கணக்கெடுப்பதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

இப்ப பத்திரிகைகளை பெரிதாக கணக்கெடுப்பதில்லை 

நானும் தான். இப்போதெல்லாம் சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பவர்கள் அரிது,
ஒருத்தன் சேகரித்த செய்தியை.... ஒவ்வொரு பத்திரிகையும் 
பத்திரிகை காரியாலயத்தில் இருந்த படியே  தங்கள் பாணியில்,
சிறிய மாற்றங்களுடன் வெளியிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2022 at 06:23, தமிழ் சிறி said:

வீரகேசரியின்  செய்தி தலைப்பில் தங்கச் சங்கிலியாக இருந்து,
பின் தங்க மாலையாக மாறிய  அதிசயத்தை கண்டீர்களா?

நான் நினைக்கின்றேன்.... இரண்டு பேர் சேகரித்த செய்தியை, 
ஒன்றாக்கி உள்ளார்கள் போலுள்ளது.

இப்படியானவற்றை ஆழ்ந்து வாசித்தால்... நமக்குத்தான் மண்டை விறைக்கும். 🤣

மட்டகளப்பில்

சங்கிலி = மாலை என பாவிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

மட்டகளப்பில்

சங்கிலி = மாலை என பாவிப்பார்கள்.

அப்ப... பூ மாலையை, எப்படி சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

அப்ப... பூ மாலையை, எப்படி சொல்வார்கள்.

பூவ….. பூ… மலர்… புய்ப்பம்…நீங்க சொல்லுற மாரியும் சொல்லுவாங்க🤣.

இரெண்டும் மாலைதான். சொல்லும் இடத்தை பொறுத்து கண்டு பிடிக்கலாம். 

எகா

எண்ட கழுத்தில கிடந்த மாலைய பறிச்சிட்டான் (தங்கம்). 

சாமிக்கு மாலை கட்டி போட்டான் (பூ). 

@தனிக்காட்டு ராஜா சரிதானே?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

பூவ….. பூ… மலர்… புய்ப்பம்…நீங்க சொல்லுற மாரியும் சொல்லுவாங்க🤣.

இரெண்டும் மாலைதான். சொல்லும் இடத்தை பொறுத்து கண்டு பிடிக்கலாம். 

எகா

எண்ட கழுத்தில கிடந்த மாலைய பறிச்சிட்டான் (தங்கம்). 

சாமிக்கு மாலை கட்டி போட்டான் (பூ). 

@தனிக்காட்டு ராஜா சரிதானே?

எதுக்கும்...  @ரதி யையும் துணைக்கு கூப்பிடுங்கோ.  😂
இல்லாட்டி சண்டைக்கு வருவா. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

பூவ….. பூ… மலர்… புய்ப்பம்…நீங்க சொல்லுற மாரியும் சொல்லுவாங்க🤣.

இரெண்டும் மாலைதான். சொல்லும் இடத்தை பொறுத்து கண்டு பிடிக்கலாம். 

எகா

எண்ட கழுத்தில கிடந்த மாலைய பறிச்சிட்டான் (தங்கம்). 

சாமிக்கு மாலை கட்டி போட்டான் (பூ). 

@தனிக்காட்டு ராஜா சரிதானே?

அநேகமாக கிழக்கில் சங்கிலி என சொல்வதில்லை  மாலை என்பார்கள் சங்கிலி அதாவது நாயை கட்டி இருப்பது சங்கிலி என்பார்கள் 
தடித்த தங்க மாலை போட்டு பந்தா காட்டுபவர்களை சங்கிலி போல போட்டு பந்தா காட்டுறார் என்பார்கள் 

சாமிக்கு  கட்டுவதும் பூ மாலைதான் 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

எதுக்கும்...  @ரதி யையும் துணைக்கு கூப்பிடுங்கோ.  😂
இல்லாட்டி சண்டைக்கு வருவா. 🤣

சீச்சீ நான் ஏன் சண்டைக்கு வர போறேன்🙂 ...கோசான் சொன்னால் சரியாத் தான் இருக்கும்😂 அவரது  மனைவி கதைப்பதை தானே அவர் எழுதுகிறார்🤣 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

சீச்சீ நான் ஏன் சண்டைக்கு வர போறேன்🙂 ...கோசான் சொன்னால் சரியாத் தான் இருக்கும்😂 அவரது  மனைவி கதைப்பதை தானே அவர் எழுதுகிறார்🤣 

அட்றா.. அட்றா.... இண்டைக்கு @goshan_cheக்கு, மூடு அவுட்டு. 🤣

அவர் டக்கென்று சந்தேகத்தை தீர்க்கும் போதே நினைத்தேன். இப்ப எனக்கு "டவுட்டு கிளியர்." 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

சீச்சீ நான் ஏன் சண்டைக்கு வர போறேன்🙂 ...கோசான் சொன்னால் சரியாத் தான் இருக்கும்😂 அவரது  மனைவி கதைப்பதை தானே அவர் எழுதுகிறார்🤣 

என் முதல் மனைவி மலையாளி…..(ரோவுக்கு வேலை செய்யும் போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

2ம் மனைவி சிங்களம் (சீவி யை ஆதரித்து எழுதிய  போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

3ம் மனைவி கொழும்பு-இந்திய வம்சாவழி தமிழ் (ரதி அக்கா செய்துவைத்தது). 

4ம் மனைவி தெலுங்கு வம்சாவழி….( சீமானை கேள்வி கேட்டு எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

5ம் மனைவி உக்ரேனியன் (புட்ஸ்சை கேலியாக எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

6ம் மனைவி மட்டகளப்பு (அண்மையில் ரதி அக்கா செய்து வைத்தது)

# மனைவி,

துணைவி,

இணைத்-துணைவி,

மேலதிக-துணைவி,

பதில்-துணைவி,

உதவி-துணைவி

#கருணாநிதி புஸ்கு, கோசாந்தான் கெத்து 🤣

8 hours ago, தமிழ் சிறி said:

அட்றா.. அட்றா.... இண்டைக்கு @goshan_cheக்கு, மூடு அவுட்டு. 🤣

அவர் டக்கென்று சந்தேகத்தை தீர்க்கும் போதே நினைத்தேன். இப்ப எனக்கு "டவுட்டு கிளியர்." 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

என் முதல் மனைவி மலையாளி…..(ரோவுக்கு வேலை செய்யும் போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

2ம் மனைவி சிங்களம் (சீவி யை ஆதரித்து எழுதிய  போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

3ம் மனைவி கொழும்பு-இந்திய வம்சாவழி தமிழ் (ரதி அக்கா செய்துவைத்தது). 

4ம் மனைவி தெலுங்கு வம்சாவழி….( சீமானை கேள்வி கேட்டு எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

5ம் மனைவி உக்ரேனியன் (புட்ஸ்சை கேலியாக எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

6ம் மனைவி மட்டகளப்பு (அண்மையில் ரதி அக்கா செய்து வைத்தது)

# மனைவி,

துணைவி,

இணைத்-துணைவி,

மேலதிக-துணைவி,

பதில்-துணைவி,

உதவி-துணைவி

#கருணாநிதி புஸ்கு, கோசாந்தான் கெத்து 🤣

இவ்வளவு கல்யாணம் செய்து வைத்த யாழை கோபிக்க எப்பிடித் தான் மனசு வந்ததோ!🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

என் முதல் மனைவி மலையாளி…..(ரோவுக்கு வேலை செய்யும் போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

2ம் மனைவி சிங்களம் (சீவி யை ஆதரித்து எழுதிய  போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

3ம் மனைவி கொழும்பு-இந்திய வம்சாவழி தமிழ் (ரதி அக்கா செய்துவைத்தது). 

4ம் மனைவி தெலுங்கு வம்சாவழி….( சீமானை கேள்வி கேட்டு எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

5ம் மனைவி உக்ரேனியன் (புட்ஸ்சை கேலியாக எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

6ம் மனைவி மட்டகளப்பு (அண்மையில் ரதி அக்கா செய்து வைத்தது)

# மனைவி,

துணைவி,

இணைத்-துணைவி,

மேலதிக-துணைவி,

பதில்-துணைவி,

உதவி-துணைவி

#கருணாநிதி புஸ்கு, கோசாந்தான் கெத்து 🤣

அப்போ உங்க மனைவி பறங்கி இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

என் முதல் மனைவி மலையாளி

இல்லையில்லை, இது இன்னொரு யாழ்கள உறவின் மனைவி. நீங்கள் மாறி சொல்கிறீர்கள். 

இத்தனை பேரா? எப்படி சமாளிக்கிறீர்கள்? அதனாற்தான் அடிக்கடி கோவித்துக்கொண்டு அந்தப்புரம் போய்விடுகிறீர்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

அப்போ உங்க மனைவி பறங்கி இல்லையா?

என்னது ??🙄🙄😁

10 hours ago, goshan_che said:

எப்படித்தான் முடியுதோ?? சபா இப்பவே கண்ண கட்டுதே

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

அப்போ உங்க மனைவி பறங்கி இல்லையா?

இருக்கிறது போதாதென்று இது வேறையா?

On 16/12/2022 at 22:38, தமிழ் சிறி said:

எதுக்கும்...  @ரதி யையும் துணைக்கு கூப்பிடுங்கோ.  😂
இல்லாட்டி சண்டைக்கு வருவா. 🤣

எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டுதான் துணைக்கு கூப்பிட்டீர்களோ? 

19 hours ago, தமிழ் சிறி said:

அவர் டக்கென்று சந்தேகத்தை தீர்க்கும் போதே நினைத்தேன். இப்ப எனக்கு "டவுட்டு கிளியர்." 

நீங்கள் பெரிய ஆள்தான்!

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2022 at 16:00, goshan_che said:

என் முதல் மனைவி மலையாளி…..(ரோவுக்கு வேலை செய்யும் போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

2ம் மனைவி சிங்களம் (சீவி யை ஆதரித்து எழுதிய  போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

3ம் மனைவி கொழும்பு-இந்திய வம்சாவழி தமிழ் (ரதி அக்கா செய்துவைத்தது). 

4ம் மனைவி தெலுங்கு வம்சாவழி….( சீமானை கேள்வி கேட்டு எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

5ம் மனைவி உக்ரேனியன் (புட்ஸ்சை கேலியாக எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

6ம் மனைவி மட்டகளப்பு (அண்மையில் ரதி அக்கா செய்து வைத்தது)

# மனைவி,

துணைவி,

இணைத்-துணைவி,

மேலதிக-துணைவி,

பதில்-துணைவி,

உதவி-துணைவி

#கருணாநிதி புஸ்கு, கோசாந்தான் கெத்து 🤣

கொழும்பு ,இந்திய வம்சாவளி என்று நான் எழுதின நினைவு இல்லை🙂 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2022 at 19:37, ஈழப்பிரியன் said:

அப்போ உங்க மனைவி பறங்கி இல்லையா?

இன்னும் இல்லை.

ரதி அக்கா மனசு வைத்தால் சாத்தியமே🤣

4 minutes ago, ரதி said:

கொழும்பு ,இந்திய வம்சாவளி என்று நான் எழுதின நினைவு இல்லை🙂 
 
On 18/12/2022 at 01:28, satan said:

இல்லையில்லை, இது இன்னொரு யாழ்கள உறவின் மனைவி. நீங்கள் மாறி சொல்கிறீர்கள். 

இந்த திரியை இப்பதான் பாக்கிறன். கொஞ்சம் அசந்தா எல்லாத்தையிம் மாத்தி போடுவியள் போல🤣

On 18/12/2022 at 01:47, satan said:

இத்தனை பேரா? எப்படி சமாளிக்கிறீர்கள்? அதனாற்தான் அடிக்கடி கோவித்துக்கொண்டு அந்தப்புரம் போய்விடுகிறீர்களோ?

அந்தபுரத்தில் அலுப்புதாங்காது போனால் யாழுக்கு வந்து @குமாரசாமிஅண்ணையிடம் உறண்டை இழுப்பேன்🤣

On 18/12/2022 at 02:16, தனிக்காட்டு ராஜா said:

எப்படித்தான் முடியுதோ?? சபா இப்பவே கண்ண கட்டுதே

அதுக்காக ஆள் வைத்தா செய்யமுடியும்? நாங்கள்தான் நம்ம வேலைய செய்யவேணும்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, goshan_che said:

அந்தபுரத்தில் அலுப்புதாங்காது போனால் யாழுக்கு வந்து @குமாரசாமிஅண்ணையிடம் உறண்டை இழுப்பேன்🤣

உந்த உறண்டை ரெக்னிக் நெடுக வேலை செய்யாது எனக்கூறி அமர்கின்றேன். 😂😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.