Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Nathamuni said:

இதுகள் இருந்திருந்தால், வெட்டி ஆடி சமாளிச்சு வந்திருக்க மாட்டாம? இவர்கள் ஒருபோதுமே, முறையான கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு போயிருக்கமாட்டார்கள். அரைகுறை விளக்கதோடை,  இன்னோரு கலாசாரத்துக்கிளை துளாவ நிக்குறது. தின்ன வாரதும் நம்மட ஆட்கள் தானே என்று நினைப்பது. அங்கயும் இல்லாமல், இங்கயும் இல்லாமல், விருந்தினரை அல்லாட வைப்பது.

மேல் உள்ளதை சுருக்கமாக எழுதினதை  பார்த்து விட்டு தனக்குத்தானே பின்பட்டத்தில் சூட்டுக்கோலால் குறி இழுத்து விட்டு ஒருத்தர் மூக்கால் சுடு காற்று புகை விட்டபடி திரிகிறார் .😀

Edited by பெருமாள்
  • Haha 1
  • Replies 69
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

எனக்கு தெரிந்தளவில் வெள்ளைகள், கலியாணத்துக்கு வரும் போது, தேடி மினக்கெட்டு முழு விபரம் அறிந்தே வருகின்றனர்.

1 hour ago, goshan_che said:

அட பாவமே. நான் இப்படி இடங்களில் போய் மாட்டினால் - அப்படியே கழண்டு வந்து நேரா வண்டிய விரும்பிய கடைக்கு விட்டுடுவன்

இங்கு முக்கியமானது விருந்தோம்பல் அழைக்கப்பட்டவர் அவர் சார்ந்தவர்கள் என்ன உணவு? xmas உணவு அவர்களுக்கு ஓகேயா? அல்லது veg சிலர் வருடம் முழுக்க நான்  வெஜ் முழுங்கி விட்டு வருட கடைசியில் ஒன்லி வெஜ் என்று இருப்பினம் . இப்படியான விடயங்களை அறிந்து அல்லது அவர்களை விருந்துக்கு அழைக்க முன் போனிலாவது கேட்டு வைப்பது நல்லது .விருந்துக்கு வந்தவர் மனம் சந்தோசமாக அவருக்கு பிடித்த உணவை உண்டு மகிழ்ச்சியாக அந்த விருந்து பொழுது முடியனும்  அதைவிட்டு தங்களின் பகட்டு தனம்  காட்ட விருந்து வைப்பவர்கள் மீதுதான் அரைகுறை என்ற சொல் பதம் வைக்கப்பட்டது  அதைப்பார்த்து விட்டு தொப்பியை தானே மாட்டி விருந்தோம்பல் பற்றி தெரியாதவர் அழுதாள் அதுக்கு நான் பொறுப்பாளி அல்ல .😄

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, பெருமாள் said:

மேல் உள்ளதை சுருக்கமாக எழுதினதை  பார்த்து விட்டு தனக்குத்தானே பின்பட்டத்தில் சூட்டுக்கோலால் குறி இழுத்து விட்டு ஒருத்தர் மூக்கால் சுடு காற்று புகை விட்டபடி திரிகிறார் .😀

3 minutes ago, பெருமாள் said:

இங்கு முக்கியமானது விருந்தோம்பல் அழைக்கப்பட்டவர் அவர் சார்ந்தவர்கள் என்ன உணவு? xmas உணவு அவர்களுக்கு ஓகேயா? அல்லது veg சிலர் வருடம் முழுக்க நான்  வெஜ் முழுங்கி விட்டு வருட கடைசியில் ஒன்லி வெஜ் என்று இருப்பினம் . இப்படியான விடயங்களை அறிந்து அல்லது அவர்களை விருந்துக்கு அழைக்க முன் போனிலாவது கேட்டு வைப்பது நல்லது .விருந்துக்கு வந்தவர் மனம் சந்தோசமாக அவருக்கு பிடித்த உணவை உண்டு மகிழ்ச்சியாக அந்த விருந்து பொழுது முடியனும்  அதைவிட்டு தங்களின் பகட்டு தனம்  காட்ட விருந்து வைப்பவர்கள் மீதுதான் அரைகுறை என்ற சொல் பதம் வைக்கப்பட்டது  அதைப்பார்த்து விட்டு தொப்பியை தானே மாட்டி விருந்தோம்பல் பற்றி தெரியாதவர் அழுதாள் அதுக்கு நான் பொறுப்பாளி அல்ல .😄

பெருமாள், இது தனியாட்கள் பற்றியதல்ல, எங்கள் பிற்போக்கான, வாழும் நாடுகளைக் கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ள முயற்சியே எடுக்காத சோம்பேறித் தனத்தின் வெளிப்பாடு (symptom) தான் இந்த உணவு பற்றிய "நக்கல்" என்பதால் தான் எழுதினேன் - அது உங்களுக்கு பின்பக்கத்தில் குறி சுட்டு விட்டால் நான் பொறுப்பல்ல!😂

ஆனால் உங்களிடம் ஒரு கேள்வி: ஒரு நாள் நடக்கும் விருந்தில் ஒருவர் இன்னொரு கலாச்சார உணவை அறிமுகம் செய்தால் அதை பெருந்தன்மையோடு கடந்து போக முடியாதவர் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் ஜொனி வாக்கரும், ஜேன் வாக்கரும் எந்த வகை? இதில் யார் அரை குறை என நினைக்கிறீர்கள்? ஒரு மேற்கத்தைய உணவை ஒரு நாள் சாம்பிள் காட்டியவரா அல்லது ஜொனி/ஜேன் வாக்கருகளை மட்டும் தமிழ் பானமாக எடுத்துக் கொள்பவரா? 😎

51 minutes ago, குமாரசாமி said:

உலகம் முழுக்க சோறு இருக்கு. சாப்பிடுகிறார்கள்.
ஆனால் எங்கடை ஜாம்பவான்களுக்கு சோறு எண்டால் நக்கல்....

ஒவ்வொரு இனத்துக்கும் அவரவர் சாப்பாட்டை வைச்சு நக்கல் நளினம்  இருக்கும்.

ஜேர்மன்காரருக்கு கட்டோவில்.😁
 
சோறு ஒரு தானியம், அது இல்லாத நாடுகளில் கோதுமை இருக்கிறது.

இதில் எதுவாக இருந்தாலும் மாச்சத்து எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். ஒரு கவளம் stikcy rice உணவில் சேர்த்துக்  கொள்ளும் சீனனும், கொரியனும் இன்னும் ஆரோக்கியமாகத் தான் இருக்கிறார்கள். மூன்று நேரமும் சோறும் பருப்பும் சாப்பிடும் சிங்களவர்களுக்கு நீரிழிவு, அதே போல குறைந்தது இரண்டு நேரம் சோறு சாப்பிடும் தமிழர்களுக்கும் நீரிழிவு. என்ன வேறு பாடு? மலை போல குவித்துச் சாப்பிடுவது தான் பிரச்சினை.

#முன்னோர் என்ன மூடர்களா என்ற பெயரில் இந்த சோற்றுச் சாபம் தேவையா எங்களுக்கு? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 minutes ago, பெருமாள் said:

இங்கு முக்கியமானது விருந்தோம்பல் அழைக்கப்பட்டவர் அவர் சார்ந்தவர்கள் என்ன உணவு? xmas உணவு அவர்களுக்கு ஓகேயா? அல்லது veg சிலர் வருடம் முழுக்க நான்  வெஜ் முழுங்கி விட்டு வருட கடைசியில் ஒன்லி வெஜ் என்று இருப்பினம் . இப்படியான விடயங்களை அறிந்து அல்லது அவர்களை விருந்துக்கு அழைக்க முன் போனிலாவது கேட்டு வைப்பது நல்லது .விருந்துக்கு வந்தவர் மனம் சந்தோசமாக அவருக்கு பிடித்த உணவை உண்டு மகிழ்ச்சியாக அந்த விருந்து பொழுது முடியனும்  அதைவிட்டு தங்களின் பகட்டு தனம்  காட்ட விருந்து வைப்பவர்கள் மீதுதான் அரைகுறை என்ற சொல் பதம் வைக்கப்பட்டது  அதைப்பார்த்து விட்டு தொப்பியை தானே மாட்டி விருந்தோம்பல் பற்றி தெரியாதவர் அழுதாள் அதுக்கு நான் பொறுப்பாளி அல்ல .😄

தவறு சகோ..

இதுக்குத்தான்  நான் நேரடியாகவே  கேட்டேன்

எமது தாலி  கட்டுக்கு வரும்  வெள்ளைகளுக்கு  மாட்டிறைச்சியை நீங்கள்  பரிந்துரைப்பது போலுள்ளது உங்களது கருத்து?

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
24 minutes ago, விசுகு said:

தவறு சகோ..

இதுக்குத்தான்  நான் நேரடியாகவே  கேட்டேன்

எமது தாலி  கட்டுக்கு வரும்  வெள்ளைகளுக்கு  மாட்டிறைச்சியை நீங்கள்  பரிந்துரைப்பது போலுள்ளது உங்களது கருத்து?

உங்களுக்கு புரியவில்லை போலும்.

தாலிக்கட்டுக்கு வெள்ளை வருவது போன்றதல்ல. இங்கே நான் சொன்ன விடயம்.

அழைத்தவர் கிறிஸ்தவர் அல்ல. அழைக்கப்பட்டவர்களும் கிறிஸ்தவர்கள் அல்ல. ஆகவே இதுக்கும், வெள்ளைகள் தாலி கட்டுக்கு வருவத்துக்கும் சம்பந்தம் இல்லை.

உங்களுக்கு தெரியாத, ஒரு மூன்றாம் நபர் கலாச்சாரத்தினை, உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்தி பந்தா காட்டுவதனால், கவனமாக இருக்க வேண்டும்.

நீங்கள் அனேகமாக கவனமாயிருப்பதால், இதிலென்ன என்று தோன்றலாம். இங்கே இதனை பதிந்ததன் காரணம், அனுபவத்தினை பகிர்வது மட்டுமல்ல, பந்தா கோஸ்டிகள், செய்வதை, முறைமையாக செய்ய வேண்டும் என்று தான். 

மேலும், வெள்ளை ஒருவரை அழைக்கும் அழைப்பிதழில், மிக கவனமாக, vegetarian meal will be served என்று சொல்லியே அழைக்கிறோம். அதுவே நான் சொன்ன, 'கவனமாயிருத்தல்'.

*****

இங்கே இன்னோருவர் நான் அவருடன் உரையாட தயாராக இல்லாத போதும், வம்புக்கு இழுக்கிறார். அவருக்கு சொல்வது, வேறு ஆளை பாருங்கள். Thank you.

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, விசுகு said:

தவறு சகோ..

இதுக்குத்தான்  நான் நேரடியாகவே  கேட்டேன்

எமது தாலி  கட்டுக்கு வரும்  வெள்ளைகளுக்கு  மாட்டிறைச்சியை நீங்கள்  பரிந்துரைப்பது போலுள்ளது உங்களது கருத்து?

வெள்ளைகளை விடுங்கள். நான் கிறிஸ்தவன், 365 நாளும் மாமிச உணவுப் பிரியன். சைவ நண்பர்கள் பிள்ளைக்கு பூப்புனித நீராட்டு விழா வைத்தால் மாமிசம் இருக்காது, நான் முகம் சுழிக்க முடியுமா? மனதளவில் கூடமுகம் சுழிப்பதில்லை, மேலும் வழமைக்கு மாறாக டசின் கணக்கான மரக்கறிகளோடு சாப்பிடும் அரிய வாய்ப்பு என்று மகிழ்ச்சி தான் அடைந்திருக்கிறேன்.

பல்வேறு குடியேறிகளோடு வாழ்கிற சமூகத்திற்கு cultural sensitivity முக்கியமானது. எனவே தான் இந்த முறைப்பாடும், அதற்கு மேலாக இவர்கள் "அரை குறைகள்" என்ற எள்ளலும் பிற்போக்குத் தனத்தின் வெளிப்பாடுகள் என்கிறேன்.

Just now, Nathamuni said:

உங்களுக்கு புரியவில்லை போலும்.

தாலிக்கட்டுக்கு வெள்ளை வருவது போன்றதல்ல. இங்கே நான் சொன்ன விடயம்.

அழைத்தவர் கிறிஸ்தவர் அல்ல. அழைக்கப்பட்டவர்களும் கிறிஸ்தவர்கள் அல்ல. ஆகவே இதுக்கும், வெள்ளைகள் தாலி கட்டுக்கு வருவத்துக்கும் சம்பந்தம் இல்லை.

உங்களுக்கு தெரியாத, ஒரு மூன்றாம் நபர் கலாச்சாரத்தினை, உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்தி பந்தா காட்டுவதனால், கவனமாக இருக்க வேண்டும்.

*****

இங்கே இன்னோருவர் நான் அவருடன் உரையாட தயாராக இல்லாத போதும், வம்புக்கு இழுக்கிறார். அவருக்கு சொல்வது, வேறு ஆளை பாருங்கள். Thank you.

நாதம், முன்னரே பெருமாளுக்குக் குறிப்பிட்டது போல, ஒரு பொது வெளியில் நடக்கும் உரையாடலில் ஒரு கருப்பொருளைப் பற்றிப் பேசும் போது அது "உங்களைப் பற்றியது" என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள்: நீங்கள் உலகத்தின் மையம் அல்ல!

இந்த "கையைப் பிடிச்சு இழுக்கிறார்" என்ற சிறு பிள்ளைத் தனமான முறைப்பாடுகளை விட்டு விட்டு உரையாடுங்கள்!😂

  • Like 1
  • Thanks 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Nathamuni said:

உங்களுக்கு புரியவில்லை போலும்.

தாலிக்கட்டுக்கு வெள்ளை வருவது போன்றதல்ல. இங்கே நான் சொன்ன விடயம்.

அழைத்தவர் கிறிஸ்தவர் அல்ல. அழைக்கப்பட்டவர்களும் கிறிஸ்தவர்கள் அல்ல. ஆகவே இதுக்கும், வெள்ளைகள் தாலி கட்டுக்கு வருவத்துக்கும் சம்பந்தம் இல்லை.

உங்களுக்கு தெரியாத, ஒரு மூன்றாம் நபர் கலாச்சாரத்தினை, உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்தி பந்தா காட்டுவதனால், கவனமாக இருக்க வேண்டும்.

*****

இங்கே இன்னோருவர் நான் அவருடன் உரையாட தயாராக இல்லாத போதும், வம்புக்கு இழுக்கிறார். அவருக்கு சொல்வது, வேறு ஆளை பாருங்கள். Thank you.

நீங்கள்  சொல்வது எனக்குப்புரிகிறது சகோ

ஆனால் இது  விருந்தல்ல

ஒரு  மதம்  அல்லது  கலாச்சாரம்  சம்பந்தப்பட்ட  அழைப்பு

எனவே விருந்தினர்  தான்  மாற்றங்களை  ஏற்கும்  மனத்துடன்  கலந்து  கொள்ளணும்

என்பது  எனது கருத்து மட்டுமே

நான்  அவ்வாறு  தான்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, விசுகு said:

தவறு சகோ..

இதுக்குத்தான்  நான் நேரடியாகவே  கேட்டேன்

எமது தாலி  கட்டுக்கு வரும்  வெள்ளைகளுக்கு  மாட்டிறைச்சியை நீங்கள்  பரிந்துரைப்பது போலுள்ளது உங்களது கருத்து?

அண்ணா   பெரியவர் நீங்கள்  அறியாத விடையம் அல்ல ஊரில்  காது குத்துள் இருந்து மருமகனுக்கு செல்வ சந்நிதியில் மொட்டை போடுவது போன்று வருடம் முழுக்க உறவினர் ஒன்றுகூடல்கள் மனது முழுக்க சந்தோசத்தையும் இளமையையும் கொண்டு திரிந்தவர்கள் ஒரு கல்யாண வீடு குறைந்தது 1௦ நாட்கள்ஆவது  நடைபெறும் எத்தனை வகை உணவு வகை பண்டம்கள் இருந்தன எப்படி இருந்தனாங்கள்  நாங்கள்?

இங்கு இந்த குளிர் தேசத்தில்  வெள்ளைக்காரன் வருடத்தில் ஒரு நாள் கொண்டாடும் xmas  பார்ட்டிக்கு அதுவும் விரல் விட்டு என்னும் உணவு பண்டத்தை வெள்ளையின் கலாசாரத்தை தங்களுடைய பரம்பரை கலாசாரம் போல் சக மனிதருக்கு காட்ட வெளிகிடுவது தான் அதுவும் அரைகுறையாய் படம் காட்டுவது தான் பிழை என்கிறேன் .

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

நீங்கள்  சொல்வது எனக்குப்புரிகிறது சகோ

ஆனால் இது  விருந்தல்ல

ஒரு  மதம்  அல்லது  கலாச்சாரம்  சம்பந்தப்பட்ட  அழைப்பு

எனவே விருந்தினர்  தான்  மாற்றங்களை  ஏற்கும்  மனத்துடன்  கலந்து  கொள்ளணும்

என்பது  எனது கருத்து மட்டுமே

நான்  அவ்வாறு  தான்.

நன்றி

அப்படி அழைப்பவர், முறையாக விருந்தோம்பல் செய்யவில்லை என்பதே எனது கவலை.

கலியாணத்துக்கு 100 பேரை அழைக்கிறீர்கள். ஐம்பது பேருக்கு சமைத்தால் போதும். 100 பேருக்கு காணுமாயிருக்கும் என்று நினைக்கிறீர்கள். பந்தியில் உணவு காணாவிடில் என்ன நிலைமை? நான் எதிர்பார்த்தது, 50 பேரை... 100 பேர் வந்திட்டினம் என்று சொல்வீர்களா என்ன?

அதைத்தான் சொல்கிறேன். விரும்தோம்பல் மிக முக்கியமானது. வெளியே போய், நாய்க்கேன் போர்த்தேங்காய்  என்று சொல்லி விட்டு போவார்கள். 

அதனால் தான் கவனம் எடுங்கோ என்பது தான் இந்த பதிவின் நோக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒத்து கொள்ள வேண்டும், எம்மவர்களுக்கு, என்னையும் சேர்த்து தான்  மாமிச / கடல் உணவு சமைப்பதில் திறமை இல்லை.

வான் கோழி - மார்ப்பு பகுதி - பிரச்னை இல்லை கறியாக வைப்பதத்திற்கு. துண்டுகள் சற்று பெரிதாக இருக்க வேண்டும்.  ஏனெனில் இலகுவாக வறண்டு விடும்.

மார்பு பகுதி கூட நெடி என்றால் - பெரிதான மார்பு துண்டை கீறி, உப்பிட்டு, வேண்டிய மசாலா இட்டு    RACK இல் வைத்து 50-70% (அளவு  பழக வேண்டும்) ஓவென்  செய்து விட்டு (ஏனெனில், ஊனம் வடிந்து அகற்றப்பட வேண்டும்.). பின்பு ஓரளவு பெரியா துண்டுகளாக  கறியாக சமைக்கலாம். பளப்புளியில் ஊறவைத்து ஓவென்  செய்வது, கறிக்கு  சிறிதளவு (அளவு ருசித்து பழக வேண்டும்) பளப்புலி பாவிப்பது, அனேமாக முழு நெடியையும் அகற்றி விடும். இதன் நோக்கம், ஊனம் வடிந்தோட, மசாலா ஆழமாக ஊடுருவும்.  

துடை  பகுதியையும் rack இல் வைத்து 70 - 80 % oven செய்து , மார்பு பகுதியோடு கலந்து கறி சமைக்கலாம். 

ஆர்வம் இருந்தால் செய்து பார்க்கவும்.

அநேக வெள்ளையர்களுக்கு, இயற்கை முச்சையை விரும்பி  அனுபவிப்பவர்கள். அவர்கள் அப்படி கூரப்படைந்து விட்டார்கள்.       

எதுவாயினும்,  வீட்டில் பரிமாறப்படும் உணவு என்பது, social enjoyment ஆனா நிகழ்வு. பசிக்கு மட்டும் அல்ல.

அந்த enjoyment ஐ  குழப்பாமல், வசதிக்கு ஏற்றபடி ஏற்றப்படுத்தி கொள்ள வேண்டும்.

இங்கே uk யில் ஓர் டிவி நிகழ்ச் நடந்தது இப்போதும் நாடாகும் என்று நினைக்கிறன். 5 பேர் தெரிந்து எடுக்கப்பட்டு , ஒவொருவரும் தமது வீட்டில் விருந்தோம்புவார். அதின் பங்குபற்றி, whole experience ஐ புள்ளியிட வேண்டும் 1 - 10.

தமிழ் பெண் ஒருவர் வந்தார், அவர் தன்னை தவிர வேறு எந்த விருந்தோம்பலிழும், உண்ணவில்லை. முயற்சி செய்யக் கூட ஆயத்தமில்லை.  3 - 4 ஆவது விருந்தோம்பலில் மற்றவர்கள் சினம் கொள்ள தொடக்கி விட்டார்கள். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
58 minutes ago, Kadancha said:

பாஸ், இப்படி ரெசிப்பி எல்லாம் எழுதி இருக்கீங்க, ஆனா கடைசிவரை,

பந்தா பார்ட்டி vs சோத்து கோஸ்டி

சச்சரவில் நீங்க எந்த பக்கம் எண்டு சொல்லவே இல்லையே பாஸ்?

பிகு

என்ன சாபமோ, பாவமோ - மத்தியானம் கத்தரிக்காய் பால்கறி, ஆட்டு கறி, எலும்பு ரசம், குத்தரிசி சோறு எண்டு இருந்த மெனு,

இந்த திரியில் எழுதி போட்டு போய், இரவு சாப்பாடு என்ன எண்டு கேட்டால், அலுப்பா இருக்கு இண்டைக்கு பாணும் மத்தியான கறியும்தான் எண்ட அளவுக்கு வந்து நிக்கிது😂.

Edited by goshan_che
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kadancha said:

ஒத்து கொள்ள வேண்டும், எம்மவர்களுக்கு, என்னையும் சேர்த்து தான்  மாமிச / கடல் உணவு சமைப்பதில் திறமை இல்லை.

வான் கோழி - மார்ப்பு பகுதி - பிரச்னை இல்லை கறியாக வைப்பதத்திற்கு. துண்டுகள் சற்று பெரிதாக இருக்க வேண்டும்.  ஏனெனில் இலகுவாக வறண்டு விடும்.

மார்பு பகுதி கூட நெடி என்றால் - பெரிதான மார்பு துண்டை கீறி, உப்பிட்டு, வேண்டிய மசாலா இட்டு    RACK இல் வைத்து 50-70% (அளவு  பழக வேண்டும்) ஓவென்  செய்து விட்டு (ஏனெனில், ஊனம் வடிந்து அகற்றப்பட வேண்டும்.). பின்பு ஓரளவு பெரியா துண்டுகளாக  கறியாக சமைக்கலாம். பளப்புளியில் ஊறவைத்து ஓவென்  செய்வது, கறிக்கு  சிறிதளவு (அளவு ருசித்து பழக வேண்டும்) பளப்புலி பாவிப்பது, அனேமாக முழு நெடியையும் அகற்றி விடும். இதன் நோக்கம், ஊனம் வடிந்தோட, மசாலா ஆழமாக ஊடுருவும்.  

துடை  பகுதியையும் rack இல் வைத்து 70 - 80 % oven செய்து , மார்பு பகுதியோடு கலந்து கறி சமைக்கலாம். 

ஆர்வம் இருந்தால் செய்து பார்க்கவும்.

அநேக வெள்ளையர்களுக்கு, இயற்கை முச்சையை விரும்பி  அனுபவிப்பவர்கள். அவர்கள் அப்படி கூரப்படைந்து விட்டார்கள்.       

எதுவாயினும்,  வீட்டில் பரிமாறப்படும் உணவு என்பது, social enjoyment ஆனா நிகழ்வு. பசிக்கு மட்டும் அல்ல.

அந்த enjoyment ஐ  குழப்பாமல், வசதிக்கு ஏற்றபடி ஏற்றப்படுத்தி கொள்ள வேண்டும்.

இங்கே uk யில் ஓர் டிவி நிகழ்ச் நடந்தது இப்போதும் நாடாகும் என்று நினைக்கிறன். 5 பேர் தெரிந்து எடுக்கப்பட்டு , ஒவொருவரும் தமது வீட்டில் விருந்தோம்புவார். அதின் பங்குபற்றி, whole experience ஐ புள்ளியிட வேண்டும் 1 - 10.

தமிழ் பெண் ஒருவர் வந்தார், அவர் தன்னை தவிர வேறு எந்த விருந்தோம்பலிழும், உண்ணவில்லை. முயற்சி செய்யக் கூட ஆயத்தமில்லை.  3 - 4 ஆவது விருந்தோம்பலில் மற்றவர்கள் சினம் கொள்ள தொடக்கி விட்டார்கள். 

இதற்கு என்ன வேண்டும்? இந்த சமூக ஒருங்கிணைவுக் (social enjoyment) கொண்டாட்டத்திற்கு?

1. முதலில் விருந்தோம்புபவர் என்னை நினைத்து அழைத்திருக்கிறார் என்ற நன்றியுணர்வு வேண்டும்.

2. விருந்தில் குறை இருந்தாலும் (உப்பில்லை, காரமில்லை வகையறா) விருந்தோம்புபவர் மனம் மகிழ அதைக் கடந்து போகும் பெருந்தன்மை (magnanimity) வேண்டும். எதை ருசித்தாலும் அது நாக்கைத் தாண்டும் வரை தான், எதை உள்ளே எடுத்தாலும் அடுத்த நாள் அது கழிவறையில் தான்😂

3. "நான் உன் விருந்திற்கு வருவதே உனக்குப் பெருமை, என்னைக் கேக்காமல் எப்படி நீ விரும்பமில்லா உணவு பரிமாறுவாய்?" என்ற சில்லறைக் குணம் இருக்கக் கூடாது!

இந்த நிபந்தனைகள் எல்லாக் கலாச்சாரங்களுக்கும் பொருந்தும். இவை அமையாதோர் விருந்துக்குப் போகாமல் இருப்பது நல்லது, விருந்தோம்புபவருக்கு ஒரு இழப்பும் இருக்காது!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கூப்பிட்டு விட்டு, முறையாக விருந்தோம்பல் செய்து மதிக்காத ஒருவரை, என்னை மதித்து கூப்பிட்டதே, பெரிய விசயம் என்று இருந்து விட முடியுமா என்ன?

மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று மானமுள்ள மனிதருக்கு அவ்வை சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது. - கண்ணதாசன்.

நான் இந்த திரி பதிவு மூலம் சொல்ல வந்தது, பந்தா காட்டினாலும், ஒழுங்காக காட்டுங்கள். முடியாவிடில், அழைக்காதீர்கள். அதுக்கு மட்டுமே பெரும் நன்றி சொல்லலாம்.

போனவருடம் பார்ட்டி தந்தவர் குறித்து, அன்று வர முடியாத ஒருவரிடம், வேறு ஒரு பார்ட்டியில் சொல்லப்பட்டது: தப்பிவிட்டாய் மச்சான்... நாங்கள் போய், நொந்து, நூடில்ஸாகி வந்தோம்.

1 hour ago, goshan_che said:

இந்த திரியில் எழுதி போட்டு போய், இரவு சாப்பாடு என்ன எண்டு கேட்டால், அலுப்பா இருக்கு இண்டைக்கு பாணும் மத்தியான கறியும்தான் எண்ட அளவுக்கு வந்து நிக்கிது😂.

இனி கொஞ்ச நாளைக்கு, டீவியை திறந்தால், diet after festive feasts, new year resolution எண்டு போட்டுத்தாக்குவார்கள்.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

விருந்தோம்பல் தமிழர் கலாச்சாரம். விருந்தில் வித்தியாசமான உணவு வகைகளை பரிமாறுவதும் அதை விரும்பி உண்பதும் பலவேறு இனமக்களின் உணவுகளை ரசித்து உண்பதும் உலக வழமை தான். அதுவும் பல இன மக்கள் வாழும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெரும்பாலான மக்கள் வித்தியாசமான உணவுகளை விருந்துகளில் உண்ண விரும்புவார்கள்.  

உணவில் சுவை இல்லாமல் விட்டாலும் அல்லது அந்த உணவு பிடிக்காமல் விட்டாலும் அதை பாராட்டி விருந்தளிப்பவர் மனம் கோணாது அவருக்கு நன்றி செலுத்துவதற்காக விருந்தை பாராட்டுவது தமிழர்களது மட்டுமல்ல உலகில் வாழும் அனைத்து மனிதர்களதும் கலாச்சாரம். 

தனது நண்பர்களின் விருந்துக்கு போய்விட்டு அந்த விருந்தை பற்றி புறம் சொல்லி பொது வெளியில் பேசுவது சிறந்த கலாச்சாரம் அல்ல. 

Edited by island
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, goshan_che said:

ஆனால் கண்ணில் காட்ட முடியாத சாமான் இந்த வான்கோழி.

இருவரும் ஒரே ஒரே இடத்தில் தான் 😂

என்னை அழைப்பவர்கள் வேறு பலரையும் அழைக்கிறார்கள் எனக்கு வான் கோழி பிடிக்காது என்பது அவர்களுக்கு தெரியும் அதனால் என்னை போன்றவர்களுக்கு கோழி தருவார்கள் மற்றும்

6 hours ago, goshan_che said:

ஆனால் உருளை கிழங்கு ரோஸ்ட், கிரேவி, பிரசிள்ஸ் ஸ்பிரவுட்ஸ் எண்டு இருக்கும்தானே?

👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இருவரும் ஒரே ஒரே இடத்தில் தான் 😂

என்னை அழைப்பவர்கள் வேறு பலரையும் அழைக்கிறார்கள் எனக்கு வான் கோழி பிடிக்காது என்பது அவர்களுக்கு தெரியும் அதனால் என்னை போன்றவர்களுக்கு கோழி தருவார்கள் மற்றும்

👍

அநேகமாக கூப்பிடுவோர் என்ன விருப்பம், வெறுப்பு என்று கேட்டுத்தான் செய்வார்கள்.

ஆனால் நாதம் சொல்வதை பார்த்தால் - போன இடத்தில தனிய வான்கோழியயும், யோக்சியர் புடிங்கையும் வச்சு தாக்காட்டி விட்டார்கள் போலுள்ளது.

யோக்சியர் புடிங்க்கும் கிரேவியுடன் நல்லா இருக்கும். 

பிகு

2ம் உலக யுத்தம் வரைக்கும், பின்பும் கூட வான்கோழி என்பது யூகேயில் தனியே மேல் தட்டு (Upper classes) மட்டும் சாப்பிடும் சாப்பாடு.

நான் ஒரு “மிடில் கிளாஸ் மாதவன்” என்பதால் எனக்கு இதன் சுவை பிடிக்காதோ?😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

எனக்கும் வான் கோழி பிடிக்காது, ஆனால் உருளை கிழங்கு ரோஸ்ட், கிரேவி, பிரசிள்ஸ் ஸ்பிரவுட்ஸ் எண்டு இருக்கும்தானே

வான்கோழி lean meat என்பதால் protein எடுக்க சாப்பிடுவதுண்டு!

வான்கோழி கிரேவியுடனும் அதிகம் கிரான்பெர்ரி சோஸும் சேர்த்து அடித்தான் அந்த மாதிரி இருக்கும்!

கொஞ்சம் உப்புப் போட்டு அவிச்ச ரெயிண்டியரையே லின்கொம்பெர்ரியியுடனும், மாஷ் பண்ணின உருளைக்கிழங்குடனும் உள்ளே தள்ளிய நமக்கெல்லாம் பார்ட்டிகளில் சோறைக் கண்ணில் காட்டக்கூடாது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, கிருபன் said:

வான்கோழி lean meat என்பதால் protein எடுக்க சாப்பிடுவதுண்டு!

வான்கோழி கிரேவியுடனும் அதிகம் கிரான்பெர்ரி சோஸும் சேர்த்து அடித்தான் அந்த மாதிரி இருக்கும்!

எனக்கு கீழே உள்ளதை எழுதும் போதே தெரியும்.

கெட்டாலும் வான்(கோழி)மக்கள் மேன்மக்களே 😁.

44 minutes ago, goshan_che said:

2ம் உலக யுத்தம் வரைக்கும், பின்பும் கூட வான்கோழி என்பது யூகேயில் தனியே மேல் தட்டு (Upper classes) மட்டும் சாப்பிடும் சாப்பாடு.

பிகு

கிரேன்பெரி சோஸ் நாட்டமில்லை ஆனால் சீஸ் சோஸ் இல் மாவு பண்டங்களை முக்கி சாப்பிட பிடிக்கும்.

அதே போல் கிரேன்பெரி சேர்த்த சீசும். 😋.

எல்லா சீசும் பிடிக்கும். கிரிஸ்மஸ் பார்ட்டிகளில் அதிகம் எதிர்பார்பதே இந்த சீஸ், ஓலிவ், இதர நொறுக்ஸ்சைத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@கிருபன்அது சரி நீங்கள் இணைத்த நிலாந்தன் திரியை பார்த்து ஏதும் சொல்லலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொண்ட்டாடங்களுக்கு அழைப்பிதழ் வந்து போகோணும் எண்டால்.....
சைவ ஆக்களின்ர சமயம் சார்ந்த கொண்டாட்டங்களுக்கு சைவ உணவுகளை எதிர்பார்த்து போக வேண்டும்.
கிறிஸ்தவர்களின் கொண்டாட்டங்களுக்கு அவர்கள் சார்ந்த உணவுகளை எதிர்பார்த்து போக வேண்டும்.
முஸ்லீம்களின் கொண்டாட்டங்களுக்கு அவர்கள் சார்ந்த உணவுகளை எதிர்பார்த்து போக வேண்டும்
பௌத்தர்களின் கொண்டாட்டங்களுக்கும் அப்படியே......

 உதாரணத்துக்கு சைவக்காரன் வீட்டை தைப்பொங்கலுக்கு போய் மாட்டுறைச்சி கறி எதிர் பாக்கிறவைக்கு  என்ன வைத்தியம் குடுக்கலாம் எண்டு யோசிக்கிறன்.🤣

ஒவ்வொரு நாட்டு மக்களும் கிறிஸ்தவர் அல்லாதோரும் இப்போது நத்தார் பண்டிகையை  பேதமில்லாமல் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அதை தங்கள் நாட்டு உணவுடன் மேற்கத்தைய/கீழைத்தேய உணவுகளையும்  சேர்த்து வைத்தே  கொண்டாடுகின்றனர்.

எனது கருத்து என்னவெண்டால்  தமிழர்களாகிய நாங்கள் கிறிஸ்மஸ்க்கு வெள்ளைக்காரன் சாப்பிடுறததைத்தான்  நாங்களும் சாப்பிட வேணுமெண்டில்லை. சாப்பாடு என்பது அவரவர் விருப்பம்.நான் இதுவரைக்கும் போன கிறிஸ்மஸ் பார்ட்டிகளிலை இறைச்சி வகைகள் அதிகம் இருக்கும். அதோட சோறு கறியும் இருக்கும்.😁

23 minutes ago, goshan_che said:

@கிருபன்அது சரி நீங்கள் இணைத்த நிலாந்தன் திரியை பார்த்து ஏதும் சொல்லலாமே?

இன்று காலை சம்பந்தம் இல்லாத திரிக்கு இல்லாத கருத்து எண்டு மற்றாக்களுக்கு பாடம் எடுத்த மாதிரி கிடக்கு 🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, குமாரசாமி said:

இன்று காலை சம்பந்தம் இல்லாத திரிக்கு இல்லாத கருத்து எண்டு மற்றாக்களுக்கு பாடம் எடுத்த மாதிரி கிடக்கு 🤪

உறண்டை மறுவழமாயும் இழுபடும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:

கொண்ட்டாடங்களுக்கு அழைப்பிதழ் வந்து போகோணும் எண்டால்.....
சைவ ஆக்களின்ர சமயம் சார்ந்த கொண்டாட்டங்களுக்கு சைவ உணவுகளை எதிர்பார்த்து போக வேண்டும்.
கிறிஸ்தவர்களின் கொண்டாட்டங்களுக்கு அவர்கள் சார்ந்த உணவுகளை எதிர்பார்த்து போக வேண்டும்.
முஸ்லீம்களின் கொண்டாட்டங்களுக்கு அவர்கள் சார்ந்த உணவுகளை எதிர்பார்த்து போக வேண்டும்
பௌத்தர்களின் கொண்டாட்டங்களுக்கும் அப்படியே......

 உதாரணத்துக்கு சைவக்காரன் வீட்டை தைப்பொங்கலுக்கு போய் மாட்டுறைச்சி கறி எதிர் பாக்கிறவைக்கு  என்ன வைத்தியம் குடுக்கலாம் எண்டு யோசிக்கிறன்.🤣

ஒவ்வொரு நாட்டு மக்களும் கிறிஸ்தவர் அல்லாதோரும் இப்போது நத்தார் பண்டிகையை  பேதமில்லாமல் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அதை தங்கள் நாட்டு உணவுடன் மேற்கத்தைய/கீழைத்தேய உணவுகளையும்  சேர்த்து வைத்தே  கொண்டாடுகின்றனர்.

எனது கருத்து என்னவெண்டால்  தமிழர்களாகிய நாங்கள் கிறிஸ்மஸ்க்கு வெள்ளைக்காரன் சாப்பிடுறததைத்தான்  நாங்களும் சாப்பிட வேணுமெண்டில்லை. சாப்பாடு என்பது அவரவர் விருப்பம்.நான் இதுவரைக்கும் போன கிறிஸ்மஸ் பார்ட்டிகளிலை இறைச்சி வகைகள் அதிகம் இருக்கும். அதோட சோறு கறியும் இருக்கும்.😁

அதாவது, தைப்பொங்கல் வைக்கிற ஆள், இப்தார் விருந்து கொடுக்கிறன் என்று கிளம்பினால், அது குறித்து தெளிவாக தெரிந்து கொண்டு நண்பர்களை அழையுங்கள் என்பதே எனது பதிவின் நோக்கம். 😁

47 minutes ago, goshan_che said:
56 minutes ago, கிருபன் said:

வான்கோழி lean meat என்பதால் protein எடுக்க சாப்பிடுவதுண்டு!

வான்கோழி கிரேவியுடனும் அதிகம் கிரான்பெர்ரி சோஸும் சேர்த்து அடித்தான் அந்த மாதிரி இருக்கும்!

கொஞ்சம் உப்புப் போட்டு அவிச்ச ரெயிண்டியரையே லின்கொம்பெர்ரியியுடனும், மாஷ் பண்ணின உருளைக்கிழங்குடனும் உள்ளே தள்ளிய நமக்கெல்லாம் பார்ட்டிகளில் சோறைக் கண்ணில் காட்டக்கூடாது!

Quote

எழுதும் போதே தெரியும்.

கெட்டாலும் வான்(கோழி)மக்கள் மேன்மக்களே 😁.

மேன் மக்கள் மேன்மக்களே: 

நான் கிருபன் அய்யாவை சொன்னேன்.....  😎 😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Nathamuni said:

கூப்பிட்டு விட்டு, முறையாக விருந்தோம்பல் செய்து மதிக்காத ஒருவரை, என்னை மதித்து கூப்பிட்டதே, பெரிய விசயம் என்று இருந்து விட முடியுமா என்ன?

அது உங்களுக்கு விளங்குது எனக்கு விளங்குது அழையா விருந்தாளியாக  திரியிற வருக்கு  விளங்காது .😀 சாப்பிட விட்டதே பெரும் புண்ணியம் என்று அமைதியாகி இருப்பார்.😀

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, பெருமாள் said:

அது உங்களுக்கு விளங்குது எனக்கு விளங்குது அழையா விருந்தாளியாக  திரியிற வருக்கு  விளங்காது .😀 சாப்பிட விட்டதே பெரும் புண்ணியம் என்று அமைதியாகி இருப்பார்.😀

அதுல, ஒருத்தர், பழைய ஐடியை விட்டுட்டு புது ஐடியோட அந்தரிப் பட்டுக்கொண்டு கொண்டு திரியிறார்....

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, பெருமாள் said:

அது உங்களுக்கு விளங்குது எனக்கு விளங்குது அழையா விருந்தாளியாக  திரியிற வருக்கு  விளங்காது .😀 சாப்பிட விட்டதே பெரும் புண்ணியம் என்று அமைதியாகி இருப்பார்.😀

வழமை போல லொஜிக் பொருந்தவில்லையே பெருமாள்? "சாப்பிட மட்டுமே" போகும் பட்டினி கேஸ்கள் அல்லவா சாப்பாடு பற்றி அலட்டிக் கொள்வர்? அது யார் இங்கே? பதில் வேண்டாம், வாசகர்களுக்குப் புரிந்திருக்கும்!😎

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.