Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த இராஜபக்ச விமான நிலையத்துக்கு வருகிறது ரஸ்ய அரச விமான சேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாந்தொட்ட, மத்தளவில் உள்ள மகிந்த இராஜபக்ஸ விமான நிலையத்துக்கு, வாரம் இரு முறை, ரஸ்யாவில் இருந்து நேரடி பட்டய  பயணிகள் விமான சேவையை (charted flights) ரஸ்ய அரச விமான சேவையான ரெட் விங்க்ஸ் நடத்த தீர்மானித்துள்ளது.

28/12/2022 முதல் இச்சேவை ஆரம்பமாகிறது.

ரஸ்யாவில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் மூன்றாவது நேரடி விமான சேவை இதுவாகும்.

https://www.newswire.lk/2022/12/26/russias-red-wings-to-commence-charter-flights-to-mattala-airport/

  • கருத்துக்கள உறவுகள்

மத்தள விமான நிலையத்தில் இருந்து… தற்போது வரும் வருமானத்தை விட,
அதனை பராமரிக்கும் செலவு 21 மடங்கு அதிகமாம்.
ஆன படியால் எப்பாடு பட்டாவது இயங்க வைத்தே ஆக வேண்டும்.
இல்லாட்டி… “ரன் வேயில்” நெல்லு காயப் போட்டுத் தன்னும் நட்டத்தை ஈடு கட்ட வேண்டும். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

மத்தள விமான நிலையத்தில் இருந்து… தற்போது வரும் வருமானத்தை விட,
அதனை பராமரிக்கும் செலவு 21 மடங்கு அதிகமாம்.
ஆன படியால் எப்பாடு பட்டாவது இயங்க வைத்தே ஆக வேண்டும்.
இல்லாட்டி… “ரன் வேயில்” நெல்லு காயப் போட்டுத் தன்னும் நட்டத்தை ஈடு கட்ட வேண்டும். 😂

ஒமாம்.

ஆனால் எப்பாடு பட்டாவது இதை இயங்க வைக்க வேண்டும் என்ற இலங்கையின் வேண்டுதலுக்கு, ஒரு போரின் மத்தியில் கூட செவி சாய்த்து, மூன்று வேறு வேறு விமான சேவைகளை நேரடியாக இலங்கைக்கு அனுப்பி, மத்தள விமான நிலையத்தை பூட்டாமல் வைத்திருக்க ரஸ்யா எடுக்கும் முயற்சி அளப்பரியது.

ரஸ்யா போல் ஒரு நண்பன் கிடைக்க பேரினவாத இலங்கை கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che அப்படியானல் ரஷ்யாவை ஆதரிப்பவர்கள் சிங்கள பேரினவாதிகளின் நண்பர்கள் என்று கூறுவீர்கள் போல. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, island said:

@goshan_che அப்படியானல் ரஷ்யாவை ஆதரிப்பவர்கள் சிங்கள பேரினவாதிகளின் நண்பர்கள் என்று கூறுவீர்கள் போல. 😂

எதிரிக்கு எதிரி நண்பன் என்றால் எதிரிக்கு நண்பன் எதிரி ?

சும்மா பகிடிக்கு சொல்கிறேன்.

ஆனால் உண்மையில் இலங்கை அரசு மீது அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் அக்கறை செலுத்தும் நாடு ரஸ்யா தான் ஒப்பீட்டளவில்.

இலங்கையில் ரஸ்யாவுக்கு நலன் என்று அதிகம் இல்லை - ஆனாலும் இலங்கை கேட்கும் போதெல்லாம் உதவிக்கு ஓடி வரும்.

அதை செய், இதை செய். அந்த விசாரணை, இந்த தீர்வு என்று எந்த நெருக்கலும் கொடுப்பதில்லை.

அதே போல் சொத்துக்களை எழுதி வாங்குவதும் இல்லை.

# நட்பு 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை இந்தியாவின்  பிராந்தியத்துக்குள் அமைந்திருக்கின்றது. இந்தியா ரஷ்யாவின் நட்பு நாடு. இந்தியாவின் விருப்பத்தை ரஷ்யா பூர்த்தி செய்யும் அவ்வளவுதான்.

இதை ஏதோ சிதம்பர ரகசியம் மாதிரி.....😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இலங்கை இந்தியாவின்  பிராந்தியத்துக்குள் அமைந்திருக்கின்றது. இந்தியா ரஷ்யாவின் நட்பு நாடு. இந்தியாவின் விருப்பத்தை ரஷ்யா பூர்த்தி செய்யும் அவ்வளவுதான்.

இதை ஏதோ சிதம்பர ரகசியம் மாதிரி.....😁

இலங்கை விடயத்தில் எல்லா நாடுகளும் (இந்தியா கேட்டு கொண்டாலும்) ரஸ்யாவை போல் நிபந்தனை அற்ற உதவி கொடுப்பதில்லை.

இந்தியாவே கூட இலங்கைக்கு நிபந்தனை அடிப்படையில் தான் உதவும். ஆனால் ரஸ்யா அப்படி அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, goshan_che said:

இலங்கை விடயத்தில் எல்லா நாடுகளும் (இந்தியா கேட்டு கொண்டாலும்) ரஸ்யாவை போல் நிபந்தனை அற்ற உதவி கொடுப்பதில்லை.

இந்தியாவே கூட இலங்கைக்கு நிபந்தனை அடிப்படையில் தான் உதவும். ஆனால் ரஸ்யா அப்படி அல்ல.

இந்தியா முள்ளிவாய்க்கால் அழிவை செய்யும் போது மேற்குலகு என்ன நிபந்தனை விதித்திருக்கும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இந்தியா முள்ளிவாய்க்கால் அழிவை செய்யும் போது மேற்குலகு என்ன நிபந்தனை விதித்திருக்கும்?

போரின் முடிவில் தம் நலனை புறம்தள்ள கூடாது என்ற நிபந்தனையை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, goshan_che said:

போரின் முடிவில் தம் நலனை புறம்தள்ள கூடாது என்ற நிபந்தனையை 

அப்புறம் எப்பிடி மாண்புமிகு புட்டின் கப்பலோடு மத்தளப்பக்கம் வந்தார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

அப்புறம் எப்பிடி மாண்புமிகு புட்டின் கப்பலோடு மத்தளப்பக்கம் வந்தார்?

அவருக்கு நல்ல மனசு. உதவி எண்டு இலங்கை கேட்டதும் ஓடி வந்துட்டார்.

இதே போலத்தானே 2009 இல் பொஸ்பரசு குண்டுகளையும், கொத்து குண்டுகளையும் ஏன் என்ன என்று கேள்வி கேட்காமல் இலங்கைக்கு கொடுத்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மத்தள விமான நிலையத்தில் இருந்து… தற்போது வரும் வருமானத்தை விட,
அதனை பராமரிக்கும் செலவு 21 மடங்கு அதிகமாம்.
ஆன படியால் எப்பாடு பட்டாவது இயங்க வைத்தே ஆக வேண்டும்.
இல்லாட்டி… “ரன் வேயில்” நெல்லு காயப் போட்டுத் தன்னும் நட்டத்தை ஈடு கட்ட வேண்டும். 😂

மாத்தள விமான நிலையத்தை அமெரிக்கா குத்தகைக்கு எடுப்பதை ரஷ்சியா விரும்பாது.. சீனா எடுப்பதை ஹிந்தியா வரும்பாது.

ஆகவே ரஷ்சியா - ஹிந்தியா இதனை இயக்கி அல்லது இதன் மீது செல்வாக்குச் செய்யலாம். 

போர் என்று வந்தால்.. பிராந்திய ஆதிக்கம் செலுத்த.. சிறிய ஓடுபாதையும் முக்கியத்துவம் செய்யும் என்பதால் தான் புலிகள் அமைத்த ஓடுபாதைகளை சிங்களம் இப்பவும் பராமரிக்கிறது. 

23 minutes ago, goshan_che said:

அவருக்கு நல்ல மனசு. உதவி எண்டு இலங்கை கேட்டதும் ஓடி வந்துட்டார்.

இதே போலத்தானே 2009 இல் பொஸ்பரசு குண்டுகளையும், கொத்து குண்டுகளையும் ஏன் என்ன என்று கேள்வி கேட்காமல் இலங்கைக்கு கொடுத்தார்.

ரஷ்சியா அல்ல.. உக்ரைன் தான் சொறீலங்காவின் முக்கிய ஆயுதத் தரகர். உக்ரைன் மூலம் தான் பெருமளவு ஆயுதங்கள் சொறீலங்காவை அடைந்தன. உந்த பொஸ்பரஸ் குண்டுகள் உட்பட. ரஷ்சிய உற்பத்திகள் ஆனாலும் உக்ரைன் தான் விற்றுக் காசு பார்த்தது. போர் விமானங்களையும் ஹெலிக்கொப்டர்களையும் வழங்கியது. அமெரிக்கா கொடுத்தவை தனிக்கணக்கு. அவை மட்டும் என்ன கேட்டுக் கேள்வி விடை கண்டா கொடுத்தவை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nedukkalapoovan said:

மாத்தள விமான நிலையத்தை அமெரிக்கா குத்தகைக்கு எடுப்பதை ரஷ்சியா விரும்பாது.. சீனா எடுப்பதை ஹிந்தியா வரும்பாது.

ஆகவே ரஷ்சியா - ஹிந்தியா இதனை இயக்கி அல்லது இதன் மீது செல்வாக்குச் செய்யலாம். 

போர் என்று வந்தால்.. பிராந்திய ஆதிக்கம் செலுத்த.. சிறிய ஓடுபாதையும் முக்கியத்துவம் செய்யும் என்பதால் தான் புலிகள் அமைத்த ஓடுபாதைகளை சிங்களம் இப்பவும் பராமரிக்கிறது. 

ரஷ்சியா அல்ல.. உக்ரைன் தான் சொறீலங்காவின் முக்கிய ஆயுதத் தரகர். உக்ரைன் மூலம் தான் பெருமளவு ஆயுதங்கள் சொறீலங்காவை அடைந்தன. உந்த பொஸ்பரஸ் குண்டுகள் உட்பட. ரஷ்சிய உற்பத்திகள் ஆனாலும் உக்ரைன் தான் விற்றுக் காசு பார்த்தது. போர் விமானங்களையும் ஹெலிக்கொப்டர்களையும் வழங்கியது. அமெரிக்கா கொடுத்தவை தனிக்கணக்கு. அவை மட்டும் என்ன கேட்டுக் கேள்வி விடை கண்டா கொடுத்தவை. 

இதை முன்பே சொல்லி விட்டேனே.

இலங்கை அரசு மட்டும் அல்ல புலிகளும் உக்ரேனில் ஆயுதம் வாங்கினானர்கள். ஏனென்றால் அப்போ உக்ரேன் ஒரு ஆயுத சந்தை.

ஆனால் உக்ரேன் ஆயுதம் கொடுத்தது, கூலிக்கு தனியார் விமானிகள் வந்தது எல்லாம் கூலிக்காக. 

ஆனால் இன்றும் அன்றும் என்றும் இலங்கைக்கு ரஸ்யா கொடுப்பது நட்புடனான கேள்விகள் அற்ற உதவி.

இந்தியா, சீனா, மேற்கு எல்லாரும் இலங்கைக்கு உதவுவது தம் நலனை முன்னிறுத்தி சில நிபந்தனைகளை வைத்தே. ஆனால் நிபந்தனை இல்லாமல் உதவுவது ரஸ்யா மட்டுமே.

2020 இல் கூட “இலங்கை தேவை என கேட்கும்” அத்தனை ஆயுதத்தையும் சப்ளை செய்ய இணங்கியது ரஸ்யா.

https://www.tamilguardian.com/content/russia-supply-sri-lanka-all-weapons-they-need

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

2020 இல் கூட “இலங்கை தேவை என கேட்கும்” அத்தனை ஆயுதத்தையும் சப்ளை செய்ய இணங்கியது ரஸ்யா.

ஏன் இலங்கையோடு இப்பவும் வருடா வருடம் அமெரிக்காவும்.. ஹிந்தியாவும் கூட்டுப் பயிற்சி செய்யினம். அண்மையில் கூட இலங்கையின் பாதுகாப்புக்கு அவசியமான அனைத்தையும் செய்வதாக அமெரிக்கா உறுதி அளித்தது. அதேவேளை மனித உரிமைகள் சபையில்.. இலங்கைக்கு எதிராக உப்புச் சப்பற்ற தீர்மானம்... அழுத்தமாம். இப்படி ரஷ்சியா தமிழர்களை ஏமாற்றவில்லை எனலாம். 

அமெரிக்க ஊடுருவல் என்பது இலங்கையை குறி வைக்கும் வரை ரஷ்சிய உதவிகள் வரத்தான் செய்யும்.. அதேபோல்.. சீனா குறிவைக்கும் வரை.. ஹிந்தியா உதவும். இந்த நரி மூளையை வகுத்து செயல்வடிவமாக்கிக் கொடுத்ததே கதிர்காமர் என்ற ஈனத்தமிழன் தான். 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

ஏன் இலங்கையோடு இப்பவும் வருடா வருடம் அமெரிக்காவும்.. ஹிந்தியாவும் கூட்டுப் பயிற்சி செய்யினம். அண்மையில் கூட இலங்கையின் பாதுகாப்புக்கு அவசியமான அனைத்தையும் செய்வதாக அமெரிக்கா உறுதி அளித்தது. அதேவேளை மனித உரிமைகள் சபையில்.. இலங்கைக்கு எதிராக உப்புச் சப்பற்ற தீர்மானம்... அழுத்தமாம். இப்படி ரஷ்சியா தமிழர்களை ஏமாற்றவில்லை எனலாம். 

அமெரிக்க ஊடுருவல் என்பது இலங்கையை குறி வைக்கும் வரை ரஷ்சிய உதவிகள் வரத்தான் செய்யும்.. அதேபோல்.. சீனா குறிவைக்கும் வரை.. ஹிந்தியா உதவும். இந்த நரி மூளையை வகுத்து செயல்வடிவமாக்கிக் கொடுத்ததே கதிர்காமர் என்ற ஈனத்தமிழன் தான். 

அதான் சொல்லுறன். அமெரிக்காவுக்கு இந்தோ பசிபிக் நலன், இந்தியாவுக்கு பிராந்திய நலன், சீனாவுக்கு பட்டு பட்டி நலன் - இந்த பிராந்தியத்தில் ரஸ்யாவிற்கு அப்படி ஒரு மூலோபாய நலனும் இல்லை. இலங்கை தவிர வேறு எங்கும் ரஸ்யா மினெகெடுவதும் இல்லை.

ஆனால் தன்னலம் இல்லாத ஒரு நட்பு இலங்கை மீது ரஸ்யாவுக்கு உண்டு. இலங்கையின் உண்மையான நண்பன் ரஸ்யாதான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

ஆனால் தன்னலம் இல்லாத ஒரு நட்பு இலங்கை மீது ரஸ்யாவுக்கு உண்டு.

ருசியா, சொறி சிங்களத்தோடு செய்யும் அனைத்து (ஆயுதம் கூட) வர்த்தகம் ருசியா நலனுக்காக.

ஆயுதத்தில், சொறி சிங்கள லங்கா ரஷ்யாவின் முக்கிய வாடிக்கையாளர் என்று இருப்பது , ருசியா இலங்கை போன்று ஆயுத போராட்ட நாடுகளுக்கு அதன் விற்பனை சந்தையை வளர்க்க.     

மற்றது,  எங்காவது புதிய சந்தைகள் ருசியா உட்பதிக்கு, ரஷ்யா திறக்க முனைந்து கொண்டே இருக்கிறது.

காரணம், பல வேறு நாட்டு ரஷ்யா சந்தைகளை சீனாவும் கைப்பற்றி விட்டது.

அனால், சொறி சிங்களத்தில் இருந்து, ருசியா தேயிலையை இறக்குமதி செய்கிறது.  

இப்பொது ருசியர்கள் ஐரோப்பா, us, g 7, ஜி 20 நாடுகளுக்கு செல்ல முடியாது. ஆனால், இதில் பல நாடுகள் ருசியர்களின் உல்லாச பிரயாண நாடுகள். ரஸ்சியாவின் விமான சேவையும் செல்ல முடியாது. இந்த வருவாய் படுத்து விட்டது ருசியாவுக்கு 

மேலும், விமானங்களை நல்ல  பராமரிப்பு நிலையில் வைத்து இருப்பதற்கு, குறிப்பிட்ட அளவு நேரம் சர்வதேச பறப்பு செய்ய வேண்டும்.  

இதை பகுதியாக தட்டி எழுப்பவே, இந்த மாத்தளை விமான சேவை. 

ரஷ்யா, சும்மா வலிந்து சிங்களத்துக்கு ஆடவில்லை. அதன் நலன் நிலையில் இருந்தே ஆடுகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kadancha said:

ரஷ்யர் இப்போதும் பல நாடுகளுக்கு உல்லாசபயணம் போகலாம். சில ஐரோப்பிய நாடுகள்தான் உல்லாச பயண வீசாவை ரத்தாக்கியுள்ளன.

https://www.schengenvisainfo.com/news/map-which-eu-countries-have-imposed-visa-entry-restrictions-on-russian-tourists-so-far/

அண்மையில் மால்டா போய் வந்தேன் - நாடு ரஸ்யர்களால் நிரம்பி வழிகிறது.

அத்தோடு இப்படி உல்லாச பயணிகள் இலங்கை போவதால் ரஸ்யாவுக்கு அந்நிய செலாவணி இழப்பே. அதிக நன்மை இல்லை. 

ரஸ்யா எடுத்த விமானங்களை கூட லீஸ் முடிந்த பின் திருப்புவதில்லை இப்போ. ஆகவே விமானங்கள் பறக்க வேண்டும் என்று இலங்கைக்கு, அதுவும் மத்தளக்கு வர வேண்டிய தேவை இல்லை.

There is no such thing as a free lunch என்பது உண்மையே ஆகினும், இலங்கை விடயத்தில் ரஸ்யா அதிகம் நன்மையை எதிர்பாராது உதவுகிறது என்பதே உண்மை.

குறிப்பாக சீனா, இந்தியா போல் இலங்கையின் வளங்களை விலையாக கேட்பதில்லை அதே போல் இலங்கை எப்படி தன் விவகாரங்களை நடத்த வேண்டும் என்று மேற்கு போல் வகுப்பும் எடுப்பதில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

அதை செய், இதை செய். அந்த விசாரணை, இந்த தீர்வு என்று எந்த நெருக்கலும் கொடுப்பதில்லை.

ரஷ்யா நேரடியாக கேட்க்காது இந்தியாமூலம் கேட்கவைக்கப்படலாம் தனக்கு வேண்டியதை. சோழியன் குடுமி சும்மா ஆடாது மூன்றாம் உலகப்போர் என்று மூண்டால் மொத்தமாக கேட்கும், அதற்கு அந்த உரிமை இருக்கிறது நீங்கள் சொல்வதை வைத்துப்பாத்தால், கேட்டுக்கேள்வி இல்லாமல் கூப்பிட்ட குரலுக்கு அவர்கள் ஓடி வந்தால் பதிலுக்கு இவர்களும் ஓடிப்போகத்தான் வேண்டும், ஓடுவார்களா இவர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யா இனாமாக கொடுப்பதாக நான் சொல்லவில்லை. ஆனா நிபந்தனை இன்றி உதவுகிறது.

நீங்கள் ஒருவருக்கு பணம் கொடுக்கிறீகள் - அதிகம் தெரியாதவர் - வட்டி கேட்க கூடும், இல்லை ஒரு காணியை கேட்க கூடும், அல்லது உனது மகனை நான் சொல்லும் பெண்ணுக்கு முடித்துவை என கேட்க கூடும்.

இவை சாதாரண கொடுக்கல் வாங்கல்.

இன்னொருவர் கேட்கிறார். நண்பர். நிபந்தனை இன்றி கொடுக்கிறீகள். உங்களுக்கு ஓன்று என்றால் ஓடி வருவார் என நம்புகிறீர்கள். ஆனால் அதை நிபந்தனையாக போடவில்லை. இது ஒரு வகை கூட்டணி அமைத்தல். Alliance building. ரஸ்யா இலங்கை உறவு கிட்டதட்ட இப்படியானதே என்பது என் கருத்து.

இலங்கை மீதான அத்தனை ஐநா நடவடிக்கையையும் காத்து நின்றதும் இப்படித்தான்.

இந்தியா சொன்னதை ரஸ்யா கிளிபிள்ளை போல் கேட்டு, கஸ்மீர் போராளிகளை எதிர்பதில்லை.

இலங்கைக்கு என்று ரஸ்யா ஒரு சுயாதீன கொள்கையை வைத்துள்ளது.

14 minutes ago, satan said:

ரஷ்யா நேரடியாக கேட்க்காது இந்தியாமூலம் கேட்கவைக்கப்படலாம் தனக்கு வேண்டியதை. சோழியன் குடுமி சும்மா ஆடாது மூன்றாம் உலகப்போர் என்று மூண்டால் மொத்தமாக கேட்கும், அதற்கு அந்த உரிமை இருக்கிறது நீங்கள் சொல்வதை வைத்துப்பாத்தால், கேட்டுக்கேள்வி இல்லாமல் கூப்பிட்ட குரலுக்கு அவர்கள் ஓடி வந்தால் பதிலுக்கு இவர்களும் ஓடிப்போகத்தான் வேண்டும், ஓடுவார்களா இவர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் உண்மையான நண்பன் ரஷ்யா என்பது சிங்களவர்களுக்கு தெரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு எதிர்வு கூறலை சொல்கிறேன் சரி வருதா எண்டு பார்ப்போம்.

அண்மையில் ரஸ்ய எண்ணைக்கு உச்சவரம்பு விலையை மேற்கு விதித்து.

இன்று புட்டின் ஒரு ஆணை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த உச்ச வரம்பை அமல் செய்யும் எந்த நாட்டுக்கும் பெப்ரவரி 1 - ஜூலை 31 வரை ரஸ்ய எண்ணையை ஏற்றுமதி செய்ய முடியாது.

ஆனால் சில நாடுகளுக்கு இதில் இருந்து விசேட காரணங்களுக்காக விலக்கு அளிக்கும் அதிகாரம் புட்டினுக்கு உண்டு.

இலங்கை எண்ணை கையிருப்பு நிலமை மோசமாகினால் ரஸ்யா இந்த சலுகையை இலங்கைக்கு காட்டும் என எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

புடின் அடுத்த ஆண்டு முடிவு வரை உயிரோடு இருப்பாரா? இருந்தாலும் ரஷ்ய ஜனாதிபதியாக நீடிப்பாரா சார்?  இல்லை எனக்கொரு சந்தேகம், அதை நிறைவேற்றிக்கொள்வதற்காக கேட்கிறேன்! நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, satan said:

புடின் அடுத்த ஆண்டு முடிவு வரை உயிரோடு இருப்பாரா? இருந்தாலும் ரஷ்ய ஜனாதிபதியாக நீடிப்பாரா சார்?  இல்லை எனக்கொரு சந்தேகம், அதை நிறைவேற்றிக்கொள்வதற்காக கேட்கிறேன்! நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

சோழியை உருட்டி பார்த்தேன்…புட்டினு புதன் திசையாம் பிறகென்ன😂

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒருவருடம் பொறுத்திருக்க வேண்டுமே, உறுதி செய்வதற்கு!

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2022 at 22:35, goshan_che said:

அத்தோடு இப்படி உல்லாச பயணிகள் இலங்கை போவதால் ரஸ்யாவுக்கு அந்நிய செலாவணி இழப்பே. அதிக நன்மை இல்லை. 

ரஸ்யா எடுத்த விமானங்களை கூட லீஸ் முடிந்த பின் திருப்புவதில்லை இப்போ. ஆகவே விமானங்கள் பறக்க வேண்டும் என்று இலங்கைக்கு, அதுவும் மத்தளக்கு வர வேண்டிய தேவை இல்லை.

There is no such thing as a free lunch என்பது உண்மையே ஆகினும்,

இப்பொது ரஷ்யா செய்வதில், அதன் ஆழ்ந்த நலன் ஆனா பொருளாதார சங்கிலியை தக்கவைத்தல்.

எப்போதும் நட்டமாக  இராது என்று நினைக்கிறன். இதில் ஆயில் ரஸ்சியாவின், விமானம் ரஸ்சியாவின், விமானின் சம்பளம் ருஸ்சியாவே கொடுக்க வேண்டும். பயண சீட்டில் விமான சேவைக்கு வருமானம், ஒரு புள்ளியில் நிறுத்தி வைப்பதே பொருளாளதாரத்திற்கு மிகப் பங்கம், ஓரளவு நட்டத்துடன் இயங்குவதை விட.  

lease க்கு எடுத்த விமானங்களை திருப்பி அனுப்பாதத்தான் நோக்கம் , அதன் சொந்த விமானங்களுக்கு  spare parts  அல்லது மாற்றிடு. தடைகள் 5 - 10 வருட நீடிப்புக்கு சாத்தியம் இருக்கிறது.  

ரஷ்யாவிடம் இல்லாத வளங்கள், சிங்களத்திடம்  இல்லை.

இது வெளிப்படையாக சொல்லக் கூடியது. அனால், வேறு ஏதும் பின்னணி இருக்கிறதோ தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.