Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷியாவை துண்டாக்க முயற்சிக்கிறார்கள்” – ரஷிய அதிபர் புதின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷியாவை துண்டாக்க முயற்சிக்கிறார்கள்” – ரஷிய அதிபர் புதின்

1-5.jpg

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், இருநாட்டுப் படைகளும் சளைக்காமல் போரிட்டு வருகின்றன. அதே சமயம் இந்த போரில் இருதரப்பிலும் பெரிய அளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த சூழலில் புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, ரஷிய அதிபர் புதின் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அவர், உக்ரைன் மீதான போர் நடவடிக்கை கடினமானது ஆனால் தேவையான முடிவு என்று குறிப்பிட்டார். மேலும் அமைதியை ஏற்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் பொய் சொல்லி வருவதாக குற்றம் சாட்டிய புதின், உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷியா துண்டாக்க முயற்சிகள் நடப்பதாக தெரிவித்தார்.

https://akkinikkunchu.com/?p=234103

  • Replies 139
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கனுக்கு தன்னை விட பெரிசாய்/நிம்மதியாய் ஒண்டும் இருக்கக்கூடாது :cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அமெரிக்கனுக்கு தன்னை விட பெரிசாய்/நிம்மதியாய் ஒண்டும் இருக்கக்கூடாது :cool:

அமெரிக்காவின் வீழ்ச்சி என்பது மேற்கின் சித்தாந்தத்தின்+பொருளாதாரக் கொள்கைகளின் வீழ்ச்சி. 

அதனை நிலை நிறுத்துவதற்காக அவர்கள் எந்த உச்சத்திற்கும் செல்வார்கள. 

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷியா துண்டாக்க முயற்சிகள் நடப்பதாக தெரிவித்தார்.

போரை ஆரம்பித்தவர்  இப்படி  சொல்வது???

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் போரைத் துவங்கியது புட்டின் தான் என்றாலும், இதில் பெரிய நன்மைகள் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிற்குக் கிடத்திருக்கிறது. இது windfall என்பார்கள், சும்மா இருக்க மடியில் விழும் இலாபம்😂: நேட்டோவில் இராணுவ ஓர்மம் கொண்ட சுவீடன், பின்லாந்து இணைவு,  நோட்டோ நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம், 2014 இல் உருவாக்கிய ஈட்டிமுனை நேட்டோ படையை நிரந்தர நேட்டோ படையாக்கும் முயற்சிகளில் முன்னேற்றம்.

புட்டினுக்கு மேற்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறது, இவர் 90 களில் அமெரிக்கா உள்நுழைய வைத்த sleeper agent ஓ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது!😅

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

உடையப்போகிறது என்று அவரே உடைத்து  கொடுப்பார்  போலும்?🤣

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Justin said:

புட்டினுக்கு மேற்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறது, இவர் 90 களில் அமெரிக்கா உள்நுழைய வைத்த sleeper agent ஓ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது!😅

🤣 இது தெரியாமல் அந்த நல்ல மனுசன் போட்டு நக்கல் அடிச்சிட்டனே.

#சக மேற்கின்-அடிமை😂

  • கருத்துக்கள உறவுகள்

புட்டின் சொல்லுவது சரிதான்.. சோவியத்தை உடைத்தது போல... தற்போதைய ரஷ்சியாவையும் கிரிமியா.. டான்பாஸ்.. கேர்சன் உள்ளட்ட பிராந்தியங்களையும்..  உடைக்க.. மாநிலங்களின் ஒன்றியம் அமெரிக்கா முயற்சி செய்கிறது. முதலில் தனி நாட்டுத் தாகம் கொண்ட.. கலிபோர்னியாவில் இருந்து மாநிலங்களின் ஒன்றியமான அமெரிக்காவை உடைக்க ஏன் புட்டின் முயலக் கூடாது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

அமெரிக்காவை உடைப்ப‌து என்ப‌து ப‌க‌ல் க‌ன‌வாய் தான் இருக்கும்..............ஆண்டு நினைவில்லை அமெரிக்காவில் இருக்கும் ஏதோ ஒரு மானில‌ம் த‌ங்க‌ளை த‌னி நாடாக‌ பிரித்து விட‌க் கேட்டார்க‌ள்..........வெள்ளை மாளிகையில் இருந்து அறிக்கை விட்டார்க‌ள் அதோடு த‌னி நாடு கோரிக்கை கைவிட‌ப் ப‌ட்ட‌து.............உங்க‌ளுக்கு தானே ஆங்கில‌ம் ந‌ல்லா தெரியும் கூக்கில்ல‌ அடிச்சு பாருங்கோ இந்த‌ செய்தி ஏதோ ஒரு இணைய‌த்தில் இருந்தாவ‌து வ‌ரும்..................

இந்தியா போன்ற‌ நாட்டை சிம்பிலா உடைக்க‌லாம் அதுக்கு கூட‌ நேர‌ம் எடுக்காது , இது அமெரிக்கா..............

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

முதலில் தனி நாட்டுத் தாகம் கொண்ட.. கலிபோர்னியாவில் இருந்து மாநிலங்களின் ஒன்றியமான அமெரிக்காவை உடைக்க ஏன் புட்டின் முயலக் கூடாது. 

11 minutes ago, பையன்26 said:

அமெரிக்காவை உடைப்ப‌து என்ப‌து ப‌க‌ல் க‌ன‌வாய் தான் இருக்கும்..............ஆண்டு நினைவில்லை அமெரிக்காவில் இருக்கும் ஏதோ ஒரு மானில‌ம் த‌ங்க‌ளை த‌னி நாடாக‌ பிரித்து விட‌க் கேட்டார்க‌ள்..........வெள்ளை மாளிகையில் இருந்து அறிக்கை விட்டார்க‌ள் அதோடு த‌னி நாடு கோரிக்கை கைவிட‌ப் ப‌ட்ட‌து.............உங்க‌ளுக்கு தானே ஆங்கில‌ம் ந‌ல்லா தெரியும் கூக்கில்ல‌ அடிச்சு பாருங்கோ இந்த‌ செய்தி ஏதோ ஒரு இணைய‌த்தில் இருந்தாவ‌து வ‌ரும்..................

இந்தியா போன்ற‌ நாட்டை சிம்பிலா உடைக்க‌லாம் அதுக்கு கூட‌ நேர‌ம் எடுக்காது , இது அமெரிக்கா..............

அதி உத்தமர் மாண்புமிகு புட்டின் அவர்கள் நினைத்தால்,
அமெரிக்காவை…. சிதறு தேங்காய் மாதிரி, பல சிறு நாடுகளாக பிரிக்கலாம்.
ஆனால் அவர் இப்படியான கீழ்த்தரமான வேலைகளை செய்ய மாட்டார்.
எதிரிக்கும்… கருணை காட்டுபவரே சிறந்த அரசியல்வாதி. அவர் தான்… மாண்புமிகு புட்டின்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

அமெரிக்காவை உடைப்ப‌து என்ப‌து ப‌க‌ல் க‌ன‌வாய் தான் இருக்கும்..............ஆண்டு நினைவில்லை அமெரிக்காவில் இருக்கும் ஏதோ ஒரு மானில‌ம் த‌ங்க‌ளை த‌னி நாடாக‌ பிரித்து விட‌க் கேட்டார்க‌ள்..........வெள்ளை மாளிகையில் இருந்து அறிக்கை விட்டார்க‌ள் அதோடு த‌னி நாடு கோரிக்கை கைவிட‌ப் ப‌ட்ட‌து.............உங்க‌ளுக்கு தானே ஆங்கில‌ம் ந‌ல்லா தெரியும் கூக்கில்ல‌ அடிச்சு பாருங்கோ இந்த‌ செய்தி ஏதோ ஒரு இணைய‌த்தில் இருந்தாவ‌து வ‌ரும்..................

இந்தியா போன்ற‌ நாட்டை சிம்பிலா உடைக்க‌லாம் அதுக்கு கூட‌ நேர‌ம் எடுக்காது , இது அமெரிக்கா..............

சொந்த ஒன்றியத்துக்குள்ளேயே பிரிந்து செல்ல சுதந்திரம் அளிக்காத அமெரிக்கா.. சனநாயகம் பேசுவதும்.. அடுத்த நாடுகளை உடைப்பதும்.. ஒட்டுமொத்த ஏகாதபத்தியத்தின் வடிவமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

அதி உத்தமர் மாண்புமிகு புட்டின் அவர்கள் நினைத்தால்,
அமெரிக்காவை சிதறு தேங்காய் மாதிரி, பல சிறு நாடுகளாக பிரிக்கலாம்.
ஆனால் அவர் இப்படியான கீழ்த்தரமான வேலைகளை செய்ய மாட்டார்.
எதிரிக்கும்… கருணை காட்டுபவரே சிறந்த அரசியல்வாதி. அவர் தான்… மாண்புமிகு புட்டின்.

நீங்க‌ள் சொல்லுவ‌து ஒரு வித‌ம் ச‌ரி என்று ப‌டுது.............ர‌ஸ்சியாவின் உள‌வுத்துறை நினைச்சா எதையும் செய்து முடிப்பாங்க‌ள் புட்டினும் அதே இட‌த்தில் இருந்து தானே வ‌ந்த‌வ‌ர்...........ஆனால் அமெரிக்காவை எடுத்தோம் க‌வுட்டோம் என்று உடைக்க‌ ஏலாது த‌மிழ் சிறி அண்ணா.............அமெரிக்கா வ‌ர‌லாறு ந‌ல்லா ப‌டிச்ச‌வ‌ர்க‌ளுக்கு தெரியும்.............வெள்ளை மாளிகையின் கையில் தான் எல்லாமே இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nedukkalapoovan said:

சொந்த ஒன்றியத்துக்குள்ளேயே பிரிந்து செல்ல சுதந்திரம் அளிக்காத அமெரிக்கா.. சனநாயகம் பேசுவதும்.. அடுத்த நாடுகளை உடைப்பதும்.. ஒட்டுமொத்த ஏகாதபத்தியத்தின் வடிவமாகும். 

அமெரிக்காவின் ந‌ரித்த‌ன‌ம் உல‌க‌ம் அறிந்த‌ ஒன்று

நான் அமெரிக்கா விளையாட்டுக்க‌ளை அதிக‌ம் விரும்பி பாப்பேன் அமெரிக்கா அர‌சிய‌லை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது

அமெரிக்கா பாக்கிஸ்தானுக்கு ப‌ல‌ உத‌விக‌ள் செய்து பாக்கிஸ்தானை த‌ன் கைக்குள் வைத்து இருக்க‌ என்ன‌ கார‌ண‌ம்...........உந்த‌ நாச‌மாய் போன‌ இந்தியாவின் வ‌யித்தில் பீதியை உண்டாக்க‌...............பாக்கிஸ்தானுக்கு அணுகுண்டு அமெரிக்கா தான் கொடுத்த‌து என்று ர‌க‌சிய‌ம் வெளியில் வ‌ருது...........உண்மை பொய் ஆண்ட‌வ‌ருக்கு தான் தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்

 ஏனைய அமெரிக்க மாநிலங்கள் போல் அல்லாமல், கலிபோர்னியாவின் மாநிலக் கொடியில் கலிபோர்னியாக் குடியரசென்று (California Republic) இருக்கிறது. இந்தக் கொடியின் பின்னால் ஒரு தனி நாட்டுக் கிளர்ச்சி இருந்தாலும் நவீன கலிபோர்னியாவில் பிரிந்து போதல் என்பது ஒரு ஜோக் தற்போது.

ஆனால் "The Onion" பேப்பரில் வரும் விடயங்களையே நம்பும் அளவு புத்திசாலிகள் இருக்கும் உலகில், நெடுக்கர் கலிபோர்னிய சுதந்திரக் கோரிக்கையை சீரியசாக நம்புவது ஆச்சரியமில்லை!😂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

நான் அமெரிக்கா விளையாட்டுக்க‌ளை அதிக‌ம் விரும்பி பாப்பேன் அமெரிக்கா அர‌சிய‌லை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது

பையா… அமெரிக்கன் அரசியலை விட…
ஶ்ரீலங்கன் பிக்குகளின் அரசியல் எவ்வளவோ திறம். 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nedukkalapoovan said:

சொந்த ஒன்றியத்துக்குள்ளேயே பிரிந்து செல்ல சுதந்திரம் அளிக்காத அமெரிக்கா.. சனநாயகம் பேசுவதும்.. அடுத்த நாடுகளை உடைப்பதும்.. ஒட்டுமொத்த ஏகாதபத்தியத்தின் வடிவமாகும். 

எங்க‌ளுக்கு த‌மிழீழ‌ம் கிடைக்க‌னும் என்றால் அமெரிக்காவின் உத‌வி க‌ண்டிப்பாய் தேவை.............ஜ‌னாவில் எங்க‌ளின் நாடு அங்கிக‌ரிக்க‌ ப‌ட‌னும்................ஜ‌னா யாரின் கைக்குள் இருக்கு என்று உங்க‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும்..............

சீனா ர‌ஸ்சியாவோட‌ சேர்ந்திட்டான் அமெரிக்க‌னை எதிர்க்க‌............இந்த‌ வ‌ருட‌ம் ப‌ல‌ சித்து விளையாட்டுக்க‌ள் ந‌ட‌க்கும் ஏதும் ந‌ம‌க்கு சாத‌க‌ம் ஆக்க‌ முடிஞ்சா அதை ச‌ரியா செய்து முடிக்க‌லாம் 

1 minute ago, தமிழ் சிறி said:

பையா… அமெரிக்கன் அரசியலை விட…
ஶ்ரீலங்கன் பிக்குகளின் அரசியல் எவ்வளவோ திறம். 😂🤣

2012 என்று நினைக்கிறேன் என‌து த‌மிழ் நாட்டு ந‌ண்ப‌ன் சொன்னான் ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌ அழிப்பை அமெரிக்கா ம‌க்க‌ளுக்கு தெரிய‌ப் ப‌டுத்த‌னும் அப்ப‌டி செய்தா ப‌ல‌ன் கிடைக்கும் என்று அவ‌ன்ட‌ ந‌ம்பிக்கை..............புலிக‌ள் மீதான‌ த‌டைய‌ அமெரிக்கா எப்ப‌ நீக்குதோ அப்ப‌ தான் அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு நாம் கால‌டி எடுத்து வைக்க‌லாம்............த‌டை இருக்கும் நாட்டில் நாம் த‌லைகீழா நின்றாலும் ஒன்னையும் சாதிக்க‌ முடியாது.............உல‌க‌ம் எப்ப‌வும் ஒரே மாதிரி இய‌ங்காது...........யாழில் அமெரிக்காவை க‌ழுவி ஊத்தின‌ நாங்க‌ளே அமெரிக்காவை புக‌ழ் பாட‌க் கூடும் பாப்போம் 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பையன்26 said:

எங்க‌ளுக்கு த‌மிழீழ‌ம் கிடைக்க‌னும் என்றால் அமெரிக்காவின் உத‌வி க‌ண்டிப்பாய் தேவை.............ஜ‌னாவில் எங்க‌ளின் நாடு அங்கிக‌ரிக்க‌ ப‌ட‌னும்................ஜ‌னா யாரின் கைக்குள் இருக்கு என்று உங்க‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும்..............

இது வெறும் கனவாகவே இருக்கும். அமெரிக்கா ஒருபோதும் தமிழீழம் எடுத்துத் தர உதவாது. அமெரிக்கா ரஷ்சியா போல் அல்ல. ரஷ்சியா நம்பினவனை கைவிடாது. அமெரிக்கா அப்படியல்ல.. பாவிச்சிட்டு தூக்கி கடாசிடும்.

இதனால் தான்.. சுனாமி அனர்த்தத்தின் போது கூட தாயக மண்ணில் அமெரிக்கனை தலைவர் கால்பதிக்க விடவில்லை. 

அதேபோல் எமது போராட்டம் முழுமைக்கும் பயங்கரவாதம் என்று உச்சரித்ததும் அன்றி அதனை எல்லா வகையிலும் அழிக்க உதவியதும் இதே அமெரிக்கா தான். அமெரிக்கா எப்பவுமே பலமான சக்திகளை தான் கைக்குள் வைச்சிருக்க விரும்பும். அப்ப தான் தனக்கு வேலை நடக்கும் என்று. அந்த வகையில் அது சிங்கள அரசை ஆதரித்து நிற்குமே அன்றி தமிழர்களை முழுமையாக நம்பாது ஆதரிக்காது. தனக்கு எதிரான சிந்தனையோட்டமுள்ள சிங்களத் தலைவர்களை அகற்றி தனக்கு சாதகமான ஆக்களை வைப்பது இலகு.. தமிழீழம் பெற்றுக்கொடுப்பதை விட என்று ஆதாயம் பார்க்கும் சுத்தச் சுயநல நாடு அமெரிக்கா. அதனால் தான் இணைத்தலைமை நாடுகளில் அது அங்கத்துவம் பெற்றிருந்தும்.. புலிகளை அந்த நாட்டில் பேச்சுக்கு கூட வர அனுமதிக்கவில்லை. தடைசெய்யப்பட்ட தலிபான்களோடு பேசிய அமெரிக்கா.. புலிகளோடு கடைசி வரைப் பேசவே இல்லை. இப்படிப்பட்ட அமெரிக்கா.. தமிழீழம் பெற்றுத்தரும்..???! வெறும் கனவு மட்டுமே. 

27 minutes ago, பையன்26 said:

புலிக‌ள் மீதான‌ த‌டைய‌ அமெரிக்கா எப்ப‌ நீக்குதோ அப்ப‌ தான் அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு நாம் கால‌டி எடுத்து வைக்க‌லாம்............த‌டை இருக்கும் நாட்டில் நாம் த‌லைகீழா நின்றாலும் ஒன்னையும் சாதிக்க‌ முடியாது............

அமெரிக்காவுக்கு எதிராக புலிகளோ.. தமிழர்களோ என்ன செய்தார்கள்.. தடை போட.. நீடிக்க..?! இந்தக் கேள்வியை நீங்கள் எப்போதாவது உங்களிடமே கேட்டதுண்டா..??! தமிழர்களின் போராட்டம் பற்றி அமெரிக்கா ஒன்றுமே அறியாத அப்பாவியா..??! அமெரிக்கனை நம்புவது கொடிய கழுகை நம்புவதை விட மோசமானதாகவே இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அமெரிக்காவை உடைப்ப‌து என்ப‌து ப‌க‌ல் க‌ன‌வாய் தான் இருக்கும்..............ஆண்டு நினைவில்லை அமெரிக்காவில் இருக்கும் ஏதோ ஒரு மானில‌ம் த‌ங்க‌ளை த‌னி நாடாக‌ பிரித்து விட‌க் கேட்டார்க‌ள்..........வெள்ளை மாளிகையில் இருந்து அறிக்கை விட்டார்க‌ள் அதோடு த‌னி நாடு கோரிக்கை கைவிட‌ப் ப‌ட்ட‌து.............உங்க‌ளுக்கு தானே ஆங்கில‌ம் ந‌ல்லா தெரியும் கூக்கில்ல‌ அடிச்சு பாருங்கோ இந்த‌ செய்தி ஏதோ ஒரு இணைய‌த்தில் இருந்தாவ‌து வ‌ரும்..................

இந்தியா போன்ற‌ நாட்டை சிம்பிலா உடைக்க‌லாம் அதுக்கு கூட‌ நேர‌ம் எடுக்காது , இது அமெரிக்கா..............

🤣

அமெரிக்காவும் பிரிட்டனின் கட்டுப்பாட்டிலிருந்து உடைத்து தன்னை தனி நாடாகப் பிரகடனப்படுத்திக்கொண்டதுதான். மக்கள் குழுக்கள், இனங்களுக்கிடையில் அதிகரித்துச் செல்லும் வேறுபாடும், சமமின்மையும், தங்கள் தனித்விதுவத்தைப் பேணும் அவாவும் பிரிவினையைஊக்குவித்துக்கொண்டே செல்லும். இது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே பொதுவானது. 

49 minutes ago, Justin said:

 ஏனைய அமெரிக்க மாநிலங்கள் போல் அல்லாமல், கலிபோர்னியாவின் மாநிலக் கொடியில் கலிபோர்னியாக் குடியரசென்று (California Republic) இருக்கிறது. இந்தக் கொடியின் பின்னால் ஒரு தனி நாட்டுக் கிளர்ச்சி இருந்தாலும் நவீன கலிபோர்னியாவில் பிரிந்து போதல் என்பது ஒரு ஜோக் தற்போது.

ஆனால் "The Onion" பேப்பரில் வரும் விடயங்களையே நம்பும் அளவு புத்திசாலிகள் இருக்கும் உலகில், நெடுக்கர் கலிபோர்னிய சுதந்திரக் கோரிக்கையை சீரியசாக நம்புவது ஆச்சரியமில்லை!😂

எல்லாமே மாற்றத்திற்கு உட்படும் என்பதுதான் நியதி. 

அமெரிக்காவின் உடைவு என்பது நம் கண்களின்வ்முன்னால் நடக்காமல் இருக்கலாம். ஆனால் அசாத்தியமானது அல்ல. 

ரோம சாம்ராஜ்ஜியமும் உடைந்துதான் போனது. கிரேக்க சாம்ராஜியமும் காணாமல் போனதும் வரலாறு. 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nedukkalapoovan said:

இது வெறும் கனவாகவே இருக்கும். அமெரிக்கா ஒருபோதும் தமிழீழம் எடுத்துத் தர உதவாது. அமெரிக்கா ரஷ்சியா போல் அல்ல. ரஷ்சியா நம்பினவனை கைவிடாது. அமெரிக்கா அப்படியல்ல.. பாவிச்சிட்டு தூக்கி கடாசிடும்.

இதனால் தான்.. சுனாமி அனர்த்தத்தின் போது கூட தாயக மண்ணில் அமெரிக்கனை தலைவர் கால்பதிக்க விடவில்லை. 

அதேபோல் எமது போராட்டம் முழுமைக்கும் பயங்கரவாதம் என்று உச்சரித்ததும் அன்றி அதனை எல்லா வகையிலும் அழிக்க உதவியதும் இதே அமெரிக்கா தான். அமெரிக்கா எப்பவுமே பலமான சக்திகளை தான் கைக்குள் வைச்சிருக்க விரும்பும். அப்ப தான் தனக்கு வேலை நடக்கும் என்று. அந்த வகையில் அது சிங்கள அரசை ஆதரித்து நிற்குமே அன்றி தமிழர்களை முழுமையாக நம்பாது ஆதரிக்காது. தனக்கு எதிரான சிந்தனையோட்டமுள்ள சிங்களத் தலைவர்களை அகற்றி தனக்கு சாதகமான ஆக்களை வைப்பது இலகு.. தமிழீழம் பெற்றுக்கொடுப்பதை விட என்று ஆதாயம் பார்க்கும் சுத்தச் சுயநல நாடு அமெரிக்கா. அதனால் தான் இணைத்தலைமை நாடுகளில் அது அங்கத்துவம் பெற்றிருந்தும்.. புலிகளை அந்த நாட்டில் பேச்சுக்கு கூட வர அனுமதிக்கவில்லை. தடைசெய்யப்பட்ட தலிபான்களோடு பேசிய அமெரிக்கா.. புலிகளோடு கடைசி வரைப் பேசவே இல்லை. இப்படிப்பட்ட அமெரிக்கா.. தமிழீழம் பெற்றுத்தரும்..???! வெறும் கனவு மட்டுமே. 

அமெரிக்காவுக்கு எதிராக புலிகளோ.. தமிழர்களோ என்ன செய்தார்கள்.. தடை போட.. நீடிக்க..?! இந்தக் கேள்வியை நீங்கள் எப்போதாவது உங்களிடமே கேட்டதுண்டா..??! தமிழர்களின் போராட்டம் பற்றி அமெரிக்கா ஒன்றுமே அறியாத அப்பாவியா..??! அமெரிக்கனை நம்புவது கொடிய கழுகை நம்புவதை விட மோசமானதாகவே இருக்கும். 

ராஜிவ் கொலைக்கு பிற‌க்கு தானே 
புலிக‌ள் மீதான‌ த‌டையை அமெரிக்கா போட்ட‌து ?

ராஜீவ் மீது கைவைத்தால் ஒட்டுமொத்த‌ உல‌க‌ ம‌ட்ட‌த்தில் த‌லைகுனிவை ஏற்ப‌டுத்தும் என்று எம்ம‌வ‌ர்க‌ளுக்கு தெரிந்து இருக்க‌ வில்லையா

ச‌ரி ராஜிவ்வ‌ போடுவில் ஏதும் வேறு மானில‌த்தில் வைச்சு போட்டு இருந்தா இந்திரா காந்தி கொலைக்கு ராஜுவ் காந்தி டெல்லியில் செய்த‌ அட்டூழிய‌த்துக்கு இந்திய‌ ம‌க்க‌ள் த‌ண்ட‌னை கொடுத்தார்க‌ள் என்று வ‌ந்து இருக்கும். ,

ராஜிவ் காந்தி ஈழ‌த்தில் செய்த‌துக‌ள் ச‌ரி என்று நான் அந்த‌ கொடுங் கோல‌னுக்கு ஜால்ரா அடிக்க‌ வில்லை...............எம்ம‌வ‌ர்க‌ள் த‌ப்புக்கு மேல‌ த‌ப்பு செய்த‌ ப‌டியால் தான் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வ‌ர‌ யாரும் எட்டி பார்க்க‌ வில்லை..............
2005ம் ஆண்டு ல‌க்ஸ்ம‌ன் க‌திர் காமர‌ போட்டு த‌ள்ளின‌ ப‌டியால் தான் ஜ‌ரோப்பா எம்ம‌வ‌ர்க‌ளுக்கு த‌டை விதிச்ச‌வை.............

வொஸ்னியா நாட்டுக்கு யார் சுத‌ந்திர‌ம் வேண்டி கொடுத்தார்க‌ள் என்ற‌ வ‌ர‌லாற்றை ப‌டியுங்கோ ஏன் அப்ப‌டி எங்க‌ளுக்கு உத‌வி க‌ர‌ம் நீட்ட‌ ஒரு நாடும் முன்ன‌ வ‌ர‌ வில்லை என்று தெரிய‌ வ‌ரும்.............

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

ராஜிவ் கொலைக்கு பிற‌க்கு தானே 
புலிக‌ள் மீதான‌ த‌டையை அமெரிக்கா போட்ட‌து ?

ராஜீவுக்கு அமெரிக்காவுக்கும் என்ன தொடர்ப்பு..??!

அப்படி என்றால்.. காந்தியை கொன்றவர்களுக்கு தடை போட்டாச்சா.. இந்திரா காந்தியை கொன்றவர்களுக்கு தடைபோட்டாச்சா.. பெனாசிர் பூட்டோவை கொன்றவர்களுக்கு தடை போட்டாச்சா..

கடாபியை.. சதாம் குசைனை கொன்றவர்களுக்கு தடை போட்டாச்சா...??!

அதேன் ராஜிவ் கொலைக்கு அமெரிக்கா தடை போடனும்.. அப்ப ராஜீவ் கொலைக்கும் அமெரிக்கா உள்ளிட்டவர்களின் தடைக்கும் ஏதோ தொடர்பிருக்கு.. அப்ப ராஜீவை புலிகள் தான் கொன்றார்களா.. அல்லது ராஜீவ் கொலையை வைச்சு.. சதிகாரர்கள்.. ஆதாயம் தேடிக் கொண்டார்களா.. அதில் அமெரிக்கா முதன்மையா..?! ஏன் இவ்வாறான கேள்விகளை கேட்காமல்.. எம்மவர்கள் மீதே எமக்கு சந்தேகத்தை ஊட்டிறான் பாருங்கள்.. அங்க தான் அமெரிக்கன் வென்று கொண்டிருக்கிறான்.. அவன் ஏகாதபத்தியக் கொள்கையில். 

சீக்கிய‌ர்க‌ள்  த‌மிழ் நாட்டில் இருக்கும் அடி வ‌ருடி கொள்ளை திராவிட‌ கூட்ட‌ம் போல் இல்லை.........ப‌ஞ்சாப் மானில‌த்தோட‌ மோதினா என்ன‌ ந‌ட‌க்கும் என்று டெல்லியில் ஆள்ப‌வ‌ர்க‌ளுக்கு ந‌ங்கு தெரியும்............இப்ப‌ கூட‌ இந்திரா காந்திய‌ கொன்ற‌வ‌ங்க‌ளின் ப‌ட‌த்தை அவ‌ங்க‌ளின் கோயிலில் வைத்து கும்புடுறாங்க‌ள்...............மோடி கூட‌ ப‌ஞ்சாப்புக்கு போய் ப‌ய‌த்தில் ஓடி வ‌ந்த‌வ‌ர்

த‌னி நாட்டுக் கோரிக்கைய‌ கை விடுங்கோ இர‌ண்டு மானில‌மாய் பிரித்து த‌ருகிறேன் என்று ராஜிவ் எம்ம‌வ‌ர்க‌ளிட‌ம் சொன்னார் தானே.............அடைஞ்சா திராவிட‌ நாடு இல்லையேன் சுடு காடு என்று கோச‌ம் போட்ட‌ கொள்ளை கூட்ட‌த்தால் தான் எம‌க்கு த‌னி நாடு கிடைக்காம‌ போன‌து..............மேற்கு வங்காள முத‌ல்வ‌ர் என்ன‌ சொன்னார் வ‌ங்கிளாதேஸ்சுக்கு உங்க‌ட‌ ப‌டைய‌ அனுப்புறீங்க‌லா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று

ஒரு மொழி இர‌ண்டு நாடு..........அதே போல் ஒரு மொழி இர‌ண்டு நாட்டை அமைத்து கொடுப்ப‌தில் டெல்லிக்கு என்ன‌ சிக்க‌ல்

த‌மிழ‌ர்க‌ளின் எல்லா சாவ‌க்கேடுக்கும் திராவிட‌ம் தான் கார‌ண‌ம்...............
 
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, nedukkalapoovan said:

இது வெறும் கனவாகவே இருக்கும். அமெரிக்கா ஒருபோதும் தமிழீழம் எடுத்துத் தர உதவாது. அமெரிக்கா ரஷ்சியா போல் அல்ல. ரஷ்சியா நம்பினவனை கைவிடாது. அமெரிக்கா அப்படியல்ல.. பாவிச்சிட்டு தூக்கி கடாசிடும்.

இதனால் தான்.. சுனாமி அனர்த்தத்தின் போது கூட தாயக மண்ணில் அமெரிக்கனை தலைவர் கால்பதிக்க விடவில்லை. 

அதேபோல் எமது போராட்டம் முழுமைக்கும் பயங்கரவாதம் என்று உச்சரித்ததும் அன்றி அதனை எல்லா வகையிலும் அழிக்க உதவியதும் இதே அமெரிக்கா தான். அமெரிக்கா எப்பவுமே பலமான சக்திகளை தான் கைக்குள் வைச்சிருக்க விரும்பும். அப்ப தான் தனக்கு வேலை நடக்கும் என்று. அந்த வகையில் அது சிங்கள அரசை ஆதரித்து நிற்குமே அன்றி தமிழர்களை முழுமையாக நம்பாது ஆதரிக்காது. தனக்கு எதிரான சிந்தனையோட்டமுள்ள சிங்களத் தலைவர்களை அகற்றி தனக்கு சாதகமான ஆக்களை வைப்பது இலகு.. தமிழீழம் பெற்றுக்கொடுப்பதை விட என்று ஆதாயம் பார்க்கும் சுத்தச் சுயநல நாடு அமெரிக்கா. அதனால் தான் இணைத்தலைமை நாடுகளில் அது அங்கத்துவம் பெற்றிருந்தும்.. புலிகளை அந்த நாட்டில் பேச்சுக்கு கூட வர அனுமதிக்கவில்லை. தடைசெய்யப்பட்ட தலிபான்களோடு பேசிய அமெரிக்கா.. புலிகளோடு கடைசி வரைப் பேசவே இல்லை. இப்படிப்பட்ட அமெரிக்கா.. தமிழீழம் பெற்றுத்தரும்..???! வெறும் கனவு மட்டுமே. 

அமெரிக்காவுக்கு எதிராக புலிகளோ.. தமிழர்களோ என்ன செய்தார்கள்.. தடை போட.. நீடிக்க..?! இந்தக் கேள்வியை நீங்கள் எப்போதாவது உங்களிடமே கேட்டதுண்டா..??! தமிழர்களின் போராட்டம் பற்றி அமெரிக்கா ஒன்றுமே அறியாத அப்பாவியா..??! அமெரிக்கனை நம்புவது கொடிய கழுகை நம்புவதை விட மோசமானதாகவே இருக்கும். 

ர‌ஸ்சியா இந்தியாவின் எதிர்ப்பை மீறி த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ன்மை செய்ய‌ப் போவ‌து கிடையாது............இந்த‌ போர் சூழ‌லில் கூட‌ இந்தியா ர‌ஸ்சியாவுக்கு பொருளாதார ரீதியில் ர‌ஸ்சியாவிடாம் இருந்து எரிபொருல் வாங்குது..............ப‌ல‌ கோடி கொண்ட‌ நாட்டுக்காக‌ புட்டின் சிறு தொகையை கொண்ட‌ குட்டி நாட்டை ஆத‌ரிப்பார் என்று அர‌சிய‌ல் புரித‌ல் உள்ள‌ குழ‌ந்தையிட‌ம் கேட்டால் கூட‌ இல்லை என்று தான் சொல்லும்.............ஒரு வேளை இந்தியா உடை ப‌ட்டால் நீங்க‌ள் சொல்லுவ‌து ந‌ட‌க்க‌ சிறு ச‌ர்ந்த‌ப்ப‌ம் உண்டு 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

த‌னி நாட்டுக் கோரிக்கைய‌ கை விடுங்கோ இர‌ண்டு மானில‌மாய் பிரித்து த‌ருகிறேன் என்று ராஜிவ் எம்ம‌வ‌ர்க‌ளிட‌ம் சொன்னார் தானே..

சொல்லிப் போட்டு தலைவரை தூக்கி உள்ள வைச்சது. உப்புச் சப்பில்லாத என்றுமே இணைக்க முடியாத வகையில்.. வடக்குக் கிழக்கு.. மாகாண சபையில் கையெழுத்துப் போட்டது. நீங்கள் இன்னும் நிறைய வாசிக்க வேண்டும்.. 1983 இல் இருந்து 90 வரை ஹிந்தியா செய்தவற்றை. அப்பதான் அவங்களும் அமெரிக்கனும் செய்த துரோகங்கள் தெரிய வரும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

🤣 இது தெரியாமல் அந்த நல்ல மனுசன் போட்டு நக்கல் அடிச்சிட்டனே.

நீங்களோ உண்மை தெரியாமல் அவரை நக்கல் அடிக்க, மற்றவர்கள் பலர் அவரை ஒரு ஹீரோவாக பார்த்து புகழ்பாட நல்ல பகிடி தான 😂

மேற்கு வங்காள முத‌ல்வ‌ர் என்ன‌ சொன்னார் வ‌ங்கிளாதேஸ்சுக்கு உங்க‌ட‌ ப‌டைய‌ அனுப்புறீங்க‌லா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று ]
இப்படியும் ஒன்று நடந்ததா?  தன‌து காவ‌ல்துறை - பொலிஸ்சை அனுப்பவா என்று கேட்ட மேற்கு வங்காள முத‌ல்வ‌ர் முட்டாளாக தானே இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ர‌ஸ்சியா இந்தியாவின் எதிர்ப்பை மீறி த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ன்மை செய்ய‌ப் போவ‌து கிடையாது

அமெரிக்கன் மட்டும்.. என்னவாம். இந்தா கப்பல் கொண்டு வாறன் என்றிட்டு.. முள்ளிவாய்க்காலில் அப்படியே வைச்சு காவு கொண்டுட்டானே. 

ரஷ்சியா ஒரு பரந்த தேசம். அவன் தேவையில்லாமல்.. தனது இராணுவ வளங்களை.. இதர பொருண்மிய வளங்களை தேசம் செய்யமாட்டான். அமெரிக்கன் அப்படியல்ல. அவனுக்கு அடுத்தவனிடம் இருந்து சுரண்டிக்கிட்டால் தான் வாழ்வு. அதனால் அவன் எங்கும் நுழையவே முயல்வான். ரஷ்சியா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தான் செல்வாக்குச் செய்யும். குறிப்பாக சிரியாவை உதாரணமாகக் கொள்ளலாம்.

இந்த நேட்டோவை சிரியாவில் முழுமையாக தோற்கடித்தது ரஷ்சியாதான். அதுவும் துருக்கியோடு சேர்த்து. காரணம்.. அங்குள்ள ஒரெயொரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ரஷ்சிய கப்பற்படைதளம் காரணமாகவும்.. சிரிய - ரஷ்சிய நட்புறவு காரணமாகவும். சதாம் குசைன் உண்மையில் ஈரான் - ஈராக் போரில் அமெரிக்காவின் பக்கம் நின்றவர். கடைசியில்.. அமெரிக்கனே அவர் கழுத்தை அறுத்திட்டான். கடாபியும் ஒரு காலத்தில் மேற்குச் சார்ந்து நின்று ஏமாந்தவர். ஆனால் சிரியா அப்படியல்ல.. அது எப்பவுமே ரஷ்சியாவை நண்பனாகப் பார்த்த நாடு. தனது மண்ணில் அதற்கு தளமமைக்கக் கொடுத்து இன்று வரை இஸ்ரேல்.. மேற்கு என்று அடிவாங்கிக் கொண்டிருக்கும் நாடு. இருந்தாலும் ரஷ்சியாவின் ஆதரவால்.. நேட்டோ.. மற்றும் இஸ்ரேலின் அனைத்து நோக்கங்களையும் சிதறடித்து நிமிர்ந்து நிற்கும் நாடு. 

ஈழப் போராட்டத்தின் ஆரம்பம் போன திசை சரியானது. ஆனால் பின்னர் மேற்குலகையும் அமெரிக்காவையும் மட்டும் நேச சக்தியாகக் கருத முற்பட்டதன் விளைவு.. பேரழிவு. எம்மவர்கள் செய்த தவறு.. மேற்கு மற்றும் ஹிந்தியாவை சார்ந்து மட்டும் நின்றமை அல்லது அவர்களுக்கு மட்டும் உண்மையாக இருக்க முனைந்தமை. அதனால் தான் இலகுவாக இவர்களால் கூட்டுச் சேர்ந்து அழிக்கப்பட்டார்கள். எம்மவர்கள் மேற்கை சாரக் காரணம்.. புலம்பெயர் வாழ்வும்.. பொருண்மியமும்.. அதில் போராட்டத்திற்கான பொருண்மியமும் அடங்கும். அதுவே அவர்களுக்கு அழிவாகவும் அமைந்தது. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.