Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் இருந்து கொழும்புக்கு மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இருந்து கொழும்புக்கு மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில்!

யாழில் இருந்து கொழும்புக்கு மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில்!

கொழும்பில் இருந்து வடக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்படவுள்ள நிலையில் , யாழ்ப்பாணம் – கொழும்பு பேருந்து சேவைக்காக மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வட மாகாண வீதி பயணிகள்போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், கொழும்பு யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை, வவுனியா அனுராதபுரம் பாதை திருத்த வேலை காரணமாக குறைந்தது ஆறு மாதங்களுக்கு புகையிரத சேவையானது இடைநிறுத்தப்படுகின்றது .

அதனால் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ,தேசிய போக்குவரத்து ஆணைக்குழு புகையிரத திணைக்களத்தினருடன் இணைந்து சில மாற்று நடவடிக்கை களை எடுத்திருக்கின்றோம்.

அந்த வகையில் குறிப்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை, புகையிரத திணைக்களம், வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையுடன் இணைந்து என்ன மாற்றங்களை செய்யலாம் என்பதை தீர்மானித்து மூன்று வகையான தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம்.

1. யாழ்ப்பாணத்திலிருந்து செல்கின்ற யாழ் ராணி தற்பொழுது முறிகண்டி வரை பயணிக்கின்றது வவுனியா வரை செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.
வவுனியாவில் இருந்து அனுராதபுரம் சென்று புகையிரதத்தில் கொழும்பு செல்ல விரும்புவோருக்காக வவுனியா அனுராதபுரத்திற்கு 20 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபட உள்ளன.

2. தனியார் போக்குவரத்து சேவை மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் அந்தந்த மாவட்டத்தில் இருந்து நேரடியாக அனுராதபுரத்திற்கு சென்று அங்கே பயணிகளை செல்லக்கூடியவாறு ஒழுங்கு செய்திருக்கின்றோம்.

நேரடியாக பேருந்துகளிலே கொழும்புக்கு செல்லக்கூடிய வாறான ஏற்பாடுகளும் செயற்படுகின்றது குறிப்பாக நேரடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பல குளிரூட்டப்பட்ட பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன.

தற்பொழுது 38 பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக கொழும்பிற்கு சேவையில் ஈடுபடுகின்றன. அவைகள் தங்களுக்கு ஏற்ற முற்பதிவுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அதை விட மேலதிகமாக 33 குளிரூட்டப்பட்ட பேருந்துகள் இருக்கின்றன. அந்த பேருந்துகளும் தற்போது கடந்த கால கொரோனா மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சேவைகள் ஈடுபட வில்லை. அந்த 33 பேருந்துகளையும் மீண்டும் சேவையில் ஈடுபடுமாறு அதனோடு தொடர்புடையவர்களை கோரியுள்ளோம்.

எனவே உயர்ந்த சேவை நிறுத்தப்பட்டாலும் பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவைகள் தடைப்படாது செயல்படுத்துவதற்கு முயற்சிக்கின்றோம் என தெரிவித்தார்,

https://athavannews.com/2023/1318522

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பொல்காவல - வவுனியா ரயில் பாதை திருத்தம் என நினைத்தேன்.

அனுராதபுரம்-வவுனியா 40 மைல் கூட இல்லை, அதை திருத்த 6 மாதம் முற்றாக சேவை தவிர்ப்பு🙄.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நானும் பொல்காவல - வவுனியா ரயில் பாதை திருத்தம் என நினைத்தேன்.

அனுராதபுரம்-வவுனியா 40 மைல் கூட இல்லை, அதை திருத்த 6 மாதம் முற்றாக சேவை தவிர்ப்பு🙄.

மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறுவார்கள், முற்றாக புனரமைப்பு செய்வார்கள் என நினைக்கிறேன். யாழில் இருந்து ஓமந்தை வரை புதிய பாதையில் விரைவாகவும் குலுக்கம் சத்தம் இல்லாது செல்லும் புகையிரதம் அப்பால் மெதுவாகவும் சத்தத்துடனும் பயணிப்பதாக நண்பர்கள் சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு - யாழ் புகையிரத சேவைகள் இடை நிறுத்தம்

By T. SARANYA

03 JAN, 2023 | 05:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத பாதை மீள்புனரைமைப்புக்காக கொழும்புக்கும் யாழ்பாணத்திற்கும் இடையிலான புகையிரத சேவை வியாழக்கிழமை (ஜன 05) முதல் எதிர்வரும் ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது.

பயணிகள் புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் மேலதிகமாக 33 அரச பஸ்களை சேவையில் ஈடுப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

புகையிரத பாதை புனரமைப்புக்காக முதல் கட்டமாக ஐந்து மாத காலத்திற்கு கொழும்புக்கும்,யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான புகையிரத சேவையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புனரமைப்பு பணிகளை வெகுவிரைவில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்தது.

புகையிரத சேவையாளர்கள் 500 பேர் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றதால் புகையிரத சேவை தற்போது ஆளணி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.

சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என இலங்கை புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/144871

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஏராளன் said:

மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறுவார்கள், முற்றாக புனரமைப்பு செய்வார்கள் என நினைக்கிறேன். யாழில் இருந்து ஓமந்தை வரை புதிய பாதையில் விரைவாகவும் குலுக்கம் சத்தம் இல்லாது செல்லும் புகையிரதம் அப்பால் மெதுவாகவும் சத்தத்துடனும் பயணிப்பதாக நண்பர்கள் சொல்வார்கள்.

ஓம் ஆனால் இந்த பிரச்சனை மஹோ-ஓமந்தை இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

குறிப்பாக நேரடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பல குளிரூட்டப்பட்ட பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன.

இவற்றில் எத்தனை ஒழுங்காக  பத்திரமாக கொழுப்புபோய்ச்சேரும்?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறுவார்கள், முற்றாக புனரமைப்பு செய்வார்கள் என நினைக்கிறேன். யாழில் இருந்து ஓமந்தை வரை புதிய பாதையில் விரைவாகவும் குலுக்கம் சத்தம் இல்லாது செல்லும் புகையிரதம் அப்பால் மெதுவாகவும் சத்தத்துடனும் பயணிப்பதாக நண்பர்கள் சொல்வார்கள்.

"யாழில் இருந்து ஓமந்தை வரை புதிய பாதையில் விரைவாகவும் குலுக்கம் சத்தம் இல்லாது செல்லும் புகையிரதம்" உண்மை!!  நான் ஆகஸ்ட் மாதம் முழுவதும் அங்கே ஊரில் தான் இருந்தேன் கொழும்பு - யாழ் வேக ரெயிலில் 5 தடவைகள் பயணித்திருப்பேன். திருப்தியான, சௌகரியமான பயணம். இருக்கைகளை 180 பாகை கோணத்தில் சுழற்றி அமரலாம். Mobile Data இருந்தால் தங்குதடையின்றி YouTube, Netflix, WhatsApp வசதிகளோடு 7 மணி நேர பயணம் (Jaffna - Mt.Laviniya) 3,200 Rs/= 

Train Canteen offers - Fish Bun (மாலுப்பாண்), Nescafe Rs/=250 மட்டில் வரும் 

நான் கவனித்த சில விடயங்கள் 
டிக்கெட் பரிசோதகர் இன்னும் அதே பழைய காக்கி யூனிபோர்ம் தான். 🙄
ட்ரெயினில் ஐரோப்பிய நாட்டில் இருந்து வரும் புலம்பெயர் உறவுகள் நிறைய இருப்பார்கள்.
இவர்களில் அநேக பெண்கள்/ஆண்கள் இப்போது கை,கால், தோல் பகுதிகளில் விதம் விதமாய் பச்சை குத்தி இருக்கிறார்கள். 😜
டாய்லெட் வசதிகள் குறை கூறும் அளவுக்கு இல்லை. நாற்றம், குமட்டல் வராமல் சுத்தமாகவே இருக்கிறது. 😲
உங்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் மட்டுமே பயணம் செய்யலாம். (சோழிகள் குறைவு)
உண்மையில் சொல்லப்போனால் நான் பயணம் செய்த ஒருசில (Airlines)விமானங்களை விட வசதியான பயணம். 🤭
  
Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

நானும் பொல்காவல - வவுனியா ரயில் பாதை திருத்தம் என நினைத்தேன்.

அனுராதபுரம்-வவுனியா 40 மைல் கூட இல்லை, அதை திருத்த 6 மாதம் முற்றாக சேவை தவிர்ப்பு🙄.

ஊழியர் குறைப்பையும் கவனத்தில் கொள்ளவும். இருபகுதி வேலைக்கும். திருத்தம், புகையிரத இயக்கம். ஆட்களை புதிதாக எடுத்து பயிற்றுவிக்க! ஆறு மாதம் காணாது, எத்தனை விபத்துக்கள் நேரப்போகுதோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

"யாழில் இருந்து ஓமந்தை வரை புதிய பாதையில் விரைவாகவும் குலுக்கம் சத்தம் இல்லாது செல்லும் புகையிரதம்" உண்மை!!  நான் ஆகஸ்ட் மாதம் முழுவதும் அங்கே ஊரில் தான் இருந்தேன் கொழும்பு - யாழ் வேக ரெயிலில் 5 தடவைகள் பயணித்திருப்பேன். திருப்தியான, சௌகரியமான பயணம். இருக்கைகளை 180 பாகை கோணத்தில் சுழற்றி அமரலாம். Mobile Data இருந்தால் தங்குதடையின்றி YouTube, Netflix, WhatsApp வசதிகளோடு ஐந்தரை மணிநேர பயணம்  (Jaffna - Mt.Laviniya) 3,200 Rs/= 

Train Canteen offers - Fish Bun (மாலுப்பாண்), Nescafe Rs/=250 மட்டில் வரும் 

நான் கவனித்த சில விடயங்கள் 
டிக்கெட் பரிசோதகர் இன்னும் அதே பழைய காக்கி யூனிபோர்ம் தான். 🙄
ட்ரெயினில் ஐரோப்பிய நாட்டில் இருந்து வரும் புலம்பெயர் உறவுகள் நிறைய இருப்பார்கள்.
இவர்களில் அநேக பெண்கள்/ஆண்கள் இப்போது கை,கால், தோல் பகுதிகளில் விதம் விதமாய் பச்சை குத்தி இருக்கிறார்கள். 😜
டாய்லெட் வசதிகள் குறை கூறும் அளவுக்கு இல்லை. நாற்றம், குமட்டல் வராமல் சுத்தமாகவே இருக்கிறது. 😲
உங்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் மட்டுமே பயணம் செய்யலாம். (சோழிகள் குறைவு)
உண்மையில் சொல்லப்போனால் நான் பயணம் செய்த ஒருசில (Airlines)விமானங்களை விட வசதியான பயணம். 

தகவல்களுக்கு நன்றி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

"யாழில் இருந்து ஓமந்தை வரை புதிய பாதையில் விரைவாகவும் குலுக்கம் சத்தம் இல்லாது செல்லும் புகையிரதம்" உண்மை!!  நான் ஆகஸ்ட் மாதம் முழுவதும் அங்கே ஊரில் தான் இருந்தேன் கொழும்பு - யாழ் வேக ரெயிலில் 5 தடவைகள் பயணித்திருப்பேன். திருப்தியான, சௌகரியமான பயணம். இருக்கைகளை 180 பாகை கோணத்தில் சுழற்றி அமரலாம். Mobile Data இருந்தால் தங்குதடையின்றி YouTube, Netflix, WhatsApp வசதிகளோடு ஐந்தரை மணிநேர பயணம்  (Jaffna - Mt.Laviniya) 3,200 Rs/= 

Train Canteen offers - Fish Bun (மாலுப்பாண்), Nescafe Rs/=250 மட்டில் வரும் 

நான் கவனித்த சில விடயங்கள் 
டிக்கெட் பரிசோதகர் இன்னும் அதே பழைய காக்கி யூனிபோர்ம் தான். 🙄
ட்ரெயினில் ஐரோப்பிய நாட்டில் இருந்து வரும் புலம்பெயர் உறவுகள் நிறைய இருப்பார்கள்.
இவர்களில் அநேக பெண்கள்/ஆண்கள் இப்போது கை,கால், தோல் பகுதிகளில் விதம் விதமாய் பச்சை குத்தி இருக்கிறார்கள். 😜
டாய்லெட் வசதிகள் குறை கூறும் அளவுக்கு இல்லை. நாற்றம், குமட்டல் வராமல் சுத்தமாகவே இருக்கிறது. 😲
உங்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் மட்டுமே பயணம் செய்யலாம். (சோழிகள் குறைவு)
உண்மையில் சொல்லப்போனால் நான் பயணம் செய்த ஒருசில (Airlines)விமானங்களை விட வசதியான பயணம். 🤭
  
நன்றி சசி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

சசி 2017 இல் இந்த புகையிரதத்தில் பயணிக்க இரு தடவைகள் முயற்சி செய்தும் முடியவில்லை.

கூடுதலாக இராணுவத்தினர் தான் பயணம் செய்வதாக சொன்னார்கள்.

உண்மை பொய் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

படிக்கட்டில் பொறி பறக்குது 😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படிக்கட்டில் பொறி பறக்குது 😊

இவங்களின் ஓட்டத்தை நம்பி... பஸ்ஸில் எப்படி பயணிக்க முடியும். 🤭
காணொளியின்... கடைசியில், வாற "கிளைமாக்ஸ்" சூப்பர் தோழர்.  👍 😂
நடுவில் சும்மா சிவனே என்று இருந்த சிலைக்கு விட்டான் அடி பாருங்க, 
சிலை 4 மீற்றர் தள்ளி விழுந்தது.  

🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.