Jump to content

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – தனித்து களமிறங்குகின்றது தமிழரசு கட்சி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய குழுவின் தீர்மானத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் நடவடிக்கைக்காக குழு நியமனம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – தனித்து களமிறங்குகின்றது தமிழரசு கட்சி!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், ஹென்ரி மகேந்திரன், எம்.ஏ சுமந்திரன், ஆர்.ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டமைப்பிற்கு வெளியிலுள்ள தமிழ் கட்சிகளை இணைத்துக் கொண்டு போட்டியிடுவதா என்பன தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலை எதிர்கொண்டதை போல எதிர்கொள்ளலாம் என ரெலோ கூறியுள்ளது.

எனினும், கடந்த முறை தமக்கு உறுதியளிக்கப்பட்ட சபைகள் வழங்கப்படாததால் அது பற்றி மீள பேசப்பட வேண்டுமென புளொட் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், தேர்தல் நெருங்கி விட்டதால், அதைபற்றி பேச அவகாசமில்லையென தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.

இறுதியில், தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பங்காளிக்கட்சிகள் எப்படி போட்டியிடுவதென விரைவில் அறிவிப்பார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரினை பயன்படுத்தி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2023/1319584

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரினை பயன்படுத்தி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேசியத் தலைவரால் ஆரம்பிக்கப் பட்ட 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  முடக்கப் போகின்றார்கள் போலுள்ளது.

சிங்களமும், இந்தியாவும் எதை விரும்புகின்றதோ... 
அதனை செய்து முடிப்பதில், நமது அரசியல்வாதிகள் விண்ணர்கள்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

கூட்டமைப்பாக இருந்தே  நகரசபைக்குள் குடும்பி பிடி சண்டைகள்.  இந்த உள்ளூராட்சி தேர்தலுடன் கத்தி வாளோடு தான் கூட்டத்துக்கு வர வேண்டிய நிலை ஏற்படும் போலுள்ளது.
இந்தியா புகுந்து விளையாடுகிறது செல்வத்தை வைத்து .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20230110-221324.jpg

தலைகீழாதான் குதிப்பேன்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் இருதசாப்த தேர்தல் கூட்டு முறிந்தது : சம்பந்தன் தலைமையிலான பேச்சு தோல்வி

10 JAN, 2023 | 09:51 PM
image

ஆர்.ராம்

2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி அக்காலத்தில் ஆயுத ரீதியாக பலமான நிலையில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதான பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக்கட்சிகள் மற்றும்ரூபவ் விடுதலை இயக்கங்களின் ஒருங்கிணைவுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கூட்டு இரு தசாப்தங்களின் பின்னர் முறிவடைந்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பில் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தில் தனித்தே போட்டியிடுவதென பெரும்பான்மையோர் சிபார்சு செய்து ஆதரவினை வெளியிட்டிருந்த நிலையில் அதுதொடர்பில் தீர்க்கமான தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கான கூட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றிருந்தது.

இந்தக் கூட்டத்தில் பங்காளிக்கட்சியின் தலைவர்களான மாவை.சோ.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், மற்றும் ஆர்.ராகவன், எம்.ஏ.சுமந்திரன் எம்.பி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் ஆரம்பமான கூட்டத்தில் முதலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு கூட்டத்தில் பெரும்பான்மையோரால் சிபார்சு செய்யப்பட்ட ‘தனித்துப் போட்டி’ குறித்து சம்பந்தன், மாவை.சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள்.

குறிப்பாக, தற்போதுள்ள 60க்கு 40என்ற கலப்பு தேர்தல் முறைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போது உள்ள மூன்று அரசியல் கட்சிகளும் தனித்தியாக போட்டியிட்டு பின்னர் கூட்டமைப்பாக சபைகளில் ஆட்சி அமைக்க முடியும். அதன் மூலம் அனைத்து சபைகளும் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் கொண்டுவரமுடியும் என்ற விடயத்தினை சுமந்திரன் தொழிநுட்ப ரீதியாக விபரித்தார்.

அவருடைய கருத்தினை ஏற்று சம்பந்தனும் கூட்;டமைப்பில் உள்ள கட்சிகளும் தனித்தினயாக போட்டியிடுவது தான் பொருத்தமானது என்று கூறினார்.

இதன்போது செல்வம் அடைக்கலநாதன், மற்றும் ராகவன் ஆகியோர் இலங்கை தமிழரசுக்கட்சி ஏற்கனவே தீர்மானத்தினை எடுத்துவிட்டது என்பதை நாம் அறிந்துள்ளோம். அதேநேரம், வேட்புமனுக்களை தயார்ப்படுத்தும் ஆரம்பகட்டச் செயற்பாடுகளையும் தொடங்கியுள்ளதாக எமக்கு அறியக் கிடைக்கின்றது.

அவ்வாறிருக்கையில் தீர்மானமொன்றை எடுத்ததன் பின்னர் எவ்வாறு கலந்தாலாய்வது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்போது, மாவையும் சுமந்தினும் அவ்வாறான தீர்மானங்களை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்கள். குறிப்பாக சுமந்திரன், ஊடகங்கள் தான் தனித்தனியாக போட்டி என்று தவறான வெளிப்படுத்தல்களைச் செய்துவிட்டன என்று சுட்டிக்காட்டினார். அத்துடன், உங்களின்(செல்வம், ராகவன்) ஆகியோரின் யோசனைகளைக் கூறுங்கள் என்றும் கோரியுள்ளார்.

அச்சமயத்தில், செல்வம் அடைக்கலநாதன், எம்மைப்பொறுத்தவரையில் நாம் கடந்த காலத்தில் தேர்தலுக்கு முகங்கொடுத்ததைப் போன்றே இம்முறையும் கூட்டாக முகங்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும், புளொட் பிரதிநிதியான ராகவன், கடந்த காலத்தைப் போன்று இம்முறையும் தேர்தல் ஒதுக்கீடுகளை பிரதி செய்யமுடியாது. ஏனெனில் கடந்த காலத்தில் தமிழரசுக்கட்சி எமக்கு மூன்று சபைகளை வழங்குவதாக கூறியபோதும் அவ்வாறு இணங்கியதற்கு ஏற்ப செயற்படவில்லை. அதேபோன்று கிளிநொச்சியில் எமது உறுப்பினர்களை புறந்தள்ளி தனியாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களே உள்வாங்கப்பட்டார்கள். 

ஆகவே இம்முறை ஒதுக்கீடுகள் குறித்து புதிதாக பேச வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

அதன்போது, சம்பந்தன் மீண்டும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுவினுடைய பெரும்பான்மையானவர்களின் சிபார்சை சுட்டிக்காட்டி இம்முறை தனித்தனியாக முகங்கொடுத்து பின்னர் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதே பொருத்தமானது என்று குறிப்பிட்டார்.

அத்துடன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் ராகவன் ஆகியோர் கோருவதன்படி கூட்டாக முகங்கொடுப்பதாக இருந்தால் மாவட்ட ரீதியாகச் சென்று கட்சியின் ஆதரவாளர்களின் கருத்துக்களை கோரிய பின்னர் இறுதி முடிவினை எடுப்போம் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், செல்வம் அடைக்கலநாதன், அவ்வாறு மாவட்ட ரீதியாகச் சென்று இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு போதிய காலம் இல்லை. அதேநேரம், அவ்வாறு கருத்துக்களை கோரி இறுதி முடிவுகள் எடுக்கப்படுகின்ற தருணத்தில் நாம் தனித்துச் செல்லவேண்டி ஏற்படுமாயின் தேர்தலை முகங்கொடுப்பதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ள போதிய கால அவகாசம் இருக்காது. 

ஆகவே அந்த முயற்சியானது நடைமுறைச்சாத்தியமற்றது என்று குறிப்பிட்டுள்ளார். இதனை ராகவனும் ஆதரித்துள்ளார்.

இதனையடுத்துரூபவ் தமிழரசுக்கட்சியின் பெரும்பான்மையினரின் தீர்மானப்படியே தனித்துபோட்டியிடம் நாம் தனித்தோ கூட்டமைப்பாகவோ களமிறங்குவோம். அதில் நீங்கள் தலையீடுகளைச் செய்யமுடியாது என்று செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அதேகருத்தினை ராகவனும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஈற்றில், தேர்தலில் தனித்தோரூபவ் கூட்டாகவோ முகங்கொடுப்பது பற்றி

தீர்மானம் எடுப்பதற்கு உங்களுக்கு முழு உரித்தும் உள்ளது. தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் நாம் சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் கூடிப்பேசுவோம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இப்பேச்சுவார்த்தை நிறைவுக்கு வந்துள்ளது. அதன் பின்னர் செல்வம் மற்றும்  ரகவன் ஆகியோர் பேச்சுக்களை தொடராது வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில் வீரகேசரியிடத்தில் சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் ஆர்.ராகவன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

சுமந்திரன் கூறுகையில்,

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு சிபார்சு தொடர்பில் ரெலோரூபவ் புளொட்டுடன் பேச்சுக்களை முன்னெடுத்தோம். அவர்கள் கூட்டமைப்பாகவே போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

எனினும் தனித்தனியாக போட்டியிடுவதால் ஏற்படும் தொழில்நுட்ப ரீதியான நன்மைகள் பற்றி அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்களின் விருப்பப்படி கூட்டமைப்பாக போட்டியிடுவதானால் மாவட்ட ரீதியாக கருத்துக்களை பெற்று தீர்மானம் எடுப்போம் என்றும் கூறினோம். ஈற்றில் அவர்கள் அதற்கும் மறுப்புத் தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில் அவர்கள் தனியாகவோ அல்லது வேறு கூட்டிலோ போட்டியிடுவதற்கான தீர்மானம் எடுப்பதற்கு முழுமையான உரித்தும் உள்ளது. எனினும் அவர்கள் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்த முடியாது. தேர்தல் நிறைவின் பின்னர் அவர்களுடன் பேசத்தயாராகவே உள்ளோம் என்றார்.

செல்வம் அடைக்கலநாதன் கூறுகையில்,

தமிழரசுக்கட்சி மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை வலுப்படுத்தும் வகையில் தான் பேச்சக்களை நகர்த்த முற்பட்டது. நாம் கடந்த தடவைபோன்று கூட்டமைப்பாக தேர்தலை முகங்கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததோடு அதனை வலியுறுத்தினோம். 

இருப்பினும் தமிழரசுக்கட்சி அதற்கு சம்மதித்திருக்கவில்லை. ஈற்றில் தமிழரசுக்கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனியாகச் செல்வது உறுதியாகியுள்ளது என்றார்.

ஆர்.ராகவன் கூறுகையில்,

எமது கட்சியின் தலைவர் சித்தார்த்தனுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தி நான் குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தேன். அ;ந்தக் கூட்டத்தில் மிகத் தெளிவாக எமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தினோம். 

எனினும், தமிழரசுக்கட்சி மத்திய குழுவின் பெரும்பான்மை முடிவினை அமுலாக்குவதிலேயே உறுதியாக இருந்தது. அதற்கு அப்பால் எம்மால் நெகிழ்வுத்தன்மையுடன் பேச்சுக்களை நகர்த்த முடியாது போனது என்றார்.

https://www.virakesari.lk/article/145457

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சி தனித்துக் களமிறங்கவேண்டும் அப்ப தான் அவர்கள் பலம், பலவீனம் என்ன என்பது தெரியவரும். சிறப்பான முடிவு👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

 எனினும் அவர்கள் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்த முடியாது. தேர்தல் நிறைவின் பின்னர் அவர்களுடன் பேசத்தயாராகவே உள்ளோம் என்றார்.

சுமந்திரன்…. கூட்டமைப்பின் பெயரை,
மற்றவர்கள் பயன்படுத்த முடியாது என்று சொன்னதன் அர்த்தம், அந்தப் பெயரை…
தமிழரசு கட்சி முடக்கப் போகின்றது போலுள்ளது.

இப்படித்தான்… தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரையும், சின்னத்தையும் 
ஆனந்த சங்கரி முடக்கி வைத்து, “வைக்கல் பட்டறை” பிராணியின் சுகம் கண்டவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

இந்தியா புகுந்து விளையாடுகிறது செல்வத்தை வைத்து .

ஆனால் நாண்டு கொண்டு நிண்டு கூட்டமைப்பை உடைப்பது சம்+சும் அல்லவா?

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

ஆனால் நாண்டு கொண்டு நிண்டு கூட்டமைப்பை உடைப்பது சம்+சும் அல்லவா?

சம் + சும்முக்கு கூட்டமைப்பை உடைப்பதால் லாபம் இருக்குமா? எனது ஊகப்படி  கடந்த முறையை விட குறையை இடங்களிலேயே வெல்வார்கள்.(தமிழரசுக்கட்சியாக)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

சம் + சும்முக்கு கூட்டமைப்பை உடைப்பதால் லாபம் இருக்குமா? எனது ஊகப்படி  கடந்த முறையை விட குறையை இடங்களிலேயே வெல்வார்கள்.(தமிழரசுக்கட்சியாக)

கன கட்சிகள் கூட்டமைப்பில் இருப்பதால்….
எல்லோருக்கும் இடங்களை பங்கிட்டு கொடுக்கும் போது,
தமக்கு குறைவான இடங்கள் கிடைக்கின்றது என்ற எண்ணமும்..
இன்னும் சில கட்சிகளுக்கு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே உள்ள ஆதரவை
வைத்துக் கொண்டு தமிழ்ப் பகுதி எங்கும் போட்டியிட்டு வெல்வதை தவிர்க்கவும் 
இந்த உள்ளூராட்சி தேர்தலில்….  தமிழரசு, கூட்டமைப்பை உடைத்துக் கொண்டு வெளியே
வந்து பரீட்சித்துப் பார்க்கப் போகின்றது என நினைக்கின்றேன்.

சுமந்திரன்…. உள்ளூராட்சி தேர்தலின் பின் மீண்டும் கூட்டமைப்பு கட்சிகளுடன்  பேசுவோம் 
என்று சொன்னதின் அர்த்தம்… இந்தத் தேர்தலில் கூட்டமைப்பு பலத்த தோல்வியை சந்தித்தால்… அடுத்த தேர்தல்களில், இணைவோம் என்று கதிரை பிடிப்பு அரசியல்  செய்யப் போகிறார்கள்.

கூட்டமைப்பை உடைக்க வேண்டும் என்பது… ஶ்ரீலங்கா, இந்தியாவினது நீண்ட காலத் திட்டம்.
அதனை தற்போது இவர்கள் நிறைவேற்றுகிறார்கள். 

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கன கட்சிகள் கூட்டமைப்பில் இருப்பதால்….
எல்லோருக்கும் இடங்களை பங்கிட்டு கொடுக்கும் போது,
தமக்கு குறைவான இடங்கள் கிடைக்கின்றது என்ற எண்ணமும்..
இன்னும் சில கட்சிகளுக்கு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே உள்ள ஆதரவை
வைத்துக் கொண்டு தமிழ்ப் பகுதி எங்கும் போட்டியிட்டு வெல்வதை தவிர்க்கவும் 
இந்த உள்ளூராட்சி தேர்தலில்….  தமிழரசு, கூட்டமைப்பை உடைத்துக் கொண்டு வெளியே
வந்து பரீட்சித்துப் பார்க்கப் போகின்றது என நினைக்கின்றேன்.

சுமந்திரன்…. உள்ளூராட்சி தேர்தலின் பின் மீண்டும் கூட்டமைப்பு கட்சிகளுடன்  பேசுவோம் 
என்று சொன்னதின் அர்த்தம்… இந்தத் தேர்தலில் கூட்டமைப்பு பலத்த தோல்வியை சந்தித்தால்… அடுத்த தேர்தல்களில், இணைவோம் என்று கதிரை பிடிப்பு அரசியல்  செய்யப் போகிறார்கள்.

கூட்டமைப்பை உடைக்க வேண்டும் என்பது… ஶ்ரீலங்கா, இந்தியாவினது நீண்ட காலத் திட்டம்.
அதனை தற்போது இவர்கள் நிறைவேற்றுகிறார்கள். 

சும்மை போலவே சிந்திக்கிறீர்கள் இப்பவெல்லாம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

சும்மை போலவே சிந்திக்கிறீர்கள் இப்பவெல்லாம்🤣

கோசான்… உங்கள் கருத்தையும் அறிய ஆவலாக உள்ளோம். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

‘தனித்துப் போட்டி’ குறித்து சம்பந்தன், மாவை.சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள்.

 

12 hours ago, ஏராளன் said:

இலங்கை தமிழரசுக்கட்சி ஏற்கனவே தீர்மானத்தினை எடுத்துவிட்டது என்பதை நாம் அறிந்துள்ளோம். அதேநேரம், வேட்புமனுக்களை தயார்ப்படுத்தும் ஆரம்பகட்டச் செயற்பாடுகளையும் தொடங்கியுள்ளதாக எமக்கு அறியக் கிடைக்கின்றது.

 

12 hours ago, ஏராளன் said:

அவ்வாறிருக்கையில் தீர்மானமொன்றை எடுத்ததன் பின்னர் எவ்வாறு கலந்தாலாய்வது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

நிஞாயமான கேள்விதானே!

12 hours ago, ஏராளன் said:

அப்போது, மாவையும் சுமந்தினும் அவ்வாறான தீர்மானங்களை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்கள். குறிப்பாக சுமந்திரன், ஊடகங்கள் தான் தனித்தனியாக போட்டி என்று தவறான வெளிப்படுத்தல்களைச் செய்துவிட்டன என்று சுட்டிக்காட்டினார்.

என்ன மாதிரி சாளப்புகிறார். அப்போ.... பத்திரிகைக்காரர் செய்தியைப்போட்டு இவர்களை வற்புறுத்தினார்களா தனித்து போட்டியிடும்படி, அல்லது பத்திரிகைக்காரர் தீர்க்கதரிசிகளா? இவர்கள் எடுக்கும் முடிவை முன்பே அறிந்து தெரிவித்த பத்திரிகைக்காரருக்கு வாழ்த்துக்கள். தான் என்ன சொல்கிறேன் என்று யோசித்துதான் சொல்கிறாரா? அல்லது கேட்பவர் முட்டாள்கள் என்று நினைத்து சொல்கிறாரா?

12 hours ago, ஏராளன் said:

அவர்கள் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்த முடியாது.

கழட்டி விடப்பட்ட கட்சிகள் தீவிரமாக உழைத்து வெற்றி பெற்று இதே நிபந்தனையை அவர்களுக்கு விதிக்க வேண்டும். அதாவது எங்களுடன் இணைவதாயின் உங்கள் கட்சி பெயர், சின்னம் யாவற்றையும் களைந்து எங்கள் பின்னே வாருங்கள், எந்தபதவியும் கோரக்கூடாது என்று. எண்ணம் எதுவாக இருந்தாலும் முன்னேற்பாடாக அவர்களுக்கு கூறியிருக்க வேண்டுமல்லவா? இல்லை, அது பத்திரிகைகள் கூறுகின்றன நாங்கள் அப்பிடியில்லை, பத்திரிக்கைகளே அப்படி செய்தி போடாதீர்கள் என்று கண்டித்தாரே, இனி எப்படி அவர்கள் முகத்தில் விழிப்பார்? இதிலிருந்தே இவர் ஒரு பொய்யர் என்று தெரிகிறதே அதுமட்டுமல்ல தான் சொல்வதெல்லாம் சரி பத்திரிகைகளே பிழையாக பிரசுரிக்கின்றன என்றவர் இங்கு வளமாக மாட்டிக்கொண்டாரே. இவருக்கு வெட்கம் இல்லையா? இப்போ பத்திரிகைக்காரர் காறி உமிழ வேண்டும் உவர் முகத்தில். கடைசிநேரம் சொல்லி வெற்றியை தமதாக்கிக்கொண்டு மற்றவர்களை அடக்கும் தந்திரம், இப்போ நீங்கள் கூட்டமைப்பின் பயன்படுத்த முடியாது, தேர்தலின் பின் பேசுவோம் என்றால் அர்த்தம் என்ன? தாங்கள் வென்றால் அவர்களே அதிகாரிகள், இல்லையென்றால் மற்றைய கட்சிகள் இவர்களின்  பங்காளிகள்! எப்படியிருக்கிறது நிஞாயம்? இவர்கள் யாரென்று தெரியாது? முன்பொருதடவை தேர்தலில் தப்பிப்பிழைத்தவர்கள், மாவையர் தனது வயதையும், பொறுப்பையும் மறந்து சின்னபிள்ளைத்தனமாய் தோத்த கட்சியை பரிகசித்த விதம், மக்கள் தங்களைத்தானே தேர்ந்தெடுத்தார்களாம், அடுத்த தேர்தலில் குப்புற விழுந்தார். ஆனாலும் படிக்கவில்லை. அவர் ஒரு பூம் பூம் மாடு தலையாட்டிக்கொண்டு இருப்பார் சம்பந்தனுக்கு.

16 hours ago, nunavilan said:

இந்தியா புகுந்து விளையாடுகிறது செல்வத்தை வைத்து .

ஏன் நுணா உங்களுக்கும் செல்வத்துக்கும் என்ன கோவம்? இல்லை, எல்லாம் விரிவாக சொல்லியிருக்கிறார்கள், நீங்கள் செல்வத்தை குறை சொல்கிறீர்களே, ஏதாவது தனிப்பட்ட பகையோ என்று அறியகேட்டேன். இல்லை, சுமந்திரன் சொன்னதை நம்பிவிட்டீர்களோ?

12 hours ago, ஏராளன் said:

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு சிபார்சு தொடர்பில் ரெலோரூபவ் புளொட்டுடன் பேச்சுக்களை முன்னெடுத்தோம். அவர்கள் கூட்டமைப்பாகவே போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

 

12 hours ago, ஏராளன் said:

ஈற்றில் அவர்கள் அதற்கும் மறுப்புத் தெரிவித்துவிட்டனர்.

பெரிய புத்திசாலி என்கிற நினைப்பு இவருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

கோசான்… உங்கள் கருத்தையும் அறிய ஆவலாக உள்ளோம். 🙂

கூட்டமைப்பில் இருந்து பெட்டிகளை கழட்டி விட்டு ரயில் எப்படி ஓடுது என பரிசோதிக்கிறார்கள்.

முக குப்புற விழுந்தால் அடுத்த தேர்தலில் தமிழ் மக்கள் ஒற்றுமை பட வேண்டும் என்பார்கள்.

பரிசோதனை வெற்றி என்றால் - இதுவே தொடரும் 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் பெயரை பயன்படுத்தமுடியாது - சுமந்திரன் தெரிவிப்பு

By DIGITAL DESK 5

14 JAN, 2023 | 05:17 PM
image

(ஆர்.ராம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது என்று யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டிணைவில் உருவாகியுள்ள புதிய கூட்டணியானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை தமது பாதாகையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை தமிழரசுக் கட்சியின் பெரும்பான்மையானவர்கள் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தனித்து முகங்கொடுப்பதென சிபாரிசு செய்திருந்த நிலையில் அது தொடர்பிலான தீர்மானங்களை எடுப்பதற்காக பங்காளிகளுடன் கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றது. 

சம்பந்தன், ஐயாவின் வீட்டில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவின் சிபார்சினை முன்வைத்து உரையாடியபோது, பங்காளிக்கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் அதனை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. 

இந்நிலையில் அவர்கள் தனித்தோ அல்லது கூட்டாகவோ செல்வதாக அறிவித்திருந்தார்கள். அப்போது சம்பந்தன் ஐயா, கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பில் வினவியிருந்தார். 

அதனையடுத்து நடத்தப்பட்ட பேச்சுக்களில், உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை இருதரப்பினரும் பயன்படுத்துவதில்லை என்று இணக்கம் காணப்பட்டது.

எனினும், தற்போது ஏற்படுத்தப்பட்ட இணக்கத்தினை அப்பெயர் பயன்படுத்தப்படுகின்றது. அதுதொடர்பில் நாம் உரிய நடவடிக்கைளை எடுப்போம் என்றார். 

https://www.virakesari.lk/article/145812

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் தமிழ்க் கூட்டமைப்பினர் ? – மக்களே தீர்மானிப்பர்.! – சுமந்திரன் திட்டவட்டம்

Sumanthiran.jpg

யார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பர். அதற்கு நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை. இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலேயே அது தெரியும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

ரெலோ, புளொட் கட்சிகள் மேலும் மூன்று கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும், இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்டது என்றும் ஒருதலைப்பட்சமாக அறிவித்திருக்கின்றமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கடைசியாகக் கொழும்பில் சம்பந்தன் ஐயாவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் பங்காளி கட்சி கூட்டத்தில் வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை மூன்று கட்சிகளும் தத்தம் விருப்பப்படி தனித்தனியாகவோ, தமக்குள் கூட்டாகவோ எதிர்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை ஒரு கட்சியும் பயன்படுத்தக் கூடாது என சம்பந்தன் ஐயாவிடம் ஓர் உறுதிமொழி வழங்கப்பட்டது.

அதனை ரெலோ, புளொட் கட்சிகள் இப்போது மீறி உள்ளன. அதற்காக நாம் அவர்களுடன் மோதுவதோ, அவ்விடயத்தை சவாலுக்கு உள்ளாக்கவோ போவதில்லை. நன்றாக அந்தப் பெயர்களைப் பயன்படுத்தட்டும்.

இப்படித்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரையும், சின்னத்தையும் முடக்கி ஆனந்தசங்கரி கொண்டு போன போது, அதனை அப்படியே சும்மா விட்டு விடுங்கள், சட்டச்சவாலுக்குக் கூட உட்படுத்த வேண்டாம் என்று உறுதியாக கூறினார் சம்பந்தன்.

சும்மா விடுங்கள் என்றார் சம்பந்தன். சங்கரியையும் அவரது கட்சியையும் மக்கள் சும்மா விட்டு விட்டார்கள். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெயர் விடயத்திலும் சும்மா விட வேண்டியதுதான். தமிழ் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்” – என்றார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2023/01/183177/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இப்படித்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரையும், சின்னத்தையும் முடக்கி ஆனந்தசங்கரி கொண்டு போன போது, அதனை அப்படியே சும்மா விட்டு விடுங்கள், சட்டச்சவாலுக்குக் கூட உட்படுத்த வேண்டாம் என்று உறுதியாக கூறினார் சம்பந்தன்.

சும்மா விடுங்கள் என்றார் சம்பந்தன்.

நீதிமன்றம் சென்று ஆனந்தசங்கரிக்கு ஆதரவாக தீர்பு வந்ததே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யார் தமிழ்க் கூட்டமைப்பினர் ? – மக்களே தீர்மானிப்பர்.! – சுமந்திரன் திட்டவட்டம்

Sumanthiran.jpg

யார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பர். அதற்கு நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை. இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலேயே அது தெரியும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

ரெலோ, புளொட் கட்சிகள் மேலும் மூன்று கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும், இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்டது என்றும் ஒருதலைப்பட்சமாக அறிவித்திருக்கின்றமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கடைசியாகக் கொழும்பில் சம்பந்தன் ஐயாவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் பங்காளி கட்சி கூட்டத்தில் வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை மூன்று கட்சிகளும் தத்தம் விருப்பப்படி தனித்தனியாகவோ, தமக்குள் கூட்டாகவோ எதிர்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை ஒரு கட்சியும் பயன்படுத்தக் கூடாது என சம்பந்தன் ஐயாவிடம் ஓர் உறுதிமொழி வழங்கப்பட்டது.

அதனை ரெலோ, புளொட் கட்சிகள் இப்போது மீறி உள்ளன. அதற்காக நாம் அவர்களுடன் மோதுவதோ, அவ்விடயத்தை சவாலுக்கு உள்ளாக்கவோ போவதில்லை. நன்றாக அந்தப் பெயர்களைப் பயன்படுத்தட்டும்.

இப்படித்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரையும், சின்னத்தையும் முடக்கி ஆனந்தசங்கரி கொண்டு போன போது, அதனை அப்படியே சும்மா விட்டு விடுங்கள், சட்டச்சவாலுக்குக் கூட உட்படுத்த வேண்டாம் என்று உறுதியாக கூறினார் சம்பந்தன்.

சும்மா விடுங்கள் என்றார் சம்பந்தன். சங்கரியையும் அவரது கட்சியையும் மக்கள் சும்மா விட்டு விட்டார்கள். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெயர் விடயத்திலும் சும்மா விட வேண்டியதுதான். தமிழ் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்” – என்றார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2023/01/183177/

ஆபிரஹாமின்… ஆட்டம் ஆரம்பம். 😂 🤣 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ஆபிரஹாமின்… ஆட்டம் ஆரம்பம். 😂 🤣 😛

இல்லை! முடிவு என நினைக்கிறன், இருந்தாலும் ஒட்டிக்கொண்டு திரிவது வழக்கம். யாழ்ப்பாணம் வந்த ரணிலுக்கு பக்கத்தில் பாத்தீர்களே என்றால் புரியும் அவர்களின் பணி என்னவென்று. மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து பிச்சை வாங்கி, இவர்களை பின்தொடர்வது, பக்கத்தில் அமர்வது, வக்காலத்து வாங்குவது.  மக்கள் அருகில் வர பாதுகாப்பு வேண்டும் இவர்களுக்கு. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சின்ன கரெக்சன் நான் ஒருபோதும் பிள்ளையானுக்கு வாக்களிக்கவில்லை, கருணாவுக்கு வாக்களித்தேன் ஆனால் கருணா  வெல்லவில்லை, வென்றவர்களே வெத்து வேட்டு எனும் போது வெல்லாத கருணாவை நான் கேள்வி கேட்க முடியாது. கிழக்கில் கூத்தமைப்பு விட்ட  பிழை மகாபிழை, அது எப்படி தமிழர்களிடம் இருந்து மகாண சபையை சாணக்கியத்தனமாக புடுங்கினோம் பார்த்தீர்களா என்று முஸ்லிம்களை அடுத்தடுத்த தேர்தலில் கொக்கரிக்க வைத்த பிழை
    • ஈழத்தமிழர்கள் பலரே மறந்துகொண்டும் போகும் ஒரு தலைவனை அவன் தத்துவத்தை வெல்வம் தோற்பம் என்பதற்கு அப்பால் மக்களிடம் விதைத்து பரப்பி முளைவிட செய்துகொண்டிருக்கும் சீமானுக்கு.. சீமான் வெல்லாமல் போகலாம் அவன் தமிழகத்தில் விதைப்பது ஈழத்தில் எங்கள் தலைவன் விதைத்தது.. தமிழ் தேசியம்.. அந்த தமிழ் தேசியத்தை மக்களிடம் செல்வாக்கு பெற்ற விஜய் போன்றவர்கள்கூட உச்சரிக்கவைத்த முன்னத்தி ஏர் சீமானுக்கு… இனிய அகவை தின வாழ்த்துக்கள்.. சீமான் பாடியதில் எனக்கு மிகப்பிடித்தது👇 விதைத்துக்கொண்டிருங்கள்.. இன்று விஜைபோல் இன்னும் பல விருட்சங்கள் தமிழ்தேசியத்தை பேசட்டும்..🙏
    • இல்லை உங்கள் எடுகோளே பிழை. 1. நீங்கள் ஏதோ கூட்டமைப்பு கிழக்கில் மொக்குத்தனம் பண்ணியமைக்கு அவர்கள் யாழ்பாணத்தவர் என்பதுதான் காரணம் என்பது போலவும். கிழக்கை மட்டும் அவர்கள் கைவிட்டது போலவும் கதை சொல்கிறீர்கள். இது ஒரு பொய்யாய கதையாடல். False narrative 2. கிழக்கில் என்ன பிழை விட்டதோ அதைத்தான் வடக்கிலும் கூட்டமைப்பு விட்டது.  இதில் பிரதேச வஞ்சிப்பு இல்லை. எங்கும் அவர்களுக்கு சுயநலனே பிரதானம். கூட்டமைப்பு மட்டும் அல்ல, சைக்கிள், விக்கி, சங்கு எல்லா கோமாளிகளும்தான். 3. கிழக்கில் கருணா பிள்ளையான் போல வடக்கில் டக்லஸ், கேபி. 4. எவராவது வந்து என்னிடம் எனக்கு வடக்கில் தேசிய கட்சிகள் மீது நம்பிக்கை போய்விட்டது ஆகவே நான் டக்லசை ஆதரிக்க போகிறேன் என்றாலும் என் பதில் மேலே உங்களுக்கு சொன்னதுதான். 5. தேசிய கொள்கையை வரித்து கொண்ட எவரும், விலகி இருக்கலாம், புதியதாக அருச்சுனாவோ, கிருஸ்ணாவோ எவரையும் கொண்டு வர முயற்சிக்கலாம், அருண் தம்பிமுத்து, அங்கயனோடு கூடப்போகலாம், ஆனால் டக்லஸ், கருணா, பிள்ளையான்….இல்லை. அது அடிப்படை கொள்கை விளக்க கோளாறு என்பதைதான் காட்டுகிறது. 6. என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டு அரசியல் வேறு, ஈழ அரசியல் வேறு. சீமானை நான் ஏன் எதிர்கிறேன் என்பதற்கு யாழ் முழுவதும் நான் கூறிய விளக்கம் உள்ளது. 7. இதில் சோகம் என்னவெண்டால் யாழில் எல்லாரையும் புரொக்சி,  தேசிக்காயென. நக்கலாக என கூறி விட்டு, கடைசியில் நீங்களே பிள்ளையான், கருணா ஒரு ஆணியையும் புடுங்கவில்லை என்றதும். இப்போ அது சும்மா டிரை பண்ணி பார்த்தோம் என கதை விடுகிறீர்கள். பிள்ளையானும், கருணாவும் முஸ்லிம்களை, சிங்களவரை எதிர்த்து கல்முனை, மேய்ச்சல் தரை எதிலும் ஒரு சிறு தீர்வையாவது பெற்று தருவார்கள் என தாமும் நம்பி, ஏனையோரையும் நம்ப வைத்தோர் - ஒன்றில் தெரிந்தே பொய் கூறினர். அல்லது அடி முட்டாள்.
    • செவிட்டு நுளம்புகளாயிருந்திருக்கும்.  🤣 அதனைத் தொடர்ந்திருந்தால, தற்போதைய நிலையில்  Sri Lankan Elon Musk என்று புகழப்பட்டிடுப்பீர்கள்.  ☹️
    • அது தான் பிரச்சினை நீங்கள் அடுத்தவன் பெட் ரூமில் எட்டிப் பார்த்து கண்ணகி 2.0 வை வைத்து தேசியத்தை தேட நாங்களோ யாழில் 90 வீதம் மாவீரர், கொழும்பில் புலிகளுக்கும் எமக்கும் சம்பந்தமில்லை, புலிகள் பயங்கரவாதிகள், புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்பவர்களிடமும் தான் தேசியத்தை தேடுகிறோம். கருணா தேசியத்தலைவரை மதிக்கிறேன் என்று துணிந்து பெயரளவிலாவது சொன்னான். வாசகர்களுக்கு தெரியும் சீமான் கூத்தமைப்பை விட எவ்வளவு திறமென்று. அட நானே சொல்கிறேனே 2009 இலிருந்து வாத்திமார் Promote பண்ணிய அக்மார்க் கூத்தமைப்பு தான் என்னை கருணாவுக்கு வோட்டு போட வைத்ததென்று. கூத்தமைப்பு மட்டும் இல்லாதிருந்தால் கருணாவுக்கு அரசியலே இல்லை. என்னை நம்பாட்டில் நீங்க நசீரிடம் கேட்கலாம், தாத்தாவை நினைத்து கண்ணீர் வடிப்பார். அந்தக் காலம் அப்போ ஊரிலிருந்து சும்மா புழுகிக் புழங்காகிதமடைந்து கோடிஸ்வரனுக்கு வாக்களித்த வசந்தன் கோ காலம்.  அண்ணை கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களிடம் கொடுத்துவிட்டு பக்கோடா  சாப்பிட்டதால் சொருகப்பட்ட நேந்திர பழத்தின் கனதி கிழக்கு மாகாணத்தான் எனக்குத்தான் தெரியும் தவிர யு.கே. சிட்டிசனுக்கு தெரியாது கண்டியளோ..?
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.