Jump to content

உளவுத்துறை ரகசிய கோப்புகள் தனியார் இடத்தில் கண்டுபிடிப்பு: சங்கடத்தில் வெள்ளை மாளிகை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உளவுத்துறை ரகசிய கோப்புகள் தனியார் இடத்தில் கண்டுபிடிப்பு: சங்கடத்தில் வெள்ளை மாளிகை

உளவுத்துறை ரகசிய கோப்புகள் தனியார் இடத்தில் கண்டுபிடிப்பு: சங்கடத்தில் வெள்ளை மாளிகை

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

வெள்ளை மாளிகைக்கு அரசியல் சங்கடம் வளர்ந்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உதவியாளர்கள் ரகசிய அரசாங்க பதிவுகள் அடங்கிய புதிய தொகுப்பை இரண்டாவதாக மற்றுமோர் இடத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

பைடன் துணை அதிபராக இருந்த பிறகு பயன்படுத்திய ஆவணங்களின் முதல் தொகுப்பு, வாஷிங்டன் டிசியில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரம் அமெரிக்க நீதித்துறையின் பரிசீலனையில் உள்ளது.

ரகசிய கோப்புகளைத் தவறாகக் கையாண்டதாக டொனால்ட் டிரம்ப் மீது குற்றவியல் விசாரணை நடத்தப்படவுள்ளது.

பைடன் உதவியாளர்களால் கூடுதல் கோப்புகள் எப்போது, எங்கே கண்டுபிடிக்கப்பட்டன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

சுமார் 10 ஆவணங்களின் தொகுதி நவம்பரில் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு சிந்தனைக் குழுவான பென் பைடன் (Penn Biden Center) மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த விஷயம் இந்த வாரத்தில் தான் வெளிச்சத்திற்கு வந்தது.

அந்த ஆவணங்களில் யுக்ரேன், ஈரான், பிரிட்டன் தொடர்பான அமெரிக்க உளவுத்துறை குறிப்புகளும் விளக்கப் பொருட்களும் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கோப்புகள் குறித்து வெள்ளை மாளிகை இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. முன்னதாக, புதன்கிழமையன்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரீன் ஜீந்பியர் தினசரி செய்தியாளர் சந்திப்பின்போது கோப்புகளின் முதல் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

“அது நீதித்துறையின் பரிசீலனையில் உள்ளது. அதிபர் நேற்று தெரிவித்த விஷயங்களைத் தாண்டி நான் எதுவும் சொல்ல இயலாது,” என்று அவர் கூறினார்.

ஜோ பைடன் செவ்வாய்க்கிழமையன்று, கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதைக் கண்டு தான் “ஆச்சர்யம் அடைந்ததாகவும்” நீதித்துறையின் பரிசீலனைக்கு “ஒத்துழைப்பதாகவும்” கூறினார்.

சபை மேற்பார்வைக் குழு அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. இதில் வெள்ளை மாளிகையின் ரகசிய கோப்புகள் தொடர்பான ஆவணங்களையும் தகவல் தொடர்புகளையும் ஒப்படைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் அடக்கம்.

ரகசிய ஆவணங்கள் உட்பட அனைத்து வெள்ளை மாளிகை பதிவுகளும், அமெரிக்க தேசிய ஆவணக் காப்பகத்திற்கு, நிர்வாகத்தின் பதவிக் காலத்திற்குப் பிறகு மாற்றப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம், எஃப்.பி.ஐ அதிகாரிகள் ஃப்ளோரிடாவில் உள்ள டொனால்ட் டிரம்பின் வீட்டில் சோதனையிட்டபோது, டிரம்ப் தேசிய ஆவணக் காப்பகத்திற்கு மாற்றத் தவறிய 10,000க்கும் மேற்பட்ட கோப்புகளைக் கைப்பற்றினார்கள்.

மார்-எ-லாகோவுக்கு எஃப்.பி.ஐ அதிகாரிகள் வருவதற்கு முன்பாக, ரகசியக் கோப்புகளைத் திரும்பப் பெறுவதற்கு நீதித்துறை ஆணை வழங்கியது.

பாம் கடற்கரையிலுள்ள கோல்ஃப் கிளப்பில் இருந்து, உச்சகட்ட ரகசியம் எனக் குறிப்பிடப்பட்ட 18 ஆவணங்கள் உட்பட, ரகசியம் என்று அடையாளப்படுத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மீட்கப்பட்டன.

இந்த ஆவணங்கள் மீட்கப்பட்டவுடன், பைடனின் வழக்கறிஞர்கள் தேசிய ஆவணக் காப்பகத்திற்குத் தகவல் தெரிவித்ததாகவும் மறுநாள் காலையில் அவற்றை ஒப்படைத்ததாகவும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c51gl9gnql2o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ பைடனின் முன்னாள் அலுவலகத்திலிருந்து இரகசிய ஆவணங்கள் மீட்பு

By SETHU

12 JAN, 2023 | 02:42 PM
image

அமெரிக்க அரச இரகசிய ஆவணங்களாக வகைப்படுத்தப்பட்ட பல ஆவணங்கள், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உதவியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 வொஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள, கட்டத்திலிருந்து ஒரு தொகுதி ஆவணங்கள் கடந்த நவம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பான தகவல்கள் இவ்வாரமே வெளியாகின. 

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர், மேற்படி கட்டடத்தில் ஜோ பைடன் அலுவலகம் ஒன்றைக் கொண்டிருந்தார். 

மேற்படி ஆவணங்கள், பராக் ஒபாமாவின் கீழ் உப  ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி வகித்த காலத்துக்குரியவை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இரண்டாவது இரகசிய ஆவணத் தொகுதி,  புதன்கிழமை (11) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க நீதித்திணைக்களம் விசாரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்குச் சொந்தமான புளோரிடாவிலுள்ள மார் ஏ லகோ இல்லத்தில் கடந்த வருடம் எவ்பிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, சுமார் 11,000 இரகசிய ஆவணங்களைக் கைப்பற்றினர். இது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், பென் பைடன் மத்திய நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை சுமார் 10 எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்றுமுன்தினம் கூறுகையில், இந்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தனது வியப்பளிப்பதாகவும், நீதித் திணைக்களத்தின் ஆய்வுகளுக்கு ஒத்துழைப்பதாகவும் கூறினார்.

டொனால்ட் ட்ரம்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, ஜோ பைடனின் முன்னாள் அலுவலகக் கட்டடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமானவை என்ற போதிலும், இது பைடனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.

வெள்ளை மாளிகை உட்பட ஜோ பைடனின் பல இல்லங்கள் மீது எவ்பிஐ எப்போது சோதனை நடத்தப் போகிறது என டொனால்ட் ட்ரம்ப் ஏற்கெனவே கேள்வி எழுப்பியுள்ளார்.

https://www.virakesari.lk/article/145622

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ பைடனின் முன்னாள் அலுவலகத்திலிருந்து இரகசிய ஆவணங்கள் மீட்பு

3-12.jpg

https://akkinikkunchu.com/?p=235201

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆவணங்கள் பைடன் உதவி ஜனாதிபதியாக இருந்த காலத்திற்குரிய ஆவணங்களா? 

On 12/1/2023 at 17:39, ஏராளன் said:

அந்த ஆவணங்களில் யுக்ரேன், ஈரான், பிரிட்டன் தொடர்பான அமெரிக்க உளவுத்துறை குறிப்புகளும் விளக்கப் பொருட்களும் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

உக்கிரேன், ஈரானிற்கு ஏற்கன்வே சோலியை முடிச்சிட்டுது அமெரிக்கா அடுத்து இருப்பது பிரிட்டனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது .....வெள்ளை மாளிகையில் இப்பொழுதும் ஆவணங்களை எல்லாம் ஒற்றை ரூல் கொப்பியில் எழுதி அலுமாரியில் அடுக்கி வைத்திருக்கிறார்களா, ஆங்காங்கே போய் தூக்கிக் கொண்டு வருவதற்கு தோதாக .......எனக்கு ஒண்டும் புரியவில்லை.......!  😴

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஜோ பைடனின் முன்னாள் அலுவலகத்திலிருந்து இரகசிய ஆவணங்கள் மீட்பு

நான் இவரை சுத்த தங்கம் எண்டெல்லே நினைச்சுக்கொண்டிருந்தன் :zany_face:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

நான் இவரை சுத்த தங்கம் எண்டெல்லே நினைச்சுக்கொண்டிருந்தன் :zany_face:

பைடன் ஒரு தடவையுடன் விடை பெற சாத்தியம் இருக்கோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

பைடன் ஒரு தடவையுடன் விடை பெற சாத்தியம் இருக்கோ?

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

😂

😝 உதில பறக்கிறது அமெரிகாட மானமோ🤪

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.