Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கைலாசாவுடன் அமெரிக்கா, இந்தோனேசியா ஒப்பந்தம்!

monishaJan 13, 2023 15:52PM
ஷேர் செய்ய : 
kailasa agreement with america indonesia

அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா உடன் நித்யானந்தாவின் ஐக்கிய கைலாசா இருதரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

ஐக்கிய கைலாசா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள நெவார்க் சிட்டியும் “இருதரப்பு நெறிமுறை ஒப்பந்தத்தில்” கையெழுத்திடும் விழா நெவார்க் நகர அரங்கில் நடைபெற்றது.

kailasa agreement with america indonesia

இந்த விழாவில் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா நித்யானந்தா, மேயர் பராகா, துணை மேயர் டிஃப்ரீடாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், நியூ ஜெர்சியிலிருந்து கைலாசாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின் போது கைலாசாவின் கொடி ஏற்றப்பட்டு கைலாசாவின் தேசிய கீதம் பாடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி கைலாசாவில், தொற்றுநோய், சிக்கலான மனநலப் பிரச்சனைகள், வன்முறை, வறுமை, கல்வியறிவின்மை மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றின்,

பரஸ்பர முயற்சிகளை எதிர்கொள்வதற்கான பரஸ்பர முயற்சிகளில் இந்த ஒப்பந்தம் ஒரு குறிப்பிடத்தக்க முன்னோக்கிச் செல்ல உதவும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று (ஜனவரி 12) வெளியான செய்திக் குறிப்பில், “இந்த ஒப்பந்தமானது, உலக அமைதிக்கான ஒரு சிறந்த பார்வைக்கான பரந்த இருதரப்பு நிகழ்ச்சி நிரலை மேலும் முன்னெடுப்பதற்காக,

கைலாசா ஐக்கிய மாகாணங்களுக்கும், நெவார்க் நகரத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கிய தொடக்கத்தை இன்று குறிக்கிறது.

இந்த நெறிமுறை இருதரப்பு உறவுகளுடன் கைலாசா தனது மனிதாபிமான சேவைகளை நெவார்க் நகரத்திற்குக் கொண்டு வந்து அதன் சமூகத்திற்குச் சேவை செய்ய எதிர்பார்த்துள்ளது.

கைலாசா ஐக்கிய மாகாணங்கள் அதன் சொந்த இறையாண்மை நிலப்பரப்புடன் பண்டைய அறிவொளி பெற்ற இந்து நாகரிக தேசத்தின் மறுமலர்ச்சியாகும்.

உலகெங்கிலும் உள்ள 2 பில்லியன் இந்து புலம்பெயர்ந்தோருக்கு இது முதல் இறையாண்மை தேசமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இந்தோனேசியா உடனும் ஐக்கிய கைலாசா ஒப்பந்தம் செய்துள்ளது. 

அமெரிக்காவின் நெவார்க் நகரத்தோடு கைலாசா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது குறித்து நித்யானந்தாவின் முகநூல் பக்கத்தில் புகைப்படங்களும் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
 
https://minnambalam.com/india-news/kailasa-signs-bilateral-agreement-with-america-indonesia/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தி டீவி, மின்னம்பலம் என பலரை மடையர் ஆக்கி விட்டார் நித்தி.

க்ளூ: Sister Cities International is a not-for-profit corporation 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நடக்கட்டும்  நடக்கட்டும்  நல்லதுதானே.......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, goshan_che said:

தந்தி டீவி, மின்னம்பலம் என பலரை மடையர் ஆக்கி விட்டார் நித்தி.

க்ளூ: Sister Cities International is a not-for-profit corporation 

மறு ஒளிபரப்பு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/1/2023 at 17:19, suvy said:

நடக்கட்டும்  நடக்கட்டும்  நல்லதுதானே.......!   👍

என்ன மாதிரி போற ஐடியா இருக்கா ? என்னையும் கைத்தாங்கலாகா கூட்டிப்போகணும் 🧐🧐

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்ன மாதிரி போற ஐடியா இருக்கா ? என்னையும் கைத்தாங்கலாகா கூட்டிப்போகணும் 🧐🧐

கைத்தாங்கலாய் கூட்டிக்கொண்டு போற இடமா அது????? :cool:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்ன மாதிரி போற ஐடியா இருக்கா ? என்னையும் கைத்தாங்கலாகா கூட்டிப்போகணும் 🧐🧐

இது கைலாசாவுக்கே அவமானம்....... அங்கு நர்ஸுகளே கிடையாது........எல்லாம் நயன்தாராக்கள்தான் .......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்ன மாதிரி போற ஐடியா இருக்கா ?

போலாம் முதல்ல நாடு எங்க இருக்கு எண்டு தெரிஞ்சாதானே வழி கண்டு பிடிக்கலாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, குமாரசாமி said:

கைத்தாங்கலாய் கூட்டிக்கொண்டு போற இடமா அது????? :cool:

அப்படி இல்லை கைதாங்கல் என்றால் சிஷ்யைகளின் கவனிப்பு கூடுதலாக இருக்குமே அதுக்குத்தான் 

6 hours ago, suvy said:

இது கைலாசாவுக்கே அவமானம்....... அங்கு நர்ஸுகளே கிடையாது........எல்லாம் நயன்தாராக்கள்தான் .......!  😂

அப்ப வசதியாப்போச்சு முதலில் நாட்டை க்கண்டு பிடிங்கப்பா பிறகென்ன நம்ம ஒரு படகை வாங்கியாவது கைலாசாவில்  ஜல்சா தான்

6 hours ago, goshan_che said:

போலாம் முதல்ல நாடு எங்க இருக்கு எண்டு தெரிஞ்சாதானே வழி கண்டு பிடிக்கலாம்🤣

உங்களையெல்லாம் ஏன் வச்சி இருக்கிறம் நாட்டைக்கண்டு பிடிக்க மாட்டீர்களா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களையெல்லாம் ஏன் வச்சி இருக்கிறம் நாட்டைக்கண்டு பிடிக்க மாட்டீர்களா என்ன?

இருந்தா கண்டு பிடிக்க மாட்டமா என்ன?

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்ன மாதிரி போற ஐடியா இருக்கா ? என்னையும் கைத்தாங்கலாகா கூட்டிப்போகணும் 🧐🧐

பிறகு எதுக்கு  அங்க?
  எங்கள  உளவு  பார்க்கவா???

  • Like 1
Posted

https://gov.shrikailasa.org/category/briefings-statements/united-nations-reports/

நித்தியானந்தாவின் செயல்கள் கோமாளித்தனமாக இருந்தாலும் சில நகர்வுகள் நீண்ட திட்டத்துடன் செயல்படுவதுபோல் உள்ளது. 

இதே போன்று நாமும் மனித உரிமை, சமாதானம், பச்சைப் புரட்சி, தொன்மையான இன அடையாளத்தைப் பாதுகாத்தல் போன்ற செயல்திட்டங்களோடு நிலம் இல்லாத நாடு போன்ற அமைப்பை உருவாக்கி அங்கீகாரம் பெற முயற்சிக்க முடியாதா ?

ஒலிம்பிக் விளையாட்டில் பங்குபெறும் நாடுகளுடன் நாடுகளற்ற குழு ஒன்றும் போட்டியிட முடிகிறதல்லவா ?

உக்கிப் போன நாடுகடந்த தமிழீழம் போல் இல்லாமல் பொதுவாக நாடற்ற தமிழினம் சார்பாக ஒரு அமைப்பை உருவாக்க முடியாதா ?

Wakanda வினையும் யாரோ ஐநா நாடுகள் பட்டியலில் இட முயற்சித்ததாகக் கேள்விப்பட்டுள்ளேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 minutes ago, இணையவன் said:

கடவுள் என்றால் அள்ளிக் கொடுக்கும் எமது இனம் நாடு என்றால் ஆயிரம் கேள்விகள் கேட்டு ஆயிரம் பிரிவுகள் ஆகி  ஒதுங்கி விடும்.😭

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நித்தியானந்தா எப்பவுமே கூலா இருப்பார். அதனால் எனக்கு அவரைப் பிடிக்கும். அந்தச் சிரிப்பு ‘டிவைன் ஸ்மைல் 😂

Edited by வாலி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, இணையவன் said:

https://gov.shrikailasa.org/category/briefings-statements/united-nations-reports/

நித்தியானந்தாவின் செயல்கள் கோமாளித்தனமாக இருந்தாலும் சில நகர்வுகள் நீண்ட திட்டத்துடன் செயல்படுவதுபோல் உள்ளது. 

இதே போன்று நாமும் மனித உரிமை, சமாதானம், பச்சைப் புரட்சி, தொன்மையான இன அடையாளத்தைப் பாதுகாத்தல் போன்ற செயல்திட்டங்களோடு நிலம் இல்லாத நாடு போன்ற அமைப்பை உருவாக்கி அங்கீகாரம் பெற முயற்சிக்க முடியாதா ?

ஒலிம்பிக் விளையாட்டில் பங்குபெறும் நாடுகளுடன் நாடுகளற்ற குழு ஒன்றும் போட்டியிட முடிகிறதல்லவா ?

உக்கிப் போன நாடுகடந்த தமிழீழம் போல் இல்லாமல் பொதுவாக நாடற்ற தமிழினம் சார்பாக ஒரு அமைப்பை உருவாக்க முடியாதா ?

Wakanda வினையும் யாரோ ஐநா நாடுகள் பட்டியலில் இட முயற்சித்ததாகக் கேள்விப்பட்டுள்ளேன்.

நீங்களுமா இணையவன்? 

1. நித்யாநந்தா தனது நாட்டுக்கு .gov.XX இணைய முகவரியை கூட பெறவில்லை. 

2. Sister Cities, Twinned Towns என்பது நகர்கள் ஒன்றோடு ஒன்று இணையாகி செயல்படும் திட்டம். இது அமெரிக்காவில் ஒரு தனியார் நிறுவனத்தால் நடத்தபடுகிறது போல் தெரிகிறது. இதில் தமது பெயரை இறைமை உள்ள கைலாசா என கொடுத்து விட்டு. நியுவார்க் நகர பிதாவுடன் ஏதோ ஒரு ஒப்பந்தத்தில் கை எழுத்து போட்டு விட்டு. அமெரிக்கா கைலாசாவை அங்கீகரித்தது என கரடி விடுகிறார் நித்தி.

எங்கே இந்த ஒப்பந்தம்? அதன் PDF?

அமெரிக்காவில் ஒரு மேயரா சர்வதேச விடயமான நாடுகள் அங்கீகரிப்பை மேற்கொள்வார்?

எனது அனுமானம் எதோ ஒரு service partner agreement ஐ எழுதி விட்டு அதை ஏதோ நாடுகளிடையான ஒப்பந்தம் போல கரடி விடுகிறார்கள்.

ஆனால் இப்படி ஒரு சின்ன ஒப்பந்தம் கூட இந்த டுபாகூருடன் போட்டிருக்க கூடாது மேயர் என்பது வேறு விடயம்.

3. மேலே நீங்கள் இணைத்த ஐநா அங்கீகார டுபாகூர் என்ன தெரியுமா ?

OHCHR எனும் ஐநா அமைப்பு ஒரு விடயம் சம்பந்தமாக கருத்து உள்வாங்கலை செய்துள்ளது. 

https://www.ohchr.org/en/calls-for-input/2022/call-inputs-comments-draft-statement-non-state-actors-and-enforced?fbclid=IwAR2ZBtpsNKBu9rxIVhoN8BpBi7hSYOXIEwoXSMRvPPM64sRri-aDL7yJpys

இந்த call for input இல் - நாடுகள் சிலதும், சமூக அமைப்புகள் பலதும் தமது கருத்தை எழுத்து மூலம் கொடுத்துள்ளன.

இதில் யூனியன் ஒவ் கைலாசா ஒரு சிவில் அமைப்பாக கொடுத்ததை, அப்படியே பதிந்துள்ளார்கள். ஆலடி சனசமூக நிலையம் ஒரு அறிக்கை கொடுத்தால் அதையும் போட்டிருப்பார்கள்.

இப்படிதான் கைலாசாவின் ஒவ்வொரு நடவடிகையும். 

எமக்கு ஒரு உலகளாவிய அமைப்பை அமைக்க வேண்டும் என்பது உண்மையே. ஆனால் அதை எப்படி அமைக்ககூடாது என்பதற்கு நா.க. அரசும், நித்தியும் நல்ல பாடங்கள்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, இணையவன் said:

https://gov.shrikailasa.org/category/briefings-statements/united-nations-reports/

நித்தியானந்தாவின் செயல்கள் கோமாளித்தனமாக இருந்தாலும் சில நகர்வுகள் நீண்ட திட்டத்துடன் செயல்படுவதுபோல் உள்ளது. 

இதே போன்று நாமும் மனித உரிமை, சமாதானம், பச்சைப் புரட்சி, தொன்மையான இன அடையாளத்தைப் பாதுகாத்தல் போன்ற செயல்திட்டங்களோடு நிலம் இல்லாத நாடு போன்ற அமைப்பை உருவாக்கி அங்கீகாரம் பெற முயற்சிக்க முடியாதா ?

ஒலிம்பிக் விளையாட்டில் பங்குபெறும் நாடுகளுடன் நாடுகளற்ற குழு ஒன்றும் போட்டியிட முடிகிறதல்லவா ?

உக்கிப் போன நாடுகடந்த தமிழீழம் போல் இல்லாமல் பொதுவாக நாடற்ற தமிழினம் சார்பாக ஒரு அமைப்பை உருவாக்க முடியாதா ?

Wakanda வினையும் யாரோ ஐநா நாடுகள் பட்டியலில் இட முயற்சித்ததாகக் கேள்விப்பட்டுள்ளேன்.

ஈழத்தமிழினத்திற்கு உள்ள மாபெரும் குறைபாடு என்னவென்றால் ஒழுங்கான நிறுதிட்டமான தலைமையோ அல்லது ஒரு அமைப்போ இல்லாமைதான். மற்றும் படி சகல  முன்னேற்றங்களுக்கும்  ஈழத்தமிழ் மக்கள் தயாராகவே உள்ளனர்.

Posted
15 hours ago, goshan_che said:

நீங்களுமா இணையவன்? 

1. நித்யாநந்தா தனது நாட்டுக்கு .gov.XX இணைய முகவரியை கூட பெறவில்லை. 

தகவலுக்கு நன்றி. எனக்கு ஆங்கிலப் புலமை இல்லை, ஆழமாக வாசிக்கவில்லை. 😀

ஒரு அங்கீகரிக்கப் படாத நாட்டிற்கான புதிய domaine .XX எடுப்பது இலகுவானதல்ல என்று நினைக்கிறேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, இணையவன் said:

தகவலுக்கு நன்றி. எனக்கு ஆங்கிலப் புலமை இல்லை, ஆழமாக வாசிக்கவில்லை. 😀

ஒரு அங்கீகரிக்கப் படாத நாட்டிற்கான புதிய domaine .XX எடுப்பது இலகுவானதல்ல என்று நினைக்கிறேன்.

புலமையை விட - அநேகர் தந்தி டிவி உட்பட நித்தி தனது டுபாகூர் இணையதளத்தில் போடுவதை அப்படியே செய்தியாக்குவதுதான் ஏன் என விளங்கவில்லை.

உண்மைதான் .gov.xx டொமேயின் எடுப்பது கடினம் ஆனால் அமெரிக்கா நாடு என அங்கீகரித்தால் அதன் பின் இலகு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, விசுகு said:

பிறகு எதுக்கு  அங்க?
  எங்கள  உளவு  பார்க்கவா???

உங்களை உளவு பார்த்து நான் என்ன செய்வது நீங்க நல்ல பிள்ளை இந்த பக்கத்திலயும் தலை வச்சு படுக்க மாட்டீங்க 😛

22 hours ago, goshan_che said:

இருந்தா கண்டு பிடிக்க மாட்டமா என்ன?

🤣

அப்ப எங்க தான் மனுசன் இருக்கிறார்

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.