Jump to content

சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் – ஜேர்மனி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் – ஜேர்மனி

சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் – ஜேர்மனி

ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் என ஜேர்மனி அறிவித்துள்ளது.

அத்தகைய கோரிக்கையை முன்வைக்கப்பட்டு போலந்தும் அனுமதியை வழங்கினால் அவற்றை வழங்குவோம் என ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படுவதையும், உக்ரைனின் பிரதேசம் விடுவிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜேர்மனியால் தயாரிக்கப்பட்ட டாங்கிகளை உக்ரேனுக்கு வழங்க ஐரோப்பிய நாடுகளுக்கு பெர்லின் அங்கீகாரம் அளிக்கத் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுவரை, மேற்கத்திய நாடுகளால் வடிவமைக்கப்பட்ட முக்கிய போர் டாங்கிகள் எதுவும் ரஷ்யப் படைகளுக்கு எதிரான போருக்கு வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

https://athavannews.com/2023/1321357

Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

ரஷ்ய மாண்புமிகு எப்படிச் சிந்திப்பார் என்பதை மேற்குலகச் சிந்தனையால் உய்த்துணரமுடியாது. மாண்புமிகு என்பதாலேயே அவர் ரஷ்ய மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு உரியவல்லர். மாண்புமிகு என்பதால

குமாரசாமி

ஜேர்மனி சிறுத்தை டாங்கி உக்ரேனுக்கு அனுப்புது. ரஷ்யன் துண்டைக்காணம் துணியக்காணம் ஓடுறான் உக்ரேன்ல சனநாயக கொடிய பறக்க விடுறம் உலகம் நிம்மதி பெருமூச்சு விடுது. பீப்பிள் ஹப்பியோ ஹப்பி...

goshan_che

1. புட்லர் தனது டாங்கிகளை, 2ம் உலக யுத்த முடிவில் பிரான்சு மக்கள், அமரிக்க படைகளை வரவேற்றது போல், உக்ரேனியர் பூவெறிந்து வரவேற்பர் என நினைத்தார்.  2. முதல் நாள் கியவ் நோக்கி வந்த படையினர் சிலர், ச

  • கருத்துக்கள உறவுகள்

Leopard tanks - சிறுத்தை டாங்கிகள் 

யப்பா... என்னா மொழிபெயர்ப்பு...🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி சிறுத்தை டாங்கி உக்ரேனுக்கு அனுப்புது.
ரஷ்யன் துண்டைக்காணம் துணியக்காணம் ஓடுறான்
உக்ரேன்ல சனநாயக கொடிய பறக்க விடுறம்
உலகம் நிம்மதி பெருமூச்சு விடுது.
பீப்பிள் ஹப்பியோ ஹப்பி...:hahaha:

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பிரெஞ்சுச்செய்திகளின்படி

யேர்மனியும் பிரான்சும் தொடர்ந்து  உக்ரேனுக்கான உதவிகளை வளங்கும்

அது  போரின்  முடிவுவரை  தொடரும்  என்கிறார்கள் இரு நாட்டுத்தலைவர்களும்...

இதைப்பார்த்தபோது  (வெளிப்படையான  அறிவித்தல்)

ரசியா மீதான  அச்சம் இவர்களுக்கு முழுவதுமாக இல்லாமல் போய் விட்டது  தெரிந்தது

நம்ம நாட்டில  தான் மதில் மீது  நின்றோம்

இங்க  என்றாலும்  இந்த  நாட்டு பாதுகாப்பு  சம்பந்தமான கோரிக்கைகளுக்கு  ஆதரவாக  இருப்போம்

Edited by விசுகு
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விசுகு said:

இன்றைய பிரெஞ்சுச்செய்திகளின்படி

1) யேர்மனியும் பிரான்சும் தொடர்ந்து  உக்ரேனுக்கான உதவிகளை வளங்கும்அது  போரின்  முடிவுவரை  தொடரும்  என்கிறார்கள் இரு நாட்டுத்தலைவர்களும்...

இதைப்பார்த்தபோது  (வெளிப்படையான  அறிவித்தல்)

2) ரசியா மீதான  அச்சம் இவர்களுக்கு முழுவதுமாக இல்லாமல் போய் விட்டது  தெரிந்தது

3) நம்ம நாட்டில  தான் மதில் மீது  நின்றோம்

4) இங்க  என்றாலும்  இந்த  நாட்டு பாதுகாப்பு  சம்பந்தமான கோரிக்கைகளுக்கு  ஆதரவாக  இருப்போம்

1)  நெப்போலியனுக்கும் கிற்லருக்கும் விழுந்த அடி அப்படி 

2) அச்சம் இல்லாமலா இப்படி ஓடி ஓடி உக்ரேனுக்காக உழைக்கிறார்கள்

3) மதில்மேல் பூனை என்ஒப்புக்கொண்டாயிற்று 

4) வேறு வழி?  

🤣

Edited by Kapithan
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

1)  நெப்போலியனுக்கும் கிற்லருக்கும் விழுந்த அடி அப்படி 

2) அச்சம் இல்லாமலா இப்படி ஓடி ஓடி உக்ரேனுக்காக உழைக்கிறார்கள்

3) மதில்மேல் பூனை என்ஒப்புக்கொண்டாயிற்று 

4) வேறு வழி?  

🤣

ஒன்று மட்டும் புரிகிறது

நீங்கள் இங்கும் சரி வெளியிலும் சரி ஒன்றையும் படிப்பதில்லை

நீங்கள் கண்டுபிடித்தது 3 கால் முயல் தான் என்பதை நான் நம்பியாகணும் என்ற பிடிவாதத்தையாவது மாத்தமுடியாதா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

ஒன்று மட்டும் புரிகிறது

நீங்கள் இங்கும் சரி வெளியிலும் சரி ஒன்றையும் படிப்பதில்லை

நீங்கள் கண்டுபிடித்தது 3 கால் முயல் தான் என்பதை நான் நம்பியாகணும் என்ற பிடிவாதத்தையாவது மாத்தமுடியாதா??

கோவிக்காதீர்கள் விசுகர், 

நான் என்ன வைச்சுக்கொண்டா வஞ்சகம் செய்யிறன். 

🤣

(பகிடிக்காக எழுதினேன். கோவிக்காதீர்கள் 😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா vs யுக்ரேன்: லெப்பர்ட்-2 பீரங்கியை தருமாறு யுக்ரேன் வற்புறுத்துவது ஏன்?

ரஷ்யா - யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

லெப்பர்ட்-2 பீரங்கி

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ரஷ்யாவை சமாளிக்க ஜெர்மனி தயாரிப்பான லெப்பர்ட்-2 பீரங்கியைக் கேட்கும் யுக்ரேனின் வேண்டுகோளை நிறைவேற்ற ஐரோப்பிய நாடுகள் தயாராகி வருகின்றன. இந்த பீரங்கியை யுக்ரேன் கேட்பது ஏன்? அதன் வலிமை என்ன? போர்க்களத்தில் லெப்பர்டு பீரங்கியால் என்ன மாறுதலை கொண்டு வர முடியும்? 

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டணியில் சேரும் யுக்ரேனின் முயற்சியால் ஆத்திரமடைந்த ரஷ்யா, கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி அந்நாட்டின் மீது படையெடுத்தது. யுக்ரைனின் முடிவு தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக முடிந்து விடும் என்பது ரஷ்யாவின் வாதம். 

யுக்ரேன் - ரஷ்யா போர் ஓராண்டை நெருங்குகிறது

ரஷ்யாவுக்கு எதிர்பார்த்த வேகத்தில் வெற்றி கிட்டவில்லை என்றாலும் போரின் தொடக்கத்தில் யுக்ரேனின் வடக்கிலும், கிழக்கிலும் ரஷ்யப் படைகள் முன்னேறி கணிசமான இடத்தைப் பிடித்தன.

 

ரஷ்யாவுக்கு எதிராக யுக்ரேனால் சில நாட்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிபுணர்களின் கணிப்புகளை பொய்யாக்கும் விதத்தில் யுக்ரேன் தீரத்துடன் போராடி ரஷ்யாவுக்கு எதிராக நீண்ட காலம் தங்களால் போரிட முடியும் என்று நிரூபித்துள்ளது. 

அமெரிக்கா மற்றும் பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கொடுத்த ஆயுதங்கள் மற்றும் நிதியுதவியுடன் ரஷ்யாவை எதிர்கொண்ட யுக்ரேன் படைகள், அண்மைக் காலமாக போரின் போக்கையே மாற்றியுள்ளன. ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களில் கணிசமான இடங்களை யுக்ரேன் படைகள் மீட்டுள்ளன.

ரஷ்யா - யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைக்க பாலம் தகர்க்கப்பட்ட காட்சி

லெப்பர்ட்-2 பீரங்கியை விரும்பும் யுக்ரேன்

ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் அளித்த ஆயுதங்கள் அனைத்துமே தற்காப்புக்கானவை. அதாவது, ரஷ்ய விமானப்படை. ஏவுகணை வீச்சை சமாளிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களை மட்டுமே அந்நாடுகள் யுக்ரேனுக்கு வழங்கியுள்ளன. 

கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவுக்கு எதிராக போராடும் யுக்ரேன், போரை தனக்கு சாதகமாக்க, ஜெர்மனி தயாரிப்பான லெப்பர்ட்-2 பீரங்கிகளைத் தருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

போர்க்களத்தில் ரஷ்யா பிரதானமாக பயன்படுத்தும் டி-90 பீரங்கிகளின் தாக்குதலை லெப்பர்ட்-2 பீரங்கிகளை கொண்டு சமாளித்து விட முடியும் என்று யுக்ரேன் நம்புகிறது. 

யுக்ரேன்
 
படக்குறிப்பு,

ரஷ்யாவின் டி-90 பீரங்கி

லெப்பர்ட்-2 பீரங்கியின் வலிமை என்ன? 

வரலாற்று ரீதியாகவே, நிலத்தில் வல்லரசாக திகழும், உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யா, தனது மிக நீண்ட எல்லையை பாதுகாக்க ராணுவத்தில் பீரங்கிகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. ரஷ்யப் படையில் பிரதான தாக்குதல் ஆயுதமாக திகழும் டி-90 பீரங்கிகளை எதிர்கொள்ளும் வகையிலேயே லெப்பர்ட்-2 பீரங்கிகள் வடிவமைக்கப்பட்டன. 

பனிப்போர் காலகட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த கிராஸ் - மஃபே வெக்மன்(Krauss-Maffei Wegmann) என்ற நிறுவனம் 1979-ம் ஆண்டு லெப்பர்ட்-2 பீரங்கியை அறிமுகப்படுத்தியது. லெப்பர்ட்-1 பீரங்கிகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக இது அமைந்தது. ஆயுத தளவாடங்கள் குறித்த மிலிட்டரி-டுடே இணையதளம் அளித்துள்ள தகவல்படி, அதிகபட்சம் மணிக்கு 72 கிலோமீட்டர் வேகத்தில் நகரக் கூடிய இந்த பீரங்கிகளைக் கொண்டு 550 கி.மீ. தொலைவு வரையுள்ள இலக்குகளை  தாக்கி அழிக்க முடியும்.

இதன் எடை 67 டன். ரஷ்யாவின் டி-90 பீரங்கிகளைக் காட்டிலும்  இது அதிகம். கமாண்டர் உள்பட 4 பேர் உள்ளிருந்து செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் நடமாட்டத்தை 360 டிகிரி கண்காணிக்கும் வசதி உண்டு. கண்ணி வெடிகள், பீரங்கிகளை அழிக்கும் எறிகணைகள் போன்றவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் அம்சங்களும் உள்ளன.

ரஷ்யா - யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

லெப்பர்ட்-2 பீரங்கி

ஐரோப்பாவில் 13 நாடுகளிடம் லெப்பர்ட்-2 பீரங்கிகள் கையிருப்பு

போர்க்களத்தில் மிகச்சிறந்த பீரங்கிகளாக கருதப்பட்ட லெப்பர்ட்-2 பீரங்கிகள் ஆப்கன் போர்க்களத்தில் தனது வலிமையை நிரூபித்துள்ளன. அன்றைய மேற்கு ஜெர்மனி தயாரிப்பில் உருவான இந்த பீரங்கிகள், ஐரோப்பாவில் மற்ற நேட்டோ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போதைய நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லெப்பர்ட்-2 பீரங்கிகள் ஜெர்மனி உள்பட பல நாடுகளின் ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளன. 

ஆஸ்திரியா, டென்மார்க், பின்லாந்து, ஜெரமனி, கிரீஸ், ஹங்கேரி, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய 13 ஐரோப்பிய நாடுகளில் லெப்பர்ட்-2 பீரங்கிகள் பயன்பாட்டில் இருப்பதாக ஐரோப்பிய கவுன்சிலின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. 

லெப்பர்ட்-2 பீரங்கியை யுக்ரேனுக்கு வழங்க போலந்து தயார்

ஐரோப்பிய நாடுகளின் ராணுவத்தில் அதிக அளவில் லெப்பர்ட்-2 பீரங்கிகள் புழக்கத்தில் இருப்பதால், கையிருப்பில் சிறு பகுதியை மட்டும் அந்நாடுகள் அளித்தாலே போதும் என்கிறது யுக்ரேன். அவ்வாறு, மொத்தம் 300 பீரங்கிகளைக் கொடுத்தாலே போரில் ரஷ்யாவை தோற்கடித்து விடுவோம் என்று யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

போரின் தொடக்கம் முதலே ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு கொண்டுள்ள போலந்து, யுக்ரேனின் வேண்டுகோளை நிறைவேற்ற தயாராகவே இருக்கிறது. யுக்ரேனுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவி வரும் போலந்து, லெப்பர்ட்-2 பீரங்கிகளை வழங்கவும் முன்வந்துள்ளது. இதேபோல் பின்லாந்தும் யுக்ரேனுக்கு உதவ உறுதியளித்துள்ளது.

போலந்தும், பின்லாந்தும் சேர்ந்து 25 லெப்பர்ட்-2 பீரங்கிகளை யுக்ரேனுக்கு வழங்க தயாராகி வருகின்றன.

யுக்ரேனுக்கு லெப்பர்ட்-2 பீரங்கியை போலந்து வழங்குவதில் என்ன சிக்கல்? 

யுக்ரேனுக்கு லெப்பர்ட்-2 பீரங்கியை வழங்க போலந்து தயாராக இருந்தாலும், அந்த பீரங்கியைத் தயாரித்த நாடு என்ற வகையில் ஜெர்மனியின் அனுமதியைப் பெறுவது அவசியம் என்ற விதிதான் இதுகாறும் அந்நாட்டை தடுத்து வைத்துள்ளது. 

அண்மையில் பிரான்சைச் சேர்ந்த எல்.சி.ஐ. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "இந்த தருணம் வரை எங்களிடம் அனுமதி கேட்கப்படவில்லை. ஒருவேளை கேட்கப்பட்டிருந்தால் நாங்கள் அதற்கு குறுக்கே நின்றிருக்க  மாட்டோம்," என்று ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னா பேர்பக் தெரிவித்தார். 

ஜெர்மனி அனுமதி தராவிட்டாலும் பீரங்கிகளை தருவோம் - போலாந்து

இதையடுத்து, லெப்பர்ட்-2 பீரங்கிகளை யுக்ரேனுக்கு வழங்க அனுமதி வேண்டி ஜெர்மனியிடம் உடனே விண்ணப்பிக்கப் போவதாக போலந்து பிரதமர் மத்தேவுஸ் மொராவியட்ஸ்கி மறுநாளே தெரிவித்தார். ஒருவேளை ஜெர்மனி அனுமதி தராமல் போனாலும் கூட யுக்ரேனுக்கு லெப்பர்ட்-2 பீரங்கிகளை போலந்து வழங்கும் என்று அவர் கூறினார். 

"ஜெர்மனியின் ஒப்புதல் கிடைக்காமல் போனாலும், கூட்டணி என்ற அடிப்படையில் நாங்கள் மற்ற நாடுகளுடன் சேர்ந்து, எங்கள் பீரங்கிகளை உக்ரைனுக்கு அளிப்போம்," என்றார் மத்தேவுஸ் மொராவியட்ஸ்கி.

ரஷ்யா - யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

போலந்து பிரதமர் மத்தேவுஸ் மொராவியட்ஸ்கி

லெப்பர்ட்-2 பீரங்கி யுக்ரேனுக்கு எந்த வகையில் உதவும்?

ரஷ்ய பீரங்கிகளைக் காட்டிலும் மேற்கத்திய தயாரிப்புகள் மிகவும் கனமானவை. இதனால் போர்க்களத்தில் அனைத்து சூழலிலும் அதனை பயன்படுத்த முடியாது என்கிறார் பாதுகாப்பு நிபுணரான முனைவர் ஜாக் வாட்லிங். அவர், ராயல் யுனைடெட் சர்வீசஸ் கல்வி நிறுவனத்தில் தரைவழிப் போர் குறித்து ஆராயும் மூத்த ஆராய்ச்சியாளர் ஆவார். 

"மேற்கத்திய நாடுகள் தயாரித்துள்ள பீரங்கிகள் கனமானவை என்பதால் உக்ரைனில் உள்ள பெரும்பாலான மேம்பாலங்களை கடக்க முடியாது. ஆகவே, அவற்றிற்கென பிரத்யேக மேம்பாலங்களை உடனுக்குடன் அமைக்க வல்ல வாகனங்களும் உடன் அணிவகுத்துச் செல்ல வேண்டியிருக்கும்," என்பது அவரது கருத்து. 

"யுக்ரேனில் ஆறுகள் குறுக்கிடாத இடங்களில் மட்டுமே இந்த வகை பீரங்கிகளை பயன்படுத்த முடியும். மேலும், சதுப்பு நிலம் மற்றும் சகதியில் சிக்கிக் கொள்ளும் என்பதால் அத்தகைய இடங்களிலும் இந்த பீரங்கிகளை பயன்படுத்த முடியாது" என்று அவர் மேலும் கூறுகிறார். 

அதேநேரத்தில், யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கும் பீரங்கிகளை உடனே தாக்கி அழிக்க ரஷ்யா முனையும் என்பதால், அவை ரஷ்யப் படைகளின் உடனடி இலக்குகளாகி விடக் கூடும் என்றும் ஜாக் வாட்லிங் தெரிவித்துள்ளார். 

https://www.bbc.com/tamil/articles/cv2988yrzzvo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஏராளன் said:

யுக்ரேன் - ரஷ்யா போர் ஓராண்டை நெருங்குகிறது

ரஷ்யாவிட்ட கிடக்கிறது முழுக்க தகர டப்பா எண்டாலும் ஒரு வருசம் நிண்டு பிடிக்குது..   :tongue:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

யுக்ரேன் - ரஷ்யா போர் ஓராண்டை நெருங்குகிறது

இன்னும் 3 நாளே முடியேல்லை.

சும்மா பி பி சி பொய் சொல்லுது.

ஒரு வல்லரசு, உ(க்ரேனில்)லகிலேயே 2ம் பெரிய இராணுவம், ஒரு உக்கல் நாட்டை ஒரு வருடமா முக்கி, 20% க்கும் கீழான நிலப்பரப்பையே பிடித்தது என்றால் யார் நம்புவான்?

 

Edited by goshan_che
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.B55426AD-4AEB-48F2-8EB5-E30D10F07358.jpeg.b79a3625f75f25c7114c6fb7aa973197.jpeg

உறுதிபடுத்தபடாத தகவல்கள் அடிப்படையில் ஜேர்மனி லெப்பர்ட் 2 டாங்கிகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக கார்டியன் சொல்கிறது. 

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரச்சனை என்றால் இருதரப்பு ஊடகங்கள் தரும் செய்திகளை வைத்து கருத்தெழுதுவது தான் சிறப்பு.

அண்மைக் காலமாக உக்ரேன் விடயத்தில் பிபிசி  தரும் செய்திகளை வைத்து நியாயம் கற்பிப்பதை கேவலமாக கருதுகின்றேன். ஏனெனில் ஈழத்தமிழர் பிரச்சனையில் பிபிசியின்  நிலைப்பாட்டினை திட்டியவர்கள் யாரென்று  பார்த்தால்........

ஐயோ கடவுளே தலைசுத்துது.

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனுக்கு லெப்பர்ட் 2 தாங்கிகளை விநியோகிக்க ஜேர்மனி அனுமதி

By SETHU

25 JAN, 2023 | 06:20 PM
image

உக்ரேனுக்கு தனது லெப்பர்ட் 2 ரக இராணுவத் தாங்கிகளை விநியோகிப்பதற்கு ஜேர்மனி அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வமாக சம்மதித்துள்ளது. 

லெப்பர்ட் 2ஏசி ரகத்தைச் சேர்ந்த 14 தாங்கிகளை உக்ரேனுக்கு ஜேர்மனி வழங்கும் என ஜேர்மனிய அரசாங்கப் பேச்சாளர் ஸ்டீபன் ஹேபேஸ்ட்ரெய்ட் தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகள் தம்மிடமுள்ள லெப்பர்ட்2 தாங்கிளை உக்ரேனுக்கு வழங்கவதற்கும் ஜேர்மனி அனுமதியளித்துள்ளது.

ரஷ்ய படையெடுப்பை எதிர்கொள்வதற்காக இத்தாங்கிகளை வழங்குமாறு உக்ரேன் கோரியது. எனினும் அதற்கு அனுமதியளிக்க ஜேர்மனி தயங்கிவந்தது.

இத்தாங்கிகளை உக்ரேனுக்கு வழங்குமாறு மேற்குலக நட்பு நாடுகளும் ஜேர்மனியை வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், இதற்கான அனுமதியை ஜேர்மனி இன்று வழங்கியுள்ளது.

ஜேர்மனியின் தீர்மானத்தை பிரித்தானிய பிரதமர் ரஷி சுனக் வரவேற்றுள்ளார். 

https://www.virakesari.lk/article/146680

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

ஜேர்மனியின் தீர்மானத்தை பிரித்தானிய பிரதமர் ரஷி சுனக் வரவேற்றுள்ளார். 

 

இந்தப்பிரித்தானியருடன் சேர்ந்து  நானும் வரவேற்கின்றேன்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருட்டல் உக்ரேன் முதல்ல காசு கேட்டால் குடுத்திச்சினம்
இப்ப டாங்கி குடுக்கினம்
பிறகு போர் விமானங்கள் குடுப்பினம்
அதுக்கு பிறகு இராணுவ வீரர்மாரை குடுப்பினம்
பிறகென்ன  ஒரே ஜாலிதான்

ரஷ்யாவை விட மேற்குலகுக்குத்தான் போர் வக்கிரம் கூட. மனித இழப்புகளை பற்றி கவலைப்படாதவர்கள். பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை வைகாதவர்கள்.

Bild

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
CNN — 

The leaders of the United States and Germany each announced Wednesday they will send contingents of tanks to Ukraine, reversing their longstanding trepidation at providing Kyiv with offensive armored vehicles and unleashing powerful new tools in Ukraine’s efforts to retake territory seized by Russia.

The announcement by German Chancellor Olaf Scholz that he will send Leopard 2 tanks was coupled with an announcement from US President Joe Biden that he was providing 31 M1 Abrams tanks to Ukraine, reversing the administration’s longstanding resistance to requests from Kyiv for the highly sophisticated but maintenance-heavy vehicles. 

The dual announcements made for a landmark moment that followed weeks of intense pressure on Berlin from some of its NATO allies. The decisions were the result of prolonged diplomacy between Germany, the United States and other European allies, and come as Ukrainian President Volodymyr Zelensky prepares for a new Russian offensive this spring.

Speaking from the White House, Biden said the tanks would “enhance Ukraine’s capacity to defend its territory and achieve its strategic objectives” in both the near and long terms.

And while he touted the ability of the tanks to help Ukraine “counter Russia’s evolving tactics and strategy on the battlefield,” Biden insisted they should not be viewed by Moscow as an “offensive threat.”

“This is not an offensive threat to Russia. There is no offensive threat to Russia if Russian troops return to Russia, where they belong,” he said.

Earlier, Scholz told lawmakers in Germany’s parliament the decision to send Leopard 2 tanks had come after consultations with western allies.

“It is right that we advanced bit by bit. That is the only principle that can work in such dangerous conditions,” he said.

https://www.cnn.com/2023/01/25/europe/german-tanks-ukraine-intl/index.html

மொத்தமா 31 ஏபிரகாம் உக்ரேனுக்கு போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேட்டோ இறங்கியுள்ளது தெரிகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இந்தப்பிரித்தானியருடன் சேர்ந்து  நானும் வரவேற்கின்றேன்

பிரித்தானிய பிரதமருடனும் உங்களோடும் சோந்து நானும் வரவேற்கிறேன்.

இந்த நேரத்தில் புதினுடை ஆதரவாளர்கள் ரஷ்ய ராணுவம் ரஷ்யாவுக்குத் திரும்ப வேண்டும் என்று புதினுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பிரித்தானிய பிரதமருடனும் உங்களோடும் சோந்து நானும் வரவேற்கிறேன்.

இந்த நேரத்தில் புதினுடை ஆதரவாளர்கள் ரஷ்ய ராணுவம் ரஷ்யாவுக்குத் திரும்ப வேண்டும் என்று புதினுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ரசியா தன்னிடம் உள்ள எல்லவற்றையும் வைத்து ஆட்டம் காட்டி முடிச்சிட்டார். இனி நம்ம ஆட்டத்தை உலகம் பார்க்கலாம் 👍 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகவாதிகளும் மனிதாபிமானத்தை  சந்தர்ப்பத்திற்கேற்றவாறு மாற்றுபவர்களும்.....😡

Bild

Bild

இங்கே வராத இரக்கம் அங்கே வருகின்றதாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விசுகு said:

நேட்டோ இறங்கியுள்ளது தெரிகிறது 

நாள், மூகூர்த்தம் பார்த்து தானாம் இறங்க போறாங்கள். நேட்டோ இறங்கினால் சொல்ல வேணுமே. ஆப்கான் மாதிரி ஓடா விட்டால் போதும்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள மனித உரிமை மற்றும் நேட்டோ மேற்குலக விசுவாசிகளின் நாடகம்...:face_with_medical_mask:

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

ஒரு பிரச்சனை என்றால் இருதரப்பு ஊடகங்கள் தரும் செய்திகளை வைத்து கருத்தெழுதுவது தான் சிறப்பு.

அண்மைக் காலமாக உக்ரேன் விடயத்தில் பிபிசி  தரும் செய்திகளை வைத்து நியாயம் கற்பிப்பதை கேவலமாக கருதுகின்றேன். ஏனெனில் ஈழத்தமிழர் பிரச்சனையில் பிபிசியின்  நிலைப்பாட்டினை திட்டியவர்கள் யாரென்று  பார்த்தால்........

ஐயோ கடவுளே தலைசுத்துது.

இதை தான் சொல்லுவ‌து ப‌ச்சோந்தி த‌ன‌ம் என்று தாத்தா

உக்கிரேன் ர‌ஸ்சியா இராணுவ‌த்துக்கு பாதிப்பை ஏற்ப‌டுத்தினா அத‌ ப‌ல‌ வித‌வாய் காட்டுவின‌ம்..............ர‌ஸ்சியா ந‌ட‌த்தின‌ அதி ப‌ய‌ங்க‌ர‌ தாக்குத‌ல‌ மூடி ம‌றைப்பின‌ம்..........இவை மூடி ம‌றைத்தாலும் இந்தியா ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் உண்மை வெளியில் வ‌ந்து கொண்டு தான் இருக்கு................போரில் வெல்ல‌ப் போவ‌து புட்டின் தான்

அடிக்கு மேல‌ அடி விழுந்தால் புட்டினின் காலில் போய் விழுவின‌ம் இப்ப‌ ஆயுத‌ம் கொடுக்கும் ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ள்

பேச்சு வார்த்தைக்கு வாங்கோ பேசி தீர்ப்போம் அது இது என்று ஹா ஹா 

ர‌ஸ்சியா நாட்டில் ம‌ருந்துக்கு தான் சிறு த‌ட்டுப் பாடு அதை சீக்கிர‌ம் ச‌ரி செய்வோம் என்று புட்டின் சொல்லி இருக்கிறார்

ம‌ருந்துக‌ளை ர‌ஸ்சியாவுக்கு இந்தியா பின் க‌த‌வால் உத‌வும் 
இந்தியாவிட‌ம் இருந்து ர‌ஸ்சியா ம‌ருந்துக‌ளை இற‌க்கும‌தி செய்வார்க‌ள்....................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெப்பர்ட்…. சலஞ்சர்…..ஏப்ராம்…..

புட்டின் மனநிலை எப்படியோ தெரியாது…

ஆனால் புட்டினின் யாழ்கள பிரிகேட் வெரி அப்செட்…

எந்தளவுக்கு அப்செட் எண்டால்….

ஒரு பதிவில் யூதரான செலன்க்ஸியின் உக்ரேனை நாசிகளக சித்தரித்து பொய் மீம்ஸ்….

இன்னொரு பதிவில்…தாமே போடுகிறார்கள் - இஸ்ரேலை நாயாக சித்தரிக்கும் நியோ-நாசி மீம்ஸ்🤣.

# முட்டு சந்து பரிதாபங்கள் 

Edited by goshan_che
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.