Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவிச்ச பனங்கிழங்கும் இடிச்ச மிளகு சம்பலும் | Panam Kizhangu Recipe in Tamil | Milaku Sambal

Featured Replies

 யாழ்ப்பணம் எண்டாலே பனங்கிழங்கு தான் முதலாவதா யாபகம் வரும். வாங்க அந்த பனங்கிழங்கு எப்பிடி அவிக்கிற எண்டும் அதோட சேர்த்து சாப்பிட ஒரு மிளகு சம்பலும் செய்வம் வாங்க. நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனங்கிழங்கு,மரவள்ளிக்கிழங்குக்கு உந்த உப்பு மிளகு உள்ளி கூட்டு அந்தமாதிரி இருக்கும்.:cool:
அப்பிடியே பனங்கிழங்கு துவையலும் சொல்லி வேலையில்லை.....வேற லெவலாய் இருக்கும் ப்ரோ..:beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

.....வேற லெவலாய் இருக்கும் ப்ரோ..:beaming_face_with_smiling_eyes:

அது என்ன லெவெல் ப்ரா? 🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, ராசவன்னியன் said:

அது என்ன லெவெல் ப்ரா? 🤔

சொல்ல வார்த்தைகள் இல்லை ப்ரோ :grinning_face:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

அது என்ன லெவெல் ப்ரா? 🤔

High Level Bro!😃

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

   உள்ளி பச்சையாக போடும் போது வயிற்றுக்கு தீங்கு வராதா ?
 
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தில் யாழ் சமையலின் பனங்கிழங்கும் உள்ளி மிளகு சாம்பலும் அருமை......சொல்லி வேல இல்ல ..... கு. சா சொன்னதுபோல் அவித்த  மரவள்ளி கிழங்குக்கும் அந்த மாதிரி இருக்கும் ......நன்றி சிவரதன் ......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சிவரதன்.

ஊரில் இருந்த நேரம் நாங்களும் பனம்பாத்தி போட்டு பனங்கிழங்கு பூரான் சாப்பிட்டது தான் நினைவுக்கு வருகிறது.

போதாக்குறைக்கு கொழும்புக்கு போகும்போது 50 பனங்கிழங்கு 10 தேங்காய் 20-25 மாம்பழம் குத்தரிசி 10 கொத்து கொண்டு போனால் நல்ல வரவேற்பாக இருக்கும்.

10-15 நாளைக்கு நின்று திண்டு போட்டு வருவோம்.

எனக்கு இதிலே மிகவும் பிடித்தது கிழங்கை பிரித்து நடுதண்டின் கீழ்ப்பாகம் தான்.

அவித்து அரைவாசி காய்ந்த பின்பு சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.

இதே மாதிரி சம்பலும் செய்வோம்.

தனி பச்சை மிளகாய் உப்பு சிறிது மிளகு வைத்து அரைத்து தொட்டும் சாப்பிடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

மிளகு, உள்ளிச் சம்பல் இது வரை சாப்பிட்டுப் பார்க்கவில்லை.
ஒரு நாள் செய்து பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிலாமதி said:

   உள்ளி பச்சையாக போடும் போது வயிற்றுக்கு தீங்கு வராதா ?
 
உள்ளி காலையில் எழுந்ததும் ஒரு பல்லு இரண்டு பல்லு பச்சையாக சப்பிடுபவர்களை பார்த்து உள்ளேன் கொலஸ்ரோல் வராது என்கிறார்கள் உண்மை பொய் தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தமிழ் சிறி said:

மிளகு, உள்ளிச் சம்பல் இது வரை சாப்பிட்டுப் பார்க்கவில்லை.
ஒரு நாள் செய்து பார்க்க வேண்டும்.

பனங்கிழங்கு கூடுதலாக சாப்பிட்டால் வயிற்றுழைவு வரும்.

அதற்காகவே மிளகு சேர்க்கிறார்கள்.பல்சுவையாக இருக்கும்.

நீங்கள் மரவள்ளி வாங்கி அவித்து இப்படி சம்பல் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.

சம்பலை குறைத்து சாப்பிடுங்கள்.

அப:புறம் பின்பக்கம் நாறிடும்.

57 minutes ago, பெருமாள் said:

உள்ளி காலையில் எழுந்ததும் ஒரு பல்லு இரண்டு பல்லு பச்சையாக சப்பிடுபவர்களை பார்த்து உள்ளேன் கொலஸ்ரோல் வராது என்கிறார்கள் உண்மை பொய் தெரியவில்லை .

பெருமாள் உள்ளி தின்பவர்களின் அருகில் போக முடியாது.

கொட்டாவி விட்டால் ஊருக்கே மணக்கும்.

இது சப்பித் தின்பது ரொம்பரொம்ப கஸ்டம்.

குளிசை விழுங்கிறது போல விழுங்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

மிளகு, உள்ளிச் சம்பல் இது வரை சாப்பிட்டுப் பார்க்கவில்லை.
ஒரு நாள் செய்து பார்க்க வேண்டும்.

சிறித்தம்பியர் வாழ்க்கையிலை அரைவாசியை இழந்திட்டியள் :rolling_on_the_floor_laughing:

அவிச்ச உருளைக்கிழங்குக்கும் உள்ளி உப்பு மிளகை சேர்த்து அரைச்சுப்போட்டு சாப்பிட்டு பாருங்கோ தூக்கலாய் இருக்கும் :467:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

பனங்கிழங்கு கூடுதலாக சாப்பிட்டால் வயிற்றுழைவு வரும்.

அதற்காகவே மிளகு சேர்க்கிறார்கள்.பல்சுவையாக இருக்கும்.

நீங்கள் மரவள்ளி வாங்கி அவித்து இப்படி சம்பல் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.

சம்பலை குறைத்து சாப்பிடுங்கள்.

அப:புறம் பின்பக்கம் நாறிடும்.

நம் உணவுகளில்… சாப்பிடும் உணவுடன்,
மருத்துவ குணம் உள்ள சம்பலையும் சேர்த்து உண்ணச் சொல்வது சிறப்பு. 👍🏽

2 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பியர் வாழ்க்கையிலை அரைவாசியை இழந்திட்டியள் :rolling_on_the_floor_laughing:

அவிச்ச உருளைக்கிழங்குக்கும் உள்ளி உப்பு மிளகை சேர்த்து அரைச்சுப்போட்டு சாப்பிட்டு பாருங்கோ தூக்கலாய் இருக்கும் :467:

என்ன குமாரசாமி அண்ணை, முதலில்.. பனங்கிழங்கு என்றீர்கள்,
பிறகு மரவள்ளிக்கிழங்கு என்றீர்கள், இப்ப உருளைக்கிழங்கிலை வந்து நிற்கிறீர்கள். 😂
அந்த சம்பலின்… மரியாதையை, ஆக இறக்கி போட்டியள் போல கிடக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

நம் உணவுகளில்… சாப்பிடும் உணவுடன்,
மருத்துவ குணம் உள்ள சம்பலையும் சேர்த்து உண்ணச் சொல்வது சிறப்பு. 👍🏽

என்ன குமாரசாமி அண்ணை, முதலில்.. பனங்கிழங்கு என்றீர்கள்,
பிறகு மரவள்ளிக்கிழங்கு என்றீர்கள், இப்ப உருளைக்கிழங்கிலை வந்து நிற்கிறீர்கள். 😂
அந்த சம்பலின்… மரியாதையை, ஆக இறக்கி போட்டியள் போல கிடக்கு. 🤣

ஊறுகாய் மாதிரி எதுக்கும் தொட்டுக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

நம் உணவுகளில்… சாப்பிடும் உணவுடன்,
மருத்துவ குணம் உள்ள சம்பலையும் சேர்த்து உண்ணச் சொல்வது சிறப்பு. 👍🏽

என்ன குமாரசாமி அண்ணை, முதலில்.. பனங்கிழங்கு என்றீர்கள்,
பிறகு மரவள்ளிக்கிழங்கு என்றீர்கள், இப்ப உருளைக்கிழங்கிலை வந்து நிற்கிறீர்கள். 😂
அந்த சம்பலின்… மரியாதையை, ஆக இறக்கி போட்டியள் போல கிடக்கு. 🤣

இப்ப நீங்கள் உப்பு சப்பில்லாத சாப்பாடு சாப்பிடுறபடியாலை ஒருவித ரென்சன்ல கதைக்கிறியள். உங்கட பிரச்சனை எனக்கு விளங்குது :379:

  • கருத்துக்கள உறவுகள்
On 25/1/2023 at 23:45, குமாரசாமி said:

இப்ப நீங்கள் உப்பு சப்பில்லாத சாப்பாடு சாப்பிடுறபடியாலை ஒருவித ரென்சன்ல கதைக்கிறியள். உங்கட பிரச்சனை எனக்கு விளங்குது :379:

சிறியரை இதுக்குள்ள அனுமதித்ததே தப்பு.......!  😂

On 25/1/2023 at 21:55, தமிழ் சிறி said:

நம் உணவுகளில்… சாப்பிடும் உணவுடன்,
மருத்துவ குணம் உள்ள சம்பலையும் சேர்த்து உண்ணச் சொல்வது சிறப்பு. 👍🏽

என்ன குமாரசாமி அண்ணை, முதலில்.. பனங்கிழங்கு என்றீர்கள்,
பிறகு மரவள்ளிக்கிழங்கு என்றீர்கள், இப்ப உருளைக்கிழங்கிலை வந்து நிற்கிறீர்கள். 😂
அந்த சம்பலின்… மரியாதையை, ஆக இறக்கி போட்டியள் போல கிடக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

சிறியரை இதுக்குள்ள அனுமதித்ததே தப்பு.......!  😂

இப்போது வார  விடுமுறைக்கு, வீட்டுக்கு போய் கொண்டு இருக்கின்றேன். 😁
அங்கை போய்… நிறைய உள்ளிச் சம்பல் செய்து, கட்டிக் கொண்டு வந்து… பாணுடன் தொட்டு சாப்பிடப் போறன். 🤣

On 25/1/2023 at 23:45, குமாரசாமி said:

இப்ப நீங்கள் உப்பு சப்பில்லாத சாப்பாடு சாப்பிடுறபடியாலை ஒருவித ரென்சன்ல கதைக்கிறியள். உங்கட பிரச்சனை எனக்கு விளங்குது :379:

On 25/1/2023 at 22:35, ஈழப்பிரியன் said:

ஊறுகாய் மாதிரி எதுக்கும் தொட்டுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சட்னி என்றால் அடுப்பில் தாளித்ததுடன் ஒரு கொதி கொதிக்க வைத்து உண்பது. நமது தீவுக்குரிய இந்த சம்பல், அடுப்பில் ஏறாது.

எனக்கு ஒரு சந்தேகம் கண நாளாய் இருந்தது.  இந்த சம்பல், மிளகாயுடன் பெரும் தொடர்பு கொண்டது. ஆகவே இது டச்சுக்காரர் காலத்தில், வந்திருக்க கூடும். அவர்கள் ஆண்ட மலேசியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளில் மட்டுமே உள்ளதால் அப்படி நினைத்தேன்.

ஆனாலும் இந்த மிளகுச் சம்பல், ஒரு விடயத்தினை சொல்கிறது.

மிளகாய் வரும் முன்னே, (பனங்கிழங்கு) மிளகு சம்பல் இருந்துள்ளது. அதில் மிளகாய் மாத்தீடு செய்யப்பட்டு, எம்மிடம் இருந்து, மலேசியா, இந்தோனேசியா போயுள்ளது. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

இப்போது வார  விடுமுறைக்கு, வீட்டுக்கு போய் கொண்டு இருக்கின்றேன். 😁
அங்கை போய்… நிறைய உள்ளிச் சம்பல் செய்து, கட்டிக் கொண்டு வந்து… பாணுடன் தொட்டு சாப்பிடப் போறன். 🤣

ஐக்......கிழங்கு போய் இப்ப பாண்ல்ல வந்து நிக்கிது... யூ மீன் வெள்ளைப்பாண் இல்ல தவிட்டுப்பாண்? :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்

Pain de campagne rapide : recette de Pain de campagne rapide

தவிட்டுப்பானை விட  கிராமத்துப் பாண் என்று பேக்கரியில் கிடைக்கும் அதுதான் சூப்பர்......!   👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, Nathamuni said:

எனக்கு ஒரு சந்தேகம் கண நாளாய் இருந்தது.  இந்த சம்பல், மிளகாயுடன் பெரும் தொடர்பு கொண்டது. ஆகவே இது டச்சுக்காரர் காலத்தில், வந்திருக்க கூடும். அவர்கள் ஆண்ட மலேசியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளில் மட்டுமே உள்ளதால் அப்படி நினைத்தேன்.

முனியருக்கு ஆரோ செத்தல் மிளகாய் ,மிளகாய்த்தூள் அதுகளிலை செய்வினை செய்து போட்டாங்கள் :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்

தினம் பனங்கிழங்கு சாப்பிட்டா ,ஆஸ்பத்திரிக்கு பணமே செலவு செய்ய வேணாமாம் .

பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு ஆகும்.பனைமரத்தின் பழத்தை சாப்பிட்டுவிட்டு அந்த கொட்டையை தனியாக புதைத்து வைத்து அதில் இருந்து கிடைக்கக்கூடியது தான் இந்த பனங்கிழங்கு.எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஏராளமான பலன்களை நாம் பெறலாம்.வாங்க அதனோட நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் மண்ணில் விளையக்கூடிய பொருட்களை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன.
ஆனால் பனங்கிழங்கில் உள்ள வேதி பொருட்கள் நம் உடம்பில் இன்சுலினை சுரக்க வைத்து இரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
பனங்கிழங்கில் அதிக அளவு இரும்பு சத்து காணப்படுவதால் இரத்த சோகை உள்ளவர்கள் இதை அடிக்கடி எடுப்பதன் மூலம் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது.

மருத்துவம் குணங்கள்  நிறைந்த பனங்கிழங்கின்  மகத்துவம் panang kilangu benefits in tamil கிழங்கு வகைகள் பனங்கிழங்கு நன்மைகள் பனங்கிழங்கு தீமைகள் பனங்கிழங்கு குறிப்புகள் பனங்கிழங்கு சர்க்கரை நோயாளிகளுக்கு பனங்கிழங்கு வேக வைக்கும் முறை

ஏனெனில், பனங்கிழங்கில் உள்ள குறிப்பிட்ட வகை வேதிப்பொருட்கள், உடலின் இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. எனவே, பனங்கிழங்கால் நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.

பனங்கிழங்கில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், ரத்த விருத்திக்காக (Health Benefits) பனங்கிழங்கு பரிந்துரைக்கப்படுகிறது. தொடர்ந்து பனங்கிழங்கை உணவில் சேர்த்து வந்தால், ரத்தசோகை நோய் உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் தீரும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

பனங்கிழக்கில் அதிக அளவிலான நார்ச்சத்து (Fibre Benefits) இருப்பதால், மலச்சிக்கல்களை தூர விரட்டி, வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

பனங்கிழங்கில் பாதமைப் போன்ற உயர்சத்துக்கள் உள்ளன. அதனால்தான், பணககாரனுக்கு பாதாம், பசித்தவனுக்கு பனங்கிழங்கு என்ற சொலவடை  உண்டு.

உடல் மெலிந்தவர்களுக்கு, சுலபமாக எடையை ஏற்றுவதற்கும் பனங்கிழங்கு சிறந்தது என்பதால், உடல் பருமனானவர்கள் அளவுடன் தான் பனையின் கிழங்கை சாப்பிட வேண்டும்.

அதேபோல, ப‌னங்கிழங்கு உடலுக்கு குளுமையைத் தரக்கூடியது என்பதால், குளிர்ச்சியான உடல் உடையவர்கள் பனங்கிழங்கை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பனங்கிழங்கூ சாப்பிட்டால் சிலருக்கு வாயுத்தொல்லை அதிகமாகலாம். எனவே, பனங்கிழங்குடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

ஆரோக்கியமான உடலைப் பெற, பனங்கிழங்கை சமைக்கும்போது, அதில் மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்ட்டால், உடல் பித்தம் அதிகரிக்கும்..

https://www.toptamilnews.com/lifestyle-news/panankizhngu-tips/cid6486271.htm

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

Pain de campagne rapide : recette de Pain de campagne rapide

தவிட்டுப்பானை விட  கிராமத்துப் பாண் என்று பேக்கரியில் கிடைக்கும் அதுதான் சூப்பர்......!   👍

Rezept für ein schnelles und helles Bauernbrot - www.brooot.de

Brot #69 - Klassisches Bauernbrot - Selbstgemacht - Der Foodblog

AHlUXW1G0AuTC7-NyyyITIEdXYxVD0ZLSG5WnQ3J6IfNxAT2OGle7_uVIyBqzZgh0zsYYpp7WBM63J8vOhHPVM49tp91MRnVOhDPzU2ej8bmGxvE31kk5DkPwgxs7YB0EJBdjp_YO967-52qAKpUKP25Poo69dUhytx80F7ScVfhvxKyjMnW5quGaZskOhYAmOhuvVg56QWmjG0=s512-rw-pd-pc0x00ffffff

Bauernbrot - Rezept | Swissmilk

இங்கும் இதனை கமக்காரரின் பாண் (Bauern Brot) என்று...
ஒவ்வொரு பிராந்தியத்துக்குரிய வித்தியாசமான சுவையுடன்
சில பேக்கரிகளில் விற்பார்கள். இலேசில் காய்ந்து போகாது.
ஒரு கிழமை வரை... பாவிக்கலாம்.
ஒவ்வொன்றும் தனித்தன்மையான  சிறப்பை கொண்டிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, தமிழ் சிறி said:

இங்கும் இதனை கமக்காரரின் பாண் (Bauern Brot) என்று...
ஒவ்வொரு பிராந்தியத்துக்குரிய வித்தியாசமான சுவையுடன்
சில பேக்கரிகளில் விற்பார்கள். இலேசில் காய்ந்து போகாது.
ஒரு கிழமை வரை... பாவிக்கலாம்.
ஒவ்வொன்றும் தனித்தன்மையான  சிறப்பை கொண்டிருக்கும்.

கட்டுப்பல்லுக்குகாரருக்கு உந்த பாணுகள் சரிவருமா சார்...😂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

கட்டுப்பல்லுக்குகாரருக்கு உந்த பாணுகள் சரிவருமா சார்...😂

வெளிப் பகுதி கடினம்தான்.  உள்ளுக்கு மிருதுவாகவும், நல்ல வாசனையாகவும் இருக்கும்.
இரண்டு கொடுப்பு பல்லு இருந்தாலே... தேத்தண்ணியில்  ஊற வைத்து சாப்பிடலாம் சார். 🤣

Lachen GIFs | Tenor Lachen GIFs | Tenor

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.