Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசியல் வரலாற்று  ஆய்வாளர்கள்,எழுத்தாளர்கள் என்றுமே நடு நிலையாக இருந்ததில்லை.அவர்கள் எதிர்ப்பக்கத்தின் நியாயமான விடயங்களை மறைத்தே அரசியல் கட்டுரைகளை எழுதுவார்கள். இது  கால,அரசியல் சூழ்நிலைகளின் கட்டாயம். தாம் சார்ந்த இனம் சார்பாகவே எழுதுவர்.

இதுவே இலங்கை இரு பக்க அரசியலிலும் நடக்கின்றது.

  • Replies 80
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

திரும்பும் வரலாறு: நாசிகள் அண்மைக் காலமாக "திரும்பும் வரலாறு" (repeat of history or historic recurrence) என்பது பிரபலமான ஒரு சொற்றொடராக மாறியிருக்கிறது. வரலாறு மீள மீள நிகழ்வதற்கு பிரதான காரணம் வ

Justin

திரும்பும் வரலாறு - பாகம் 3 – நாசிகள். fபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) ஒரு வித்தியாசமான பேர்வழி. பயிர்கள் வளர நைதரசன் அவசியம். ஆனால், காற்றில் நிறைந்திருக்கும் நைதரசன் வாயுவை எல்லாப் பயிர்களாலும்

Justin

இணைந்திருக்கிற எல்லோருக்கும் நன்றி - தனித்தனியாக  வந்த கேள்விகளுக்கு பின்னர் பதில் எழுதுகிறேன். ஆனால், கோசானின் கருத்துக்கு இப்பவே எழுத வேண்டும்: உடைந்த றெக்கோர்ட் போல 5 வருடங்களாக போலிச் செய்த

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

அரசியல் வரலாற்று  ஆய்வாளர்கள்,எழுத்தாளர்கள் என்றுமே நடு நிலையாக இருந்ததில்லை.அவர்கள் எதிர்ப்பக்கத்தின் நியாயமான விடயங்களை மறைத்தே அரசியல் கட்டுரைகளை எழுதுவார்கள். இது  கால,அரசியல் சூழ்நிலைகளின் கட்டாயம். தாம் சார்ந்த இனம் சார்பாகவே எழுதுவர்.

இதுவே இலங்கை இரு பக்க அரசியலிலும் நடக்கின்றது.

 சதிக் கோட்பாட்டாளர்கள் சரியான 'நடுநிலையாக' எழுதுவார்கள் போல! அப்ப சரி.😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, Justin said:

 சதிக் கோட்பாட்டாளர்கள் சரியான 'நடுநிலையாக' எழுதுவார்கள் போல! அப்ப சரி.😂

நான் உங்கள் தொடரை  குழப்ப வரவில்லை. மறு பக்க நியாயங்களையும் சொல்ல வந்தேன்.
30 வருடங்களுக்கு மேலாக  ஜேர்மனிய மக்களுடன் பழகுவதால் வரலாற்று புத்தகங்களில் வராத பல நிகழ்வுகளையும் அறிய சந்தர்ப்பம் கிடைத்தது.நானே நான் பழகுபவர்களோ ஹிட்லரின் படுகொலைகளையும் படையெடுப்புகளையும் ஆதரிப்பவர்கள் அல்லர். ஆனால் ஹிட்லர் செய்த பல்லாயிரக்கணக்கான விடயங்களை இந்த நாட்டுக்காக செய்தவற்றை வரலாற்று புனைவாளர்கள்  சொல்ல தவறுகின்றனர். நான் வசிக்கும் இடத்தில் அழிந்த  நாஷிகளின்  ஆயுத தொழிற்சாலையும் உண்டு. அருகில் மக்கள் பாவிக்க முடியாத அளவிற்கு பெரியதொரு ஏரியும் உண்டு.


மக்கள் ஹிட்லரின் படுகொலைகளையும் படையெடுப்புகளையும் வெறுத்தாலும்.......
ஹிட்லரின் அதி உன்னத அபிவிருத்திகளை இன்றும் வெறுக்கவில்லை.

நன்றி இத்துடன் இத் திரியிலிருந்து விடை பெறுகின்றேன்.🙏🏼

ஒரு சில எழுத்து பிழைகள் உண்டு. திருத்தி வாசிக்கவும் :face_with_tears_of_joy:

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/2/2023 at 16:44, Justin said:

ஐந்து லட்சம் வரையான மக்களையும் இன்புழுவன்சாப் பெருந்தொற்றினால் இழந்த அமெரிக்கா, 1929 இல் உருவான பொருளாதார மந்த நிலையினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது

chat gpt இவரின் கருத்தை மறுக்கின்றது

It is true that the United States was hit hard by the Great Depression of 1929, and that many people suffered as a result. However, the number of people who died as a direct result of the Great Depression is not as high as five hundred thousand.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, பெருமாள் said:

chat gpt இவரின் கருத்தை மறுக்கின்றது

It is true that the United States was hit hard by the Great Depression of 1929, and that many people suffered as a result. However, the number of people who died as a direct result of the Great Depression is not as high as five hundred thousand.

 

முதல் உலகப் போரினால் ஒரு லட்சம் இளைஞர்களையும், அதே காலப்பகுதியில் ஐந்து லட்சம் வரையான மக்களையும் இன்புழுவன்சாப் பெருந்தொற்றினால் இழந்த அமெரிக்கா, 1929 இல் உருவான பொருளாதார மந்த நிலையினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது

👆 ஸ்மார்ட்டான chat gpt ஐயும் கிரகிப்பில் பிரச்சினையுடையோர்  பாவித்தால் பலன் இருக்காது என்பதற்கு, பெருமாள் நல்ல சாட்சி பகர்ந்திருக்கிறார் என நினைக்கிறேன்!😎

இன்புழுவன்சாத் தொற்றினால் அரை மில்லியன் பேர் இறந்ததாகச் சொல்லியிருக்கிறேன், அவர் அப்படியே வெட்டி ஒட்டியிருக்கிறார். மொழிபெயர்க்கும் போது எழுவாய் பயனிலை எல்லாவற்றையும் குழப்பியிருக்கிறது. அதை அப்படியே நம்புகிறார்!

Chat gpt:1, பெருமாள்:0😂

 

15 hours ago, குமாரசாமி said:

நான் உங்கள் தொடரை  குழப்ப வரவில்லை. மறு பக்க நியாயங்களையும் சொல்ல வந்தேன்.
30 வருடங்களுக்கு மேலாக  ஜேர்மனிய மக்களுடன் பழகுவதால் வரலாற்று புத்தகங்களில் வராத பல நிகழ்வுகளையும் அறிய சந்தர்ப்பம் கிடைத்தது.நானே நான் பழகுபவர்களோ ஹிட்லரின் படுகொலைகளையும் படையெடுப்புகளையும் ஆதரிப்பவர்கள் அல்லர். ஆனால் ஹிட்லர் செய்த பல்லாயிரக்கணக்கான விடயங்களை இந்த நாட்டுக்காக செய்தவற்றை வரலாற்று புனைவாளர்கள்  சொல்ல தவறுகின்றனர். நான் வசிக்கும் இடத்தில் அழிந்த  நாஷிகளின்  ஆயுத தொழிற்சாலையும் உண்டு. அருகில் மக்கள் பாவிக்க முடியாத அளவிற்கு பெரியதொரு ஏரியும் உண்டு.


மக்கள் ஹிட்லரின் படுகொலைகளையும் படையெடுப்புகளையும் வெறுத்தாலும்.......
ஹிட்லரின் அதி உன்னத அபிவிருத்திகளை இன்றும் வெறுக்கவில்லை.

நன்றி இத்துடன் இத் திரியிலிருந்து விடை பெறுகின்றேன்.🙏🏼

ஒரு சில எழுத்து பிழைகள் உண்டு. திருத்தி வாசிக்கவும் :face_with_tears_of_joy:

இதை ஏற்கனவே நான் பாகம் 2 இல் எழுதியிருக்கிறேனே? வரலாற்று ஆய்வாளர்கள் எழுதாமல் எங்கேயிருந்து நான் எடுத்தேன் என்று நினைக்கிறீர்கள்?

வாசிக்காமல் சொல்லும் கருத்துக்கள், (அல்லது வாசிக்காமல் கொப்பி செய்து chat gpt இல் ஒட்டி வரும் கருத்துக்கள்😂) இவற்றிற்கு தனித் தனியாகப் பதில் சொல்லும் நேரம் இல்லை!

எனவே இணைந்திருங்கள் அல்லது விலகியிருங்கள் - உங்கள் இஷ்டம்!👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திரும்பும் வரலாறு- பாகம் 5

டன்கர்க்

1940, மே மாதம் 10 ஆம் திகதி நாசி ஜேர்மனியின் தரைப்படைகள் பிரான்சினுள் சடுதியாக ஆக்கிரமித்து ஊடுருவின. பிரான்ஸ் தரப்பில் எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சுத் தரைப்படையினர், மூன்று லட்சத்திற்கும் அதிகமான பிரிட்டிஷ் இராணுவம் (British Expeditionary Force), சில பத்தாயிரம் பெல்ஜியம், கனேடியப் படையினர் என பெரும் இராணுவ அணியை நாசிகள் டன்கர்க் எனும் வட கிழக்கு பிரான்ஸ் கடற்கரையோர நிலப் பரப்பில் சுற்றி வளைத்தனர். பாதுகாப்புகளற்ற கடற்கரை வெளியில் சிக்கிக் கொண்ட நான்கு இலட்சம் வரையான இப்படைகளை, நாசி விமானங்கள் இடைக்கிடை குண்டு வீசிப் பெரும் உயிர்ச்சேதமெற்படுத்தின. கடல்வழியாக இந்தப் படைகளில் ஒரு பகுதியினரையாவது மீட்டெடுக்கும் முயற்சியாக ஒபரேசன் டைனமோ மே 26 இல் ஆரம்பிக்கப் பட்டு, அடுத்த ஒரு வாரத்தினுள் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பிரிட்டிஷ், பிரெஞ்சு, கனேடிய படையினர் டோவர் நீரிணையின் வழியாக மீட்கப் பட்டனர்.

கடல் வழி மீட்புப் பணியில் ஒரு சாதனையாக இது வரை கருதப் பட்டு வரும் டன்கர்க் மீட்புப் பற்றி பல நூல்களும், அண்மையில் ஒரு பிரபல திரைப் படமும் வெளியாகி இருக்கின்றன - வாசகர்கள் இந்த மூலங்களில் டன்கர்க் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.

சமாதானப் புறாக்கள்

1940 ஜூன் நடுப்பகுதியில் பிரான்ஸ் நாசிகளிடம் சரணடைந்து 80% ஆன பிரான்ஸ் நிலப்பரப்பை நாசிகளிடம் ஒப்படைத்தது. இவ்வாறு பிரான்ஸ் சரணடைவதற்கு முன்னர், நாசிகள் பாரிசை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நிலையிலும் வின்ஸ்ரன் சேர்ச்சில் பிரான்ஸ் அரச தலைவர்களை பிரான்சிலேயே நேரடியாகச் சந்தித்து தொடர்ந்து போராடும் படி ஊக்குவித்துக் கொண்டிருந்தார். இந்த வலியுறுத்தலின் காரணங்கள் பல. பிரான்ஸ் வீழ்ந்து விட்டால் கடல்வழியாக பிரிட்டனை நாசிகள் ஆக்கிரமிக்க அதிக காலம் எடுக்காது. அத்துடன், பிரிட்டன் மீது தாக்குதல் நடத்த நாசி விமானங்கள் பறக்க வேண்டிய தூரமும் வெகுவாகக் குறைந்து விடும். எனவே, பிரான்சின் பாதுகாப்பு என்பது இங்கிலாந்தின் பாதுகாப்புத் தான் என்பது தெளிவு. எனவே, இறுதியில் பிரான்ஸ் வீழ்ந்த போது, அடுத்த நாசி இலக்கு இங்கிலாந்து தான் என்பது சேர்ச்சிலுக்கு மட்டுமன்றி பிரிட்டன் மக்களுக்கும் தெளிவாகப் புரிந்தது. 

ஆனாலும் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக ஹிற்லர் பிரிட்டனை ஆக்கிரமிக்கும் உத்தரவை உடனே வழங்கவில்லை. ஏன்?

ஏற்கனவே குறிப்பிட்டது போல, நாசிகள் தம் ஒவ்வொரு எதிரிகளையும் ஒவ்வொரு தரத்தில் வைத்திருந்தனர். யூதர்களும், றோமாக்களும் கரப்பான் பூச்சிகள், ரஷ்ய சிலாவிக் மக்கள் "கீழ் நிலை மனிதர்கள்" என வெவ்வேறு தரங்களில் பார்த்தனர் (இன்று நாசிகள் இருந்திருந்தால் மண்ணிறத் தோல் கொண்ட ஆசியர்களை கரப்பான் பூச்சிகளை விடக் கீழ் நிலையிலேயே வைத்திருந்திருப்பர்!). ஹிற்லர், பிரித்தானியர்களை, ஜேர்மனிய ஆரியர்களைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நாகரீக இனமாகப் பார்த்தார். எனவே, இராணுவ ரீதியில் தாக்காமலே அவர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கத்தில் இருந்தார்.  ஹிற்லர் நீட்டும் நேசக் கரத்தைப் பற்றிக் கொண்டு இங்கிலாந்து சமாதானத்தைப் பேண வேண்டுமென வாதிட்ட எட்வேர்ட் மோஸ்லி (இவர் பிரிட்டன் பாசிச யூனியன்- British Union of Fascists எனும் அமைப்பின் தலைவர்), டியூக் ஹமில்ரன் (Duke of Hamilton) போன்ற சிலரும் பிரிட்டனில் இருந்தனர்.

சமகாலத்தில், சர்வாதிகாரிகளாக வலம் வரும் உலகத் தலைவர்களைப் போற்றும் கட்சிகளும், அதன் ஆதரவாளர்களும் மேற்கு நாடுகளில் பல்வேறு போர்வைகளினுள் ஒளிந்து வலம் வருவதைக் காண்கிறோம். இத்தகைய வில்லனுக்குப் பொன்னாடை போர்த்தும் போக்கு, நாசிகள் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும்.  

வளையாத கருங்கல்!

"கருங்கல் உடையும், வளையாது!" எனும் புதுவையின் வரிகளின் பிரதிபலிப்பாக, வின்ஸ்ரன் சேர்ச்சில் நாசிகளோடு பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பேயில்லையென மறுத்து விட்டார். பிரிட்டன் பாராளுமன்றிலும் சரி, பொது மக்களுக்கு வானொலி மூலம் ஆற்றும் உரைகளிலும் சரி, சேர்ச்சிலின் உரைகள் இரு பகுதிகளைத் தவறாமல் கொண்டிருந்தன.

ஒன்று: எந்த நிலையிலும் பிரிட்டன் சரணடையாது போராடும் என்ற உறுதி, இரண்டு: இந்தப் போராட்டம், பிரிட்டன் மக்களுக்கு ஒரு கொடிய நரகமாக இருக்கும் என்ற யதார்த்தம்.

இது ஒரு அற்புதமான செயல்திறன் மிக்க உளவியல் நுட்பம். எதிர் கொண்டு வரும் கடின நாட்கள் பற்றிய உண்மையை மீள மீளச் சொல்லி விட்டால், மக்கள் பூப்படுக்கையை எதிர்பார்க்காமல் இருப்பர், ஏமாற்றம் கொள்ளாமல் காரியத்தைப் பார்ப்பர். அதே வேளை நம்பிக்கையை இழப்பது மட்டும் நடக்கக் கூடாதென மனதில் ஊன்றி விடுதல் மூலம், போராட்டக் குணத்தைத் தக்க வைத்தல். இவை இரண்டையும் ஒருங்கிணைத்து ரத்தின சுருக்கமாக சேர்ச்சில் சொன்ன ஒரு வாக்கியம்:

“If you are walking through hell, keep walking!” "நரகத்தினூடு நடக்க வேண்டியிருக்கிறதா? நடந்து கொண்டேயிருங்கள்!" 

காத்திருந்த கழுகுகள்

மறு கரையில் நாசி ஜேர்மனியில், பி.பி.சி வானொலியைத் தவறாமல் கேட்ட படி சமாதான சமிக்ஞைக்காகக் காத்திருந்த நாசிப் பிரச்சார பீரங்கி கோயபல்ஸ் பிரிட்டனுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் நாள் நெருங்கி விட்டதாக தன் டயரியில் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார். பிரிட்டனின் சரணடைவை விரைவாக்கும் "லங்காபுவத்" பாணி பிரச்சார நடவடிக்கைளும் கோயபல்சால் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டிருந்தன. இன்று இணையவழியில் ரஷ்யாவின் அரச அமைப்புகள் பொய்ச்செய்திகளையும், எதிர் நாட்டில் பிரிவினையூட்டும் போலி ஆய்வுகளையும் கசிய விடுவது போல, அன்றைய நாட்களில் பிரபலமாக இருந்த மக்கள் தொடர்பாடல் ஊடகமான வானொலி மூலம் நாசிகள் பிரச்சாரம் செய்தனர். பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய ஆக்கிரமிக்கப் பட்ட நாடுகளிலிருந்து ஆங்கில மூலத்தில் இந்தப் பிரச்சாரங்கள் ஒலிபரப்பாகின.

ஹிற்லரின் உள்வட்டத்திலேயே பிரிட்டனை எப்படி வழிக்குக் கொண்டு வருவதென்பதில் கருத்து முரண்பாடுகள் இருந்திருக்கின்றன. இந்த முரண்பாடுகளின் ஒரு காரணம், யார் தலைமை நாசியான ஹிற்லரிடம் நல்ல பெயர் வாங்குவதென்பதில், ஹிற்லரின் கூட்டுக்களிடையே இருந்த கடும் போட்டி.

ஹிற்லரின் நம்பர் 2 ஆக இருந்த ருடோல்f ஹெஸ் சமாதானம் பேச வேண்டுமென்று வலியுறுத்தினார் (பின்னர் அவரே ஒரு விமானத்திலேறி ஸ்கொற்லாந்துக்குப் பறந்து போனது இன்னொரு சுவாரசியமான கதை!).

கோயபல்ஸ் உள்பிரிவினையால் பிரிட்டனையும் சேர்ச்சிலையும் பலவீனப் படுத்திய பின்னர் கடல்வழியாக ஆக்கிரமிக்க வேண்டுமென்றார்.

நாசி விமானப்படையின் தலைவரான கோறிங், ஒரே வாரத்தில் தன் விமானப் படையின் தாக்குதல்களால் பிரிட்டன் அடி பணியும் என்று ஹிற்லருக்கு நம்பிக்கையூட்டினார் (மூன்று நாட்களில் உக்ரைனின் கியேவ் விழும் என்று வாக்குறுதி கொடுத்த ரஷ்ய இராணுவத் தலைவர்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!). இறுதியில், கோறிங்கின் இந்த வான்வழித் தாக்குதல் தான் பிரிட்டனை அடிபணிய வைக்கும் வழியென ஹிற்லர் ஜூலை மாதத்தில் இங்கிலாந்து மீது தாக்குதல் நடத்த அனுமதி கொடுத்தார். 

 கழுகின் நாள்!

பிரான்சின் வடக்குக் கரையோரத் தளங்களிலிருந்து கிளம்பி, ஆயிரத்திற்கு மேற்பட்ட, பல வகை நாசி விமானங்களை உள்ளடக்கிய விமான அணி இங்கிலாந்தை நோக்கி முதலில் தாக்குதல் செய்ய ஆரம்பித்தது 1940, ஆகஸ்ட் 13. இந்த முதல் நாளை கோறிங் "கழுகின் நாள்- Eagle Day (Adlertag)" என்று பெயரிட்டு தயார் செய்து கொண்டிருந்த போது, பேர்லினில், பிரிட்டன் தோற்ற வெற்றிப் பேரணியைக் கொண்டாடும் அலங்கார வேலைகளை இன்னொரு நாசிக் குழு செய்ய ஆரம்பித்திருந்தது. அவ்வளவுக்கு, தனது விமானத் தாக்குதலால், சில நாட்களில் பிரிட்டன் சுருண்டு விடும் என்று நம்பினார் கோறிங். ஆனால், முதல் நாளிலேயே ஏமாற்றம் காத்திருந்தது. பிரிட்டனின் மீதான மோசமான வானிலையும், றோயல் விமானப் படையின் எதிர்த்தாக்குதலும் சேர்ந்து, இலக்குகளை அடையாளம் காணாமலே குண்டுகளை வீசி விட்டுத் திரும்ப வேண்டிய நிலை நாசி விமானங்களுக்கு ஏற்பட்டது.  ஆனால், நான்கு நாட்களில் றோயல் விமானப் படையை அழித்து விடுவோம் என்று உறுதியெடுத்த கோறிங், தன்னுடைய கணிப்பை மாற்றிக் கொள்ளவில்லை, எனவே படை படையாக நாசி விமானங்களை இங்கிலாந்தின் வான்பரப்பினுள் அனுப்பும் அணுகுமுறை தொடர்ந்தது. அடுத்த சில நாட்களில், இந்தப் பகல் நேர நாசி விமானத் தாக்குதல்களை எதிர்ப்பதற்கு மேலதிகமாக, இரவில் பேர்லின் மீதும் றோயல் விமானப் படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குமளவுக்கு முன்னேற்றமடைந்திருந்தன.  

இரவு நேரம், நிலாக் காலம்!

நாசி விமானப் படை ஒரு புதிய நுட்பத்தைக் கையாள ஆரம்பித்தது. பகலில், றோயல் விமானப் படையின் விமானங்கள் நாசி விமானங்களை வானில் எதிர் கொண்டு தாக்குவதைத் தவிர்க்க, இரவுகளில் பிரிட்டன் மீதான தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தனர். றோயல் விமானப் படையின் சண்டை விமானங்களில் ரேடார் வசதிகள் இருக்கவில்லை. விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளாலும் இரவில் குறி பார்த்துச் சுட இயலாது. ஆனால், நாசி விமானங்கள் இரவிலும் தரையில் இலக்குகளை அடையாளம் கண்டு தாக்க இயலும், இதற்கு ரேடார் அவசியமில்லை. எனவே, நிலா வெளிச்சம் நிரம்பிய இரவுகள், பிரிட்டன் நகரங்களுக்கு நரக நாட்களாக மாறின.

large.LondonBlitz1940-41.jpg.a169f2b6cc0f7dcf68301d8818e3eb48.jpg

இரவு நேர நாசி விமானத் தாக்குதல்களால் எரிந்து சிதைந்த இலண்டன் பொதுக் கட்டிடங்கள். பட உதவி: நன்றியுடன் அமெரிக்க ஆவணக்காப்பகம்.

நிலா வெளிச்சமில்லா நாட்களில் கூட நாசிகள் துல்லியமாக கட்டடங்களையும், இலக்குகளையும் தாக்குவதற்கு ஒரு வானலைத் (Radio beacon) தொழில்னுட்பத்தைப் பயன்படுத்தினார்கள். விமானங்கள் ஓடுபாதைகளில் துல்லியமாகத் தரையிறங்குவதற்கெனப் பயன்பாட்டிலிருந்த லொறென்ஸ் (Lorenz) தொழில்னுட்பத்தை செம்மைப் படுத்தி சில நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கும் இலக்குகளை அடையாளம் காண நாசிகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்கள்.

அனேக உயிர், உடைமைச் சேதங்கள் பிரிட்டனில் இந்த இரவு நேரத் தாக்குதல்களாலேயே ஏற்பட்டன. ஏனைய நகரங்கள் மீது தாக்குதல் நடத்திய போதும், இலண்டன் நகரை நாசிகள் தொடாமல் விட்டிருந்தது, சேர்ச்சில் மனம்மாறி நாசிகளுடன் சமாதானம் பேச வருவார் என்ற நம்பிக்கையினால். அந்த நம்பிக்கை இப்போது சேர்ச்சிலின் வானொலி உரைகளால் தகர்ந்து விடவே, 1940 செப்ரெம்பர் 7 இல் முதன் முறையாக இலண்டன் நகரமும் நாசிகளின் இரவு நேரத் தாக்குதலுக்குள்ளானது. ஒரு இரவில், மத்திய இங்கிலாந்திலிருக்கும் கொவென்ட்றி நகரத்தின் மீதான தாக்குதலில் மட்டும் ஐநூறுக்கு மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். 1940, செப்ரெம்பர் 7 ஆம் திகதி முதல், 1941 மே 11 வரையிலான எட்டு மாத காலம், செறிவான நாசி விமானத் தாக்குதல்களை இலண்டன் உட்பட்ட நகரங்கள் எதிர் கொண்டதில், மொத்தம் 44, 652 மக்கள் பலியானார்கள். இவர்களுள் 29,000 பேர் இலண்டனில் பலியானார்கள். பிரித்தானியாவில், நாசி விமானத் தாக்குதல்களால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 5,626.

ஏமாற்றம், திசை மாற்றம்!

1940 டிசம்பரில், ஹிற்லர் பிரிட்டனின் வீழ்ச்சிக்காக இனிக் காத்திருக்கப் போவதில்லையெனத் தீர்மானித்து, தனது தளபதிகளுக்கு ஒரு கட்டளையைப் பிறப்பிக்கிறார்: "கேஸ் பார்பரோசா (Case Barbarossa)" எனும் சங்கேதப் பெயர் கொண்ட அந்த ஆணை, சோவியத் ரஷ்யாவை நோக்கி முன்னேறும் திட்டங்களை வரையுமாறு கட்டளையிட்டது. இந்தத் திட்டம், ஒப்பரேசன் பாபரோசாவாக 1940 ஜூன் மாதம் ஆரம்பித்தமை தான், பிரிட்டன் மீதான நாசி விமானப் படையின் தாக்குதல்கள் ஒரு ஆளியைச் சொடுக்கியது போல நின்று போகக் காரணம். இதை பாகம் 7 இல் விரிவாகப் பார்க்கலாம்.

ஆனால், அதற்கு முன்னாகப் பார்க்க வேண்டியது: நாசிகளின் கொடிய விமானத் தாக்குதல்களால் பிரிட்டன் துவண்டு விடாமல் காத்தது சேர்ச்சில் மட்டுமா? இந்தத் துவழாத பிரிட்டனின் தூண்களாக இருந்த இரு தரப்பினர் பற்றி அடுத்த பாகத்தில் பேசலாம்!

- தொடரும்   

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள் .........படிக்க ஆர்வமாக இருக்கிறது........!  👍

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திரும்பும் வரலாறு- பாகம் 6

அதிரடி (Blitzkrieg) எனப்படும் துரித இராணுவ நுட்பம் மூலம், நாசிகள் சடுதியாக பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், நோர்வே ஆகிய நாடுகளை ஆக்கிரமித்து, போலந்தையும் ஆக்கிரமித்து விட்டமையைப் பார்த்தோம். லண்டன் உட்பட்ட இங்கிலாந்து நகரங்கள் மீது, எட்டு மாதங்கள் நிகழ்ந்த நாசிகளின் கொடூர விமானக் குண்டுத் தாக்குதல்களால் பிரிட்டனை அடிபணிய வைக்க இயலவில்லை. மாறாக பிரிட்டனின் நாசிகளுக்கெதிரான நிலைப்பாடு உறுதி  பெற்றது, ஏனைய நாடுகளையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள பிரிட்டன் உழைத்தது. இந்த உழைப்பிற்கு சேர்ச்சிலின் தலைமை வழிகாட்டும் துடுப்பாக இருந்தாலும், உழைப்பின் இயந்திரங்களாக இருந்த இரு தரப்பினர் பற்றிப் பார்க்கலாம்!

பிரித்தானிய மக்களின் ஓர்மம்

மக்கள் மயப்படுத்தப் படாத எந்த இராணுவ முயற்சியும் தோல்வியில் முடியுமென்பது வரலாற்றில் மீள மீள நிரூபிக்கப் பட்ட ஒரு கோட்பாடு. இதை ஆரம்பத்திலேயே வரலாற்றின் மாணவனான சேர்ச்சில் உணர்ந்து கொண்டதன் விளைவே பிரித்தானிய மக்களை இயலுமான வழிகளில் நாசி எதிர்ப்பு யுத்தத்தில் பங்களிக்க நடவடிக்கைகளை எடுத்தது.

இந்த மக்கள் பங்களிப்பின் முதல் வடிவமாக, பிரித்தானியர்கள் நாசிகளின் கொடூரத் தாக்குதல்களை ஓர்மத்தோடு தாங்கிக் கொண்டனர். ஏனெனில், போருக்குப் பின் கைப்பற்றப் பட்ட கோயபல்சின் நாட்குறிப்புகளின் படி, நாசி விமானத் தாக்குதல்களின் பிரதான நோக்கம் பிரித்தானிய மக்களைத் துன்பத்திற்குள்ளாக்கி, பிரித்தானிய அரசின் மீது வெறுப்பேற்றுவதாகவே இருந்திருக்கிறது. இதனால், சேர்ச்சில் மீது எதிர்க்கட்சிகளே ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து சேர்ச்சிலை அகற்றி விட, நாசிகளுக்கு பிரிட்டனில் செங்கம்பளம் விரிக்கப் படும் என்று கோயபல்சே நம்பியிருக்கிறாரெனத் தெரிகிறது. இந்த நாசிக் கனவில் முதல் மண்ணை பிரித்தானிய மக்களே போட்டனர். ஏராளமான வதந்திகள், பொய் செய்திகள்  கோயபல்சின் கட்டுப் பாட்டிலிருந்த ஆங்கில மொழி மூல வானொலிகள் மூலமும், ஐந்தாம் படையினர் மூலமும் பிரித்தானிய மக்களிடையே பரப்பப் பட்டாலும், எவையும் எதிர் பார்த்த மறை விளைவைத் தரவில்லை.

இது எப்படிச் சாத்தியமானது? சேர்ச்சிலின் நிர்வாகம், மக்களைத் தம் பக்கம் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை பிரான்ஸ் வீழ்வதற்கு முன்னரே உணர்ந்து சில திட்டங்களைச் செயல்படுத்தியது ஒரு  காரணம். உதாரணமாக, பிரித்தானிய மக்களிடையே சில ஆயிரம் தொண்டர்களைக் தேர்த்தெடுத்து, அவர்களுக்கு மக்களின் உணர்வுகளைக் கிரமமாகப் பதிவு செய்யும் பணி வழங்கப் பட்டது. Mass observation diary என்று அழைக்கப் பட்ட இந்தத் திட்டம் மூலம், பிரித்தானிய மக்களின் நாடித் துடிப்பை பிரித்தானியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பு துல்லியமாகக் கணித்து வந்தது. இதனை நவீன அரசுகள் தற்போது நடைமுறைப்படுத்தும் ஒட்டுக் கேட்டு உளவறியும் முயற்சியாகப் பார்க்க முடியாது. ஏனெனில், இந்த மக்கள் குறிப்புகள் மூலம் தனி நபர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப் பட்ட நிகழ்வுகள் நடக்கவில்லை. மாறாக, மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாக மாறுவதற்கு முன்னரே அவற்றை இனங்கண்டு தீர்வுகளை வழங்கி விடும் நோக்கமே இந்தப் பாரிய முயற்சியின் நோக்கமாக இருந்தது.  

உதாரணமாக, லண்டன் நகர வாசிகள் தினசரி இரவு நாசிகளின் விமானத் தாக்குதலில் இருந்து தப்ப நிலக்கீழ் காப்பிடங்களுக்குச் சென்று விடுவர். ஆரம்பத்தில் அடிப்படை வசதிகள் அற்றிருந்த இந்தக் காப்பிடங்களை, அரச நிர்வாகம் ஒரு சீரான தரத்தில் வைத்திருக்கும் விதிகளை உருவாக்கி, மக்களின் இரவு வாழ்க்கையை இலகுவாக்கியது. இதன் விளைவுகள் அபாரமாக இருந்தன: லண்டன் வாசிகள் இரவை நிலக்கீழ் காப்பிடங்களில் கழித்து விட்டு, காலையில் வழமை போல தங்கள் தொழில்களைப் பார்க்கச் செல்லும் அளவுக்கு பிரித்தானிய மக்களின் நாளாந்த வாழ்க்கை சாதாரணமாக இருந்தது.   

 இன்னொரு பக்கம், ஏராளமான பிரித்தானிய மக்கள் வெறுமனே பலியாடுகளாக இருக்காமல் தொண்டர்களாக நாசி எதிர்ப்புப் போர் முயற்சியில் இறங்கினர். நாசிகளின் இரவு நேரத் தாக்குதல்களில், நாசிகளுக்கேயுரித்தான குரூர நுட்பங்கள் பல இருந்தன. ஒவ்வொரு தாக்குதல் விமான அணிக்கும், முன்னணியாக இலக்குகளை அடையாளம் காணும் விசேட விமானங்கள் வரும். இந்த விசேட விமானங்கள் இலக்குகள் மீது எரி குண்டுகளை (incendiaries) வீசி, அந்த இலக்குகளை பிரகாசமாக எரியவைக்கும். பின் தொடரும் தாக்குதல் விமானங்கள், எரியும் இலக்குகள் மீது தங்கள் குண்டுகளை வீசும். எனவே, தீயணைப்புத் தொண்டர்கள் எரியும் இலக்குகளை அணைக்கும் வேலை முக்கியமான ஒரு பணியாக இருந்தது. இதனை, உயிராபத்திற்கு மத்தியிலும் சாதாரண தீயணைப்புத் தொண்டர்கள் செய்தனர், உயிரையும் கொடுத்தனர்.     

இன்னொரு குரூர நுட்பமாக, நாசிகள் நேரங்கழித்து வெடிக்கும் குண்டுகளையும் வீசினர். உடனடியாக வெடிக்காத இந்தக் குண்டுகள், மீட்புப் பணியில் ஈடுபடும் மக்களைக் குறி வைத்து வீசப்பட்ட தாமதித்து வெடிக்கும் (delayed fuse) குண்டுகள். இந்தக் குண்டுகளாலும் ஏராளமான பிரித்தானிய போர் முயற்சித் தொண்டர்கள் பலியாகினர்.

ஆனால், பிரித்தானிய மக்கள் ஒவ்வொரு தாக்குதல் இரவின் பின்னரும் பிரித்தானியாவை நாசிகள் ஆழ அனுமதித்தால் என்ன நிகழும் என்ற எச்சரிக்கையை ஆழமாக உணர்ந்து கொண்டதால், எட்டு மாத நரகத்தினூடாக நடந்த படியே இருந்தனர்.

இந்த இடத்தில், சமகால நிகழ்வுகளில் உக்ரைன் மக்களின் உணர்வுகளுக்கும், போரை வெளியே இருந்து பார்க்கும் ஏனைய மக்களின் உணர்வுகளுக்குமிடையிலான இடைவெளியை நாம் நினைவிற் கொள்வது பொருத்தமாக இருக்கும். உக்ரைனியர்களைப் பொறுத்த வரையில், ஒரு முழு ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின் விளைவுகளை உணர்ந்தமை, அவர்கள் போரில் முழுப்பங்காளிகளாக மாற வழி வகுத்திருக்கிறது - அவர்களைப் பொறுத்த வரை தெரிவு ஒன்றே ஒன்று தான்! பார்வையாளர்களாக இருக்கும் மக்களில் சிலருக்கோ, இத் தெரிவு முட்டாள் தனமாகத் தெரிகிறது. இது அனுபவங்கள், மற்றும் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை அறியாமை காரணமாக எழுந்த ஒரு இடை வெளி.   

அலன் ரூறிங்கும் விஞ்ஞானிகளும்

பிரித்தானியாவை நாசிகளின் தாக்குதல்கள் சுருள வைக்காமல் காத்த இரண்டாவது பெரிய சக்தி தொழில்நுட்பம். பிரித்தானியா, வரலாற்று ரீதியாக ஒரு தொழில்நுட்ப முன்னோடி என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கா எதையும் பிரமாண்டமாக (பல சமயங்களில் காரணமில்லாமல்) செய்யும். ஆனால், பிரித்தானியா பிரமாண்டத்தை விட, செயல் திறனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் - இது பல விடயங்களில் அவதானிக்கக் கூடிய ஒரு இயல்பு.

இதே தொழில்நுட்ப மேன்மையை, பிரித்தானியாவின் நாசி எதிர்ப்பு யுத்தத்திலும் பயன்படுத்தினார்கள். இது ஒரு பாரிய குழு முயற்சியாக இருந்தாலும், பின்னணியில் இருந்து பணியாற்றியவர்களில் கணிதவியலாளரான அலன் ரூறிங் (Alan Turing) முக்கியமானவர்.  அலன் ரூறிங்கின் முக்கியத்துவம் அறிவதற்கு, நாம் ஜேர்மனியின் இரகசிய செய்தித் தொடர்பு இயந்திரமான "எனிக்மா" இயந்திரம் பற்றிச் சிறிது பார்க்க வேண்டும் 

எனிக்மா எனும் "சிதம்பர சக்கரம்"

large.Enigma-SimonSinghcollection.jpg.8e7f2ef685d818fcdb8fceaf26726984.jpg

நாசிகளின் பயன்பாட்டிலிருந்த ஒரு எனிக்மா இயந்திரம். பட உதவி: நன்றியுடன் சைமன் சிங் இணையத்தள விம்ப சேகரிப்பு.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் வானலைகள் வழியாக மோர்ஸ் சமிக்ஞை (Morse code) மூலமே இராணுவத் தகவல்கள் பரிமாறப் பட்டன. இந்த மோர்ஸ் சமிக்ஞையை யாரும் இடை மறித்துக் கேட்க முடியும். எனவே, சங்கேத மொழியொன்றை உருவாக்கும் முயற்சியாக ஜேர்மனியர்கள் எனிக்மா (Enigma) எனும் இயந்திரத்தை போர் ஆரம்பிக்க முன்னரே தயாரித்தார்கள். சம்பந்தமில்லாத சொற்களை சங்கேதக் குறிகளாகப் பயன்படுத்தும் முறையை மாற்றி, ஆங்கில மொழியின் 26 எழுத்துகளில் ஒவ்வொன்றும் வேறொரு ஆங்கில எழுத்தாக (cypher) இந்த எனிக்மா இயந்திரத்தால் மாற்றப் படும். மாற்றப் பட்ட தகவல் சாதாரண கண்களுக்கு அர்த்தமற்ற எழுத்துக் கூழாகத் (Alphabetic soup) தெரியும். ஆனால், மோர்ஸ் கோட் மூலம் இந்த எழுத்துக் கூழ் அனுப்பப் படும் இடத்தில் இருக்கும் ஒருவரிடம், இந்த எனிக்மா இயந்திரத்தின் எழுத்துக் கூழை, உண்மையான சொற்களாக மாற்றிக் கொள்ளும் குறியீட்டு வழிகாட்டி (code) இருக்கும். இத்தகைய இரகசிய நீக்கம் (decryption) செய்வதற்கும், ஒரு எனிக்மா இயந்திரத்தைப் பயனபடுத்திக் கொள்ளலாம். எனிக்மா இயந்திரத்தின் கட்டுமானத்தைச் சிக்கலாக்குவதன் மூலம், இதன் மூலம் உருவாக்கப் படும் செய்திகளை எனிக்மாவின் உதவியின்றி ஒருவர் இரகசிய நீக்கம் செய்து புரிந்து கொள்ளும் வாய்ப்பைபில்லியனில் ஒன்று” என்ற அளவுக்குக் குறைக்க முடியும். ஆனால், எனிக்மாவுக்கும் ஆப்பு வைக்கும் சில குறைபாடுகள் இருந்தன: ஒரு எனிக்மா இயந்திரத்தைக் கைப்பற்றினாலோ அல்லது எனிக்மா குறியீட்டுப் புத்தகத்தைக் கைப்பற்றினாலோ இதன் இரகசிய நீக்கம் சாத்தியமாகி விடும்.   

 பிரித்தானியா இந்த முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்னரே, போலந்து விஞ்ஞானிகள் எனிக்மாவை உடைக்கும் முயற்சியை ஆரம்பித்தார்கள். இரகசியமாக போலந்து இராணுவக் கட்டமைப்பினருக்குக் கிடைத்த ஒரு எனிக்மா இயந்திரத்தை ஆராய்ந்து, தாங்களே ஒரு எனிக்மா இயந்திரத்தை போலந்து இராணுவம் வடிவமைத்தது. சில கணிதவியலாளர்களைப் பணியில் அமர்த்தி, சில ஜேர்மன் செய்திப் பரிமாற்றங்களையும் ஆராய்ந்து எனிக்மா செய்திகளை இரகசிய நீக்கம் செய்வதில் ஒரளவு வெற்றியும் கண்டார்கள். ஆனால், நாசிகள் தங்கள் மிக அடிப்படையான எனிக்மா இயந்திரத்தை மேலும் சிக்கலானதாக மாற்றி, தங்களது இரகசிய குறியீட்டுப் புத்தகத்தையும் தினசரி மாற்ற ஆரம்பித்த போது, போலந்தின் முயற்சிகள் முன்னேற முடியாமல் முடங்கின.  

ப்ளெட்ச்லி பார்க்- Bletchley Park

large.AlanTuringStatue-BletchelyPark.jpg.77fc0e819ade3e4e0a16c8631a10ca60.jpg

 ப்ளெட்ச்லி பார்க் அருங்காட்சியகத்தில் அலன் ரூறிங்கின் சிலை. 2011, யூலை 15, அரசி இரண்டாம் எலிசபெத்தினால் ப்ளெட்ச்லி பார்க் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப் பட்டது. பட உதவி: நன்றியுடன், பிரித்தானிய தேசிய ஆவணக்காப்பகம்.

போலந்து, போர் ஆரம்பிப்பதற்கு சில வாரங்கள் முன்னர் தனது எனிக்மா இயந்திரம் மீதான முயற்சிகளை பிரிட்டனிடமும், பிரான்சிடமும் பகிர்ந்து கொண்டது.  போலந்து வீழந்த பின்னர், போலந்தில் இருந்த எனிக்மா இயந்திரங்களில் ஒன்று பிரிட்டனின் உளவுத் துறையிடம் வந்து சேர்ந்தது. இது மட்டுமல்லாமல், பின்னர் நோர்வேயில் குறுகிய காலம் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுப், பின்வாங்கிய போதும் நாசிகளிடமிருந்து எனிக்மா இயந்திரமும், குறியீட்டுப் புத்தகங்களும் கைப்பற்றப் பட்டதாகப் பதிவுகள் இருக்கின்றன. இந்த ஆரம்ப முதலீட்டை வைத்துக் கொண்டு எனிக்மாவின் இரகசியங்களை உடைக்கும் மிக ஆரம்ப காலக் கணணியை வடிவமைத்தவர் தான் அலன் ரூறிங். பற்சக்கரங்களும், மின் விளக்குகளும் கொண்ட இந்தப் பாரிய இயந்திரத்தை இன்று ப்ளெட்ச்லி பார்க் எனப் படும் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காணலாம். சிக்கலான எனிக்மா இயந்திரத்தின் தகவல்களை, கணிதக் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகி இரகசியம் நீக்கும் வேலையை இந்த ஆரம்ப காலக் கணனி செய்ததால், பல லட்சம் உயிர்கள் காக்கப் பட்டன. பிரிட்டன் உட்பட, போரில் நாசிகளை எதிர்த்த நேச அணியின் வெற்றியும் இதனால் உறுதி செய்யப் பட்டது. ப்ளெட்ச்லி பார்க் என்ற மாளிகையின், நிலவறையில் நடந்த இந்த முயற்சிகள் அதி உயர் இரகசியமாகப் பேணப்பட்டதால், நாசிகளுக்கு போர் முடியும் வரை தங்கள் தகவல் பரிமாற்றங்கள் ஒட்டுக் கேட்கப் படுவது தெரிய வரவில்லை. அதே நேரம், இந்த அரிய பணியைச் செய்த அலன் ரூறிங்கின் பெயரும் அப்போது வெளியே தெரியவரவில்லை. இந்தப் பிரபலமின்மையின் ஒரு காரணமாக, ஓரினச் சேர்க்கையாளராக இருந்த அலன் ரூறிங்கை பிரித்தானிய அரசு ஆண்மை நீக்க மருந்துகள் மூலம் குணமாக்க முயன்றதும், அந்த மருந்தின் பக்க விளவினால் அவர் தற்கொலை செய்து கொண்டதும், பெரிதாகப் பேசப் படவில்லை. ஓரினச் சேர்க்கையாளராக நீதிமன்றினால் தண்டிக்கப் பட்ட அலன் ரூறிங்கை, அவாது மரணத்திற்குப் பின்னர் மிக அண்மையில் பகிரங்கமாக அந்தக் குற்றச் சாட்டிலிருந்து விடுவித்தது பிரித்தானிய அரசு.   

-          தொடரும்

  • Like 6
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, Justin said:

திரும்பும் வரலாறு- பாகம் 6

 

அதிரடி (Blitzkrieg) எனப்படும் துரித இராணுவ நுட்பம் மூலம், நாசிகள் சடுதியாக பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், நோர்வே ஆகிய நாடுகளை ஆக்கிரமித்து, போலந்தையும் ஆக்கிரமித்து விட்டமையைப் பார்த்தோம். லண்டன் உட்பட்ட இங்கிலாந்து நகரங்கள் மீது, எட்டு மாதங்கள் நிகழ்ந்த நாசிகளின் கொடூர விமானக் குண்டுத் தாக்குதல்களால் பிரிட்டனை அடிபணிய வைக்க இயலவில்லை. மாறாக பிரிட்டனின் நாசிகளுக்கெதிரான நிலைப்பாடு உறுதி  பெற்றது, ஏனைய நாடுகளையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள பிரிட்டன் உழைத்தது. இந்த உழைப்பிற்கு சேர்ச்சிலின் தலைமை வழிகாட்டும் துடுப்பாக இருந்தாலும், உழைப்பின் இயந்திரங்களாக இருந்த இரு தரப்பினர் பற்றிப் பார்க்கலாம்!

பிரித்தானிய மக்களின் ஓர்மம்

 

மக்கள் மயப்படுத்தப் படாத எந்த இராணுவ முயற்சியும் தோல்வியில் முடியுமென்பது வரலாற்றில் மீள மீள நிரூபிக்கப் பட்ட ஒரு கோட்பாடு. இதை ஆரம்பத்திலேயே வரலாற்றின் மாணவனான சேர்ச்சில் உணர்ந்து கொண்டதன் விளைவே பிரித்தானிய மக்களை இயலுமான வழிகளில் நாசி எதிர்ப்பு யுத்தத்தில் பங்களிக்க நடவடிக்கைகளை எடுத்தது.

இந்த மக்கள் பங்களிப்பின் முதல் வடிவமாக, பிரித்தானியர்கள் நாசிகளின் கொடூரத் தாக்குதல்களை ஓர்மத்தோடு தாங்கிக் கொண்டனர். ஏனெனில், போருக்குப் பின் கைப்பற்றப் பட்ட கோயபல்சின் நாட்குறிப்புகளின் படி, நாசி விமானத் தாக்குதல்களின் பிரதான நோக்கம் பிரித்தானிய மக்களைத் துன்பத்திற்குள்ளாக்கி, பிரித்தானிய அரசின் மீது வெறுப்பேற்றுவதாகவே இருந்திருக்கிறது. இதனால், சேர்ச்சில் மீது எதிர்க்கட்சிகளே ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து சேர்ச்சிலை அகற்றி விட, நாசிகளுக்கு பிரிட்டனில் செங்கம்பளம் விரிக்கப் படும் என்று கோயபல்சே நம்பியிருக்கிறாரெனத் தெரிகிறது. இந்த நாசிக் கனவில் முதல் மண்ணை பிரித்தானிய மக்களே போட்டனர். ஏராளமான வதந்திகள், பொய் செய்திகள்  கோயபல்சின் கட்டுப் பாட்டிலிருந்த ஆங்கில மொழி மூல வானொலிகள் மூலமும், ஐந்தாம் படையினர் மூலமும் பிரித்தானிய மக்களிடையே பரப்பப் பட்டாலும், எவையும் எதிர் பார்த்த மறை விளைவைத் தரவில்லை.

இது எப்படிச் சாத்தியமானது? சேர்ச்சிலின் நிர்வாகம், மக்களைத் தம் பக்கம் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை பிரான்ஸ் வீழ்வதற்கு முன்னரே உணர்ந்து சில திட்டங்களைச் செயல்படுத்தியது ஒரு  காரணம். உதாரணமாக, பிரித்தானிய மக்களிடையே சில ஆயிரம் தொண்டர்களைக் தேர்த்தெடுத்து, அவர்களுக்கு மக்களின் உணர்வுகளைக் கிரமமாகப் பதிவு செய்யும் பணி வழங்கப் பட்டது. Mass observation diary என்று அழைக்கப் பட்ட இந்தத் திட்டம் மூலம், பிரித்தானிய மக்களின் நாடித் துடிப்பை பிரித்தானியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பு துல்லியமாகக் கணித்து வந்தது. இதனை நவீன அரசுகள் தற்போது நடைமுறைப்படுத்தும் ஒட்டுக் கேட்டு உளவறியும் முயற்சியாகப் பார்க்க முடியாது. ஏனெனில், இந்த மக்கள் குறிப்புகள் மூலம் தனி நபர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப் பட்ட நிகழ்வுகள் நடக்கவில்லை. மாறாக, மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாக மாறுவதற்கு முன்னரே அவற்றை இனங்கண்டு தீர்வுகளை வழங்கி விடும் நோக்கமே இந்தப் பாரிய முயற்சியின் நோக்கமாக இருந்தது.  

உதாரணமாக, லண்டன் நகர வாசிகள் தினசரி இரவு நாசிகளின் விமானத் தாக்குதலில் இருந்து தப்ப நிலக்கீழ் காப்பிடங்களுக்குச் சென்று விடுவர். ஆரம்பத்தில் அடிப்படை வசதிகள் அற்றிருந்த இந்தக் காப்பிடங்களை, அரச நிர்வாகம் ஒரு சீரான தரத்தில் வைத்திருக்கும் விதிகளை உருவாக்கி, மக்களின் இரவு வாழ்க்கையை இலகுவாக்கியது. இதன் விளைவுகள் அபாரமாக இருந்தன: லண்டன் வாசிகள் இரவை நிலக்கீழ் காப்பிடங்களில் கழித்து விட்டு, காலையில் வழமை போல தங்கள் தொழில்களைப் பார்க்கச் செல்லும் அளவுக்கு பிரித்தானிய மக்களின் நாளாந்த வாழ்க்கை சாதாரணமாக இருந்தது.   

 

 இன்னொரு பக்கம், ஏராளமான பிரித்தானிய மக்கள் வெறுமனே பலியாடுகளாக இருக்காமல் தொண்டர்களாக நாசி எதிர்ப்புப் போர் முயற்சியில் இறங்கினர். நாசிகளின் இரவு நேரத் தாக்குதல்களில், நாசிகளுக்கேயுரித்தான குரூர நுட்பங்கள் பல இருந்தன. ஒவ்வொரு தாக்குதல் விமான அணிக்கும், முன்னணியாக இலக்குகளை அடையாளம் காணும் விசேட விமானங்கள் வரும். இந்த விசேட விமானங்கள் இலக்குகள் மீது எரி குண்டுகளை (incendiaries) வீசி, அந்த இலக்குகளை பிரகாசமாக எரியவைக்கும். பின் தொடரும் தாக்குதல் விமானங்கள், எரியும் இலக்குகள் மீது தங்கள் குண்டுகளை வீசும். எனவே, தீயணைப்புத் தொண்டர்கள் எரியும் இலக்குகளை அணைக்கும் வேலை முக்கியமான ஒரு பணியாக இருந்தது. இதனை, உயிராபத்திற்கு மத்தியிலும் சாதாரண தீயணைப்புத் தொண்டர்கள் செய்தனர், உயிரையும் கொடுத்தனர்.     

 

இன்னொரு குரூர நுட்பமாக, நாசிகள் நேரங்கழித்து வெடிக்கும் குண்டுகளையும் வீசினர். உடனடியாக வெடிக்காத இந்தக் குண்டுகள், மீட்புப் பணியில் ஈடுபடும் மக்களைக் குறி வைத்து வீசப்பட்ட தாமதித்து வெடிக்கும் (delayed fuse) குண்டுகள். இந்தக் குண்டுகளாலும் ஏராளமான பிரித்தானிய போர் முயற்சித் தொண்டர்கள் பலியாகினர்.

 

ஆனால், பிரித்தானிய மக்கள் ஒவ்வொரு தாக்குதல் இரவின் பின்னரும் பிரித்தானியாவை நாசிகள் ஆழ அனுமதித்தால் என்ன நிகழும் என்ற எச்சரிக்கையை ஆழமாக உணர்ந்து கொண்டதால், எட்டு மாத நரகத்தினூடாக நடந்த படியே இருந்தனர்.

 

இந்த இடத்தில், சமகால நிகழ்வுகளில் உக்ரைன் மக்களின் உணர்வுகளுக்கும், போரை வெளியே இருந்து பார்க்கும் ஏனைய மக்களின் உணர்வுகளுக்குமிடையிலான இடைவெளியை நாம் நினைவிற் கொள்வது பொருத்தமாக இருக்கும். உக்ரைனியர்களைப் பொறுத்த வரையில், ஒரு முழு ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின் விளைவுகளை உணர்ந்தமை, அவர்கள் போரில் முழுப்பங்காளிகளாக மாற வழி வகுத்திருக்கிறது - அவர்களைப் பொறுத்த வரை தெரிவு ஒன்றே ஒன்று தான்! பார்வையாளர்களாக இருக்கும் மக்களில் சிலருக்கோ, இத் தெரிவு முட்டாள் தனமாகத் தெரிகிறது. இது அனுபவங்கள், மற்றும் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை அறியாமை காரணமாக எழுந்த ஒரு இடை வெளி.   

 

அலன் ரூறிங்கும் விஞ்ஞானிகளும்

 

பிரித்தானியாவை நாசிகளின் தாக்குதல்கள் சுருள வைக்காமல் காத்த இரண்டாவது பெரிய சக்தி தொழில்நுட்பம். பிரித்தானியா, வரலாற்று ரீதியாக ஒரு தொழில்நுட்ப முன்னோடி என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கா எதையும் பிரமாண்டமாக (பல சமயங்களில் காரணமில்லாமல்) செய்யும். ஆனால், பிரித்தானியா பிரமாண்டத்தை விட, செயல் திறனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் - இது பல விடயங்களில் அவதானிக்கக் கூடிய ஒரு இயல்பு.

 

இதே தொழில்நுட்ப மேன்மையை, பிரித்தானியாவின் நாசி எதிர்ப்பு யுத்தத்திலும் பயன்படுத்தினார்கள். இது ஒரு பாரிய குழு முயற்சியாக இருந்தாலும், பின்னணியில் இருந்து பணியாற்றியவர்களில் கணிதவியலாளரான அலன் ரூறிங் (Alan Turing) முக்கியமானவர்.  அலன் ரூறிங்கின் முக்கியத்துவம் அறிவதற்கு, நாம் ஜேர்மனியின் இரகசிய செய்தித் தொடர்பு இயந்திரமான "எனிக்மா" இயந்திரம் பற்றிச் சிறிது பார்க்க வேண்டும் 

 

எனிக்மா எனும் "சிதம்பர சக்கரம்"

 

 

large.Enigma-SimonSinghcollection.jpg.8e7f2ef685d818fcdb8fceaf26726984.jpg

 

 

நாசிகளின் பயன்பாட்டிலிருந்த ஒரு எனிக்மா இயந்திரம். பட உதவி: நன்றியுடன் சைமன் சிங் இணையத்தள விம்ப சேகரிப்பு.

 

இரண்டாம் உலகப் போர் காலத்தில் வானலைகள் வழியாக மோர்ஸ் சமிக்ஞை (Morse code) மூலமே இராணுவத் தகவல்கள் பரிமாறப் பட்டன. இந்த மோர்ஸ் சமிக்ஞையை யாரும் இடை மறித்துக் கேட்க முடியும். எனவே, சங்கேத மொழியொன்றை உருவாக்கும் முயற்சியாக ஜேர்மனியர்கள் எனிக்மா (Enigma) எனும் இயந்திரத்தை போர் ஆரம்பிக்க முன்னரே தயாரித்தார்கள். சம்பந்தமில்லாத சொற்களை சங்கேதக் குறிகளாகப் பயன்படுத்தும் முறையை மாற்றி, ஆங்கில மொழியின் 26 எழுத்துகளில் ஒவ்வொன்றும் வேறொரு ஆங்கில எழுத்தாக (cypher) இந்த எனிக்மா இயந்திரத்தால் மாற்றப் படும். மாற்றப் பட்ட தகவல் சாதாரண கண்களுக்கு அர்த்தமற்ற எழுத்துக் கூழாகத் (Alphabetic soup) தெரியும். ஆனால், மோர்ஸ் கோட் மூலம் இந்த எழுத்துக் கூழ் அனுப்பப் படும் இடத்தில் இருக்கும் ஒருவரிடம், இந்த எனிக்மா இயந்திரத்தின் எழுத்துக் கூழை, உண்மையான சொற்களாக மாற்றிக் கொள்ளும் குறியீட்டு வழிகாட்டி (code) இருக்கும். இத்தகைய இரகசிய நீக்கம் (decryption) செய்வதற்கும், ஒரு எனிக்மா இயந்திரத்தைப் பயனபடுத்திக் கொள்ளலாம். எனிக்மா இயந்திரத்தின் கட்டுமானத்தைச் சிக்கலாக்குவதன் மூலம், இதன் மூலம் உருவாக்கப் படும் செய்திகளை எனிக்மாவின் உதவியின்றி ஒருவர் இரகசிய நீக்கம் செய்து புரிந்து கொள்ளும் வாய்ப்பைபில்லியனில் ஒன்று” என்ற அளவுக்குக் குறைக்க முடியும். ஆனால், எனிக்மாவுக்கும் ஆப்பு வைக்கும் சில குறைபாடுகள் இருந்தன: ஒரு எனிக்மா இயந்திரத்தைக் கைப்பற்றினாலோ அல்லது எனிக்மா குறியீட்டுப் புத்தகத்தைக் கைப்பற்றினாலோ இதன் இரகசிய நீக்கம் சாத்தியமாகி விடும்.   

 

 பிரித்தானியா இந்த முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்னரே, போலந்து விஞ்ஞானிகள் எனிக்மாவை உடைக்கும் முயற்சியை ஆரம்பித்தார்கள். இரகசியமாக போலந்து இராணுவக் கட்டமைப்பினருக்குக் கிடைத்த ஒரு எனிக்மா இயந்திரத்தை ஆராய்ந்து, தாங்களே ஒரு எனிக்மா இயந்திரத்தை போலந்து இராணுவம் வடிவமைத்தது. சில கணிதவியலாளர்களைப் பணியில் அமர்த்தி, சில ஜேர்மன் செய்திப் பரிமாற்றங்களையும் ஆராய்ந்து எனிக்மா செய்திகளை இரகசிய நீக்கம் செய்வதில் ஒரளவு வெற்றியும் கண்டார்கள். ஆனால், நாசிகள் தங்கள் மிக அடிப்படையான எனிக்மா இயந்திரத்தை மேலும் சிக்கலானதாக மாற்றி, தங்களது இரகசிய குறியீட்டுப் புத்தகத்தையும் தினசரி மாற்ற ஆரம்பித்த போது, போலந்தின் முயற்சிகள் முன்னேற முடியாமல் முடங்கின.  

 

ப்ளெட்ச்லி பார்க்- Bletchley Park

 

 

large.AlanTuringStatue-BletchelyPark.jpg.77fc0e819ade3e4e0a16c8631a10ca60.jpg

 ப்ளெட்ச்லி பார்க் அருங்காட்சியகத்தில் அலன் ரூறிங்கின் சிலை. 2011, யூலை 15, அரசி இரண்டாம் எலிசபெத்தினால் ப்ளெட்ச்லி பார்க் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப் பட்டது. பட உதவி: நன்றியுடன், பிரித்தானிய தேசிய ஆவணக்காப்பகம்.

 

போலந்து, போர் ஆரம்பிப்பதற்கு சில வாரங்கள் முன்னர் தனது எனிக்மா இயந்திரம் மீதான முயற்சிகளை பிரிட்டனிடமும், பிரான்சிடமும் பகிர்ந்து கொண்டது.  போலந்து வீழந்த பின்னர், போலந்தில் இருந்த எனிக்மா இயந்திரங்களில் ஒன்று பிரிட்டனின் உளவுத் துறையிடம் வந்து சேர்ந்தது. இது மட்டுமல்லாமல், பின்னர் நோர்வேயில் குறுகிய காலம் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுப், பின்வாங்கிய போதும் நாசிகளிடமிருந்து எனிக்மா இயந்திரமும், குறியீட்டுப் புத்தகங்களும் கைப்பற்றப் பட்டதாகப் பதிவுகள் இருக்கின்றன. இந்த ஆரம்ப முதலீட்டை வைத்துக் கொண்டு எனிக்மாவின் இரகசியங்களை உடைக்கும் மிக ஆரம்ப காலக் கணணியை வடிவமைத்தவர் தான் அலன் ரூறிங். பற்சக்கரங்களும், மின் விளக்குகளும் கொண்ட இந்தப் பாரிய இயந்திரத்தை இன்று ப்ளெட்ச்லி பார்க் எனப் படும் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காணலாம். சிக்கலான எனிக்மா இயந்திரத்தின் தகவல்களை, கணிதக் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகி இரகசியம் நீக்கும் வேலையை இந்த ஆரம்ப காலக் கணனி செய்ததால், பல லட்சம் உயிர்கள் காக்கப் பட்டன. பிரிட்டன் உட்பட, போரில் நாசிகளை எதிர்த்த நேச அணியின் வெற்றியும் இதனால் உறுதி செய்யப் பட்டது. ப்ளெட்ச்லி பார்க் என்ற மாளிகையின், நிலவறையில் நடந்த இந்த முயற்சிகள் அதி உயர் இரகசியமாகப் பேணப்பட்டதால், நாசிகளுக்கு போர் முடியும் வரை தங்கள் தகவல் பரிமாற்றங்கள் ஒட்டுக் கேட்கப் படுவது தெரிய வரவில்லை. அதே நேரம், இந்த அரிய பணியைச் செய்த அலன் ரூறிங்கின் பெயரும் அப்போது வெளியே தெரியவரவில்லை. இந்தப் பிரபலமின்மையின் ஒரு காரணமாக, ஓரினச் சேர்க்கையாளராக இருந்த அலன் ரூறிங்கை பிரித்தானிய அரசு ஆண்மை நீக்க மருந்துகள் மூலம் குணமாக்க முயன்றதும், அந்த மருந்தின் பக்க விளவினால் அவர் தற்கொலை செய்து கொண்டதும், பெரிதாகப் பேசப் படவில்லை. ஓரினச் சேர்க்கையாளராக நீதிமன்றினால் தண்டிக்கப் பட்ட அலன் ரூறிங்கை, அவாது மரணத்திற்குப் பின்னர் மிக அண்மையில் பகிரங்கமாக அந்தக் குற்றச் சாட்டிலிருந்து விடுவித்தது பிரித்தானிய அரசு.   

 

-          தொடரும்

 

அருமை. தொடருங்கள்👏🏾👏🏾👏🏾

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள் தொடர்ந்து வருகிறோம்........!  👍

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திரும்பும் வரலாறு- பாகம் 7

நாசிகள் பதவிக்கு வந்த 1933 இலிருந்து 1940 வரையான காலத்தில், செக்கோஸ்லோவாக்கியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், போலந்து, பிரான்ஸ் உடபட்ட பல நாடுகள் வரிசையாக நாசிகள் வசம் வீழ்ந்தன எனப் பார்த்தோம். இங்கிலாந்தை ஆக்கிரமிக்கும் ஹிற்லரின் கனவு நிறைவேறாமல் போக, ஹிற்லரின் கவனம் சோவியத் ரஷ்யா மீது திரும்பியது டிசம்பர் 1940 இல்.

 

ஸ்கொற்லாண்ட் வந்த சமாதானப் புறா

ஜூன் 1941 இல் ஒபரேசன் பார்பறோசா என்ற பெயரில் சோவியத் ரஷ்யாவைக் குறிவைத்த நாசி ஜேர்மனிப் படையெடுப்பு ஆரம்பித்தது. அதற்கு முன்னர், மே 10 ஆம் திகதி இரண்டாம் உலகப் போர் நிகழ்வுகளிலேயே மர்மம் நிறைந்த ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஹிற்லருக்கு அடுத்த நிலையில் நாசித் தலைமையில் இருந்த ருடோல்f ஹெஸ் ஒரு இரட்டை எஞ்சின் விமானத்தை எடுத்துக் கொண்டு, ஜேர்மனியில் மியூனிக் நகரில் இருந்து ஸ்கொற்லாண்டின் நாட்டுப் புற இலக்கொன்றில் திடீரென வந்திறங்கினார். இந்த வினோதச் சம்பவத்தின் பின் கதை இன்று வரை முழுவதுமாக பொதுவாசகர்களுக்குத் தெரியாத ஒரு புதிர். ஆனால், பல்வேறு நாட்குறிப்புகள், உள்ளறிக்கைகள் சார்ந்து பார்க்கும் போது, நாசி ஜேர்மனிக்கும் பிரிட்டனுக்குமிடையே சமாதானம் பேசும் தூதுவராகவே, தன்னிச்சையாக ஹெஸ் வந்திறங்கினார் என்று தெரிகிறது. நாசி ஜேர்மனியின் துணை வேந்தராக பதவியிலிருந்தாலும், ஹெஸ்ஸின் மதிப்பு ஹிற்லரின் உள்வட்டத்தில் மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது. பல சர்வாதிகாரிகள், தங்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் தன்னை விட எந்த வகையிலும் மேலாண்மை மிக்கவராக இருந்து விடக் கூடாதென மிக அவதானமாக இருப்பர். அந்த அடிப்படையிலேயே, பாரிய ஆளுமையெதுவும் இல்லாத ஹெஸ் துணை வேந்தராக ஹிற்லரால் நியமிக்கப் பட்டார் என ஒரு கருத்தும் நிலவுகிறது.

large.HesssPlanewreckage.jpg.444e892788f6d1bac807e229caab7bb1.jpg

ருடோல்f ஹெஸ்ஸின் மெசர்ஸ்மிற் 110 விமானத்தின் சிதைவுகள். விமானம் முற்றாக எரிபொருள் தீர்ந்த நிலையில் ஸ்கொற்லாண்டில் வீழ்ந்தது, ஹெஸ் காயங்களின்றித் தப்பினார். பட உதவி: நன்றியுடன் Imperial War Museum, UK.

ஆனால், ஹெஸ்ஸோ ஹிற்லரை, கடவுள் ஜேர்மனிக்கு அளித்த ஒரு மீட்பராக வழி பட்டார். எனவே, கோறிங்கின் நாசி விமானப் படையாலும், கோயபல்சின் பிரச்சாரத்தாலும் வீழ்த்த முடியாதிருந்த பிரிட்டனை, தானே நேரில் சென்று சமாதானம் பேசி ஹிற்லருக்கு ஒரு பரிசாக பிரிட்டனைக் கொடுக்கலாம் என்று ஹெஸ் கணக்குப் போட்டிருப்பார் போலும். இதற்காக ஹெஸ் செய்த பயணம் நீண்டதும் (800 மைல்கள் பறப்பு) ஆபத்தானதுமாக இருந்தது. விமானமோட்டி லைசென்ஸ் வைத்திருந்த ஹெஸ், தனது இரட்டை எஞ்ஜின் மெசர்ஸ்மிற் 110 விமானத்திற்கு மேலதிக எரிபொருள் தாங்கிகள் பொருத்தி, சில மருந்துகளும், உணவும் கட்டிக் கொண்டு ஸ்கொற்லாந்தில் போயிறங்கியது டியூக் ஹமில்ரன் என்ற பிரிட்டன் அரசகுடும்பத்தைச் சேர்ந்த நாசி அனுதாபியின் மாளிகைக்கு அண்மையாக. உள்ளூர் பொலிசாரால் கைதான ஹெஸ்ஸை யாரென்று உறுதி செய்த பின்னர், அவரை ஒரு பங்களாவில் அதிக கெடுபிடிகளில்லாமல் சிறை வைத்தார்கள் பிரிட்டன் பாதுகாப்புப் பிரிவினர். இடையிடையே நடந்த விசாரணைகளின் போது, ஹிற்லர் சோவியத் ரஷ்யாவைத் தாக்க இருக்கும் செய்தியையும் ஹெஸ் கசிய விட்டிருக்கிறார். சேர்ச்சில் நிர்வாகம் இந்த தகவலை மொஸ்கோவிற்கு உடனேதெரியப் படுத்திய போதிலும், ஸ்ராலின் இதை நம்பவில்லை. சுவாரசியமான இன்னொரு விடயம், அதே காலப்பகுதியில் ஜப்பானில் இருந்த ஒரு சோவியத் உளவாளியும் நாசிகள் சோவியத் மீது தாக்குதல் தொடுக்கவிருக்கும் உளவுச் செய்தியை மொஸ்கோவிற்கு அனுப்பி வைக்கிறார் - ஸ்ராலினுக்கு இது சொல்லப் படுகிறது- அதையும் உதாசீனம் செய்து, நாசிகளுடனான பகைமை தவிர்ப்பு ஒப்பந்தம் நீடிக்குமென நம்பினார் ஸ்ராலின்.   

பூனைக்காலால் நடந்து வந்த நாசிகள்

நாசி ஜேர்மனியின் முதல் சோவியத் நோக்கிய பீரங்கி முழக்கம் ஜூன் 22, 1941 இல் வெடிக்கிறது. ஆனால், ஜூன் ஆரம்பத்திலிருந்தே போலந்தில் இருந்த சோவியத் முன்னரங்க நிலைகளூடாக நாசிகளின் ஐந்தாம் படை சோவியத் படைகளின் பின்னரங்கம் நோக்கி ஊடுருவி, தொலைத் தொடர்பைத் துண்டிக்கும் நாசவேலைகளைத் தொடங்கி விட்டன. இதனால், ஜூன் 22 இல், 3000 தாங்கிகள், 2000 குண்டுவீச்சு விமானங்கள் சகிதம் ஒப்பரேசன் பார்பறோசா ஆரம்பித்த போது, சோவியத்தின் செஞ்சேனை தாக்குப் பிடிக்க இயலாமல் துவழ வேண்டி வந்தது. உதாரணமாக, முதல் 9 மணி நேர நாசி விமானத் தாக்குதலில், சோவியத் விமானப் படையின் 1200 விமானங்கள் - பெரும்பாலானவை விமான ஓடுபாதைகளில் வைத்தே - அழிக்கப் பட்டன. இவையெல்லாம் நடந்து கொண்டிருந்த வேளையில், முதல் 48 மணி நேரங்கள் தோழர் ஸ்ராலின் எங்கேயென்று அவரது உள்வட்டத்தினருக்கே தெரியாத நிலை. ஸ்ராலின் எதிர்பார்த்திருக்காத இந்த தாக்குதலால் அவர் அதிர்ச்சியடைந்ததே இந்த 2 நாள் மௌனத்தின் பின்னணி என சில ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். மறு பக்கம், தாக்குதல் ஆரம்பிக்க முன்னதாக பெர்லினில் இருந்த சோவியத் தூதுவராலயம் நாசிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்த, தகவலறிய முயன்று கொண்டிருந்ததாகவும் சில ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், எவ்வாறு மின்னாமல் முழங்காமல் திடீரென நாசி - சோவியத் பகைமை தவிர்ப்பு ஒப்பந்தம் (மொலரோவ் றொப்பன்ரொப்) உலகை உலுக்கியதோ, அதே போல அது போர்ப்பிரகடனம் எதுவும் இல்லாமலே ஸ்ராலின் முகத்தில் நாசி ஜேர்மனியால் கிழித்தும் எறியப் பட்டது. 

large.Barbarossa.jpg.0404f582ca178b924f2d4a76953ce33d.jpg

பனியுறைந்த சோவியத் முனையில் ஒரு நாசிப் படையினரின் சவக்காலை. பட உதவி: நன்றியுடன் Imperial War Museum, UK.

லெனின்கிராட் முற்றுகை

தற்போது செயின்ற் பீற்றர்ஸ்பேர்க் என்று அழைக்கப் படும் ரஷ்ய நகரம், 1941 இல் லெனின்கிராட் என்று அழைக்கப் பட்டது. ஒபரேசன் பார்பறோசாவின் இலக்கு இந்த லெனின்கிராட் தான். சோவியத்தின் பால்ரிக் குடியரசுகளூடாக ஊடறுத்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த லெனின்கிராட்டைக் கைப்பற்றுவது தான் இலக்கு. ஆரம்பித்த வேகத்தில் நாசி ஜேர்மனியின் தரைப்படைகளால் முன்னேற இயலா விட்டாலும், செப்ரெம்பர் 1941 இல் லெனின்கிராட்டை நாசிப் படையின் வடக்குப் பிரிவு (Army Group North) சுற்றி வளைத்தது. இந்த முற்றுகையில் ஒரு கட்டத்தில் சோவியத்தின் முன்னாள் எதிரிகளான பின்லாந்தின் படைகளும் கலந்து கொண்டு முற்றுகையை இறுக்கின (இது 1940 இல் சோவியத் ரஷ்யா பின்லாந்திடமிருந்து பறித்துக் கொண்ட கரேலிய பிராந்தியத்திற்கு ஒரு பழி தீர்த்தலாகப் பார்க்கப் பட்டது). நவீன போர்க்கால வரலாற்றில் நீண்ட முற்றுகைகளில் ஒன்றாகத் திகழும் லெனின்கிராட் முற்றுகை 800 நாட்களுக்கு மேல் நீடித்தது. முற்றுகை இறுதியாக உடைக்கப் பட்ட போது, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் லெனின்கிராட் வாசிகள் தாக்குதல்களாலும், பட்டினியாலும் இறந்திருந்தனர். ஆனால், இந்த முற்றுகைக்குச் சமாந்தரமாக, நாசிகள் தெற்காக இருந்த மொஸ்கோ நோக்கியும், அதற்குக் கீழாக வொல்கா நதிக்கரையில் இருந்த ஸ்ராலின்கிராட் நோக்கியும் புதிய களங்களை உருவாக்கி முன்னகர்ந்தனர். இது, அண்மித்து வந்த குளிர்காலம் பற்றிய எச்சரிக்கையுணர்வையும் மீறி, சோவியத்தை ஆக்கிரமிக்கும் ஹிற்லரின் நப்பாசையால் மில்லியன் கணக்கான நாசிப் படைகளை கிழக்கு நோக்கி நகர்த்தி ஆரம்பிக்கப் பட்ட ஒரு நடவடிக்கை. 

 

செப்ரெம்பரில் மொஸ்கோ நோக்கி ஒபரேசன் ரைfபூன் (Typhoon) என்ற புதிய நகர்வைத் தொடங்கிய நாசித் தரைப்படையின் மத்திய அணி (Army Group Center), ஒக்ரோபரில், மொஸ்கோவிற்கு மிக அண்மையாக வந்திருந்தது. ஸ்ராலின் மொஸ்கோவிலிருந்து இடம்பெயர்ந்து கிழக்கு நகரொன்றிற்குச் செல்வதற்கும் ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தாலும், பின்னர் மனதை மாற்றிக் கொண்டு மொஸ்கோவைக் காக்க எதிர்த்து நிற்பதெனத் தீர்மானித்தார்.

ஸ்ராலின்கிராட்: கௌரவப் பரிசு

விரைவிலேயே வடக்கில் லெனின்கிராட் முற்றுகையும், அதற்குத் தெற்கே மொஸ்கோ முற்றுகையும் சோவியத் ரஷ்யாவின் கொடூர உறைபனிக் காலத்தில் நாசிகளுக்குப் பாதகமாக மாறி முன்னேற்றமற்ற அழித்தொழிப்பு யுத்தமாக (war of attrition) மாறி விட்டது. பிரிட்டன் செய்தது போலவே, சோவியத் ரஷ்யாவும் துரிதமாக இராணுவ உபகரணங்களையும், தாங்கிகளையும் உற்பத்தி செய்து, ஒரு மில்லியன் வரையான சோவியத் செஞ்சேனையினரையும் களத்தில் இறக்கியதால் இந்த அவல நிலை ஹிற்லரின் படைகளுக்கு. இந்த நிலையிலும், ஸ்ராலினுக்கு மூக்குடைப்பது போல ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்த ஹிற்லர், உக்ரைனுக்கு கிழக்காக, மொஸ்கோவிற்கு தெற்காக இருந்த "ஸ்ராலின்கிராட்" எனும் வொல்கா நதிக்கரை நகரத்தைக் குறிவைத்து மூன்றாவது களமுனையொன்றை நாசிகளின் தெற்குப் படையணியைக் (Army Group South) கொண்டு ஆரம்பித்தார். 

1942 ஆகஸ்டில், வொல்கா நதியின் மேற்குக் கரையில் அமைந்திருந்த ஸ்ராலின்கிராட் மீது முற்றுகையை நாசி, மற்றும் இத்தாலிய படைகள் இறுக்கின. அடுத்த ஐந்து மாதங்கள் வரை தொடர்ந்த இந்த ஸ்ராலின்கிராட் முற்றுகை முடிவுக்கு வந்த போது, ஸ்ராலின்கிராட்டில் சிக்கியிருந்த ஐம்பதினாயிரம் மக்களில், பத்தாயிரம் பேர் வரை எஞ்சியிருந்தனர். பெரும்பாலானோர் முற்றுகை ஆரம்பிப்பதற்கு முன்னரே வொல்கா நதியைக் கடந்து கிழக்குக் கரைக்குச் சென்று விட்டதால், லெனின்கிராட் போன்ற இலட்சக் கணக்கான மக்கள் இழப்பு நிகழவில்லை. ஆனால், இன்றும் வரலாற்றில் எதிரொலிக்கும் சில அதிர்வுகளுக்கு ஸ்ராலின்கிராட் நோக்கி, நாசிகள் கிழக்கு ஐரோப்பா, உக்ரைன் ஆகியவையூடாக மேற்கொண்ட நகர்வுகள் காரணமாக இருக்கின்றன. உக்ரேனிய மக்களுக்கும், ஸ்ராலினுக்குமிடையே இருந்த வரலாற்றுப் பகை காரணமாக, உக்ரேனியர்கள் நாசிகளோடு ஒத்துழைக்கத் தலைப்பட்டனர். கீயெவ் ஊடாக முன்னேறிய நாசிப் படைகள் உக்ரேனிய யூதர்களைச் சுற்றி வளைக்கவும், கொலை செய்யவும், கம்யூனிச எதிர்ப்பாளர்களாக இருந்த வலது சாரி உக்ரைன் குழுக்கள் உதவின. உக்ரேனியர்கள் மட்டுமன்றி, கம்யூனிச ஆட்சியில் நிலமிழந்து அலைந்த கோசாக்குகளும் கூட நாசிகளோடு ஒத்துழைத்த பதிவுகள் இருக்கின்றன. ஸ்ராலினின் சோவியத் ரஷ்யா முன்னெடுத்த இன அடையாள அழிப்பு முயற்சிகளின் பிரதிபலன்களாக இந்த நடவடிக்கைகள் பார்க்கப் படுகின்றன.

ஸ்ராலினின் களையெடுப்பு

இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்க முன்னரே, ஸ்ராலின் அடிக்கடி தன் ஆதரவாளர்களிடையே களையெடுப்பு (purge) நடத்தி, ஆயிரக்கணக்கானோரை பனியுறைந்த சைபீரியாவில் திறந்த வெளிச்சிறைச்சாலைகளுக்கு (Gulags) அனுப்புவதும், கொல்வதுமாக இருந்தார். மூன்று முனைகளில் நாசிகள் முன்னேறி முற்றுகைக்குள்ளாக்கிய போதிலும், ஸ்ராலினின் களையெடுப்பு அதிகரித்ததேயொழிய, குறையவில்லை. யுத்த காலத்தில் NKVD எனப்படும் ஸ்ராலின் உளவுப்பிரிவு முன்னரங்குகளில் தீவிரமாக ஊடுருவி செஞ்சேனையின் சகல மட்டங்களிலும் துரோகிகள் இருக்கிறார்களா எனத் தேடிக் கொண்டேயிருந்தனர். இந்த துரோகம் என்பது மிக நொய்மையாக வரையறை செய்யப் பட்டிருந்ததால், ஏராளமான இராணுவ வீரர்களும், சாதாரண மக்களும் வலுவான காரணங்களின்றி சைபீரியாவுக்கோ, சவக்காலைக்கோ அனுப்பப் பட்டுக் கொண்டிருந்தனர்.

large.TehranConference.jpg.f0da5609e9e6d114290135f142676ee1.jpg

நாசிகளின் சோவியத் முனைத் தோல்விக்குப் பிறகு, ரெஹ்றான் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி றூஸவெல்ட், பிரிட்டனின் சேர்ச்சில், சோவியத் ரஷ்யாவின் மார்ஷல் ஸ்ராலின். பட உதவி: நன்றியுடன் Imperial War Museum, UK.

நாசிக் கனவுகளின் முடிவிடம்

1815 இல் நெப்போலியனின் படைகளைப் பலிகொண்ட சோவியத் எனும் பனியுறைந்த பெருநிலம், 1943, பெப்ரவரியில், நாசிகளின் படைகளையும் சிதைத்து இலட்சக் கணக்கான நாசிப் படையினர் சோவியத்திடம் சரணடைய வைத்தது. சோவியத் வெற்றிக்கு வித்திட்ட ஒப்பரேசன் யுரேனஸ், ஒப்பரேசன் றிங் போன்ற நடவடிக்கைகள் பற்றி ஏராளமான தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள் ஏற்கனவே இருப்பதால், அந்த விபரங்களை இங்கே தவிர்க்கிறேன். 1943 நவம்பரில் ரெஹ்றான் மாநாட்டில், ஸ்ராலின்கிராட் மக்களின் வீரத்தைப் பாராட்டி "ஸ்ராலின்கிராட் வாள்-Sword of Stalingrad" எனப்படும் அடையாள வாளொன்றை பிரிட்டன் அரசர் சார்பாக சேர்ச்சில் ஸ்ராலினிடம் வழங்கினார். இந்த மாநாட்டில் தான் சேர்ச்சில், ஸ்ராலின், றூசவெல்ட் ஆகிய நேச நாடுகளின் தலைவர்களால் நாசி ஜேர்மனியைக் கைப்பற்றும் திட்டம் வகுக்கப் பட்டது.

ஐரோப்பாவின் கிழக்கில் நாசிகள் சோவியத்தை நோக்கி நகர்ந்த அதே காலப் பகுதியில், 1941 டிசம்பர் 7 இல், பசுபிக் அரங்கில் ஜப்பானிய இராணுவம் அமெரிக்காவின் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படையை வான்வழியாகத் தாக்கிப் பேரழிவை விளைவித்தன. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா இறங்கக் காரணமாக இந்த தாக்குதல் அமைந்தது. இந்த தாக்குதலின் விளைவாக ஜப்பான் மீது 4 ஆண்டுகள் கழித்து உலகின் முதல் அணுகுண்டு அமெரிக்காவால் வீசப் பட்ட நிகழ்வை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

-தொடரும்

 

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யுத்தம் என்பதே கொடுமையானதுதான்.........!

தொடருங்கள்.......!  👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போது கொஞ்சம் புரிவது போல் உள்ளத்...வரலாறு எப்போதும் வட்டப் பாதையில் பயணிக்கின்றது என்று...!

தொடருங்கள் ஜஸ்ரின்..!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திரும்பும் வரலாறு- பாகம் 8 (இறுதிப் பாகம்)

(உலகின் முதல் அணுவாயுதப் பிரயோகம் பற்றி 2022 ஆகஸ்ட் மாதம் "அரங்கம்" செய்தித் தளத்தில் வெளிவந்த என் கட்டுரையின் திருத்திய வடிவம் இது)

உலக வரலாற்றில் ஆகஸ்ட் மாதம் முக்கியமானதொரு மாதம். 77 ஆண்டுகளுக்கு முன்னர், 1945 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் அமெரிக்கா மனித வரலாற்றில் முதன் முறையாக அணுவாயுதத்தை யுத்த முனையில் பயன்படுத்தியது. விமானத்திலிருந்து ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் இரண்டினாலும் மொத்தமாக 140,000 ஜப்பானிய மக்கள் இறந்தனர். இறக்காமல் தப்பிய மக்கள் ஏராளமானோர் கதிர்வீச்சின் விளைவான புற்று நோய் உட்பட்ட பல ஆரோக்கியச் சவால்களை எதிர்கொண்டனர். இந்த வரலாற்று நிகழ்வின் தொடர்ச்சியாக, உலகம் அணுவாயுதப் போட்டி உட்பட இன்றும் தொடரும் பூகோள அரசியல் விளைவுகளை எதிர்கொண்டது.

அணுசக்தி - மனித வரலாற்றின் திருப்பு முனை

முதன் முறையாக அணுவைப் பிளந்து உருவான சக்தி மனித அழிவிற்குப் பயன்பட்டது கசப்பான ஒரு உண்மை. இந்தக் கசப்பான உண்மையைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், அணுசக்தி மனித வரலாற்றின் ஒரு விஞ்ஞான மைல்கல். அல்பர்ட் ஐன்ஸ்ரைன் சடப் பொருட்களை ஆக்கும் அணுவினுள் இருக்கும் சக்தியை E=MC2 எனும் சமன்பாட்டினால் வெளிப்படுத்தினார். ஆனால், இந்த மாபெரும் சக்தியை அணுவைப் பிளப்பதால் வெளிக்கொண்டு வர முடியும் என்ற யோசனை லியோ சிலார்ட் என்ற ஹங்கேரிய பௌதீகவியல் விஞ்ஞானிக்குத் தான் முதலில் தோன்றியது. நாசி ஜேர்மனியில் இருந்து தப்பி வந்து லண்டன் நகரில் வசித்து வந்த சிலார்ட், வீதியைக் கடப்பதற்காக ஒரு தெருச்சந்தியில் காத்திருந்த போது தான் இப்படியான ஒரு யோசனை உதித்ததாகப் பதிவு செய்திருக்கிறார்.

இயற்கையில் இருக்கும் யுரேனியம் என்ற மூலகத்தின் 1% இற்கும் குறைவான ஒரு உபவகை யுரேனியம் 235 (U235) எனப்படுகிறது. இந்த யுரேனியம் 235 தொடர்ச்சியாக அழிவடைந்து செல்வதால் நியூட்ரோன்களை வெளிவிடும். இவ்வாறு யுரேனிய அழிவினால் வெளியாகும் நியூட்ரோன்கள் அருகிலிருக்கும் ஏனைய யுரேனியம் 235 அணுக்களைத் தாக்குவதால் ஒரு சங்கிலித் தொடர் தாக்கம் (chain reaction) நடக்கும். இத்தகைய சங்கிலித்தொடர் தாக்கம் ஒரு குறிப்பிட்ட மட்டத்தை (Criticality) அடையும் போது பெருமளவிலான சக்தி வெப்பமாகவும், ஒளியாகவும், அணுக்கதிர் வீச்சாகவும் வெளிப்படும். அடிப்படையில், இந்த மூன்று சக்தி வெளிப்பாடுகளையும் கடிவாளமிட்டுப் பயன்படுத்திய ஆயுதம் தான் அணுகுண்டு.

இயற்கையில், மிக ஐதாகப் பரவிக் காணப்படும் யுரேனியம் 235 நியூட்ரோன்களை வெளியேற்றி அழிவடைந்தாலும், போதிய யுரேனியம் 235 இல்லாமையால் அணுகுண்டுக்கு இணையான வெடிப்பை உருவாக்குவதில்லை. எனவே அணுகுண்டை முதலில் உருவாக்கிய விஞ்ஞானிகள் இரு முக்கிய சாதனைகளைச் செய்தார்கள்:  முதலாவதாக - இயற்கையில் இருக்கும் 1% இற்கும் குறைவான யுரேனியம் 235 இனை 90% ஆக ஆய்வு கூடத்தில் செறிவாக்கினார்கள். இரண்டாவதாக - இந்த செறிவான யுரேனியம் 235 சுயமாக அணுசக்தி வெடிப்பை ஏற்படுத்தி விடாமல் தடுக்கும் (harnessing) தொழில் நுட்பத்தைக் கண்டறிந்தார்கள். சாதனை என்று கருதப் படும் இந்த விஞ்ஞானப் பயணத்தில் நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகளும் தொழில்நுட்பவியலாளர்களும் பங்களித்தார்கள். இந்த விஞ்ஞானப் பயணத்தின் பெரும்பகுதி அமெரிக்க அரசின் இரகசியத் திட்டமான Manhattan Project (1942- 47) மூலம் தான் நிறைவேறியது.

அமெரிக்காவுக்கு அகதிகளின் பரிசு

நாசி ஜேர்மனியின் பிடியிலிருந்து தப்புவதற்காக, பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் அகதிகளாகத் தஞ்சம் தேடி வந்த பல பௌதீகவியல் விஞ்ஞானிகள் அமெரிக்காவின் முதல் அணுகுண்டைத் தயாரிக்கப் பங்களித்தார்கள்.  தனது நாச வேலைகளுக்கு ஏற்கனவே விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டிய நாசி ஜேர்மனி, அணுவாயுதத்தையும் தயாரித்து விடுமோ என்ற அச்சமே இந்த அகதி விஞ்ஞானிகள் அமெரிக்காவிற்கு உதவப் பிரதான காரணமாக இருந்தது. ஐன்ஸ்ரைன், சிலார்ட் போன்ற பல விஞ்ஞானிகள் ஜேர்மனியை விட்டு வெளியேறி விட்டிருந்தாலும், நாசிகளோடு ஒட்டி உறவாடிய பல ஜேர்மன் விஞ்ஞானிகள் அணுவாயுதத் தொழில்நுட்பத்தை ஜேர்மனியின் போராயுதமாக மாற்ற உழைத்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பின்னணியில் தான், சிலார்ட் போன்ற அகதி விஞ்ஞானிகள் சிலர், அமெரிக்காவில் வசித்து வந்த பிரபல பௌதீகவியலாளரான ஐன்ஸ்ரைன் மூலம் அமெரிக்க அரசை அணுகி அணுவாயுதத் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபடும் படி வலியுறுத்தினார்கள்.

1943 இல், நியூ மெக்சிகோ மானிலத்தின் லொஸ் அலமொஸ் நகரத்தில் ஆரம்பிக்கப் பட்ட இரகசிய அணுசக்தி ஆய்வுகூடத்தில் அமெரிக்க இராணுவத்தின் மேற்பார்வையில் விஞ்ஞானி றொபர்ட் ஒபன்ஹைமரின் தலைமையில் அமெரிக்காவின் அணுகுண்டுத் தயாரிப்பு வேலைகள் தொடங்கின. ஜூலை 16, 1945 இல் முதல் அணுகுண்டு நியூ மெக்சிகோப் பாலைவனத்தில் பரீட்சிக்கப் பட்ட போது ஐரோப்பாவில் முசோலினியும் ஹிற்லரும் இறந்து நாசி ஜேர்மனியும் தோற்கடிக்கப் பட்டிருந்தது. ஆனால், பசுபிக் பிராந்தியத்தில், கிழக்காசியாவில் ஜப்பான் சரணடைவதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை - எனவே இரண்டாம் உலகப் போர் இன்னும் தொடர்ந்தது.  

வளங்களுக்காக ஆக்கிரமிப்புப் போர் செய்த ஜப்பான்

நீண்ட வரலாற்றைக் கொண்ட ஜப்பான் பேரரசின் பேரரசர் நடைமுறையில் அந்த நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பின் ஒரு சிறைக் கைதி. ஜப்பான் சக்கரவர்த்தி சூரியக் கடவுளின் வழி வந்தவராகத் துதிக்கப் பட்டாலும், இம்பீரியல் ஏஜென்சி (Imperial Household Agency) என்ற அமைப்பினைத் தாண்டி எதுவும் பேசவோ செய்யவோ முடியாத நிலை - இது இன்றும் இருக்கும் நிலை.

large.PearlHarbor.jpg.82b45ff58fd1d23060ef19249f7b884f.jpg

ஹவாய் தீவின், பேர்ள் துறைமுக அமெரிக்கப் படைத்தளத்தின் ஒரு பகுதி. 1941 டிசம்பர் 7, ஜப்பானிய இம்பீரியல் விமானப் படையின் தாக்குதலின் பின்னர். பட உதவி: நன்றியுடன் Imperial War Museum, UK.

தனது பெரும்பாலான வளங்களையும் மூலப் பொருட்களையும் வெளியேயிருந்து இறக்குமதி செய்து கொள்ளும் வளங்களற்ற தீவுக்கூட்டமான ஜப்பான், அந்த நிலையை மாற்றுவதற்குத் தேர்ந்து கொண்ட வழி அண்டை நாடுகளை இராணுவம் மூலம் ஆக்கிரமித்துக் கையகப் படுத்தும் வன்முறை வழி. இத்தகைய ஆக்கிரமிப்பை ஜப்பானின் பாதுகாப்புப் படைகள் தென்கிழக்காசியாவில் மூர்க்கமாக இரண்டாம் உலகப் போரின் போது அமல்படுத்திய போது அமெரிக்கா அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. இது ஜப்பானின் போர் இயந்திரத்தை முடக்கும் என்று எதிர்பார்த்த அமெரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியமாக, 1941 டிசம்பரில் பசுபிக் சமுத்திரத்தின் மத்தியில் இருக்கும் அமெரிக்கப் பிராந்தியமான ஹவாய் தீவுகளில், பேர்ள் துறைமுகத் தளம் மீது ஜப்பான் படைகள் தாக்குதல் நடத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினரைக் கொன்றன. இதன் பின்னர், அமெரிக்கா ஜப்பான் மீதும் போர்பிரகடனம் செய்து பசுபிக் போர் அரங்கில் ஜப்பானுக்கெதிராகக் கால் வைத்தது.    

மரணம் வரை போர்

1941 முதல் 1945 வரை, பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்த அமெரிக்கத் தளங்களைப் பின் தளமாகப் பயன்படுத்தி, ஒவ்வொரு தீவாகக் கைப்பற்றியபடியே அமெரிக்கா உட்பட்ட நேச நாட்டுப் படைகள் ஜப்பானை நோக்கி முன்னேறின. 1945 ஆரம்பத்தில் ஜப்பானுக்கு தென் கிழக்காக இருந்த இவோ ஜிமா தீவு அமெரிக்கப் படைகளிடம் வீழந்த போது, ஜப்பானின் தோல்வி சுவரில் எழுதிய செய்தியாகி விட்டது. ஆனால், “மக்களும் படைகளும் பூரணமாக அழிந்தாலும் கூட சரணடைவதேயில்லைஎன்ற ஜப்பானியப் படைத் தலைமையின் முடிவை சக்கரவர்த்தி ஹிரோஹிற்றோ தன் மௌனத்தால் அங்கீகரித்தார்.

1945 யூலையில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் கூட்டாக பொற்ஸ்டாம் பிரகடனம் மூலம் விடுத்த எச்சரிக்கையில், "சரணடையா விட்டால், ஜப்பான் பேரழிவை எதிர்கொள்ள வேண்டிவரும்" எனக் குறிப்பிடப் பட்டது. இந்தப் பேரழிவு அணுவாயுதப் பாவனை மூலம் ஏற்படுத்தப் படுவதற்கான முடிவை அமெரிக்கத் தலைமை ஏற்கனவே எடுத்திருந்ததா என்பதில் தெளிவில்லை.   ஆனால், அமெரிக்கப் படைகளின் பசுபிக் பிராந்தியக் கட்டளைத் தளபதியாக இருந்த ஜெனரல் டக்ளஸ் மக் ஆர்தர், ஐரோப்பாவின் நோர்மண்டியில் நிகழ்ந்த பாரிய தரையிறக்கம் போலவே, ஜப்பானின் பிரதான தீவையும் தரையிறக்கம் மூலம் கைப்பற்றும் ஒரு பாரிய திட்டத்தைச் செயல்படுத்தி வந்தார் என ஆவண ஆதாரங்கள் காட்டுகின்றன. இந்தத் தரையிறக்கத்தில் 1 மில்லியன் வரையான உயிரிழப்புகள் அமெரிக்கப் படைத் தரப்பில் ஏற்படும் என்ற கணிப்பீடு இருந்த போதிலும், புகழ் விரும்பியான மக் ஆர்தர் தரையிறக்கத் தாக்குதலைத் தயார்படுத்திய படி இருந்திருக்கிறார். ஆனால், "இழக்க எதுவும் இல்லாதவன் தான் மிகவும் ஆபத்தானவன்" என்ற கருத்தைக் கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன், அணு ஆயுதத்தை ஜப்பான் மீது பயன்படுத்தும் முடிவை எடுத்தார்.

ஆகஸ்ட் 6, 1945 

ஹிரோஷிமா - ஜப்பான் தலைநகர் ரோக்கியோவிலிருந்து 500 மைல்கள் தொலைவில் இருந்த தொழிற்சாலைகள் நிறைந்த நகரம்.  ஜப்பானின் போர் இயந்திரத்திற்கு அவசியமான பல இராணுவத் தொழிலகங்கள் அங்கே இருந்தன. சுமார் மூன்றரை இலட்சம் மக்களும் இருந்தனர். 9000 இறாத்தல்கள் நிறை கொண்ட முதல் அணுகுண்டு அமெரிக்காவின் பி- 29 விமானத்திலிருந்து பரசூட் மூலம் இந்த நகரத்தின் மீது தான் இறக்கப் பட்டது. சாதாரண குண்டுகள் போல இலக்குடன் மோதும் போது வெடிக்கும் வகையில் அணுகுண்டுகளை வடிவமைப்பதில்லை - இது விபத்துக்களின் போது அணுவெடிப்புகள் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்குமென்பதால் இந்த ஏற்பாடு. ஹிரோஷிமா மீது பரசூட் மூலம் மிதக்க விடப் பட்ட அணுகுண்டு தரையிலிருந்து 2000 அடிகள் உயரத்தில் ஒரு சிறு வெடிப்பு (trigger) மூலம் இரு யுரேனியம் 235 திணிவுகள் ஒன்றாக இணைக்கப் பட்டன. இப்படி ஒன்றாக இணைந்த யுரேனியம் 235 திணிவு சங்கிலித் தொடர்த் தாக்கத்திற்கு உரிய நிலையை (criticality) உருவாக்கியதால் பெரும் வெடிப்புடன் ஒளி- வெப்பம்-கதிர்வீச்சு என்பன வெளிப்பட்டன. ஆய்வு நோக்கங்களுக்காக அணுகுண்டுடன் சேர்த்தே வீசப் பட்ட உபகரணங்களின் கணிப்பீட்டின் படி, குறைந்தது 12,000 தொன் நிறை கொண்ட ரி.என்.ரி வெடிமருந்துக்குச் சமனான வெடிப்பு இந்த ஹிரோஷிமா அணுகுண்டினால் சில மில்லி செக்கன்களின் நிகழ்ந்ததாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.  

large.Hiroshima.jpg.c0c3cc2df47b55d12dea3faa6478b300.jpg

அமெரிக்காவின் முதல் அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா நகரின் ஒரு தோற்றம். பட உதவி: நன்றியுடன் Imperial War Museum, UK.

Little Boy எனப் பெயரிடப் பட்ட இந்த முதல் அணுகுண்டை போல் ரிப்பெற்ஸ் என்ற விமானி தனது பி- 29 விமானத்தில் காவிச் சென்று ஒரு லட்சம் வரையான ஜப்பானிய மக்களைக் கொன்றிருக்கிறார். தனது அணுகுண்டு தாங்கிய பி 29 விமானத்திற்கு அவர் இட்ட பெயர் "எனொலா கே" - இது அவரின் தாயாருடைய பெயர். ஆனால், இது பற்றி அந்த விமானிக்கு எந்தக் குற்றவுணர்வும் ஏற்பட்டிருக்கவில்லை. பின்னர் இந்த விமானியை நேரில் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் இந்த மனிதப் பேரழிவிற்கான பொறுப்பு தான் மட்டுமே என்று கூறியதாக அறியக் கிடைக்கிறது.

ஆகஸ்ட் 9, 1945

முதலாவது அணுகுண்டு ஜப்பானிடமிருந்து அமெரிக்கா எதிர்பார்த்த துலங்கலைத் தரவில்லை - சரணடைதல் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இரண்டாவது அணுகுண்டை மூன்று நாட்கள் கழித்து கொகுரா (Kokura) என்ற இன்னொரு தொழில்துறை செறிந்த ஜப்பானிய நகரம் மீது வீச அமெரிக்காவின் இன்னொரு பி 29 விமானம் அனுப்பப் படுகிறது. நகரின் ஒரு குறிப்பிட்ட நில அடையாளத்தின் மீது Fat Boy என்ற பெயர் கொண்ட (முன்னையதை விட அதிக வெடிப்பு சக்தி கொண்ட) அணுகுண்டை பரசூட் மூலம் இறக்க வேண்டுமென்பதே திட்டம். கொகுரா நகர மக்களின் அதிர்ஷ்டம், முகில் மூட்டங்கள் இலக்கினை மறைத்ததால், இந்த இரண்டாவது குண்டு நாகசாகி நகரம் மீது வீசப் படுகிறது. இந்த புழூட்டோனியம் அணுகுண்டின் சக்தி வாய்ந்த வெடிப்பினால் 40,000 பேர் வரை உடனடியாக உயிரிழந்தார்கள். அணுகுண்டு முன்னையதை விட சக்தி கூடியதாக இருந்த போதும், ஒரு பக்கத்தில் மலைகளால் சூழப்பட்டிந்ததால், நாகசாகியின் உயிர்ச் சேதம் ஹிரோஷிமாவினதை விடக் குறைவாக இருந்தது.

 

ஜப்பான் சரணடைந்தது

ஆகஸ்ட் 15 (1945) இல் ஜப்பானிய சக்கரவர்த்தி ஹிரோஹிற்றோ ஜப்பான் நிபந்தனையின்றிச் சரணடைவதாக நாட்டு மக்களுக்கு வானொலி உரை மூலம் அறிவித்தார். செப்ரெம்பர் மாதம் ஜெனரல் மக் ஆர்தரிடம் உத்தியோகபூர்வமாக ரோக்கியோவில் ஜப்பான் சரணடைந்தது. ஐரோப்பாவில் நியூரம்பேர்க் வழக்கு மூலம் நாசி ஜேர்மனியின் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டது போல, ஜப்பானின் பாதுகாப்புக் கட்டமைப்பின் பலர் ரோக்கியோ யுத்தக் குற்ற விசாரணை ஆணையத்தால் (Tokyo War Crimes Tribunal) தண்டிக்கப் பட்டார்கள்.

large_Gen.McArthur.jpg.9ae5bb9bd1a9b77bbaa7be1648eaf4c0.jpg

அமெரிக்கப் படைகளின் தூரகிழக்குப் படைகளின் தளபதி ஜெனரல் டக்ளஸ் மக்கார்தர், மனிலா, பிலிப்பைன்ஸ். ஜப்பான் சரணடைந்த பின்னர், சக்கரவர்த்தி ஹிரோஹிற்றோ மீது யுத்தக் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளாமல் காத்தவர் மக்கார்தர். பட உதவி: நன்றியுடன், அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம். 

ஜப்பானிய சக்கரவர்த்தி ஹிரோஹிற்றோவை யுத்தக் குற்ற விசாரணைகளோடு தொடர்பு படுத்த அமெரிக்கா விரும்பவோ முயற்சிக்கவோ இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான ஜப்பானிய முடியாட்சி, ஜப்பான் ஒரு தேசமாக மீண்டும் துளிர்க்க அவசியமென அமெரிக்கத் தரப்பினர் நம்பியதே இதன் காரணம் எனக் கருதப் படுகிறது. தற்கால ஜப்பானில் கூட, இரண்டாம் உலகப் போரின் போது தென் கிழக்காசியாவில் ஜப்பானிய படைகள் செய்த போர்க்குற்றங்களை ஏற்றுக் கொள்ளாத வலது சாரிகள் அரசிலும், சமூகத்திலும் இருக்கிறார்கள். சில போர்க்குற்றவாளிகள் ஜப்பானிய மரபின் படி இன்றும் நினைவாலயங்களில் விம்பங்களாக வீற்றிருக்கிறார்கள்.

 

பூகோள மாற்றங்கள்

இரண்டு உலகப் போர்களிலும் ஆரம்பத்தில் இராணுவ ரீதியில் தலையிடாமல் விலகியிருந்த அமெரிக்கா இறுதியில் அந்த இரு போர்களினதும் முடிவினைத் தீர்மானிக்கும் பிரதான காரணியாகத் திகழ்ந்தது. இந்த இரண்டாம் உலகப் போரில் அதியுச்ச ஆயுதமான அணுவாயுதத்தைப் பயனபடுத்தியதால், அமெரிக்காவிற்கு சில நன்மைகளும் தீமைகளும் சேர்ந்தே கிடைத்தன. இராணுவ மேலாண்மை மூலம் உலகப் பொலிஸ்காரனாகவும், நேட்டோ என்ற இராணுவக் கூட்டமைப்பின் பிரதான தலைமை நாடாகவும் வரக் கிடைத்தமை நன்மைகள். மறுபக்கம், இலட்சக் கணக்கான போர்வீரர்களல்லாத ஜப்பானிய மக்களை சில வினாடிகளில் கொன்று குவித்த மனிதாபிமானக் கறை, இதன் காரணமாக உலகில் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஏனைய மனிதப் படுகொலைகளைக் கண்டிக்கும் தகுதியை இழந்தமை என்பன அமெரிக்காவிற்கு ஏற்பட்ட தீமைகள். ஆனால், ஜப்பானும் அமெரிக்காவும் இந்தப் பேரழிவைக் கடந்து சுமூகமான உறவுடன் முன்னகர்ந்து விட்டன.

 

1945 இற்குப் பின்னரான அடுத்த இரு தசாப்தங்களில் உலகின் அணுவாயுதப் போராயுதங்களின் எண்ணிக்கையும், சக்தியும், இவ்வாயுதங்களைக் காவிச் செல்லும் ஏவுகணைகளின் பரிசோதனைகளும் அதிகரித்தன. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், முழு உலகமும் அணுவாயுதங்களால் தோல்வியையே சந்தித்தது என்பதே வரலாற்று உண்மை.

- முற்றும்

 

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிற்குறிப்புகள்

 தொடர்ந்து வாசித்துக் கருத்துச் சொன்ன அனைவருக்கும் - முக்கியமாக சுவி, புங்கையூரான் ஆகியோருக்கு - நன்றிகள்!

பயன்படுத்தப் பட்ட நூல்கள்:

1.       In the Garden of Beasts (2011), Erik Larson. இது நாசிகளின் 1933 ஜேர்மனியின் நாளாந்த சம்பவங்களை விபரிக்கும் ஒரு நூல்.

2.       The Splendid and the Vile (2020), Erik Larson. இது 1939 முதல் 1940 வரை சேர்ச்சிலின் இங்கிலாந்து, ஹிற்லரின் நாசி ஜேர்மனி ஆகியன பற்றிய அருமையான நூல்.

3.       Stalingrad, The Fateful Siege:1942-1943. Antony Beevor (1998). இது 1942 இல் நிகழ்ந்த ஸ்ராலின்கிராட் முற்றுகை பற்றியதெனினும், அனைத்து சோவியத் முனைகள் பற்றிய முதல் நிலைத்தரவுகள் (primary source) அடிப்படையிலான வரலாற்று நூல்.

4.       Einstein: His Life and Universe, Walter Isaacson (2008). ஐன்ஸ்ரைனின் வாழ்க்கை வரலாறு, இதன் ஒரு அத்தியாயம் அணுகுண்டு தயாரிப்பு முயற்சிகள் பற்றிய விபரங்களைத் தருகிறது.

5.       Killing the Rising Sun: How America Vanquished World War II Japan, by Bill O’ Reilly & Martin Dugard (2016). பேர்ள் துறைமுகத் தாக்குதல், அமெரிக்க அணுவாயுதப் பரிசோதனைகள், ஜப்பான் மீதான அணுவாயுதத் தாக்குதல் என்பன பற்றிய நூல்.

இணையவழி ஆவணக்காப்பகங்கள்:

1.       The US National Archives.

2.       Imperial War Museum, UK.

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகுந்த கவனத்துடன் எழுதப் பட்ட ஆய்வுக்கட்டுரை இது என்பேன்..! நிறைய நேரம் செலவளித்திருப்பீர்கள் போல உள்ளது. இது நிச்சயம் ஒரு ஆவணமாக யாழில் நிலைத்திருக்கும் என நம்புகின்றேன்.

மிக்க நன்றி, ஜஸ்ரின்…!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் சிறப்பான ஒரு வரலாற்றுக் கட்டுரை ......பாடசாலையில் உலகசரித்திரம் படிக்கும்போது கூட இவ்வளவு உன்னிப்பாக நான் படித்ததில்லை .......மிகவும் நன்றி ஜஸ்ரின் .........!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மிக்க நன்றி @Justin தங்கள் வேலைப்பளுவின் மத்தியிலும் சிரமமெடுத்து இவ்வாறான பெறுமதியான வரலாற்று தொடரை தந்தமைக்கு. தங்கள் துறையான மருத்துவ துறையை தாண்டி தங்களின் சமுக, பொருளாதார, வரலாற்று அறிவும் அக்கறையும் வியக்க வைக்கிறது. யாழ் இணையத்தை  அறிவியல் சஞ்சிகையாக உருவாக்க இக்கட்டுரை சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளது. 

Edited by island
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, புங்கையூரன் said:

மிகுந்த கவனத்துடன் எழுதப் பட்ட ஆய்வுக்கட்டுரை இது என்பேன்..! நிறைய நேரம் செலவளித்திருப்பீர்கள் போல உள்ளது. இது நிச்சயம் ஒரு ஆவணமாக யாழில் நிலைத்திருக்கும் என நம்புகின்றேன்.

மிக்க நன்றி, ஜஸ்ரின்…!

நன்றி, ஓம் கவனமாக எழுத வேண்டிய இடம் யாழ். எழுத்துப் பிழை விட்டாலே தூக்கியடிக்க "பண்டிதர்கள்" உலவும் இடம்😂. நூல்களை என் சுவாரசியத்திற்காக வாசித்தேன், ஆனாலும் மீளப் போய் தரவுகளைக் கண்டு பிடித்து எழுத ஒவ்வொரு பகுதியும் 4 மணித்தியாலங்கள் வரை பிடித்தது.

7 hours ago, suvy said:

மிகவும் சிறப்பான ஒரு வரலாற்றுக் கட்டுரை ......பாடசாலையில் உலகசரித்திரம் படிக்கும்போது கூட இவ்வளவு உன்னிப்பாக நான் படித்ததில்லை .......மிகவும் நன்றி ஜஸ்ரின் .........!   👍

நன்றி! உங்களுக்கு நான் விசேட நன்றி சொல்லக் காரணம் ஒவ்வொரு பகுதியும் எழுதி முடிய உடனே கருத்துச் சொல்லும் ஒருவராக நீங்கள் தொடர்ந்திருக்கிறீர்கள்.

6 hours ago, island said:

மிக்க நன்றி @Justin தங்கள் வேலைப்பளுவின் மத்தியிலும் சிரமமெடுத்து இவ்வாறான பெறுமதியான வரலாற்று தொடரை தந்தமைக்கு. தங்கள் துறையான மருத்துவ துறையை தாண்டி தங்களின் சமுக, பொருளாதார, வரலாற்று அறிவும் அக்கறையும் வியக்க வைக்கிறது. யாழ் இணையத்தை  அறிவியல் சஞ்சிகையாக உருவாக்க இக்கட்டுரை சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளது. 

நன்றி வரவுக்கும் ஆதரவுக்கும்! யாழிலும் சரி, யாழிணைத்திற்கு வெளியேயும் சரி, திரித்த வரலாற்றுத் தகவல்களை ஒவ்வொன்றாகத் திருத்திக் கொண்டிருப்பது வீண் வேலையென்று நினைத்தமையால் ஒரே இடத்தில் எழுதி வைப்பது நல்லதென நினைத்தேன்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, island said:

தங்கள் வேலைப்பளுவின் மத்தியிலும் சிரமமெடுத்து இவ்வாறான பெறுமதியான வரலாற்று தொடரை தந்தமைக்கு. தங்கள் துறையான மருத்துவ துறையை தாண்டி தங்களின் சமுக, பொருளாதார, வரலாற்று அறிவும் அக்கறையும் வியக்க வைக்கிறது. யாழ் இணையத்தை  அறிவியல் சஞ்சிகையாக உருவாக்க இக்கட்டுரை சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளது. 

நிச்சயமாக.

வரலாற்றை, தற்காலத்தை கூட திரித்து பேசி திரிகின்ற போக்கு அதிகமாகிவிட்ட நிலையில் தமிழர்களின்  தேவையாக  ஜஸ்ரின் அண்ணாவின் முயற்ச்சி இருக்கிறது.

 

Edited by விளங்க நினைப்பவன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/2/2023 at 02:41, Justin said:

திரும்பும் வரலாறு

யஸ்ரின் அவர்களுக்கு,
மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் படிப்போருக்கு ஆர்வமேற்படும் எழுத்துநடையோடு எழுதியமைக்கும், நேரத்துக்கும் பாராட்டுடனான நன்றி. 

இந்தக் கட்டுரையைப் படித்தபோது எனது மனதிற் தோன்றியதை பதிகின்றேன்.  யுத்தம் எப்போதுமே கொடுமைகள் சூழ்ந்த வயல்களாகவும் சாக்க்காடுகள் ஊடாக நகரும் பெரும் அரக்கனாகவும் தோற்றம்கொண்டு ஆடியபோதும். முடிவில் சமரசங்களை எட்டத்தவறவில்லை. ஆனால் மிகவும் சிறிய நாடான இலங்கைத்தீவில் போர்முடிவுற்ற 14ஆண்டுகளில், போர்காலம் தடுத்துவைத்திருந்த நில ஆக்கிரமிப்பும்,பண்பாட்டு அடையாள அழிப்புமாக வேகமாகக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புத்தொடர்கிறது. ஏன்? இலங்கை அவளவு சக்திவாய்ந்த நாடா? அல்லது உலகின் செல்லப்பிள்ளையா? அல்லது உலகம் ஈழத்தமிழினம் அழிவதை விரும்பி மௌனித்திருக்கிறதா?

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, nochchi said:

யஸ்ரின் அவர்களுக்கு,
மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் படிப்போருக்கு ஆர்வமேற்படும் எழுத்துநடையோடு எழுதியமைக்கும், நேரத்துக்கும் பாராட்டுடனான நன்றி. 

இந்தக் கட்டுரையைப் படித்தபோது எனது மனதிற் தோன்றியதை பதிகின்றேன்.  யுத்தம் எப்போதுமே கொடுமைகள் சூழ்ந்த வயல்களாகவும் சாக்க்காடுகள் ஊடாக நகரும் பெரும் அரக்கனாகவும் தோற்றம்கொண்டு ஆடியபோதும். முடிவில் சமரசங்களை எட்டத்தவறவில்லை. ஆனால் மிகவும் சிறிய நாடான இலங்கைத்தீவில் போர்முடிவுற்ற 14ஆண்டுகளில், போர்காலம் தடுத்துவைத்திருந்த நில ஆக்கிரமிப்பும்,பண்பாட்டு அடையாள அழிப்புமாக வேகமாகக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புத்தொடர்கிறது. ஏன்? இலங்கை அவளவு சக்திவாய்ந்த நாடா? அல்லது உலகின் செல்லப்பிள்ளையா? அல்லது உலகம் ஈழத்தமிழினம் அழிவதை விரும்பி மௌனித்திருக்கிறதா?

நன்றி

நொச்சி, நன்றி வாசித்துக் கருத்துப் பகிர்ந்தமைக்கு.

1.  இறையாண்மை, தெளிவான பௌதீக எல்லை என்பன கொண்ட நாடுகள் யுத்தம் முடிந்த பின்னர்  முன்னோக்கி நகர்வது இலகுவானது. இதில் தோல்வி கண்ட நாடு முன்னோக்கி நகர அந்த நாட்டின் ஒருமித்த தேசிய அடையாளம் (national identity) பலமாக இருந்தால் முன்னோக்கி நகர்வது இன்னும் இலகு. உதாரணம் ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி.

2. ஆனால், இப்படி ஒருமித்த அடையாளம் இல்லா விட்டால் இறையாண்மை கொண்ட நாடுகள் கூட சிதைந்து போகும்: உதாரணம், ஈராக் (சுனி, ஷியா, குர்து, கிறிஸ்தவர்), லிபியா (லிபிய தேசிய அடையாளம் என்ற ஒன்று இல்லை), ஆப்கானிஸ்தான் (தாஜிக், பஷ்ரூன், இன்ன பிற அடையாளங்கள், ஆப்கான் தேசிய அடையாளம் மிகவும் நொய்மையானது!).

3. இப்ப, எங்கள் பிரச்சினை சட்டரீதியாக (de jure) தமிழர் தரப்பு இறையாண்மை கொண்ட நாடாக இருக்கவில்லை, எனவே எல்லோருக்கும் அது உள் நாட்டு யுத்தம். உள் நாட்டு யுத்தத்தில் வெல்லும் தரப்பின் மனநிலை தான் தோற்ற தரப்பின் முன்னோக்கிய நகர்வைத் தீர்மானிக்கும். சிங்கள மனநிலை என்னவென்று நான் விளக்க வேண்டியதில்லை, எனவே முட்டுப் பட்டு நிற்கிறோம்.

ஆனால், நாம் சர்வதேசத்தை எதிர்பார்ப்பதற்கு முன்னர் நாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து விட்டா சர்வதேசத்தின் முகத்தைப் பார்க்கிறோம்? இல்லையென்று தான் நினைக்கிறேன்.

உதாரணமாக: ஈழத்தமிழருக்கு இப்போது தேவையான 5 விடயங்களை, ஒரு முக்கியத்துவ (priority)அடிப்படையிலான பட்டியலாக ஈழத்தில் இருக்கும் தமிழ்க்கட்சிகள் எல்லாம் ஒருமித்து தயாரித்திருக்கின்றனவா? அந்தப் பட்டியலோடு,  சிங்களவரிடம் பேசப் போயிருக்கின்றனரா? எங்கள் தரப்பிலிருக்கும் இந்தப் பெரிய ஓட்டையை சாமான்யன் நானே அடையாளம் கண்டு கொண்டிருக்கும் போது, சிங்களவருக்கும், சர்வதேசத்திற்கும் இது தெரியாமலிருக்குமா?  

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு வரலாற்று மொழி பெயர்ப்பு கட்டுரை இரத்தின சுருக்கமாக, வரலாற்றைப்பற்றி தெரியாத சிலருக்கு நன்றாக உதவும் விளங்கிகொள்ள, பாராட்டுக்கள்.

On 11/4/2023 at 08:48, Justin said:

முழு உலகமும் அணுவாயுதங்களால் தோல்வியையே சந்தித்தது என்பதே வரலாற்று உண்மை.

இந்த கட்டுரையின் தலைப்பிற்கும் முடிவிற்கும் தொடர்பை காணவில்லையே - எப்படி வரலாறு திரும்புகின்றது "அமெரிக்கா அணுவாயுதத்தை பயன்படுத்தி ஐப்பானை அடிபணிய வைத்தபின்பு இரு நாடுகளும் சுமூகமாக முன்னர்நகர்ந்துவிட்டனர்", அதே மாதிரி வரலாறு திரும்புமா, எந்தநாட்டிற்கு இப்படி நடக்கும் 

எப்படி சொல்கின்றீர்கள், ஐப்பானின் தோல்விக்குபின் எந்த நாடு தோல்விகண்டிச்சு அணுவாயுதத்தால் தோல்விகண்ட நாடு தற்போது அமெரிக்காதான் வடகொரியா, ஈரான், ரசியா சீனா ஒன்றும் செய்யமுடியவில்லை, என்ன இறங்கிவந்து வடகொரியாவிற்கு கைகொடுத்த துதான் மிச்சம் அமெரிக்க ஐனாதிபதியால், இப்ப உள்ள ஐனாதிபதியால் தன் நாட்டு பிரச்சனைகளேயே சமாளிக்க முடியவில்லை

இனி அமெரிக்காவால் எந்த பூச்சாண்டியும் காண்ட முடியாது வரலாறு திரும்ப, கோழைத்தனமான தாக்குதல்களை வேணுமென்றால் வீரமாக நடத்தலாம்

 இந்தா ரசியாவை பிடிக்கபோகின்றேன் என போன நெப்போலியன் ஹிட்லருக்கு நடந்த வரலாறு வேணுமென்றால் திரும்பலாம்

 நீங்கள் ஆரம்பித்த திரி என்பதால் எப்படி எங்கே வரலாறு திரும்புமென்று சொல்ல முடியுமா, தயவு செய்து மற்ற திரிகளில் நீங்கள் பாவிக்கும் நளினமற்ற வார்த்தைகளை தவிர்த்துவிட்டு பதிலிட்டால் நன்று, அல்லது நாமும் அதே வார்த்தைகளை உங்களை நோக்கி பாவிக்க முடியும், நீங்கள் பாவிக்கும் போது வராதவர்கள் நாங்கள் பாவித்தபின் வரித்துகண்டி வந்துவிடுவார்கள் உங்கள் நளின வார்த்தைகளை விளங்காமல்.

அத்துடன் உங்கள் முழு பதிவையும் வாசித்துவிட்டுதான் கேள்வி கேட்கின்றேன், மீண்டும் நுனி, அடி, ... என பதியவேண்டாம்

 அமெரிக்கா வியாட்னாமில் படித்த வரலாற்றை மறந்து, ஈராக்கில் கற்றார்கள், பின் ஆப்பகானிஸ்தானில் - அங்கு ஆயதங்கள் தளபாடங்கள், வாகனங்கள், வானூர்திகளை அழிக்க போன தாலிபான்களிடமே கொடுத்து திரும்பிஓடியதுதான் வரலாறு. அமெரிக்காதான் வரலாற்றை திரும்ப திரும்ப படிக்க வேண்டும், மற்ற உலக நாடுகள் அல்ல

திரும்பும் வரலாறு எந்த நாட்டிற்கு எப்படி, எதனால் , யாரால், எதற்கு என விபரமாக தரமுடியுமா???

  • Thanks 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு குறிவைத்து 3ஆவது டெஸ்டை எதிகொள்ளும் இந்தியா - அவுஸ்திரேலியா Published By: VISHNU 13 DEC, 2024 | 11:24 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 5 போடடிகள் கொண்ட போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டி பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது. பேர்த் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா 295 ஓட்டங்களாலும் அடிலெய்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா 10 விக்கெட்களாலும் வெற்றி பெற்றதை அடுத்து தொடர் 1 - 1 என சம நிலையில் இருக்கிறது. இரண்டு அணிகளும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஒன்றையொன்று வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில், போர்டர் - காவஸ்கர் தொடருக்கும் அப்பால், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற வேண்டும் என்பதை குறிவைத்து இரண்டு அணிகளும் விளையாடும் என்பது உறுதி. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நோக்கிய பயணம் பாதிக்கும் என்பதை இரண்டு அணிகளும் நன்கு அறிந்த நிலையிலேயே இந்த டெஸ்ட் போட்டியை எதிர்கொள்கின்றன. இதன் காரணமாக இந்த டெஸ்ட் போட்டி மற்றொரு பரபரப்பான போட்டியாக அமையும் என்பது நிச்சயம். எவ்வாறாயினும் இரண்டு அணிகளிலும் ஓரிரு துடுப்பாட்ட வீரர்களே பிரகாசித்துள்ளதுடன் சிரேஷ்ட வீரர்கள் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளதைக் கடந்த போட்டிகளில் காணமுடிந்தது. அவுஸ்திரேலிய அணியில் ட்ரவிஸ் ஹெட் மாத்திரமே துடுப்பாட்டத்தில் பிரகாசித்துள்ளதுடன் இந்திய அணியில் நிட்டிஷ் குமார் ரெட்டி, யஷஸ்வி ஜய்ஸ்வால் ஆகிய இருவரும் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். விராத் கோஹ்லி, கே. எல். ராகுல் ஆகியோரும் தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ரோஹித் ஷார்மா 2ஆவது போட்டியின் மூலம் தொடரில் இணைந்துகொண்ட போதிலும் மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடிய அவரால் கணிசமான ஓட்டங்களைப் பெற முடியாமல் போனது. அவர் மீண்டும் ஆரம்ப வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் இரண்டு அணிகளிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டுள்ளதை அவர்களது பந்துவீச்சுப் பெறுதிகள் எடுத்துக்காட்டுகின்றன. மிச்செல் ஸ்டார்க் 11 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 10 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். இந்திய பந்துவீச்சிலும் வேகப்பந்துவீச்சாளர்களான ஜஸ்ப்ரிட் பும்ரா (12), மொஹமத் சிராஜ் (9) ஆகிய இருவரே முன்னிலையில் இருக்கின்றனர். அவுஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மானுஸ் லபுஷேன் ஆகியோரும் இந்திய அணியில் விராத் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில் ஆகியோரும் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். பிறிஸ்பேன் கபா விளையாடரங்கில் அவுஸ்திரேலியா விளையாடியுள்ள 66 டெஸ்ட் போட்டிகளில் 42இல் வெற்றிபெற்றுள்ளதுடன் 10இல் மாத்திரமே தோல்வி அடைந்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த மைதானத்தில் இந்தியா விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. எவ்வாறாயினும் இரண்டு அணிகளுக்கும் இடையில் இந்த மைதானத்தில் கடைசியாக 2021இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா 3 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது. அணிகள் இந்தியா: யஷஸ்வி ஜய்ஸ்வால், ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், கே.எல். ராகுல், நிட்டிஷ் குமார் ரெட்டி, வொஷிங்டன் சுந்தர் அல்லது ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், மொஹமத் சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா. அவுஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, நேதன் மெக்ஸ்வீனி, மானுஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட், மிச்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பெட் கமின்ஸ் (தலைவர்), மிச்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜொஷ் ஹேஸ்ல்வூட். https://www.virakesari.lk/article/201224
    • படைய மருத்துவமனை ஒன்றினுள் படைய மருத்துவர்கள்     
    • நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை; அபிவிருத்தி செய்வதற்கே வந்தோம்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் 14 DEC, 2024 | 09:42 AM (எம்.நியூட்டன்) நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை ஊழலற்ற ஆட்சி  நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே ஆட்சிக்கு வந்தோம் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.   யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தலைமை உரை ஆற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.  அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,  “நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை. ஊழல் அற்ற ஆட்சியில்  நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே ஆட்சிக்கு வந்தோம். இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் என்பது அதிகாரிகளை அச்சுறுத்துவதல்ல. மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதாகும். இதற்கு அனைவரது ஒத்துளைப்புகளும் தேவை.  அரசியல்வாதிகளால் மட்டும் இதனை செய்ய முடியாது. அரச அதிகாரிகளது ஒத்துழைப்பு பங்களிப்பு அவசியம். கடந்த காலங்களில் அரசியல் தலையிடு இருந்தமையால் வினைத்திறனாக செயற்படாதிருந்தமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இனி அவ்வாறு தலையீடுகள் கிடையாது. சுதந்திரமாக செயல்பட்டு மாவட்டத்தை. நாட்டை முன்னேற்ற வேண்டும்.  தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். இந்த ஆணை என்பது இதுவரை காலமும் இடம்பெற்ற ஊழல் ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றுக்கு எதிராகவே இந்த மாற்றம் ஏற்பட்டது. மேலும் இந்த அரசாங்கம் கிராமங்களை நோக்கியே வேலைத் திட்டங்களை செயல்படவுள்ளது. எனவே கடந்த காலங்களை போல் அல்லாமல்  மக்களுக்கு உண்மையுடனும் விசுவாசத்துடனும்  சேவையாற்ற வேண்டும்“ என்றார். https://www.virakesari.lk/article/201231
    • ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு உடல்நலனை பேண உதவுகிறதா? மருத்துவர்கள் சொல்வது என்ன? பட மூலாதாரம்,OURA படக்குறிப்பு, ஸ்மார்ட் மோதிரங்களில் சென்சார்கள் உள்ளன, அவை அணிபவரின் இதயத் துடிப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளைக் கண்காணிக்கும் கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ கிளெய்ன்மன் பதவி, தொழில்நுட்ப ஆசிரியர் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் மோதிரம் போன்ற அணியக்கூடிய மின்னணு கருவிகளின் (Wearables) தொழில்நுட்பத்தில் தற்போது ஸ்மார்ட் வாட்ச்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. பல பில்லியன் டாலர்கள் புழங்கக்கூடிய இந்த தொழில்நுட்பத்துறை, மருத்துவ கண்காணிப்பு குறித்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. பல பிரீமியம் தயாரிப்புகள், உடற்பயிற்சி நடைமுறைகள், உடலின் வெப்பநிலை, இதயத் துடிப்பு, மாதவிடாய் சுழற்சி, தூக்கம் போன்றவற்றை அவை துல்லியமாகக் கண்காணிப்பதாகக் கூறுகின்றன. பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதார சேவை (NHS) எனப்படும் பொது சுகாதார அமைப்பின் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு அணியக்கூடிய மின்னணு கருவிகளை வழங்குவதற்கான ஒரு திட்டத்தைப் பற்றி சுகாதாரத்துறை செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் பேசியுள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்கான எதிர்வினைகள் போன்ற அறிகுறிகளை வீட்டில் இருந்தவாறே கண்காணிக்க இவை உதவும். ஆனால் பல மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், அணியக்கூடிய மின்னணு கருவிகளால் சேகரிக்கப்படும் மருத்துவத் தரவுகளை எச்சரிக்கையுடனே அணுகுகிறார்கள். அணியக்கூடிய மின்னணு கருவிகளின் எச்சரிக்கைகள் நான் தற்போது அல்ட்ராஹியூமன் (Ultrahuman) எனும் நிறுவனத்தின் ஒரு ஸ்மார்ட் மோதிரத்தை அணிந்து வருகிறேன். எனது உடல்நிலை சரியில்லை என்பதை நான் கண்டறிவதற்கு முன்பே அந்த ஸ்மார்ட் மோதிரம் கண்டுபிடித்து விடுதாக நினைக்கிறேன். ஒரு வார இறுதியின்போது, என் உடலின் வெப்பநிலை சற்று அதிகரித்து இருப்பதாகவும், நான் சரியாகத் தூங்குவதில்லை என்றும் அது என்னை எச்சரித்தது. இது என் உடலில் ஏதாவது பிரச்னை ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் அந்த ஸ்மார்ட் மோதிரம் என்னை எச்சரித்தது. பெரிமெனோபாஸ் (Perimenopause) அறிகுறிகளைப் பற்றி படித்த பிறகும் நான் அதைப் புறக்கணித்தேன். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, வயிற்று வலியால் ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். எனக்கு மருத்துவ உதவி தேவைப்படவில்லை, ஆனால் ஒருவேளை தேவைப்பட்டிருந்தால், நான் அணிந்திருந்த ஸ்மார்ட் மோதிரத்தின் தரவுகள், சிகிச்சைக்காக மருத்துவ நிபுணர்களுக்கு உதவியிருக்குமா? இதுபோன்ற பல 'அணியக்கூடிய மின்னணு கருவி' பிராண்டுகள் மருத்துவர்கள் அந்தத் தரவுகளைப் பயன்படுத்துவதைத் தீவிரமாக ஊக்குவிக்கின்றன. உதாரணத்திற்கு, ஓரா ஸ்மார்ட் மோதிரம், நோயாளிகள் தங்கள் உடல்நிலை குறித்த தரவுகளை மருத்துவருடன் பகிர்ந்துகொள்ள உதவும் வகையில், அவற்றை ஓர் அறிக்கை வடிவில் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது. புவிவெப்ப ஆற்றல்: பூமியை ஆழமாக தோண்டி எடுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சிறப்பு என்ன?11 டிசம்பர் 2024 நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!12 டிசம்பர் 2024 ஆரோக்கியத்தை துல்லியமாக மதிப்பிட உதவுகிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அணியக்கூடிய மின்னணு கருவிகளின் தொழில்நுட்பத் துறையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் ஆதிக்கம் செலுத்துகிறது ஓரா நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் ஜேக் டாய்ச், அணியக்கூடிய மின்னணு கருவிகளின் தரவுகள் 'ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மிகவும் துல்லியமாக மதிப்பிடுவதற்கு உதவுவதாக' கூறுகிறார். ஆனால் இது எல்லா நேரத்திலும் உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும் என்பதை மருத்துவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வதில்லை. மருத்துவர் ஹெலன் சாலிஸ்பரி ஆக்ஸ்போர்டில் பணிபுரிகிறார். நோயாளிகள் இடையே 'அணியக்கூடிய மின்னணு கருவிகளின்' பயன்பாடு அதிகரித்திருப்பதை அவர் கவனித்துள்ளார். அது குறித்த கவலையையும் அவர் வெளிப்படுத்துகிறார். "இத்தகைய கருவிகள் அனைத்து முக்கியமான நேரங்களிலும் கை கொடுப்பதில்லை. உடல்நலன் குறித்து எப்போதும் கவலைப்படும், உடல்நிலையை அதிகமாகக் கண்காணிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குகிறோம் என்று நான் வருத்தப்படுகிறேன்," என்று அவர் கூறுகிறார். இதயத் துடிப்பு அதிகரிப்பது போன்ற அசாதாரண தரவுகள் கிடைப்பதற்குப் பின்னால், ஒரு தற்காலிக உடல்நிலை மாற்றமோ அல்லது அந்தக் கருவியில் ஏற்பட்ட பிழை என ஏராளமான காரணங்கள் இருக்கலாம் என்று மருத்துவர் சாலிஸ்பரி கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES "எப்போதுமே தங்கள் உடல்நிலையைக் கண்காணித்துக்கொண்டே இருக்கும் நிலைக்கு நாம் மக்களைத் தள்ளிவிடுவோமோ என்று நான் கவலைப்படுகிறேன். பிறகு தங்களின் உள்ளுணர்வைவிட மின்னணுக் கருவிகளையே சார்ந்திருக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறையும் அந்தக் கருவி அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் காட்டும்போது, அவர்கள் மருத்துவர்களைத் தேடி ஓட வேண்டியிருக்கும்" என்கிறார் சாலிஸ்பரி. எதிர்பாராத மருத்துவ நோயறிதலுக்கு எதிரான ஒரு வகை அரணாக, உளவியல் ரீதியில் இந்த மருத்துவத் தரவுகள் பயன்படுவதை அவர் விளக்குகிறார். உதாரணமாக, ஒரு ஸ்மார்ட் வாட்ச் அல்லது செயலி, ஒரு பயங்கரமான, வீரியம் மிக்க புற்றுநோய்க் கட்டியின் வளர்ச்சியை நிச்சயம் கண்டறியும் என உறுதியாகச் சொல்ல முடியாது என்கிறார் அவர். "நல்ல பழக்கங்களை ஊக்குவிப்பது, இத்தகைய அணியக்கூடிய மின்னணுக் கருவிகள் செய்யும் ஒரு நல்ல விஷயம். ஆனால் அவற்றிடம் இருந்து நாம் பெறக்கூடிய சிறந்த ஆலோசனைகள், ஏற்கெனவே பல ஆண்டுகளாக மருத்துவர்கள் வழங்கி வரும் அதே அறிவுரைகள்தான்" என்று கூறுகிறார் சாலிஸ்பரி. மேலும், "அதிகமாக நடப்பது, அதிகளவில் மது அருந்தாமல் இருப்பது, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க முயல்வது போன்றவைதான் நீங்கள் உண்மையில் செய்ய வேண்டியவை. இவையெல்லாம் ஒருபோதும் மாறாது," என்றும் அவர் தெரிவித்தார். தியாகராய நகர்: நூற்றாண்டை கொண்டாடும் சென்னை அங்காடித் தெருவின் கதை9 டிசம்பர் 2024 வரலாற்றாசிரியர்களின் பார்வையில் திப்பு சுல்தான் ஒரு ஹீரோவா அல்லது வில்லனா? - ஓர் ஆய்வு10 டிசம்பர் 2024 இதய கண்காணிப்பு செயல்பாடு பட மூலாதாரம்,HELEN SALISBURY படக்குறிப்பு, இந்தக் கருவிகள் வழங்கும் ஆலோசனைகள், பல ஆண்டுகளாக மருத்துவர்கள் வழங்கி வரும் அதே அறிவுரைகள்தான் என்கிறார் சாலிஸ்பரி. 'ஆப்பிள் வாட்ச்' தான் உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் வாட்ச் என்று கூறப்படுகிறது, இருப்பினும் சமீபத்தில் அதன் விற்பனை குறைந்துள்ளது. ஆப்பிள் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் தங்களது ஸ்மார்ட் வாட்சில் உள்ள 'இதய கண்காணிப்பு செயல்பாடு' காரணமாக உயிர் பிழைத்த நபர்களின் அனுபவங்களை விளம்பரத்திற்காகப் பயன்படுத்துகிறது. அவற்றில் ஏராளமானவற்றை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இருப்பினும், அவற்றில் எத்தனை தருணங்களில் பிழையான தரவுகள், பிழையான எச்சரிக்கைகள் காட்டப்பட்டன என்பது குறித்து நான் கேள்விப்படவில்லை. பல சந்தர்ப்பங்களில், நோயாளிகள் தாங்கள் 'அணியக்கூடிய மின்னணு கருவியின்' மூலம் கிடைத்த தரவை மருத்துவர்களுக்கு வழங்கும்போது, தங்கள் சொந்த உபகரணங்களைப் பயன்படுத்தி அதை மீண்டும் சோதித்துப் பார்க்கவே மருத்துவர்கள் விரும்புகிறார்கள். "இதற்குப் பல காரணங்கள் உள்ளன, அவை நடைமுறைக்கு ஏற்றவையும்கூட" என்று நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பல்கலைக்கழகத்தின் 'அணியக்கூடிய மின்னணுக் கருவிகள்' தொழில்நுட்பங்களின் இணை பேராசிரியர் டாக்டர் யாங் வெய் கூறுகிறார். "நீங்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது, உங்கள் ஈ.சி.ஜி (எலக்ட்ரோ கார்டியோகிராம், உங்கள் இதயத்தின் செயல்பாட்டைச் சரிபார்க்கும் ஒரு சோதனை) அளவிடும்போது, அந்த இயந்திரம் சுவரில் மாட்டப்பட்டு இருப்பதால் அதன் மின் நுகர்வு பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை," என்று அவர் கூறுகிறார். "ஆனால் உங்கள் ஸ்மார்ட் வாட்ச்சை பொறுத்தவரை, அது தொடர்ந்து இயங்க சார்ஜ் தேவைப்படுகிறது. சார்ஜ் குறையும் என்பதால் நீங்கள் தொடர்ந்து உங்கள் ஈ.சி.ஜியை அளவிடப் போவதில்லை" என்கிறார். மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்12 டிசம்பர் 2024 'சிறுபூச்சிகளை உண்டன, சொந்த பற்களை கூட விழுங்கின' - டைனோசர்கள் பற்றிய புதிரை அவிழ்க்கும் ஆய்வு முடிவுகள்5 டிசம்பர் 2024 தரவுகளின் துல்லியம் குறைவதற்கான வாய்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஸ்மார்ட் வாட்ச் போன்ற ஒரு கருவி எவ்வளவு சீராக அணியப்படுகிறதோ, அவ்வளவு துல்லியமாக அதன் தரவு இருக்கும் மருத்துவர் வெய் என் விரலில் இருக்கும் மோதிரத்தைச் சுட்டிக் காட்டினார். "இதயத் துடிப்பைப் பொறுத்தவரை, மணிக்கட்டில் இருந்து அல்லது இதயத்தில் இருந்து நேரடியாக அளவிடுவதுதான் சிறந்தது. இதுபோல விரலில் அளந்தால், அந்தத் தரவுகளின் துல்லியம் குறைய வாய்ப்புள்ளது" என்று அவர் கூறுகிறார். இதுபோன்ற தரவு இடைவெளிகளை நிரப்புவது மென்பொருளின் பங்கு. ஆனால் அணியக்கூடிய மின்னணு கருவிகளை இயக்கும் சென்சார்கள், மென்பொருள் அல்லது அதன் தரவு மற்றும் அது எந்த வடிவத்தில் சேகரிக்கப்படுகிறது என்பவை உள்பட, அந்தக் கருவிகளுக்கான சர்வதேச தரநிலை என எதுவும் இல்லை. ஒரு கருவி எவ்வளவு சீராக அணியப்படுகிறதோ, அவ்வளவு துல்லியமாக அதன் தரவு இருக்கும். ஆனால் இதில் எச்சரிக்கையாக அணுக வேண்டிய ஒரு விஷயமும் உள்ளது. பென் வுட் அன்றைய தினம் வெளியே சென்றிருந்தபோது, அவரது மனைவிக்கு, பென்னின் ஆப்பிள் வாட்சிலிருந்து தொடர்ச்சியான எச்சரிக்கை அறிவிப்புகள் வந்தன. பென் வுட், ஒரு கார் விபத்தில் சிக்கியதாக அந்த அறிவிப்புகள் தெரிவித்தன. அவசர சேவைகளுக்கு அழைப்பதற்கு கைப்பேசியைப் பயன்படுத்த வேண்டிய தேவையிருக்கும் என்பதால், நேரடியாக அழைப்பதைவிட கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்புமாறு அந்த அறிவிப்புகள் அறிவுறுத்தின. அந்த எச்சரிக்கை அறிவிப்புகள் உண்மையானவையாக இருந்தன. மேலும் பென் வுட்டின் கைப்பேசியில் அவசரக்கால தொடர்பு எண்ணாக அவரது மனைவியின் எண் இருந்ததால், அவை அனுப்பப்பட்டன. ஆனால் இந்த விஷயத்தில் தேவையற்றதாகவும் அவை இருந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES காரணம் அப்போது பென் ஒரு கார் பந்தய டிராக்கில் சில பந்தய கார்களை வேகமாக ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அத்தகைய கார்களை ஓட்டுவதில் தனக்கு அதிக திறமை இல்லையென்றாலும்கூட, எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக பென் வுட் கூறுகிறார். "உண்மையில் ஒரு விபத்து நடப்பதற்கும், அதுகுறித்து முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் இடையிலான எல்லைகள் கவனமாக நிர்வகிக்கப்பட வேண்டும். மின்னணு கருவிகளின் உற்பத்தியாளர்கள், அவசர சேவை முகமைகள், அதற்கு முதலில் பதில் அளிப்பவர்கள் மற்றும் தனிநபர்கள் எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பத்தை எவ்வாறு அணுகுவார்கள் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன்" என்று பென் வுட் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார். 'கிங்ஸ் ஃபண்ட்' அமைப்பின் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பிரிதேஷ் மிஸ்திரி, நோயாளிகள் குறித்த தரவுகளை மருத்துவ அமைப்புகளில் உள்ளிடுவதில் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன என்பதை ஒப்புக்கொள்கிறார். எந்தவொரு தெளிவான தீர்மானமும் இல்லாமல் பிரிட்டனில் பல ஆண்டுகளாக இதுகுறித்த விவாதம் நடந்து வருவதாக அவர் கூறுகிறார். மருத்துவமனைகளில் இருந்து சமூக அமைப்புகளை நோக்கி மருத்துவ கவனிப்புகளை நகர்த்துவதற்கான பிரிட்டன் அரசின் முயற்சியில், அணியக்கூடிய மின்னணு கருவிகள் முக்கிய பங்காற்றி இருக்கக்கூடும் என்று மிஸ்திரி நம்புகிறார். "எவ்வாறாயினும், தொழில்நுட்பத்தை ஆதரிக்கக்கூடிய மற்றும் பணியாளர்களுக்குத் தேவையான திறன்கள், அறிவு, ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையைக் கொண்டிருக்க உதவும் வகையிலான உள்கட்டமைப்பு இல்லாமல் அது கடினமாகவே இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று மிஸ்திரி கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/c0mv940vpzro
    • மரு.பாஸ்கரன்(வலது), மரு.சுஜந்தன் மற்றும் மறைந்த மரு.கெங்காதரன்(இடது) .
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.