Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அய்ரோப்பாவில் பெரியார் இயக்கம் - வரலாற்றுத் தேவை

Featured Replies

அய்ரோப்பாவில் பெரியார் இயக்கம் - வரலாற்றுத் தேவை

ஆக்கம்: தமிழ்நாட்டிலிருந்து பிரின்சுஎன்ஆர்சமா

"இந்தியாவில இருந்து வரும் போது எல்லா மூடப் பழக்கத்தையும் வச்சுட்டு வந்திருப்பீங்கன்னு நினைச்சேன். எல்லாத்தையும் மூட்டை கட்டி கூடவே எடுத்துட்டு வந்திருக்கீங்களே!"

மலேசியாவில் தமிழர்களை சந்தித்த தந்தை பெரியார் அங்கும் கோயில்களும் மூடப் பழக்க வழக்கங்களும் மிகுந்திருப்பதைப் பார்த்து மனம் நொந்து சொன்ன வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகள் புலம் பெயர்ந்து வாழும் அத்தனைத் தமிழர்களுக்கும் பொதுவாகிறது இன்று!

எனது அண்ணன் பெரியார் சாக்ரடீசின் மகளுக்கு தமிழீழம் என்று பெயர் வைத்தோம்.'தமிழீழம் மலர்ந்தது' என்று விடுதலைக்கு நன்கொடையும் கொடுத்தோம். சொல்வதற்குக் கடினப்பட்டும், பல முறை பிழையாக உச்சரிக்கப்பட்டு, எழுதப்பட்டும் இருந்தாலும், சிறு வயதிலிருந்தே ஒவ்வொரு முறையும் பள்ளியில் தன் ஆசிரியைகளுக்கு விளக்கம் சொல்லி "எங்கள் பிரபாகரன் மாமா போராடி வெல்லப் போகும் தமிழர்களின் நாட்டுக்குப் பெயர் தமிழீழம். அது தான் என் பெயர்" என்று வியக்கவைப்பாள் தமிழீழம்.

இப்போது அவளுக்கு பத்து வயது ஆகிறது. ஒருமுறை ஈழத் தமிழ்ப் பெண் ஒருவர் இவளது பெயரைக் கேட்டு ஆனந்தத்தில் அழுதுவிட்டார். ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் இவளது பெயரை பிறரிடம் சொல்லச் சொல்லி மகிழ்வார் அண்ணன் அறிவுமதி.

தமிழ்நாட்டில் இப்படி எத்தனையோ தமிழீழம், பிரபாகரன், திலீபன், கிட்டு, முல்லைவீரன், யாழ் - போன்ற பெயர்கள் உண்டு.

திராவிடர் கழக மாநாட்டில் பெயர் வைப்பதற்காக தமிழர் தலைவர் அய்யா வீரமணியிடம் ஒரு குழந்தை கொடுக்கப்பட்டபோது, 'பிரபாகரன்' என்று பெயர் சூட்டினார். "அய்யா, கடந்த வருடம் இவனது அண்ணனுக்கும் இதே பெயரைத்தான் சூட்டினீர்கள்" என்றார் குழந்தையின் தந்தை. பிறகு அப்போதைய தளபதி மாத்தையாவின் பெயரோ, கிட்டுவின் பெயரோ சூட்டியதாக நினைவு. அந்தளவுக்கு தமிழீழத்தை நேசிக்கக்கூடியவர்கள் இருக்கிறோம்.

ஆனால் புலம்பெயர் தமிழர்களில் பலர் வீட்டில் இன்னும் 'வர்ஷினி'களும், 'தர்ஷினி'களுமாக வடமொழிப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. சாய்பாபாவின் பக்தர்களில் பலர் யாரென்றால் ஈழத் தமிழர்களாகத் தான் இருக்கிறார்கள். அவரது கையசைவில் தங்கள் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களோ என்னவோ? (இந்த லட்சணத்தில் பிரேமானந்தா வேறு புலிகளுக்கும், மகிந்த அரசுக்கும் இடையே பேசி சமாதானத்தைக் கொண்டு வருவார் என பிரேமானந்தா மடத்திலிருந்து சொல்வதாக பத்திரிகைகள் எழுதுகின்றன. என்ன நடக்குது இங்க?)

காலமெல்லாம் வழிபட்டும் தங்களைக் காக்காத முருகப் பெருமானையோ, அவரது உறவுக்கார இந்துக் கடவுள்களையோ தமிழர்கள் புறக்கணித்ததாகத் தெரியவில்லை. மாறாக ஈழத்திலிருந்து புலம்பெயரும் போதே முருகப்பெருமானை மூட்டைகட்டி எடுத்துச் சென்று விடுகிறார்கள்.

உருவாகப் போகும் தமிழீழம் மூட நம்பிக்கைகளற்ற பகுத்தறிவு தேசமாகத் திகழ வேண்டும்; எனவே சிறப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என தலைவர் பிரபாகரன் விரும்புவதாகவும் தெரிகிறது. ஏனெனில் பகுத்தறிவற்ற தேசம் சிங்களர்களின் கையிலிருந்து விடுதலை பெற்றாலும், மதப் பிடியிலிருந்து மீள்வது கடினம் என்பதை அவர் புரிந்து வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் நம் தமிழர்கள் நாடெங்கும் கோயில்கள் கட்டுதல், அங்கேயும் "ஏக மாதா பகுபிதா சற்சூத்திராய நமஹ" 'ஒரு தாய்க்கும் பல தகப்பன்களுக்கும் பிறந்த சூத்திரப் பயலே' என்று மந்திரம் ஓத இங்கிருந்து பார்ப்பனர்களை இறக்குமதி செய்துகொள்ளுதல் என்று இருக்கிறார்களே என்று வருந்தவேண்டியதாய் இருக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் பார்ப்பனர்களை நேரடியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று கருதுகிறேன். ஆயினும் பார்ப்பனீயக் கூறுகளாக இந்துமதச் சடங்குகள் அவர்களிடம் மிகுந்திருக்கின்றன.

"நாங்களே சிக்கலில் இருக்கிறோம். எங்களிடம் வந்து கலைநிகழ்ச்சி காட்டி பிச்சையெடுக்க வருகிறாயா?" என்று 1990-களில் ரஜினியின் அய்ரோபிய சுற்றுப்பயணத்தின்போது துண்டறிக்கை விநியோகித்து புறக்கணித்த அய்ரோப்பியத் தமிழர்கள், எந்தக் காலத்திலும் கோயில்களுக்குக் கொட்டி அழுவதை நிறுத்தியபாடில்லை.

எனவே அய்ரோப்பாவெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்துச் செல்ல உருவாகியிருக்கும் பெரியார் விழிப்புணர்வு இயக்கம் வரலாற்றுத் தேவையாகும். அதன் முதல் செயல்பாடாக தெருவில் இறங்கி பணியைத் தொடங்கியிருக்கும் தோழர்கள் தமிழச்சி, மாசிலா ஆகியோருக்கு நம் நெஞ்சார்ந்த பாராட்டுகள். தொடரட்டும் தங்கள் பணி!அழியட்டும் ஆரியப் பிணி!!

  • Replies 76
  • Views 9.8k
  • Created
  • Last Reply

பொயியார் கொள்கைகளை தலைவர் பிரபாகரன் பரப்புவதை விரும்பகிறார் என்ற வாதம் பொய்யானது..அவர் மக்கள் பல தெளிவு நிலையில்

உள்ளதை ஆதியிலிரந்தே புரிந்து வைத்திருக்கிறார் ஆதலால் தான் விடுதலை போர் இன்று பல சாதனைகளை படைத்து நிற்கிறது..

மாறாக பெண்புலிகளும் தாலி கட்டி கொள்கிறார்கள்..ஆனால் பெரியார் அதை வேனாம் என்கிறார்...

அதற்க அடுத்தாற் போல்வற்றாப்பிள்ளை அம்மான் கோவிலுக்கும் அவர்களே கோபுரம் கட்டி கொடடு;தாக தகவல்

ஆனையிறவு முகாம் தாக்குதல் இரண்டாம் அகய சமர் தொடக்கப்பட்டபோது பல பலவீரர்கள் ஊரியன்

அம்மன் கோவிலுக்க அமுது படைத்தே சென்றனர்..

பெரியார் உடலை சலவை செய்ய வேனாம் என்கிறார்..எக்காலத்திலும் இது ஒவ்வாதது...

அறிவியல் விங்ஞானம் வளர இளைய தலமுறை மிக தெளிநிலையில் உள்ளது

எனவே இந்துவை இழிக்கின்ற ஒரே நொக்கோடு சிலரின் தூண்டுதலோடு

இவர்கள் செயற்பட முனைவின் அது பல பிளவுகளையும் உள்ளேயும் வெளியேயும் உருவாக்கும்..

புலிகளை அதிலிரந்து ஒதுக்கும் நிலையம் தோன்றலாம்..

இதையும் அவர்கள் புரிந்துள்ளார்கள்..

தாசிமகளுக்கு விலை நிர்ணயம் செய்ய தமிழ் மக்கள் மற்பட மாட்டார்கள்..தமிழீழ சட்டம் அங்கிகாரமளியாது..

பலருடன் உறவு கொள்வதை விரும்பாது...

*** தணிக்கை

எனவே இவர்கள் தொடர்பான கருத்தியலை நாம் எமது இணையம் பாவணைக்கு வந்ததும் அதில் வைத்து தோலுரிப்போம்..

அதுவரை குரலிடுங்கள்...

மூட நம்பிக்கை களைதல் என்ற பெயரில் மக்களை மூடராயாக்கும்

உங்களை போன்றவர்களுக்கு சாட்டையடி நாம் தருவோம்..

அதற்காக ஒரு இளைய அணி உருவாகிறது...

காத்திருங்கள் காலம் பதிலுரைக்கும்...

*** தணிக்கை

Edited by வலைஞன்
பண்புடனும், நட்புடனும் கருத்தாடுங்கள்

  • தொடங்கியவர்

தேசியத் தலைவரின் பகுத்தறிவுக் கொள்கை பற்றி இங்கு பல முறை பேசியாகி விட்டது.

தேசியத் தலைவருக்கு தந்தை பெரியார் குறித்து உயர்ந்த மதிப்பு இருக்கிறது. ஆனால் பெரியாரின் சிந்தனைகளை அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஈழத்தில் இல்லை.

பெரியார் கோயில் நிர்வாகியாக இருந்தார். காசிக்குப் போனார். சந்நியாசியாக இருந்தார். பின்பு ஒரு பகுத்தறிவுப் போராளியாக உருவானார்.

இப்படித்தான் எங்கள் தலைவரும் தன்னுடைய திருமணத்தை இந்துக் கோயிலில் இந்து முறைப்படி செய்து, பின்பு பெரியார் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு இன்று இந்து முறையை கைவிட்டு போராளிகள் தமிழ் முறைப்படி திருமணம் செய்ய வழி செய்துள்ளார்.

இன்றைக்கு ஈழத்தில் இராவணனை உயர்த்தி நாடகங்கள் போடப்படுகின்றன.

கொழும்பில் கம்பன் விழா நடக்கிறது. ஆனால் வன்னியில் திருவள்ளுவர் விழா நடக்கிறது. திருவள்ளுவர் விழாவில் திராவிடக் கருத்துக்கள் பேசப்படுகின்றன. தமிழர் திருமணம் என்ற நூல் வெளியிடப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் படைப்புக்கள் எங்குமே இந்து மதம் உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்காது. மாறாக இந்து மதத்தின் தூண்களான வேதங்கள், இராமாயணம், சாஸ்திரங்கள், வர்ணாச்சிரமம், பார்ப்பனியம் போன்றவைகள் கண்டிக்கப்பட்டிருக்கும்.

(இதற்கான ஆதாரங்கள் பல முறை இங்கு தரப்பட்டிருக்கிறது)

தூய தமிழில் பெயர்கள் வைக்கப்படுகின்றன.

இவை எல்லாம் இன்றைக்கு ஈழத்தில் எங்களின் கண் முன் நடக்கின்றன.

ஈழத்தின் போராட்ட சூழலுக்கு ஏற்றபடி, பகுத்தறிவுச் சிந்தனைகள் மெதுமெதுவாக வளர்க்கப்படுகின்றன.

;இதுதான் ஈழத்தின் நிலை.

ஆனால் ஐரோப்பாவில் இதற்கு மாறான நிலை காணப்படுகிறது. ஈழத்தில் பெரியார் தேவையில்லை. அங்கே எங்களின் தலைவர் இருக்கிறார். ஆனால் ஐரோப்பாவில் ஆயிரம் பெரியார்கள் தேவையாக இருக்கிறது.

என்றைக்கும் இல்லாதபடி தமிழ் மக்கள் மூடத்தனத்தில் மூழ்கிப் போய் கிடக்கிறார்கள். இங்கே பெரியாரை பின்பற்றி நிறைய இயக்கங்கள் உருவாக வேண்டிய தேவை இருக்கிறது.

இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும்

பெரியாரை பின்பற்றுவது என்பது, அவர் போன்று குறைவாக குளிப்பதோ, தாடி வளர்ப்பதோ அல்ல. இளவயதில் பெண்களிடம் செல்வதும் அல்ல

காந்தியைப் பின்பற்றுவது என்பது, பெண்களுடன் நிர்வாணமாகப் படுத்து சுயஅடக்கப் பரிசோதனை செய்வது அல்ல.

இவைகளை செய்யுங்கள் என்று அந்தத் தலைவர்கள் சொன்னதும் இல்லை. தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார் "40 வயதிற்கு முன்பு இருந்த பெரியார் வேறு, 40 வயதிற்கு பின்பு இருக்கின்ற பெரியார் வேறு" என்று.

நாம் 40 வயதிற்கு பின்பு இருந்த பெரியாரைத்தான் பின்பற்றுகிறோம். மற்றையபடி அவர் வாரத்திற்கு எத்தனை தடவை குளிப்பார் போன்ற விடயங்கள் எங்களுக்கு தேவையில்லை.

அவர் குளித்தாரோ இல்லையோ, அழுக்காய் இருந்த தமிழர்களை அவர்தான் குளிப்பாட்டினார்.

  • தொடங்கியவர்

periyareu1en9.jpg

periyareu2wg5.jpg

பாரிஸில் வினாயகர் கோயில் தேர் களியாட்டத்தின் போது, ஐரோப்பிய பெரியார் இயக்கத் தோழர்கள் பகுத்தறிவு துண்டுப் பிரசுரங்களை வழங்கும் காட்சி

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

திக்குத் திசையின்றி உள்ள புலம்பெயர் சமூகத்தில் எந்தக் குப்பையும்.. ஆரம்பத்தில... இப்படித்தான் பரபரப்பாக இருக்கும். போகப் போக எல்லாம் புரியும். இறுதியில டிஸ்கோவில.. கிளப்பில... முடியும்..???!

விடுதலைப்புலிகள் இந்து மதத்தைச் சாடியதாக இங்கு சபேசன் குறிப்பிட்டிருக்கிறார். புலிகள் உறுப்பினர்கள் சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள்.. விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு ஆகாது. அதுமட்டுமன்றி புலிகள் தங்கள் நிகழ்வுகளுக்கு மும் மத குருமார்களையும் அழைப்பது வழமை.. என்பதையும் சுட்டிக்காட்டலாம். விடுதலைப்புலிகள் மத எதிர்ப்பாளர்கள் அல்ல. மதத்தை எதிர்ப்பதன் மூலம் சமூகத்தில் மூட நம்பிக்கையை இல்லாமல் செய்யலாம் என்ற பிற்போக்கான நிலையில் அவர்கள் இல்லை..! மக்களை அறிவூட்டப்படுவதன் மூலம் அவர்கள் தாங்களாகவே விடயங்களை அறிவார்கள் என்பது புலிகளின் நம்பிக்கை. அதனால் தான் மத எதிர்ப்பை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு திரியாமல்.. கல்வி அறிவூட்டலுக்கு புலிகள் முக்கியமளித்தனர்.

பெரியார் இயக்கம் நடத்தும் கறுப்புத்துணி ஆசாமிகளும்.. சபரிமலை கறுப்புத்துணி ஆசாமிகளும் வகையில் ஒன்றுதான். இரண்டும்.. புகலிடத்தில் உண்டு. இவை இரண்டுமே மனிதப் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட கூட்டம்..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

சென்ற ஆண்டு இது குறித்து விவாதங்கள் நடந்த பொழுது, விடுதலைப் புலிகள் யாருமே இந்துத்துவத்திற்கு எதிராக பேசவில்லை என்று சிலர் அடம்பிடித்தார்கள்.

இன்றைக்கு சில விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இந்துத்துவத்திற்கு எதிராக பேசுகிறார்கள் என்பதை நெடுக்காலபோவான் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

இந்தச் சில உறுப்பினர்கள் யார் என்று பார்த்தால், அவர்கள் முக்கிய பொறுப்புக்களில் இருப்பது தெரியவரும்.

நெடுக்காலபோவன் இன்னும் ஒரு கருத்தையும் சொன்னார். விடுதலைப் புலிகள் கல்வியின் ஊடாக மக்களுக்கு மூடநம்பிக்கையை போக்குவதற்கு முயற்சிக்கிறார்கள் என்று.

சரியான கருத்து. விடுதலைப் புலிகளால் கல்விக் கழகப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருப்பவரும் நெடுக்காலபோவான் குறிப்பிட்ட "சில விடுதலைப் புலிகளின்" பட்டியலில் வருகிறார்.

இந்துத்துவத்திற்கு எதிராக பேசியவர்களின் பட்டியலில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒருவரும் வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சரி! இவைகள் கிடக்கட்டும்.

விடுதலைப் புலிகளின் முதன்மைப் போராட்டம் என்பது தமிழர்களுக்கு ஒரு சுதந்திர நாட்டை அமைப்பது. பெண் விடுதலை, சமூக விடுதலை போன்றவைகள் சம நேரத்தில் நடத்தப்படுகின்ற உப போராட்டங்கள்.

பெரியாரின் முதன்மைப் போராட்டம் என்பது சுயமரியாதையை நோக்கியதாக இருந்தது.

பெரியாரின் போராட்டமும் புலிகளின் போராட்டமும் ஒற்றுமைகளை கொண்டிருந்தாலும் அவைகள் ஒன்று அல்ல. விடுதலைப் புலிகள் பெரியாரின் வழியிலோ, அல்லது அதே போன்ற தீவிரத்திலோ போராட வேண்டிய அவசியம் இல்லை. அது பொருத்தமும் இல்லை.

இன்றைக்கு விடுதலைப் புலிகளின் தாயகத்தை விடுவிக்கும் போராட்டமே முக்கியமும் தீவிரத் தன்மையும் கொண்டது. மற்றைய போராட்டங்கள் மென்மையாகவே இருக்கும்.

நெடுக்காலபோவானின் ஒரு கருத்து என்னைக் கவர்ந்தது. சபரிமலை போகின்ற கறுப்புத்துணி ஆசாமிகள் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று சொல்லியிருக்கிறார்.

சபரிமலை போவதன் காரணங்களையும், ஐயப்பனின் பிறப்பையும் அறிவியல்ரீதியானது என்று பல இணையத்தளங்களின் இணைப்பை வழங்கி வாதாடுவதே இதுவரை நான் கண்ட நெடுக்காலபோவானின் இயல்பாக இருந்தது.

இன்றைக்கு இதிலும் ஒரு மாற்றம். மிக்க மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலா போவானின் கருத்தில் மறுப்பதற்கேதுமில்லை! எல்லாமும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய தெளிவான விடயங்கள். ஆனாலும் பலர் பெரியாரை பற்றி கதைக்க வெளிக்கிட்டம் ஓடி வந்து முன்வைக்கும் கருத்து இந்து மதம் பற்றியதாகவே இருக்கின்றது...... பெரியாரின் கொள்கைகளில் இந்து மத எதிர்ப்பும் ஒன்றே தவிரே இந்து மதத்தை எதிர்ப்பதே வாழ்வாக கொண்டிருக்கவில்லை. அது போல் புலிகளின் நிலைப்பாட்டில் மூடநம்பிக்கை நிறைந்திருப்பினும் மதத்தை ஒரு போதும் எதிர்க்க முடியாது ஏனெனில் உலகளாவிய ரீதியில் மதம் அரசியலோடு பின்னி பிணைந்து கிடக்கின்றது ஆகவே மதங்களுடன் கூடி பயணிக்க வேண்டிய கட்டாயம் புலிகளுக்கு இறுதிவரை இருக்கும். உதாரணத்திற்கு பாப்பரசர் வன்னிக்கு ஒரு வேளை பயணித்தால் அது உலகளாவிய ரீதியில் ஒரு அரசியல் பயணமாகவே இருக்கும் அந்த பயணத்திற்கு சகல வசதிகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் புலிகளுக்கு ஜேசுவை நம்பினாலும் நம்பாவிட்டாலும் இருக்கும். ஆனால் களத்தில் இருக்கும் பலரது கருத்து ஜேசுவையே புலிகள் ஏற்றுகொண்டு கிறிஸ்தவத்தை மட்டும் பின்பற்ற முயற்சிப்பாதாக இருக்கும். மதத்ததை புறந்தள்ளிய அரசியல் உலகில் எங்குமி;லலை அதற்கு காரணம் உலக சனத்தொகையின் 85 வீதமான மக்கள் மூடநம்பிக்கைளில் மிதக்கின்றார்கள்......... ஆதலால் அவர்களின் பாதையில் சிறிது துரமாவது போனால்தான் அவர்களுடன் பேசுவதற்கே வாய்ப்பெட்டும். பொதுவுடமை கொள்கை உலகில் தோற்றுப்போனதற்கு ஒரு முக்கிய காரணம் மத எதிர்ப்பும்தான் இதை பல பொதுவுடமை வகுப்பாளர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றர்ர்

சென்ற ஆண்டு இது குறித்து விவாதங்கள் நடந்த பொழுது, விடுதலைப் புலிகள் யாருமே இந்துத்துவத்திற்கு எதிராக பேசவில்லை என்று சிலர் அடம்பிடித்தார்கள்.

இன்றைக்கு சில விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இந்துத்துவத்திற்கு எதிராக பேசுகிறார்கள் என்பதை நெடுக்காலபோவான் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

இந்தச் சில உறுப்பினர்கள் யார் என்று பார்த்தால், அவர்கள் முக்கிய பொறுப்புக்களில் இருப்பது தெரியவரும்.

புலிகளோ இல்லை அதன் உறுப்பினர்கள் யாருமே மதத்தை எதிர்த்து எண்ண்றுமே பேசியதில்லை... அதை நீங்கள்தான் தரவுகளோடு தரவேண்டும்.... சில மூட நம்பிக்கைகளை பற்றியும் வரலாற்று திரிவுகள் பற்றியும்தான் பேசியுள்ளார்கள்... ( குறிப்பாக இராமாயணம் பற்றி)

கோயிலுக்கு போவதுக்கோ இல்லை, தேவாலய்ங்களுக்கு போவதற்கோ புலிகள் அமைப்பிருக்கு எந்த தடையும் கிடையாது....! அம்மாவுக்கு சுகமில்லை, இல்லை பிறந்தநாள் எண்று சொல்லி விரதம் பிடிக்கும் பெண்போராளிகள் பலர் இண்டைக்கும் போராளிகளாய் உள்ளனர்....!! மதத்தை வேண்டும் எண்ண்றோ இல்லை வேண்டாம் எண்றோ அவர்களுக்கு மதம் பிடிக்கவில்லை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற ஆண்டு இது குறித்து விவாதங்கள் நடந்த பொழுது, விடுதலைப் புலிகள் யாருமே இந்துத்துவத்திற்கு எதிராக பேசவில்லை என்று சிலர் அடம்பிடித்தார்கள்.

இன்றைக்கு சில விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இந்துத்துவத்திற்கு எதிராக பேசுகிறார்கள் என்பதை நெடுக்காலபோவான் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

விடுதலைப்புலிகளின் சில உறுப்பினர்கள் மத எதிர்ப்பைப் பேசவில்லை. அவர்கள் சில தற்போதைய வடிவில் உள்ள இலக்கியப்படைப்புக்களில் இருக்கும் சமகால சமூகத்துக்கு அவசியமற்ற விடயங்களைப் பற்றிப் பேசுகின்றனர்.

நீங்கள் அதை அப்படியே திரித்து உங்கள் வசதிக்கேற்ப.. நெடுக்காலபோவன்.. ஏற்றுக் கொள்கிறார் என்று சொல்லிட்டீர்கள். நெடுக்காலபோவன் எதை ஏற்றுக்கொண்டார் என்ற தெளிவே உங்களிடமில்லையே..! இதைத்தான் நீங்கள் எங்கும் செய்யமுனைகிறீர்கள். நெடுக்காலபோவன் சொல்லவில்லை.. விடுதலைப்புலிகள் மத எதிர்ப்பை தூண்டிவிடுகின்றனர் என்று. புலிகள் தமிழர்களின் வரலாற்றில் உள்ள திரிபுகளில் இருந்து எங்கும் சமகாலத்துக்கு ஒவ்வாததைப் பற்றித்தான் பேசுகின்றனர். அவர்கள் பெரியார் என்ற ஈவெ ராமிசாமியை குருவாக்கி பகுத்தறிவு புகட்டவில்லை. ராமிசாமி அடிமுட்டாள்களாக உள்ளவர்களுக்கு பகுத்தறிவை சொல்லிக்கொடுக்கட்டும்..! ஆனால் அவரைப் பகுத்தறிவுவாதியாகப் பார்க்க வேண்டின்.. குளிக்காமல்.. கண்டதும் புணர்ந்து.. குட்டி போட்டு சூடு சுரணையைத் தொலைத்து.. தெருவில் அலையும் தெரு நாயும் பகுத்தறிவுவாதியாகவே தான் தென்படும்..!

இந்தச் சில உறுப்பினர்கள் யார் என்று பார்த்தால், அவர்கள் முக்கிய பொறுப்புக்களில் இருப்பது தெரியவரும்.

நெடுக்காலபோவன் இன்னும் ஒரு கருத்தையும் சொன்னார். விடுதலைப் புலிகள் கல்வியின் ஊடாக மக்களுக்கு மூடநம்பிக்கையை போக்குவதற்கு முயற்சிக்கிறார்கள் என்று.

சரியான கருத்து. விடுதலைப் புலிகளால் கல்விக் கழகப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருப்பவரும் நெடுக்காலபோவான் குறிப்பிட்ட "சில விடுதலைப் புலிகளின்" பட்டியலில் வருகிறார்.

இந்துத்துவத்திற்கு எதிராக பேசியவர்களின் பட்டியலில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒருவரும் வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்துத்துவா என்பது அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு வாதத்தின் மயக்க நிலை. அதற்கும் இந்து, சைவ மதங்களும் போதிக்கும் ஆன்மீக மெய்யியல் அறிவுக்கும் இடையில் உங்களால் வேறுபாட்டை உணர முடியல்ல. அதற்காக அங்கு வேறுபாடு இல்லை என்றில்லை. விடுதலைப்புலிகள் இந்துத்தவாவை எதிர்க்கிறார்கள் என்பதும் தவறான கருத்து. இந்துத்துவாவின் தீவிர நிலையால் சமூககங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதைப் பற்றித்தான் அவர்கள் பேசுகிறார்கள். இந்து என்று தன்னை ஒருவர் அடையாளப்படுத்திக் கொள்வல்ல இந்துமதத்தின் போதனை. அது அப்படி எங்கும் கூறவில்லை. எப்படி இஸ்லாமியர்களின் இஸ்லாத்தை கொண்டு தீவிர அடிப்படையான மதவாதத்தை உலகில் கட்டியெடுப்பி அரசியலாகி வைத்துள்ளனரோ அதே நிலையில் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் சிலர் இந்துமதத்தைப் பின்பற்றுபவர்கள் என்ற வகையில் அரசியலுக்காக மதரீயில் தம்மை அடையாப்படுத்த வாதம் பேசுகின்றனர். அதையல்ல இந்து மதக் கோட்பாடு போதிக்கிறது. இந்துமதம் அரசியலைப் பற்றிக் கதைக்கவே இல்லை. அது மனிதன் அறிய வேண்டிய ஆன்மீக உலகைப் பற்றிப் பேசுகிறது. இஸ்லாமும் கூட அதைத்தான் செய்கிறது. ஆனால் இஸ்லாமிய மதவாதிகள் என்போர் அதற்கு தீவிரவாதத் தன்மையை காண்பிப்பது இஸ்லாத்தின் தவறல்ல. அதைப் புரிந்து கொண்டோரின் தவறு. அதைக் கண்டிப்பது இஸ்லாம் தவறென்ற காட்ட அல்ல. அதுபோலத்தான் தீவிர இந்துத்துவவாததை அதன் சமூகப் பாதிப்பைக் கண்டிப்பது.. இந்து மதத்தை அதன் ஆன்மீகக் கோட்பாடுகளை கண்டிப்பது என்பதாகாது. புலிகள் இந்து மதத்தை மறுத்திருந்தால்.. இன்று கோவில்களுக்குப் பதிலாக அங்கு கல்விக் கூடங்கள் அமைந்திருக்கும். அவர்கள் மத சுதந்திரத்தை வலியுறுத்தும் அதே நேரம்... மக்கள் அறிவூட்டலின் கீழ் சுயமாக சிந்திக்க தூண்டப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டு திட்டங்கள் அமுலாக்கப்படுகின்றன. புலிகள் பெரியாரை மையப்படுத்தி.. எந்த ஒரு நிகழ்ச்சித் திட்டத்தையும் ஈழத்தில் செய்யவில்லை. பெரியார் இயக்கங்களை ஆரம்பிக்கச் சொல்லி ஊக்குவிக்கவும் இல்லை. மாறாக தாங்கள் தங்களின் தாயகத்தின் அரசியல் சமூக பொருளாதார விடிவுக்கான வழிவகைகள் குறித்தே மக்களுக்கு தங்களின் தனித்துவமான வடிவத்தில் அறிவூட்டி வருகின்றனர். பெரியார் போல இந்துமதத்தை அவமதிக்கவோ.. பெண்கள் திருமணம் செய்யக் கூடாது என்றோ.. கண்டதும் புணர்ந்து விலங்குகள் போல வாழ்வதே பகுத்தறிவு என்றோ புலிகள் பிரகடனம் செய்யவில்லை. அப்படிச் செய்பவர்கள் பகுத்தறிவு வாதிகளாக்கப்படுபதற்கு மாறாக சமூக ஒழுக்கம் வேண்டி கம்பங்களில் தொங்கினர் என்பது உங்கள் பலருக்கு புலம்பெயர்ந்த பின் மறந்துவிட்டது போல..!

விடுதலைப் புலிகளின் முதன்மைப் போராட்டம் என்பது தமிழர்களுக்கு ஒரு சுதந்திர நாட்டை அமைப்பது. பெண் விடுதலை, சமூக விடுதலை போன்றவைகள் சம நேரத்தில் நடத்தப்படுகின்ற உப போராட்டங்கள்.

பெரியாரின் முதன்மைப் போராட்டம் என்பது சுயமரியாதையை நோக்கியதாக இருந்தது.

பெரியாரின் போராட்டமும் புலிகளின் போராட்டமும் ஒற்றுமைகளை கொண்டிருந்தாலும் அவைகள் ஒன்று அல்ல. விடுதலைப் புலிகள் பெரியாரின் வழியிலோ, அல்லது அதே போன்ற தீவிரத்திலோ போராட வேண்டிய அவசியம் இல்லை. அது பொருத்தமும் இல்லை.

இன்றைக்கு விடுதலைப் புலிகளின் தாயகத்தை விடுவிக்கும் போராட்டமே முக்கியமும் தீவிரத் தன்மையும் கொண்டது. மற்றைய போராட்டங்கள் மென்மையாகவே இருக்கும்.

விடுதலைப் புலிகளின் போராட்ட தளம் என்பது தமிழ் தேசியம் என்பதன் அடிப்படையில் எழுந்த தமிழர்களின் சுயநிர்ணயத்துக்கான சுதந்திரத்தின் கீழான பூர்வீக தாயகத்துக்கான விடுதலையை வேண்டுவது.

பெரியார் என்ற ஈவெ ராமசாமி.. காங்கிரஸில் இடங்கிடைக்கவில்லை என்பதற்காக தமிழர்களைப் பகடைக் காயாக்க உச்சரித்ததே சுயமரியாதை. தமிழகம் தவிர இந்தியா பூராவும் தான் ஏற்றத்தாழ்வுகள் பரம்பிக் கிடக்க.. பெரியாரின் சுயமரியாதைக்கு தமிழகம் தான் கிடைத்ததா...??! ஏன் அகில இந்திய அளவில் அவரால் அதை முன்னெடுக்க முடியல்ல...???! ஆக அரசியல் தேவைக்காக உச்சரித்த சுயமரியாதை என்பதற்கு சுயநலம் தான் காரணமே தவிர.. தமிழர்களின் விடுதலையை.. தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பெற்றுக் கொடுப்பதல்ல..! சமூக விடுதலை என்பதைக் கூட தமிழ்நாட்டுக்குள் என்று வரையறுத்ததில் தமிழகத்தில் இருந்த காங்கிரஸ் கால அரசியல் பலவீனமே காரணம் தவிர.. இந்திய மனித சமூகத்தின் மீதான அக்கறையல்ல..! ஆகவே பெரியார் என்ற சுயநலவாதி சுயமரியாதை வாதியாக எம்மால் இனங்காணப்படவில்லை. காணப்படவும் முடியாது.

நெடுக்காலபோவானின் ஒரு கருத்து என்னைக் கவர்ந்தது. சபரிமலை போகின்ற கறுப்புத்துணி ஆசாமிகள் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று சொல்லியிருக்கிறார்.

சபரிமலை போவதன் காரணங்களையும், ஐயப்பனின் பிறப்பையும் அறிவியல்ரீதியானது என்று பல இணையத்தளங்களின் இணைப்பை வழங்கி வாதாடுவதே இதுவரை நான் கண்ட நெடுக்காலபோவானின் இயல்பாக இருந்தது.

இன்றைக்கு இதிலும் ஒரு மாற்றம். மிக்க மகிழ்ச்சி

சபரிமலைக்குப் போவது விடுவது அவரவரின் தனிப்பட்ட சுதந்திரம். அதில் தலையிட எமக்கு உரிமையில்லை. சபரிமலைக்குப் போவதால்.. மன அமைதி கிடைக்கும் என்று எண்ணுபவர்கள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்கள். சபரிமலைக்கு போக என்று கறுப்பு உடுத்தினவர் எல்லாம் பிரமச்சாரிகள் என்ற வேசம் போடுவது.. பிரமச்சாரிய விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்பதெல்லாம்.. அநாவசியமானவை. ஒரு ஆணும் பெண்ணும் உறவுகொள்வதால்.. இழக்கப்படும் தூய்மை என்பது இருவருக்கும் தான். அதை இழந்த பின்... என்ன புதிசா பிரமச்சாரியம்.. அதுவும் ஆண்களுக்கு மட்டும். ஒருவேளை அவர்களின் மன ஒருமைப்பாட்டுக்கு அது வழிவகுத்தால் வரவேற்கலாம். அதைவிடுத்து.. வேறு மூடநம்பிக்கைகள் இருப்பின் அது தவிர்க்கப்பட வேண்டும். என்பதுதான் அங்கு எதிர்பார்ப்பு.

அதேபோல் தான் தங்களைத் தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்போரும்... பிரமச்சாரிகள் விரதம் போல.. ஏதேனும் விரதம் பூண்டிருந்தால்.. இருக்கிறார்கள்.. கறுப்பில போய்.. கடவுள் சிலைக்கு கல்லால் அடிச்சால் தான் பகுத்தறிவு என்று எண்ணுபவர்கள்... இந்த மூடநம்பிக்கைகளைக் கைவிட்டுவிட்டு.. கோவில்கள் தோறும் சமூக மற்றும் அறிவியல் கல்வியைப் புகட்டும் ஒரு இலவச திட்டத்தை ஆரம்பித்தால் தமிழகம் என்ன.. இந்தியாவின் கல்வி அறிவும் அதன் நடைமுறைச் சுட்டெண்ணான 59-61% க்கு அப்பால் சென்று 99% ஆகலாம். அப்போ மக்கள் தங்களைத் தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்ள செலவழிக்கும் நேரத்திலும் தாங்களாகவே சில திட்டங்களைச் செயற்படுத்தி மனித சமூக ஒற்றுமையை நிலைநிறுத்திக் கொள்வர். ஆரிய - திராவிட... பிராமண.. சூத்திர பாகுபாடுகள் உச்சரிப்புக்கள் இல்லாத தன்மை பெறப்படவும் நிறைய வாய்ப்புண்டு. எந்தக் கல்லூரி மாணவனாவது.. மாணவியாவது.. தன்னை பிராமணன்.. சூத்திரன் என்று அடையாளப்படுத்திற மாதிரி ஈழத்தில இருக்கிறானா.. இல்லை. காரணம் ஈழத்தமிழர்களின் அடிப்படைக் கல்வி அறிவு உயர்மட்டத்தில் இருப்பதும் தான்..! :)

இறுதியாக ஒரு விடயம். பெரியாரை.. நாம் பின்பற்ற வேண்டிய அவசியத்தில் இல்லை. எமக்கு எம்மை வழிநடத்தக் கூடிய சுய புத்தி.. சுயமரியாதை இருக்கிறது.. பகுத்தறிவு இருக்கிறது. அதையெல்லாம் பெரியார் சொல்லி...நாம் கேட்டால்.. நாமும்.. மந்தைகள் தான்..! நாம் அந்தக் கறுப்பாட்டுக் கூட்டமல்ல..! :lol:

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ்..

தமிழர்களை எப்போது "இந்து"வாக்கினீர்கள்? தமிழர் சமயம் "சைவ சமயம்" என்றுதான் இதுவரை அறிந்திருக்கிறேன். "சைவசமயியாக' இருப்பது எப்படி என்றுதான் ஆறுமுக நாவலரும் வகுத்திருக்கிறார்.

மற்றது. சமயம் என்பதனுள் விடுதலைப் போராட்டத்தை இழுப்பதை தவிர்த்துவிடுங்கள். என் அறிவுக்கு எட்டியபடிக்கும் போராட்டம், சமயம் என்ற வெளிக்கும் அப்பாற்பட்டது. நாங்கள் சமயத்துக்குள் அதனை இழுத்துவிட்டால், வரலாற்றில் மாபெரும் தவறை திரும்ப ஒருமுறை செய்தவர்கள் ஆவோம். மக்கள் மத்தியில் வேண்டாத குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.

சமயம் நல்லதா? கெட்டதா? அது மனிதன் மீது செலுத்தும் ஆளுமை என்ன? சமயம் சரியா? பிழையா? இதுவரைகாலமும் சமயம் தந்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? அவற்றின்மூலம் நாம் ஏதாவது கற்றுக் கொண்டோமா? என்பதுபற்றி அறிவுபூர்வமாக, உணர்ச்சி வயப்படாமல் ஆராயுங்கள்.

இது என் பணிவான வேண்டுகோள்.

அன்புடன்

- ஈழத்திருமகன் -

ஒரு பக்கம் பெரியார் பரப்புரை மறுபக்கம் கோவில் வைத்து வியாபாரம். போட்டிக்கோவில் உருவாக்க கட்டவுட் கோபுரம் வைத்து கும்பாபிசேகம் செய்த அதிசயம் நடத்தியவர்கள் பகுத்தறிவு பற்றி பிதற்றுவது வேடிக்கை தான். :lol::)

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்..

தமிழர்களை எப்போது "இந்து"வாக்கினீர்கள்? தமிழர் சமயம் "சைவ சமயம்" என்றுதான் இதுவரை அறிந்திருக்கிறேன். "சைவசமயியாக' இருப்பது எப்படி என்றுதான் ஆறுமுக நாவலரும் வகுத்திருக்கிறார்.

மற்றது. சமயம் என்பதனுள் விடுதலைப் போராட்டத்தை இழுப்பதை தவிர்த்துவிடுங்கள். என் அறிவுக்கு எட்டியபடிக்கும் போராட்டம், சமயம் என்ற வெளிக்கும் அப்பாற்பட்டது. நாங்கள் சமயத்துக்குள் அதனை இழுத்துவிட்டால், வரலாற்றில் மாபெரும் தவறை திரும்ப ஒருமுறை செய்தவர்கள் ஆவோம். மக்கள் மத்தியில் வேண்டாத குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.

சமயம் நல்லதா? கெட்டதா? அது மனிதன் மீது செலுத்தும் ஆளுமை என்ன? சமயம் சரியா? பிழையா? இதுவரைகாலமும் சமயம் தந்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? அவற்றின்மூலம் நாம் ஏதாவது கற்றுக் கொண்டோமா? என்பதுபற்றி அறிவுபூர்வமாக, உணர்ச்சி வயப்படாமல் ஆராயுங்கள்.

இது என் பணிவான வேண்டுகோள்.

அன்புடன்

- ஈழத்திருமகன் -

ஈழத்திருமகன்..

நீங்களும் கருத்தை சரியாக உள்வாங்கவில்லை என்று நினைக்கிறேன்..

நாங்கள் எங்கும் தமிழர்களின் மதம் என்று ஒன்றை பிரகடனம் செய்யவில்லை. விடுதலைப்புலிகள் மத எதிர்ப்பை.. சார்ப்பைச் செய்கின்றனர் என்றும் சொல்லவில்லை. மத உணர்வுகளை மதிக்கின்றனர் என்று தான் எமது கருத்துகளினூடு குறிப்பிட்டுள்ளோம். சபேசன் சொல்ல முனைவது போல புலிகள் இந்து மத எதிர்ப்பை செய்கின்றனர் என்ற பாணியில் அல்ல எமது கருத்து இங்கு.

தமிழர்களும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்குள்ள ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ள மதச் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு. அது சிவனைக் கும்பிடும் சைவமாகட்டும்.. விஷ்ணுவை கும்பிடும் வைஸ்ணவமாகட்டும்.. ஜேசுவைக் கும்பிடும்.. கிறிஸ்தவம் ஆகட்டும்.. அல்வாவைத் தொழும் இஸ்லாத்தாகட்டும். தனிமனித சுதந்திரத்துக்குள் அவரவர் விரும்பும் மதத்தை பின்பற்ற உலகில் ஐக்கிய நாடுகள் சபையாலேயே உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவுபூர்வமாக வேண்டுமானால் விவாதிக்கலாம். ஐக்கிய நாடுகள் சபை அளித்துள்ள உரிமை.. அறிவுபூர்வமானதா முட்டாள் தனமானதா என்று.

மதம் என்னத்தை செய்யுது என்று நாம் கேள்வி கேட்டிட்டு... விவாதிச்சு.. என்ன செய்யப் போறம். சிலைக்கு கல்லால அடிச்சு கடவுள் இல்லை என்று நிறுவப் போறமா..??! அர்த்தமற்ற நோக்கில் எழுவதை அறிவுபூர்வமாக்காமல்.. நடைமுறை உலக ஒழுங்கில் மனித இனத்தின் தேவைப்பாடுகள் என்ன என்ற அடிப்படையில்.. இந்த விடயத்தை தமிழர்.. புலிகள்....இந்துத்துவா..ஈவெ ராமசாமி.. கடவுள் எதிர்ப்பு என்ற எல்லைகளுக்கு அப்பால் நின்று நோக்க வேண்டும். அதற்குத்தான் நாம் தயார் இல்லையே. ஒன்றில் எதிர்ப்பு இன்றேல் ஆதரவு.. இந்த இரண்டு நிலைதான் எம்மால் முடிந்தது. ஆனால் ஒன்றின் இருப்பின் விளைவுகள் பற்றி ஆராய்வதில்லை..! மத அனுட்டானங்கள் மனித நாகரிக வளர்ச்சியின் படிநிலைகளில் ஒன்றாக அமைந்ததை இன்று நவீன உலகில் இருந்து கொண்டு இலகுவாக மறுதலிக்கலாம். ஆனால்.. மனித வரலாற்றை ஆழ்ந்து உற்றுநோக்கினால் அவனின் நாகரிக முறைமைக்குள் மதங்களின் செல்வாக்கை இனங்காண முடியும்..! :lol:

Edited by nedukkalapoovan

பெரியாரிஸ்ருக்கள் கடசியா ஜரோப்பிவில நடக்கிற தேங்கா வியாபாரத்துக்கு ஆப்பு வைக்க வெளிக்கிட்டினம் போல கிடக்கு.

அது மாத்திரம் இல்லை ஒழுங்கா குளிகிக்கத்தெரியாதவர் வயது வேறு பாடின்றி திருமணம் செய்தவர் என்று பார்கேக்கை உந்த ஊத்தை வெள்ளையளின்ரை குணம் கொண்டவர் போலகிடக்கு.

அப்பிடிப் பாத்தா உந்த பெரியாரிஸ்ருக்கள் எங்கடை கலாச்சாரத்தை சிதைத்து எங்களையும் வெள்ளையள் மாதிரி ஆக்க முற்படுகிறார்கள் என்று தெரியுது.

எங்கடைக கலாச்சாரத்தை துலைச்சு இந்து மதத்தையும் எங்கடை இல்லை எண்டு பெரியாரிஸ்ருக்களுக்காலை சொல்ல வைச்சுப் போட்டு பிறகு வெள்ளையள் தந்திரமா கேக்கப் போறாங்கள் உங்கடை அடையாளம் என்ன தனித்துவம் என்ன உங்களுக்கு என்னத்துக்கு தனிநாடு எண்டு. அப்பான் விளங்கும் உந்த பெரியாரிஸ்ருவாதிகள் எப்படிப்பட்ட துரோகிகள் எண்டு.

எனவே அன்பார்ந்த தமிழ் அடியார்களே உங்கடை அடையாளங்களை கட்டிக்காக்க புதுசு புதுசா கோயில் கட்டி தேர் இழுங்கோ வண்டில் வண்டிலா தேங்கா உடையுங்கோ. இந்த தொந்தரவு தாங்கமையாவது உங்களுக்கு தனிநாடு தரவுது பற்றி சர்வதேசம் சிந்திக்க வெளிக்கிடலாம்.

அரகர... பார்வதி... பதியே....

விடுதலைப்புலிகள் இந்துத்தவாவை எதிர்க்கிறார்கள் என்பதும் தவறான கருத்து. இந்துத்துவாவின் தீவிர நிலையால் சமூககங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதைப் பற்றித்தான் அவர்கள் பேசுகிறார்கள். இந்து என்று தன்னை ஒருவர் அடையாளப்படுத்திக் கொள்வல்ல இந்துமதத்தின் போதனை. அது அப்படி எங்கும் கூறவில்லை. எப்படி இஸ்லாமியர்களின் இஸ்லாத்தை கொண்டு தீவிர அடிப்படையான மதவாதத்தை உலகில் கட்டியெடுப்பி அரசியலாகி வைத்துள்ளனரோ அதே நிலையில் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் சிலர் இந்துமதத்தைப் பின்பற்றுபவர்கள் என்ற வகையில் அரசியலுக்காக மதரீயில் தம்மை அடையாப்படுத்த வாதம் பேசுகின்றனர். அதையல்ல இந்து மதக் கோட்பாடு போதிக்கிறது. இந்துமதம் அரசியலைப் பற்றிக் கதைக்கவே இல்லை. அது மனிதன் அறிய வேண்டிய ஆன்மீக உலகைப் பற்றிப் பேசுகிறது. இஸ்லாமும் கூட அதைத்தான் செய்கிறது. ஆனால் இஸ்லாமிய மதவாதிகள் என்போர் அதற்கு தீவிரவாதத் தன்மையை காண்பிப்பது இஸ்லாத்தின் தவறல்ல. அதைப் புரிந்து கொண்டோரின் தவறு. அதைக் கண்டிப்பது இஸ்லாம் தவறென்ற காட்ட அல்ல. அதுபோலத்தான் தீவிர இந்துத்துவவாததை அதன் சமூகப் பாதிப்பைக் கண்டிப்பது.. இந்து மதத்தை அதன் ஆன்மீகக் கோட்பாடுகளை கண்டிப்பது என்பதாகாது. புலிகள் இந்து மதத்தை மறுத்திருந்தால்.. இன்று கோவில்களுக்குப் பதிலாக அங்கு கல்விக் கூடங்கள் அமைந்திருக்கும். அவர்கள் மத சுதந்திரத்தை வலியுறுத்தும் அதே நேரம்... மக்கள் அறிவூட்டலின் கீழ் சுயமாக சிந்திக்க தூண்டப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டு திட்டங்கள் அமுலாக்கப்படுகின்றன. புலிகள் பெரியாரை மையப்படுத்தி.. எந்த ஒரு நிகழ்ச்சித் திட்டத்தையும் ஈழத்தில் செய்யவில்லை.

நெடுக்ஸ். நான் இதைத்தான் குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் மதம் என்பதை நேர்க்கணியமாக (positive) போராட்டத்தினுள் இழுத்தால் அது மறைக்கணியமாக (negative) தாக்கத்தையும் ஏற்படுத்தும். இதன் negation னும் அப்படித்தான். சமூகச் சீர்திருத்தங்கள் சீரழிந்து அடிச்சுவடற்று போனமைக்கு முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.

இங்கு "புலிகள் இந்துமதத்தை மறுத்திருந்தால்......." என்பதில் உள்ள பொருள், "அங்கு இந்துமதம் இருக்கிறது. அதை பின்பற்றும் ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது. புலிகள் அதனை ஆதரிக்கிறார்கள்" என்பதுதானே. இதைத்தான் தமிழரில் எங்கு இந்துமதம் என கேட்டேன்.மற்றது.

சமயங்களை வைத்துக்கொண்டு மனிதர்கள் சுயமாக சிந்திக்கலாம் என எண்ணுவது கூட ஒரு பிறழ்வே. அது என்றுமே நடக்கக் கூடியதல்ல. பிரச்சனையை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பிடித்து தள்ளுவது போலத்தான் அதுவும். ஆனால் பிரச்சனை என்னவோ அப்படியேதான் இருக்கும். அப்படித்தான் இதுகாலவரை நடந்தும் வந்திருக்கிறது.

அரகர... பார்வதி... பதியே....

அரோகரா :rolleyes::huh:

Edited by Eelathirumagan

ஓரு குறிப்பிட்ட பிரதேசத்தின் பிரச்சினைகளை முன்னிறுத்தி, அவற்றிற்கான தீர்வுகளாக எழுந்த பெரியாரியக்கம் என்பது, அது உருவாக்கப்பட்ட பிரதேசத்திலேயே பரிதாபகரமான தோல்வியினைத் தழுவியுள்ளமை கண்கூடு. பெரியாரியக்கம் தொடங்கப்பட்ட காலத்துப் பிரச்சினைகள் சற்றுமே தீர்க்கப்படாது, அதேவேளை புதிய பிரச்சினைகளும் தோன்றிய வண்ணமே அச்சூழல் விரிந்து கிடக்கின்றது.

ஆரிய திராவிட சில்லெடுப்புக்கள் ஒரு பக்கம் எவ்வித அளவிடக்கூடிய மாற்றங்களும் இன்றித்த தொடர, மறு முனையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் கக்கத்திற்குள் கரிபொட்டர் புத்தகத்தை வைத்துக் கொண்டு, கரிபொட்டர் படத்திற்கான அனுமதிச் சீட்டுப் பெறும் நிரையில் ஆங்கிலத்தில் சம்பாசித்துக் கொண்டு நிற்கின்றார்கள். (ஆங்கில மோகம் தலைக்கேறி, தமிழகத்தின் பெரிசுகள் கூட கரிபொட்டர் பாத்ததால் தான் தாமும் நாகரிகத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மக்களாக மாறமுடியும் என்ற கடைகெட்ட அடிமை மனநிலை வேறு கொடுமை...).

ஆரம்பப் பிரச்சினையே தீர்க்கப்படாது, பல புதிய பிரச்சினைகளும் பூதாகரமாக வெளிக்கிளம்ப, அங்கு தோற்றுப் போன பெரியாரியகம் ஐரோப்பா பற்றியும் புலம்பெயர் தமிழர் பற்றியும் சிந்திப்பதில் எவ்வித அதிசயமும் இல்லை. இந்தியாவின் அனைத்து வர்த்தகங்களும் இன்று புலம்பெயர் தமிழரை தமது வாடிக்கையாளராக அல்லது நுகர்வோராக உள்வாங்க முனைவது வெளிப்படை.

ஓரு காலத்தில் எமது தாயகத்தில் பல பத்து இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருந்த வேளையில், ஒரு பக்கம் சிங்களப் பேரினவாதம் தமிழரை நசுக்கிக் கொண்டிருக்க, அதற்காகப் போரிடத் தொடங்கிய சில இயங்கங்கள் கமூனிசத்தை பெல்ஜியம் வரை வெற்றிப் பவனியாய் ஏற்றுமதி செய்யக் கனவு கண்டதாய் படிக்கையில் எழுகின்ற உணர்வே இந்த பெரியாரியக்கத்தின் ஐரோப்பிய நர்விலும் எனக்கு எழுகின்றது.

தமக்கு நன்கு பரிச்சயமான தளமான இந்தியாவின், அதிலும் தமிழகத்தின் அன்றாட மக்கள பிரச்சினைகள் தொடர்பில் கூட ஒரு விநயமான தலைமைத்துவத்தை அடையத் தவறிவிட்ட, இன்னமும் சொல்வதனால் ஒரு வகையில் மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்ட, பெரியாரியக்கம், ஒப்பீட்டளவில் கல்வியறிவில் அல்லது அனுபவ அறிவில் கூடிய, ஒரு தலைசிறந்த ஒப்பற்ற தலைமையின் வழிநடத்தலை கண்டு தினமும் பூரித்துப் போகின்ற, புலம் பெயர் ஈழத்ததமிழரின் பிரச்சினைகளிற்குத் தீர்வுகாணும் தலைமையாக ஏழவதற்கு முனைவது உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கின்றது.

இங்கு ஒரு விடயம் ஆழ்ந்து சிந்திக்கப்படவேண்டியது. அதாவது கமூனிசம் தோற்றபின்னரும் மாக்சின் இருப்பிற்காக எழுதிக்கொண்டிருக்கும் ||தோழர்கள்|| போல, பெரியாரிசத்தின் தோல்விக்குப் பின்னும் பெரியாரின் இருப்பினை மனித மனங்களில் உறுதிப்படுத்துவதற்கான தேவை இங்கு ஏன் எழுகின்றது?

அறவே தன்னலமற்று, ஈழத்தமிழரின் இருப்பை உறுதி செய்வதற்காக மட்டும் நடக்கின்ற தியாகமிகு ஈழப்போராட்டத்தையும் அதன் தலைமையையும் போராளிகளையும் மட்டுமே நேரடியாகப் பார்த்து வளர்ந்த ஒரு ஈழத்தமிழன் என்ற வகையில் பெரியாரியக்தின் செயற்பாடுகளைப் பாhக்க்கையில்:

தோற்றுப் போன ஒரு முயற்சியில் இருந்து பாடங்களைக் கற்பதை விடுத்து தோற்றுப் போன அம்முயற்சியின் தோற்றுனரை, அதாவது பெரியாரை, தலைவராக நீடிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை!

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ். நான் இதைத்தான் குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் மதம் என்பதை நேர்க்கணியமாக (positive) போராட்டத்தினுள் இழுத்தால் அது மறைக்கணியமாக (negative) தாக்கத்தையும் ஏற்படுத்தும். இதன் negation னும் அப்படித்தான். சமூகச் சீர்திருத்தங்கள் சீரழிந்து அடிச்சுவடற்று போனமைக்கு முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.

சமூகச் சீர்திருத்தம் என்பது என்ன..??! சமூகம் எந்த வகையில் எவ்வெவ்வடிவங்களில் கெட்டுப் போய் இருக்கு.. சீர்திருத்த...??! சமூகச் சீர்திருத்தம் என்பதை மதங்கள் எவ்வாறு தடுக்க முயல்கின்றன..??! மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் சொல்லும் விடயங்களுக்கும் இதற்கும் என்ன தொடர்பு...!

போராட்டம்.. மக்களை மையப்படுத்தி நகரும் போதும்.. சபேசன் போன்றவர்களின் காரணியாக்கம்... தவறு என்பதைச் சுட்ட வேண்டித்தான் மதம் என்பது இங்கு குறிப்பிடப்பட்டதே தவிர.. தமிழர்களின் போராட்டம் மதக் காரணிகளை உள்ளடக்கியது என்பதாக இல்லை..! ஆனால் மதம் சார்ந்த மக்கள் போராட்டத்தில் இணைந்திருப்பதால்... சிலர் தங்கள் மதவிரோதக் கொள்கைகளுக்கு சார்பாக விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் வெளியிடும் சில வரலாற்றுத் திரிவுகளுக்கான விடயங்களைச் சுட்டுக்காட்டுவது பயன்படுத்தப்படுகிறது. அதைத்தான் நாம் இங்கு சுட்டியுள்ளோம். நாம் விடுதலைப்புலிகள் மத ரீதியில் எந்த மதத்தையும் எதிர்ப்பதாக சொல்லவில்லை..!

இங்கு "புலிகள் இந்துமதத்தை மறுத்திருந்தால்......." என்பதில் உள்ள பொருள், "அங்கு இந்துமதம் இருக்கிறது. அதை பின்பற்றும் ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது. புலிகள் அதனை ஆதரிக்கிறார்கள்" என்பதுதானே. இதைத்தான் தமிழரில் எங்கு இந்துமதம் என கேட்டேன்.மற்றது.

புலிகள் கிறிஸ்தவ பாதிரியார்களை சந்திக்கின்றனர். இந்துமதப் பிரமுகர்களைச் சந்திக்கின்றனர். முஸ்லீம் பிரமுகர்களைச் சந்திக்கின்றனர்... பெளத்த குருமார்களைச் சந்திக்கின்றனர். யாரையும் புறக்கணிக்கவில்லை..! மத விரோதப் போக்கோடு அவர்களை விரட்டி அடிக்கவில்லை. செருப்பால் அடிக்கவில்லை..! திட்டவில்லை..! அந்த வககயில் புலிகள் மதங்கள் அனைத்தையும் மதிக்கின்றனர் என்பதுதான் பொருளே தவிர.. இந்து மதத்தை மட்டும் ஆதரிக்கின்றனர் என்பது பொருள் அல்ல.!

சமயங்களை வைத்துக்கொண்டு மனிதர்கள் சுயமாக சிந்திக்கலாம் என எண்ணுவது கூட ஒரு பிறழ்வே. அது என்றுமே நடக்கக் கூடியதல்ல. பிரச்சனையை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பிடித்து தள்ளுவது போலத்தான் அதுவும். ஆனால் பிரச்சனை என்னவோ அப்படியேதான் இருக்கும். அப்படித்தான் இதுகாலவரை நடந்தும் வந்திருக்கிறது.

ஏன் முடியாது. கிறிஸ்தவப் பாதிரியார்களின் கையில் தான் அறிவியல் உலகம் ஒரு காலத்தில் இருந்தது என்பது கூட மறந்திட்டுதா..??! பிறப்புரிமையியலின் தந்தை மென்ரல் கூட ஒரு பாதிரியார். நோபல் பரிசு பெற்ற இந்தியக் கணித மேதை ஒரு ஐயர்..!

மதங்கள் மனிதனின் சுய சிந்தனைக்கு கட்டுப்பாடு போடுவதாக எண்ணுவதுதான் தவறு. மதங்களின் அணுகுமுறை வேறு.. அறிவியலின் அணுகுமுறை வேறு. நீங்கள் இரண்டுக்கும் போடும் முடிச்சுத்தான் விநோதமாக இருக்கிறது. கடந்து வந்த உலகம்.. மத நம்பிக்கையில் மூழ்கி இருந்துதான் இன்று இந்த அறிவியல் வளர்ச்சியைப் பெற்ற நிலைக்கு வந்திருக்கிறது எனும் போதே.. அறிவியல் அறிவுப் பெருக்கை... மதங்கள் தடுப்பதாகக் கருதுவதை.. நிராகரிக்கிறதே..!

அமெரிக்கா சரி.. இங்கிலாந்து சரி.. சிறீலங்கா சரி.. இன்றும் பல கோடி மாணவர்கள் மதங்களைப் படிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அறிவியலை மட்டும் படி என்று ஏன் வறுபுறுத்தவில்லை..! அவை இரண்டும் தனித்தனிப் பாதையில் மனித சிந்தனையை கொண்டு செலுத்திக் கொண்டிருக்கின்றன. இரண்டையும் ஒன்றாகக் கலந்து குழப்பகரமான ஒரு சூழலில் மக்களை தள்ளிவிட்டால் மதவிரோத எண்ணங்களை சுலபமாக விதைக்கலாம்.. என்று சிலர் கருதுகின்றனர்.

சிலர் மூடநம்பிக்கைகளுக்கும்.. மதக் கோட்பாடுகளுக்கும் இடையில் முடிச்சுப் போட விளைகின்றனர். மூடநம்பிக்கைகள் மதம் சார்ந்து எழுந்தவையல்ல. அவை சமூகம் சார்ந்துள்ளவை. மதத்தை அடையாளம் காணாத மக்கள் கூட்டம் கூட மூட நம்பிக்கையில் உள்ளது. உதாரணமாக ஆபிரிக்க காட்டு வாழ் மக்களைக் குறிப்பிடலாம். அவர்களுக்கு மத நம்பிக்கை கிடையாது. ஆனால்.. பல மூடநம்பிக்கைகளை வைத்திருக்கிறார்கள்..!

மதவிரோத சக்திகள்.. சமூகங்களைப் பலவீனப்படுத்தி மேற்குலக பொருளாதார சந்தைகளை நோக்கி.. இளைய சமூகத்தை இழுக்க காட்டும் ஒரு கவர்ச்சிப் பிரச்சாரமே.. பெரியார் என்ற சுயநல அரசியல் வாதின் சந்தர்ப்பவாத கூற்றுக்களைக் கொண்டு சமூகப்பிச்சை எடுத்தலை செய்தலாகும்..! பெரியார் மேற்குலகைக் கண்டதும் வாய்பிளந்து நின்றது போல.. இவர்களும் நிற்கிறார்கள். ஆனால் மேற்குலகமோ.. தனது இக்கட்டான சமூகக் கட்டமைப்புப் பற்றிய பெரிய கவலையோடு இருக்கிறது. புதிதாக சிறுவர் வன்முறை என்பது அதற்குத் தலையிடியாகியுள்ளது. குடும்பப் பிரிவுகள்.. சிதைவுகள் என்று கண்டதும் புணர்ந்து கலியாணம் கட்டாமல் வாழுதல் என்ற நிலை இன்று.. சட்டத்தின் பார்வைக்குள் சிக்கி நிற்கிறது. பெரியாரின் சிந்தனை என்பது ஜேர்மனி.. ரஷ்சியாவில் பொறுக்கி எடுத்தவையே தவிர சுயசிந்தனைகளும் அல்ல...! :rolleyes::huh:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

தமிழினம் அடிமையாக்கப்பட்டு பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இடையிடையே தமிழர்களின் விடிவுக்காக போராடிய மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள்.

பின்பு அகிம்சை வழியில் போராடியவர்களும் தோற்றுப் போய்விட்டார்கள்.

இப்படித் தோற்றுப் போன ஒரு விடயத்திற்காக விடுதலைப் புலிகள் ஏன் போராடுகிறார்கள் என்று எனக்கும் புரியவில்லை

சரி! கொஞ்சம் சீரியசாக கதைக்கிறேன்.

தமிழினத்தின் மேல் நிகழ்த்தப்படுகின்ற மதரீதியான அடக்குமுறைக்கு எதிராக போராடியவர் பெரியார். பெரியார்தான் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தவர் அல்ல. அவருக்கு முன்பும் பலர் போராடி இருக்கிறார்கள். நாளையும் பலர் போராடுவார்கள்.

இந்தப் போராட்டத்தில் பெரியாரின் வீச்சு முக்கியமானது. பல காரணங்களினால் பெரியார் முக்கிய இடத்தை பெறுகிறார்.

பெரியாரின் போராட்டம் முடிந்து விடவில்லை. வேண்டுமென்றால் பெரியாரின் போராட்டம் வெற்றி பெறவில்லை என்று சொல்லுங்கள். தோற்றுப் போய்விட்டது என்று சொல்லாதீர்கள். காரணம், போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. பின்னடைவுகளையும் வெற்றிகளையும் சந்தித்தபடி போராட்டம் நடக்கிறது.

பெரியாரின் போராட்டம் இன்னமும் வெற்றிபெறவில்லை என்பது எமக்குத் தெரியும். வெற்றி பெற்றிருந்தால், நாம் இன்றைக்கும் தொடர்ந்து ஐரோப்பாவிலும் போராட வேண்டிய தேவை இருக்காது.

நாம் மக்களை மதம் முட்டாளாக்கி வைத்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம். அவர்கள் மதத்தால் முட்டாள்கள் ஆக்கி வைக்கப்பட்டிருக்கும் வரை, அதில் இருந்து விடிவு பெறும் வரை, அந்த மக்கள் ஆதரவு தர மாட்டார்கள். அதில் நாம் தெளிவாகத்தான் இருக்கிறோம்.

மக்கள் ஆதரவு தந்து விட்டால், அப்பொழுதும் நாம் போராட வேண்டியதன் தேவை இல்லாது போய்விடும்.

மக்கள் ஆதரவு தரவில்லை என்பதன் அர்த்தம், தொடர்ந்து போராட வேண்டிய தேவை இருக்கிறது என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவிலும் சாதி, மத வெறிகளை ஊட்டியும், எதற்கெடுத்தாலும் சுயசிந்தனையின்றி பார்ப்பானி தான் காரணம் என்று எதற்கெடுத்தாலும் ஒப்பாரி வைக்கவும், தமிழருக்குள் என்றைக்குமே ஒற்றுமை வராமல் பார்ப்பானி, தலித் என்று அடிபடுட்டுக் கொள்ளவும், ஒரு கன்னட வெறியனைத் தமிழ் தேசிய வாதியாகக் காட்டவும், ஐரோப்பாவில் ராமசாமி இயக்கம் தேவைப்படும்.

சொந்த மனைவியை கோவிலுக்குப் போகமல் தடுப்பதற்காக நண்பர்களை வைத்து வைப்பாட்டிப் பட்டம் சூட்டிய கேவலம் கெட்ட கொள்கையையும் பரப்ப, ஐரோப்பாவில் ராமசாமி இயக்கம் தேவைப்படுகின்றதா என்பதைச் சபேசன் தெளிவுபடுத்தினால் நன்று

தமிழினம் அடிமையாக்கப்பட்டு பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இடையிடையே தமிழர்களின் விடிவுக்காக போராடிய மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். பின்பு அகிம்சை வழியில் போராடியவர்களும் தோற்றுப் போய்விட்டார்கள்.

இப்படித் தோற்றுப் போன ஒரு விடயத்திற்காக விடுதலைப் புலிகள் ஏன் போராடுகிறார்கள் என்று எனக்கும் புரியவில்லை

முன்னைய போராட்டங்கள் தோற்கடிகக்பட்டுவிட்டதானால் தான், விடுதலைப் புலிகளின் போராட்டவடிவம் ஒப்பீடு அற்று இருக்கிறது. காலத்திற்கு ஏற்ப,சிந்திக்கப்ட்டு போராட்டவடிவங்கள் எவராலும் எதிர்வு கூறப்பட முடியாதபடி உள்ளது.

மேலும்தமிழீழப் போராட்டத்தைப் பொறுத்தவரை, அங்கு தொடர்ந்து தவறுகள் பரிசீலிக்கப்படுவதும், புதிய செயல்வடிவங்கள் தோன்றுவதும் வெகு சாதாரணம். அதாவது தமிழ் மக்களின் இருப்பும் விடுதலையும் தான் மாற்றமற்றன நோக்குகளே தவிர வழிமுறைகள் அல்ல. எதற்காகவும் எந்தக் குருட்டுத்தனமான

வழிமுறைசார் பின்பற்றலும் தமிழீழப் போராட்டத்தில் இல்லை. இது வெற்றி நோக்கி நகரும் ஒரு போராட்டத்தின் குணவியல்பு.

இதையே சற்றுப் பெரியாரியக்த்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள், என்னென் வழிமுறைகள் தோற்றுப் போயின என்று ஆராய்வதற்குப் பதிலாக பெரியார் சொன்னார் என்பதற்காக அதே உத்திகள் தான் மீளவும் மீளவும் கையாளப்படப்பட வேண்டியது என்பது விடுதலைப் புலிகளின் இயங்குமுறையில்

இருந்து எத்தனை தூரம் மாறுபட்டுள்ளது என்பது எவரும் காணக் கூடியது.

பெரியாரியக்கத்தின் போராட்டங்கள் இன்னமும் நீங்கள் சொல்வது போன்று தொடரலாம், ஆனால் பெரியாh வாய்மொழிந்த அவரது காலகட்டத்து வழிமுறைகள் என்றைக்கும் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணப் போவதில்லை என்பதற்கான வெளிப்படைக் காரணி, அது பழைய சிந்தனைத் தளத்திற்கு உரியது என்பதே. அதாவது மக்களது மனநிலையும் பிரச்சினைகளும் மாறிவிட்டன மாறிக் கொண்டும் இருக்கின்றன. இந்நிலையில், எவ்வாறு சில மத அடிப்படைவாதங்கள் சில மதம் சார் ஆவணங்களை நேரடியாக, அதே நேரம் அது சொல்லப்பட் நோக்கு மறந்து, அர்த்தப்படுத்திக் கொண்டு அல்லல் படுகின்றார்களோ, அது போல் தான், பெரியார் ஏன் என்னத்தைப் பேசினார் என்று சிந்திப்பதற்குப் பதிலாய் கடவுளை அழிக்காது சமூகப் பிரச்சினைகள் தீர்க்கப்படமுடியாது என்று பெரியாரிஸ்ட்டுக்கள் வெறித்தனமாக இயங்குவதும்.

சில விடயங்களை எதிர்க்கின்றோம் என்பதற்காக, சமூகத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்படக் கூடாது என்று நாங்கள் விரும்புவதாக நீங்கள் நினைத்து விடக் கூடாது. சமூக அக்கறை எங்களிற்கும் உள்ளது. அதை சில பழைய உத்திகள் என்றுமே தீர்க்காது என்ற ஆதங்கத்தால் விளைவது தான் இந்த வாதங்கள்.

Edited by Innumoruvan

  • தொடங்கியவர்

தூயவன்! நீங்கள் வாதங்களை வைப்பது என்றால் சரியான முறையில் வையுங்கள். இல்லாதவைகளை எல்லாம் இங்கே தந்து உங்களுக்கு பெரியார் பற்றி எதுவுமே தெரியாது என்பதைக் காட்ட வேண்டாம்.

கன்னட வெறியன் என்றால் என்ன அர்த்தம்? தந்தை பெரியார் என்றைக்காவது கன்னட இனத்தையோ, கன்னட மொழியையோ உயர்த்திப் பேசினாரா? கன்னடமே உலகில் சிறந்தது என்று கூறினாரா?

உங்களுக்கு பெரியாரைத்தான் தெரியவில்லை. தமிழ் கூடத் தெரியாதா?

கன்னட வெறியன், சிங்கள வெறியன், இந்து மத வெறியன் போன்ற சொற்களுக்கு அர்த்தம் உங்களுக்கு தெரியாதா?

பொருத்தமே இல்லாத குற்றச்சாட்டுக்களை பெரியாரை நோக்கி வைத்து வாதிடுவதை நிறுத்தி, ஆரோக்கியமான முறையில் வாதிடுங்கள்.

நீங்கள் ஒரு நேர்மையான மனிதராகவோ அல்லது ஆறு அறிவுள்ளவராகவோ இருந்தால், பெரியார் ஒரு கன்னட வெறியர் என்பதற்கு ஆதாரம் காட்டுங்கள்.

உங்களுக்கு உண்மை தெரியுமா?

பெரியார் கன்னடர்களை முட்டாள்கள் என்றும் அடிமைகள் என்றும் கடுமையாக பொதுக்கூட்டங்களின் பேசியவர். இதுதான் வரலாறு. இதற்கு வேண்டுமென்றால் நான் ஆதாரம் தருவேன்.

அடுத்தது வப்பாட்டி என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறீர்கள். அதற்கும் உங்களுக்கு அர்த்தம் தெரியவில்லை. அது வப்பாட்டி அல்ல. தாசி!

பெரியாரின் நண்பர்கள் பெரியாரின் திட்டப்படி நாகம்மையை கிண்டலடித்தனர். அவரை அச்சமுறச் செய்தனர். நாகம்மையைப் பார்த்து "ஊருக்கு புதிதாக வந்திருக்கும் தாசியாக இருக்குமோ" என்று பேசி பயமுறுத்தினர்.

நாகம்மையாரை கோயிலுக்கு போகாது தடுப்பதற்கு பெரியார் கையாண்ட வழி இது. அவ்வளவுதான். இதே வழியையே நீங்களும் கடைப்பிடியுங்கள் என்று பெரியார் எங்கும் சொல்லவில்லையே?

பெரியாரின் நண்பர்கள் வேண்டுமென்றே பயமுறுத்தும் திட்டத்தோடு நாகம்மையாரை தாசி என்று சொன்னார்கள்.

ஆனால் இந்து மதம் அனைத்துப் பெண்களையும் பாவயோனியில் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்கிறது. நீங்கள் திருமணம் செய்யும் பொழுது அந்தப் பெண் ஏற்கனவே நான்கு பேருடன் வாழ்ந்தவள் என்று சொல்கிறது. நீங்கள் கோயிலுக்கு போய் வணங்கினால், உங்களுக்கு நிறைய அப்பாக்கள் என்று சொல்கிறது. உங்களுடைய தந்தை இறந்தால், அந்தச் சடங்கில், உங்களுடைய அம்மா சில வேளைகளில் உங்களை வேறு யாரேனுக்கும் பெற்றிருக்கலாம் என்று சொல்கிறது.

இதை எல்லாம் சந்தோசமாய் கேட்டு தலையாட்டுகிற நீங்கள், தந்தை பெரியார் தன்னுடைய மனைவியை தாசி என்று நண்பர்களைக் கொண்டு சொல்லவைத்து பயமுறுத்தி விளையாடியதற்கு போய் கவலைப்படுகிறீர்களே!!!!!!!!!

Edited by சபேசன்

சமூகச் சீர்திருத்தம் என்பது என்ன..??! சமூகம் எந்த வகையில் எவ்வெவ்வடிவங்களில் கெட்டுப் போய் இருக்கு.. சீர்திருத்த...??! சமூகச் சீர்திருத்தம் என்பதை மதங்கள் எவ்வாறு தடுக்க முயல்கின்றன..??! மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் சொல்லும் விடயங்களுக்கும் இதற்கும் என்ன தொடர்பு...!

ஏன் முடியாது. கிறிஸ்தவப் பாதிரியார்களின் கையில் தான் அறிவியல் உலகம் ஒரு காலத்தில் இருந்தது என்பது கூட மறந்திட்டுதா..??! பிறப்புரிமையியலின் தந்தை மென்ரல் கூட ஒரு பாதிரியார். நோபல் பரிசு பெற்ற இந்தியக் கணித மேதை ஒரு ஐயர்..!

மதங்கள் மனிதனின் சுய சிந்தனைக்கு கட்டுப்பாடு போடுவதாக எண்ணுவதுதான் தவறு. மதங்களின் அணுகுமுறை வேறு.. அறிவியலின் அணுகுமுறை வேறு. நீங்கள் இரண்டுக்கும் போடும் முடிச்சுத்தான் விநோதமாக இருக்கிறது . கடந்து வந்த உலகம்.. மத நம்பிக்கையில் மூழ்கி இருந்துதான் இன்று இந்த அறிவியல் வளர்ச்சியைப் பெற்ற நிலைக்கு வந்திருக்கிறது எனும் போதே.. அறிவியல் அறிவுப் பெருக்கை... மதங்கள் தடுப்பதாகக் கருதுவதை.. நிராகரிக்கிறதே..!

அமெரிக்கா சரி.. இங்கிலாந்து சரி.. சிறீலங்கா சரி.. இன்றும் பல கோடி மாணவர்கள் மதங்களைப் படிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அறிவியலை மட்டும் படி என்று ஏன் வறுபுறுத்தவில்லை..! அவை இரண்டும் தனித்தனிப் பாதையில் மனித சிந்தனையை கொண்டு செலுத்திக் கொண்டிருக்கின்றன. இரண்டையும் ஒன்றாகக் கலந்து குழப்பகரமான ஒரு சூழலில் மக்களை தள்ளிவிட்டால் மதவிரோத எண்ணங்களை சுலபமாக விதைக்கலாம்.. என்று சிலர் கருதுகின்றனர்.

சிலர் மூடநம்பிக்கைகளுக்கும்.. மதக் கோட்பாடுகளுக்கும் இடையில் முடிச்சுப் போட விளைகின்றனர். மூடநம்பிக்கைகள் மதம் சார்ந்து எழுந்தவையல்ல. அவை சமூகம் சார்ந்துள்ளவை. மதத்தை அடையாளம் காணாத மக்கள் கூட்டம் கூட மூட நம்பிக்கையில் உள்ளது. உதாரணமாக ஆபிரிக்க காட்டு வாழ் மக்களைக் குறிப்பிடலாம். அவர்களுக்கு மத நம்பிக்கை கிடையாது. ஆனால்.. பல மூடநம்பிக்கைகளை வைத்திருக்கிறார்கள்..!

சரி. கேள்விகளையே கேட்டும் என்னை பதில் எழுதவும் வைக்கிறீர்கள். இதனை பொதுவாகவே நான் விரும்புவதில்லை. இருந்தபோதிலும்,

1. சமூக சீர்திருத்தம் என்பது என்ன?

சமூகம் என்பது தனிமனிதனாகவும் தனி மனிதன் என்பதே சமூகமாகவும் இருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனுள்ளும் மாற்றம் ஏற்படாத வரை என்றுமே, எக்காலத்திலுமே சமூக மாற்றம் ஏற்படாது. இது ஒரு "தியறி" அல்ல. இது ஒரு உண்மை.

2. சமூகம் எந்த வகையில், எந்தெந்த வடிவில் கெட்டுப் போய் இருக்கிறது? அதை திருத்த.

இதுதான் மிகப் பெரும் சவால். சமூகம் கெட்டுப் போய் இருக்கிறது என்பதை உணர, அதை புரிந்துகொள்ள எல்லோராலும் முடிவதில்லை. அதன் கட்டுக்களில் இருந்து வெளிவந்தாலொழிய, அதன் மாயத் தோற்றங்களில் சிக்குண்டு, ஒவ்வொருவரும் அதனுள் அமிழ்ந்து கிடப்பதை தவிர வேறெதையும் சிந்திக்க முடியாது. சரி. சமூகம் எந்தக் குறைபாடுகளும் இல்லாமல், மிகச் சரியாக இயங்குகிறது என்றால், இந்த போர்களும் குத்துவெட்டுக்களும் அமைதியின்மை, வறுமை, மன அமைதியை தேடி ஊரூராகவும் வேறுபலரையும் தேடித் திரிவது ஏன்? இவை அனைத்தும் சாதாரண மனித வாழ்க்கையின் ஒரு அம்சம் என நீங்கள் எண்ணத் தலைப்பட்டால் நீங்கள் அந்தச் சுழிக்குள் அகப்பட்டிருக்கிறீர்கள் என்பதே பொருள்.

3. சமூகச் சீர்திருத்தம் என்பதை மதங்கள் எவ்வாறு தடுக்க முயல்கின்றன?

மதங்கள் தருவது ஒரு ஏமாற்று பொய்த்தோற்றம். எந்த மதமாவது வாழ்க்கையின் அடிப்படையான, பிரிக்க முடியாத அம்சங்களான, இறப்பு, துன்பம் என்பவற்றை மனிதன் எவ்வித மனக் கிலேசமும் இன்றி எதிகொள்வது எப்படி என்று போதித்திருக்கின்றனவா? அல்லது இவற்றை விட்டு தப்பியோடும் ஒரு வழிமுறையை போதிக்கின்றனவா? கடவுள் என்ற தோற்றப்பாட்டின் உருவாக்கம் கூட ஒரு "தப்பியோடும்" முயற்சியே. இறவாநிலை, துன்பங்கள் அற்ற நிலை என போதிப்பது முற்றுமுழுதாகவே ஒரு பொய்த்தோற்றத்தை மக்கள் மனதில் விதைப்பதாகும். சமயம் மக்களிடையே பிளவுகளையே ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் சமயம் "ஏன்?" என்ற கேள்வியை முதலிலேயே அடித்து பொடிப்பொடியாக்கி விடுகிறது. இல்லையா? எந்தவொரு சமயத்திலும் "ஏன்?" என்று கேட்க முடியுமா? மனித சிந்தனையின் ஒப்பற்ற திறவுகோலான "ஏன்" என்ற வார்த்தை இல்லாமல் செய்யப்பட்ட பின், அனைவரும் ஆட்டு மந்தைகளாக சொன்னதையே திரும்பத் திரும்ம செய்து (அது எவ்வலவு பெரிய அறிவுடைய கருத்தாக இருந்தாலும் சரி) அதனுள் மூழ்க வேண்டியதுதான்.

4.மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் சொல்லும் விடயங்களுக்கும் இதற்கும் என்ன தொடர்பு...!?

மதங்களின் ஆணிவேராக இருக்கும் கடவுள் என்பதே மனித எண்ணங்களில் தோன்றியதுதான். இது நான் மேற்கூறிய அடிப்படை பிரச்சனைகளை சரியாக எதிர்கொள்ள முடியாதபோது தப்பிக்கொள்ளும் ஒரு முயற்சிக்காக ஏற்பட்டிருக்கலாம். மனித எண்ணத்தில் மட்டுமே தோன்றிய கடவுளை காணப்போகிறேன் என்றும், அவரை அடைந்து பேரமைதியை தரிசிக்க போகிறேன் என்று காடுமேடாக அலைவது சுத்த முட்டாள் தனமேயன்றி வேறில்லை. இது ஒரு ideation. இவ்வாறு காடுமேடாக அலைந்த பலர் தமக்கு தோன்றிய கருத்துக்களை எழுதி வைத்ததும், மக்களை பிரித்து அவைகளையும் ஒரு மாயத் தோற்றத்துக்குள் அமிழ்த்தி குழப்பியதும் நாம் கண்ட வரலாறு. மனித மனத்திலே எழுந்த ஒரு எண்ணக்கருவுக்காக, அதை கண்டு தரிசிக்க போகிறேன் என வெளிக்கிடுவது சிறுபிள்ளைத்தனமானது.

மதங்கள் செய்வது இதுதான். ஒவ்வொரு கணத்திலும் பூரணமாக வாழவேண்டிய அற்புத வாழ்க்கையை, இல்லாத கற்பனைகள் மூலம் சிதைத்து, மனிதனை "எதிர்காலத்தில் வாழவைப்பதாகும்". உண்மையில் ஒவ்வொருவரும் நிகழ்காலத்தை தொலைத்துவிட்டு, எண்ணக்கருக்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வாழ்க்கையின் அற்புத அழகை மறந்துவிடுகிறோம். இறுதியில் இந்த எண்ணங்கள் உண்மையில்லை என்பதால் விரக்தியும் கோபமும் பொறாமையும் இயல்பாகவே எழுகிறது. சகல பிரச்சனைகளுக்குமான ஊற்றுக்கண்ணாக மதம் இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை "மனிதன் கண்டுபிடித்த மிகக் கேவலமான கொள்கை மதம்" என்பதாகும். இன்று நீங்கள் எவ்வளவுதான் மூடநம்பிக்கை பற்றி பேசினாலும் எழுதினாலும் அவற்றில் இருந்து நீங்கி (ஆழ்மனதில்) விடுபடும் தன்மை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதை மனப்பூர்வமாக நீங்கள் நடைமுறைப் படுத்தாதவரை, அது உங்கள் மனதை நீங்களே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு முயற்சியே.

  • கருத்துக்கள உறவுகள்

வைப்பாட்டி என்றாலாது பரவாயில்லை. ஒருத்தன் கூடத் தான் களவாக குடும்பம் நடத்துகின்றவள். ஆனால் தாசி என்றால் ஊர் முழுக்கக் குடும்பம் நடத்துகின்றவள் என்று அர்த்தப்படும். சொந்த மனைவியைக் கேவலமாக அதுவும் நண்பர்களை வைத்துக் கேவலமாகப் பேசி இன்பம் காண்கின்ற ஒரு சைக்கோத்தனம் தானே அது.

கோவிலுக்குப் போகதே என்று தடுக்க ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால் இப்படி ஒரு அசிங்கத்தைச் செய்வது என்பது ஒரு வித மனநிலை பாதிப்பால் ஏற்பட்ட விளைவு தான். எம் குடும்பத்தில் உள்ளவர்களை 3வது ஆளை வைத்துத் திட்ட எத்தனை பேருக்கு மனது உடன்படும்?? ஆனால் இந்த மனிதருக்கு அதில் ஒரு திருப்தி. அதைக் கூட அவரது பக்தர்கள் பெண்ணடிமைத்திற்கு எதிராகப் போராடப் புறப்பட்ட புதல்வன் என்று பெருமை சாற்றுவார்கள். அந்தக் கன்னடக்காரனுக்கு அவர் மனைவி மீது எப்போதுமே வெறுப்பிருந்தது. அதனால் தான் மனைவி சாகும்போது திருப்திப்பட்டுக் கொண்டார்.

இது கொள்கையில்லை என்று, சபேசன் சமாளித்துக் கொள்கின்றார். ராமசாமியின் வரலாறு ஒரு பாடம், என்று அதையே புளிக்கப்புளிக்கப் படிக்கின்ற அவரது சீடர்கள் இதைப் பாடமாக எடுக்கமாட்டார்களா என்பதே என் சந்தேகம்.

இதற்குப் பதிலளிக்க வழியில்லாத நண்பர் சபேசன் புலியைக் கேட்டால் கருணா கும்பலைப் பற்றிக் கதைக்கமாட்டேன் என்ற அவரது பொன்வசனத்துக்கு ஏற்ப, கடவுள் பற்றிய புனைகதைகளை இழுத்துவிடுவதன் மூலம் இந்தக் கன்னடக்காரனின் சைக்கோத்தனத்தை மறைக்கின்ற வழியைத் தேடுகின்றார்.

அவரைக் கன்னடவெறியன் என்தற்குப் பல தடவை விளக்கம் சொல்லிவிட்டேன். வேணுமென்றால் இன்னுமொன்று. இன்றைக்கு மற்றய எந்த சமூகத்திலும் இல்லாத அளவு தமிழருக்குள் சாதி பற்றிய பிரச்சனைகள் இருப்பதற்கும், தமிழர் சிதைந்து போய், அவனது நிலங்களை தமிழகத்தில் இழந்து நிற்பதற்கும் இந்தக் கன்னடக்காரனின் நம்பவைச்சு ஏமாற்றிய சூழ்ச்சி தான் ஒரு காரணம் என்பதை யாராவும் மறுக்க முடியாது.

இன்றைக்கு தமிழனின் எப்பிரச்சனை பற்றிக் கதைத்தாலும் அதில் பார்ப்பானி, தலித், தேவர் என்று ஏதோ ஒருவகையில் சாதிவாதத்தில் அவை திசைமாற்றப்பட்டு, பிரச்சனைக்குத் தீர்வே காணமுடியாத வகையில் இருப்பதற்கு அவர் விதைத்த செயற்பாடு தான் காரணம்.

என்றைக்குமே, தமிழீழத் தலைவருக்கும், இந்தக் கன்னடக்காரனுக்கும் ஒற்றுமை காணவே முடியாது. அது பற்றிய விளக்கத்தை விரைவில் வழங்குவேன்.

அடுத்தது வப்பாட்டி என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறீர்கள். அதற்கும் உங்களுக்கு அர்த்தம் தெரியவில்லை. அது வப்பாட்டி அல்ல. தாசி!

பெரியாரின் நண்பர்கள் பெரியாரின் திட்டப்படி நாகம்மையை கிண்டலடித்தனர். அவரை அச்சமுறச் செய்தனர். நாகம்மையைப் பார்த்து "ஊருக்கு புதிதாக வந்திருக்கும் தாசியாக இருக்குமோ" என்று பேசி பயமுறுத்தினர்.

நாகம்மையாரை கோயிலுக்கு போகாது தடுப்பதற்கு பெரியார் கையாண்ட வழி இது. அவ்வளவுதான். இதே வழியையே நீங்களும் கடைப்பிடியுங்கள் என்று பெரியார் எங்கும் சொல்லவில்லையே?

பெரியாரின் நண்பர்கள் வேண்டுமென்றே பயமுறுத்தும் திட்டத்தோடு நாகம்மையாரை தாசி என்று சொன்னார்கள்.

ஆஹா என்ன ஒரு விளக்கம்!! என்ன ஒரு தத்துவம்!!!

ஏன் பெண்ணை தாசி என்று அழைத்து மறைமுகமான பயமுறுத்தல் செய்து தானா கோவிலுக்கு போவதை தடுக்க வேண்டும்?நேர்மையானவர்கள் என்ன செய்ய வேண்டும்? கொள்கை விளக்கம் அழித்து அந்த கொள்கையின் மேல் நம்பிக்கை வர வைத்து, முடிந்தால் கோவிலுக்கு போவதை தடுத்து இருக்க வேண்டும். இந்த பகுத்தறிவு சிங்கங்களுக்கு என்ன அத்தனை அறிவு வரட்சியா? இல்லை கொள்கை வரட்சியா? கோவிலுக்கு போகும் பெண்ணை எல்லாம் தாசி என்று அழைப்பதானால், திரு. ஈ.வே. ராமசாமியின் தாயார் கூட கோவிலுக்கு செல்பவர் தான் என்று இந்த மூடர்களுக்கு ஏன் ஞாபகத்தில் வரவில்லை?!

ஆனால் இந்து மதம் அனைத்துப் பெண்களையும் பாவயோனியில் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்கிறது. நீங்கள் திருமணம் செய்யும் பொழுது அந்தப் பெண் ஏற்கனவே நான்கு பேருடன் வாழ்ந்தவள் என்று சொல்கிறது. நீங்கள் கோயிலுக்கு போய் வணங்கினால், உங்களுக்கு நிறைய அப்பாக்கள் என்று சொல்கிறது. உங்களுடைய தந்தை இறந்தால், அந்தச் சடங்கில், உங்களுடைய அம்மா சில வேளைகளில் உங்களை வேறு யாரேனுக்கும் பெற்றிருக்கலாம் என்று சொல்கிறது.

பார்வதி குதிரையை பார்த்து காமம் உற்றது

சிவன் முனிபத்தினிகளை வன்புணர்வு செய்தது

அதற்கு முனிவர்கள் கொடுத்த சாபம்

அதை பார்வதி தடுத்த முறை

பூசையின் போது "ஏகமாதா பகுபிதா சற்சூத்திராய நமஹ" என்று சொல்லப்படுவது ஏன்?

திருமணத்தின் போது ஆபாசமான மந்திரங்களை சொல்வது ஏன்?

தந்தை இறந்தால் ஈமைக்கிரியைகளின் போது சொல்லப்படுகின்ற மந்திரம் இது:

'யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா. ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம. கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண.

மற்றவர்கள் திரு.ஈ.வே.ராமசாமி பற்றி எழுதுவதற்கெல்லாம் ஆதாரம் கேட்கிறீர்கள். நியாயம் தான்.

ஆனால் இந்து மதம்/மந்திர விளக்கம் என்ற பெயர்களால் நீங்கள் மேலே செய்திருக்கும் சுத்துமாத்துக்களை எங்கிருந்து பொறுக்கி வந்தீர்கள்? ஆதாரம் தாருங்கள். நாம் ஆதாரத்துடன் நல்ல விளக்கம் தருகிறோம்

பாவ யோனி என்று கீதையில் சொல்லப்பட்டதாக நீங்கள் சொன்னதற்கு நல்ல விளக்கம் முன்பே கொடுத்தாகிவிட்டது. பெண்களை அவமதிப்பதாக நீங்கள் சொல்லும் இந்து மதம் சொல்லித்தருவது தான் கீழே உள்ளதும்

மாத்ரூ தேவோ நமஹ - தாயே உன்னை வணங்குகிறேன்

பித்ரு தேவோ நமஹ- தந்தையே உன்னை வணங்குகிறேன்

ஆச்சார்ய தேவோ நமஹ - குருவே உன்னை வணங்குகிறேன்.

வணக்கத்தில் கூட தாய்க்கு தான் முதல் வணக்கம்.

பகுத்தறிவு என்னும் பெயரால் யார் என்ன பித்தலாட்டம் செய்தாலும், அவர்கள் போல் நாமும் ஆதாரம் இல்லாமல் ஈ.வே.ராமசாமி சொல்லாததை எல்லாம் சொன்னதாக கூற தயாராக இல்லை. அதனால் திரு.ஈ.வே.ராமசாமியின் சுத்துமாத்துக்களை அவரின் வார்த்தைகளிலேயே திகதி குறிப்புடன் இனி தருகிறோம். வாசித்து இரசியுங்கள் :rolleyes:

Edited by vettri-vel

இதோ ஈ.வே.ராமசாமியின் கொள்கை முழக்கங்கள் சில(?!). ஆதாரங்களுடன்.

1. " நாம் கோவில்களை தரைமட்டமாக்குவோம் பிராமணர்களை தீவைத்து கொளுத்துவோம். பிராமண பெண்களை விபச்சாரிகளாக்குவோம்"

Source: Lloyd I. Rudolph Urban Life and Populist Radicalism: Dravidian Politics in Madras The Journal of Asian Studies, Vol. 20, No. 3 (May, 1961), pp. 283-297

(தமிழன் கட்டிடக்கலையின் பெருமையை இன்று உலகிற்கே எடுத்து காட்டும் UNESCO வின் WORLD HERITAGE SITES ஆன தஞ்சை பெரிய கோவிலும், மதுரை மீனாட்சி கோவிலும் இந்த கோவில்களில் அடக்கம். என்ன ஒரு தமிழ் பண்பாட்டு புரட்சி). :lol::D

(இந்த கிறுக்கர்கள் நினைத்தை எல்லாம் சாதித்திருந்தால் தமிழன் கலை பண்பாட்டு அடையாளங்களை இழந்து, இவர்கள் கேலி செய்தது போல் தமிழ் காட்டுமிராண்டி மொழியாக தான் ஆகி இருக்கும்)

2. "பிராமணர்கள் அனைவரையும் கொல்லுங்கள். பிராமண பெண்களை கொலை செய்யுங்கள்

. பிராமணர் வீடுகளுக்கு தீவையுங்கள்"

Source:Lloyd I. Rudolph Urban Life and Populist Radicalism: Dravidian Politics in Madras The Journal of Asian Studies, Vol. 20, No. 3 (May, 1961), pp. 283-297

(என்ன ஒரு பெண் விடுதலை சிந்தனை! என்ன ஒரு பகுத்தறிவு).

:D:rolleyes:

3. 1962 முரசொலி பொங்கல் வெளியீட்டில் வந்த ஒரு பேட்டி

நிருபர்: ஏன் துணி விலை ஏறிவிட்டது?

ஈ.வே.ரா: புலைச்சிகள் (தாழ்த்தப்பட்டோர்) மேலாடை (பிளவுஸ்) அணிய தொடங்கிவிட்டார்கள். அது தான்

நிருபர்: ஏன் அரிசி விலை ஏறிவிட்டது?

ஈ.வே.ரா: கள்ளு குடிக்கிற பசங்க (தாழ்த்தப்பட்டோர்) எல்லாம் சோறு சாப்பிட தொடங்கி விட்டார்கள்.

நிருபர்: ஏன் வேலை இல்லா திண்டாட்டம்?

ஈ.வே.ரா: பல்லன் பறையன் எல்லாம் படிக்க தொடங்கி விட்டான்

ஆஹா என்ன ஒரு பகுத்தறிவு மேதை! என்ன ஒரு சமூக பொருளாதார நிபுணர். இவ்வளவு சிறந்த பொருளாதார மேதைக்கு ஏன் நோபல் பரிசு வழங்கவில்லை. அதுவும் ஆரிய சதியாக இருக்குமோ :D:huh:

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

சரி. கேள்விகளையே கேட்டும் என்னை பதில் எழுதவும் வைக்கிறீர்கள். இதனை பொதுவாகவே நான் விரும்புவதில்லை. இருந்தபோதிலும்,

1. சமூக சீர்திருத்தம் என்பது என்ன?

சமூகம் என்பது தனிமனிதனாகவும் தனி மனிதன் என்பதே சமூகமாகவும் இருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனுள்ளும் மாற்றம் ஏற்படாத வரை என்றுமே, எக்காலத்திலுமே சமூக மாற்றம் ஏற்படாது. இது ஒரு "தியறி" அல்ல. இது ஒரு உண்மை.

சமூகத்தை சீர்திருத்த நீங்கள் முன் வைக்கும் தனிமனித மாற்றங்கள் என்ன..??! நீங்கள் முன்வைப்பத்தை அடுத்த மனிதன் ஏற்க வேண்டும் என்பதற்கான காரணிகள் என்ன..??! ஏன் ஒரு தனிமனிதன் உங்களைப் போன்றன்றி வேறொரு பாதையில் சிந்திக்க முடியாது..??! அல்லது கூடாது...??!

2. சமூகம் எந்த வகையில், எந்தெந்த வடிவில் கெட்டுப் போய் இருக்கிறது? அதை திருத்த.

இதுதான் மிகப் பெரும் சவால். சமூகம் கெட்டுப் போய் இருக்கிறது என்பதை உணர, அதை புரிந்துகொள்ள எல்லோராலும் முடிவதில்லை. அதன் கட்டுக்களில் இருந்து வெளிவந்தாலொழிய, அதன் மாயத் தோற்றங்களில் சிக்குண்டு, ஒவ்வொருவரும் அதனுள் அமிழ்ந்து கிடப்பதை தவிர வேறெதையும் சிந்திக்க முடியாது. சரி. சமூகம் எந்தக் குறைபாடுகளும் இல்லாமல், மிகச் சரியாக இயங்குகிறது என்றால், இந்த போர்களும் குத்துவெட்டுக்களும் அமைதியின்மை, வறுமை, மன அமைதியை தேடி ஊரூராகவும் வேறுபலரையும் தேடித் திரிவது ஏன்? இவை அனைத்தும் சாதாரண மனித வாழ்க்கையின் ஒரு அம்சம் என நீங்கள் எண்ணத் தலைப்பட்டால் நீங்கள் அந்தச் சுழிக்குள் அகப்பட்டிருக்கிறீர்கள் என்பதே பொருள்.

கெட்டது என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள். காரணம்.. நல்லது கெட்டது ஆளாளுக்கு மாறுபடுகின்றது. நீங்களே உங்களுக்குள் இதுதான் நல்லது இதுதான் கெட்டது என்று வரையறுத்துவிட்டு.. அதையே எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதானது.. திணித்தலே அன்றி.. சிந்தத்தலுக்கான தூண்டலல்லவே..! எப்போது மனிதருக்குள் இன்னொருவர் தனது சிந்தனைகளை திணிக்க முற்படுகிறாரோ.. அப்பவே முரண்பாடுகளும் சச்சரவுகளும்.. எதிர்ப்புக்குரல்களும் எழத் தொடங்குகின்றன..! ஆக எப்படி.. நல்லது கெட்டதை ஒவ்வொரு தனிமனிதனின் சிந்தனைக்கும் ஏற்ற வகையில் வரையறுக்கப் போகிறீர்கள்..???!

3. சமூகச் சீர்திருத்தம் என்பதை மதங்கள் எவ்வாறு தடுக்க முயல்கின்றன?

மதங்கள் தருவது ஒரு ஏமாற்று பொய்த்தோற்றம். எந்த மதமாவது வாழ்க்கையின் அடிப்படையான, பிரிக்க முடியாத அம்சங்களான, இறப்பு, துன்பம் என்பவற்றை மனிதன் எவ்வித மனக் கிலேசமும் இன்றி எதிகொள்வது எப்படி என்று போதித்திருக்கின்றனவா? அல்லது இவற்றை விட்டு தப்பியோடும் ஒரு வழிமுறையை போதிக்கின்றனவா? கடவுள் என்ற தோற்றப்பாட்டின் உருவாக்கம் கூட ஒரு "தப்பியோடும்" முயற்சியே. இறவாநிலை, துன்பங்கள் அற்ற நிலை என போதிப்பது முற்றுமுழுதாகவே ஒரு பொய்த்தோற்றத்தை மக்கள் மனதில் விதைப்பதாகும். சமயம் மக்களிடையே பிளவுகளையே ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் சமயம் "ஏன்?" என்ற கேள்வியை முதலிலேயே அடித்து பொடிப்பொடியாக்கி விடுகிறது. இல்லையா? எந்தவொரு சமயத்திலும் "ஏன்?" என்று கேட்க முடியுமா? மனித சிந்தனையின் ஒப்பற்ற திறவுகோலான "ஏன்" என்ற வார்த்தை இல்லாமல் செய்யப்பட்ட பின், அனைவரும் ஆட்டு மந்தைகளாக சொன்னதையே திரும்பத் திரும்ம செய்து (அது எவ்வலவு பெரிய அறிவுடைய கருத்தாக இருந்தாலும் சரி) அதனுள் மூழ்க வேண்டியதுதான்.

எமது பிறப்பு.. தொடங்கி இறப்பு வரை எல்லாமே தற்காலிகமானவை. பொய்த் தோற்றங்கள் மத்தியில் தான் வாழ்க்கை என்பதே ஓடிக் கொண்டிருக்கிறது. மதம் என்பதன் அடிப்படை இதைத்தான் சொல்கிறது. நிலையாமை என்பதை. அந்த நிலையாமைக்குள் எப்படி ஒரு மனிதன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது என்பதை ஆன்மீக ரீதியில் சொல்ல விளைவதே மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகள். நீங்கள் குறிப்பிடும் மாயைத் தோற்றம் எதில் இல்லை. எமது புலனுக்குப் புலப்பட்டு விட்டதற்காக உருவங்களை உண்மை என்று வரையறுக்கும் நாம்.. அதன் பின்னணியில் உள்ள மாயைகளைப் பற்றி அறிய முற்பட்டிருக்கிறோமா..??! அறிவியல் கூட மாயையைக்குள் மாயைகள் பற்றிய விளக்கம் தேடுகிறதே தவிர.. அது எதையும் உண்மை என்று அறுதியிட்டுக் கூறிட..இன்னும் முடியல்ல..! ஆக மதங்கள் மட்டுமே மாயையை விதைக்கின்றன என்பது தவறு. இந்த உலகை அகிலத்தை மனிதன் முற்றாக அறிவியல் கொண்டு உணரும் வரை.. இது தொடரும்..??! முடிவிலிக்கு முடிவு காணும் திறன் மனிதனுக்கு இருந்தால்...???!

4.மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் சொல்லும் விடயங்களுக்கும் இதற்கும் என்ன தொடர்பு...!?

மதங்களின் ஆணிவேராக இருக்கும் கடவுள் என்பதே மனித எண்ணங்களில் தோன்றியதுதான். இது நான் மேற்கூறிய அடிப்படை பிரச்சனைகளை சரியாக எதிர்கொள்ள முடியாதபோது தப்பிக்கொள்ளும் ஒரு முயற்சிக்காக ஏற்பட்டிருக்கலாம். மனித எண்ணத்தில் மட்டுமே தோன்றிய கடவுளை காணப்போகிறேன் என்றும், அவரை அடைந்து பேரமைதியை தரிசிக்க போகிறேன் என்று காடுமேடாக அலைவது சுத்த முட்டாள் தனமேயன்றி வேறில்லை. இது ஒரு ideation. இவ்வாறு காடுமேடாக அலைந்த பலர் தமக்கு தோன்றிய கருத்துக்களை எழுதி வைத்ததும், மக்களை பிரித்து அவைகளையும் ஒரு மாயத் தோற்றத்துக்குள் அமிழ்த்தி குழப்பியதும் நாம் கண்ட வரலாறு. மனித மனத்திலே எழுந்த ஒரு எண்ணக்கருவுக்காக, அதை கண்டு தரிசிக்க போகிறேன் என வெளிக்கிடுவது சிறுபிள்ளைத்தனமானது.

மதங்கள் செய்வது இதுதான். ஒவ்வொரு கணத்திலும் பூரணமாக வாழவேண்டிய அற்புத வாழ்க்கையை, இல்லாத கற்பனைகள் மூலம் சிதைத்து, மனிதனை "எதிர்காலத்தில் வாழவைப்பதாகும்". உண்மையில் ஒவ்வொருவரும் நிகழ்காலத்தை தொலைத்துவிட்டு, எண்ணக்கருக்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வாழ்க்கையின் அற்புத அழகை மறந்துவிடுகிறோம். இறுதியில் இந்த எண்ணங்கள் உண்மையில்லை என்பதால் விரக்தியும் கோபமும் பொறாமையும் இயல்பாகவே எழுகிறது. சகல பிரச்சனைகளுக்குமான ஊற்றுக்கண்ணாக மதம் இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை "மனிதன் கண்டுபிடித்த மிகக் கேவலமான கொள்கை மதம்" என்பதாகும். இன்று நீங்கள் எவ்வளவுதான் மூடநம்பிக்கை பற்றி பேசினாலும் எழுதினாலும் அவற்றில் இருந்து நீங்கி (ஆழ்மனதில்) விடுபடும் தன்மை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதை மனப்பூர்வமாக நீங்கள் நடைமுறைப் படுத்தாதவரை, அது உங்கள் மனதை நீங்களே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு முயற்சியே.

நீங்கள் மதங்கள் பற்றி தவறான எண்ணங்களைக் கொண்டிருக்கிறீர்கள். மதங்கள் கடவுளை.. பிறிதென்றாகக் காட்டவில்லை. மனிதனுக்குள் உள்ள ஒன்றாகவே காட்டுகின்றன. அன்பாகக் காட்டுகின்றன.. உயிராகக் காட்டுகின்றன.. சக்தியாகக் காட்டுகின்றன..! மனிதன் என்ற அலகுக்குள் தான் மதம் அடங்கி இருக்கிறதே தவிர.. நீங்கள் கடவுள் என்ற ஒன்றை நோக்கி மதம் உள்ளதாக எண்ணத் தலைப்பட்டதில் இருந்து நீங்கள் மதங்கள் தொடர்பில் சரியான விளக்கத்தை இன்னும் பெறவில்லை என்பதை உணர முடிகிறது. இப்படித்தான் பலர் அரைகுறையாக மத அடிப்படைகளை விளங்கிக் கொண்டு.. மதத் திரிபுகளை மத அடிப்படைகளாகச் சித்தரித்துக் கொண்டு.. மத விரோதம் என்று மனித விரோத சிந்தனைகளை விதைத்து வருகின்றனர். இதில் மதம் என்பதை தவறாக விளங்கிக் கொண்ட மதவாதிகளும் அடங்குவர்.. அதே வகையில் அமைந்த மத விரோதிகளும் அடங்குவர்..!

சைவம் சொல்லும்.. பதி.. பசு.. பாசம்.. இவை அனைத்தும்.. மனிதனை அடையாளப்படுத்துவது..! ஆணவம் கன்மம் மாயை என்பதெல்லாம்.. மனித மன இயல்புகளைக் குறிப்பது. நீங்கள் கேட்ட கோபம் பொறாமை..போட்டி.. அமைதின்மை இவற்றிற்கு எல்லாம் காரணம்.. மனித மனங்களை.. அதாவது சிந்தனைகளைச் சூழ்ந்துள்ள மும் மலங்கள். மனித சிந்தனைக்குள் குடிகொண்டுள்ள தவறான சுயநலம் மிக்க.. எண்ணங்கள்..! இதைத்தான் மதம் சொல்கிறது.

கடவுள் என்பதை... உனக்குள் உள்ள அன்பில் காண் என்பதும் மதம் தான். உருவ வழிபாடுகள் என்பது மனிதன் தன்னை உணர்ந்து கொள்ள மன ஒருமைப்பாட்டை மையப்படுத்தி.. அனுஸ்டிக்கப்படுவது. மதங்கள் மனிதர்களை தவறான வழியில் சிந்திக்க தூண்டவில்லை. ஆனால் மதத்தை சாட்டுவைத்து உருவாக்கிய சில படைப்புக்கள் தனிமனிதர்களின் வக்கிரத்தனங்களை இணைத்துக் கொண்டு சமூகத்தில் உலாவுவதால் அந்த வக்கிரங்களையும் மதம் தான் போதிக்கிறது என்ற தப்பான எண்ணம் வளர்க்கப்பட்டு.. இன்று அதுவே பிழைப்புக்கும் புகழுக்கும்..என்று பிரச்சாரப்படுத்தப்படுகிறது. அதற்கு பகுத்தறிவு என்று வேற அடைமொழி..! :rolleyes:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.