Jump to content

எம்.எச்.17 விமானத்தை வீழ்த்திய ஏவுகணையை புடின் வழங்கியிருக்கலாம்: சர்வதேச புலனாய்வாளர்கள் தகவல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எம்.எச்.17 விமானத்தை வீழ்த்திய ஏவுகணையை புடின் வழங்கியிருக்கலாம்: சர்வதேச புலனாய்வாளர்கள் தகவல்!

எம்.எச்.17 விமானத்தை வீழ்த்திய ஏவுகணையை புடின் வழங்கியிருக்கலாம்: சர்வதேச புலனாய்வாளர்கள் தகவல்!

கடந்த 2014ஆம் ஆண்டு எம்.எச்.17 விமானத்தை வீழ்த்திய ஏவுகணையை வழங்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முடிவு செய்ததற்கான வலுவான அறிகுறிகள் இருப்பதாக சர்வதேச புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போயிங் 777 நெதர்லாந்து தலைநகரில் இருந்து கோலாலம்பூருக்கு பறந்து கொண்டிருந்தபோது, ஜூலை 2014இல் உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைனியப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலின் போது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து ஏவப்படும் வான்வழி ஏவுகணையால் தாக்கப்பட்டது.

இதன்போது, பயணிகள் மற்றும் பணியாளர்கள் அடங்களாக 298 பேர் உயிரிழந்தனர். இவர்களில், 196 பேர் நெதர்லாந்தை சேர்ந்தவர்கள், மற்ற பயணிகளில் பலர் மலேசியா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, பெல்ஜியம் மற்றும் பிற நாடுகளை சேர்ந்தவர்கள்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலையில் அப்பகுதியை கட்டுப்படுத்திய டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் மீது ரஷ்யா ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை கொண்டுள்ளது என்று கடந்த ஆண்டு தீர்ப்பளித்த நெதர்லாந்து நீதிமன்றத்தை கூட்டு விசாரணைக் குழு மேற்கோள் காட்டியது.

இராணுவ ஆதரவை வழங்குவதற்கான முடிவு ஜனாதிபதியிடம் உள்ளது என்று ரஷ்ய அதிகாரிகள் கூறிய பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களை அது விபரித்தது.

‘பிரிவினைவாதிகளின் கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதாகவும், இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் உறுதியான தகவல் உள்ளது’ என்று கூட்டு விசாரணைக் குழு மேலும். கூறியது.

ஆனால் அந்த கோரிக்கையில் எம்.எச்.17 விமானத்தை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்பட்ட அமைப்பை வெளிப்படையாக குறிப்பிடுகிறதா என்பது தெரியவில்லை.

‘நாங்கள் வலுவான அறிகுறிகளைப் பற்றி பேசினாலும், முழுமையான மற்றும் உறுதியான ஆதாரங்களின் உயர் கட்டத்தை எட்டவில்லை’ என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

நெதர்லாந்து, அவுஸ்ரேலியா, பெல்ஜியம், மலேசியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு விசாரணைக் குழுவின் கண்டுபிடிப்புகள், ஐந்து நாடுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்களைக் கொண்டவை.

கடந்த ஆண்டு நெதர்லாந்து நீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றி, இரண்டு ரஷ்யர்கள் மற்றும் ஒரு உக்ரைனியர் கொலைக் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டது.

ஆனால், தற்போது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ரஷ்யா, அந்தத் தீர்ப்புகள் அவதூறு மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று நிராகரித்தது.

 

https://athavannews.com/2023/1323608

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய குற்றச்சாட்டுக்களை முன்வைக்க போதிய புதிய ஆதாரங்களைத் திரட்ட முடியாமையால் விமான விபத்து தொடர்பான விசாரணைகள்  (தற்காலிகமாக ) நிறுத்திவைப்பு. 👇

International team suspends investigation into MH17 plane crash

Society & CultureFebruary 08, 15:53 

According to Digna van Boetzelaer, "the evidence is at the moment not concrete enough to lead to new prosecutions"

THE HAGUE, February 8. /TASS/. The Joint Investigation Team (JIT) has decided to suspend its investigation into the 2014 Malaysia Airlines flight MH17 crash in Ukraine for lack of evidence, Dutch prosecutor Digna van Boetzelaer announced on Wednesday.

"The investigation has now reached its limit. All leads have been exhausted," she said at a press conference in The Hague.

According to her, "the evidence is at the moment not concrete enough to lead to new prosecutions."

https://tass.com/society/1573355/amp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

எம்.எச்.17 விமானத்தை வீழ்த்திய ஏவுகணையை புடின் வழங்கியிருக்கலாம்: சர்வதேச புலனாய்வாளர்கள் தகவல்!

நோர்த் பைப்லைன் 2ஐ உடைத்தது போல்.....:zany_face:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ஸியாவின் அக்கிரமங்களுக்கு வெள்ளையடிக்க சிலர் காட்டும் அதீத ஈடுபாடு புல்லரிக்க வைக்கிறது. இந்த இலட்சணத்தில் இவர்கள் மனிதாபிமானம் வேறு பேசுவார்களாம். 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

ரஸ்ஸியாவின் அக்கிரமங்களுக்கு வெள்ளையடிக்க சிலர் காட்டும் அதீத ஈடுபாடு புல்லரிக்க வைக்கிறது. இந்த இலட்சணத்தில் இவர்கள் மனிதாபிமானம் வேறு பேசுவார்களாம். 

மேற்கின் அநியாயங்களை நியாயப்படுத்தும் செயற்பாட்டை ஞாபக மறதி என்று சொல்லலாமா? 

மனிதாபிமானம் எல்லோருக்கும் பொதுவானது. மேற்குலகுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரஞ்சித் said:

ரஸ்ஸியாவின் அக்கிரமங்களுக்கு வெள்ளையடிக்க சிலர் காட்டும் அதீத ஈடுபாடு புல்லரிக்க வைக்கிறது. இந்த இலட்சணத்தில் இவர்கள் மனிதாபிமானம் வேறு பேசுவார்களாம். 

ஹன்னா அறென்ட், ஒரு தத்துவவியலாளர் - மக்களை எப்படி சர்வாதிகாரிகள் தம் பக்கம் இழுக்கிறார்கள் என்பதைப் பற்றி நிறைய எழுதிய ஒருவர்: அவரது ஒரு கருத்துப் படி: "சர்வாதிகாரிகள் முற்றாகத் தமக்கு எதிராக நிற்போரைக் கவர முற்படுவதில்லை. அதே போல, தங்களை முற்றாக ஆதரிக்கும் தீவிர ஆதரவாளர்களையும் கவர முற்படுவதில்லை. ஆனால், சரி எது பிழை எது என்பதைத் தெளிவாகப் பிரித்தறிய முடியாமல் தடுமாறும் குழுக்களையும், மக்களையும் குறி வைத்துக் கவர முற்படுவர்"

இந்த கறுப்பு வெள்ளை  வேறுபாடு தெரியாமல் "எல்லாம் ஒன்று தான்" என்று தடுமாறும் மக்களே சர்வாதிகாரிகளின் வரப்பிரசாதம்!"

இங்கே டபுள் எம்.ஏ செய்ய முயல்வதும் அதே தான்! எனவே, அமைதி கொள்ளுங்கள்!😂

  • Haha 1
Link to comment
Share on other sites

5 hours ago, Kapithan said:

மேற்கின் அநியாயங்களை நியாயப்படுத்தும் செயற்பாட்டை ஞாபக மறதி என்று சொல்லலாமா? 

மனிதாபிமானம் எல்லோருக்கும் பொதுவானது. மேற்குலகுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. 

மனிதாபிமானத்தை வெளிக்காட்ட மனித நேயத்துக்கு எதிரானவர்களை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இது முற்றிலும் முரன்பாடானது.


நீங்கள் குறிப்பிடும் கருத்தாளர்கள் எங்காவது மேற்கின் மனித உரிமை மீறலை நியாயப்படுத்தியதைக் காட்ட முடியுமா ?
மாறாக உங்கள் சார்பானவர்கள் மனித இனத்துக்கு எதிரானவர்களை நியாயப்படுத்துவதை அண்மைய திரிகள் எல்லாவற்றிலும் காணலாம்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, இணையவன் said:

1) மனிதாபிமானத்தை வெளிக்காட்ட மனித நேயத்துக்கு எதிரானவர்களை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இது முற்றிலும் முரன்பாடானது.


2) நீங்கள் குறிப்பிடும் கருத்தாளர்கள் எங்காவது மேற்கின் மனித உரிமை மீறலை நியாயப்படுத்தியதைக் காட்ட முடியுமா ?


3) மாறாக உங்கள் சார்பானவர்கள் மனித இனத்துக்கு எதிரானவர்களை நியாயப்படுத்துவதை அண்மைய திரிகள் எல்லாவற்றிலும் காணலாம்.

1) மனித நேயத்திற்கு எதிரானவர்களென்று தீர்மானிப்பதற்கான உங்கள் அளவீடு என்ன? 

2) உங்கள் கூற்றுப்படி - மேற்கை ஆதரிப்பவர்கள், மேற்கின் மனித உரிமை மீறலைக் கண்டித்த ஒரு கருத்தாளரை  உங்களால் காட்ட முடியுமா ? மெளனமாகக் கடந்துசெல்வார்கள் அப்படித்தானே? 

3) மனித குலத்துக்கு எதிரானவர்களென்று எதைக் கொண்டு அளவீடு செய்கிறீர்கள்? 

 

இங்கே பிடுங்குப்படும் எம்மிடையே மூன்று வகையான ஆட்கள் இருக்கிறார்கள். 

முதலாவது வகையினர் - எல்லோரும் வாழ வேண்டும் என உண்மையாக ஆசிப்பவர்கள்.

இரண்டாவது வகையினர் - தாங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் என நினைப்பவர்கள். ⁉️

மூன்றாவது வகையறா - சைக்கிள்  கப்பில் எல்லோரின் மீதும் சவாரி செய்பவர்கள். செலன்ஸ்கி வகையறாக்கள். 🤡

இதில் இந்த மூன்றாம் வகையறாக்கள்தான் அபாயகரமானவர்கள்.

 

Edited by Kapithan
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வரப்பிரசாதம்

நல்லதொரு சொல்லை அறிமுகபடுத்தினீர்கள். சர்வாதிகாரி புதினுக்கு அவரிடம் இருந்து தனக்கோ, தன் இனத்திற்கோ ஒரு துளி உதவியை கூட பெறமால்  கொடுங்கோலனை  கண்மூடிதனமாக ஆதரிக்கும் மேற்குலகநாடுகளில் வாழ்கின்ற அவரின் ஈழதமிழ் ஆதரவாளர்கள் அவருக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

 

5 hours ago, Justin said:

வரப்பிரசாதம்!"

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இங்கே பிடுங்குப்படும் எம்மிடையே மூன்று வகையான ஆட்கள் இருக்கிறார்கள். 

முதலாவது வகையினர் - எல்லோரும் வாழ வேண்டும் என உண்மையாக ஆசிப்பவர்கள்.

இரந்வகையினர் - தாங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் என நினைப்பவர்கள். ⁉️

மூன்றாவது வகையறா - சைக்கிள்  கப்பில் எல்லோரின் மீதும் சவாரி செய்பவர்கள். செலன்ஸ்கி வகையறாக்கள். 🤡

இதில் இந்த மூன்றாம் வகையறாக்கள்தான் அபாயகரமானவர்கள்.

மிகச்சரியான கணிப்பீடு.

நான் புட்டினை ஆதரிக்கின்றேன்.ஆனால் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் சரியானதாக நினைக்கவும் இல்லை.

உங்களிடம் ஒரு கேள்வி? அது என்ன வென்றால் ஏன் எல்லோரும் உக்ரேனுக்காக அழுகின்றார்கள்? அதன் சூட்சுமம் என்ன? என்றுமில்லாதவாறு மனிதாபிமானம் எனும் மந்திர சொல்லை உக்ரேனுக்காக காவிக்கொண்டு திரிகின்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இணையவன் said:

மனிதாபிமானத்தை வெளிக்காட்ட மனித நேயத்துக்கு எதிரானவர்களை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இது முற்றிலும் முரன்பாடானது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அமெரிக்காவும், நேட்டோவும் மனிதநேயத்திற்கு எதிராக எதுவுமே செய்யவில்லை என்கிறீர்களா?

உதாரணத்திற்கு பிரான்ஸ்ல் முஸ்லீம் தீவிரவாதிகள் சிறு தாக்குதல் நடத்தும் போது பதிலடியாக போர் விமானங்கள் எங்கு போய் தாக்குதல் தடத்துகின்றது என்பதாவது தெரியுமா?

ரஷ்யாவை பொறுத்த வரைக்கும் மேற்குலகு முழு உலகிற்கும் செய்த அநியாயங்களைப்போல் செய்யவில்லை.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.