Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டி!

Published By: T. SARANYA

22 FEB, 2023 | 10:55 AM
image

அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடவுள்ளதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தொழிலதிபா் விவேக் ராமசாமி (37) அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஜனாதிபதி  தோ்தல் 2024 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 5 ஆம் திகதி நடைபெற உள்ளது.

இந்தத் தோ்தலில் போட்டியிடும் தனது முடிவை குடியரசு கட்சியைச் சோ்ந்த முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹேலி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜனாதிபதி தோ்தலில் போட்டியிட குடியரசு கட்சியைச் சோ்ந்தவரும், இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமியும் அறிவித்துள்ளனர்.

விவேக் ராமசாமி இந்தியாவில் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயா்ந்த இந்திய தம்பதிக்கு மகனாகப் பிறந்தவா். அவரின் தந்தை மின் பொறியாளராகவும், தாய் முதியோா் மனநல மருத்துவராகவும் இருந்தனா். 

அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டியில் பிறந்த விவேக் ராமசாமி, புகழ்பெற்ற ஹாா்வா்ட், யேல் பல்கலைக்கழகங்களில் படித்தவா். அவரின் சொத்து மதிப்பு 500 மில்லியன் டொலா்களுக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.

ஜனாதிபதி தோ்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு முன்னா், குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

https://www.virakesari.lk/article/148812

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

கேரளாவில்

பேந்தென்ன…அப்ப இவரும் யாழ்ப்பாணம்தான்🤣

  • கருத்துக்கள உறவுகள்

கல்லோ விவேக்

மலயாளம் பறைஞ்சுண்டோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விவேக் ராமசாமி: அமெரிக்க அதிபர் பதவிக்கு ட்ரம்புடன் மோதும்கோடீஸ்வர இந்தியர்

அமெரிக்க அதிபர் தேர்தல்

பட மூலாதாரம்,RAMASWAMY CAMPAIGN

 
படக்குறிப்பு,

குடும்பத்தினருடன் விவேக் ராமசாமி

3 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூன்று நபர்களில் இரண்டு பேர் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள்.

இதில், நிக்கி ஹேலி ஓரளவு அனைவருக்கும் பரிச்சயமான நபர். ஆனால், விவேக் ராமசாமியோ பெரிய அளவில் அறியப்படாதவர்.

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் சவிதா படேல், விவேக் ராமசாமியின் வெற்றி வாய்ப்பு, அவரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பதை இந்த கட்டுரையில் மதிப்பிடுகிறார்.

தொழிலதிபரும், Woke,Inc என்ற புத்தகத்தை எழுதியவருமான விவேக் ராமசாமி, பிப்ரவரி 21ஆம் தேதி ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது விருப்பம் குறித்து பேசியிருந்தார். புதிய அமெரிக்க கனவை உருவாக்க கலாச்சார இயக்கம் ஒன்றை உருவாக்க அவர் விரும்புகிறார்.

“மக்களை பிணைப்பதைவிட பெரியது எதுவும் இல்லையென்றால், பன்முகத்தன்மை அற்றமற்றதாகிவிடும்” என்றும் அவர் கூறுகிறார்.

37 வயதாகும் விவேக் ராமசாமி, ஓஹியோ மாகாணத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் இந்தியாவில் உள்ள கேரளாவை பூர்விகமாக கொண்டவர்கள். ஹார்வார்ட், யேல் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற விவேக், பயோடெக் தொழிலதிபராக முதலில் பணம் சம்பாதிக்க தொடங்கினார். பின்னர், சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றை அவர் தொடங்கினார்.

இனவெறி, காலநிலை குறித்த தனது பேச்சுகளை எப்போதும் நியாயப்படுத்தும் அவர், அவற்றை கார்ப்பரேட் உலகின் "விழிப்புவாதம்" என்று அழைக்கிறார். இனவெறி, காலநிலை ஆகியவை வணிகங்களையும் நாட்டையும் பாதிக்கிறது என்றும் கூறுகிறார். ஒரு நிறுவனத்தின் சமூக, சுற்றுச்சூழல் தாக்கத்தை அளவிடப் பயன்படும் ESG(சுற்றுச்சூழல், சமூக மற்றும் பெருநிறுவன ஆளுகை) முயற்சிகளை அவர் எதிர்க்கிறார்.

மேலும், உயர்கல்வியில் உறுதியான நடவடிக்கைகளை கைவிட விரும்பும் அவர், அமெரிக்க பொருளாதாரம் சீனாவை சார்ந்து இருப்பதையும் குறைக்க விரும்புகிறார்.

2022 ஆம் ஆண்டு, தேர்தலில் நியூ ஹாம்ப்ஷயரில் இருந்து அமெரிக்க செனட்டிற்கு போட்டியிட்ட குடியரசுக் கட்சியைச் சேர்ந்த விக்ரம் மன்ஷாரமணி போன்ற சிலருடன் விவேக் ராமசாமியின் கருத்து ஒத்துப்போகிறது. விவேக் ராமசாமி குறித்து மன்ஷாரமணி பேசுகையில், அவர் “மிகவும் ஈர்க்கக்கூடியவர், தெளிவான மற்றும் சிந்தனைமிக்கவர்" என்று விவரிக்கிறார், மேலும் “அமெரிக்காவைப் பிரிப்பதற்குப் பதிலாக ஒன்றிணைக்க" தங்கள் இருவரின் கருத்துக்கள் பயன்படுவதாக அவர் கூறுகிறார்.

“அடையாள அரசியல் அமெரிக்காவில் வேரூன்றியிருக்கிறது, அது ஒன்றுபடுத்தும் போக்கைக் காட்டிலும் பிளவுபடுத்தும் போக்குடன் வந்துள்ளது. நம்மிடம் பொதுவாக உள்ளதை நாம் உருவாக்க வேண்டும்," என்று கூறிய விவேக், சமீபத்தில் நியூ ஹாம்ப்ஷயரில் அவரது குடும்பத்தினர் நிக்கி ஹேலிக்கு விருந்தளித்ததையும் குறிப்பிடுகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்

பட மூலாதாரம்,VIVEK2024.COM

 
படக்குறிப்பு,

விவேக் ராமசாமி

அதேநேரத்தில், அரசியலில் எதிர் தரப்பில் உள்ள இந்திய அமெரிக்கர்களோ விவேக் ராமசாமியின் அரசியலோடு உடன்படவில்லை என்றும் அவரது பிரசாரத்தில் குறையுள்ளதாகவும் கூறுகின்றனர்.

AAPI (ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவுவாசிகள்) விக்டரி ஃபண்ட், நிறுவன தலைவரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான சேகர் நரசிம்மன், நிறைய ஆசிய-அமெரிக்கர்கள் அரசியலில் முக்கியத்துவம் பெறுவதைக் கண்டு மகிழ்ச்சியடையும் அதே வேளையில், விவேக் ராமசாமியின் கருத்துக்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறுகிறார்.

“அவர் ஒரு தொழிலதிபர், தெளிவான திட்டம் வைத்துள்ளார். ஆனால், அவருடைய வாக்குறுதிகள் என்ன?” என்று கேள்வி எழுப்பும் சேகர் நரசிம்மன், “முதியோர்களுக்கான மருத்துவ வசதி குறித்து அவர் கவலைப்படுகிறாரா? உள்கட்டமைப்புக்கு செலவிடுவது குறித்த அவரது திட்டங்கள் என்ன? அவருக்கு நிலையான பதவிகள் இல்லை. தனது கொள்கைகளையும் அவர் வெளிப்படுத்தவில்லை.” என்று கூறுகிறார்.

விவேக் ராமசாமியின் பிரசாரங்களை யதார்த்தமற்றது, நடைமுறைக்கு மாறானது என்று கூறும் அவர், “தன்னிடம் கூறுவதற்கு ஏதோ இருக்கிறது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவதால் தனது கருத்துகள் கேட்கப்படும் என்று விவேக் ராமசாமி நம்புகிறார்” என்றும் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக குடியரசு கட்சியினரை ஆதரித்து வரும் சமூக உறுப்பினர்கள் பலரும், அதிபர் தேர்தலில் போட்டிடுவதாக அறிவிப்பதற்கு முன்புவரை விவேக் ராமசாமி குறித்து தாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்று கூறுகின்றனர்.

“அவரை நான் பார்த்ததே இல்லை. அவரிடம் பணம் இருப்பதாகவும் சிறப்பாக பேசுவார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. ஆனாலும், அவர் வேட்பாளர்களில் ஒருவராகவே இருப்பார். அவர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை” என்று கூறுகிறார் குடியரசு கட்சியின் ஆதரவாளரான மருத்துவர் சம்பத் சிவாங்கி. மற்றவர்களும் இதனை ஏற்றுக்கொள்கின்றனர்.

“தேர்தலில் போட்டியிட விரும்புவதாக அவர் கூறாமல் இருந்திருந்தால் அவர் குறித்து யாரும் பேசியிருக்க மாட்டார்கள் ” என ஹோட்டல் அதிபர் டேனி கெய்க்வாட் கூறுகிறார். ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷிலிருந்து குடியரசுக் கட்சியின் அனைத்து அதிபர் வேட்பாளர்களுக்கும் இவர் நிதி திரட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நிக்கி ஹேலி

அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் விவேக் ராமசாமியின் தைரியத்தை தான் பாராட்டுவதாக கூறும் டேனி கெய்க்வாட், இந்திய- அமெரிக்கர்களுக்கான ஒரு உத்தியை வைத்திருப்பது அவருக்கு மிகவும் முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.

தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் புளோரிடாவின் தற்போதைய ஆளுநர் ரான் டிசாண்டிஸ்( தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் இவர் முறையாக அறிவிக்கவில்லை)ஆகியோரை சுட்டிக்காட்டி, புளோரிடாவில் மட்டும் இரண்டு வலிமையான வேட்பாளர்கள் இருக்கக்கூடும் என்று கூறினார்.

அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதில் டொனால்ட் ட்ரம்ப், ரான் டிசாண்டிஸ், நிக்கி ஹேலி ஆகியோர் இடையே மும்முனை போட்டி இருக்கும் என்பது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இந்திய- அமெரிக்கர்களின் கணிப்பாகும். மேலும் முன்னாள் அதிபர் ட்ரம்பின் சட்டப் போராட்டங்களில் இன்னும் நிச்சயமற்ற தன்மை இருப்பதால், முன்கூட்டியே கூட்டணிகளை உருவாக்குவதற்குப் பதிலாக காத்திருக்க விரும்புகிறார்கள்.

ஹேலியின் பிரசார உத்தியை தான் விரும்புவதாக கூறும் சிவாங்கி, ஒருவேளை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் விலகினால், ஹேலியை தான் ஆதரிப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

“ட்ரம்ப் 40 சதவீத மதிப்பீட்டை பெற்றுள்ளார். ஹேலியோ ஒற்றை இலக்கத்தில் மதிப்பீட்டை பெற்றுள்ளார். எனினும் அவர் எங்கள் வேட்பாளர். அவர் இந்திய- அமெரிக்கராக இருப்பதுதான் அவருடன் நாங்கள் நெருக்கமாக இருப்பதற்கு காரணம்” என அவர் தெரிவித்தார்.

கடந்த மூன்று தேர்தல்களிலும் தங்களின் அரசியல் பங்கேற்பு அதிகரித்திருப்பது தொடர்பாக, அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்திய- அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர்.

“ஒரு அழகான விஷயம் நடந்து வருகிறது. இந்திய-அமெரிக்கர்கள் முன்னிலை பெறுகின்றனர்,” என்று கெய்க்வாட் கூறுகிறார், சமீபத்திய முயற்சியானது உள்ளூர் அளவில் கூட தேர்தலில் போட்டியிட இந்திய-அமெரிக்கர்களை ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.

அரசியலில் எதிரெதிர் துருவங்களில் உள்ளவர்களும் இதனை ஆமோதிக்கின்றனர்.

“ராமசாமி போன்ற பெயர் கொண்ட அமெரிக்கர்கள் போட்டியிடுவதை எங்கள் குழந்தைகள் பார்த்தால், ஒரு கண்ணாவோ, கிருஷ்ணமூர்த்தியோ வெற்றி பெற முடியும்” என்று நரசிம்மன் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c257yknznvdo

  • கருத்துக்கள உறவுகள்

பேந்தென்ன ஆராத்தியை கொழுத்த வேண்டியது தான்.😀

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, சுவைப்பிரியன் said:

பேந்தென்ன ஆராத்தியை கொழுத்த வேண்டியது தான்.😀

எதையும் கொழுத்த முதல் அமெரிக்காவில் வசிக்கும் இந்தக் குடியேறி சொல்வதையும் கேட்டு விடுங்கள்😂:

1. அனேக அமெரிக்க இந்தியர்கள்/இலங்கையர்கள் (அல்லது அவர்களது பெற்றோர்) நீலக் கட்சியின் (Democrats) லிபரல் கொள்கைகளின் உதவியுடன் அமெரிக்கா வந்து, படித்து, வேலை செய்து சொத்து சேர்த்தவர்கள். ஏனெனில் சிவப்புக் கட்சி (Republicans) குடியேறிகளை சுதந்திரமாக அனுமதிப்பது அரிது!

2. இதில் பெரும் சொத்துச் சேர்த்தவர்கள் (ராமசாமி போல!) ஒரு கட்டத்தில் தங்கள் பிசினஸ், வருமான வரிகள் அதிகரிப்பதாக குறை சொல்ல ஆரம்பிப்பார்கள்.நிதிப் பழமை வாதிகளோடு (Fiscal conservatives) இவர்கள் சேர்ந்து கொள்வர்.

3. இவர்களுள் ஒரு பகுதியினர், ஒரு படி மேலே போய் ஒரு பாலினத்தினர், இடைப்பாலினர், பால்மாற்றம் செய்வோர் இவர்களுக்கெதிரான மனப்பான்மையை வளர்த்துக் கொள்வர். மோடி வாலாக்களாக இருப்போர் (இங்கே யாழிலேயே இருக்கின்றனர் சிலர்😎!) முஸ்லிம்களையும் எதிர்க்க ஆரம்பிப்பர். இவர்கள் சமூகப் பழமைவாதிகளோடு (Social conservatives) சேர்ந்து கொள்வர்.

மேல் #2, #3 நடந்த பிறகு சிவப்புக் கட்சி இவர்களை ஈர்த்துக் கொள்ளும்! சிவப்புக் கட்சியினால் "தடுத்தாட்கொள்ளப் பட்ட" பின்னர், சிவப்புக் கட்சி காவும், வெள்ளையின மேலாண்மை, குடியேறி எதிர்ப்பு, கறுப்பின மக்களுக்கு ஆதரவான சமத்துவத்திற்கு (affirmative action) எதிர்ப்பு என ஏனைய எல்லாக் குப்பைகளுக்கும் தங்கள் பொன்வாயால் நியாயம் கற்பித்து அமெரிக்காவின் சிறந்த குடியேறியாக (poster boy immigrant😂) காட்சி தருவர்!

இவர் போல பலர் இருக்கின்றனர் அமெரிக்க அரசியல் அரங்கில். 2016 இல் ட்ரம்ப் வென்ற தேர்தலில், ஒரு உள்ளூர் பதவிக்கு போடியிட்டு தோற்ற "ஈமெயிலைக் கண்டு பிடித்த" தமிழர் ஐயாத்துரையும் இப்படி பட்டவரே! அவரது கருத்துக்கள் ட்ரம்பின் அலட்டலை விட மோசமானவை!    

எனவே, பார்த்துக் கொழுத்துங்கோ! 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2023 at 15:57, goshan_che said:

பேந்தென்ன…அப்ப இவரும் யாழ்ப்பாணம்தான்🤣

இவரின் பாட்டி  (அம்மம்மா) உரும்பிராயை சேர்ந்தவாரம்.  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

எதையும் கொழுத்த முதல் அமெரிக்காவில் வசிக்கும் இந்தக் குடியேறி சொல்வதையும் கேட்டு விடுங்கள்😂:

1. அனேக அமெரிக்க இந்தியர்கள்/இலங்கையர்கள் (அல்லது அவர்களது பெற்றோர்) நீலக் கட்சியின் (Democrats) லிபரல் கொள்கைகளின் உதவியுடன் அமெரிக்கா வந்து, படித்து, வேலை செய்து சொத்து சேர்த்தவர்கள். ஏனெனில் சிவப்புக் கட்சி (Republicans) குடியேறிகளை சுதந்திரமாக அனுமதிப்பது அரிது!

2. இதில் பெரும் சொத்துச் சேர்த்தவர்கள் (ராமசாமி போல!) ஒரு கட்டத்தில் தங்கள் பிசினஸ், வருமான வரிகள் அதிகரிப்பதாக குறை சொல்ல ஆரம்பிப்பார்கள்.நிதிப் பழமை வாதிகளோடு (Fiscal conservatives) இவர்கள் சேர்ந்து கொள்வர்.

3. இவர்களுள் ஒரு பகுதியினர், ஒரு படி மேலே போய் ஒரு பாலினத்தினர், இடைப்பாலினர், பால்மாற்றம் செய்வோர் இவர்களுக்கெதிரான மனப்பான்மையை வளர்த்துக் கொள்வர். மோடி வாலாக்களாக இருப்போர் (இங்கே யாழிலேயே இருக்கின்றனர் சிலர்😎!) முஸ்லிம்களையும் எதிர்க்க ஆரம்பிப்பர். இவர்கள் சமூகப் பழமைவாதிகளோடு (Social conservatives) சேர்ந்து கொள்வர்.

மேல் #2, #3 நடந்த பிறகு சிவப்புக் கட்சி இவர்களை ஈர்த்துக் கொள்ளும்! சிவப்புக் கட்சியினால் "தடுத்தாட்கொள்ளப் பட்ட" பின்னர், சிவப்புக் கட்சி காவும், வெள்ளையின மேலாண்மை, குடியேறி எதிர்ப்பு, கறுப்பின மக்களுக்கு ஆதரவான சமத்துவத்திற்கு (affirmative action) எதிர்ப்பு என ஏனைய எல்லாக் குப்பைகளுக்கும் தங்கள் பொன்வாயால் நியாயம் கற்பித்து அமெரிக்காவின் சிறந்த குடியேறியாக (poster boy immigrant😂) காட்சி தருவர்!

இவர் போல பலர் இருக்கின்றனர் அமெரிக்க அரசியல் அரங்கில். 2016 இல் ட்ரம்ப் வென்ற தேர்தலில், ஒரு உள்ளூர் பதவிக்கு போடியிட்டு தோற்ற "ஈமெயிலைக் கண்டு பிடித்த" தமிழர் ஐயாத்துரையும் இப்படி பட்டவரே! அவரது கருத்துக்கள் ட்ரம்பின் அலட்டலை விட மோசமானவை!    

எனவே, பார்த்துக் கொழுத்துங்கோ! 

நல்ல கருத்து, ஒரு சிலர் அல்ல, பெரும்பாலானவர்கள் உள்ளனர். அதற்கு காரணம் அறியாமை, கூட்ட மனப்பான்மை என கருதுகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இவரின் பாட்டி  (அம்மம்மா) உரும்பிராயை சேர்ந்தவாரம்.  

பைடன் வட்டு கோட்டை, கிளிண்டன் இணுவில், கமலா மானிப்பாய், இப்ப விவேக் உரும்பிராய்….வலிகாம தோட்டத்தில் புகையிலைக்கு அடுத்து அதிக விளைச்சல் அமெரிக்க அதிபர்கள்தான்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 எனக்கு அவர நல்லாய் தெரியும்.....மட்டுவில் கத்தரி தோட்டத்தில துலா மிதிச்சவர்   :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 எனக்கு அவர நல்லாய் தெரியும்.....மட்டுவில் கத்தரி தோட்டத்தில துலா மிதிச்சவர்   :rolling_on_the_floor_laughing:

நீங்கள்..மட்டுவிலா?.    மட்டுவிலா?????.   🤣😛

  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2023 at 20:07, goshan_che said:

பைடன் வட்டு கோட்டை, கிளிண்டன் இணுவில், கமலா மானிப்பாய், இப்ப விவேக் உரும்பிராய்….வலிகாம தோட்டத்தில் புகையிலைக்கு அடுத்து அதிக விளைச்சல் அமெரிக்க அதிபர்கள்தான்🤣

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விவேக் ராமசாமி விருப்பம், உல‌க‌ம்  செய்திகள், - தமிழ் முரசு World news, in Tamil, Tamil Murasu

விவேக் ராமசாமியின், அமெரிக்க  வீட்டு சமையலுக்கு...
அவரின் உரும்பிராய்  பாட்டி வழி வந்த உறவினர்கள் மூலம்,
இப்போது கூட... மிளகாய்த் தூளும், கோப்பித் தூளும்...
கையால் வறுத்து, உரலில் இடித்து அனுப்பிக்  கொண்டு இருக்கிறார்கள்.

அந்தத் தூள் இல்லாமல் விவேக் ராமசாமி வீட்டில்.. கறி  சமைக்கவோ,
கோப்பியோ குடிக்க மாட் டார்களாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.