Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யத் தாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட நகரம்… புகைப்படத்தை வெளியிட்ட உக்ரைன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நாங்கள் அழிவை போற்றவில்லை.போற்றும் மண்ணிலிருந்தும் வரவில்லை.
ஏனைய இடங்களில் அழித்து/அழித்துக்கொண்டு இதை அழிவு என நாடகம் போடுகின்றானே அதைத்தான்,அதற்காகத்தான் எதிர்க்கின்றோம்
.

தங்களுக்குள் ஏதாவது என்றால் இரத்தம்.மற்றவனுக்குள் என்றால் தக்காளி ஜூஸ்.

இதை விளங்கியும் விளங்காமல் நடிப்பதுதான் இவர்களின் திறமை, அமெரிக்காவின் செயல்களே உக்ரைனின் அழிவுக்கு காரணம், உலகின் முதல் எதிரி இந்த அமெரிக்கா

  • Replies 132
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

03-3.jpg

02-2.jpg

உக்ரைன்... இவ்வளவு சாம்பல் மேடாகும் மட்டும், பார்த்துக் கொண்டு இருந்தது யார்?
அமெரிக்கா, ஐரோப்பா, ஐ,நா… என்று தங்களுக்கு சொந்தமாக பல சற்றலைட்டுகளை... 
உலகத்தை கண்காணிக்க வானத்தில் நிறுவி வைத்திருக்கும் போது,
இதனை கண்டு ஆரம்பத்திலேயே தடுக்காமல்...
உக்ரைனுக்கு... தொடர்ந்தும், கொம்பு சீவி விட்டுக் கொண்டிருந்தது
யார்?   😎

உக்ரைன்...  சாம்பல் மேடாகும் என்றும், ரஸ்யாவை வெல்ல முடியாது என்றும்...
சென்ற வருடமே, யாழ்.களத்தில் சொல்லி விட்டோம்.

யாழ், களத்திற்கு தெரிந்தது.... அமேரிக்கா, ஐரோப்பா, ஐ.நா.... போன்ற, மேற்குலக 
இராணுவ / அரசியல்  கண்காணிப்பாளர்கள் முன்பே கணிக்கத் தவறியது
ஏன் ?

ரஷ்யாவின் ஆயுதங்கள்... உக்கல்  ஆயுதங்கள் என்று சொன்னவர்களும்..
இந்தப் படத்தைப் பார்த்தும் தங்களின் மனநிலையை மாற்றிக் கொள்ளவும்.

மேற்கு தொடர்ந்தும், உக்ரைனுக்கு   ஆயுதம் கொடுத்தால்.... இதனைப் போல 
பல சாம்பல் மேடுகளை, உக்ரைனில் பார்க்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இங்கிலாந்து... உக்ரைனுக்கு, வெடிமருந்து கொடுத்து... 
அதன்,  கையிருப்பு...  குறைந்து விட்டதாம்.
அதனை மீள நிரப்ப இன்னும் பத்து வருடம் எடுக்குமாம்.
சொந்த நாட்டின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல்... 
உக்ரேனுக்கு அள்ளிக் கொடுத்த முட்டாள்தனத்தை என்ன வென்று சொல்வது
?

உக்ரைன் அழியும் என்று தெரிந்தே....  உக்ரேனுக்கு ஆயுதம் கொடுத்து ஊக்குவித்த...
வெள்ளைக்கார துரைமாருக்கு.... இந்த சாம்பல் மேடு சமர்ப்பணம். 🙏

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

முள்ளிவாய்க்காலை இங்கே இழுத்துவிட்டு வேடிக்கை பார்ப்பவரை கேள்வி கேட்டும் நேர்மை இங்கே மிகச் சிலருக்கு மட்டுமே இருக்கிறது.

நாங்கள் முள்ளிவாய்க்காலை பரிசாக தந்த பீல்ட் மார்ஷலுக்கே வாக்கு குத்தோ குத்து என்று குத்தி பூரிச்சு நிண்டனாங்கள். முள்ளிவாய்க்காலின் கூட்டுக்களவாணிகளில் ஒருத்தனின் வாலை பிடித்துக்கொண்டு அரசியல் செய்யும் கூத்தாடிகளையே அரசியல் தலைவர்களாக வைத்துக்கொண்டு கூத்தடிப்பவர்கள். எங்களுக்கு முள்ளிவாய்க்காலாவது ஹைகோர்ட்டாவது ...சும்மா டயலாக்குக்கு எடுப்பா இருக்கும் என்று  எடுத்துவிட்டு பிலிம் காட்டுவோம் அம்புட்டுத்தே   

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

நாங்கள் அழிவை போற்றவில்லை.போற்றும் மண்ணிலிருந்தும் வரவில்லை.
ஏனைய இடங்களில் அழித்து/அழித்துக்கொண்டு இதை அழிவு என நாடகம் போடுகின்றானே அதைத்தான்,அதற்காகத்தான் எதிர்க்கின்றோம்.

தங்களுக்குள் ஏதாவது என்றால் இரத்தம்.மற்றவனுக்குள் என்றால் தக்காளி ஜூஸ்.

விசுகர்! இங்களுக்கு இந்த இடத்தில் இன்னுமொன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். மானம் மனிதாபிமானங்களுக்கு அப்பால் இலங்கை விடயத்தில் இந்தியாவை மீறி எந்த நாடும் தலை வைத்து படுக்காது.
 
குசாமியாரிடம் ஒரு விளக்கம் கேட்கின்றேன், இந்த இலங்கையை ஐநாவில் காப்பற்றிய ரஸ்ஸியாவை ஆதரிக்கும் நீங்கள் ஏன் அதே சொரிலங்காவை ஆதரிக்கக்கூடாது? 

1980 நடுப்பகுதிகளில் சோவியத் யூனியன் என்ற புத்தகத்தை தவறாமல் படித்து சோவியத் உடையும் பொழுது கோர்பச்சோவை திட்டி சோவியத்திற்கு ஆதரவு செலுத்தியவன் நான். இன்று அந்த ஆதரவு ரஸ்ஸியாவிற்கு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இலங்கை தமிழர் விடயத்தில் சரணடைந்த பின்னர் அழித்தார்கள்.
உக்ரேன் விடயத்தில் பேச்சுவார்தையே நடக்கக்கூடாது என்ற பதத்தின் கீழ் அழிவை வாங்குகின்றார்கள்.
டொனால்ட் ரம்ப் செலென்ஸ்கிக்கு புத்திமதி சொல்ல பைடன் வந்து புட்டினை கொலையாளி என்றார். அரசியல் புரிகின்றதா?

அடே நீங்கள் இந்த டிரம்பின்ற ஆதரவாளர்களா… அப்பச்சரி… இனி உங்களுடன் கருத்தாடுவது சரிவராது… Tweeter இல் MAGA supporter ஐ block பண்ணிவது போல் உங்களுடனும் இனி கருத்தாடுவதை தவிரக்ப்போகின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, ragaa said:

குசாமியாரிடம் ஒரு விளக்கம் கேட்கின்றேன், இந்த இலங்கையை ஐநாவில் காப்பற்றிய ரஸ்ஸியாவை ஆதரிக்கும் நீங்கள் ஏன் அதே சொரிலங்காவை ஆதரிக்கக்கூடாது? 

1980 நடுப்பகுதிகளில் சோவியத் யூனியன் என்ற புத்தகத்தை தவறாமல் படித்து சோவியத் உடையும் பொழுது கோர்பச்சோவை திட்டி சோவியத்திற்கு ஆதரவு செலுத்தியவன் நான். இன்று அந்த ஆதரவு ரஸ்ஸியாவிற்கு இல்லை

இதுவரை ஈழதமிழர்களுக்கு ஆதரவாக நிற்கும் நாடுகள் செய்ததென்ன? பத்து வருடங்கள் ஆகிவிட்டதல்லவா?

29 minutes ago, ragaa said:

அடே நீங்கள் இந்த டிரம்பின்ற ஆதரவாளர்களா… அப்பச்சரி… இனி உங்களுடன் கருத்தாடுவது சரிவராது… Tweeter இல் MAGA supporter ஐ block பண்ணிவது போல் உங்களுடனும் இனி கருத்தாடுவதை தவிரக்ப்போகின்றேன்

நான் ரம்பின் ஆதரவாளன் அல்ல.
என்னுடன் கருத்தாடல் செய்யுமாறு இதுவரை யாரையும் நான் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை. அழைப்பதும் இல்லை. எனக்கு எல்லோரும் நண்பர்களே. கருத்துக்களால் மட்டுமே வேறுபட்டு நிற்கின்றோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

எனக்கு எல்லோரும் நண்பர்களே. கருத்துக்களால் மட்டுமே வேறுபட்டு நிற்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, இணையவன் said:

 (உங்களுக்கு விருப்புப் புள்ளி இட்டவர் உட்பட), உங்களுக்கு மட்டும் விளங்கிய விடயத்தை விபரமாகக் கூறுங்கள் விவாதிப்போம் 🙂.

எழுதின‌தையே தொட‌ர்ந்து எத்த‌ன‌ திரிக்குள் எழுத‌ போறீங்க‌ள் அண்ணா............ஏற்க‌ன‌வே ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் க‌ருத்துக்கு விருப்ப‌ புள்ளி இட்ட‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டுவ‌து அல்ல‌து அப்பாவி போல் சித்த‌ரிப்ப‌து................ எரியுற வீட்டுக்கு எண்ணை ஊத்தினால் அது இன்னும் ப‌த்திக்கிட்டு எரியும் அதை தான் அமெரிக்கா முன் நின்று செய்யுது.......................அமெரிக்கா உக்கிரேன் பிர‌ச்ச‌னைக்குள் மூக்கை நுழைக்காட்டி போர் எப்ப‌வோ நின்று இருக்கும்....................அமெரிக்காவுக்கு வ‌ந்தா ர‌த்த‌ம் ம‌ற்ற‌வைக்கு வ‌ந்தா த‌க்காளி ச‌ட்னி😏...................உங்கிரேன் பிர‌ச்ச‌னையில் உள்ளை ஒன்றை வைத்து பொது வெளியில் இன்னொன்றை எழுதும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌மோ அல்ல‌து ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌மோ இல்லை..............இதை வெளிப்ப‌டையா எழுத‌க் கார‌ண‌ம் அவ‌ர்க‌ளின் க‌ருத்து பிடிச்ச‌ ப‌டியால் விருப்ப‌ புள்ளிய‌ அம‌த்துறேன்..................

க‌ருத்துக்க‌ள‌த்துக்கு அப்பால் நீங்க‌ள் என் ம‌ன‌தில் ந‌ல்ல‌ ஒரு அண்ணா போல் இருக்கிறீங்க‌ள் என்ற‌தையும் இந்த‌ ப‌திவில் தெரிவித்துக் கொள்ளுறேன்................புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று நினைக்கிறேன்.............. 

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்🙏.................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

24ஆம் புலிகேசிக்கு டாங்கிகளை கொண்டுவந்து வரிசை கட்டி விடுகிறோம் என்று ஜெர்மனி பிரிட்டன் அமெரிக்காவும் ஒரு மாதம் முன்பு முண்டி அடித்தார்கள் 

இப்போ நொண்டி அடிக்கிறார்கள்.

இவர்களின் ஆயுதவியாபாரம் இத்துடன் முடிவுக்கு வருகிறதா? 
அரசியல் களம் மாறுகிறதா? ஐரோப்பிய செய்திகளில் என்ன சொல்கிறார்கள்? 

வ‌ணக்க‌ம் அண்ணா ந‌ல‌மா😍🙏

க‌ண்டு க‌ன‌ கால‌ம்...................தொட‌ர்ந்து யாழில் இணைந்து இருங்கோ...............

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

இதை விளங்கியும் விளங்காமல் நடிப்பதுதான் இவர்களின் திறமை, அமெரிக்காவின் செயல்களே உக்ரைனின் அழிவுக்கு காரணம், உலகின் முதல் எதிரி இந்த அமெரிக்கா

யேஸ் யுவ‌ர் ஆன‌ர் 
ச‌ரியா சொன்னீங்க‌ள் உடையார் அண்ணா.....................

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

03-3.jpg

02-2.jpg

உக்ரைன்... இவ்வளவு சாம்பல் மேடாகும் மட்டும், பார்த்துக் கொண்டு இருந்தது யார்?
அமெரிக்கா, ஐரோப்பா, ஐ,நா… என்று தங்களுக்கு சொந்தமாக பல சற்றலைட்டுகளை... 
உலகத்தை கண்காணிக்க வானத்தில் நிறுவி வைத்திருக்கும் போது,
இதனை கண்டு ஆரம்பத்திலேயே தடுக்காமல்...
உக்ரைனுக்கு... தொடர்ந்தும், கொம்பு சீவி விட்டுக் கொண்டிருந்தது
யார்?   😎

உக்ரைன்...  சாம்பல் மேடாகும் என்றும், ரஸ்யாவை வெல்ல முடியாது என்றும்...
சென்ற வருடமே, யாழ்.களத்தில் சொல்லி விட்டோம்.

யாழ், களத்திற்கு தெரிந்தது.... அமேரிக்கா, ஐரோப்பா, ஐ.நா.... போன்ற, மேற்குலக 
இராணுவ / அரசியல்  கண்காணிப்பாளர்கள் முன்பே கணிக்கத் தவறியது
ஏன் ?

ரஷ்யாவின் ஆயுதங்கள்... உக்கல்  ஆயுதங்கள் என்று சொன்னவர்களும்..
இந்தப் படத்தைப் பார்த்தும் தங்களின் மனநிலையை மாற்றிக் கொள்ளவும்.

மேற்கு தொடர்ந்தும், உக்ரைனுக்கு   ஆயுதம் கொடுத்தால்.... இதனைப் போல 
பல சாம்பல் மேடுகளை, உக்ரைனில் பார்க்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இங்கிலாந்து... உக்ரைனுக்கு, வெடிமருந்து கொடுத்து... 
அதன்,  கையிருப்பு...  குறைந்து விட்டதாம்.
அதனை மீள நிரப்ப இன்னும் பத்து வருடம் எடுக்குமாம்.
சொந்த நாட்டின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல்... 
உக்ரேனுக்கு அள்ளிக் கொடுத்த முட்டாள்தனத்தை என்ன வென்று சொல்வது
?

உக்ரைன் அழியும் என்று தெரிந்தே....  உக்ரேனுக்கு ஆயுதம் கொடுத்து ஊக்குவித்த...
வெள்ளைக்கார துரைமாருக்கு.... இந்த சாம்பல் மேடு சமர்ப்பணம். 🙏

இந்த படத்தை பார்த்தபோது நெஞ்சில் வலித்தது. 

இதை எவன் செய்திருந்தாலும் நாசமாகப் போகட்டும். ☹️

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

இந்த படத்தை பார்த்தபோது நெஞ்சில் வலித்தது. 

இதை எவன் செய்திருந்தாலும் நாசமாகப் போகட்டும். ☹️

ஆயுதத்தை கொடுத்து, கொம்பு சீவி  விட்டவனும் நாசமாக போக வேண்டும்.

உக்ரைன்,   கடலில் இருந்த... எரிவாயு குழாயை உடைத்து ரஷ்யாவில் பழி போட்ட  மாதிரி..
தன்னுடைய நாட்டிலேயே குண்டை போட்டு, சாம்பலாக்கி விட்டு...
ரஷ்யாவை நோக்கி குற்றம் சொல்லக் கூடிய போக்கிரித்தனம் கொண்ட நாடு அது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

இந்த படத்தை பார்த்தபோது நெஞ்சில் வலித்தது. 

இதை எவன் செய்திருந்தாலும் நாசமாகப் போகட்டும். ☹️

நீங்கள் அம்பை நோகிறீர்களா அல்லது எய்தவனை நோகிறீர்களா? 

அம்பைத்தானே ? 🤨

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

நீங்கள் அம்பை நோகிறீர்களா அல்லது எய்தவனை நோகிறீர்களா? 

அம்பைத்தானே ? 🤨

நான் பொதுவாக எவன் செய்திருந்தாலும்  என்று தான் சொன்னேன்

நீங்கள் எவரையோ  கனம் செய்வதால் மனம்  ஊசலாடுவது  தெரிகிறது?

ஆடட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

24ஆம் புலிகேசிக்கு டாங்கிகளை கொண்டுவந்து வரிசை கட்டி விடுகிறோம் என்று ஜெர்மனி பிரிட்டன் அமெரிக்காவும் ஒரு மாதம் முன்பு முண்டி அடித்தார்கள் 

இப்போ நொண்டி அடிக்கிறார்கள்.

இவர்களின் ஆயுதவியாபாரம் இத்துடன் முடிவுக்கு வருகிறதா? 
அரசியல் களம் மாறுகிறதா? ஐரோப்பிய செய்திகளில் என்ன சொல்கிறார்கள்? 

வணக்கம்  சகோ

இங்கே நீங்கள் 24ம்  புலிகேசி என்று குறிப்பிடுபவர் யார்  என  அறிய ஆவல்

உண்மையில்  அறிய வேண்டியுள்ளது

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

நான் பொதுவாக எவன் செய்திருந்தாலும்  என்று தான் சொன்னேன்

நீங்கள் எவரையோ  கனம் செய்வதால் மனம்  ஊசலாடுவது  தெரிகிறது?

ஆடட்டும் 

உங்கள் கற்பனைக் குதிரையை நான் தட்டிவிட்டுவிட்டேனோ ? 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைன்... இவ்வளவு சாம்பல் மேடாகும் மட்டும், பார்த்துக் கொண்டு இருந்தது யார்?
அமெரிக்கா, ஐரோப்பா, ஐ,நா… என்று தங்களுக்கு சொந்தமாக பல சற்றலைட்டுகளை... 
உலகத்தை கண்காணிக்க வானத்தில் நிறுவி வைத்திருக்கும் போது,
இதனை கண்டு ஆரம்பத்திலேயே தடுக்காமல்...
உக்ரைனுக்கு... தொடர்ந்தும், கொம்பு சீவி விட்டுக் கொண்டிருந்தது
யார்?   😎

உக்ரைன்...  சாம்பல் மேடாகும் என்றும், ரஸ்யாவை வெல்ல முடியாது என்றும்...
சென்ற வருடமே, யாழ்.களத்தில் சொல்லி விட்டோம்.

யாழ், களத்திற்கு தெரிந்தது.... அமேரிக்கா, ஐரோப்பா, ஐ.நா.... போன்ற, மேற்குலக 
இராணுவ / அரசியல்  கண்காணிப்பாளர்கள் முன்பே கணிக்கத் தவறியது
ஏன் ?

ரஷ்யாவின் ஆயுதங்கள்... உக்கல்  ஆயுதங்கள் என்று சொன்னவர்களும்..
இந்தப் படத்தைப் பார்த்தும் தங்களின் மனநிலையை மாற்றிக் கொள்ளவும்.

மேற்கு தொடர்ந்தும், உக்ரைனுக்கு   ஆயுதம் கொடுத்தால்.... இதனைப் போல 
பல சாம்பல் மேடுகளை, உக்ரைனில் பார்க்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இங்கிலாந்து... உக்ரைனுக்கு, வெடிமருந்து கொடுத்து... 
அதன்,  கையிருப்பு...  குறைந்து விட்டதாம்.
அதனை மீள நிரப்ப இன்னும் பத்து வருடம் எடுக்குமாம்.
சொந்த நாட்டின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல்... 
உக்ரேனுக்கு அள்ளிக் கொடுத்த முட்டாள்தனத்தை என்ன வென்று சொல்வது
?

உக்ரைன் அழியும் என்று தெரிந்தே....  உக்ரேனுக்கு ஆயுதம் கொடுத்து ஊக்குவித்த...
வெள்ளைக்கார துரைமாருக்கு.... இந்த சாம்பல் மேடு சமர்ப்பணம். 🙏

மிக அருமை சிறித்தம்பி :thumbs_up::thumbs_up::thumbs_up::thumbs_up::thumbs_up:
நீங்கள் எப்படித்தான் எழுதினாலும் உறைக்க வேண்டியவர்களுக்கு உறைக்காது.

1 hour ago, தமிழ் சிறி said:

ஆயுதத்தை கொடுத்து, கொம்பு சீவி  விட்டவனும் நாசமாக போக வேண்டும்.

உக்ரைன்,   கடலில் இருந்த... எரிவாயு குழாயை உடைத்து ரஷ்யாவில் பழி போட்ட  மாதிரி..
தன்னுடைய நாட்டிலேயே குண்டை போட்டு, சாம்பலாக்கி விட்டு...
ரஷ்யாவை நோக்கி குற்றம் சொல்லக் கூடிய போக்கிரித்தனம் கொண்ட நாடு அது.

அதே. :backhand_index_pointing_up:

11 hours ago, உடையார் said:

இதை விளங்கியும் விளங்காமல் நடிப்பதுதான் இவர்களின் திறமை, அமெரிக்காவின் செயல்களே உக்ரைனின் அழிவுக்கு காரணம், உலகின் முதல் எதிரி இந்த அமெரிக்கா

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி :clapping_hands:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தாக்கி அழிக்கப்பட்டது  உக்கிரேன். ஒரு நகரம்    மட்டுமல்ல   ரஷ்யாவின். ஆயுதம்களும். மனித சக்தியும் கூட   இருந்தும்  இந்த நகரை  ரஷ்யா நிம்மதியுடன். பயன்படுத்த முடியாது.....ஒருபோதும் பயன்படுத்த முடியாது  இதனால் என்ன பலனை காண்டார்கள்...?..காணப்போகிறார்கள்.   ? உக்ரேன் ஒரு நகரம் அழிக்கப்பட்டுள்ளது முழு உக்ரேனுமில்லை ...போர் தொடரும்   இரண்டு பகுதிக்கும்.  உலக நாடுகள் ஆயதம்  வழங்க தான் போகிறார்கள் ....ஆனால் இங்கே உக்ரேனுக்கு ஆயதம். வழங்குவது பற்றி தான் கதைக்கிறார்கள்.   ஈரான்.   சீனா இந்தியா வடகொரியா கியூபா.......போன்ற நாடுகள் ரஷ்யாவுக்கு ஆயுதம் கொடுக்கின்றானவோ  ...?. ஏன்????? ஒரு நாடு இன்னொரு நாட்டை தாக்கி அழிப்பதை ஆதரிக்கின்றார்களா??? புட்டின். கடவுள் இல்லை அவர் நினைப்பது இந்த உலகில் நடப்பதற்கு    இந்த போர் தேவையற்றது   ...இது புட்டினின். மகிழ்ச்சியை அழிக்கும்  ...உடல் ஆரோக்கியத்தை. அழிக்கும்  ....கருணாநிதி போல் வண்டியில் திரியவேண்டி வரலாம்” 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அதே. நன்றி அண்ணா 👍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

உங்கள் கற்பனைக் குதிரையை நான் தட்டிவிட்டுவிட்டேனோ ? 😀

ஆக்கிரமிப்புக்களுக்கெதிரானவை கற்பனைக்குள் வரா. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இங்கு தாக்கி அழிக்கப்பட்டது  உக்கிரேன். ஒரு நகரம்    மட்டுமல்ல   ரஷ்யாவின். ஆயுதம்களும். மனித சக்தியும் கூட   இருந்தும்  இந்த நகரை  ரஷ்யா நிம்மதியுடன். பயன்படுத்த முடியாது.....ஒருபோதும் பயன்படுத்த முடியாது  இதனால் என்ன பலனை காண்டார்கள்...?..காணப்போகிறார்கள்.   ? உக்ரேன் ஒரு நகரம் அழிக்கப்பட்டுள்ளது முழு உக்ரேனுமில்லை ...போர் தொடரும்   இரண்டு பகுதிக்கும்.  உலக நாடுகள் ஆயதம்  வழங்க தான் போகிறார்கள் ....ஆனால் இங்கே உக்ரேனுக்கு ஆயதம். வழங்குவது பற்றி தான் கதைக்கிறார்கள்.   ஈரான்.   சீனா இந்தியா வடகொரியா கியூபா.......போன்ற நாடுகள் ரஷ்யாவுக்கு ஆயுதம் கொடுக்கின்றானவோ  ...?. ஏன்????? ஒரு நாடு இன்னொரு நாட்டை தாக்கி அழிப்பதை ஆதரிக்கின்றார்களா??? புட்டின். கடவுள் இல்லை அவர் நினைப்பது இந்த உலகில் நடப்பதற்கு    இந்த போர் தேவையற்றது   ...இது புட்டினின். மகிழ்ச்சியை அழிக்கும்  ...உடல் ஆரோக்கியத்தை. அழிக்கும்  ....கருணாநிதி போல் வண்டியில் திரியவேண்டி வரலாம்” 🤣😂

2003ம் ஆண்டு அமெரிக்கா ஈராக்குள் புகுந்து சாதிச்ச‌து என்ன‌ அண்ணா......................
ஈராக் போரில் எத்த‌னை ஆயிர‌ம் ஈராக் ம‌க்க‌ளை அமெரிக்க‌ன் ப‌டைக‌ள் கொன்று குவித்தார்க‌ள் புட்டினாவ‌து ம‌னித‌ நேய‌த்தோடு ம‌க்க‌ளை கொல்லாம‌ கோமாளி செல‌ன்சிக்கு எதிராக‌ போர் செய்கிறார்......................
இப்ப‌ போய் உக்கிரேன் ம‌க்க‌ளிட்டை கேலுங்கோ செல‌ன்ஸ்கி என்ர‌ கோமாளியின் ஆட்சி தொட‌ர்வ‌தை விரும்புகிறீங்க‌ளா அல்ல‌து வெறுக்கிறீங்காளான்னு

புட்டினின் அறிவுக்கு திற‌மைக்கு புட்டினின் நாட்டு ப‌ற்றை நான் ரொம்ப‌வும் ம‌திக்கிறேன்................சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளுக்கு புட்டின் ஊட‌க‌ம் மூல‌ம் சொல்லுவ‌தை கேட்டால் புரியும் ஏன் தான் இந்த‌ போரை தொட‌ங்கினேன்  என்று

சும்மா உக்கிரேனுக்கு ஜால்ரா அடிக்கும் ஊட‌க‌ங்களில் வ‌ரும் த‌க‌வ‌ல்க‌ளை வைத்து நீங்க‌ள் எழுதினா................ப‌த்தோட‌ ப‌தின‌ஜ‌ந்தா சிரிச்சு விட்டு க‌ட‌ந்து செல்ல‌ வேண்டிய‌து தான்😂😁🤣.................

நேட்டோவில் இருக்கும் கோமாளி நாடுக‌ளுக்கு இப்ப‌ வ‌யித்தை க‌ல‌க்க‌ தொட‌ங்கிட்டு அது தான் மெது மெதுவாய் உக்கிரேன‌ க‌ல‌ட்டி விடுகின‌ம்................ஆர‌ம்ப‌த்தில் உக்கிரேனுக்கு முர‌ட்டு முட்டுக் கொடுத்த‌ இங்லாந் தொட்டு ப‌ல‌ நாடுக‌ள் அட‌க்கி வாசிக்கின‌ம்...................த‌ன‌து அர‌சிய‌லுக்காக‌ சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளை கூட‌ கொல்ல‌க் கூடிய‌வ‌ன் தான் செல‌ன்ஸ்கி....................செல‌ஸ்கிய‌ சொந்த‌ நாட்டு ம‌க்க‌ள் அடித்து விர‌ட்டினார்க‌ள் அல்ல‌து செல‌ஸ்கி நாட்டை விட்டு த‌ப்பி ஓட்ட‌ம் என்ர‌ செய்து சீக்கிர‌ம் வ‌ந்து சேரும்...................

21 hours ago, குமாரசாமி said:

இலங்கை தமிழர் விடயத்தில் சரணடைந்த பின்னர் அழித்தார்கள்.
உக்ரேன் விடயத்தில் பேச்சுவார்தையே நடக்கக்கூடாது என்ற பதத்தின் கீழ் அழிவை வாங்குகின்றார்கள்.
டொனால்ட் ரம்ப் செலென்ஸ்கிக்கு புத்திமதி சொல்ல பைடன் வந்து புட்டினை கொலையாளி என்றார். அரசியல் புரிகின்றதா?

உங்கள் அரசியல் வகுப்புக்கு நன்றி. வகுப்பெடுக்கும் சாக்கில் முள்ளிவாய்க்கால் படத்துக்கு அழிவைத் தடுக்க பிரான்ஸ் செய்ததுபோல் புலிகள் இலங்கை இராணுவத்தை எதிர்த்தது தவறா என்ற கேள்வியை விழுங்கி விட்டீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இங்கு தாக்கி அழிக்கப்பட்டது  உக்கிரேன். ஒரு நகரம்    மட்டுமல்ல   ரஷ்யாவின். ஆயுதம்களும். மனித சக்தியும் கூட   இருந்தும்  இந்த நகரை  ரஷ்யா நிம்மதியுடன். பயன்படுத்த முடியாது.....ஒருபோதும் பயன்படுத்த முடியாது  இதனால் என்ன பலனை காண்டார்கள்...?..காணப்போகிறார்கள்.   ? உக்ரேன் ஒரு நகரம் அழிக்கப்பட்டுள்ளது முழு உக்ரேனுமில்லை ...போர் தொடரும்   இரண்டு பகுதிக்கும்.  உலக நாடுகள் ஆயதம்  வழங்க தான் போகிறார்கள் ....ஆனால் இங்கே உக்ரேனுக்கு ஆயதம். வழங்குவது பற்றி தான் கதைக்கிறார்கள்.   ஈரான்.   சீனா இந்தியா வடகொரியா கியூபா.......போன்ற நாடுகள் ரஷ்யாவுக்கு ஆயுதம் கொடுக்கின்றானவோ  ...?. ஏன்????? ஒரு நாடு இன்னொரு நாட்டை தாக்கி அழிப்பதை ஆதரிக்கின்றார்களா??? புட்டின். கடவுள் இல்லை அவர் நினைப்பது இந்த உலகில் நடப்பதற்கு    இந்த போர் தேவையற்றது   ...இது புட்டினின். மகிழ்ச்சியை அழிக்கும்  ...உடல் ஆரோக்கியத்தை. அழிக்கும்  ....கருணாநிதி போல் வண்டியில் திரியவேண்டி வரலாம்” 🤣😂

போர் க‌ள‌த்தில் ச‌ர‌ன் அடைந்த‌ சிங்க‌ள‌ ராணுவ‌த்தை த‌லைவ‌ர் சிறு சித்திர‌வ‌தை கூட‌ செய்யாம‌ 

சிங்க‌ள‌ சிப்பாய்க‌ளை சுத‌ந்திர‌மாக‌ வீட்டு சிறைக்குள் சுத‌ந்திர‌மாக‌ ந‌ட‌மாட‌ விட்டார்...............2002ம் ஆண்டு ச‌மாதான‌ கால‌த்தில் விடுவிக்க‌ப் ப‌ட்ட‌ சிங்க‌ள‌ சிப்பாய்க‌ளே த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் ம‌னித‌ நேய‌ம் மிக்க‌வ‌ர்ன்னு சொன்ன‌வ‌ங்க‌ள்

கைதாகின‌ ச‌தாமின் ப‌டைக‌ளை அமெரிக்க‌ ப‌டைக‌ள் சிறைக்குள் வைத்து சித்திர‌வ‌தை செய்த்து ம‌னித‌ உயிர‌ மெது மெதுவாய் கொடுமை ப‌டுத்தி கொன்று குவித்தார்க‌ள்.....................

போர் க‌ள‌த்தில் ச‌ர‌ன் அடைந்த‌ உக்கிரேன் ப‌டைக‌ளை புட்டின் ம‌னித‌ நேய‌த்தோடு விடுவிச்சார்.................

̀

22 hours ago, குமாரசாமி said:

அதாவது ஐரோப்பா எதை ரஷ்யாவிடமிருந்து வாங்கியதோ அதை அமெரிக்கா  இரட்டிப்பு விலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விற்பனை செய்கின்றது.அது எம்மவர்க்கு  விளங்க மாட்டேன் என்கிறது.

யாருக்கும் விளங்காத உங்கள் அறிவுக்கு மட்டும் விளங்கிய அது என்ன என்று கேட்டும் பதில்லில்லை. உங்கள் முத்தான 4 வசன விளக்கத்துக்காகக் காத்திருக்கிறேன் 🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஆக்கிரமிப்புக்களுக்கெதிரானவை கற்பனைக்குள் வரா. 

வாழ்க்கையே கற்பனைதானே 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.