Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று! 

Published By: NANTHINI

19 MAR, 2023 | 02:10 PM

spacer.png

அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (19) அனுஷ்டிக்கப்படுகிறது. 

இவர் மட்டக்களப்பில், இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக நீரை மட்டுமே அருந்தி, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பெண்மணி ஆவார். 

இவரது உண்ணாவிரத போராட்டம் 1988 மார்ச் 19ஆம் திகதி தொடங்கி சரியாக ஒரு மாதத்தின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவாறே ஏப்ரல் 19ஆம் திகதி உயிர் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

https://www.virakesari.lk/article/150895

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தீயாக தீபம் அன்னை பூபதியின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் நினைவேந்தல்

Published By: VISHNU

18 APR, 2023 | 03:24 PM
image

இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் நினைவேந்தல் இன்று (18)நடைபெற்றது.

IMG-20230418-WA0041.jpg

இன்று (18.04.2023) திங்கட்கிழமை, யாழ். பல்கலை மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

IMG-20230418-WA0039.jpg

அன்னை பூபதியின் நினைவேந்தல் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகம் உள்ளிட்ட தமிழர் வாழும் தேசம் எங்கும் இவ்வருடம் நினைவேந்தப்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-20230418-WA0038.jpg

IMG-20230418-WA0037.jpg

IMG-20230418-WA0035.jpg

IMG-20230418-WA0036.jpg

https://www.virakesari.lk/article/153131

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு தின வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

🪔 அன்னை பூபதி அம்மாவிற்கு நினைவு வணக்கங்கள்.  🙏

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரில் அன்னை பூபதிக்கு அஞ்சலி

நல்லூரில் அன்னை பூபதிக்கு அஞ்சலி

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்(புதன்கிழமை) நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது.

அவர் உயிரிழந்த நேரமான 8.45 மணி முதல் தியாகத்தாயின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி  செலுத்தி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து இறுதி நினைவேந்தல் நிகழ்வு மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

இவ் நினைவேந்தலில் ஈகைச்சுடரினை தியாகத்தாய் அன்னை பூபதியின் பேத்தி ஏற்றிவைப்பார்.

23-8.jpg

23-6.jpg

23-7.jpg

23-3.jpg

23-4.jpg

23-2.jpg

23-5.jpg

23-1.jpg

https://athavannews.com/2023/1330410

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல்

Published By: VISHNU

19 APR, 2023 | 05:03 PM
image

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் நினைவேந்தல்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

 

IMG-20230419-WA0080.jpg

யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்றைய தினம் (19) புதன்கிழமை அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

IMG-20230419-WA0076.jpg

இதன்போது அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அன்னை பூபதி தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

IMG-20230419-WA0078.jpg

விரிவுரையாளர்கள், ஊழியர் சங்க பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலிகளை செலுத்தினர்.

IMG-20230419-WA0079.jpg

IMG-20230419-WA0074.jpg

IMG-20230419-WA0063.jpg

IMG-20230419-WA0073.jpg

https://www.virakesari.lk/article/153251

  • கருத்துக்கள உறவுகள்

காந்திக்கி சிலை வைக்கிற கூட்டம்.. பத்மநாபாவுக்கு சிலை வைக்கிற கூட்டம்.. இந்த அம்மாவுக்கு அஞ்சலியாவது செய்யுமா..??!

நினைவஞ்சலிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை பூபதிக்கு நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்

பூபதி அம்மாவுக்கு நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை பூபதி அம்மாவிற்கு நினைவு வணக்கங்கள்.  🙏

 
  • கருத்துக்கள உறவுகள்

தேசக்கவி  புதுவை இரத்தினதுரை ஐயா அவர்கள், அன்னை பூபதி அம்மாவை பற்றி.... கூறியது.

@நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

சாவுக்கு அஞ்சாத மனோதிடம் படைத்தவர்கள் எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றவர்கள். 
அவர்களே சரித்திரத்தையும் படைக்கிறார்கள்.

அன்னை பூபதியும் ஒரு சரித்திரத்தை படைத்தார்.
ஒரு தனித்துவமான காலத்தால் சாகாத சரித்திரத்தை படைத்தார். 

       தமிழீழ தேசியத்தலைவர் 
            மேதகு வே.பிரபாகரன்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை. பூபதி அம்மாவுக்கு 35 ஆவது நினைவு வணக்கங்கள்  🙏

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை பூபதியின் உண்ணா விரதத்துத்துக்கு செல்ல வேண்டாம் என 
இந்திய (அமைதி) ப்  படையின் எச்சரிக்கை. மீறினால் சுடப் படுவீர்கள் என மிரட்டல்.
அப்படி இருந்தும்... தமிழீழ மக்கள் திரண்டு வந்து தமது அஞ்சலியை   செலுத்தினார்கள்.

எமது போராட்டத்தை நசுக்கிய இந்தியா தான்... இப்போ எமக்கு, 
வேறு வகையில் தொல்லை தந்து சிங்களவனை காப்பாற்றிக் கொண்டுள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற அன்னை பூபதியின் 35 ம் ஆண்டு நினைவேந்தல்

Published By: VISHNU

20 APR, 2023 | 01:21 PM
image

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக அன்னை பூபதியின் 35 ம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்றது.

FB_IMG_1681897723031.jpg

நாட்டுப்பற்றாளர் தியாகச் சுடர் அன்னை பூபதியின் 35ம் ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தின்  உடையார்கட்டு பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

FB_IMG_1681897728406.jpg

முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரை மாவீரர் மேஜர் கதிரவன் அவர்களின் தந்தையார் ஏகாம்பரம் ஜயா ஏற்றினர்.

FB_IMG_1681897736945.jpg

ஈகைச்சுடரினை சமூக செயற்பாட்டாளர் முல்லை ஈசன் ஏற்றி வைத்ததை தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது.

FB_IMG_1681897710244.jpg

நிகழ்வில் உடையார்கட்டு பிரதேச வர்த்தக சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் வர்த்தகர்கள், உடையார் கட்டு பிரதேச முச்சக்கர வண்டி சங்க தலைவர் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள்,பிரதேச பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி நிகழ்வை உணர்வுபூர்வமாக சிறப்பித்தனர்.

FB_IMG_1681897712659.jpg

FB_IMG_1681897717827.jpg

FB_IMG_1681897720638.jpg

FB_IMG_1681897698358.jpg

FB_IMG_1681897702721.jpg

FB_IMG_1681897706700.jpg

FB_IMG_1681897687096.jpg

FB_IMG_1681897692423.jpg

FB_IMG_1681897694631.jpg

FB_IMG_1681897671464.jpg

FB_IMG_1681897678533.jpg

FB_IMG_1681897680544.jpg

FB_IMG_1681897684435.jpg

FB_IMG_1681897659020.jpg

FB_IMG_1681897666516.jpg

FB_IMG_1681897668684.jpg

FB_IMG_1681897647168.jpg

FB_IMG_1681897652006.jpg

FB_IMG_1681897656240.jpg

FB_IMG_1681897634643.jpg

FB_IMG_1681897637463.jpg

FB_IMG_1681897640074.jpg

FB_IMG_1681897624002.jpg

FB_IMG_1681897632413.jpg

https://www.virakesari.lk/article/153300

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.