Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை.

இஞ்சை பார்ரா......தத்துவம் :face_with_tears_of_joy:

  • Replies 66
  • Views 16.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    மலைப் பகுதியில் 6-7 மைல் போனதும் பெரிய மலையின் உச்சிக்கு ஏற்றிப் போவதற்கு கேபிள் கார்கள் ஓடிக் கொண்டே இருந்தது.மருமகன் சொந்தமாகவே சினோபோட் என்று சொல்லும் காலில் பூட்டி சறுக்கி விளையாடும் பலகை வைத்திரு

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    பனிப் பொழிவு 2                          காலை 8 மணிக்கு இறங்க வேண்டும் என்று சொன்னாலும் 10 மணிக்குத் தான் இறங்க முடிந்தது. ஏறத்தாள 3 மணிநேர பயணம்.பிள்ளைகளுடன் போவதால் நின்றுநின்று போக வேண்டும்.மதி

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    குளிர் காலங்களில் இந்த இடத்து மலைகளில் படிந்திருக்கும் பனிகள் தான் போடை காலத்தில் கரைந்து காய்ந்து போயிருக்கும் இடங்களுக்கு உயிரூட்டுவதாக சொல்கிறார்கள். கோடை காலத்தில் பனிகள் கரைந்த பின்பு மல

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், நன்றாக இருக்கு உங்கள் எழுத்து நடையும் & அனுபவ தொடரும் படங்களுடன்👍

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான அனுபவ/பயணப் பதிவு ஈழப்பிரியன் அண்ணா.  கோடை கால வாகன பயணத்தில் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் வெளிக்கிடுவது வளமை.
ஆனால் பனி காலங்களில் ஓரளவு ஏற்பாடுகள் இருக்கும், குளிருக்கு போர்க்கவென, மெழுகுதிரிகள், லைட்டர், சிறிய சவல், பூஸ்ட்டர் கேபிள், அது மாதிரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

நல்லொதொரு அனுபவப பகிர்வு. ஏழப்பிரியன் ஐயா 

இது போன மார்கழியில் குளிரான காலப்பகுதியில் நடந்த சம்பவமா?

மே, ஜுன் ஆகிய மாதங்களில்  காலனிலை எப்படி இருக்கும்? ஏனென்றால் நான் அடுத்த மாதம் லாஸ் ஏஞலஸ், சன் ப்ரான்சிச்கோ, நியூ யேர்க், ஹூஸ்டன் மற்றும் ஓர்லாண்டோ ஆகிய பகுதிகளையும் கன‌டாவின் டொரோன்டாவுக்கும் விசிட் பண்ணலாம் என இருக்கின்றேன். இப்பொழுது வெயில் காலம் ஆரம்பித்து விட்டதா? 

நன்றி கொழும்பான்.

இங்கும் கனடாவும் வைகாசி முடிந்தால் வெய்யில் காலம்.

நான் வைகாசி இங்கு நிற்கமாட்டேன்.

ஆனி 1-10 வரை நியூயோர்க்கில் நிற்பேன்.

11- 20 வட கரோலினா.

ஆனி 20 இல் இருந்து ஏறத்தாள மூன்று மாதத்துக்கு சன்பிரான்சிஸ்கோவில் நிற்பேன்.இடையில் லாஸ் அங்கிலஸ் போவேன்.ஆனால் எப்போ என்று அறுதியாக கூற முடியாது.

வரும்போது தொடர்பு கொள்ளுங்கள்.சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திப்போம்.

6 hours ago, குமாரசாமி said:

இஞ்சை பார்ரா......தத்துவம் :face_with_tears_of_joy:

வயோதிபர்களுக்கு தத்துவம் சொன்னா தான் விழங்கும்.

5 hours ago, உடையார் said:

தொடருங்கள், நன்றாக இருக்கு உங்கள் எழுத்து நடையும் & அனுபவ தொடரும் படங்களுடன்👍

நன்றி உடையார் தொடர் முடிந்துவிட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sabesh said:

சிறப்பான அனுபவ/பயணப் பதிவு ஈழப்பிரியன் அண்ணா.  கோடை கால வாகன பயணத்தில் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் வெளிக்கிடுவது வளமை.
ஆனால் பனி காலங்களில் ஓரளவு ஏற்பாடுகள் இருக்கும், குளிருக்கு போர்க்கவென, மெழுகுதிரிகள், லைட்டர், சிறிய சவல், பூஸ்ட்டர் கேபிள், அது மாதிரி.

நன்றி சபேஸ்.

நியூயோர்க்கில் வேலை செய்த காலங்களில் குளிர் -பனிவிழும் நேரங்களில் நிரந்தரமாகவே ஒரு சவலும் உப்பு போத்தலும் வைத்திருப்பேன்.எனக்கு மட்டுமல்ல வேறு யாருக்காவது உதவும் என்று வைத்திருப்பேன்.இது நிறைய பேருக்கு உதவியும் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

34a7fd98-7a28-4bab-8a8a-adc35463513e-Ori

IMG-1999.jpg

ஈழப்பிரியன், இப்போதுதான்... முழுப் பதிவையும் வாசித்து முடித்தேன்.
ஆபத்தில் சிக்கி இருந்தாலும்.. அதில் இருந்து மீண்டு 
மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வித்தையையும் தெரிந்து, 
நடந்து கொண்ட விதம்  உங்களை ஒரு பக்குவப் பட்ட மனிதராக காட்டியது.
நல்ல ஒரு அனுபவ பகிர்வு. 👍 🙂

On 7/4/2023 at 20:35, ஈழப்பிரியன் said:

மெதுவாக வரவேற்பறையில் இருந்தவளுடன் கதையைப் போட்டு கொஞ்ச பணமும் கொடுத்தேன்.சரி ஒரு 15-20 நிமிடம் இருந்துகொள் ஏதாவது செய்கிறேன் என்றாள்.சொன்னது போலவே 15வது நிமிடம் தன்னோடு கூட்டிக் கொண்டு சிற்றூண்டிச்சாலைப் பக்கம் போய் கதவைத் திறந்து எல்லாம் நாளை காலைக்காக வைக்கப்பட்டிருக்கு தேவையானதை எடு என்றாள்.

                           கூடுதலாக எடுக்காமல் பாண் பழங்கள் பிள்ளைகளுக்கு பட்டர் ஜாம் என்று எடுத்துவிட்டு இன்னும் கொஞ்சபணம் கொடுத்தேன்.சந்தோசமாக வாங்கினாள்.வேறு ஏதாவது தேவை என்றால் வரவேற்பறைக்கு வா என்றாள்.இத்தனையும் தந்ததே கடவுளைக் கண்டமாதிரி.அறையில் இரவுச் சாப்பாடு சரி.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

ஆபத்தில் சிக்கி இருந்தாலும்.. அதில் இருந்து மீண்டு 
மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வித்தையையும் தெரிந்து, 
நடந்து கொண்ட விதம்  உங்களை ஒரு பக்குவப் பட்ட மனிதராக காட்டியது.
நல்ல ஒரு அனுபவ பகிர்வு. 

நன்றி சிறி.

பல நேரங்களில் பதட்டமாகவும் பயமாகவும் இருந்தது இந்த பயணம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

நன்றி சிறி.

பல நேரங்களில் பதட்டமாகவும் பயமாகவும் இருந்தது இந்த பயணம்.

ஈழப்பிரியன்... பனி கொட்டிய  வீதியில் பயணம் என்பது,
சாரதி எவ்வளவு திறமையானவராக இருந்தாலும்...
சில வேளைகளில் எம்மை அறியாமலே தவறு நடந்து விடும்.
வீதிக்கும், வாகன சக்கரத்திற்குமான... தொடர்பு, 
எல்லா இடமும், ஒரே நிலையில் இருக்கவும் மாட்டுது.

அத்துடன் குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் எனும் போது 
பயம் இரட்டிப்பாக இருப்பது வழமைதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்... பனி கொட்டிய  வீதியில் பயணம் என்பது,
சாரதி எவ்வளவு திறமையானவராக இருந்தாலும்...
சில வேளைகளில் எம்மை அறியாமலே தவறு நடந்து விடும்.
வீதிக்கும், வாகன சக்கரத்திற்குமான... தொடர்பு, 
எல்லா இடமும், ஒரே நிலையில் இருக்கவும் மாட்டுது.

அத்துடன் குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் எனும் போது 
பயம் இரட்டிப்பாக இருப்பது வழமைதான்.

இந்த பயணத்தை நான் திட்டமிட்டிருந்தால் நிச்சயமாக தவிர்த்திருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2023 at 10:50, ஈழப்பிரியன் said:

இந்த பயணத்தை நான் திட்டமிட்டிருந்தால் நிச்சயமாக தவிர்த்திருப்பேன்.

அது உங்களின் வயது, அனுபவம்.  அவர்களும் எதிர்காலத்தில் இந்த அனுபவத்தினை பாடமாக வைத்து அதற்கேற்ற முடிவுகள் எடுப்பார்கள்.  

வயது போனாக்களின் இம்சை பெரும் இம்சையா இருக்கு 🤣

ஒரே மூச்சில் வாசித்து முடிச்சாச்சு. எமக்கும் பனியுக்குள் வாழ்க்கை என்பதால் பல விடயங்கள் என் அனுபவம் போன்றே இருந்தன. 

சாதாரண சப்பாத்துடன் போய் பனிகொட்டும் போது வெளியே இறங்க ஒரு தைரியம் வேண்டும். நான் இதுக்கென்றே இரண்டு சோடி சப்பாத்துகள் வைத்துள்ளேன்.

இங்கு இப்படி சக்கரத்துக்கு சங்கிலி கட்டும் வழக்கம் இல்லை. அனேகமானோர் Winter Tire போட்டு இருப்பார்கள். நான் இதுவரைக்கும் அப்படி Winter Tire போடவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

நன்றி நிழலி.

ஒரு கிழமை முதலே போட்ட திட்டத்தின்படி எமக்க பிள்ளைகளை பார்க்கும் வேலைத் தவிர வேறெதுவும் இல்லை.ஆதலால் பனியில் இறங்கவா போகிறோம் என்ற எண்ணம் தான்.

நானும் நியூயோர்க்கில் இதுவரை சக்கரத்துக்கு சங்கிலி போடவில்லை.எந்தளவு பனிக்குள்ளும் யாரும் கேட்கவும் இல்லை.
ஆனால் இங்கு நெடுஞ்சாலையிலேயே தடை போட்டு திருப்பியனப்புகிறார்கள்.

  • 8 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம் இதே இடத்தில் கொட்டும் பனிக்குள் அகப்பட்டு மிகவும் அவதிப்பட்டோம்.

இப்போது அதே மாதிரி பனிச்சரிவுக்குள் அகப்பட்டு ஒருவர் காலமாகியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

கடந்த வருடம் இதே இடத்தில் கொட்டும் பனிக்குள் அகப்பட்டு மிகவும் அவதிப்பட்டோம்.

இப்போது அதே மாதிரி பனிச்சரிவுக்குள் அகப்பட்டு ஒருவர் காலமாகியுள்ளார்.

ஈழப்பிரியன், இனி அந்தப் பக்கம்... தலை வைச்சும் படுக்காதேங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன், இனி அந்தப் பக்கம்... தலை வைச்சும் படுக்காதேங்கோ.

இங்குள்ள பனிமலைகளில் சறுக்கி விளையாடவென்றே பல இடங்களிலும் இருந்து நிறைய பேர் வருகிறார்கள்.

எப்ப எப்ப என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும் நீங்கள் கவனமாய் இருங்கோ........!  😁

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் கதைக்கு  @ஈழப்பிரியன்அண்ணா. இங்கு லண்டனில் வின்ரர் டயர் சங்கிலி எல்லாம் தெரியாது அடிக்கடி யுரோ பயணம் காரில் செல்வதால் வின்ரர் டயர் என்னிடமும் உண்டு ஆனால் பெரிய புதிர் என்னவென்றால் நீங்கள் குறிப்பிடும் டொராண்டோ நியுயோர்க் எல்லாத்தையும் விட இங்கிலாந்து வட மத்திய ரேகைக்கு கிட்டவாக உள்ளது ஆனாலும் வின்ரர் காலத்தில் ஒரு நாள் இரு நாள் சிலநேரம் பணியே காணாத வின்ரர் என்று கடந்து விடுகிறோம் ? 

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.