Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணையை  சோதனை செய்தது ரஷ்யா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணையை  சோதனை செய்தது ரஷ்யா

Published By: Sethu

12 Apr, 2023 | 11:00 AM
image

கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணையொன்றை தான் வெற்றிகரமாக சோதனையிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின்  கபுஸ்டின் யார் சோதனைத் தளத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

கஸகஸ்தானிலுள்ள சாறி-ஷாகன் பயிற்சி நிலையத்திலுள்ள போலி இலக்கு ஒன்றை ஏவுகணை தாக்கியதகாவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யா அச்சுறுத்தப்பட்டால் தான் அணுவாயுதத்தை பயன்படுத்த முடியும் என உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப் பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்து வருகிறார்.

அணுவாயுதங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும் பரஸ்பரம் மற்றைய நாட்டின் அணுவாயுதங்களை சோதனையிடுவதற்காகவும் அமெரிக்கா, ரஷ்யா இடையே செய்துகொள்ளப்பட்டிருந்த உடன்படிக்கையிலிருந்து ரஷ்யா விலகுவதாக கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி புட்டின் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
https://www.virakesari.lk/article/152720

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, கிருபன் said:

கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணையொன்றை தான் வெற்றிகரமாக சோதனையிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மனித அழிவு இயந்திரம் நேட்டோவிடமிருந்து ரஷ்யா தன்னை பாதுகாத்துக்கொள்ள இதை பரிசோதித்திருக்கலாம்....

1 hour ago, குமாரசாமி said:

மனித அழிவு இயந்திரம் நேட்டோவிடமிருந்து ரஷ்யா தன்னை பாதுகாத்துக்கொள்ள இதை பரிசோதித்திருக்கலாம்....

ஏன் ரஸ்யாவுக்குள் மடும்தான் மனுசர் இருக்கினமோ ? 😂

போர் தொடங்கினதில் இருந்து ரஸ்யாதான் தனது நாட்டுக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொலை செய்த்துள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து ரஸ்யாவுக்குள் பொதுமக்கள் கொல்லப்படவில்லை  (அல்லது பொதுமக்களைக் குறிவைக்காத தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருசிலர்).

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, இணையவன் said:

ஆகா வந்துவிட்டீகள்🤣, போரை தொடங்க வைத்தது யாரையா? தன் மக்களை காக்க சிறு எறும்பு கூட போராடும்👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, இணையவன் said:

ஏன் ரஸ்யாவுக்குள் மடும்தான் மனுசர் இருக்கினமோ ? 😂

போர் தொடங்கினதில் இருந்து ரஸ்யாதான் தனது நாட்டுக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொலை செய்த்துள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து ரஸ்யாவுக்குள் பொதுமக்கள் கொல்லப்படவில்லை  (அல்லது பொதுமக்களைக் குறிவைக்காத தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருசிலர்).

கொலம்பஸ் பயணம் தொடங்கினதில் இருந்து அமெரிக்கா தான் தனது நாட்டுக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொலை செய்த்துள்ளது.
அமெரிக்க வரலாறு தொடங்கியதில் இருந்துஅமெரிக்காவுக்குள்வுக்குள் பொதுமக்கள் கொல்லப்படவில்லை  (பூர்வீக குடிகள் செவ்விந்தியர்களை கொலை செய்ததை தவிர்த்து). :rolling_on_the_floor_laughing:

எழுத்துப் பிழைகள் சரி செய்யப்பட்டு மீள பதிவு செய்யப்பட்டுள்ளது. :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, இணையவன் said:

போர் தொடங்கியதில் இருந்து ரஸ்யாவுக்குள் பொதுமக்கள் கொல்லப்படவில்லை 

இந்த மேற்குலகு தன் படைகளுடன் உக்ரைனுக்குள் புகுந்து தங்கள் COWARD OPERATION நடத்துவதை அறிய மட்டீர்கள் என்றே நினைக்கின்றேன்😎,

தன் மக்களை மேற்குலகின் சதி திட்டத்திலிருந்து பாது காக்கும் புட்டின் சிறந்தவரே👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, உடையார் said:

இந்த மேற்குலகு தன் படைகளுடன் உக்ரைனுக்குள் புகுந்து தங்கள் COWARD OPERATION நடத்துவதை அறிய மட்டீர்கள் என்றே நினைக்கின்றேன்😎,

தன் மக்களை மேற்குலகின் சதி திட்டத்திலிருந்து பாது காக்கும் புட்டின் சிறந்தவரே👍

உக்ரேன் போரில் மேற்குலகின் சதித் திட்டங்கள் ஊடகங்களால் நிரூபிக்கப்பட்டும் இன்னும் இவர்கள் திருந்தும் நோக்கமில்லை போலிருக்கின்றது.:face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

உக்ரேன் போரில் மேற்குலகின் சதித் திட்டங்கள் ஊடகங்களால் நிரூபிக்கப்பட்டும் இன்னும் இவர்கள் திருந்தும் நோக்கமில்லை போலிருக்கின்றது.:face_with_tears_of_joy:

மூளைச்சலவை அந்த மாதிரி, இனி கஷ்டம்🤣🤓

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

உக்ரேன் போரில் மேற்குலகின் சதித் திட்டங்கள் ஊடகங்களால் நிரூபிக்கப்பட்டும் இன்னும் இவர்கள் திருந்தும் நோக்கமில்லை போலிருக்கின்றது.:face_with_tears_of_joy:

டொலரின் 

Just now, குமாரசாமி said:

Bild

சீச்ச்சீ, உத அமெரிக்கா செய்யவேயில். தான் செய்ததாக அமெரிக்கன் ஒத்துக்கொண்டாலும் எங்கள் ஆட்கள் அதையும் மறுதலிப்பார்கள. அந்த அளவு விசுவாசம் 🤣

14 minutes ago, உடையார் said:

இந்த மேற்குலகு தன் படைகளுடன் உக்ரைனுக்குள் புகுந்து தங்கள் COWARD OPERATION நடத்துவதை அறிய மட்டீர்கள் என்றே நினைக்கின்றேன்😎,

தன் மக்களை மேற்குலகின் சதி திட்டத்திலிருந்து பாது காக்கும் புட்டின் சிறந்தவரே👍

நீங்கள் குறிப்பிட்ட COWARD OPERATION தாக்குதலில் எத்தனை ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் ?

5 minutes ago, Kapithan said:

டொலரின் 

சீச்ச்சீ, உத அமெரிக்கா செய்யவேயில். தான் செய்ததாக அமெரிக்கன் ஒத்துக்கொண்டாலும் எங்கள் ஆட்கள் அதையும் மறுதலிப்பார்கள. அந்த அளவு விசுவாசம் 🤣

கபிதான், யாழில் யாரும் அமெரிக்காவுக்கு வெள்ளையடிக்கவோ அல்லது அமெரிக்காவின் விசுவாசமாகவோ கருத்துகள் எழுதியதாகத் தெரியவில்லை. இதே திரியில் கூட புதின் உத்தமர் என்று எழுதும் அளவுக்கு மேற்கு நாடுகள் உத்தமர் என்று நான் எழுதியதில்லை. ரஸ்யாவின் நடவடிக்கைகளுக்கு எனது எதிர்ப்பைப் பல திரிகளிலும் எழுதியுள்ளேனே தவிர மேற்கு விசுவாசி (புதின் விசிவாசி என்று பலர் யாழில் எழுதியுள்ளபோதும்) என்று எழுதியதில்லை.

மேற்கு விசுவாசிகள் என்று அடிக்கடி சீண்டும் விதமாக எழுதும் உங்கள் நோக்கம் என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணையை  சோதனை செய்தது ரஷ்யா

Published By: Sethu

12 Apr, 2023 | 11:00 AM
image

கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணையொன்றை தான் வெற்றிகரமாக சோதனையிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின்  கபுஸ்டின் யார் சோதனைத் தளத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

கஸகஸ்தானிலுள்ள சாறி-ஷாகன் பயிற்சி நிலையத்திலுள்ள போலி இலக்கு ஒன்றை ஏவுகணை தாக்கியதகாவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யா அச்சுறுத்தப்பட்டால் தான் அணுவாயுதத்தை பயன்படுத்த முடியும் என உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப் பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்து வருகிறார்.

அணுவாயுதங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும் பரஸ்பரம் மற்றைய நாட்டின் அணுவாயுதங்களை சோதனையிடுவதற்காகவும் அமெரிக்கா, ரஷ்யா இடையே செய்துகொள்ளப்பட்டிருந்த உடன்படிக்கையிலிருந்து ரஷ்யா விலகுவதாக கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி புட்டின் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
https://www.virakesari.lk/article/152720

நீங்கள்  ஏவுகணைகளை.  சோதித்துக்கொண்டிருக்க   வேண்டியது தான்......ஆனால் ஒருபோதும் பயன்படுத்தமுடியாது...காரணம்  ஏனென்றால்...உக்ரேனைவிட்டு ரஷ்யா வெளியேற முடியாது   ஆப்பு இழுத்த  மத்தி. போல்  ..ரஷ்யா படைவீரர்கள்    கொஞ்சம் கொஞ்சமாக...படிப்படியாக  பரலோகம் போவார்கள் 😂🤣

இந்த பூமி பந்தில்.   மிக மிக   சிறிய நாடுகள்   பெரிய நாடுகளை பார்த்து பயமின்றி   சுதந்திரமாக இருக்கும் நிலை  உறுதி படுத்தப்பட்டிருக்கிறது....எனவே ஆக்கிரமிப்பையும்.  ஆக்கிரமிப்பாவர்களையும்.  உறுதியுடன்.  எதிர்ப்போம்.      

  • கருத்துக்கள உறவுகள்

கசாக்ஸ்தான் ஆசியாக் கண்டம், கபுஸ்டின் யார் முன்னாள் ஸ்ராலின்கிராட்டின் அருகில், எனவே ஐரோப்பாக் கண்டம். இதுவா கண்டம் விட்டுக் கண்டம் பாய்ச்சல்?😂 காய்ஞ்ச வட கொரியாவே ஹ்வாசோங் 15 என்ற 7000 மைல் போகும் ஏவுகணை வைச்சிருக்கும் போது இப்ப தான் ரஷ்யா பக்கத்துக் கண்டத்திற்குப் பாயுதோ?😎

44 minutes ago, குமாரசாமி said:

கொலம்பஸ் பயணம் தொடங்கினதில் இருந்து அமெரிக்கா தான் தனது நாட்டுக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொலை செய்த்துள்ளது.
அமெரிக்க வரலாறு தொடங்கியதில் இருந்துஅமெரிக்காவுக்குள்வுக்குள் பொதுமக்கள் கொல்லப்படவில்லை  (பூர்வீக குடிகள் செவ்விந்தியர்களை கொலை செய்ததை தவிர்த்து). :rolling_on_the_floor_laughing:

எழுத்துப் பிழைகள் சரி செய்யப்பட்டு மீள பதிவு செய்யப்பட்டுள்ளது. :beaming_face_with_smiling_eyes:

அமெரிக்காவில் பழங்குடியினர் கொல்லப்பட்டதை யார் நியாயப்படுத்தினார்கள் ? 

எடுத்ததற்கெல்லாம் அவன் செய்தது சரியானால் இவன் செய்வதும் சரி என்ற உங்கள் விவாதம் விதண்டாவாதமாக உங்களுக்கே தெரியவில்லையா ?

அவன் பொதுமக்களைக் கொன்றான், இவன் பொதுமக்களைக் கொல்வது சரி என்பது எவ்வளவு அருவருப்பானது.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, இணையவன் said:

நீங்கள் குறிப்பிட்ட COWARD OPERATION தாக்குதலில் எத்தனை ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் ?

கபிதான், யாழில் யாரும் அமெரிக்காவுக்கு வெள்ளையடிக்கவோ அல்லது அமெரிக்காவின் விசுவாசமாகவோ கருத்துகள் எழுதியதாகத் தெரியவில்லை. இதே திரியில் கூட புதின் உத்தமர் என்று எழுதும் அளவுக்கு மேற்கு நாடுகள் உத்தமர் என்று நான் எழுதியதில்லை. ரஸ்யாவின் நடவடிக்கைகளுக்கு எனது எதிர்ப்பைப் பல திரிகளிலும் எழுதியுள்ளேனே தவிர மேற்கு விசுவாசி (புதின் விசிவாசி என்று பலர் யாழில் எழுதியுள்ளபோதும்) என்று எழுதியதில்லை.

மேற்கு விசுவாசிகள் என்று அடிக்கடி சீண்டும் விதமாக எழுதும் உங்கள் நோக்கம் என்ன ?

1) உ.ங்களைச் சீண்டுவதற்காக எழுதவில்லை. பொதுவாக மேற்குலகின் அதிதீவிர பக்தர்களைச் சுட்டி எழுதினேன். மேற்கின் விசுவாசிகள் என்று பலர் பகிரங்கமாகவே இங்கு எழுதியதை வாசிக்கவில்லையா? 

உங்களை மட்டும் குறிப்பிட்டு எழுத விரும்பினால் அதை @இணையவன்என்று எழுதுவேன். 

2) அமெரிக்காவுக்கு வெள்ளையடிக்கவோ அல்லது அமெரிக்காவின் விசுவாசமாகவோ கருத்துகளை எழுதமாட்டார்கள். ஆனால் மெதுவாக, நாசூக்காக, பட்டும்படாமல், தொட்டும் தொடாமல் கூறுவார்கள்.  சீனா, ரஸ்யா, வட கொரியா மீது கண்டணம் வைக்கும்போது எள்ளி நகையாடுவார்கள். 

ஒரு கண்ணிற்குச் சுண்ணாம்பும், மறு கண்ணிற்கு வெண்ணையும் தடவுவார்கள். 

"தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தை அழித்திட வேண்டும் " 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, இணையவன் said:

அமெரிக்காவில் பழங்குடியினர் கொல்லப்பட்டதை யார் நியாயப்படுத்தினார்கள் ? 

எடுத்ததற்கெல்லாம் அவன் செய்தது சரியானால் இவன் செய்வதும் சரி என்ற உங்கள் விவாதம் விதண்டாவாதமாக உங்களுக்கே தெரியவில்லையா ?

அவன் பொதுமக்களைக் கொன்றான், இவன் பொதுமக்களைக் கொல்வது சரி என்பது எவ்வளவு அருவருப்பானது.

சோவியத் ஒன்றியம் உடைந்து அதனுடன் பிரிந்த நாடுகள் ஒரு சோலியும் இல்லாமல் சிவனே என்றுதானே இருந்தது. அமெரிக்காவுக்கு பிரிந்த நாடுகளுடன்  தேவை வைக்க என்ன அக்கறை வந்தது?

 இப்போது அமெரிக்க கால் வைத்த நாடுகள் எவை நிம்மதியாக இருக்கின்றன?

54 minutes ago, இணையவன் said:

யாழில் யாரும் அமெரிக்காவுக்கு வெள்ளையடிக்கவோ அல்லது அமெரிக்காவின் விசுவாசமாகவோ கருத்துகள் எழுதியதாகத் தெரியவில்லை. இதே திரியில் கூட புதின் உத்தமர் என்று எழுதும் அளவுக்கு மேற்கு நாடுகள் உத்தமர் என்று நான் எழுதியதில்லை. ரஸ்யாவின் நடவடிக்கைகளுக்கு எனது எதிர்ப்பைப் பல திரிகளிலும் எழுதியுள்ளேனே தவிர மேற்கு விசுவாசி (புதின் விசிவாசி என்று பலர் யாழில் எழுதியுள்ளபோதும்) என்று எழுதியதில்லை.

மேற்கு விசுவாசிகள் என்று அடிக்கடி சீண்டும் விதமாக எழுதும் உங்கள் நோக்கம் என்ன ?

இங்கே பலர் மேற்குலக விசுவாசமாக எழுதுகின்றார்கள். அது தங்க விட்ட நன்றிக்கடனாம். ஆனால் என்னைப்போன்றவர்கள் ரஷ்ய நன்றிக்கடனாக எழுதவில்லை. மாறாக இன்றைய அரசியல் நிலையை வைத்தே எழுதுகின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

ஒரு தங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு.:face_with_tongue:
உந்த சண்டை அமர்களத்திலும் ஐயா போலந்துக்கு போனது தங்க சொகுசு ரயிலாம்.....:beaming_face_with_smiling_eyes:

33 minutes ago, குமாரசாமி said:

சோவியத் ஒன்றியம் உடைந்து அதனுடன் பிரிந்த நாடுகள் ஒரு சோலியும் இல்லாமல் சிவனே என்றுதானே இருந்தது. அமெரிக்காவுக்கு பிரிந்த நாடுகளுடன்  தேவை வைக்க என்ன அக்கறை வந்தது?

பூகோள அரசியல் அமெரிக்க சோவியத் பிரச்சனைகள் பற்றி நன்கு தெரிந்து கவலையடைகிறீர்கள். இங்கு ஹிட்லர் பற்றி கட்டுரை எழுதப்பட்டது. அதேபோல் அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றி எழுதுங்கள் நிச்சயமாக வரவேற்போம். அதைவிட்டு அங்கும் மக்கள் கொல்லப்பட்டனர் இங்கும் மக்கள் கொல்லப்படுகின்றனர் என்ற உங்களது சமப்படுத்தலை அடிக்கடி பாவிப்பதால் யாழுக்கு எந்தப் பயனும் இல்லை. 

40 minutes ago, குமாரசாமி said:

இங்கே பலர் மேற்குலக விசுவாசமாக எழுதுகின்றார்கள். அது தங்க விட்ட நன்றிக்கடனாம். ஆனால் என்னைப்போன்றவர்கள் ரஷ்ய நன்றிக்கடனாக எழுதவில்லை. 

இதைத் தலைகீழாக என்னால் நிரூபிக்க முடியும். திரியை அனாவசியமாக நீட்ட விரும்பவில்லை. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

சோவியத் ஒன்றியம் உடைந்து அதனுடன் பிரிந்த நாடுகள் ஒரு சோலியும் இல்லாமல் சிவனே என்றுதானே இருந்தது. அமெரிக்காவுக்கு பிரிந்த நாடுகளுடன்  தேவை வைக்க என்ன அக்கறை வந்தது?

 இப்போது அமெரிக்க கால் வைத்த நாடுகள் எவை நிம்மதியாக இருக்கின்றன?

இங்கே பலர் மேற்குலக விசுவாசமாக எழுதுகின்றார்கள். அது தங்க விட்ட நன்றிக்கடனாம். ஆனால் என்னைப்போன்றவர்கள் ரஷ்ய நன்றிக்கடனாக எழுதவில்லை. மாறாக இன்றைய அரசியல் நிலையை வைத்தே எழுதுகின்றோம்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. | குறள் எண் – 110

மு. வரதராசன் உரை : எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

சாலமன் பாப்பையா உரை : எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை

கலைஞர் உரை : எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

Bild

ஒரு தங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு.:face_with_tongue:
உந்த சண்டை அமர்களத்திலும் ஐயா போலந்துக்கு போனது தங்க சொகுசு ரயிலாம்.....:beaming_face_with_smiling_eyes:

இது ரஷ்யாவின்.   தப்பு கணக்குக்கு    சிறந்த நேரடியான சாட்சி    

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அதிதீவிர பக்தர்களைச் சுட்டி எழுதினேன்.

ஏன் அப்படி எழுதுகிறீர்கள்….  திரி. பற்றி எழுதும் ஆற்றல் இல்லையா  ..?????. கருத்து சுதந்திரம்  என்கிறீர்கள்   ....உங்கள் கருத்துகளுக்கு   எதிர் கருத்துகள்   எழுத முடியும் இல்லையா????.  ....அப்படி கருத்து எழுதுபவனை   ஏன்.  தாக்கி எழுதுகிறீர்கள்????. திரியுடன்....  தொடர்பாக எழுத முடியாத???. பதில்...இல்லை என்பது தெரியும்   .....ஆனாலும் கேட்க வேண்டிய கேள்விகள்    

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kandiah57 said:

நாமாவது  பக்தர்கள் 

அதே கோயிலுக்குள் இருப்பவர்கள் அவர்கள் பக்தர் அல்ல  அதற்கும் மேல...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, இணையவன் said:

பூகோள அரசியல் அமெரிக்க சோவியத் பிரச்சனைகள் பற்றி நன்கு தெரிந்து கவலையடைகிறீர்கள். இங்கு ஹிட்லர் பற்றி கட்டுரை எழுதப்பட்டது. அதேபோல் அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றி எழுதுங்கள் நிச்சயமாக வரவேற்போம். அதைவிட்டு அங்கும் மக்கள் கொல்லப்பட்டனர் இங்கும் மக்கள் கொல்லப்படுகின்றனர் என்ற உங்களது சமப்படுத்தலை அடிக்கடி பாவிப்பதால் யாழுக்கு எந்தப் பயனும் இல்லை. 

முன்னரும் இன்றும் நான் அவதானித்த அளவில்........
இப்போது என்ன சொல்ல வருகின்றீர்கள்   @இணையவன்
நான் யாழ்களத்தில் எழுதுவது உங்களுக்கு பிடிக்கவில்லை? அல்லது நான் எழுதுவதால் யாழ்களத்திற்கு பயனில்லை? இல்லையேல் உக்ரேன் சார்பாக நான் கருத்து எழுத வேண்டுமா?

கவனிக்க-; நான்  யாழ்களத்தில் இணைந்த காலம் தொடக்கம் இன்று வரைக்கும் என் எழுத்துக்கள் யாழ் இணையத்திற்கோ அல்லது  தமிழ் சமுதாயத்திற்கோ பயனடையும் என நினத்ததில்லை. ஏனெனில் உங்கள் தோழர்களிடம் இருக்கும் எழுத்து திறமை என்னிடம் இல்லை. இது யாழ்களத்தில் உலாவும்/உலாவிய உறவுகள் அனைவருக்கும் தெரியும்.

2 hours ago, இணையவன் said:

இதைத் தலைகீழாக என்னால் நிரூபிக்க முடியும். திரியை அனாவசியமாக நீட்ட விரும்பவில்லை. 🙂

சுருக்கமாக எழுதுங்கள் விளங்கிக்கொள்கிறேன். :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. | குறள் எண் – 110

நான் என்றும் எங்கும் யாழ்களத்தை விட்டுக்கொடுத்ததுமில்லை. தரம் குறைத்து பேசியதுமில்லை.யாழ்களத்தில் இருந்து கொண்டு புலிகளின் விடுதலை போராட்டத்தை தரக்குறைவாக எழுதியதுமில்லை. மாவீரர்களை கொச்சைப்படுத்தியதுமில்லை. நிர்வாகத்துடன் பிரச்சனைப்பட்டுக்கொண்டு அல்லது சக உறவுகளுடன் வாக்குவாதப்பட்டுக்கொண்டு இனி வர மாட்டேன் என சொல்லி இன்று போய் நாளை என்ற கொள்கையும் என்னிடம் இல்லை. அப்படி  ஒரு வேளை செய்தாலும் வன்மத்துடன் திரும்பி வரப்போவதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

காய்ஞ்ச வட கொரியாவே ஹ்வாசோங் 15 என்ற 7000 மைல் போகும் ஏவுகணை வைச்சிருக்கும் போது இப்ப தான் ரஷ்யா பக்கத்துக் கண்டத்திற்குப் பாயுதோ?😎

இது எல்லாம் எமது ஆட்களை உற்சாகபடுத்த தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணை என்று ரஷ்யாவின் பில்டப்.  புதின் தான் 2 நாட்களில் உக்ரேனை ஆக்கிரமித்துவிடலாம் என்று நம்பின மாதிரியே அவரது  ஈழதமிழ் பக்தர்களும்  புதின் 2 நாட்களில் ஆக்கிமித்துவிடுவார் என்று உறுதியாக நம்பினார்கள்.அவர்கள் தற்போது உற்சாகம் இழந்து உள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.