Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

முதலில் கருங்கடல் இராச்சிய போட்டி.
இப்போது செங்கடல் இராச்சிய போட்டி.

அமெரிக்காவுக்கு தங்கம் பெரிதல்ல. ஆனால் அந்த கறுப்பு தங்கத்தை கண்டால் விலகி போகவே மாட்டானுகள்.

நிற்க.....

அன்பு உறவுகளே! சூடான் அரசியல் வரலாற்றை அறிந்து கொண்டாவது கருத்தெழுத வாருங்கள். 

வானூர்தி விபத்தில் சிக்கிய அமெரிக்க இராணுவ சிப்பாயை வீதி வீதியாக இழுத்து சென்றார்களே? அது சூடான் தானே?

சோமாலியாவில் நடந்தது என கருதுகிறேன், அது தொடர்பாக ஒரு திரைப்படமும் வந்திருந்ததாக நினைவு(எனது கருத்து தவறாக இருக்கலாம்).

  • Replies 78
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, vasee said:

சோமாலியாவில் நடந்தது என கருதுகிறேன், அது தொடர்பாக ஒரு திரைப்படமும் வந்திருந்ததாக நினைவு(எனது கருத்து தவறாக இருக்கலாம்).

ஓம்.....உண்மை.👍🏼

உங்களுக்கு நன்றி.🙏🏼

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ரஞ்சித் said:

சூடானின் தங்கத்தை இங்கிலாந்து மட்டுமல்ல, புட்டின் கூட களவாடுகிறார். இங்கிலாந்து போன இடம் மட்டுமல்ல, புட்டின் போன இடங்களும் சுடுகாடுதான். 

இதே கருத்தை உக்ரேன் விடயத்திலும் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் பல இடங்கள் சுமுகமாயிருந்திருக்கும்.எமது பொது எதிரிகளும் உள்ளே நுழைந்து என்னைப் பார் என் அழைகைப் பார் என காவடியாடியிருக்க மாட்டார்கள்.

இதே கருத்தை உக்ரேன் விடயத்திலும் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் பல இடங்கள் சுமுகமாயிருந்திருக்கும்.எமது பொது எதிரிகளும் உள்ளே நுழைந்து என்னை பார் என் அழகை பார் என காவடியாடியிருக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அன்பு உறவுகளே! சூடான் அரசியல் வரலாற்றை அறிந்து கொண்டாவது கருத்தெழுத வாருங்கள். 

இது யாருக்காக என்று புரியவில்லை.

எனக்காக என்றால், ஏற்றுக்கொள்ளவில்லை. சூடான் பற்றி தெரிந்துகொண்டே எழுதுகிறேன்.

ஈராக்கின் பலூஜாவில் 2004 ஆம் ஆண்டு இரு அமெரிக்க தனியார் ராணுவ ஒப்பந்தக்காரர்களை ஈராக்கியர்கள் மறைந்திருந்து தாக்கிக் கொன்றதுடன், அவர்களை எரித்து பாலம் ஒன்றின் கீழ் கட்டித் தொங்கவிட்டார்கள்.

ஆனால் 1993 இல் சொமாலியாவில் ஐ. நா உணவு நிவாரண செயற்பாட்டினைக் கண்காணிக்க அமெரிக்க சிறப்புப்படை அங்கு அனுப்பப்பட்டது. சொமாலி ஆயுதக் குழுவின் தலைவர் முக்கம்மட் பரா ஐடீட்டைக் கைதுசெய்ய அனுப்பப்பட்ட அமெரிக்க பிளக் ஹோக் எனும் உலங்குவானூர்தியைச் சுட்டு வீழ்த்திய சொமாலி ஆயுததாரிகள் கொல்லப்பட்ட விமானியின் உடலை இழுத்துச்ச்சென்றார்கள். 

ஈராக்கில் கொல்லப்பட்டது தனியார் ராணுவம். சொமாலியாவில் கொல்லப்பட்டது அமெரிக்க ராணுவம்,  11 ஆண்டு இடைவெளியில்.

நீங்கள் இரண்டையும் போட்டுக் குழப்பி, சூடானில் வந்து நிற்கிறீர்கள் என்று நினைக்கிறேன். 

Edited by ரஞ்சித்
11

  • கருத்துக்கள உறவுகள்

சூடானில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் - ரொட்டி, கழிவறை நீர் மூலம் உயிர் வாழும் அவலம்

சூடான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முக்கிய சாராம்சம்
  • சூடானின் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படையான 'ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸுக்கும்’ (RSF) இடையே கடந்த ஒருவாரமாக மோதல் நடைபெற்று வருகிறது.
  • தலைநகர் கார்ட்டூமில் நடைபெற்று வரும் சண்டையில் இதுவரை 200 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அங்கு வாழும் மக்கள் ஊரை விட்டு புலம் பெயர்ந்து வருகின்றனர்.
  • ரமலானை ஒட்டி இருதரப்பும் 24 மணி நேரம் வரை போர் நிறுத்தத்தில் ஈடுபட ஒப்புக்கொண்டனர்.
  • நகரின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளில் அடைபட்டுள்ளனர். அவர்களில் ஏராளமான வெளிநாட்டவர்களும் உள்ளனர்.
  • 181 இந்திய குடிமக்கள் சூடானில் சிக்கியுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
  • சூடானில் 2021 ஆம் ஆண்டு முதல் சிவில் அரசுக்கு அதிகாரத்தை மாற்றக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.
  • முக்கிய சர்ச்சை, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையான 'ஆர்எஸ்எஃப்' இன் இணைப்பு பற்றியது ஆகும்.
  • பல நாட்கள் பதற்றத்திற்குப் பிறகு சமீபத்திய சண்டை மூண்டது. RSF ஜவான்களை அச்சுறுத்தலாகக் கருதும் ராணுவம், அவர்களை பணியமர்த்துவதற்கான புதிய ஏற்பாட்டை கடந்த வாரம் தொடங்கியது.
  • 2021 அக்டோபரில் சிவில்-ராணுவ கூட்டு அரசின் ஆட்சிக் கவிழ்ப்பிற்குப்பிறகு ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் சண்டையிட்டு வருகின்றன.
  • சூடானின் விமானப்படை அறுபது லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட கார்டோமில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் பொதுமக்களின் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
3 மணி நேரங்களுக்கு முன்னர்

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு இடையே தொடர்ந்து குண்டு மழை மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்து வரும் நிலையில், அங்கு 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் ஹோட்டல் அறைகள் அல்லது வீடுகளில் உணவுப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர்.

சூடானில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு, கர்நாடகாவை சேர்ந்தவர்கள் சிலரிடம் பிபிசி பேசியது. அப்போது கடுமையான துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.

சூடானின் தலைநகரான கார்டூமில் மட்டுமல்லாமல் அங்கிருந்து வெகு தொலைவில் உள்ள அல்-ஃபஷிரிலும் இந்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.

உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு

சூடான், ராணுவம், இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

"போர் நிறுத்தம் என்று சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை நம்பி சொந்த ஊருக்கு செல்ல வீடுகளில் இருந்து பலர் கிளம்பிச் சென்றனர். ஆனால் போர் நிறுத்தத்தை இருதரப்பும் பின்பற்றவில்லை. அதனால் வெளியே சென்றவர்கள் நிலை என்ன ஆனது என தெரியவில்லை," என்று பிபிசியிடம் தெரிவித்தார் சூடானில் வசிக்கும் தமிழரான ராவுத்தர்.

கடைகள் இல்லாததால், உணவு பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்படுகிறோம். பகல் முழுவதும் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்கிறது. அதனால் பொருட்கள் வாங்க வெளியே செல்லாமல் குடும்பத்துடன் வீடுகளில் முடங்கி இருப்பதாக தலைநகர் கார்டூமுக்கு அருகேயுள்ள உம்துர்மான் என்ற நகரில் சிக்கி இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராவுத்தர் தெரிவித்தார்.

கார்டூமில் இருக்கும் மற்றொரு தமிழரான ராஜ் மற்றும் அவரது நண்பர்களும் தலைநகரை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருவதாக கூறினர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உள்ளூர் மக்களை கார்டூமை விட்டு வெளியேற ராணுவம் அனுமதிக்கிறது. ஆனால் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இங்கிருந்து எங்களை வெளியே செல்ல இருதரப்பும் அனுமதிக்கவில்லை என்றார் அவர்.

"தமிழர்கள் உட்பட சூடானில் இருக்கும் இந்தியர்கள் ஒரு வாட்சாப் குழுவில் இருக்கிறோம். இந்த குழுவின் மூலமாக மீட்பு நடவடிக்கைகள் குறித்து சூடானில் உள்ள இந்திய தூதரகம் தகவல்களை எங்களிடம் தெரிவிக்கிறது. ஆனால் இப்போது வரை மீட்பு நடவடிக்கை எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை," என்றார் ராஜ்.

தலைநகரில் ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்ற போரினால் சாலைகளில் பிணங்கள் குவித்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ராஜ் கூறினார்.

"எனக்கு தெரிந்த இந்தியர்கள் சிலர் போன வாரம் வேலைக்காக சென்றனர். ஆனால் வேலை முடிந்து அவர்களின் பலர் இன்னும் திரும்பவில்லை. ஒரு வாரத்திற்கும் மேலாகி விட்டது, அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மின்சாரம் இல்லாததால் போன் சார்ஜ் செய்ய முடியாமல் மாட்டி இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை," என பிபிசியிடம் பேசிய சதீஷ் குமார் கூறினார்.

குறைவான உணவை வைத்து குடும்பத்தை பராமரித்து வருவதாக ராவுத்தர் தெரிவித்தார்.

"வீட்டில் உள்ளவர்கள் இன்னும் பயத்துடன் இருக்கிறார்கள். மின்சாரம் இல்லாததால் மோட்டார் போட்டு தண்ணீர் எடுக்க முடியவில்லை. வெளியே சென்று உணவு பொருட்கள் வாங்கவும் முடியவில்லை. கார்டூமில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது," என்று கூறினார் அவர்.

சூடானில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பல்வேறு தொழில் செய்து வருவதாகவும், சிலர் தனியார் நிறுவனங்களின் பணியாற்றுவதாகவும் ராஜ் தெரிவித்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 30 பேர் வரை இங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கழிவறை குழாய் தண்ணீர்

சூடான், ராணுவம், இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

"கடந்த வாரம் மோதல் தொடங்கியதில் இருந்து ஒரு ஹோட்டலில் நாங்கள் தங்கியுள்ளோம். இங்கு ரொட்டியும், கழிவறையில் இருக்கும் குழாயில் இருந்து வரும் தண்ணீரைக்குடித்து உயிருடன் இருக்கிறோம். இப்போது இந்த ஒரு அறையில் நாங்கள் பத்து பேர் வசிக்கிறோம்,"என்று கர்நாடகாவைச் சேர்ந்த சஞ்சு, பிபிசியிடம் கூறினார்.

"இது மிகவும் பயங்கரமாக உள்ளது. திரைப்படங்களில் பார்க்கும் துப்பாக்கிச் சூடு, குண்டுவெடிப்புகளை விட ஆபத்தான சூழ்நிலையில் நாங்கள் சிக்கி இருக்கிறோம். நாங்கள் இங்கு 31 பேர் இருக்கிறோம். நேற்று அரை மணி நேரம் ஒரு கடை திறக்கப்பட்டது. அங்கிருந்து எங்களுக்கு கொஞ்சம் அரிசி மற்றும் தண்ணீர் கிடைத்தது," என்று அல்-ஃபஷீரில் சிக்கியுள்ள பிரபு கூறினார்.

"பின்னணியில் துப்பாக்கிச் சூடு சத்தத்தை நீங்கள் கேட்கலாம். மணிக்கணக்கில் இடைவிடாமல் இது நடந்து வருகிறது,” என்று சஞ்சு கூறினார். அப்பகுதியில் மின்சாரம் இல்லாதது குறித்தும் அவர் புகார் தெரிவித்தார்.

“பக்கத்தில் உள்ள ஐந்து மாடி ஹோட்டலில் 98 பேர் இருக்கிறார்கள். நமது தூதரக அதிகாரிகள் எங்களைத் தொடர்பு கொண்டு, வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் எவ்வளவு காலம் இருக்கமுடியும்,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

சஞ்சுவும் அவரது மனைவியும் ஏப்ரல் 18 அன்று இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லவிருந்தனர், ஆனால் விமான நிலையம் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது.

”சில இடங்களில் சூடான் நாட்டு மக்கள் எங்களுக்கு உணவு வழங்கினர். இரண்டு நாட்களுக்கு முன்பு அங்குள்ள என் மகள், மருமகனிடம் பேசினேன். ஆனால் கடந்த சில நாட்களாக அவர்களுடன் பேச முடியவில்லை,"என்று கர்நாடகாவின் ஷிவமோகாவில் வசிக்கும் ஹக்கி-பிக்கி பழங்குடியினரின் முதல் பொறியாளர் குமுதா பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தியர்களின் நிலைமை என்ன?

சூடான், ராணுவம், இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூடானில் கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சூடானில் தலைநகர் கார்டூம் நகரில் இந்தியாவின் தூதரகம் அமைந்திருக்கிறது. இருதரப்பு மோதலின் போது ஆல்பர்ட் அகஸ்டின் என்ற இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதாக இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

சூடானில் நடைபெறும் மோதல் முடிவுக்கு வர சில காலம் ஆகும் என்பதால், மீட்பு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதுவரை இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடுகளில் தங்கியிருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.

சௌதியின் ஜெட்டா வழியாக சூடானில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக சௌதி அரேபியாவைச் சேர்ந்தவர்களை சூடானில் இருந்து மீட்கும் போது இந்தியா, பாகிஸ்தான், குவைத் உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த 66 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சௌதி அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

மேலும் இந்தியர்களை தாயகம் மீட்டு வர இந்திய விமானப் படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஜெட்டா விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் சுமேதா கப்பல் போர்ட் சுடானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

இந்தியர்களை பத்திரமாக மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

சூடானில் என்ன நடக்கிறது?

சூடான், ராணுவம், இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூடானில் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தது. அப்போதிருந்து அந்நாட்டை ராணுவப் படைத்தலைவர்களைக் கொண்ட ஒரு குழு நிர்வகித்து வருகிறது.

இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் சிக்கலில் பிரதானமாக இரண்டு ராணுவத் தளபதிகள் உள்ளனர். ஜெனரல் ஃபத்தா அல்-புர்ஹான், சூடானின் படைத்தலைவர். இதனால் நடைமுறைப்படி இவர் நாட்டின் ஜனாதிபதி.

அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் ஜெனரல் ஹம்தான் தாகலோ. இவர் ஹெமெத்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் சூடானின் துணை ராணுவமான Rapid Support Forces இன் (RSF) தலைவர்.

இருவருக்கும் இடையே நாடு செல்லும் திசை, ஜனநாயக அரசினை அமைப்பது போன்ற விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

இருவருக்குமிடையே முக்கியமான பிரச்சனைகள் RSFஇன் ஒரு லட்சம் வீரர்களை ராணுவத்தில் இணைப்பதும், அப்படி நடந்தால், படைகளுக்கு யார் தலைமை தாங்குவது ஆகியவை.

இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்னை கடந்த வாரம் மோதலாக வெடித்தது. இருதரப்புக்கும் இடையே நடக்கும் மோதலிலின் காரணமாக 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

ராணுவ ஆட்சி ஏன்?

சூடான், ராணுவம், இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

2019ஆம் ஆண்டு, சூடானின் நீண்டநாள் அதிபராக இருந்த ஒமர் அல்-பஷீர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அப்போதிருந்து நிலவிவந்த இறுக்கத்தின் சமீபத்திய விளைவுதான் இந்த மோதல்.

பஷீர் அதிபராக இருந்தபோது, 30 ஆண்டுகளுக்குமேல் நீண்டு கொண்டிருந்த அவரது ஆட்சிக்கு முடிவுவேண்டி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ராணுவம் அவருக்கு எதிராக ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்தியது.

அதன்பின்னும், ஜனநாயக அரசுவேண்டி மக்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

அதைத்தொடர்ந்து, மக்களும் ராணுவமும் இணைந்த ஒரு அரசு நிறுவப்பட்டது. ஆனால் இதுவும் 2021ஆம் அண்டு நிகழ்ந்த ஒரு ஆட்சிக்கவிழ்ப்பினால் வீழ்த்தப்பட்டது.

அப்போதிருந்து ஜெனரல் புர்ஹான் மற்றும் ஜெனரல் தாகலோ ஆகியோருக்கு இடையேயான போட்டி தீவிரமடைந்து வந்திருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம், ஜனநாயக அரசினை நிறுவுவதறகான ஒரு ஒப்பந்தம் சம்மதமானது, ஆனால் இறுதிகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

https://www.bbc.com/tamil/articles/c4njql0jv8po

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் இரண்டையும் போட்டுக் குழப்பி, சூடானில் வந்து நிற்கிறீர்கள் என்று நினைக்கிறேன். 

ஓம்...

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரஞ்சித் said:

சூடானின் தங்கத்தை இங்கிலாந்து மட்டுமல்ல, புட்டின் கூட களவாடுகிறார். இங்கிலாந்து போன இடம் மட்டுமல்ல, புட்டின் போன இடங்களும் சுடுகாடுதான். 

https://edition.cnn.com/2023/04/20/africa/wagner-sudan-russia-libya-intl/index.html

இது உங்கள் கருத்தா அல்லது CNN இல் வந்த கருத்தா, மொழிபெயர்ப்பென்ற ரீதியில் வாசகர்களை நன்றாக குழப்புகின்றீர்கள்🤣,  அமெரிக்கா போன நாடுகளில் செல்வச் செழிப்பாக வாழுகின்றார்களா இப்ப?, இது இந்த திரிக்கு சம்பந்தமில்லை, தொடங்கி வைத்தவர் நீங்கள் என்பாதால் கேட்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

இறுதிப் பந்தி மட்டும் எனது சொந்தக் கருத்து. மீதி சி என் என் இன் தமிழ் மொழிபெயர்ப்பு. ஆங்கில மூலத்தை இணைத்திருக்கிறேன், தேவையென்றால் சரிபார்க்கலாம். 

2 hours ago, உடையார் said:

இது உங்கள் கருத்தா அல்லது CNN இல் வந்த கருத்தா, மொழிபெயர்ப்பென்ற ரீதியில் வாசகர்களை நன்றாக குழப்புகின்றீர்கள்🤣,  அமெரிக்கா போன நாடுகளில் செல்வச் செழிப்பாக வாழுகின்றார்களா இப்ப?, இது இந்த திரிக்கு சம்பந்தமில்லை, தொடங்கி வைத்தவர் நீங்கள் என்பாதால் கேட்கின்றேன்

செல்வச் செழிப்புப் பற்றி எதுவும் கூறவில்லையே? ஏன் கேட்கிறீர்கள் என்றுபுரியவில்லை. அமெரிக்காவிலும் வறியவர்கள் வாழ்கிறார்கள். அண்மையில் டிற்றொயிட் பகுதியில் பல காலம் வாழ்ந்துவிட்டு வந்த ஒருவருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பகுதி கறுப்பினத்தவர்கள் அதிகம் வாழும் பகுதி. கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறார்கள் என்று கூறுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Eppothum Thamizhan said:

அல்கொய்தா பின்லேடன் எல்லாரும் அங்கதான் இருக்கினம் எண்டு முதலில் குண்டு போட்டதிலிருந்து இப்பவும் தென் சூடானின் ஒரு பகுதியினருக்கு எல்லா உதவியும் அமரிக்காதானே செய்துகொண்டிருக்கு!

நன்றி எப்போதும் தமிழன்!

பின்லாடனும், கார்லோசும் சூடானில் இருந்திருக்கிறார்கள், ஆனால் 1990 களில், இவர்கள் இருக்கிறார்கள் என்று அமெரிக்கா குண்டெல்லாம் வீசவில்லை. பயங்கரவாதிகளுக்கு ஆதரவான நாடெனப் பொருளாதாரத் தடை விதித்தது 1997 இல். 1998 இல்  கிழக்காபிரிக்காவில் அமெரிக்க தூதரகங்களைத் தாக்கியோர் சூடானிலிருந்து வந்தவர்கள் என்பதால் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது ("சும்மா இருப்பவனைச் சொறிஞ்சால் அவனும் சொறிவான் தானே?" ).

ஆனால், 9/11 இற்குப் பின்னர் நிலைமை தலைகீழ், பின் லாடனை வெளியேற்றி விட்டு அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது சூடானின் தலைமை. 2011 இல் அமெரிக்காவின் ஏற்பாட்டில் தான் தென் சூடான் பிரச்சினை சுமூகமாகத் தீர்க்கப் பட்டது, அவர்கள் தனி நாடாக உருவானார்கள் (நமக்கு இதில் பாடமிருக்கிறது?).

சுருக்கமாக, சூடானில் அமெரிக்காவின் வகிபாகம், லிபியா, ஈராக் லெவலுக்கு சொல்லப் படக்கூடிய அமெரிக்க ஆக்கிரமிப்பு அல்ல. மாறாக ஒரு உள்நாட்டுப் போரைத் தீர்த்து வைத்தனர், எனவே பொசிரிவான பங்களிப்பு.

அப்படியே, இப்போது நடக்கும் பிரச்சினையில், எந்த தரப்பின் பக்கம் ரஷ்யா, சீனா (மறைமுகமாக) நிற்கிறது, அமெரிக்கா எங்கே நிற்கிறது என்பதையும் எங்களுக்குச் சொல்லி விடுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அப்படியே, இப்போது நடக்கும் பிரச்சினையில், எந்த தரப்பின் பக்கம் ரஷ்யா, சீனா (மறைமுகமாக) நிற்கிறது, அமெரிக்கா எங்கே நிற்கிறது என்பதையும் எங்களுக்குச் சொல்லி விடுங்கள்!

The U.S. embassy has about 70 U.S. staff members, and there are an estimated number of 16,000 Americans living in Sudan.

இவ்வளவு அமெரிக்கர்கள் அங்கு இருக்கும்போது யார் யார் எந்தெந்த பக்கம் நிற்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Eppothum Thamizhan said:

தேவையில்லாமல் மற்றவனை சொறிஞ்சால் அவனும் திருப்பி சொறியத்தான் செய்வான்! அமெரிக்காக்காரன் தன வேலை முடிய தங்கடை ஆட்களை எல்லாம் கூட்டி கொண்டு ஓடிவந்திட்டான்! இனி அவங்கள் தங்களுக்குள் அடிபட்டு சாக வேண்டியதுதான். இதென்ன புதுசா ? ஈராக், லிபியா எல்லாம் இதே தான்!

தேவையில்லாமல் சொறிஞ்சால்???

இதே வாய் தான் உக்ரேனை ரசியா  சொறியலாம்  என்றும் சொல்கிறது?

பெரியவனுக்கு  பணிந்து  போகணும் என்றும் சொல்கிறது

அமெரிக்க  கோபுரத்தை  தகர்த்து 

தகர்த்தவனை தரமாட்டோம் என்று  சொன்னாலும் பெரிய  தடியை  வைத்திருப்பவன் திருப்பி  சொறியக்கூடாது  என்றும் சொல்கிறது?

இப்ப  நான்  என்ன  பண்ணும்???

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Eppothum Thamizhan said:

The U.S. embassy has about 70 U.S. staff members, and there are an estimated number of 16,000 Americans living in Sudan.

இவ்வளவு அமெரிக்கர்கள் அங்கு இருக்கும்போது யார் யார் எந்தெந்த பக்கம் நிற்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையாக்கும்.

ஒரு நாட்டில் தங்கி நிற்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை எப்படி அந்த நாட்டில் அமெரிக்க அரசு எடுக்கும் பங்கை எடுத்துக் காட்டும் என எனக்கு விளங்கவில்லை. சூடான், நிலை (Level) 4 பயண எச்சரிக்கை கொண்ட நாடு (பயணத்தைத் தவிருங்கள் என்பதே நிலை 4 எச்சரிக்கை). ஆனால், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அதிகம் இருக்கும் சூடான் போன்ற நாடுகளுக்கு அமெரிக்கர்கள் செல்வதை அமெரிக்க அரசு தடுக்க வழியேதும் இல்லை.

ஆனால், ஏதாவது வெளிப்படையான சமிக்ஞைகள் அமெரிக்க அரசு சார்பில் சூடான் தரப்புகள் சார்ந்து வெளிப்பட்டிருக்கின்றனவா?  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உக்ரேன்,சூடான்,தாய்வான்  நெருக்கடிகள் மூலம் அமெரிக்க பணத்தின் பெறுமதி பறிக்கப்படும்.
அமெரிக்க டொலரை இனி பயன்படுத்தமாட்டோம் என பல நாடுகள் நாசுக்காக சமிக்கை காட்ட ஆரம்பித்து விட்டன. முக்கியமாக சவூதி அரேபியா....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உக்ரேன்,சூடான்,தாய்வான்  நெருக்கடிகள் மூலம் அமெரிக்க பணத்தின் பெறுமதி பறிக்கப்படும்.
அமெரிக்க டொலரை இனி பயன்படுத்தமாட்டோம் என பல நாடுகள் நாசுக்காக சமிக்கை காட்ட ஆரம்பித்து விட்டன. முக்கியமாக சவூதி அரேபியா....

கடந்த ஆண்டு யாழில் அமெரிக்க உலக ஏகாதிபத்திய உலக ஒழுங்கு 20 - 25 வருடங்களில் முடிவுக்கு வரும் என விவாதிக்கப்பட்ட போது, அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் சீனா, இந்தியா போன்ற நாடுகளை இந்த பக்கமா அந்த பக்கமா என அச்சுறுத்தி கொண்டிருந்தன.

இரஸ்சியாவினுடன் வர்த்தக தொடர்புடைய நாடுகளுக்கும் வர்த்தக தடை பாயக்கூடும் என இரஸ்சிய தொடர்புடைய நாடுகள் அச்சமுற்றிருந்த காலம்.

தற்போது ஐரோப்பாவிற்குள்ளேயே எல்லாவற்றுக்கும் அமெரிக்காவினை பிந்தொடரக்கூடாது எனும் கருத்துகள் எழ தொடங்கிவிட்டது.

இரஸ்சியாவின் மேல் அடுத்த கட்ட பொருளாதார தடை பற்றி விவாதித்து கொண்டிருக்கும் போது, இந்தியா இரஸ்சியாவுடன் தனது தங்கு தடையற்ற வர்த்தகம் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

உலகு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியே இந்த புதிய நிலைப்பாட்டினை நோக்கி அணிசாரா நாடுகளை தள்ளியுள்ளது.

வளங்கள் நிறைந்த ஆபிரிக்க நாடுகளில் ஏற்படுள்ள உள்நாட்டு கலவரங்களுக்கு காரணமான வறுமைக்கு காரணம் தற்போதய நடைமுரையுள்ள சுரண்டல் நிறைந்த உலக மயமாக்கல் கொள்கையே எனும் நிலைக்கு கொண்டுவந்து விட்டார்கள் ஒரு நல்ல கொள்கையினை.

2 ஆம் உலக போர் முடிவு இனி ஒரு போரில்லாத (வளங்களுக்காக நாடுகளை அபகரிக்கும் நிலை) சூழலை உருவாக்க பொருளியலாளர்கள் முயற்சியுடன் பிரட்டன்வூட் தீர்மானம் ஏற்படுத்தப்பட்டது, ஆனால் அதனை சிலர் தவறாக பயன்படுத்தி உலகில் பஞ்சத்தினை உருவாக்கிவிட்டார்கள்.

இதில் பெருமளவில் பாதிக்கப்படது வளங்கல் நிறைந்த ஆபிரிக்க நாடுகளே.

பின்னர் இந்த  நாடுகளில் தொண்டு நிறுவனங்கள் உதவி எனும் நாடகங்களையும் அதற்கு காரணமானவர்களே அரங்கேற்றுவது மிகவும் கொடுமை. 

டொலரினை பொறுத்தவரை பொருளாதாரத்திற்கு முக்கியமான எரிபொருள் மீதான டொலரின் பங்களிப்பு முற்றாக முடிவடையும் போது அமெரிக்க பொருளாதாரமும் இலங்கை பொருளாதாரம் போல மாறிவிடும்.

தற்போது கிட்டதட்ட அமெரிக்க பாதுகாப்பு செலவுக்கு ஈடான தொகை அளவில் கடனுக்கு வட்டி கட்டுகிறது அமெரிக்கா.

பல  நாடுகள் அமெரிக்க நாணயத்தினை தமது வெளிநாட்டு செலாவணியாக பயன்படுத்தாவிட்டால் தற்போதுள்ள அமெரிக்காவின் கிரெடிட் ரேற்றிங்கில் மாற்றம் ஏற்படும், அடுத்த நாடுகளில் பொருளாதார நலனில் ஒரு சிறு பகுதியினை அனுபவித்த நிலை இல்லாமல் போகும், உலக வர்த்தக முதனிலை இழக்கப்படும், பொருளாதார வர்த்தக மையம் மாறும்நிலை ஏற்படும், தற்போது புழக்கத்திலுள்ள டொலர் பொருளாதாரத்திற்கு சுமையாக மாறி பொருளாதாரத்தினை அழித்துவிடலாம்.

எனது கருத்து தவறாக இருக்கலாம், ஆனால் அன்னிய செலவாணி எனும் நிலையிலிருந்து அமெரிக்கா சிறிது தளர்வடைந்தாலும் அதன் தற்போதய உலக ஒற்றை தலமை கொண்ட இந்த உலக ஒழுங்கு முடிவுக்கு வரும், அப்படி பார்த்தால் 20 - 25 வருடம் வரை எல்லாம் அமெரிக்கா தாக்குபிடிக்காது என உறுதியா நான் நம்புகிறேன்(இது எனது சொந்த கருத்து).

அதன் பின் உருவாகும் புதிய உலக ஒழுங்கு நல்லதாக மட்டுமே இருக்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமில்லை, ஆனால் வரலாற்றில் இருந்து பாடம் கற்று சுரண்டல் அற்ற, பட்டினி அற்ற, போர் அற்ற அமைதியான மாற்றம் வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

வசி, சில விடயங்களை மதில் மேலே பூனையாக "தவறாயிருக்கலாம்" என்ற தடுமாற்றமில்லாமல் ஆதாரங்களுடன் சொல்ல முயலலாமே? எனக்கு macroeconomics பரிச்சயமில்லை, ஆனால் இந்த டொலர் பெறுமானம் குறைவது, டொலர் சேமிப்பு நாணயமாக இல்லாமல் போவது இது பற்றி சில கட்டுரைகளை வாசித்த அளவில், நீங்கள் சொல்லும் பல விடயங்களுக்கு ஆதாரங்கள் இருப்பது போல தெரியவில்லை. சில விடயங்களை விளக்குங்கள் நம் போன்ற பாமரர்கள் புரிந்து கொள்ள:

1. தவறான நிதிக் கொள்கையால் எப்படி ஆபிரிக்கா பஞ்சமடைந்தது? நான் அறிய காலநிலையில் வரண்ட சஹாராவுக்குக் கீழான (sub-Saharan) ஆபிரிக்கா, கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் பஞ்சம் வர உள்நாட்டுப் போர்களும் கூடக் காரணம். இதை எப்படி நிதிக் கொள்கை உருவாக்கியது?

2. சுயெஸ் கால்வாய் பிரச்சினையின் பின், பிரிட்டன் ஸ்ரேர்லிங் பவுண்சின் உலக மேலாண்மை நிலை இல்லாமல் போனது, ஆனால் பிரிட்டன் சிறிலங்கா போல ஆகவில்லையே? பிரிட்டனின் வளர்ச்சியும் நிற்கவில்லையே? இது அமெரிக்காவிற்கும் பொருந்துமா அல்லது கஷ்டமா?

3. அமெரிக்காவின் டொலர் மீது உலகம் வைக்கும் நம்பிக்கை, உண்மையில் அமெரிக்காவின் அரசமைப்பு, சட்ட ஆட்சி என்பவற்றிலிருந்து உருவாவதாகச் சொல்கிறார்களே? அதாவது, வெளிப்படைத்தன்மை இல்லாத மோடியின் இந்திய ரூபாய் மீதோ, சீனாவின் ஈ-யுவான் நாணயம் மீதோ, ஸ்திரமான வருமானம் வேண்டும் நாடுகள் நம்பிக்கை வைக்குமென வரலாற்றில் ஏதாவது ஆதாரங்கள் உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

சூடானில் சிக்கியிருந்த 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேர் மீட்பு!

சூடானில் சிக்கியிருந்த 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேர் மீட்பு!

சூடானில் சிக்கியிருந்த 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை மீட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 11 நாட்களாக இராணுவம் மற்றும் துணை இராணுவத்திற்கு இடையே நடைபெறும் மோதலால், பொதுமக்கள் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர்.

அனைத்து நாடுகளும் தங்களது மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகளை பாதுகாப்பாக வெளியேற்றியது.

அதேபோல், நேற்று இரவு 388 பேரை இரண்டு இராணுவ விமானங்கள் மூலம் பத்திரமாக மீட்டதாக, இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்தது.

இதேபோல் சவுதி அரேபியாவும் நட்பு நாடுகளை சேர்ந்த 66 பேரை மீட்டுள்ளது.

ஜேர்மனி, இத்தாலி, கனடா, ஸ்பெயின் உட்பட பல நாடுகள் தங்களது அதிகாரிகள் மற்றும் குடிமக்களை மீட்டு வருகின்றன.

https://athavannews.com/2023/1330779

  • கருத்துக்கள உறவுகள்

சூடானில் 72 மணித்தியால போர் நிறுத்தம்

sudan.jpg

சூடானில் நேற்று(24) நள்ளிரவிலிருந்து 72 மணித்தியால போர் நிறுத்தத்திற்கு மோதலில் ஈடுபடும் தரப்பினர் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

சூடானிய இராணுவம் மற்றும் RSF எனப்படும் துணை இராணுவப் படை ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று 48 மணித்தியாலங்களின் பின்னர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூடானில் இந்த மாதம் மோதல்கள் ஆரம்பித்ததன் பின்னர் அறிவிக்கப்படும் மூன்றாவது போர் நிறுத்தமாக இது அமைந்துள்ளது.

இந்த மோதல்கள் காரணமாக 400 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமது இராஜதந்திரிகள் மற்றும் பிரஜைகளை வௌியேற்றும் நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/250557

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

எனக்கு macroeconomics பரிச்சயமில்லை, ஆனால் இந்த டொலர் பெறுமானம் குறைவது, டொலர் சேமிப்பு நாணயமாக இல்லாமல் போவது இது பற்றி சில கட்டுரைகளை வாசித்த அளவில், நீங்கள் சொல்லும் பல விடயங்களுக்கு ஆதாரங்கள் இருப்பது போல தெரியவில்லை. சில விடயங்களை விளக்குங்கள் நம் போன்ற பாமரர்கள் புரிந்து கொள்ள:

1. தவறான நிதிக் கொள்கையால் எப்படி ஆபிரிக்கா பஞ்சமடைந்தது? நான் அறிய காலநிலையில் வரண்ட சஹாராவுக்குக் கீழான (sub-Saharan) ஆபிரிக்கா, கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் பஞ்சம் வர உள்நாட்டுப் போர்களும் கூடக் காரணம். இதை எப்படி நிதிக் கொள்கை உருவாக்கியது?

2. சுயெஸ் கால்வாய் பிரச்சினையின் பின், பிரிட்டன் ஸ்ரேர்லிங் பவுண்சின் உலக மேலாண்மை நிலை இல்லாமல் போனது, ஆனால் பிரிட்டன் சிறிலங்கா போல ஆகவில்லையே? பிரிட்டனின் வளர்ச்சியும் நிற்கவில்லையே? இது அமெரிக்காவிற்கும் பொருந்துமா அல்லது கஷ்டமா?

3. அமெரிக்காவின் டொலர் மீது உலகம் வைக்கும் நம்பிக்கை, உண்மையில் அமெரிக்காவின் அரசமைப்பு, சட்ட ஆட்சி என்பவற்றிலிருந்து உருவாவதாகச் சொல்கிறார்களே? அதாவது, வெளிப்படைத்தன்மை இல்லாத மோடியின் இந்திய ரூபாய் மீதோ, சீனாவின் ஈ-யுவான் நாணயம் மீதோ, ஸ்திரமான வருமானம் வேண்டும் நாடுகள் நம்பிக்கை வைக்குமென வரலாற்றில் ஏதாவது ஆதாரங்கள் உண்டா?

அண்மையில் இந்த திரியில் சில விடயங்களை கூறப்பட்டுள்ளது.

இந்த திரி மட்டுமல்ல வேறு பிற திரிகளிலும் இது பற்றி முன்னர் கூறப்பட்டுள்ளது, அதனால் சுருக்கமாக கூறுகிறென்

2 ஆம் உலக யுத்தத்திற்கு முன்னர் பெரும்பாலான நாடுகள் மூடிய பொருளாதார கொள்கையுடன் தன்னிறைவு பொருளாதாரமுள்ள நாடுகளாக விளங்கின 2 ஆம் உலக யுத்தத்தின் பின்னர் திறந்த பொருளாதார கொள்கை உலகில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரடென்வூட் தீர்மானம் உருவாக்கப்பட்ட போது அமெரிக்காவிடம் அதிக தங்க இருப்பும் உலக வர்த்தக வகிபாகத்தில் பெரும்பங்கு காணப்பட்டமையால் அமெரிக்க நாணயம் உலக வர்த்தக நாணயமானது.

இலங்கை தனது கடனை செலுத்த முடியாது என தெரிவித்த போது அதன் கடன் மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) 105% விகிதத்திற்கு அதிகமாக இருந்தது, அமெரிக்காவின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியில்(GDP) 123% தற்போது உள்ளது.

அதாவது வருமானத்திற்கு அதிகமாக செலவழிப்பது.

4 hours ago, Justin said:

வசி, சில விடயங்களை மதில் மேலே பூனையாக "தவறாயிருக்கலாம்" என்ற தடுமாற்றமில்லாமல் ஆதாரங்களுடன் சொல்ல முயலலாமே?

துறைசார் கல்வியறிவில்லை , ஆனால் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபடுவதால் பொருளாதாரம் பற்றி தெரிந்து கொண்டுள்ளேன் அவ்வளவுதான், ஆனால் நான் அந்த தரவுகளை நான் எனது வர்த்தக  நடவடிக்கைகளில் பயன்படுத்துவதில்லை(Fundamental analysis).

நான் பயன்படுத்துவது Technical analysis.

அத்துடன் புள்ளி விபரங்களை மறந்து விடுவதுண்டு, எந்த புத்தகத்தில் வாசித்தது என்பதும் மறந்துவிடும், இந்த ஆதாரங்கள் உண்மையானவையா என்பதும் தெரியாது, அத்துடன் எனது கருத்து வெறும் கருத்து, சரியாகத்தான் இருக்கும் என்பதில்லை.

மன்னிக்கவும் சுருக்கமாக பதில் கூறியமைக்கு முடிந்தவரை சுருக்கமாக கூற முனைவதால் சில சமயம் சரியான புரிதலை கொடுக்காது ஆனால் மேலும் குழப்பமாகிவிடும், அவ்வாறு குழப்பியிருந்தால் குறிப்பிடவும், நன்றி.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, vasee said:

அண்மையில் இந்த திரியில் சில விடயங்களை கூறப்பட்டுள்ளது.

இந்த திரி மட்டுமல்ல வேறு பிற திரிகளிலும் இது பற்றி முன்னர் கூறப்பட்டுள்ளது, அதனால் சுருக்கமாக கூறுகிறென்

2 ஆம் உலக யுத்தத்திற்கு முன்னர் பெரும்பாலான நாடுகள் மூடிய பொருளாதார கொள்கையுடன் தன்னிறைவு பொருளாதாரமுள்ள நாடுகளாக விளங்கின 2 ஆம் உலக யுத்தத்தின் பின்னர் திறந்த பொருளாதார கொள்கை உலகில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரடென்வூட் தீர்மானம் உருவாக்கப்பட்ட போது அமெரிக்காவிடம் அதிக தங்க இருப்பும் உலக வர்த்தக வகிபாகத்தில் பெரும்பங்கு காணப்பட்டமையால் அமெரிக்க நாணயம் உலக வர்த்தக நாணயமானது.

இலங்கை தனது கடனை செலுத்த முடியாது என தெரிவித்த போது அதன் கடன் மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) 105% விகிதத்திற்கு அதிகமாக இருந்தது, அமெரிக்காவின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியில்(GDP) 123% தற்போது உள்ளது.

அதாவது வருமானத்திற்கு அதிகமாக செலவழிப்பது.

துறைசார் கல்வியறிவில்லை , ஆனால் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபடுவதால் பொருளாதாரம் பற்றி தெரிந்து கொண்டுள்ளேன் அவ்வளவுதான், ஆனால் நான் அந்த தரவுகளை நான் எனது வர்த்தக  நடவடிக்கைகளில் பயன்படுத்துவதில்லை(Fundamental analysis).

நான் பயன்படுத்துவது Technical analysis.

அத்துடன் புள்ளி விபரங்களை மறந்து விடுவதுண்டு, எந்த புத்தகத்தில் வாசித்தது என்பதும் மறந்துவிடும், இந்த ஆதாரங்கள் உண்மையானவையா என்பதும் தெரியாது, அத்துடன் எனது கருத்து வெறும் கருத்து, சரியாகத்தான் இருக்கும் என்பதில்லை.

மன்னிக்கவும் சுருக்கமாக பதில் கூறியமைக்கு முடிந்தவரை சுருக்கமாக கூற முனைவதால் சில சமயம் சரியான புரிதலை கொடுக்காது ஆனால் மேலும் குழப்பமாகிவிடும், அவ்வாறு குழப்பியிருந்தால் குறிப்பிடவும், நன்றி.

தொடர்ந்து எழுதுங்கள்

ஆனால் இதுவும் சரியில்லை அதுவும் சரியில்லை என்பது முதலுக்கே மோசமாகிவிடும். 

இந்தியா சீனா ரசியா தான் அடுத்த தலைமை என்றால் பிச்சை வேண்டாம் நாயைப் பிடியுங்கள் என்ற கதை தான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இந்தியா சீனா ரசியா தான் அடுத்த தலைமை என்றால் பிச்சை வேண்டாம் நாயைப் பிடியுங்கள்

👍

சிறப்பான அறிவுரை.

  • கருத்துக்கள உறவுகள்

சூடானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அடுத்த சில நாட்களில் பாதுகாப்பாக வெளியேற்ற முடியும் - அலிசப்ரி

Published By: RAJEEBAN

25 APR, 2023 | 12:16 PM
image

சூடானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அடுத்த சில நாட்களில் பாதுகாப்பாக வெளியேற்ற முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி  தெரிவித்துள்ளார்

டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

சூடானில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் மோதல்களை முடிவிற்கு கொண்டுவருமாறு மோதலில் ஈடுபட்டுள்ளவர்களை கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தைகளிற்கு முன்னுரிமை வழங்குவதே சாத்தியமான நிரந்தரமான தீர்வு என தெரிவித்துள்ள அலிசப்ரி சூடான் மக்களிற்கு அமைதி சமாதானம் ஸ்திரதன்மை முன்னேற்றம் போன்றவை கிட்டவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சூடானில் உள்ள இலங்கையர்களின் நிலைமையை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து கவனம் செலுத்துகின்றோம் எனவும்  குறிப்பிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இந்த விடயத்தில் இந்தியா வழங்கிய உதவிகளை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஒரு சில நாட்களில்  சூடானில் சிக்குப்பட்டுள்ள இலங்கையர்களை  பாதுகாப்பாக வெளியேற்ற முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளோம் எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/153695

  • கருத்துக்கள உறவுகள்

சூடான் தாக்குதல்: மோதலின் மையப்புள்ளிகளான ஜெனரல்கள் புர்ஹான் மற்றும் ஹெமெத்தி

ராணுவ ஜெனரல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜேம்ஸ் கோப்னால்
  • பதவி,பிபிசி
  • 24 ஏப்ரல் 2023

எப்போது கேட்டாலும் வெடிச்சத்தம். வானில் எங்கு பார்த்தாலும் கரும்புகை, எப்போதும் மனதில் தொற்றிக்கொண்டிருக்கும் அச்சம், எங்கும் பாயும் ராக்கெட்டுகள், தோட்டாக்கள், வதந்திகள் - இதுதான் இப்போது சூடானின் காட்சி.

சூடான் தலைநகர் கார்ட்டூம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் நடக்கும் தாக்குதல் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.

இதன் மையப்புள்ளியில் இரண்டு தலைவர்கள்: சூடான் நாட்டு ராணுவத்தின் ஜெனரல் மற்றும் அதிபருமான ஃபத்தா அல்-புர்ஹான் ஒரு புறமும், துணை ராணுவப் பிரிவான ஆர்.எஸ்.எஃப். தலைவர் ஜெனரல் ஹம்தான் தாகலோ என்ற ஹெமெத்தி மறுபுறமும் உள்ளனர்.

ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாகப் பணியாற்றினார்கள் - இருவரும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்றனர். ஆனால் இப்போது அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக களம் இறங்கியிருப்பது சூடான் நாட்டை சின்னாபின்னமாக்கி வருகிறது.

இவர்கள் இருவருக்குமான உறவுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவானவை.

சூடானின் மேற்கு பகுதியில் 2003-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரின் போது டார்ஃபூர் கிளர்ச்சியாளர்களை அடக்குவதில் இவர்கள் இருவரும் முக்கிய பங்காற்றினர்.

ஜெனரல் புர்ஹான் டார்ஃபூர் பகுதியில் ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு உயர்ந்தார்.

ஜன்ஜாவி என அழைக்கப்படும் அரபு போராளிகளின் ஒரு படைப் பிரிவுக்கு ஹெமெத்தி தலைவரானார். டார்ஃபூர் பிராந்தியத்தைச் சேர்ந்த அரபு அல்லாத கிளர்ச்சியாளர்களை ஒடுக்க இந்த படைப்பிரிவை சூடான் அரசு பயன்படுத்திக்கொண்டது.

இதற்கிடையே 2011-ல் தெற்கு சூடான் பிரிந்து சென்றதற்கு முன் தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படையின் துணை இயக்குனராக இருந்த மஜாக் டி'அகூட் பின்னர் தெற்கு சூடானில் துணைப் பாதுகாப்பு அமைச்சரானார்.

இந்நிலையில், ஜெனரல் புர்ஹான் மற்றும் ஹெமெத்தி ஆகியோரை டார்ஃபூரில் சந்தித்த அவர், அவர்கள் இருவரும் இணைந்து சிறப்பாகப் பணியாற்றியதாகத் தெரிவித்தார். இருப்பினும் அவர்களில் யாராவது ஒருவர் நாட்டின் தலைவராக வரக்கூடும் என பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போரிட்ட ஒரு சாதாரண போராளிகள் படைத்தலைவராகத் தான் ஹெமெத்தி இருந்தார். ஆனால் புர்ஹானோ, ஒரு தலைசிறந்த படைப்பிரிவின் தலைவராக, அந்த ராணுவத்தை நன்கு அறிந்தவராக இருந்தார்.

அதிகரித்த அத்துமீறல்கள்

சூடான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூடான் சுதந்திரம் பெற்ற பின் பெரும்பாலான காலங்களில் ராணுவம் தான் ஆட்சி புரிந்து வந்துள்ளது.

சூடானைப் பற்றி நன்கு அறிந்திருந்த அலெக்ஸ் டி வால் என்பவர் , கிளர்ச்சியாளர்களை அடக்க ராணுவம், இனப் போராளிகள், மற்றும் விமானப் படையைப் பயன்படுத்தி சூடான் அரசு கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியது என்றும் இப்படைகள், குடிமக்கள் உயிரிழப்பதைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி தாக்குதல் நடத்தின என்றும் தெரிவித்தார்.

21-ம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை டார்ஃபூரில் தான் நடந்தது என்று சொல்லுமளவுக்கு டார்ஃபூர் கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவ தாக்குதல் மட்டுமின்றி கூட்டம் கூட்டமாக பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது போன்ற குற்றங்களும் அரங்கேறின.

இரு ஜெனரல்களின் கூட்டு நடவடிக்கை

இதற்கிடையே ஜன்ஜாவீத் ஒரு பிரிவின் கமாண்டராக மாறிய ஹெமெத்தி, அப்படைப் பிரிவை அந்நாட்டு ராணுவத்துக்கு இணையாகவே நடத்திவந்துள்ளார்.

இந்நிலையில் யேமன் போரில் செளதி கூட்டுப் படையினருக்கு வீரர்களை அனுப்பி உதவும் அளவுக்கு ஹெமெத்தி வளர்ந்தார்.

இதைத் தொடர்ந்து, சூடானின் அப்போதைய அதிபர் ஓமர் அல்- பஷீர் ஹெமெத்தியை அதிக அளவு சார்ந்திருக்கத் தொடங்கினார். ஒருவேளை ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற நினைத்தாலும் ஹெமெத்தி தலைமையிலான துணை ராணுவம் உதவும் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணமாக அமைந்தது.

இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து இரு ராணுவ ஜெனரல்களும் இணைந்து பஷீர் ஆட்சியை அகற்றினர்.

அந்த ஆண்டின் இறுதியில் இரு ஜெனரல்களும் இணைந்து பொதுமக்கள் மற்றும் ராணுவத்தின் கூட்டாட்சியை அமைத்து, அந்த அரசுத் தலைவராக புர்ஹானும், துணைத் தலைவராக ஹெமெத்தியும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அதன் பின் 2021-ம் ஆண்டில் இருபிரிவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, மீண்டும் இருவரும் முன்பைப் போலவே பொறுப்புக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

சூடான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சித்திக் டவர் கஃபி என்பவர் பொதுமக்களின் பிரதிநிதியாக இந்த கூட்டரசில் பங்கேற்று இரண்டு ஜெனரல்களையும் அடிக்கடி சந்தித்து வந்தார்.

2021-ம் ஆண்டு வரை இரண்டு ஜெனரல்களுக்கும் இடையே எந்த மோதலுக்கான அறிகுறியும் தென்படவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

அதன் பின், மதவாதிகள் மற்றும் பழைய தலைவர்களுக்கு மீண்டும் பழைய பொறுப்புக்களை அளிக்கும் வேலைகளை ஜெனரல் புர்ஹான் தொடங்கியதாக பிபிசியிடம் சித்திக் தெரிவித்தார்.

இதன் மூலம் முன்பிருந்த அதிபர் ஓமர் அல்- பாஷர் மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்யும் நடவடிக்கையை அவர் மேற்கொண்டதாகத் தெரியவந்தது.

இது தெரிந்த பின் தான் ஹெமெத்திக்கு சந்தேகம் எழத் தொடங்கியதாகத் தெரியவருகிறது.

சூடான் அரசியலைப் பொறுத்தவரை, தலைநகர் கார்ட்டூம் மற்றும் நைல் நதியைச் சுற்றியுள்ள இனக்குழுவினரே எப்போதும் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.

அனால் ஹெமெத்தி டார்ஃபூர் பகுதியிலிருந்து வருவதால் அவரை பல முக்கியத் தலைவர்கள் மதிப்பதில்லை என தெரியவருகிறது.

ஆனால் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக தன்னை ஒரு தேசியத் தலைவராக அனைவரும் அங்கீகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை ஹெமெத்தி மேற்கொண்டு வருகிறார்.

அதே போல் மக்களாட்சியை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

சூடான்

இதற்கான கால அவகாசம் நெருங்கிய நிலையில் தான், ஹெமெத்தி தலைமையிலான படைகளை அந்நாட்டு ராணுவத்துடன் இணைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதுவே தற்போதைய தாக்குதல்களுக்குக் காரணமாக மாறியுள்ளது.

தாக்குதல் தொடங்கிய பின் ஆர்எஸ்எஃப் மற்றும் எஸ்ஏஎஃப் படைகளுக்கு இடையே கடும் மோதல்கள் நடந்துவருகின்றன.

இதற்கிடையே, மக்கள் தலைவர்கள் மற்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழுக்களிடம் இருந்து இருதரப்பிடமும் பேசும் நபர்கள், தாக்குதலின் போது நடந்த அத்துமீறல்கள் தொடர்பான விசாரணை நடத்தவேண்டும் என நிர்பந்தித்து வருகின்றனர்.

இருதரப்புக்கும் இடையே பகை உணர்வு மென்மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் தற்போது இப்படி எதிரெதிர் திசையில் நிற்கின்றனர் என்பது சூடான் அரசியலை கேள்விக்குறியாக்கியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cw01g1pj5rwo

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2023 at 18:42, vasee said:

சோமாலியாவில் நடந்தது என கருதுகிறேன், அது தொடர்பாக ஒரு திரைப்படமும் வந்திருந்ததாக நினைவு(எனது கருத்து தவறாக இருக்கலாம்).

வசி சரியான தகவலை கூட தவறாக இருக்கலாம் என ஏன் எழுதுகிறீர்கள்? 
தன் நம்பிக்கையுடன் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

வசி சரியான தகவலை கூட தவறாக இருக்கலாம் என ஏன் எழுதுகிறீர்கள்? 
தன் நம்பிக்கையுடன் எழுதுங்கள்.

ஒரு தற்பாதுகாப்பு தான்?🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.