Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

ஒரு தற்பாதுகாப்பு தான்?🤣

யாரிடம் இருந்து?

  • Replies 78
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

யாரிடம் இருந்து?

விசயம் அறிந்தவர்களிடமிருந்து?☺️

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, விசுகு said:

விசயம் அறிந்தவர்களிடமிருந்து?☺️

விதண்டாவாதக்காரர்களிடமிருந்து என்பது பொருந்ததோ? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Sabesh said:

விதண்டாவாதக்காரர்களிடமிருந்து என்பது பொருந்ததோ? 🤔

இது ஒரு உண்மைச்சம்பவம்

எனவே விதண்டாவாதத்துக்கு இடமில்லை

ஆனால் கேள்விக்குறியைப்போட்டு

அவரே வாதத்துக்கான  அல்லது விதண்டாவாதத்துக்கான கதவையும் திறந்து  விடுகிறார்.

Edited by விசுகு
சில வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

இது ஒரு உண்மைச்சம்பவம்

எனவே விதண்டாவாதத்துக்கு இடமில்லை

ஆனால் கேள்விக்குறியைப்போட்டு

அவரே வாதத்துக்கான  அல்லது விதண்டாவாதத்துக்கான கதவையும் திறந்து  விடுகிறார்.

அப்படி ஒரு திரைப்படம் வந்திருந்ததாக நினைவு என்று தானே எழுதியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

இதே வாய் தான் உக்ரேனை ரசியா  சொறியலாம்  என்றும் சொல்கிறது?

படையெடுப்புக்கு முன்பு, உக்ரைன் ரஷ்யாவை சொறிந்ததா அல்லது ரஷ்யா உக்ரைனை சொறிந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2023 at 00:42, vasee said:

சோமாலியாவில் நடந்தது என கருதுகிறேன், அது தொடர்பாக ஒரு திரைப்படமும் வந்திருந்ததாக நினைவு(எனது கருத்து தவறாக இருக்கலாம்).

1 hour ago, nunavilan said:

வசி சரியான தகவலை கூட தவறாக இருக்கலாம் என ஏன் எழுதுகிறீர்கள்? 
தன் நம்பிக்கையுடன் எழுதுங்கள்.

4 minutes ago, Sabesh said:

அப்படி ஒரு திரைப்படம் வந்திருந்ததாக நினைவு என்று தானே எழுதியிருக்கிறார்.

3 minutes ago, Eppothum Thamizhan said:

படையெடுப்புக்கு முன்பு, உக்ரைன் ரஷ்யாவை சொறிந்ததா அல்லது ரஷ்யா உக்ரைனை சொறிந்ததா?

ஏன் உங்களுக்கு தெரியாதா?

உக்ரைன் மண்ணுக்குள் ரசியா புகுவது இது தான் முதற்தடவையா?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

அண்மையில் இந்த திரியில் சில விடயங்களை கூறப்பட்டுள்ளது.

இந்த திரி மட்டுமல்ல வேறு பிற திரிகளிலும் இது பற்றி முன்னர் கூறப்பட்டுள்ளது, அதனால் சுருக்கமாக கூறுகிறென்

2 ஆம் உலக யுத்தத்திற்கு முன்னர் பெரும்பாலான நாடுகள் மூடிய பொருளாதார கொள்கையுடன் தன்னிறைவு பொருளாதாரமுள்ள நாடுகளாக விளங்கின 2 ஆம் உலக யுத்தத்தின் பின்னர் திறந்த பொருளாதார கொள்கை உலகில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரடென்வூட் தீர்மானம் உருவாக்கப்பட்ட போது அமெரிக்காவிடம் அதிக தங்க இருப்பும் உலக வர்த்தக வகிபாகத்தில் பெரும்பங்கு காணப்பட்டமையால் அமெரிக்க நாணயம் உலக வர்த்தக நாணயமானது.

இலங்கை தனது கடனை செலுத்த முடியாது என தெரிவித்த போது அதன் கடன் மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) 105% விகிதத்திற்கு அதிகமாக இருந்தது, அமெரிக்காவின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியில்(GDP) 123% தற்போது உள்ளது.

அதாவது வருமானத்திற்கு அதிகமாக செலவழிப்பது.

துறைசார் கல்வியறிவில்லை , ஆனால் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபடுவதால் பொருளாதாரம் பற்றி தெரிந்து கொண்டுள்ளேன் அவ்வளவுதான், ஆனால் நான் அந்த தரவுகளை நான் எனது வர்த்தக  நடவடிக்கைகளில் பயன்படுத்துவதில்லை(Fundamental analysis).

நான் பயன்படுத்துவது Technical analysis.

அத்துடன் புள்ளி விபரங்களை மறந்து விடுவதுண்டு, எந்த புத்தகத்தில் வாசித்தது என்பதும் மறந்துவிடும், இந்த ஆதாரங்கள் உண்மையானவையா என்பதும் தெரியாது, அத்துடன் எனது கருத்து வெறும் கருத்து, சரியாகத்தான் இருக்கும் என்பதில்லை.

மன்னிக்கவும் சுருக்கமாக பதில் கூறியமைக்கு முடிந்தவரை சுருக்கமாக கூற முனைவதால் சில சமயம் சரியான புரிதலை கொடுக்காது ஆனால் மேலும் குழப்பமாகிவிடும், அவ்வாறு குழப்பியிருந்தால் குறிப்பிடவும், நன்றி.

குழப்பங்கள் இல்லை, ஆனால் இரு பொருளாதார நிலைகளை ஒப்பிட கடன் மொத்த தேசிய வருமானத்தில் எவ்வளவு என்பது மட்டும் போதாதென கருதுகிறேன். கீழே எனக்குத் தெரிந்த ஒற்றுமைகள் சிறிலங்கா, அமெரிக்கா நிலைகளிடையே:

GDP% இன் படி அதிக கடன் , அதிக trade deficit  (ஏற்றுமதி மூலம் பெறும் வருமானம், இறக்குமதிக்குச் செலவழிப்பதை விட  குறைவு).

ஆனால், முக்கியமான வேறு பாடுகள் இவை:

 சிறிலங்காவின் கடன் பெரும்பகுதி வெளியாருக்கு (10% சீனாவுக்கு, பெரும்பகுதி மேற்கின் கடன் வழங்குனர்களுக்கு எனத் தெரிகிறது). இதைச் செலுத்த இயலா விட்டால் default, எனவே கிறெடிற் றேரிங் குறைந்து மேலும் கடன் வாங்க இயலா bankrupt நிலை. இது தான் சிறி லங்காவின் நிலை.

அமெரிக்காவின் கடனின் பெரும்பகுதி உள்வீட்டுக் கடன் - அரசு தன் திணைக்களங்கள், உள்ளூர் முதலீட்டாளர்கள் ஆகியோரிடம் வாங்கிய கடன். ஜப்பான், சீனா, பிரிட்டன் வெளிநாட்டுக் கடன் கொடுத்தோர். நான் முதலே குறிப்பிட்டது போல, அமெரிக்காவின் மேலுள்ள நம்பிக்கையால், வெளிநாடுகள் மேலும் அதன் treasury bonds ஐ வாங்குகிறார்கள். பிரிட்டன் கம்பனிகள் US Treasury bonds ஐ பாதுகாப்பான முதலீடாக போன ஆண்டு பெருமளவில் வாங்கும் அளவுக்கு அமெரிக்காவின் மீதான நம்பிக்கை இருக்கிறது. இதே நம்பிக்கை தான் அமெரிக்காவின் கிறெடிற் றேரிங்கை AAA ஆக வைத்திருக்கிறது, எனவே மேலும் கடன் வாங்கி ஓட்டலாம்😂!

இது தான் நான் குறிப்பிட்ட, அமெரிக்காவின் அரசு, நிர்வாகம், சட்ட ஆட்சி என்பவை மீதான நம்பிக்கையின் பின்விளைவு. இதை, பணக்கார மத்திய கிழக்கு நாடுகளிடமோ, பாரிய சீனாவிடமோ, ரஷ்யாவிடமோ எதிர்பார்க்க இயலாது!  

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

வசி சரியான தகவலை கூட தவறாக இருக்கலாம் என ஏன் எழுதுகிறீர்கள்? 
தன் நம்பிக்கையுடன் எழுதுங்கள்.

9 hours ago, விசுகு said:

ஒரு தற்பாதுகாப்பு தான்?🤣

9 hours ago, விசுகு said:

விசயம் அறிந்தவர்களிடமிருந்து?☺️

சரியோ தவறோ சில வேளைகளில் அதனை குறிப்பிடும்போது (எல்லோரும் அல்ல) சிலர் அதனை தனிப்பட்ட ரீதியில் எடுத்துகொள்வதனால் தவறு உங்களதல்ல எனது என்று சொல்லி பழகிவிட்டது என கருதுகிறேன் அத்துடன் சரி தவறு என்பது மற்றவர்கள் பார்க்கும் விதத்திலும் உள்ளது.

மற்றது நினைவில் இருப்பதனடிப்படையில் கருத்து தெரிவிப்பதால் அப்படி.

நான் வெளிநாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் எனக்கு ஆங்கிலம் தெரியாது, எனது வீட்டில் என்னுடன் இன்னும் இருவர் இருந்தனர் எனக்கும் இன்னொரு அண்ணாவுக்கும் மற்ற நபர்தான் ஆங்கிலம் மொழிபெர்ப்பாளராக இருப்பார்.

சிறிது காலத்தின் பின் எனது ஆங்கிலம் ஓரளவு தேறிவிட்டது, குடிவரவு விண்ணப்பங்களை  நானே நிரப்புவேன், எனது முன்னைய மொழிபெயர்ப்பு நண்பர் எமது இடத்திலிருந்து தொலைவில் உள்ள ஒருவரிடம் கொண்டு சென்று படிவங்கலை நிரப்புவார்(அவர் 50 வயதுக்கு மேற்பட்டவர்).

அவ்வாறு செல்லும்போது நானும் நண்பருடன் செல்வது வழமை, ஆனால் விண்ணப்ப படிவம் நிரப்பும் இடத்தில் நிற்பதில்லை, அந்த வீட்டில் வேறு நண்பர்கள் இருந்ததனால் அவர்களுடன் உரையாட சென்றுவிடுவேன்.

ஒரு தடவை எனது  அந்த முன்னாள் மொழிபெயர்ப்பு நண்பர் சொன்னார் அந்த 50 வயதிற்கு மேற்பட்ட அண்ணா சொன்னாராம் நான் ஒரு மாதிரியான ஆள் என்று,  மேற்கொண்டு நண்பர் சொல்வதற்கு  ஏதோ இருப்பது போல தோன்றியது அவரது தொனி ஆனால் நான் அது தொடர்பாக ஆர்வம் காட்டவில்லை.

பின்னர் ஒரு நாள் எனது மொழிபெயர்ப்பு நண்பர் சொன்னார், அந்த 50 வயதிற்கு மேற்பட்ட அண்ணா தனது கணனியின  ஸார்ட் செய்த போது அவரது கணனி  திரை முழுவது ஆபாச படங்களால் நிரம்பி வழிந்ததாகவும் அதற்கு அந்த 50 வயது  அண்ணா சங்கடத்துடன் சொன்னாராம், இந்த இன்டர்நெட் காரஙளுக்கு வேற வேலை இல்லை.

எனது மொழிபெயர்ப்பு நண்பர் சிரித்து கொண்டு சொன்னார், 

எனக்கு அதில் இருப்பதாக தெரியவில்லை, சிலருக்கு தவறாக தெரிவது மற்றவர்களுக்கு தவறாக தெரிவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

குழப்பங்கள் இல்லை, ஆனால் இரு பொருளாதார நிலைகளை ஒப்பிட கடன் மொத்த தேசிய வருமானத்தில் எவ்வளவு என்பது மட்டும் போதாதென கருதுகிறேன். கீழே எனக்குத் தெரிந்த ஒற்றுமைகள் சிறிலங்கா, அமெரிக்கா நிலைகளிடையே:

GDP% இன் படி அதிக கடன் , அதிக trade deficit  (ஏற்றுமதி மூலம் பெறும் வருமானம், இறக்குமதிக்குச் செலவழிப்பதை விட  குறைவு).

ஆனால், முக்கியமான வேறு பாடுகள் இவை:

 சிறிலங்காவின் கடன் பெரும்பகுதி வெளியாருக்கு (10% சீனாவுக்கு, பெரும்பகுதி மேற்கின் கடன் வழங்குனர்களுக்கு எனத் தெரிகிறது). இதைச் செலுத்த இயலா விட்டால் default, எனவே கிறெடிற் றேரிங் குறைந்து மேலும் கடன் வாங்க இயலா bankrupt நிலை. இது தான் சிறி லங்காவின் நிலை.

அமெரிக்காவின் கடனின் பெரும்பகுதி உள்வீட்டுக் கடன் - அரசு தன் திணைக்களங்கள், உள்ளூர் முதலீட்டாளர்கள் ஆகியோரிடம் வாங்கிய கடன். ஜப்பான், சீனா, பிரிட்டன் வெளிநாட்டுக் கடன் கொடுத்தோர். நான் முதலே குறிப்பிட்டது போல, அமெரிக்காவின் மேலுள்ள நம்பிக்கையால், வெளிநாடுகள் மேலும் அதன் treasury bonds ஐ வாங்குகிறார்கள். பிரிட்டன் கம்பனிகள் US Treasury bonds ஐ பாதுகாப்பான முதலீடாக போன ஆண்டு பெருமளவில் வாங்கும் அளவுக்கு அமெரிக்காவின் மீதான நம்பிக்கை இருக்கிறது. இதே நம்பிக்கை தான் அமெரிக்காவின் கிறெடிற் றேரிங்கை AAA ஆக வைத்திருக்கிறது, எனவே மேலும் கடன் வாங்கி ஓட்டலாம்😂!

இது தான் நான் குறிப்பிட்ட, அமெரிக்காவின் அரசு, நிர்வாகம், சட்ட ஆட்சி என்பவை மீதான நம்பிக்கையின் பின்விளைவு. இதை, பணக்கார மத்திய கிழக்கு நாடுகளிடமோ, பாரிய சீனாவிடமோ, ரஷ்யாவிடமோ எதிர்பார்க்க இயலாது!  

அமெரிக்கா தந்து அன்னியசெலாவணி நாணயம் எனும் அந்தஸ்தினை இழந்தால் இலங்கை போல என்பதற்காக GDP உதாரணமாக கூறினேன்.

அமெரிக்க அரச கடன் முறிகளை வெளிநாட்டு அரசுகள் வாங்குவதற்கு பல காரணங்கள் உண்டு

தமது  ஏற்றுமதி இறக்குமதியினால் ஏற்படும் தேறிய இலாபம் அவர்களது  நாணயத்தின் பெறுமதியினை அதிகரிக்கும் அது அவர்களது பொருள்கள் சேவைகளை சந்தையில் விலை அதிகரிப்பினை உண்டாக்கும் அதனை தவிர்க்கவும் அத்துடன் வலிந்து தமது நாணய பெறுமதியினை இழக்கவும் இந்த முறையினை கையாழ்வார்கள்.

அதுமட்டுமல்லாமல் அமெரிக்க பணமுறியினை திரும்ப விற்கும்போது உலக வர்த்தகத்திற்கு தேவையான டொலரினை உடனடியாக பெறமுடியும்(Liquidity இது முக்கிய காரனம், அமெரிக்க அன்னிய செலாவணி நாணய அந்தஸ்தினை இழந்தால் அவர்கள் அமெரிக்க பணமுறிகளை வாங்க மாட்டார்கள், அதற்கு பதில் அவர்கள் வர்த்தக பங்காளர்களின் நாணயத்தில் வர்த்தகம் செய்யும் போது அவர்களது பணமுறிகளை வாங்கினால் உடனடியாக அவர்களது நாணயமாக மாற்றலாம்).

டொலருக்கு பதில் தங்கத்தினையும் வாங்கலாம் அது பணவீக்கதிற்கெதிரான Hedging போல பயன்படும் ஆனால் அதிலிருந்து பணமுறி போல இலாபம் வராதுYeild, மற்றது Diversify.

ஆரம்பத்தில் அமெரிக்காவிற்கும் சவுதிக்குமிடையே ஏற்பட்ட புரிந்துணர்வு அடிப்படையில் எண்ணெய் வளம் டொலரில் வர்த்தகம் செய்யும் நிலையினை உருவாக்கியது, தற்போது ஒபெக் மற்றும் ஒபெக் + நாடுகள் டொலரில் வர்த்தகம் செய்யாமல் இரட்டை வர்த்தக முறை மூலம் வர்த்தகம் செய்தால், தமது நாணயத்தில் வர்த்தகம் செய்யும் போது மாற்றுவிகிதத்தில் ஏற்படும் தேவையற்ற செலவீடுகள் இல்லாமல் அது அவர்களுக்கு நன்மை உண்டாகும்.

தற்போது உலக வர்த்ககத்தில் பல நாடுகள் நேரிடையாக அமெரிக்காவுடன் எந்த வர்த்தகங்களிலும் ஈடுபடுவதில்லை ஆனால் அமெரிக்க நாணயத்தினை வர்த்தகத்திற்கு பயன்படுத்த வேண்டி உள்ளது மறுவளமாக மத்திய கிழக்கு நாடுகளுடன் அனைத்து நாடுகளும் வர்த்தக பங்களிப்பு உள்ளது, அதனால் இரண்டு தரப்பாரும் நேரிடையாக தமது நாணயத்தில் வர்த்தகம் செய்வது அவர்களுக்கு நன்மை.

அமெரிக்கா தனது அன்னிய செலாவணி நாணய தகுதியினை இழக்கும்போது தற்போது போல பணத்தினை புதிது புதிதாக அச்சடித்தால் இலங்கையில் ஏற்பட்ட stagflation ஏற்படும் (பணவீக்கம் போலல்லாமல் அதனைவிட அதிக பாதிப்பு ஏற்படும்).

தற்போது அமெரிக்காவில் புழக்கத்தில் உள்ள நாணய்த்திற்கு அண்ணளவான  அமெரிக்க நாணயம் அன்னிய செலாவணியாக உள்ளது அது திரும்பவும் அமெரிக்காவிற்குள் வரும்போது என்னவாகும்(M2 அல்ல M0), அதனைவிட அரசபணமுறிகளை வாங்கியுள்ள வெளிநாட்டு அரசுகளின் கடன் தொகை அமெரிக்க உள்நாட்டு உண்மை பணத்தினளவை விட ஏறத்தாழ 140% அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

சரியோ தவறோ சில வேளைகளில் அதனை குறிப்பிடும்போது (எல்லோரும் அல்ல) சிலர் அதனை தனிப்பட்ட ரீதியில் எடுத்துகொள்வதனால் தவறு உங்களதல்ல எனது என்று சொல்லி பழகிவிட்டது என கருதுகிறேன் அத்துடன் சரி தவறு என்பது மற்றவர்கள் பார்க்கும் விதத்திலும் உள்ளது.

மற்றது நினைவில் இருப்பதனடிப்படையில் கருத்து தெரிவிப்பதால் அப்படி.

நான் வெளிநாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் எனக்கு ஆங்கிலம் தெரியாது, எனது வீட்டில் என்னுடன் இன்னும் இருவர் இருந்தனர் எனக்கும் இன்னொரு அண்ணாவுக்கும் மற்ற நபர்தான் ஆங்கிலம் மொழிபெர்ப்பாளராக இருப்பார்.

சிறிது காலத்தின் பின் எனது ஆங்கிலம் ஓரளவு தேறிவிட்டது, குடிவரவு விண்ணப்பங்களை  நானே நிரப்புவேன், எனது முன்னைய மொழிபெயர்ப்பு நண்பர் எமது இடத்திலிருந்து தொலைவில் உள்ள ஒருவரிடம் கொண்டு சென்று படிவங்கலை நிரப்புவார்(அவர் 50 வயதுக்கு மேற்பட்டவர்).

அவ்வாறு செல்லும்போது நானும் நண்பருடன் செல்வது வழமை, ஆனால் விண்ணப்ப படிவம் நிரப்பும் இடத்தில் நிற்பதில்லை, அந்த வீட்டில் வேறு நண்பர்கள் இருந்ததனால் அவர்களுடன் உரையாட சென்றுவிடுவேன்.

ஒரு தடவை எனது  அந்த முன்னாள் மொழிபெயர்ப்பு நண்பர் சொன்னார் அந்த 50 வயதிற்கு மேற்பட்ட அண்ணா சொன்னாராம் நான் ஒரு மாதிரியான ஆள் என்று,  மேற்கொண்டு நண்பர் சொல்வதற்கு  ஏதோ இருப்பது போல தோன்றியது அவரது தொனி ஆனால் நான் அது தொடர்பாக ஆர்வம் காட்டவில்லை.

பின்னர் ஒரு நாள் எனது மொழிபெயர்ப்பு நண்பர் சொன்னார், அந்த 50 வயதிற்கு மேற்பட்ட அண்ணா தனது கணனியின  ஸார்ட் செய்த போது அவரது கணனி  திரை முழுவது ஆபாச படங்களால் நிரம்பி வழிந்ததாகவும் அதற்கு அந்த 50 வயது  அண்ணா சங்கடத்துடன் சொன்னாராம், இந்த இன்டர்நெட் காரஙளுக்கு வேற வேலை இல்லை.

எனது மொழிபெயர்ப்பு நண்பர் சிரித்து கொண்டு சொன்னார், 

எனக்கு அதில் இருப்பதாக தெரியவில்லை, சிலருக்கு தவறாக தெரிவது மற்றவர்களுக்கு தவறாக தெரிவதில்லை. 

உண்மையில் எனக்கு இதில் ஒன்றுமே புரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

சூடான் சிறைச்சாலையிலிருந்து யுத்த குற்றவாளிகள் விடுதலை?

Published By: RAJEEBAN

26 APR, 2023 | 12:56 PM
image

சூடான் சிறையிலிருந்து யுத்தகுற்றவாளியொருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தினால் யுத்தகுற்றச்சாட்டும்  மனிதகுலத்திற்கு எதிரான  குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ள சூடானின் முன்னாள் அமைச்சர் அஹமட் ஹரோனே சூடான் தலைநகரில் உள்ள சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஒமார் அல் பசீரை கவிழ்த்த இராணுவசதிப்புரட்சியை தொடர்ந்து 2019 இல் இவர் கைதுசெய்யப்பட்டார்.

தலைநகர் கார்ட்டோம் சிறைச்சாலையிலிருந்து நானும் வேறு சில முக்கிய பிரமுகர்களும் வெளியேறியுள்ளோம் என அவர் ஓடியோ பதிவொன்றி;ல தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் பாரிய குழப்பநிலையேற்பட்டதை தொடர்ந்து அவரையும் வேறு பலரையும் அதிகாரிகள் விடுதலை செய்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

XmHpizW.jpg

சிறைச்சாலையிலிருந்து நானும் வேறு சில முக்கிய நபர்களும் இராணுவத்தினர் சிறைப்பாதுகாவலர்களின் உதவியுடன் வெளியேற தீர்மானித்தோம் தற்போது பாதுகாப்பான இடத்தில் இருக்கின்றோம் என ஹரோன் தெரிவித்துள்ளார்.

இயல்பு நிலை திரும்பியதும் நான் சரணடைவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்

கோபெர் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்களில் யுத்தகுற்றவாளியான முன்னாள் ஜனாதிபதி அல்பசீரும்  உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாவதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையில் உணவுதட்டுபாடு போன்ற பிரச்சினைகளால் குழப்பநிலையேற்பட்டதை தொடர்ந்து கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என சூடானின் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/153797

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

உண்மையில் எனக்கு இதில் ஒன்றுமே புரியவில்லை

மன்னிக்கவும் குழப்பகரமாக எழுதிவிட்டேன்.

நீங்கள் விசயம் அறிந்தவர்களிடம் ஒரு தற்காப்புக்காகத்தான் நான் " எனது கருத்து தவறாக இருக்கலாம் " என எழுவதாக குறிப்பிட்டதற்கு பதிலாக அதனை பதிவிட்டேன் ஆனால் அதனை குழப்பமாக வழமை போல எழுதிவிட்டேன்.

எனது மொழிபெயர்க்கும் நண்பர் 50 வயதிற்கு மேற்பட்ட நபரிடம் செல்வது அவர் படிவங்கங்கள் நிரப்புவதில் விடயம் தெரிந்தவர் என்பதால்.

ஆனால் அதே  நண்பர் " எங்களுக்கே இன்டர்நெட் பற்றி படிப்பிக்கிறார் " என எனது நண்பர் கூறுவதற்கு காரணம், எனது நண்பர் கணனியினை பொறுத்தவரை அந்த 50 வயது அண்ணாவினை விட தெரிந்தவராக இருந்தமையால்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடயம் தெரியும், நான் உங்களிடம் பல விடயங்களை கற்று கொண்டமாதிரி.

யாழ் இந்த வகையில் வரப்பிரசாதாம், எமது சிந்தனைகளை விசாலப்படுத்துகிறது, இதில் தவறான கேள்விகளும் இல்லை, தவறான பதிலும் இல்லை.

முன்பு ஒரு திரியில் நான் ஒரு தவறான விடயம் ஒன்றினை பதிந்திருந்தேன் (அதனை பின்னர் தேடி இணைக்கிறேன்), கிருபன் அதனை சுட்டி காட்டியிருந்தார், தவறான விடயத்தினை சரி என்ற அடிப்படையில் எனது வேறு முடிவுகளை எடுக்கும் போது அது தாக்கத்தினை ஏற்படுத்தும், ஆரம்பத்தில் தவறினை சுட்டி காட்டினால் அதனால் இலாபம் ஏற்படுவது எனக்குதான்.

இந்த திரியில் ஜஸ்டின் கூறிய கருத்துகள் இது வரை நான் கொண்டிருந்த புரிதல்களை மேலும் விரிவாக்கியுள்ளது அது எனது அன்னிய செலாவணி வர்த்தகத்திற்கு உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

Bretton Woods தீர்வு வருவதற்கு முன்பு கடுமையான இறக்குமதி வரி, நாணய பெறுமதி குறைப்பு என மேற்கு நாடுகளே தமக்குள் பொருளாதார ரீதியாக மோதிக்கொண்டிருந்தன.

அதுவும் Great depression மேற்கு நாடுகளில் ஏற்பட காரணமாக இருந்தது இதனால் தங்கு தடையற்ற வர்த்தக நோக்கில் உருவாக்கப்பட்ட Bretton Woods தீர்வு திட்டம் Adjustable pegged foreign exchange system.

இதில் தங்க பெறுமதியுடன் காசின் பெறுமதியினை இணைத்து நாணயத்தின் முழுப்பெறுமதியில் அன்னிய செலாவணியாக அமெரிக்க நாணயம் உருவாக்கப்பட்டது.

இதில் எந்தவித ஏமாற்றுத்தனமும் இருக்காது.

இடையில் அமெரிக்கா அதிகளவில் 1.5% கூடுதலாக காசினை அச்சடித்த போது அமெரிக்க  நாணயத்துடன் Peg செய்திருந்த சில மேற்கு நாடுகளுக்கு நட்டம் ஏற்பட அவை நாணயத்திற்கு பதில் தங்கத்தினை கோரினர், பின்னர் வியட்னாம் போரின் போது அமெரிக்கா தங்கத்தினை தனது நாணய மதிப்பினை அளவிட கொண்டிருந்த அளவு கோலினை கைவிட்டது.

இதுவே Fiat currency இன் தோற்றத்திற்கு காரணமாக வந்த்து, இந்த முகப்பெறுமதி நாணயம் தற்போதுள்ள பணவீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது.

Floating currency இல நாணய்த்தின் மதிப்பினை பல காரணிகள் தீர்மானிகின்றன அதில் Balance of Payment இனை தம்து நாணய்த்தின் பெறுமதியினை வலிந்து குறைப்பதற்காக பயன்படுத்துகிறார்கள்(அமெரிக்க அரச பணமுறிகளை கொள்வனவு செய்து).

அமெரிக்க நாணயத்திற்கு பதிலாக இன்னொரு நாட்டு நாணயம் அன்னிய செலாவணி அந்தஸ்தினை எட்டுமா?

தற்போதுள்ள முகப்பெறுமதி நாணயத்தில் எந்த ஒரு நாட்டினையும் மற்ற நாடு நம்புமா?

சில நாடுகள் குறிப்பாக மலேசியா போன்ற நாடுகள் Dirty float பின்பற்றுவதாக கருதுகிறார்கள்(மிதக்க விடப்பட்ட நாணயத்தில் மத்திய வங்கி தலையிடுவதனை வெளியில் கூறுவதில்லை).

இப்படியான ஒரு நாட்டின் நாணயத்தினை reserve currency ஆக ஏற்க விரும்பமாட்டார்கள்.

ஆனால் ஒரு நாடு தனது நாணயத்தினை தங்கத்தின் பெறுமதியுடன் இணைத்து முழுப்பெறுமதி நாணயத்தினை உருவாக்கி அதன் உலக வர்த்தக வகிபாகம் அதிகம் இருந்தால் அதனை ஏற்பதற்கு மற்ற நாடுகள் தயாரகலாம்.

ஒற்றை  அன்னிய செலாவணி முறைமை  பல நடைமுறைமை சிக்கல்களை தீர்க்கிறது, ஆனால் எதிர்காலத்தில் இப்படி ஒரு ஒற்றை நாணயம அன்னிய செலாவணி முறைமை வருவதற்கான சாத்தியம் இல்லை என நான் கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/4/2023 at 05:54, Justin said:

இது தான் நான் குறிப்பிட்ட, அமெரிக்காவின் அரசு, நிர்வாகம், சட்ட ஆட்சி என்பவை மீதான நம்பிக்கையின் பின்விளைவு. இதை, பணக்கார மத்திய கிழக்கு நாடுகளிடமோ, பாரிய சீனாவிடமோ, ரஷ்யாவிடமோ எதிர்பார்க்க இயலாது!  

தற்போதுள்ள அன்னிய செலாவணி வரலாற்றினை பார்க்கும் போது நீங்கள் கூறும் இந்த காரணத்தால்தான் அமெரிக்க  நாணயதிற்கு அன்னிய செலாவணி அந்தஸ்து கிடைத்தேன நான் கருதவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2023 at 08:43, விசுகு said:

விசயம் அறிந்தவர்களிடமிருந்து?☺️

யார் அந்த விசயம் அறிந்தவர்கள்?🙃

  • கருத்துக்கள உறவுகள்

ax5t47dw12wa1.jpg

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nunavilan said:

யார் அந்த விசயம் அறிந்தவர்கள்?🙃

நீங்கள் அந்த விசயம் அறியாதவரல்லர். 😎

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

யார் அந்த விசயம் அறிந்தவர்கள்?🙃

துறை சார் நிபுணர்கள் என்று சொல்லலாம்

ஆனால் நான் அதற்குள் இல்லை

தொடர்ந்துவரும் உங்கள் கேள்விகளைப் பார்த்தால் நீங்களும் அதற்குள் இல்லை போல. கவலை வேண்டாம் தம்பி நுணா. எல்லாவற்றிலும் எல்லோரும் நிபுணர்களாக இருக்கணும் என்பது நடைமுறையில் சாத்தியம் அற்றது. 😉

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

ax5t47dw12wa1.jpg

Cherry-pick செய்த அறிக்கைகள் சம்பவங்களை வைத்துப் பின்னக் கூடிய அடுத்த சதிக்கோட்பாட்டுக் கதை "சூடானுக்காகச் சுடச்சுடத்" தயாராகிறது என நினைக்கிறேன்.😂

ஒரு ஒப்பீட்டிற்காக (சீண்டலுக்காக அல்ல!): 2014 இல் உக்ரைனிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். உக்ரைனிய பாராளுமன்றம் ஐ.ஒ வோடு வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யும் படி பெரும்பான்மை வாக்குகளால் தீர்மானித்த பின்னர், அதைப் புறக்கணித்து விட்டு ரஷ்யாவோடு மட்டும் ஒப்பந்தம் செய்ய ஜனாதிபதி யனுகோவிச் முயல்கிறார். மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து அவரைப் பதவியிலிருந்து அகற்றி, அவர் இப்போது ரஷ்யாவில் வசிக்கிறாரென நினைக்கிறேன். இது உக்ரைனிய மக்களின் முடிவு. ஆனால், இப்ப உலவும் கதை "அமெரிக்காவும் (உக்ரைன் உறுப்பினராக இருக்காத) நேட்டோவும் செய்த சதிப் புரட்சி தான் இந்த மைடான் புரட்சி" எனும் கற்பனைக் கதை. வரலாற்றை அறியாதோர் இகை நம்புவது ரஷ்யாவின் வெற்றி தான்!.

இப்ப  சூடான்: 2000 முதல் சூடான், கார்ரோமில் அமெரிக்க தூதரகம் இருக்கிறது. ஆனால், தூதுவருக்குப் (ambassador) பதிலாக Charge d'affaires என்ற சிரேஷ்ட இராஜதந்திரிப் பதவியுடையவர்கள் வழியாக தூதுவர் செய்யும் சகல காரியங்களும் நடந்தே வந்தன. இது வழமைக்கு மாறான ஒன்றல்ல. இது புரியாத அல்லது புரிந்தும் சொல்ல விளையாதோர், 25 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்காவின் தூதர் போய்த்தான் சூடானின் பஷீருக்கெதிரான புரட்சி உருவானதெனக் காட்ட முயல்கின்றனர்.

என் கேள்வி: இனப்படுகொலையாளன் பஷீருக்கெதிராக அமெரிக்கா மக்கள் கிளர்ச்சியைத் தூண்டியிருந்தால் கூட, அது நல்ல செய்தி தானே? அல்லது பஷீர் போன்ற இரும்புக் கரத்தினால் ஆள்வோர் சூடானுக்கு அவசியம் என்பார்களோ? அப்ப பக்சாக்களும் இலங்கைக்கு அவசியம் என்ற நிலையை எடுக்க சில வருடங்கள் ஆகுமோ😎?  

reddit  ஐயும் கறுப்பு பட்டியலில் போட்டு விடலாமா?🙃🙃🙃

உங்களுக்கு பிடிக்காத செய்தி  சதிக்கோட்பாடா?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

reddit  ஐயும் கறுப்பு பட்டியலில் போட்டு விடலாமா?🙃🙃🙃

உங்களுக்கு பிடிக்காத செய்தி  சதிக்கோட்பாடா?

என்ன நுணா reddit பற்றித் தெரியாமல்  IT வேலையில் இருக்கிறீங்கள்? reddit ஒரு செய்தி ஊடகமல்ல, யாழ் களம் போல செய்திகளை வெளியார் இணைக்க, அதை பிரபலத்தின் அடிப்படையில் நிரல் படுத்தும் ஒரு தளம். அதனால் தடை செய்ய முடியாது, ஆனால், இது போன்ற சதிக் கோட்பாடுகளைச் சுட்டிக் காட்ட மட்டும் செய்யலாம்!

செய்தி பிடிக்கவில்லையென்று யார் சொன்னார்? என் கேள்விகளில் தெரியவில்லையா பிடித்ததா இல்லையா என? ஆனால், இந்தப் பட்டியலில் இருப்பவை சதிக்கோட்பாட்டாளர்களுக்கு மட்டும் தெரியும் தேர்வு செய்த புள்ளிகள், அதை வைத்துப் போடும் கோலம் தான் "சூடானின் இன்றைய பிரச்சினை அமெரிக்க ஷதி" என்பது 😂

  • கருத்துக்கள உறவுகள்

சூடானிலிருந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தப்பிச்செல்ல குவிவதால் தத்தளிக்கும் துறைமுக நகரம்

சூடானிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தப்பிச்செல்ல  முயற்சிப்பதால் தத்தளிக்கும் துறைமுக நகரம்

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,லிஸ் டோவ்சே
  • பதவி,சர்வேதேச தலைமைச் செய்தியாளர்
  • 1 மே 2023

(சூடான் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போர்ட் சூடான் என்ற துறைமுக நகரம், அந்நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயலும் பொதுமக்களின் முக்கிய வழித்தடமாக மாறியுள்ளது. அங்கிருந்து சௌதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு பொதுமக்களை அழைத்துச் செல்லும் மீட்புக் குழுவுடன் பிபிசியின் சர்வதேச தலைமைச் செய்தியாளர் லிஸ் டோவ்சே இணைந்து பயணித்தார்.)

சூடான் நாட்டு துறைமுகத்துக்கு அந்த மயான இரவில் சவுதி அரேபியாவின் எச்எம்எஸ் அல் திராயா கப்பல் வந்து மீட்புப் பணிகளை உடனடியாக தொடங்கிய பின், அந்த இடம் அங்கிருந்து தப்பிச் செல்ல விரும்பிய பொதுமக்களை மீட்கும் ஒரு மிக முக்கிய தலமாகவும், மனிதநேய மையமாகவும் மாறியது. நள்ளிரவு 2 மணிக்கு போர்ட் சூடான் நகருக்கு வெளியில் மேலும் இரண்டு கப்பல்கள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. இந்த கப்பல்கள் தங்களது மீட்புப் பணிகளைத் தொடங்கத் தயாராக இருந்தன.

இந்த மீட்பு நடவடிக்கையின் மூலம் மிகுந்த நிம்மதியடைந்ததாகவும், ஆனால் சூடான் நாட்டில் நடக்கும் கொடூரங்களைக் கண்டு மிகுந்த சோகமடைந்ததாகவும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹசான் ஃபராஸ் என்பவர் தெரிவித்தார்.

போர்க்களமாகக் காட்சியளிக்கும் சூடான் நாட்டுக்குள் சென்று பார்க்கும் அனுமதி ஒரு சில வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு மட்டும் கிடைத்தது. சவுதி அரேபியா துறைமுக நகரமான ஜெட்டாவிலிருந்து அல் திராயா கப்பலில் பத்து மணிநேர பயணத்துக்குப் பின் ஒரு இழுவைப் படகு மூலம் இந்த கரைப்பகுதியை அடைந்தோம்.

அங்கே பாஸ்போர்ட்டுகளுடன் நீண்ட வரிசையில் இளம் பணியாளர்கள் நின்றிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள். இரண்டு வார காலம் தாக்குதல் கொடுமைகளைக் கடந்து அந்த துறைமுகத்துக்கு வந்து மூன்று நாட்களாக காத்துக்கொண்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இது போன்ற மோசமான நிலையை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என சூடானிலிருந்து தப்பிச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டின் ஹசான் ஃபராஸ் கூறினார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு நபர், தான் பவுண்டரி ஒன்றில் வேலை பார்த்ததாகவும், ஏராளமான குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கி தாக்குதல்களைக் கடந்து வந்து, ஏதாவது உதவி கிடைக்குமா என கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ராணுவ ஜெனரல் ஜென் அப்தல் ஃபட்டா அல்- புர்ஹான் மற்றும் ஆர்.எஸ்.எஃப். எனப்படும் துணை ராணுவப் படையின் ஜெனரல் ஹெமெத்தி ஆகியோருக்கு இடையே நிலவும் மோதலின் வெளிப்பாடாகவே சூடானில் கடந்த சில வாரங்களாக இது போன்ற தாக்குதல்கள் நடந்துவருகின்றன.

இந்த தாக்குதலின் போது போர்ட் சூடான், தலைநகர் கார்ட்டூம் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து தப்பிச் செல்ல முயலும் பொதுமக்களுக்கு இந்த துறைமுக நகரம் மிகவும் நிம்மதியளிக்கும் இடமாக மாறியுள்ளது என என்னுடன் பணியாற்றும் மற்றொரு சூடான் நாட்டுப் பணியாளரான முகனது ஹாஷிம் தெரிவிக்கிறார்.

சூடான் தாக்குதல் காரணமாக தப்பி வந்த பொதுமக்கள் அப்போது மோசமான தெருக்களில் தூங்கிக்கொண்டிருந்தனர். உள்ளூரில் இருக்கும் விடுதிகள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களால் நிரம்பி வழிந்தன. தாக்குதல் ஆபத்திலிருந்து ஒவ்வொரு நாடும் தங்களது குடிமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அவசர அலுவலகங்களைத் திறந்து அதிவிரைவாக மேற்கொண்டு வந்தன.

சூடானிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தப்பிச்செல்ல  முயற்சிப்பதால் தத்தளிக்கும் துறைமுக நகரம்

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

போர்ட் சூடான் நகரில் யேமன், சிரியா மற்றும் அங்கிருந்து தப்பிச் செல்ல விரும்பிய சூடான் நாட்டு மக்கள் அதிக எண்ணிக்கையில் பதற்றத்துடன் குழுமியிருந்தனர்.

மேலும், இந்நகரில் யேமன் நாட்டைச் சேர்ந்த சுமார் 3,000 மாணவர்கள் வாரக்கணக்கில் சிக்கித் தவித்துவந்தனர். சவுதி அரேபிய அரசு யேமன் நாட்டவர்களை மீட்பதில் அக்கறை காட்டினாலும், பெரும் எண்ணிக்கையிலான மக்களை மீட்க அந்நாட்டு அரசு தயக்கம் காட்டுகிறது என அவர்களுக்கு உதவும் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சவுதி அரேபியாவுக்கு வரும் பெரும்பாலான மக்கள் அங்கே சிறிது நாட்கள் விடுதிகளில் தங்கியிருக்க அந்நாட்டு அதிகாரிகள் உதவுகின்றனர். ஆனால், அந்த மக்களின் சொந்த நாட்டு அரசுகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்களுக்கான விடுதிக் கட்டணங்களை செலுத்திவிட்டு, அவர்களை அந்தந்த நாடுகளுக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

ஜெட்டாவிலிருந்து கிளம்பிய போது, என்னுடன் பணியாற்றிய முகமது ஹஷீமின் நெருங்கிய உறவினர் ஒருவர் அவரது இரண்டு குழந்தைகளுடன் செங்கடலில் 18 மணிநேரப் பயணத்தில் சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றதைப் பார்த்தபின், போர்ட் சூடானில் தமது உறவினர்கள் யாராவது இருக்கின்றனரா என சல்லடை போட்டு அவர் தேடிவிட்டார்.

வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருக்கும் சூடான் நாட்டு மக்கள் அங்கிருந்து தப்பிச் செல்வது சோகத்திலும் ஒரு நிம்மதியான அனுபவமாகவே இருந்தது.

சூடானிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தப்பிச்செல்ல  முயற்சிப்பதால் தத்தளிக்கும் துறைமுக நகரம்

பட மூலாதாரம்,NAOMI SCHERBEL-BALL/BBC

கார்ட்டூமில் உள்ள ஸ்போர்ட் சிட்டியில் ஏப்ரல் 15-ம் தேதி தாக்குதல் தொடங்கிய நிலையில், அங்கே வசித்து வந்த ரஷா என்ற பெண், தூங்கும் குழந்தையை தோளில் சுமந்தபடியே எங்கள் குடும்பம் சூடானில் இருந்து வெளியேற உதவுங்கள் எனக் கதறினார். சூடானைக் காப்பற்ற உலக நாடுகளிடம் பேசும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அழகாக அமெரிக்க ஆங்கிலம் பேசும் அவரது எட்டு வயது மகள் லீன், அவர்களது வீட்டிற்குள் ஆயுதமேந்திய தாக்குதல்தாரிகள் புகுந்த போது ஏற்பட்ட அனுபவத்தை அச்சத்துடன் விவரித்தார். தாக்குதல்தாரிகள் உட்புகுந்த போது, அந்த வீட்டில் இருந்த பத்து பேரும் மறைவான இடங்களில் பதுங்கிக் கொண்டதாகவும், அழுதால் சத்தம் கேட்டு விடும் என்பதற்காக அழுகையை அடக்கிக்கொண்டு ஒளிந்திருந்ததாகவும் அந்தக் குழந்தை தெரிவித்தது.

அவர்கள் மிகவும் மோசமானவர்கள் என லீனின் இளைய சகோதரன் சொன்னதைக் கேட்டபோது என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வீட்டிற்குள் புகுந்த தாக்குதல்தாரிகள் அனைவரும் ஆர்.எஸ்.எஃப். படையைச் சேர்ந்தவர்கள் என லீனின் தந்தை விளக்கினார். அவர்கள் அனைவரும் வன்முறை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதாக பெரும்பாலானோர் புகார் தெரிவித்தனர்.

சூடான் நாட்டில் சக்தி வாய்ந்த இருநபர்களுக்கு இடையே நடக்கும் இப்போர் மிகவும் மோசமடைந்து வரும் நிலையில், அவர்களுக்குள் நிலவிய தனிப்பட்ட மற்றும் அரசியல் விரோதம் தான் காரணம் என்பதை விட அவர்களது ஆதிக்க அதிகாரங்களுக்கு இடையே நிலவும் போட்டிதான் காரணம் என்பதே சரியாக இருக்கும்.

யேமன் ஹௌதிகளுடன் போரிட, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு ஆதரவாக தமது படைகளை அனுப்பிய துணை ராணுவப் படையின் ஜெனரல் ஹெமெத்திக்கு இந்நாடுகள் தாராளமாக நிதி அளித்ததால் அவர் பொருளாதார வளம் மிக்க ஜெனரலாக இருக்கிறார்.

ஆனால், அண்மைக்காலமாக சூடான் ராணுவ ஜெனரல் புர்ஹானுக்கும் நெருக்கம் மிகுந்த நாடாக சவுதி அரேபியா விளங்கி வருகிறது. கனிம வளம் மற்றும் விவசாய வளங்களை அதிகமாகக் கொண்ட சூடான் நாட்டின் மீது எகிப்து, இஸ்ரேல், ரஷ்யா மட்டுமல்லாமல், ரஷ்யாவின் ஆதரவு பெற்ற தனியார் ராணுவமும் ஒரு கண் வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

சூடானிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தப்பிச்செல்ல  முயற்சிப்பதால் தத்தளிக்கும் துறைமுக நகரம்

பட மூலாதாரம்,NAOMI SCHERBEL-BALL/BB

ஆனால் தற்போதைய ஒரு மோசமான சூழலில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தான் இந்த கொடூரமான தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் பேச்சு நடத்திக் கொண்டிருக்கின்றன.

மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சவுதி அரேபியாவுக்கு பல நாட்டு தூதர்கள் மனமாற நன்றி தெரிவித்துவருகின்றனர். இதுவரை 100 நாடுகளைச் சேர்ந்த 5,000 பேர் செங்கடல் வழியாக சவுதி அரேபிய போர்க்கப்பல்கள் மற்றும் அல்லது அந்நாட்டு ராணுவம் அனுப்பிய தனியார் கப்பல்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் சனிக்கிழமையன்று மிக அதிகமாக ஒரே நாளில் ஈரானியர்கள் உள்பட 2,000 பேர் சவுதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பரம்பரை விரோதிகளாக விளங்கிய சவுதி அரேபியாவும், ஈரானும் அண்மையில் தங்கள் பகையை மறந்து, தூதரக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சியைத் தொடங்கியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

சூடானில் பல ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றிய கணவருடன் ஜெட்டா வந்த நஸ்லி என்ற ஈரானிய சிவில் எஞ்சினியர், சவுதி அரேபியாவும், ஈரானும் உறவுகளைப் பலப்படுத்தினால் அது தங்களுக்கு ஒரு வரமாகவே அமையும் என்றார்.

இந்நிலையில், தாக்குதலில் இருந்து தப்பி வந்த மேலும் பலர், ஞாயிறன்று சவுதி போர்க்கப்பலை எதிர்பார்த்து இழுவைப் படகு மூலம் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள், சூடான் நாட்டை நினைத்து வருந்தியதுடன், வாழ்க்கையில் மீண்டும் ஒரு முறை அந்த நாட்டின் பக்கமே தலைவைத்தும் படுக்கக்கூடாது என்ற தீர்க்கமான எண்ணத்தில் அங்கிருந்து வெளியேறும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

https://www.bbc.com/tamil/articles/cgln25v51zxo

  • கருத்துக்கள உறவுகள்

சூடானில் 7 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பினரும் இணக்கம் : தென் சூடான் அறிவிப்பு

Published By: SETHU

03 MAY, 2023 | 11:08 AM
image

சூடானில் போரில் ஈடுபட்டுள்ள இரு ஜெனரல்களும் 7 நாட்கள் போர்நிறுத்தத்தை கடைபிடிப்பதற்கு இணங்கியுள்ளனர் என அயல் நாடான தென் சூடானின் அரசாங்கம் அறிவித்துள்ளது.

சூடானை எவ்­வாறு நிர்­வ­கிப்­பது என்­பது தொடர்­பாக, இரா­ணுவத் தள­பதி ஜெனரல் ஃபத்தா அல் புர்­ஹா­னுக்கும் ஆர்.எஸ்.எவ். எனும் துணை இரா­ணுவப் படையின் தள­பதி ஜெனரல் மொஹம்மத் ஹம்தான் தக­லோ­வுக்கும் இடை­யி­லான முரண்­பா­டுகள் கார­ண­மாக கடும் மோதல்கள் நடந்தன, 

இந்நிலையில், இவ்விரு ஜெனரல்களும் மே 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை 7 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு இணங்கியுள்ளனர் என தென் சூடான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் 3 ஆவது தடவையாக 72 மணித்தியால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அப்போர் நிறுத்தம் இன்று முடிவுக்கு வரும் நிலையில், நாளை முதல் 7 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூடானில் கடந்த 15 ஆம்  திகதி முதல் நடைபெற்ற மோதல்களால் 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் ஒரு இலட்சம் பேர் சூடானிலிருந்து வெளியேறியுள்ளனர் எனவும், 334,000 பேர் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/154362

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2023 at 14:07, ஏராளன் said:

இந்நிலையில், இவ்விரு ஜெனரல்களும் மே 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை 7 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு இணங்கியுள்ளனர் என தென் சூடான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

சிலரின் சூழ்ச்சிக்கு இலக்காகமல் இருவரும் ஓன்றினைந்தால் நன்று 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.