Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்க்கரை நோய் பாதிப்பை எப்படி குறைக்கலாம்? செலவில்லாத இந்த சிகிச்சையை பற்றி தெரியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நீரிழிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை மூன்று நிமிட நடைப்பயிற்சி செய்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

பிரிட்டனில் ஒரு சிறு குழு மீது நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.

ஏழு மணி நேரத்திற்குள், ஒவ்வொரு அரை மணி நேர இடைவெளியில் மூன்று நிமிட நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவு குறைகிறது என்று நீரிழிவு அறக்கட்டளை மாநாட்டில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மொத்தம் 32 நோயாளிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த 'ஆக்டிவிடி ஸ்நாக்' எந்த செலவும் இல்லாமல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரிட்டனைச்சேர்ந்த நீரிழிவு அமைப்பு கூறுகிறது.

 

பிரிட்டனில் சுமார் நான்கு லட்சம் பேர் டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.

உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, கணையத்தின் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்கும் போது அது இன்சுலினை உற்பத்தி செய்ய முடிவதில்லை. இந்த நிலையில் உடலானது வகை 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறது.

இன்சுலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் பற்றாக்குறையால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் இந்த நிலையைத் தவிர்க்க சீரான இடைவெளியில் செயற்கை இன்சுலின் எடுக்க வேண்டிவருகிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நீண்ட காலம் அதிகமாக இருந்தால் நோயாளிக்கு பல கடுமையான நோய்கள் ஏற்படலாம். இதில் சிறுநீரக செயலிழப்பு, கண்பார்வை இழப்பு மற்றும் மாரடைப்பு ஆகியவை அடங்கும்.

டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தினசரி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது ஒரு சோர்வான பணியாக உள்ளது என்று பிரிட்டன் நீரிழிவு ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் டாக்டர் எலிசபெத் ராபர்ட்சன் கூறுகிறார்.

" நமது பழக்க வழக்கங்களில் செய்யப்படும் சில எளிமையான மாற்றங்கள் கொடுக்கும் விளைவுகள் நம்பமுடியாத அளவிற்கு ஊக்கமளிக்கிறது. நடந்துகொண்டே தொலைபேசியில் பேசுவது, குறிப்பிட்ட இடைவெளியில் உங்கள் இருக்கையை விட்டு எழுந்திருந்து நடக்க நினைவூட்டலை அமைத்துக்கொள்வது போன்றவை ரத்த சர்க்கரையை குறைப்பதில் நல்ல பலனை அளிக்கிறது,” என்றார் அவர்.

சர்க்கரை நோய், உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"அதன் நீண்ட கால விளைவுகளைப் புரிந்து கொள்ள மேலும் ஆராய்ச்சி நடத்துவதில் நாங்கள் உற்சாகமாக உள்ளோம்."என்று அவர் குறிப்பிட்டார்.

சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவரும், இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆராய்ச்சியாளருமான டாக்டர். மேத்யூ காம்ப்பெல், இந்த சிறிய செயலின் விளைவு தனக்கு ஆச்சரியம் அளிப்பதாகக்கூறுகிறார்.

'ஆக்டிவிட்டி ஸ்நாக்' என்பது டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கமாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். அதன்பிறகு அவர்கள் வழக்கமான உடற்பயிற்சிகளை செய்யலாம். மற்றவர்களுக்கு, ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க இது எளிய வழியாகும்.

இந்த ஆரம்ப கட்ட சோதனையில் டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 32 பேர் இரண்டு நாட்களுக்கு, ஏழு மணி நேரம் வரை உட்கார்ந்து, அரை மணி நேர இடைவெளியில் நடைபயிற்சி செய்தனர்.

சர்க்கரை நோய், உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு அமர்வில், வழக்கமான இடைவெளியில் நடைப்பயிற்சி செய்தனர். இரண்டாவது அமர்வில் அவர்கள் தொடர்ந்து அமர்ந்திருந்தனர்.

ஒவ்வொரு அமர்வின் தொடக்கத்திலிருந்து 48 மணிநேரங்களுக்கு அவர்களின் ரத்த சர்க்கரை அளவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. இதன் போது அனைவரும் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டனர். இன்சுலின் அளவையும் மாற்றவில்லை.

48 மணி நேரம் நீடித்த இந்த ஆய்வில், தொடர்ந்து உட்காரும் போது சர்க்கரை அளவு ஒரு லிட்டருக்கு 8.2 எம்எம்ஒஎல்(Millimoles/litre)ஆக இருந்தது. சீரான இடைவெளியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்தது (லிட்டருக்கு 6.9 எம்எம்ஒஎல்).

இந்த அணுகுமுறையின் நீண்ட காலப்பலன்கள புரிந்துகொள்வதற்கு மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தான் நம்புவதாக டாக்டர் கேம்ப்பெல் கூறுகிறார்.

"உண்மை என்னவென்றால், மக்கள் மேலும் நடப்பதை ஊக்குவிக்கும் இந்த எளிய வழி, அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு பயனளிக்கும்." என்று அவர் குறிப்பிட்டார்.

நீரிழிவு நோய் என்றால் என்ன?

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நம் உடலால் உறிஞ்ச முடியாமல் போகும் போது நீரிழிவு நோய் உண்டாக்குகிறது.

நாம் எதையாவது சாப்பிட்டால் நம் உடல் கார்போஹைட்ரேட்டுகளை உடைத்து அவற்றை குளுக்கோஸாக மாற்றுகிறது.

இதற்குப் பிறகு பேன்க்ரியாஸில் இருந்து இன்சுலின் என்ற ஹார்மோன் வெளியிடப்படுகிறது, இது நமது உடலின் செல்களுக்கு குளுக்கோஸை உறிஞ்சுமாறு அறிவுறுத்துகிறது.

இதனால் நமது உடலில் ஆற்றல் உருவாக்குகிறது.

ஆனால் இன்சுலின் ஓட்டம் நின்றுவிட்டால், நம் உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.

சர்க்கரை நோய், உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்க்கரை நோயின் வகைகள்

நீரிழிவு நோயில் பல வகைகள் உள்ளன. ஆனால் வகை 1, வகை 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு ஆகியவை மிகவும் பொதுவானவை.

வகை 1 நீரிழிவு நோயில் கணையம் இன்சுலின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்வதை நிறுத்துகிறது. இதன் காரணமாக, நமது ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.

இது ஏன் நடக்கிறது என்பதை இதுவரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இது பரம்பரை மற்றும் வைரஸ் தொற்றுடன் இணைந்து பார்க்கப்படுகிறது.

டயாபட்டீஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் பத்து சதவிகிதம் பேர் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

டைப் 2 நீரிழிவு நோயில் இன்சுலின், தேவைக்கேற்ப கணையத்தில் உற்பத்தி செய்யப்படுவதில்லை அல்லது ஹார்மோன் சரியாக வேலை செய்வதில்லை.

https://www.bbc.com/tamil/articles/cped1wg37v4o

  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சிறியளவான ஆட்களில் செய்யப் பட்டிருந்தாலும், சில முக்கியமான படிப்பினைகளைத் தரும் ஆய்வு. இடையிடையே சில நிமிடங்கள் எழுந்து நடப்பதால் இரத்த குழுக்கோசில் இந்த மாற்றம் என்றால், American Heart Association பரிந்துரைப் படி ஒரு நாளுக்கு 30 நிமிட மிதமான அல்லது தீவிரமான உடற்பயிற்சி, வாரத்தில் ஐந்து நாட்களுக்குச் செய்தால் எவ்வளவு நன்மைகள் விளையுமென ஊகிக்க முடிகிறது.

உடற்பயிற்சி சிறிதோ பெரிதோ எந்த இழப்பும் இல்லை, நன்மைகள் மட்டுமே விளையும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

மிகச் சிறியளவான ஆட்களில் செய்யப் பட்டிருந்தாலும், சில முக்கியமான படிப்பினைகளைத் தரும் ஆய்வு. இடையிடையே சில நிமிடங்கள் எழுந்து நடப்பதால் இரத்த குழுக்கோசில் இந்த மாற்றம் என்றால், American Heart Association பரிந்துரைப் படி ஒரு நாளுக்கு 30 நிமிட மிதமான அல்லது தீவிரமான உடற்பயிற்சி, வாரத்தில் ஐந்து நாட்களுக்குச் செய்தால் எவ்வளவு நன்மைகள் விளையுமென ஊகிக்க முடிகிறது.

உடற்பயிற்சி சிறிதோ பெரிதோ எந்த இழப்பும் இல்லை, நன்மைகள் மட்டுமே விளையும்!

உடல் ஆரோக்கியம் சம்பந்தமான திரிகளில் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கோ அண்ணை. பதிவிடும் எனக்கும் ஊக்கமாக இருக்கும், வாசிப்போருக்கு புரிதல் கூடும்.
ரைப்2 சர்க்கரை நோயை உணவுப் பழக்கத்தாலும்(சம விகித டயற்) உடற் பயிற்சியாலும் வராது தடுக்கலாம் அல்லவா? 

ஒரே நேரத்தில் செய்யும் நடைப் பயிற்சிக்கும் இடையிடையே செய்யும் நடைப் பயிற்சிக்கும் வேறுபாடு உண்டல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிரயோசனமான பதிவு......தொடருங்கள் ஏராளன் ......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நோய் எப்படி/ஏன் ஏற்படுகின்றது என தெரியவில்லை. கடந்த மாதம் என்னுடைய நண்பன் 51 வயது இருவரும் ஒன்றாகவே உயர்தரம் வரை படித்தோம் இந்த நோயினால்  கிட்டதட்ட 18 வருங்கள் அல்லலுற்று.  இரண்டு கிட்னிக‌ளும் செயலலிழ‌ந்து இற‌ந்து போனான். 

இன்னுமொருவார் புறக்கோட்டையில் நாட்டண்மை வேலை செய்வபர். 55 வயதுக்குள் தான் இருக்கும். இந்த நோயினால் இரண்டு கால்களும் வெட்டப்பட்டு சில மாதங்களுக்கு முன் இறந்து போனார். உடற்பயிற்சி செய்யதால் வராது என்றால், இவரது வேலையே கடினமாக பாரம் தூக்கி உடற்பயிற்சி செய்வதல்லவா?

இதே வேளை, கடந்த மார்ச் 14இல் இறந்து போன எனது தகப்பனை நினத்தேன். எனக்கு நினவு தெரிந்த நாளில் இருந்து மனுசனுக்கு எல்லவித பழக்கமும் உண்டு, ஆனல் 79 வயது வரை எந்த‌வித சுகர்/ப்ர்சர் நோயுமின்றி இயற்கையாகவே இறந்து போனார். 

சூரியனுக்கு கீழே கடவுள் மனிதனுக்கு சில விடயங்களை மறைவாகவே வைத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, colomban said:

இன்னுமொருவார் புறக்கோட்டையில் நாட்டண்மை வேலை செய்வபர். 55 வயதுக்குள் தான் இருக்கும். இந்த நோயினால் இரண்டு கால்களும் வெட்டப்பட்டு சில மாதங்களுக்கு முன் இறந்து போனார். உடற்பயிற்சி செய்யதால் வராது என்றால், இவரது வேலையே கடினமாக பாரம் தூக்கி உடற்பயிற்சி செய்வதல்லவா?

வகை 1 நீரிழிவு நோயாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

உடல் ஆரோக்கியம் சம்பந்தமான திரிகளில் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கோ அண்ணை. பதிவிடும் எனக்கும் ஊக்கமாக இருக்கும், வாசிப்போருக்கு புரிதல் கூடும்.
ரைப்2 சர்க்கரை நோயை உணவுப் பழக்கத்தாலும்(சம விகித டயற்) உடற் பயிற்சியாலும் வராது தடுக்கலாம் அல்லவா? 

ஒரே நேரத்தில் செய்யும் நடைப் பயிற்சிக்கும் இடையிடையே செய்யும் நடைப் பயிற்சிக்கும் வேறுபாடு உண்டல்லவா?

ஓம், நிச்சயமாக. தினமும் விடிய கோப்பி குடிக்கும் போதே உடன் போய்ப் பார்ப்பது நலமோடு நாம் வாழ பகுதியைத் தான். பின்னர் நேரமிருந்தால் பதிலும் நன்றிக்குறியும் இட்டு விடுவது. இத்தகவல்களைத் தொடர்ந்து இணையுங்கள்.

உங்கள் கேள்விகளுக்கு, T2D ஐ மிதமான உடற்யிற்சி, உணவு முறையால் தவிர்க்கலாம். மோசமான நிலைக்கு T2D நகர்ந்து விட்டால் கூட, எடுக்கும் மருந்தின் அளவைக் குறைக்க இந்த முறைகள் உதவும்.

இடையிடையே நடப்பதும், தொடர்ந்து நடப்பதும் வித்தியாசமான நல்விளைவுகளைத் தருமென நான் நினைக்கவில்லை. அப்படியேதும் ஆய்வுகள் செய்யப் பட்டிருக்கின்றனவா எனத் தேடிப் பார்த்துச் சொல்கிறேன்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளை வகை மா உணவுகளை நான் உண்பதில்லை.ஒரு சில யோகாசனங்கள் பயனளிக்கலாம். இரவு உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.

எல்லாவற்றையும் விட கடை உணவுகள் சகல நோய்களுக்கும் விரோதி...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இந்த நோய் எப்படி/ஏன் ஏற்படுகின்றது என தெரியவில்லை. கடந்த மாதம் என்னுடைய நண்பன் 51 வயது இருவரும் ஒன்றாகவே உயர்தரம் வரை படித்தோம் இந்த நோயினால்  கிட்டதட்ட 18 வருங்கள் அல்லலுற்று.  இரண்டு கிட்னிக‌ளும் செயலலிழ‌ந்து இற‌ந்து போனான். 

இன்னுமொருவார் புறக்கோட்டையில் நாட்டண்மை வேலை செய்வபர். 55 வயதுக்குள் தான் இருக்கும். இந்த நோயினால் இரண்டு கால்களும் வெட்டப்பட்டு சில மாதங்களுக்கு முன் இறந்து போனார். உடற்பயிற்சி செய்யதால் வராது என்றால், இவரது வேலையே கடினமாக பாரம் தூக்கி உடற்பயிற்சி செய்வதல்லவா?

இதே வேளை, கடந்த மார்ச் 14இல் இறந்து போன எனது தகப்பனை நினத்தேன். எனக்கு நினவு தெரிந்த நாளில் இருந்து மனுசனுக்கு எல்லவித பழக்கமும் உண்டு, ஆனல் 79 வயது வரை எந்த‌வித சுகர்/ப்ர்சர் நோயுமின்றி இயற்கையாகவே இறந்து போனார். 

சூரியனுக்கு கீழே கடவுள் மனிதனுக்கு சில விடயங்களை மறைவாகவே வைத்துள்ளார்.

கொழும்பான், சில நோய்கள் ஏன் வருகின்றன என்பது இன்னும் தெரியாது தான். ஆனால் நீரிழிவைப் பொறுத்த வரை இரு காரணிகள் அறியப் பட்டிருக்கின்றன: பரம்பரை, உணவு முறை/ உடலுழைப்பின்மையினால் வரும் உடற்பருமன் அல்லது அனுசேபத் தொழிற்பாட்டுக் குறைபாடு (metabolic dysfunction).

இவற்றுள் பரம்பரைக் காரணியை வெகு இலகுவாக உணவு, உடற்பயிற்சி மூலம் கட்டுப் படுத்தலாம். ஜீன்களில் இருக்கும் மாற்றம் எங்கள் மரணசாசனமாக இருக்க வேண்டியதில்லை.

உணவு எனும் போது அதிக குடிப் பழக்கமும் கூட அதில் அடங்கி விடுகிறது. உங்கள் நண்பர் அதிகம் உழைத்தாலும், உணவில் நிறையச் சோறும், எண்ணையும், சீனியும் உள்ளெடுத்திருந்தால் நீரிழிவுக்குரிய தோற்றுவாய் வந்து விடுகிறது.

 முதல் நண்பருக்கு சிறு நீரகம் பாதிக்கப் பட்டது (diabetic nephropathy) என்பதால், அவரது இரத்த குழூக்கோஸ் அளவு தொடர்ந்து அதிகமாக இருந்திருக்கிறது என நான் ஊகிக்கிறேன்.

இரண்டாமவருக்கு கால்கள் அகற்றப் படவும், தொடர்ந்த அதிகரித்த இரத்த குழுக்கோஸ் தான் காரணம். இது diabetic neuropathy இனால் ஏற்படுகிறது.

வேலை செய்யாத மருந்தா அல்லது மருந்தை எடுத்துக் கொள்ளாமையா காரணெமெனச் சொல்வது கடினம்! 

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

ஒரு நாளுக்கு 30 நிமிட மிதமான அல்லது தீவிரமான உடற்பயிற்சி, வாரத்தில் ஐந்து நாட்களுக்குச் செய்தால் எவ்வளவு நன்மைகள் விளையுமென ஊகிக்க முடிகிறது.

அந்த சிறந்ததை ஒரு 30 நிமிடம் செய்ய விரும்பமாட்டார்கள் யுரியுப்பில் இந்தியாவில் இருந்து சொன்ன அறிவுரைபடி  கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டி ஆரோக்கியம் என்று குடிப்பார்கள் ☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

" ஒழுக்கம் விழுப்பந் தரலான் 
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் " 

Ist möglicherweise ein Schwarz-Weiß-Bild von Yoga

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்புபே பிழை... நீரிழிவு ஒரு நோய் அல்ல. ஒரு உடற்கோளாறு அல்லது நிலை. 

நீங்கள் எதையும் சாப்பிடுங்கோ.. ஆனால் சாப்பிட்டது உடலில் எரிந்து போகும் அளவுக்கு வேலையோ.. உடற்பயிற்சியோ.. யோகாப் பயிற்சியோ..  ஏன் நல்லா சைக்கிள் ஓட்டமோ... இல்ல ஓட்டநடையோ நடவுங்கோ. சும்மா நடையை விட ஓட்ட நடை/ விரைவு நடை நல்லது. நீச்சல் நல்லது. வீட்டு மாடியில் ஏறி இறங்கி வேலை செய்வது நல்லது. 

மேலும் உள்ளெடுக்கும் உணவில் உள்ள கலோரி அளவை பருமட்டாகக் கணித்து அது எரிய வேலை செய்வது... போதும். சாப்பிட்டிட்டு சும்மா குந்தி இருப்பதால் தான் நீரிழிவு வகை 2 அதிகம் ஏற்படுகிறது. வகை 1 பிறப்புரிமை சார்ந்தது. அதனை ஜீன் சரிபார்ப்புச் சிகிச்சை மூலம் திருத்த ஆய்வுகள் நடக்கின்றன. முன்னேற்றமும் காணப்பட்டுள்ளது. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.