Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துகொள்ளப்பட்டது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துகொள்ளப்பட்டது!

வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துகொள்ளப்பட்டது!

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துகொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், அவர் மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அவருக்கு விசா வழங்க மறுப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்டோருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், அவர் குறித்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்ததுடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வடமேல் மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.

கரன்னாகொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ‘தீவிரமான மற்றும் நம்பகத்தன்மையுடன்’ இருப்பதாகவும், ஆளுநரோ அல்லது அவரது மனைவியோ அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கும், இலங்கையில் குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்கா தமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1330945

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தகரணாகொட விவகாரம் - அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து இலங்கை கவலை

Published By: RAJEEBAN

27 APR, 2023 | 01:15 PM
image

முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொடவை அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளமை குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தீர்மானம் குறித்து வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்  ஜூலிசங்கிடம் தனது கவலையை வெளியிட்டுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் நீண்டகால இருதரப்பு சகாவான அமெரிக்கா உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் எடுத்துள்ள ஒருதலைப்பட்சமான தீர்மானம் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் ஜனநாயக ஆட்சி மற்றும்  நல்லிணக்க கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அரசாங்கம் அடைந்துள்ள உறுதியான முன்னேற்றத்தின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாவது துரதிஸ்டவசமானது எனவும் இலங்கை தெரிவித்துள்ளது.

இந்த சவால்களிற்கு மத்தியிலும் இலங்கை  நல்லிணக்கம் பொருளாதார மீட்சி  சமூக பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றிற்கான தனது முயற்சிகளை தொடரும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/153902

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தை சாட்டாக வைத்து அப்பாவி மக்களை கொலை செய்யும்படி தனது தளபதிகளுக்கு உத்தரவு கொடுத்த கோத்தாவும் மகிந்தவும் இனவெறி தலைக்கேறி உருத்திர தாண்டவம் ஆடிய ராயபக்சகளின் இன்னுமொரு தளபதி பொன்சேகாவும் அமெரிக்காவுக்குள் காலடி வைத்தால் தப்பில்லையா?.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, vanangaamudi said:

யுத்தத்தை சாட்டாக வைத்து அப்பாவி மக்களை கொலை செய்யும்படி தனது தளபதிகளுக்கு உத்தரவு கொடுத்த கோத்தாவும் மகிந்தவும் இனவெறி தலைக்கேறி உருத்திர தாண்டவம் ஆடிய ராயபக்சகளின் இன்னுமொரு தளபதி பொன்சேகாவும் அமெரிக்காவுக்குள் காலடி வைத்தால் தப்பில்லையா?.

அதற்கு இன்னும் ஒரு பத்து பதினைந்து ஆண்டுகள் ஆகலாம். (தடைக்கு)

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தகரணகொடவிற்கு எதிரான தடைக்கு யார் காரணம் - அவர் தெரிவிப்பது என்ன?

இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணா கொட அமெரிக்கா தனக்கு எதிராக விதித்துள்ள தடையின் பின்னணியில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதிமறுக்கப்பட்டவர்கள் பட்டியலில் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளமை குறித்து ஆச்சரியம் வெளியிட்டுள்ள வசந்தகரணாகொட இந்த நடவடிக்கையின் பின்னால் வேறு ஏதோஇருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன ஏதோ இதன் பின்னணியில் உள்ளதாக கருதுகின்றேன், என தெரிவித்துள்ள வசந்த கரணாகொட யுத்தம் முடிவடைந்து 14 வருடங்களி;ன் பின்னர் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது ஆச்சரியமளி;க்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவஅதிகாரியும் அமெரிக்க தூதுவரும் எனக்கு எதிரான தடைக்கு காரணம் என நான் கருதுகின்றேன் எனவும் வசந்த கரணாகொட தெரிவித்துள்ளார்.

அரசசார்பற்ற அமைப்புகளும் ஏனைய விசாரணையாளர்களும் பதிவுசெய்த விபரங்களை அடிப்படையாக வைத்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனக்கு எதிராக தடைகளை விதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் அரசசார்பற்ற அமைப்புகளின் அறிக்கைகளை வைத்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் என்னை தடை செய்வது வெட்கக்கேடான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வசந்தகரணகொடவிற்கு எதிரான தடைக்கு யார் காரணம் - அவர் தெரிவிப்பது என்ன? | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா கடற்படை ஆசாமிகள் அனைவரையும் கறுப்புப் பட்டியலில் இட வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்திரவதைகள்.. இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்கள். இப்போதும் நில மற்றும் மத ஆக்கிரமிப்புச் செயல்களை முன்னின்று நடத்துபவர்கள். 

யுத்தம் முடிந்து 14 என்ன 50 ஆண்டுகள் ஆனாலும் காலத்தைக் கடத்தினாலும் செய்த குற்றங்களுக்கு தண்டனை அவசியம். அதில் இருந்து யாரும் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது. இவர்களை குற்றம் செய்யத் தூண்டிய அமெரிக்காவே இவர்களை முதலில் தண்டிக்க வேண்டும். அது வரவேற்கப்பட வேண்டிய விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்

பதினான்கு வருடங்கள் கழிந்தால்; நீங்கள் செய்தது தப்பில்லை என்றாகிவிடாது, ஆண்டுகள் போனால் உங்களை தண்டிக்க முடியாது என்று ஒன்றுமில்லை. அப்போ எதுக்கு உங்கள் ஆட்கள் கோவைகளை தூக்கிக்கொண்டு அலைகிறார்கள்? ஆண்டுகள் கழிந்தன, பாதிக்கபட்ட மக்களுக்கு என்ன நன்மை செய்தீர்கள் என்று பாடியலிட்டபின் வெட்கப்படுங்கள். உங்கள் கேடான செயலுக்கு வெட்கப்படவில்லை, உங்கள் பெயரும் வெளிவந்துவிட்டதே என்று வெட்கமா? நீங்கள் நிரபராதி என நிரூபியுங்கள், காரணமானவர்களை வெளிப்படுத்துங்கள். ஒவ்வொருவராக தடை தொடர்ந்து வெளிவரும், தலைகள் கடைசியில் பிடிபடும் எத்தனையாண்டுகள் கழிந்தாலும். இல்லது தற்கொலை செய்யுங்கள் உண்மையை சந்திக்க வெட்கமாக இருந்தால்.

  • கருத்துக்கள உறவுகள்

சரத்தின்(பொன்சேகா) வாய்க்கு களி தின்ன வைக்க யாரால் முடியும்? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

முன்னாள் இராணுவஅதிகாரியும் அமெரிக்க தூதுவரும் எனக்கு எதிரான தடைக்கு காரணம் என நான் கருதுகின்றேன் எனவும் வசந்த கரணாகொட தெரிவித்துள்ளார்.

 

18 minutes ago, nunavilan said:

சரத்தின்(பொன்சேகா) வாய்க்கு களி தின்ன வைக்க யாரால் முடியும்? 

கரன்னகொட இங்கு இவரைத்தான் குறிப்பிடுகிறாரோ? அல்லது சவேந்திர சில்வாவோ?

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2023 at 07:23, vanangaamudi said:

யுத்தத்தை சாட்டாக வைத்து அப்பாவி மக்களை கொலை செய்யும்படி தனது தளபதிகளுக்கு உத்தரவு கொடுத்த கோத்தாவும் மகிந்தவும் இனவெறி தலைக்கேறி உருத்திர தாண்டவம் ஆடிய ராயபக்சகளின் இன்னுமொரு தளபதி பொன்சேகாவும் அமெரிக்காவுக்குள் காலடி வைத்தால் தப்பில்லையா?.

அவர்கள் ...மெரிக்காவின் சொல்கேட்டு நடக்கும்வரை அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முன்னாள் கடற்படை தளபதி அமெரிக்காவுக்குள் நுழைய தடை - காரணம் என்ன?

இலங்கை
 
படக்குறிப்பு,

வசந்த கரன்னாகொட, இலங்கை கடற்படை முன்னாள் தளபதி

28 ஏப்ரல் 2023

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியும், வடமேல் மாகாண ஆளுநருமான வசந்த கரன்னாகொட, அவரது மனைவி ஸ்ரீமதி அசோகா கரன்னாகொட ஆகியோருக்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா விதித்த தடைக்கு, இலங்கை அரசாங்கம் தமது கவலையை வெளியிட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியும், வடமேல் மாகாண ஆளுநருமான வசந்த கரன்னாகொட, அவரது மனைவி ஸ்ரீமதி அசோகா கரன்னாகொட ஆகியோருக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடற்படை தளபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் வசந்த கரன்னாகொட, பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவிக்கின்றது.

 

இதனாலேயே, இந்த தீர்மானத்தை எட்டியதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

ராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான திட்டத்தின் 2023 சட்டத்தின் 7031(C) பிரிவிற்கு அமைய, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு தடை விதிப்பதன் ஊடாக, ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமையை பாதுகாத்தல், மனித உரிமையை மீறுவோருக்காக தண்டனையை முடிவுக்கு கொண்டு வருதல், பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் இலங்கையின் குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறலுக்கான ஊக்குவிப்பின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமையும் என அமெரிக்க ராஜாங்க திணைக்களம் கூறுகின்றது.

இலங்கை, அமெரிக்கா இடையிலான 75 வருட இரு தரப்பு உறவானது, பகிரப்பட்ட வரலாறு, பெறுமதிகள், சுதந்திரமான மற்றும் திறந்த இந்து - பசுபிக் பிராந்தியத்திற்கான அர்ப்பணிப்பின் அடிப்படையிலானது எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை அரசாங்கம் கவலை

இலங்கை

2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் தேதி வடமேல் மாகாண ஆளுநரும், கடற்படையின் முன்னாள் தளபதியுமான வசந்த கரன்னாகொடவிற்கு தடை விதித்து அமெரிக்காவினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை கவலையை தெரிவிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கை மிகுந்த கவலையை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு நேற்றைய தினம் அனுப்பியுள்ளதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் , இலங்கையின் நீண்டகால இரு தரப்பு பங்குதாரர் என்ற வகையில், அமெரிக்கா உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஒருதலைபட்சமாக செயற்படுவது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் இலங்கை எடுத்துள்ள முழுமையான அணுகுமுறைக்கு எதிரானதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான முன்னேற்றத்தின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளிவருவது துரதிருஷ்டவசமானது.

இந்த சவால்கள் இருந்தபோதிலும், நல்லிணக்கம், பொருளாதார மீட்சி மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கான தனது தொடர்ச்சியான முயற்சிகளை இலங்கை தொடந்தும் மேற்கொள்ளும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர், அமெரிக்க தூதுவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.

மஹிந்த, கோட்டாவிற்கு கனடா செல்ல தடை

இலங்கை கடற்படை தளபதி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளும், சகோதரர்களுமான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தமது நாட்டிற்குள் பிரவேசிக்க கனடா இந்த ஆண்டு ஆரம்பத்தில் தடை விதித்திருந்தது.

இவர்களை தவிர, பாதுகாப்பு அதிகாரிகளாக கடமையாற்றிய சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டிஆராய்ச்சி ஆகியோருக்கும் கனடா தடை விதித்திருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது, பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை முன்னிலைப்படுத்தியே இந்த தடையை கனடா விதித்திருந்தது.

கனடாவின் இந்த தீர்மானத்திற்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சு உடனடியாக தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தது.

இலங்கையில் 3 தசாப்த காலமாக இடம்பெற்ற உள்நாட்டு போர், 2009ஆம் ஆண்டு மே மாதம் மௌனிக்கப்பட்டது.

இறுதிக் கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இலங்கை அரச படைகளில் தாக்குதல்களில் உயிரிழந்ததாகவும், இறுதி கட்ட போரின் போது இலங்கை அரசாங்க படைகளினால் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே, இந்த தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

https://www.bbc.com/tamil/articles/clw94p597wwo

  • கருத்துக்கள உறவுகள்

இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது இலங்கையின் உள்விவகாரத்தில் (போர்க்குற்றவாளி ஒருவரை தடைசெய்வது என்று என்னால் நேரடியாகச் சொல்ல முடியாத காரணத்தினால்) தலையிடும் வேலை. ரஸ்ஸியா, சீனா ஆகிய இலங்கையின் நட்பு நாடுகளின் கண்டனத்துடன் எனது கண்டனத்தையும் இணைத்துக்கொள்கிறேன் (அப்படியானால் நீயும் இலங்கைக்கு நண்பனா என்றெல்லாம் கேட்கக் கூடாது, ஏனென்றால் என்னிடம் பதில் இல்லை!!!) .

இப்படிக்கு, இலங்கைக்கு ரஸ்ஸியா அளித்துவரும் ஆதரவினூடாக ஈழத்தமிழரின் விடுதலைக்கான வழிகளைத் தேடும் நவீன சிந்தனைச் சி(ற்)ப்பி!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

ரஸ்ஸியா, சீனா ஆகிய இலங்கையின் நட்பு நாடுகளின் கண்டனத்துடன் எனது கண்டனத்தையும் இணைத்துக்கொள்கிறேன்

உலகத்தின் அதி சிறந்த இரண்டு ஜனநாயகநாடுகளுடன் இணைத்து நீங்கள் தெரிவித்த கண்டணம் உலக மக்கள்களின்  ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் நன்மைக்கான கடுமையான முயற்சி.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கை மிகுந்த கவலையை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,

வெளிவிவகார அமைச்சராக இருந்துகொண்டு இதைக்கூட தெரிவிக்காவிட்டால் அந்த அமைச்சுக்கு என்ன மரியாதை? ஒப்புக்காவது குரல் கொடுக்க வேண்டுமே. ஆனால் நம்மவர்கள் ஆழ்ந்த உறக்கம். யாராவது அருகில் இருப்பவர்கள் கதவில் தட்டிப்பார்க்கவும், காலம் அப்படியாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தடை விவகாரம் - வசந்த கரணாகொட அமெரிக்க தூதுவருக்கு கடுமையான கடிதம்

Published By: RAJEEBAN

03 MAY, 2023 | 08:13 AM
image

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கு கடுமையான கடிதமொன்றை எழுதியுள்ள இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி அமெரிக்க தூதுவர் தனதும் தனது குடும்பத்தினதும் உரிமைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
45 வருட குற்றமற்ற அரசசேவையின் மூலம் நான் ஏற்படுத்திக்கொண்ட கௌரவத்;திற்கு நீங்கள் சுமத்தியுள்ள தவறான குற்றச்சாட்டுகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என தனது கடிதத்தில் தெரிவித்துள்ள வசந்தகாரணகொட ஐசிசிஆர்பியின் 17 வது பிரிவின் கீழ் உங்கள் நடவடிக்கைகள் எனது உரிமை மீது நேரடியாக தலையிடுகின்றன எனவும் அமெரிக்க தூதுவருக்கான கடிதத்தில் தெரிவித்துள்ளார்


இலங்;கையின் சட்டங்களின் அடிப்படையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டமை தொடர்பான  சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து இதற்காக தான் நியாயம் கேட்கவுள்ளதாக வசந்தகரணாகொட  தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் எனது கருத்தினை கேட்கவில்லை என அமெரிக்க தூதுவருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் வசந்தகரணாகொட தெரிவித்துள்ளார்.
வசந்தமீதான தடை – ஜூலி சங் முன்கூட்டியே அலிசப்ரிக்கு தெரிவித்தார் என டெய்லிமிரரில் வெளியான விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள வசந்தகரணாகொட நீங்கள் ( அமெரிக்க தூதுவர்) முன்கூட்டியே வெளிவிவகார அமைச்சருக்கு தெரிவித்த போதிலும் இது குறித்து எனக்கு தெரிவிக்கவில்லை எனவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/154342

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.