Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் சொந்தமாக காணி வாங்கிய பிக்கு – காணிக்குள் விகாரை அமைப்பதற்கு விண்ணப்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சொந்தமாக காணி வாங்கிய பிக்கு – காணிக்குள் விகாரை அமைப்பதற்கு விண்ணப்பம்!

யாழில் சொந்தமாக காணி வாங்கிய பிக்கு – காணிக்குள் விகாரை அமைப்பதற்கு விண்ணப்பம்!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் தனியார் காணி ஒன்றினை கொள்வனவு செய்துள்ள பௌத்த பிக்கு ஒருவர், அக்காணியினுள் விகாரை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுன்னாகம் கந்தரோடை பகுதியில் தமிழ் – பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களும், அதன் எச்சங்களும் காணப்படுகின்றன. அவை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

தமிழ் – பௌத்த எச்சங்கள் காணப்படும் இடத்திற்கு அருகில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான சுமார் 06 பரப்பு காணியினை தென்னிலங்கையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த காணிக்குள் புதிய விகாரை ஒன்றினை அமைக்கவுள்ளதாகவும், விகாரை அமைக்கவுள்ள காணிக்கு அருகில் தொல்லியல் எச்சங்கள் காணப்படுவதனால், விகாரை அமைப்பதால் அதற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா ? அக்காணியில் விகாரை அமைக்கலாமா ? என தொல்லியல் திணைக்களத்திடம் அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

தொல்லியல் திணைக்களம் விகாரை அமைக்க அனுமதி வழங்கியவுடன், ஏனைய அனுமதிகளை விரைந்து எடுத்து, விகாரை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பிக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2023/1331106

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட கடற்கரையோரமாகவும் விலைகளைக் கூட்டி நிலங்களை வாங்குகின்றனர். என்ன நோக்கமோ? யார் பினாமியோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம், கடற்படை கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்காமல் வைத்திருப்பதற்கு இதுவும் ஒருகாரணம், தாங்கள் அனுபவிக்க முடியாமல் உள்ள காணிகளை அவர்களுக்கே விற்று விடுவார்கள், அதன்பின் இராணுவ குடியேற்றங்கள், விகாரைகள், தேர்தல் தொகுதிகள். நமக்கொன்றும் பிரச்சனையில்லை, எப்போதும் குத்துவதுபோல் குத்திவிட்டு போய்க்கொண்டே இருப்போம். வீரவசனம் பேசி வாக்குச் சேகரிக்கிறவர்கள் சிங்கள வேட்ப்பாளருக்கு வாக்கு போட சம்மதமா? அதுசரி .... வேண்டியளவு சம்பாதிச்சாச்சு, யார் ஆண்டா அவர்களுக்கென்ன? இனி ஆறுதலாய் இருந்து சம்பாதித்தவைகளை அசைபோட்டு அனுபவிக்க வேண்டியான்.  ஓய்வூதியம் அரச சலுகை இத்தியாதி......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

ஆசைகளை துறந்த  பிக்குவுக்கு...   காணி வாங்கக்  கூடிய அளவுக்கு காசு எங்கிருந்து வந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, தமிழ் சிறி said:

ஆசைகளை துறந்த  பிக்குவுக்கு...   காணி வாங்கக்  கூடிய அளவுக்கு காசு எங்கிருந்து வந்தது.

புத்த பிக்குவா? அது காவியுடை போர்த்திய சிங்கள இனவாதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

புத்த பிக்குவா? அது காவியுடை போர்த்திய சிங்கள இனவாதி.

சும்மா... அவங்களின் மனசு சந்தோசப் படட்டுமே.... என்று, புத்த பிக்கு என்று சொன்னேன். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

புத்த பிக்குவா? அது காவியுடை போர்த்திய சிங்கள இனவாதி.

முகாமில் இராணுவ சிப்பாய், விகாரையில் பிக்கு. தமிழரை கொள்ளையடித்து போதைப்பொருள் கடத்தி வந்த பணம். உலகம் தரும் கடன் இவற்றுக்கே செலவிடப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புத்த பிக்குவுக்கு காணியை விற்ற புண்ணியவான் வாழ்க. ஒரு புத்த பிக்கு சுன்னாகத்தில் காணிவாங்க என்ன தேவையிருக்கின்றது என சிந்திக்கவேண்டாமா? அதிகம் காசு புத்த பிக்கு கொடுத்திருப்பார். காசுக்கு முன்னே மானமென்ன இனமென்ன! 

இப்பிடித்தான் யூதர்களின் தாயகமான இஸ்ரேலில் பல நூற்றாண்டுகளாக திட்டமிட்டு ஏதோமியர்கள் ரோமர்கள் பின்னர் ஒட்டேமான் அரசர்களினால் குடியேற்றப்பட்ட அராபியர்கள் மேற்குகரையிலும் காஸாவிலும் தாம்வாழ்ந்த இடங்களை மீண்டும் யூதர்களிடம் அதிக காசுக்கு விற்றுவிட்டு இப்ப புலம்பிக்கொண்டு திரிகின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது சின்ன  வயதில்... யாழ் நாக விகாரை, ஒரு சிறிய காணியில் இருந்தது.
விடுதலை இயக்கங்கங்கள் ஆரம்பிக்க முன்பே...
அந்த விகாரை... மெல்ல, மெல்ல.. அயலில் உள்ள காணிகளை வாங்கி,
சிங்களப் பகுதிகளில் இருந்து வருபவர்கள் தங்க என்று  கட்டிடங்களை கட்டி..
இப்போ முன், பின் பக்கம் உள்ள பெரும்பாலான காணிகளை 
தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்கள்.

இதே நிலைமை... சுன்னாகத்திலும் நடக்கும்.
ஒருவன் பணத்துக்கு ஆசைப் பட்டு, தனது காணியை... பிக்குவிற்கு விற்பதால்..
அயலில்... நீண்ட காலமாக வசித்து வந்த பலரும், நிம்மதியை இழக்கப் போகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாலி said:

3 hours ago, தமிழ் சிறி said:

எனது சின்ன  வயதில்... யாழ் நாக விகாரை, ஒரு சிறிய காணியில் இருந்தது.
விடுதலை இயக்கங்கங்கள் ஆரம்பிக்க முன்பே...
அந்த விகாரை... மெல்ல, மெல்ல.. அயலில் உள்ள காணிகளை வாங்கி,
சிங்களப் பகுதிகளில் இருந்து வருபவர்கள் தங்க என்று  கட்டிடங்களை கட்டி..
இப்போ முன், பின் பக்கம் உள்ள பெரும்பாலான காணிகளை 
தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்கள்.

இதே நிலைமை... சுன்னாகத்திலும் நடக்கும்.
ஒருவன் பணத்துக்கு ஆசைப் பட்டு, தனது காணியை... பிக்குவிற்கு விற்பதால்..
அயலில்... நீண்ட காலமாக வசித்து வந்த பலரும், நிம்மதியை இழக்கப் போகின்றார்கள்.

கொள்பிட்டி முதல், கல்கிசை வரை நம்மாட்கள் வாங்கிக் குவித்துள்ளனர். 

ஆகவே, உது பிழை எண்டு சொல்ல ஏலாது. ஆனால் விகாரை அமைப்பது தவறுதான்.

மிக முக்கியமாக வெடுக்கு நாறி, குருந்தூர் மிக மிக தவறு.

பெளத்த தமிழர்கள் வாழ்ந்த இடங்கள், சிங்கள பெளத்தர் வாழ்ந்த இடங்களாக, கதை மாறாமல் இருக்க வேண்டும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Nathamuni said:

கொள்பிட்டி முதல், கல்கிசை வரை நம்மாட்கள் வாங்கிக் குவித்துள்ளனர். 

ஆகவே, உது பிழை எண்டு சொல்ல ஏலாது. ஆனால் விகாரை அமைப்பது தவறுதான்.

மிக முக்கியமாக வெடுக்கு நாறி, குருந்தூர் மிக மிக தவறு.

பெளத்த தமிழர்கள் வாழ்ந்த இடங்கள், சிங்கள பெளத்தர் வாழ்ந்த இடங்களாக, கதை மாறாமல் இருக்க வேண்டும்.

நாட்டின் தலைநகரத்திலும் அதையொட்டிய புறநகர்ப் பகுதிகளிலும் தமிழர்கள் வீடு, காணி வாங்குவதையும், சிங்களவர்கள் வாழாத தனித் தமிழ்க் கிராமமான சுன்னாகத்தில் காணி வாங்கி விகாரை அமைப்பதையும் ஒரே நோக்கில் பார்க்க முடியாது.

தலைநகரில் பல்லின மக்களும் வாழ்வார்கள் அது குறிபிட்ட ஒர் இன மக்களுக்கு சொந்தமானதாக இருக்காது அதனையொட்டி புறநகர்ப்பகுதியிலும் பல்லின மக்கள் வாழ்வார்கள். ஆனால் தனித் தமிழ்க் கிராமமான சுன்னாகத்தில் விகாரை அமைப்பதென்பது தமிழ்ப் பௌத்த அடையாளங்களை கபளீகாரம் செய்து சிங்கள மயமாக்கி வரலாற்றினை மாற்றி எழுதும் நோக்கமேயன்றி வேறொன்றில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஒரு திரியில் @குமாரசாமி அண்ணா கூறியது ஞாபகம் வருகிறது. தமிழர்கள் சிலர் பெளத்த பிக்குகளாக மாறி  விகாரைகளை தமது பொறுப்பில் எடுத்தால் பெளத்தம் என்றால் சிங்களம் என்ற நிலையை மாற்றலாம்.  என்ன செய்ய இப்படியெல்லாம் கிறுக்கு தனமாக சிந்திக்க வேண்டி இருக்கு. 😂 

  • கருத்துக்கள உறவுகள்

பிக்கு துறவிக்கு பணம் எப்படி கிடைத்தது காணி வாங்குவதற்கு. இவங்களிடம் அகப்பட்ட புத்தபகவான் தான் பாவம். 

50 minutes ago, வாலி said:

நாட்டின் தலைநகரத்திலும் அதையொட்டிய புறநகர்ப் பகுதிகளிலும் தமிழர்கள் வீடு, காணி வாங்குவதையும், சிங்களவர்கள் வாழாத தனித் தமிழ்க் கிராமமான சுன்னாகத்தில் காணி வாங்கி விகாரை அமைப்பதையும் ஒரே நோக்கில் பார்க்க முடியாது.

தலைநகரில் பல்லின மக்களும் வாழ்வார்கள் அது குறிபிட்ட ஒர் இன மக்களுக்கு சொந்தமானதாக இருக்காது அதனையொட்டி புறநகர்ப்பகுதியிலும் பல்லின மக்கள் வாழ்வார்கள். ஆனால் தனித் தமிழ்க் கிராமமான சுன்னாகத்தில் விகாரை அமைப்பதென்பது தமிழ்ப் பௌத்த அடையாளங்களை கபளீகாரம் செய்து சிங்கள மயமாக்கி வரலாற்றினை மாற்றி எழுதும் நோக்கமேயன்றி வேறொன்றில்லை!

இப்படி நடைபெறுவதை தடுக்க ஒரு வழி உள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்கள் தங்கள் இடங்களுக்கு திரும்பி சென்று வாழ வேண்டும். இது உங்களால் முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

நான் தெளிவாக சொன்னேனே....

காணி வாங்குவதில் தவறு சொல்ல முடியாது. தலைநகர் என்று சாட்டு சொல்ல முடியாதே!

சமய நிலையங்கள் கட்டுவது தவறு. வெள்ளவத்தைல, காணி வாங்குறது சரி... கோவில் கட்ட கூடாது தானே...

ஆனாலும் இலண்டணில், சின்ன இடத்தில கோயில் தொடங்கி... உண்டியலில காசு சேர... புறுபுறுக்கிற பக்கத்து வீடுகளை வாங்கி....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

இப்படி நடைபெறுவதை தடுக்க ஒரு வழி உள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்கள் தங்கள் இடங்களுக்கு திரும்பி சென்று வாழ வேண்டும். இது உங்களால் முடியுமா?

சரியான கேள்வி.

அங்கிருப்பஙர்கள் காணியை, வீட்டை விற்று வெளில வர முணைகின்றனர். வந்து வசதி வந்தவர்கள் தெற்கே வாங்கிப் போடுகிறார்கள். சுழற்சி தான்!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் 63 நாயன்மார்களுடன் புத்தரையும் சேர்த்து விடுவது உத்தமம் ஆரிய இந்துக்களின்  வேல்விகளில்பலியிடும் விலங்குகளை பார்த்தே புத்தன் உருவாகியது என்கிறார்கள்.இப்போது அவை இல்லையே புத்தன் தன்னுடைய  தாய் மதமாகிய இந்து சமயத்துக்கு திரும்புகிறார்  ஏற்றுகொள்ளபடுகிறார் என்று ஏதவது லூசு சாமியாரை வைத்து அறிக்கை விடவேண்டியதுதான் இப்போதைக்கு நித்தி ஆனந்தா நம்ம தெரிவு.😃 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெருமாள் said:

உடானாசு சுவாமியார எப்பூடீ?😜😁

  • கருத்துக்கள உறவுகள்

வித்தவனைத் திட்டாமல் வாங்கினவனைத் திட்டினாலென்ன செய்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இப்படி நடைபெறுவதை தடுக்க ஒரு வழி உள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்கள் தங்கள் இடங்களுக்கு திரும்பி சென்று வாழ வேண்டும். இது உங்களால் முடியுமா?

எங்களுக்கு என்ன விசரே அங்கு போய் வாழ.அங்கு பாம்பு புச்சி தொல்லை மற்றும் ஒழுங்கான மருத்துவம் இல்லை..இன்னும் பல.ஏதோ எம்மால் முடிந்தது யாரையாவது திட்டுவது மட்டும் தான்.அதிலையும் மண்ணை அள்ளிப் போடாடைதையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்திற்கு முந்தைய காலத்திலும் வடக்குக் கிழக்கில் பெளத்த மயமாக்கத்திற்காக பிக்குகள் காணிகளை வாங்கி இருக்கின்றனர். ஈனத்தமிழர்கள் சிலர் அவற்றை விற்றும் இருக்கின்றனர். குறிப்பாக புங்குடுதீவில் புத்த பிக்குகள் நிறைய காணிகளை கொள்வனவு செய்ததாக முன்னர் சொல்லப்பட்டு வந்தது. நயினாதீவு புத்த விகாரை காணியும் கொள்வனவு செய்யப்பட்டே பின்னர் கடற்படையும் சேர்ந்து காணி பிடிச்சு விரிவாக்கினது.

புத்த சின்னம் எங்கு இருந்தாலும் அது சிங்கள பெளத்தத்தின் வெளிப்பாடு என்று நம்பும் சொறீலங்கா பேரினவாத பயங்கரவாதப் பிக்குகள்..புத்த மதம் பின்பற்றப்பட்ட மற்றைய நாடுகளுக்கும் பெளத்த சாயம் பூசி உரிமை கோருவார்கள் போல இருக்கே.

35 ஆண்டுகால யுத்தம்.. இனப்படுகொலைகள்.. இனக்கலவரங்கள்.. போர்க்குற்றங்கள்.. இவ்வளவையும் சந்தித்த ஒரு இனம்.. இவ்வளவையும் செய்த இனத்திற்கு அதுவும்.. பெளத்த மத ஆக்கிரமிப்புக்கு காணி வழங்குது அல்லது விற்குது என்றால்.. இப்படியாப்பட்ட இனம்.. இந்த உலகில் சுதந்திரமாக வாழத்தான் வேணுமா..??! இப்படியே அடிமையாகக் கிடந்து சாகட்டும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

காணியை வாங்கிய புத்த துறவி மூன்றாம் நபர் மூலம் காணியை கொள்வனவு செய்து இருக்கலாம். காணியை விற்றவர் முகவர் மூலம் காணியை விற்றாரோ என்னவோ. நாங்கள் சிறுவயதில் புத்த துறவிகளை காணும்போது ஒருவருக்கு மற்றவர் எங்கள் கைகளில் கிள்ளிவிடுவோம். என்ன காரணம் என்று தெரியவில்லை. இப்படி ஒரு பழக்கம் அப்போது காணப்பட்டது. விகாரைகள் வருவது ஒருபுறம். பின்னர் போயா, வெசாக், இதர புனித நாட்களில் ஒலிபெருக்கி ஓசை காதை கிழிக்கும். நாம் பெற்ற இன்பத்தை பெறப்போகும் சுன்னாகத்து மக்கள் கொடுத்து வைத்தவர்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, island said:

முன்பு ஒரு திரியில் @குமாரசாமி அண்ணா கூறியது ஞாபகம் வருகிறது. தமிழர்கள் சிலர் பெளத்த பிக்குகளாக மாறி  விகாரைகளை தமது பொறுப்பில் எடுத்தால் பெளத்தம் என்றால் சிங்களம் என்ற நிலையை மாற்றலாம்.  என்ன செய்ய இப்படியெல்லாம் கிறுக்கு தனமாக சிந்திக்க வேண்டி இருக்கு. 😂 

அதுதான் நான் சொன்னனே......புத்தர் சிலையை வைச்சு திருநீறு  சந்தணம் பூசி ......பூ மாலையும் வடை மாலையும் போட்டு பஞ்சபுராணம் படிச்சு மணியடிக்க பிக்கு சீறிக்கிட்டு ஓடுவான். :rolling_on_the_floor_laughing:
புத்தருக்கு அரோகரா :cool:

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

அதுதான் நான் சொன்னனே......புத்தர் சிலையை வைச்சு திருநீறு  சந்தணம் பூசி ......பூ மாலையும் வடை மாலையும் போட்டு பஞ்சபுராணம் படிச்சு மணியடிக்க பிக்கு சீறிக்கிட்டு ஓடுவான். :rolling_on_the_floor_laughing:
புத்தருக்கு அரோகரா :cool:

அது தான் திறமான வேலை 👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nedukkalapoovan said:

35 ஆண்டுகால யுத்தம்.. இனப்படுகொலைகள்.. இனக்கலவரங்கள்.. போர்க்குற்றங்கள்.. இவ்வளவையும் சந்தித்த ஒரு இனம்.. இவ்வளவையும் செய்த இனத்திற்கு அதுவும்.. பெளத்த மத ஆக்கிரமிப்புக்கு காணி வழங்குது அல்லது விற்குது என்றால்.. இப்படியாப்பட்ட இனம்.. இந்த உலகில் சுதந்திரமாக வாழத்தான் வேணுமா..??! இப்படியே அடிமையாகக் கிடந்து சாகட்டும்.

ஆருக்கும் காணி மலிஞ்ச விலையிலை வித்தாலும் விற்பனே  தவிர அவங்களுக்கு ஒரு பரப்பும் விற்கமாட்டன் எண்ட கொள்கை (கீழ்சாதியினர்) ஊர்களில் இருக்கும் வரை தமிழினம் முன்னேற வாய்ப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஆருக்கும் காணி மலிஞ்ச விலையிலை வித்தாலும் விற்பனே  தவிர அவங்களுக்கு ஒரு பரப்பும் விற்கமாட்டன் எண்ட கொள்கை (கீழ்சாதியினர்) ஊர்களில் இருக்கும் வரை தமிழினம் முன்னேற வாய்ப்பில்லை.

இப்படி பலகதை உள்ளது சாமியார் 15லட்சம் கேட்ட காணியை 7லட்சத்துக்கு தங்கடை ஆட்களுக்கு விற்று தம் குல  பெருமை தேடிய சாதி மான். வாங்கிய குலபெருமை சிங்கம் 15 லட்சத்துக்கு முன்பு கேட்டவருக்கு விற்று லாபம் பார்த்தது வாங்கியவரும் பெரும் எடுப்பில் இரண்டு மாடி வீடு கட்டி அழகு பார்க்க விற்றவருக்கு இருதய அடைப்பு வந்து ஆள் மேலே போய் விட்டார் இப்படி நிறைய கதைகள் 2௦௦9 க்கு பிறகு இருக்கு புலி இருக்கும் மட்டும் சாதி இல்லை புலி போனபின் பல கோவில்கள் சில பேருக்கு தடை கொடுக்க அவர்களோ தனி தனி கோவில்கள் அமைத்து ஐய்யர் மாரையும் கூப்பிட்டு பூஜை செய்ய . கடைசியில் பெரிய கோவில்கள் பாம்பு புற்று வளர்ந்து சுத்தம் செய்ய ஆட்கள் கிடைக்காமல் பால் பட்டு கிடக்குது இதைத்தான் மேட்டுக்குடி திமிர் என்பது இப்படியான இனத்துக்கு விடுதலை ஒரு கேடு நெடுக்கு சொல்வது போல் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.