Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புடின் விரைவில் கொல்லப்படுவார் சிதறும் ரஷ்யா – அமெரிக்கா உளவுத்துறை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எனது கருத்து மட்டும் நீக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்திற்கும் அமெரிக்கா, மேற்குமீது அதீத விசுவாசம் வந்துவிட்டதா??

  • Replies 170
  • Views 11.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

ஒரு காலத்தில் பொது நலம் என்று ஒன்று இருந்தது.
ஆனால் இன்றோ பொது நலனும் வியாபார நலனாக மாறி விட்டது.
கொண்ட கொள்கையும் சுய நலனுக்காக மாற்றப்பட்டு விட்டது.

 வியாபாரிகளின் வியாபார உலகம்.

இது உண்மை👍! இப்போது வியாபாரமும் இலாபமும் தான் எந்தப் பக்கம் நிற்பது என்றே மனிதர்களைத் தீர்மானிக்க வைக்கிறது.

- தனிப்பட ஒரு தலைவரைப் பிடிக்கும் - எனவே அவர் செய்வதெல்லாம் நியாயம் என்பது

- ஒரு "கட்சியில் உறுப்பினராக இருப்பதால் கட்சிக் கொள்கையை மீறி எதுவும் யோசிக்க மாட்டேன்" என்பது

- "நான் இருக்கும் நாட்டில் எல்லாம் சீராக இருக்க வேண்டும், ஆனால் வேறு சில நாடுகளுக்கு இரும்புக் கரம் தான் நல்ல ஆட்சி தரும்" என்பது.

இவை யாவுமே "சுய இலாபம் அறத்திசை காட்டியை உடைத்து விடும்" என்பதன் உதார்ணங்களே!

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kapithan said:

புடினைக் கொலை செய்ய முயற்சி. கிரெம்ளின் மீது தாக்குதல். 

இது  ரசியர்களால் செய்யப்பட்டிருந்தால் நல்ல விடயம்

ரசியாவில் இனியாவது ஐனநாயகம் காப்பாற்றப்படட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

புடினைக் கொலை செய்ய முயற்சி. கிரெம்ளின் மீது தாக்குதல். 

இதனை உக்ரைன் செய்திருந்தால்,  வட்டியுடன் சேர்த்து...  வாங்கிக் கட்டப் போகுது. 
பிறகு அங்கை நோகுது, இங்கை நோகுது என்று... செலென்ஸ்கி கத்தப்  படாது.

Wolodymyr Selenskyj glaubt an schnelles Kriegsende bei Putins Tod

செலென்ஸ்கி... இப்பவே போய், பங்கருக்குள் இருக்கிறது நல்லது. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

false flag operations எனப்படும் அரங்கேற்றப் பட்ட தாக்குதல்களுக்குப் பெயர் போன நாடு ரஷ்யா. இதுவும் அதே போன்ற ஒன்றா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

false flag operations எனப்படும் அரங்கேற்றப் பட்ட தாக்குதல்களுக்குப் பெயர் போன நாடு ரஷ்யா. இதுவும் அதே போன்ற ஒன்றா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விதைத்தவனே அறுவடை  செய்வான்

(தலையங்கத்துக்குள்  தானே  நிற்கிறோம்...)

புடின் விரைவில் கொல்லப்படுவார் சிதறும் ரஷ்யா – அமெரிக்கா உளவுத்துறை..!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதனை உக்ரைன் செய்திருந்தால்,  வட்டியுடன் சேர்த்து...  வாங்கிக் கட்டப் போகுது. 
பிறகு அங்கை நோகுது, இங்கை நோகுது என்று... செலென்ஸ்கி கத்தப்  படாது.

Wolodymyr Selenskyj glaubt an schnelles Kriegsende bei Putins Tod

செலென்ஸ்கி... இப்பவே போய், பங்கருக்குள் இருக்கிறது நல்லது. 

என்ன சிறி

ரசியா உக்ரைனின் தலைநகரில் நிற்கிறது என்று பார்த்தால் உக்ரைன் ரசியாவின் தலையில் நிற்குது??

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

என்ன சிறி

ரசியா உக்ரைனின் தலைநகரில் நிற்கிறது என்று பார்த்தால் உக்ரைன் ரசியாவின் தலையில் நிற்குது??

விசுகு, நல்லாய் நிற்கட்டும். 
இப்பவே.... உக்ரைன் பக்கம்,  "சங்கு ஊதுற"  சத்தம் கேக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

விசுகு, நல்லாய் நிற்கட்டும். 
இப்பவே.... உக்ரைன் பக்கம்,  "சங்கு ஊதுற"  சத்தம் கேக்குது.

ம்ம்ம்

ஒரு முடிவு வரட்டும்

உலகம்  அமைதி  பெறட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

ம்ம்ம்

ஒரு முடிவு வரட்டும்

உலகம்  அமைதி  பெறட்டும்

பெப்ரவரி 2022 முதல் இது வரைக்கும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தாத ரஷ்யா இனித்தான் தாக்குதல் நடத்தப் போகுது😎!

பாபநாசம் (அல்லது திரிஷியம்) படத்தில் வரும் சாட்சிகள் போல நினைவு குழப்பப் பட்டவர்கள் (memory-manipulated) இனி இதைத் தான் சொல்வார்கள்: "கிரெம்ளினுக்கு உக்ரைன் வாணம் விட்டாப் பிறகு தான் ரஷ்யா தாக்கவே ஆரம்பித்தது!"  😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

தலை விழுவதைப்பார்த்தேன்

பரவசமடைந்தேன்

உலகம்  அமைதி  பெறட்டும்  இப்படிக்கு :குகதாசானந்தா☺️

  • கருத்துக்கள உறவுகள்

புதினை கொல்ல யுக்ரேன் முயற்சிப்பதாக ரஷ்ய அதிபர் மாளிகை குற்றச்சாட்டு - என்ன நடந்தது?

ரஷ்யா தாக்குதல்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையான கிரெம்ளினை இலக்கு வைத்து பறந்த இரண்டு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதன் மூலம் தங்களுடைய அதிபர் விளாதிமிர் புதினை கொல்ல யுக்ரேன் முயற்சித்ததாக கிரெம்ளின் குற்றம்சாட்டியிருக்கிறது.

சமூக ஊடகங்களில் சரிபார்க்கப்படாத காணொளி காட்சியொன்றில் கிரெம்ளினுக்கு மேலே ஒரு பொருள் அது வீழ்த்தப்படும் முன்பாக பறப்பதை காண முடிகிறது.

இந்நிலையில், இந்த ட்ரோன் தாக்குதலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று யுக்ரேன் தெரிவித்துள்ளது.

மின்னணு ரேடார் தளவாடத்தை பயன்படுத்தி இந்த இரண்டு ட்ரோன்களும் முடக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது அதிபர் புதின் கிரெம்ளினில் இல்லை என்று அவரது செய்தித் தொடர்பாளர் கூறினார்.

நடந்த சம்பவம் தொடர்பாக கிரெம்ளின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நேற்றிரவு, யுக்ரேன் ஆட்சியாளர் ரஷ்ய கூட்டமைப்பின் தலைவரை இலக்கு வைத்து கிரெம்ளின் மாளிகை மீது ஆளில்லா வான்வழி சாதனங்கள் மூலம் தாக்குதல் நடத்த முயன்றது." என கூறப்பட்டுள்ளது.

மேலும், "இது திட்டமிட்ட பயங்கரவாத செயலாகவும், அதிபர் மீதான படுகொலை முயற்சியாகவும் கருதுகிறோம். "எங்கு, எப்போது தேவை என்று கருதினாலும் பதிலடி நடவடிக்கைகளை எடுக்க ரஷ்யாவிற்கு உரிமை உள்ளது" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புதினுக்கு மிக உயரிய அளவிலான தனி பாதுகாப்பு உள்ளது. இது குறித்து பிபிசியின் ரஷ்யா ஆசிரியர் ஸ்டீவ் ரோசன்பெர்க் கூறுகையில், "ட்ரோன்கள் கிரெம்ளினுக்கு அருகே சென்றிருக்கலாம் என்று நினைப்பது கூட ஆச்சரியமாக இருக்கிறது. நடந்த தாக்குதலில் அதிபருக்கு எதுவும் ஆகவில்லை. அவரது அன்றாட பணிகள் எப்போதும் போல் தொடரும் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. மாஸ்கோவிற்கு வெளியே நோவோ ஒகாரியோவோவில் அதிபர் இருந்துள்ளார்," என்று தெரிவித்தார்.

ரஷ்யா தாக்குதல்

ரஷ்ய சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் புதன்கிழமை அதிகாலை நேரத்தில் மத்திய மாஸ்கோவில் புகை படிந்திருந்ததை காண முடிந்தது.

"இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கிரெம்ளின் வளாகத்தில் ட்ரோன்களின் பாகங்கள் விழுந்துள்ளன. ஆனால் இதில் யாரும் காயம் அடையவில்லை. கட்டடங்களுக்கும் சேதம் ஏற்படவில்லை," என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் 'மே 9 வெற்றி தின' அணிவகுப்புக்கு சில தினங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் கிரெம்ளின் அதன் செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பட மூலாதாரம்,REUTERS

அந்த அணிவகுப்பில் வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ரஷ்யாவின் வெற்றி தின அணிவகுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் கிரெம்ளினை மேற்கோள்காட்டி தெரிவித்தன.

இந்நிலையில், "ரஷ்யாவில் நடந்த சம்பவம், மே 9 நிகழ்வுக்கு முன்பு நிலைமையை பதற்றமாக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ளது" என்று யுக்ரேன் அதிபரின் செய்தித் தொடர்பாளர் செரி நிகிஃபோரோஃப் கூறினார்.

புதின் மீது தாக்குதல் முயற்சி

இதற்கிடையே, இமாஸ்கோ நகரில் அங்கீகரிக்கப்படாத ட்ரோன் விமானங்கள் பறப்பதற்கு நகர மேயர் செர்கே சோபியானின் புதன்கிழமை தடை விதித்துள்ளார்.

ட்ரோன் விமானங்களுக்கு அரசாங்கத்தின் சிறப்பு அனுமதி தேவைப்படும் என்று அவர் கூறினார்.

ரஷ்யாவில் உள்ள பல நகரங்கள் இந்த ஆண்டு வெற்றி தின கொண்டாட்டங்களின் தன்மையை குறைத்துக் கொள்வதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காகவும் யுக்ரேனிய சார்பு படைகளின் சாத்தியமிகு தாக்குதல்களை மேற்கோள்காட்டியும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் மாற்றங்கள் செய்யப்படுவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் வெடிப்புகள் மற்றும் தீ விபத்து சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

https://www.bbc.com/tamil/articles/c4npe8yexz3o

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஏராளன் said:

எப்படி இருந்த ரசியா?

ஒரு பொடிப்பயலுக்கு பயந்து??

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

1) இது  ரசியர்களால் செய்யப்பட்டிருந்தால் நல்ல விடயம்

2) ரசியாவில் இனியாவது ஐனநாயகம் காப்பாற்றப்படட்டும்

உக்ரேன்  மீது பெரும் தாக்குதலை மேற்கொள்வதற்கு சாட்டாக இந்தத் தாக்குதலை ரஸ்யாவே மேற்கொண்டதாக நான் யூகிக்கிறேன். 

2)/கிரெம்ளின் மீதான தாக்குதல் எப்படி சனநாயகத்தைக் காப்பாற்றும்? 

சதாம், கடாபி போன்று புட்டினையும் கழுவேற்றம் செய்ய வேண்டும் என்கிறீர்கள் அப்படித்தானே ? 

Junior Bush தோற்றார் போங்கள் 🤣

(தங்களுக்கு ரத்தச் சுண்டல, பொரியல் நன்கு விருப்பமோ 🤣)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kapithan said:

உக்ரேன்  மீது பெரும் தாக்குதலை மேற்கொள்வதற்கு சாட்டாக இந்தத் தாக்குதலை ரஸ்யாவே மேற்கொண்டதாக நான் யூகிக்கிறேன். 

2)/கிரெம்ளின் மீதான தாக்குதல் எப்படி சனநாயகத்தைக் காப்பாற்றும்? 

சதாம், கடாபி போன்று புட்டினையும் கழுவேற்றம் செய்ய வேண்டும் என்கிறீர்கள் அப்படித்தானே ? 

Junior Bush தோற்றார் போங்கள் 🤣

(தங்களுக்கு ரத்தச் சுண்டல, பொரியல் நன்கு விருப்பமோ 🤣)

உங்கள் போன்றவர்களுடன் தலையிடியே இது தான். எழுதும் கருத்தை கிரகித்து வாசிப்பதில்லை. அவரவருக்கு நீங்களாகவே ஒரு அவதார்களை போட்டு விட்டு உங்கள் ரெடிமேட் கருத்தை எழுதவேண்டிய தான். 

என்னுடைய கருத்தை வாசித்திருந்தால் 

ஜனநாயகம்

சதாம் உசேன்

கடாபி 

Junior Bush

ரத்தச்சுண்டல் பொரியல் (உங்கள் கண்டுபிடிப்பு உணவு?)

எந்த கேள்வியும் பிறந்திருக்காது 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விசுகு said:

Vசுகர், 

எல்லாவற்றிற்கும் கோவிப்பீர்களா? உண்மையில் பகிடிக்குத்தான் எழுதினேன் இரத்தப் பொரியல் என்று 😀

  • கருத்துக்கள உறவுகள்

புடினை கொல்ல உக்ரைன் சதிசெய்யவில்லை: ஜனாதிபதி ஸெலென்ஸ்கி

world-news-3.jpg

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொல்ல தாம் சதி செய்யவில்லை என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதியை புட்டினை கொலை செய்ய 2 ஆளில்லா விமானங்களை அனுப்பியதாக கிரெம்ளின் குற்றம்சாட்டியதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று (3) கிரெம்ளின் அருகே வந்த இரண்டு ஆளில்லா தாக்குதல் விமானங்களை சுட்டு வீழ்த்த ரஷ்ய படைகள் நடவடிக்கை எடுத்தது.

மின்னணு ரேடார் அமைப்பைப் பயன்படுத்தி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, உக்ரைன் இதன் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

எவ்வாறாயினும், தனது படைகள் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக மட்டுமே போராடுவதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/252089

  • கருத்துக்கள உறவுகள்

தனது படைகள் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக மட்டுமே போராடுவதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நல்ல விடயத்தை சொல்லி உள்ளார் 

அப்போ இது யாரால்?? ஏன்???

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

தனது படைகள் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக மட்டுமே போராடுவதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நல்ல விடயத்தை சொல்லி உள்ளார் 

அப்போ இது யாரால்?? ஏன்???

உக்ரைன் ஜனாதிபதி…. அரிச்சந்திரன் என்று நம்புற ஆட்கள், இன்னும்  இருக்கினம். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

உக்ரைன் ஜனாதிபதி…. அரிச்சந்திரன் என்று நம்புற ஆட்கள், இன்னும்  இருக்கினம். 🤣

மரிக்காரும் அவர்ரை கூட்டுவளும் உண்மை சொல்லி பார்த்ததில்லையே!!!!!? :cool:
 
காது செவிடாகி மயங்கி விழுந்து போவியள் :hahaha:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உக்ரைன் ஜனாதிபதி…. அரிச்சந்திரன் என்று நம்புற ஆட்கள், இன்னும்  இருக்கினம். 🤣

 நான் அவரை அரிச்சந்திரன் என்று சொல்லவில்லையே.

தனது படைகள் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக மட்டுமே போராடுவதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது நல்ல விடயம் என்று மட்டுமே சொன்னேன்

மற்றும் படி தான் செய்யவில்லை என்று அவர் மறுத்தால் வேற யார் செய்திருப்பார்கள் என்ற கேள்வியை தான் வைத்தேன். 

ஆனால் உங்கள் அளவுக்கு அவரை புரிந்து கொள்ள எனக்கு இன்னும் அவகாசமும் ஆதாரங்களும் வேண்டும்.😀 நன்றி 

On 2/5/2023 at 23:18, குமாரசாமி said:

ஜேர்மனியில் ரஷ்யாவிடம் பேச்சுவார்தை நடத்துமாறு கோரும் கட்சிகள் இருக்கின்றனவா இல்லையா? ரஷ்யா சார்பு ஜேர்மனிய மக்கள் இருக்கின்றார்களா இல்லையா?
இதற்கு பதிலை சொல்லுங்கள் தொடரலாம்.

பிரான்சிலும் ரஸ்ய சார்புக் கட்சி ஒன்று உள்ளது.

இவர்கள் தீவிர வலதுசாரிகள், தீவிர தேசியவாதிகள், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரானவர்கள், இன வெறியர்கள், ட்றம்ப் ஆதரவாளர்கள், கருக்கலைப்பு போன்ற பெண்ணுரிமைகளை மறுப்பவர்கள், பிற்போக்குவாதிகள். 

fn.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, இணையவன் said:

பிரான்சிலும் ரஸ்ய சார்புக் கட்சி ஒன்று உள்ளது.

ஓம்...இருக்கட்டுமே...நல்லது தானே. இவர்கள் சார்ந்த கட்சியும் நீங்கள் சார்ந்த கட்சியும் கிட்டத்தட்ட சம பலத்துடன் தானே நிற்கின்றன.

8 minutes ago, இணையவன் said:

இவர்கள் தீவிர வலதுசாரிகள், தீவிர தேசியவாதிகள்

ஓ.....நீங்கள் தேசியவாதி இல்லையா? 
உங்கள் இனம்,மண்,மொழி,மக்கள்?????

11 minutes ago, இணையவன் said:

ட்றம்ப் ஆதரவாளர்கள்,

டொனால்ட் ரம்ப் தன் நாட்டிற்கும் இந்த உலகிற்கும் செய்த கெடுதல் என்ன? 

12 minutes ago, இணையவன் said:

, கருக்கலைப்பு

கருக்கலைப்பு ஆண்கள் செய்யவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைன் ஜனாதிபதி…. அரிச்சந்திரன் என்று நம்புற ஆட்கள், இன்னும்  இருக்கினம். 🤣

மக்காள் அவங்க பெத்த அறிவளி கூட்டங்க😃🤭.

அவரை நம்பிதானே உக்ரைன் இவ்வளவு அழிவுகளை சந்தித்துகொண்டிருக்கு😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, இணையவன் said:

கருக்கலைப்பு போன்ற பெண்ணுரிமை

கரு கட்டும் மட்டும் விட்டு ஏன் அதை அழிக்க வேண்டும்? மூளை கூடிய விஞ்ஞான உலகில் முன் நடவடிக்கைகள் ஏற்கனவே உள்ளதே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.