Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரைவில் அதிரடி முடிவு எடுப்போம்! – சம்பந்தன் அறிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் அதிரடி முடிவு எடுப்போம்! – சம்பந்தன் அறிவிப்பு

IMG-20230502-114007.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசால் ஆரம்பிக்கப்பட்ட சர்வகட்சிப் பேச்சு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளமை தொடர்பிலும், தீர்வு முயற்சிகள் மந்தகதியில் உள்ளமை குறித்தும் இரா. சம்பந்தனிடம் எழுப்பிய கேள்விக்கே மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போதைய நிலைமையில் அரசின் செயற்பாடுகள் மந்தகதியில் மட்டுமல்ல துப்பரவாக எதுவுமே நடைபெறவில்லை. வாக்குறுதிகள் மாத்திரமே அரசால் வழங்கப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் எதுவும் இல்லை. அதுதான் உண்மை. இந்த விடயம் சம்பந்தமாக நாம் என்ன செய்ய வேண்டியது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். விரைவில் சில முடிவுகளை அறிவிப்போம்.” – என்றார்.

– அரியகுமார் யசீகரன்

டிஸ்கி :
 
* அணில்
 
FcHoMYXaAAA6Hc4.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விரைவில் அதிரடி முடிவு எடுப்போம்! – சம்பந்தன் அறிவிப்பு

என்ன அந்த அதிரடி முடிவு எண்டு அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டானுகள்.ஏனெண்டால் அப்பிடியொண்டு இருந்தால் தானே சொல்லுறதுக்கு.....:winking_face_with_tongue:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

என்ன அந்த அதிரடி முடிவு எண்டு அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டானுகள்.ஏனெண்டால் அப்பிடியொண்டு இருந்தால் தானே சொல்லுறதுக்கு.....:winking_face_with_tongue:

அரசாங்கத்தின் ஏமாற்ற தீர்வுகளுக்கு அடிபணிய மாட்டோம் - இரா.சம்பந்தன் |  அரசாங்கத்தின் ஏமாற்ற தீர்வுகளுக்கு அடிபணிய மாட்டோம் - இரா ...

இரா.சம்பந்தன் : தோல்வியின் அடையாளம்- Paristamil Tamil News

படித்தவுடன் கிழித்துவிடவும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

என்ன அந்த அதிரடி முடிவு எண்டு அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டானுகள்.ஏனெண்டால் அப்பிடியொண்டு இருந்தால் தானே சொல்லுறதுக்கு...

இந்த முறை தீபாவளி கொண்டாடுவதில்லையென்று😃

  • கருத்துக்கள உறவுகள்

போன கிழமையும் அதிரடின்னு தகவல் போட்டாங்க. என்ன அதிரடி என்றால்.. அது புலிகள் காலத்து அதிரடின்னு நினைச்சிடாதேங்க. நாங்க இப்பவும் தூங்காமல் முழிச்சுத்தான் இருக்கிறம் என்று பத்திரிக்கைக்கு அறிக்கை தருவதே இவர்களின் அதிரடி ஆகும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன்.  உங்கள் தலைவர்   ...இலங்கை தமிழ் மக்களின் ஏகோபிந்த. தலைவர்....அவரை பலதடவைகள் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பி உள்ளார்கள்  ...இனியும் தெரிவு செய்வார்கள்......அவரை எதிர்த்து எவ்வளவு திறமைசாலிகள்……………… போட்டி இட்டாலும் கூட   இலங்கை வாழ் தமிழர்கள்  தோற்கடிப்பார்கள். ...பத்து வாக்குகள் கூடபோட்டாலும்.  சம்பந்தன். தெரிவு செய்யப்பாடுவர்.    ...🤣.   இந்த புலம்பெயர் தமிழர்கள் கூட இலங்கையில் இருந்த /வாழ்ந்த.  காலத்தில்    ..சம்பந்தன்.  ...போன்றவர்களுக்கு தான்  தங்களது வாக்குகளை. பதிவு செய்து   இருபதுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை   பாராளுமன்றம் அனுப்பி அழகு பார்த்தார்கள்.....அந்நேரத்தில். செய்யதாதையா. ???? சம்பந்தன்.  இப்போது செய்து விட்டார்.......இல்லையே......அதையேதான் செய்கிறார்.   

சிங்களவர்கள்.   விரும்பி தீர்வு தரவில்லையென்றால்....இலங்கையில் தமிழருக்கு தீர்வு கிடைக்காது.......ஆயிரம் வருடங்கள் போனாலும் தீர்வு இல்லை.....உங்களது 15.....20.   பாராளுமன்ற உறுப்பினர்கள்     பாராளுமன்றத்தில் எதுவுமே செய்ய முடியாது......சும்மா பேசலாம்........என்ன பலன்.???   

  • கருத்துக்கள உறவுகள்

Conch 1100

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வந்த நாமல் தொடங்கி இன்று அரச கதிரையில் இருக்கும் ரணில் வரை சொன்ன, சொல்லும் விடயம் தமிழரின் பிரச்சனைகளை  தீர்க்க அவர்களின் தலைவர்கள் முயற்சிக்கவில்லை, அதை நம்ம தலைவர்களும் பிழை என்று கேட்க முயற்சிக்கவில்லை. பிரச்சனை இருக்கிறது என தெரிந்தும் அதை தீர்க்க நாட்டின் தலைவர்கள் முயற்சிக்கவில்லை. என்பதோடு இன்னும் சுரண்டுகிறார்கள். காரணம்; பேசாத, முயற்சிக்காத தலைவர்கள். பேசாத தலைவர், நிஞாயப்படுத்தும் ஒருவர்  அது போதும் சிங்களத்துக்கு இனத்தை விழுங்கிக்கொண்டு தமிழருக்கு நாட்டில் பிரச்சனையில்லை உரிமையில்லை என்று கடந்து போக. இவர்களையெல்லாம் பேட்டி எடுப்பவர்களை என்ன சொல்வது?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு ஒரு வேண்டுகோள்! உங்களுக்காக எழுதுபவரை மாற்றுங்கோ. ஒரு அனுபவஸ்தர் எழுதிற மாதிரியா எழுதுகிறார்?!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

ஐயாவுக்கு ஒரு வேண்டுகோள்! உங்களுக்காக எழுதுபவரை மாற்றுங்கோ. ஒரு அனுபவஸ்தர் எழுதிற மாதிரியா எழுதுகிறார்?!

இனி… என்னத்தை எழுதி, என்னத்தை மாத்தி…. 😂
ஐயாவின் சந்தோசத்தை கெடுக்காதீங்கோ… 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

இனி… என்னத்தை எழுதி, என்னத்தை மாத்தி…. 😂
ஐயாவின் சந்தோசத்தை கெடுக்காதீங்கோ… 🤣

அண்ணை ஐயாவிற்கு அறிக்கை வாறாதாவது தெரியுமோ?!
சிறைச்சாலையில் இருப்பவர்களை விடுவிக்க உதவச் சொல்ல பேப்பரை பார்த்துக் கொண்டு ஐயா சொன்னதை எங்க கல்வெட்டாக பொறிக்கலாம்?!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

அண்ணை ஐயாவிற்கு அறிக்கை வாறாதாவது தெரியுமோ?!
சிறைச்சாலையில் இருப்பவர்களை விடுவிக்க உதவச் சொல்ல பேப்பரை பார்த்துக் கொண்டு ஐயா சொன்னதை எங்க கல்வெட்டாக பொறிக்கலாம்?!

இதுக்கெல்லாம் கல்வெட்டு பதிப்பது அவமானம்.
ஐயாவை குப்புற கிடத்தி, முதுகில் பச்சை குத்தி விடலாம், சாகும் மட்டும் அழியாமல் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

இதுக்கெல்லாம் கல்வெட்டு பதிப்பது அவமானம்.
ஐயாவை குப்புற கிடத்தி, முதுகில் பச்சை குத்தி விடலாம், சாகும் மட்டும் அழியாமல் இருக்கும்.

நான் எஸ்கேப்........

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சொல்லுவதை கேட்க பயமாக இருக்கிறது. எங்களையெல்லாம் தவிக்க விட்டிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போகிறாரோ? அது என்ன? எப்ப பாத்தாலும் விரைவில் அதிரடி முடிவு என்று அறிவிப்பு, ஆனால் எதுவும் இதுவரை வந்தபாடில்லை, தபால் போக்குவரத்தில் ஏதும் பிரச்சனையோ? இவர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்திருந்தால்; சிங்களவன் கிழக்கை கபழிகரம் செய்து, கொக்கிளாய், நாயாறு, கொக்குத்தொடுவாய் மக்களை அச்சுறுத்தி, அடித்து விரட்டி தன்னகப்படுத்தி இப்போ வடக்கில் விகாரை கட்டி திறப்புவிழா செய்ய முடிந்திருக்குமா? அவன் இனக்கலவரம் வெடிக்கும் என்கிறான், அதையே இவர்களும் அதை வழிமொழிந்து விட்டு சும்மா இருக்கிறார்கள். இதை சொல்வதற்க்கு இவர்கள் வேண்டுமா? இவர்கள் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும், இல்ல, புலிகளை விட்டிருக்க வேண்டும் இந்தப்பிரச்சினையை தீர்ப்பதற்கு. அவர்களுக்கு அதற்கான திறமையுமில்லை, ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுமில்லை. புலிகளுக்கு முன்பும் செய்யவில்லை, செய்திருந்தால்; புலிகளை தோற்றுவித்திருக்க மாட்டார்கள், அவர்களிடம் பொறுப்புக்கொடுத்தனர். புலிகளுக்கு பின்பும் செய்யவில்லை, அவர்களை குறை கூறினர், இனியும் அவர்கள் செய்வதற்க்கு அங்கு  ஒன்றுமில்லை. சும்மா வாய்ச்சவாடல் தங்கள் இருப்புக்கு. அங்கே தையிட்டியில் மக்கள் போராட, அங்கே போன சிறிதரன் வாய்த்தர்க்கம்! இராணுவத்துடன் என்று நினைக்காதீர்கள், மக்களுடன். தங்கள் உறுப்பினருடன் சேர்ந்து கூட்டாக செயற்பட முடியவில்லை, பிரிந்து ஆளுக்கொரு அணி, கூத்தாடிகளை  பெருக்கி மக்களை அவர்கள் பின்னால் விரட்டியதும் இவர்கள். அதில் ஒரு நபர் தன் வாயிற்றெறிச்சலை கொட்ட, நீர் போய் உம்முடைய கட்சிக்காரரிடம் சொல்லும், என அவரது வாயை அடைக்கிறார். சிங்களவன் கட்சி பார்த்தா தமிழனை அடிக்கிறான்  பறிக்கிறான்? அல்லது இது கட்சி சார்ந்த பிரச்சனையா? தங்கள் இயலாமையை மறைக்க  மக்களை வேறொரு கட்சி பக்கம் தள்ளுகிறார்கள், இதனாலேயே அந்த மக்களை குறி வைத்து பல கட்சிகள் உருவாகின்றன, உருவாக்குபவர்கள் யார்?  ஒவ்வொரு பக்கமாக மக்களை இவர்கள்தானே விரட்டுகிறார்கள்?       

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இனி கொமான்டோ தாக்குதல் தான்
"

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2023 at 14:59, Kandiah57 said:

சம்பந்தன்.  உங்கள் தலைவர்   ...இலங்கை தமிழ் மக்களின் ஏகோபிந்த. தலைவர்....அவரை பலதடவைகள் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பி உள்ளார்கள்  ...இனியும் தெரிவு செய்வார்கள்......அவரை எதிர்த்து எவ்வளவு திறமைசாலிகள்……………… போட்டி இட்டாலும் கூட   இலங்கை வாழ் தமிழர்கள்  தோற்கடிப்பார்கள். ...பத்து வாக்குகள் கூடபோட்டாலும்.  சம்பந்தன். தெரிவு செய்யப்பாடுவர்.    ...🤣.   இந்த புலம்பெயர் தமிழர்கள் கூட இலங்கையில் இருந்த /வாழ்ந்த.  காலத்தில்    ..சம்பந்தன்.  ...போன்றவர்களுக்கு தான்  தங்களது வாக்குகளை. பதிவு செய்து   இருபதுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை   பாராளுமன்றம் அனுப்பி அழகு பார்த்தார்கள்.....அந்நேரத்தில். செய்யதாதையா. ???? சம்பந்தன்.  இப்போது செய்து விட்டார்.......இல்லையே......அதையேதான் செய்கிறார்.   

சிங்களவர்கள்.   விரும்பி தீர்வு தரவில்லையென்றால்....இலங்கையில் தமிழருக்கு தீர்வு கிடைக்காது.......ஆயிரம் வருடங்கள் போனாலும் தீர்வு இல்லை.....உங்களது 15.....20.   பாராளுமன்ற உறுப்பினர்கள்     பாராளுமன்றத்தில் எதுவுமே செய்ய முடியாது......சும்மா பேசலாம்........என்ன பலன்.???   

சரியாக சொன்னீர்கள். சிங்களவனாக பார்த்து எதாவது போடடால்தான் தமிழனுக்கு எதாவது கிடைக்கும். இன்று உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் பதவி பணத்துக்காக இருக்கிறார்களே தவிர மக்களுக்கு விடிவு எதுவும் கிடைக்கப்போவதில்லை. இது நம்மட MP  ஆட்களுக்கும் நன்றாகவே தெரியும். முன்பெல்லாம் படித்தவர்களை தெரிவு செய்தார்கள். இப்போது வெறுத்து போய் மட்டி, மடயர்களை தெரிவு செய்கிறார்கள். பொதுவாக வன்னி மக்களின் தெரிவு இப்படியாகத்தான் இருக்கிறது. பாவம் இப்போது இருக்கிற அந்த 15 பேராவது பிழைத்து போகட்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.