Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பாக்முத்திலிருந்து வெளியேறுவோம்! - வாக்னா் குழு

spacer.png

கிழக்கு உக்ரைனில் தீவிர சண்டை நடைபெற்று வரும் பாக்முத் நகரில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து வெளியேறப்போவதாக ரஷிய தனியாா் படையான வாக்னா் குழுவின் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின் திடீா் மிரட்டல் விடுத்துள்ளாா்.

பாக்முத்தில் தொடா்ந்து போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களை ரஷியா அனுப்பாததாலும், அந்த நகரில் நடைபெறும் சண்டையில் தங்களது வீரா்கள் அதிக எண்ணிக்கையில் பலியாவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவா் கூறினாா்.

spacer.png

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாக்முத் நகரில் நாங்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளிலிருந்து வரும் 10-ஆம் தேதி வெளியேற முடிவு செய்துள்ளோம். அந்தப் பகுதிகளின் கட்டுப்பாட்டை ரஷிய ராணுவப் படையே எடுத்துக் கொள்ளட்டும். வாக்னா் படை வீரா்கள் சாா்பிலும், தளபதிகள் சாா்பாகவும் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.

வாக்னா் படையினருக்கு ஏற்பட்டுள்ள ரணங்களை ஆற்றிக் கொள்வதற்காக, பாக்முத் போா் முகாமிலிருந்து வேறு முகாம்களுக்கு படையினா் மாற்றப்படுவாா்கள்.

பாக்முத்தில் தொடா்ந்து போரிடுவதற்குத் தேவையான ஆயுத தளவாடங்களை ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் எங்களுக்கு அளிக்கவில்லை. அவை இல்லாவிட்டால், நகரில் போரிடும் எஞ்சிய வாக்னா் படையினரும் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலேயே அங்கிருந்து நாங்கள் வெளியேறவிருக்கிறோம் என்று அந்த அறிக்கையில் யெவ்கெனி ப்ரிகோஷின் கூறியுள்ளாா்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகளில் அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய நான்கு பிரதேசங்களில் கணிசமான பகுதிகளை ரஷியா கைப்பற்றியது.

அந்த பிரதேசங்களில் இன்னும் பல பகுதிகள் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவை நான்கும் தங்கள் நாட்டுடன் இணைக்கப்படுவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அறிவித்தாா்.

அந்த நான்கு பிரதேசங்களில் ஒன்றான டொனட்ஸ்கில் அமைந்துள்ள முக்கிய நகரான பாக்முத்தை கைப்பற்றுவதற்காக போரின் தொடக்கத்திலிருந்தே ரஷியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பாக்முத் நகரைக் கைப்பற்றுவது, போரில் வெற்றியை நோக்கி ரஷியா முன்னேறுவதை பறைசாற்றுவதாக அமையும் என்று அதிபா் விளாதிமீா் புதின் கருதுவதாகவும், அந்த நகரைப் பாதுகாப்பது ரஷியாவுக்கு எதிரான உக்ரைனின் உறுதியான நிலைப்பாட்டை உணா்த்தும் என்று அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கருதுவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த நகரைப் பாதுகாப்பதில் உக்ரைன் படையினா் மிகத் தீவிரமாக உள்ளனா். ரஷியாவும் பாக்முத் நகரைக் கைப்பற்றுவதற்காக கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இந்தச் சூழலில், ரஷியாவின் சாா்பில் பாக்முத் நகரில் போரிட்டு வரும் அந்த நாட்டின் தனியாா் ராணுவப் படையான வாக்னா் குழு, அந்த நகரின் 89.50 சதவீத பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இருந்தாலும், அதற்கு மேல் அவா்கள் முன்னேறுவதை உக்ரைன் படையினா் முழு வீச்சில் தடுத்து வருகின்றனா்.

இந்த மோதலில், கடந்த 5 மாதங்களில் மட்டும் 20,000 வாக்னா் படையினா் பலியானதாகவும், 80,000 போ் காயமடைந்ததாகவும் அமெரிக்க உளவுத் துறை அண்மையில் வெளியிட்ட தகவல் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.

அந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில், பாக்முத் போரில் போதிய ஆயுத தளவாடங்கள் இல்லாமல் தங்களது படையினா் உயிரிழந்து வருவதால், ரஷியாவின் முதன்மை ராணுவப் படையினா் அங்கு சண்டையைத் தொடரும் வகையில் அங்கிருந்து வெளியேறப்போவதாக வாக்னா் குழு தலைவா் தற்போது திடீா் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக்முத் நகர நிலவரம்

spacer.png

 வாக்னா் கட்டுப்பாட்டு பகுதி 89.50%

மோதல் நடைபெறும் பகுதி 7.64%

 உக்ரைன் கட்டுப்பாட்டு பகுதி 2.86%

யாா் இந்த வாக்னா் குழுவினா்?

வாக்னா் குழு என்று பொதுவாக அழைக்கப்படும் ‘வாக்னா் பிஎம்சி (பிரைவேட் மிலிட்டரி கம்பெனி)’, ரஷியாவை சோ்ந்த தனியாா் ராணுவ நிறுவனமாகும்.

தன்னாா்வலா் படையினரைக் கொண்டு ஒப்பந்த முறையில் போா் நடவடிக்கைகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

ரஷிய சட்டத்தின் கீழ் தனியாா் ராணுவ நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி இல்லையென்றாலும், ரஷிய அரசின் நலன்களுக்காக வாக்னா் குழு போரிட்டு வருவதால் அந்தப் படையினருக்கு ஆயுதங்களையும், பயிற்சியளிப்பதற்கான வசதிகளையும் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நேரடியாக வழங்கி வருகிறது.

இதன் காரணமாக, ரஷியாவின் மறைமுக துணை ராணுவப் படை எனவும், அதிபா் விளாதிமீா் புதினின் தனியாா் ராணுவம் எனவும் வாக்னா் படை வா்ணிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் ரஷியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் அந்த நாட்டு ராணுவ வீரா்களின் மீது பழியோ, போா்க் குற்றச்சாட்டுகளோ சுமத்தப்படுவதைத் தவிா்ப்பதற்காக அங்கு வாக்னா் படையை ரஷிய அரசு பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

எனினும், ரஷிய ராணுவத்தில் முறைப்படி வீரா்கள் சோ்க்கப்படுவதைப் போலின்றி வாக்னா் படையில் தன்னாா்வலா்கள் சோ்க்கப்படுவதால், அவா்களில் பலா் நாஜி ஆதரவாளா்களாகவும், தீவிர வலதுசாரிகளாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக அவா்கள் போா்க் களங்களில் மனித உரிமைகளில் ஈடுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

சிரியா, லிபியா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, மாலி போன்ற பகுதிகளின் உள்நாட்டுப் போரில் சண்டையிட்ட வாக்னா் படையினா் மீது பல்வேறு போா்க் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

https://www.dinamani.com/world/2023/may/05/lets-get-out-of-bagmouth-4001114.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அய்யோ! வாக்னர் குறுப் சேர், பிளீஸ் வெளியேறாதேயுங்கோ. இப்பவே மானங்கெட்டு நிக்கிறம். நீங்களும் போயிட்டால்….😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

புட்டினுக்கு  வந்த  சோதனை...

ஐரோப்பிய நாடுகளும்   அவர்களது ஆயுதங்களும்  தூங்குவதாக

புட்டின்  நினைத்தால்??????

தொடரும்...............

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, வாலி said:

அய்யோ! வாக்னர் குறுப் சேர், பிளீஸ் வெளியேறாதேயுங்கோ. இப்பவே மானங்கெட்டு நிக்கிறம். நீங்களும் போயிட்டால்….😂

அப்ப கேக்கிறதை குடுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வெளியேறுவோர் 

அங்கே  போயும் சும்மா  இராதீர்கள்

இங்கே  செய்த  அனைத்து  அராயகங்களையும் ரசியாவில்  தொடர வாழ்த்துக்கள்

5 minutes ago, ஏராளன் said:

அப்ப கேக்கிறதை குடுங்கோ!

வைச்சுக்கொண்டா  புட்டின்  வஞ்சகம் செய்கிறார்

பானையில்  இருந்தால்  தானே  அகப்பையில்  வரும்???

வாக்னர்  குரூப்பை  அமெரிக்கா வாங்கிவிட்டதாக அடுத்து  இங்கே  ஒரு  செய்தி  வருமே???

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்ப முட்டுக்கொடுத்த நாங்க

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொஸ்பரஸ் குண்டுகளைப் போட்டு பக்மூட்டை ரஷ்யர்கள் எரித்து அழிக்கின்றார்களாம். அதனால் வாக்னரின் கொடும்படையினர் வெளியேறவேண்டிய தேவை வராமாலும் போகலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, நந்தன் said:

அப்ப முட்டுக்கொடுத்த நாங்க

அம்புட்டு தான் 😀

16 minutes ago, கிருபன் said:

பொஸ்பரஸ் குண்டுகளைப் போட்டு பக்மூட்டை ரஷ்யர்கள் எரித்து அழிக்கின்றார்களாம். அதனால் வாக்னரின் கொடும்படையினர் வெளியேறவேண்டிய தேவை வராமாலும் போகலாம்!

போரில் மாற்றங்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மேலேயுள்ள கருத்துக்களைப் வாசிக்கும்போது, இவர்களில் எவருமே யாழ் களத்திற்கு வெளியே எந்த ஒரு செய்திகளையும், குறிப்பாக உலகின்  கிழக்குப் பகுதி செய்திகளை  வாசிப்பதில்லை எனப் புரிகிறது. 

🤣

48 minutes ago, கிருபன் said:

பொஸ்பரஸ் குண்டுகளைப் போட்டு பக்மூட்டை ரஷ்யர்கள் எரித்து அழிக்கின்றார்களாம். அதனால் வாக்னரின் கொடும்படையினர் வெளியேறவேண்டிய தேவை வராமாலும் போகலாம்!

மதில் மேல் பூனையாகக் கருத்துச் சொல்கிறீர்களோ 🤣

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, விசுகு said:

நானா?? ரசியா சீனா வடகொரியா ஈரான் என்று உரைக்கும் நீங்களா???

மேற்கு மட்டுமல்ல, கிழக்கு, தெற்கு என உலகின் எல்லாப் பகுதியில் இருந்து வரும் செய்திகளை அவதானிக்கிறேன் என்பதை காலம் கடந்தாவது ஏற்றுக்கொள்கிறீர்கள். நன்றி 

😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Kapithan said:

மேற்கு மட்டுமல்ல, கிழக்கு, தெற்கு என உலகின் எல்லாப் பகுதியில் இருந்து வரும் செய்திகளை அவதானிக்கிறேன் என்பதை காலம் கடந்தாவது ஏற்றுக்கொள்கிறீர்கள். நன்றி 

😉

எனக்கு நீங்கள் இன்னும் 50களில் நிற்கிறீர்கள். முயற்சியும் வேண்டும் காண் 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 minutes ago, விசுகு said:

எனக்கு நீங்கள் இன்னும் 50களில் நிற்கிறீர்கள். முயற்சியும் வேண்டும் காண் 😀

முன்னுக்குப் பின் முரணாக உள்ளதே உங்கள் கூற்று 🤣

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 minutes ago, Kapithan said:

முன்னுக்குப் பின் முரணாக உள்ளதே உங்கள் கூற்று 🤣

நான் முதலில் இருந்து தெளிவாக தான் இருக்கிறேன்

நீங்கள் தான் தலையை விட்டு விட்டு வாலைப் பிடித்து விட்டு இப்ப ????

🤣

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, விசுகு said:

நான் முதலில் இருந்து தெளிவாக தான் இருக்கிறேன்

நீங்கள் தான் தலையை விட்டு விட்டு வாலைப் பிடித்து விட்டு இப்ப ????

🤣

வெளி உலக செய்திகளை வாசிப்பதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறீர்கள்.... ம்ம் 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kapithan said:

வெளி உலக செய்திகளை வாசிப்பதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறீர்கள்.... ம்ம் 

🤣

அதாவது புனைவுச் செய்திகளில் இருந்துதான் உண்மைகளை அறிய வேண்டுமா?

இரண்டாம் உலகப்போரில் நாஜிகளை வெற்றிகொண்டதை நினைவுகொள்ளும் அணிவகுப்பு ரஷ்யாவின் நகரங்கள் சிலவற்றில் நடக்கப்போவதில்லையாம். அது பற்றி நீங்கள் வாசிக்கும் “வெளி” உலகச் செய்திகளில் ஏதாவது அசுமாத்தம் உண்டா?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, கிருபன் said:

அதாவது புனைவுச் செய்திகளில் இருந்துதான் உண்மைகளை அறிய வேண்டுமா?

இரண்டாம் உலகப்போரில் நாஜிகளை வெற்றிகொண்டதை நினைவுகொள்ளும் அணிவகுப்பு ரஷ்யாவின் நகரங்கள் சிலவற்றில் நடக்கப்போவதில்லையாம். அது பற்றி நீங்கள் வாசிக்கும் “வெளி” உலகச் செய்திகளில் ஏதாவது அசுமாத்தம் உண்டா?

உங்களுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, கிருபன் said:

அதாவது புனைவுச் செய்திகளில் இருந்துதான் உண்மைகளை அறிய வேண்டுமா?

இரண்டாம் உலகப்போரில் நாஜிகளை வெற்றிகொண்டதை நினைவுகொள்ளும் அணிவகுப்பு ரஷ்யாவின் நகரங்கள் சிலவற்றில் நடக்கப்போவதில்லையாம். அது பற்றி நீங்கள் வாசிக்கும் “வெளி” உலகச் செய்திகளில் ஏதாவது அசுமாத்தம் உண்டா?

1) இரண்டாம் உலகப்போரில் நாஜிகளை ரஸ்யா வெற்றி  வெற்றிகொண்டதை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. 

2) வெளி உலகை எட்டிப் பார்க்க முயற்சித்திருக்கிறீர்கள்... இதை அப்படியே தொடர வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Kapithan said:

1) இரண்டாம் உலகப்போரில் நாஜிகளை ரஸ்யா வெற்றி  வெற்றிகொண்டதை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. 

2) வெளி உலகை எட்டிப் பார்க்க முயற்சித்திருக்கிறீர்கள்... இதை அப்படியே தொடர வாழ்த்துக்கள் 

குடத்தில் இருந்து சத்தம் அதிகமாக கேட்கிறதே???🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

குடத்தில் இருந்து சத்தம் அதிகமாக கேட்கிறதே???🤣

வெறும் குடத்திலும் முழுமையாக நிரம்பாத குடத்திலும் புதிய பரிசுத்தமான தண்ணீரால் நிரப்ப  முடியும்.

ஆனால் 

கவுழ்த்து வைத்துள்ள, ஓட்டைக் குடம் நீரைக் கொள்ளாது.. மேலும், ஏற்கனவே பழைய பாசிபடிந்த நீரைக் கொண்டுள்ள குடத்திலும் புதிய தண்ணீரை நிரப்ப முடியாது. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, Kapithan said:

வெறும் குடத்திலும் முழுமையாக நிரம்பாத குடத்திலும் புதிய பரிசுத்தமான தண்ணீரால் நிரப்ப  முடியும்.

ஆனால் 

கவுழ்த்து வைத்துள்ள, ஓட்டைக் குடம் நீரைக் கொள்ளாது.. மேலும், ஏற்கனவே பழைய பாசிபடிந்த நீரைக் கொண்டுள்ள குடத்திலும் புதிய தண்ணீரை நிரப்ப முடியாது. 

🤣

புதிய  பரிசுத்தம்???

நம்பிட்டம்

மீண்டும் முன்? பின்???

  • Haha 2
Posted
1 hour ago, Kapithan said:

வெறும் குடத்திலும் முழுமையாக நிரம்பாத குடத்திலும் புதிய பரிசுத்தமான தண்ணீரால் நிரப்ப  முடியும்.

ஆனால் 

கவுழ்த்து வைத்துள்ள, ஓட்டைக் குடம் நீரைக் கொள்ளாது.. மேலும், ஏற்கனவே பழைய பாசிபடிந்த நீரைக் கொண்டுள்ள குடத்திலும் புதிய தண்ணீரை நிரப்ப முடியாது. 

🤣

கபிதான்,
இவ்வளவு பல்திசை ஊடகங்களை வாசித்துத் தெளிவாக நிலவரங்களை அறிந்துள்ள நீங்கள் வெறும் தத்துவங்களைப் போதிக்காமல் நேரடியாக எமக்கு நிலமையை விளக்கலாமே ?

பாக்முத் நகரை உக்ரெய்னியர்களிடமிருந்து கைப்பற்ற கடந்த 4 மாதங்களுக்கு மேலாக உக்கிர சண்டை நடக்கிறது. மார்ச் ஆரம்பத்தில் ஒரே நாளில் 1000 படையினர் வரை இரு தரப்பிலும் இழப்புகள் ஏற்பட்டதாகச் செய்திகள் வந்தன. மார்ச் மாதம் பிரிகோஜின் பல தடவைகள் தாம் பாக்முத் நகரை இன்னும் 2 நாட்களுக்குள் கைப்பற்றி விடுவோம் என்று தெரிவித்திருந்தார். இதில் மர்மமான பல கேள்விகள் உள்ளன.
- உலகின் இரண்டாவது இராணுவ சக்தியுடைய ரஸ்யா ஒரு சில மணி நேரங்களில் பாக்முத் நகரைக் கைப்பற்றிவிட முடியும் அல்லவா. ஏன் செய்யவில்லை ?
- பாக்முத் நகர் ரஸ்ய எல்லைக்கு அருகிலிருந்தும் ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் Donetsk பகுதிக்கு மிக அருகில் இருந்தும் ஏன் வக்னர் கூலிப் படையின் உதவியை நாட வேண்டும் ?
- ஒரு மாதமாக ஏன் வக்னர் கூலிப்படைக்குப் போதிய ஆயுதம் தரப்படவில்லை.
- வக்னர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைச் செச்செனிய இராணுவம் பொறுபேற்கப் போவதாகக் கூறப்படுடுவது உண்மையா ?
- அழிக்கப்பட முடியாத ஆயுதமாகக் கருதப்பட்ட Kh-47 Kinzhal ஏவுகணை ஒன்று இன்று அதிகாலை வானில் Patriot மூலம் அழிக்கப்பட்டது உண்மையா ? இதை ஏன் உக்ரெயின் இராணுவம் செரிவாக உள்ள பாக்முத் மேற்குப் பகுதியில் பாவிக்கப்படவில்லை ?
- மேலே உள்ள 3 கேள்விகளும் உக்ரெய்ன் இராணுவத்தைப் பொறிக்குள் தள்ளப்போகும் ரஸ்யாவின் இராணுவ யுத்தியாக இருக்கலாம் என்றும் கூறப்படுவது உண்மையா ?
- இன்றைய பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதலானது இன்னும் 3 நாட்களில் ரஸ்யாவில் நடைபெற இருக்கும் இராணுவ அணிவகுப்புக் கொண்டாட்டங்களுக்குக் காட்டப்போகும் வெற்றிக்காக என்று சொல்லப்படுவது உண்மையா ?

இவை சதிக் கோட்பாடு பற்றியவை அல்ல. மேற்கூறிய கேள்விகளில் பிழை இருந்தால் ஆராதங்களைத் தேடித் தர முயல்கிறேன். நேரடியாகப் பதில் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, இணையவன் said:

இந்தக் கேள்விகளை இராணுவ ஆய்வாளர்களிடம்தான் கேட்க வேண்டும். 

நான் இராணுவ ஆய்வாளர் அல்லவே. 

😉

Posted
1 hour ago, Kapithan said:

இந்தக் கேள்விகளை இராணுவ ஆய்வாளர்களிடம்தான் கேட்க வேண்டும். 

நான் இராணுவ ஆய்வாளர் அல்லவே. 

😉

இவை தற்போதைய கள நிலை தானே. நீங்கள் வாசிக்கும் பல்திசை ஊடகங்களில் இவை எதுவும் வருவதில்லையா அல்லது உக்ரெயின் தொடர்பான செய்திகளை வாசிப்பதில்லையா ? 

5 hours ago, Kapithan said:

வெளி உலக செய்திகளை வாசிப்பதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறீர்கள்.... ம்ம் 

🤣

இதே திரியில் எனது கேள்விக்கான பதிலையும் தணிக்கை செய்யப்பட்ட உங்களது பதில்களையும் தவிர 5 கருத்துக்களை எழுதியுள்ளீர்கள்.  

ஒன்றும் தெரியாமல் திரியில் நுளைந்து பொழுதுபோக்காக அல்லது குழப்புவதற்காக எழுதுகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா ? 

இந்தத் திரியில் மட்டும்தானா அல்லது ஏனைய திரிகளிலும் இப்படித் தானா ?

  • Like 1
  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, இணையவன் said:

இவை தற்போதைய கள நிலை தானே. நீங்கள் வாசிக்கும் பல்திசை ஊடகங்களில் இவை எதுவும் வருவதில்லையா அல்லது உக்ரெயின் தொடர்பான செய்திகளை வாசிப்பதில்லையா ? 

இதே திரியில் எனது கேள்விக்கான பதிலையும் தணிக்கை செய்யப்பட்ட உங்களது பதில்களையும் தவிர 5 கருத்துக்களை எழுதியுள்ளீர்கள்.  

ஒன்றும் தெரியாமல் திரியில் நுளைந்து பொழுதுபோக்காக அல்லது குழப்புவதற்காக எழுதுகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா ? 

இந்தத் திரியில் மட்டும்தானா அல்லது ஏனைய திரிகளிலும் இப்படித் தானா ?

பாவம் அவர்

இப்படி நீங்கள் உண்மையை போட்டு உடைக்கலாமா??

எனக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் இங்கே  வந்து குழப்புகிறேன் என்கிறீர்க்ளா? 

அப்படியே ஆகட்டும் மக்காள். பின்னர் ஏன் நேரம் மினெக்கெட்டு எனக்கு பதில் எழுதுகிறீர்கள்? 

(இணையவணே எனது கருத்துக்களை தணிக்கை செய்வாராம் பின்னர் அவரே அதனை குறித்து  எழுதுவாராம்...சும்மா போங்கள் பிரபு)

🤣

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரிசியைச் சோறாக்கி கஞ்சி வடிப்பதுபோல் அரசியல் கருத்துக்களையும் ஆராய்ந்து வடித்து எடுக்கலாம். பல பதிவுகளில் விசுகு அவர்கள் வடித்தெடுக்கும் அரசியல் கருத்துக் கஞ்சி புத்திக்கும் உரமூட்டுவதாக உணரமுடிகிறது.😌
    • தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்! நிலாந்தன் "ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்" adminDecember 15, 2024 கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தனக்கு முன்னால் நின்ற இளைஞரிடம் கேட்டிருக்கிறார் “யாருக்கு வாக்களிக்கப் போகிறாய்?” “ஊசிக்குத்தான்” என்று இளைஞர் பதில் சொல்லியுள்ளார். “ஊசிக்கா?” இவர் திரும்பக் கேட்க, “ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்” என்று அவர் சிரித்துக் கொண்டு பதில் சொல்லியுள்ளார். உண்மை. அர்ஜுனா சிரிக்க வைக்கிறார். கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து, வைத்தியசாலையின் பணிப்பாளரோடு அவர் வாக்குவாதப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் ஒரு சபை குழப்பி போல நடந்துகொண்டார். இவற்றைப் பார்த்துச் சிரிக்கும் ஒவ்வொரு தமிழரும் அர்ஜுனாவை மட்டும் பார்த்துச் சிரிக்கவில்லை. தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஏனென்றால் அவருக்கு வாக்களித்தது தமிழ் மக்கள்தான். தமிழரசியல், குறிப்பாக ஆயுதப் போராட்ட அரசியல் அதிகம் சீரியஸானது. ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான கடந்த 15 ஆண்டு கால அரசியலிலும் சீரியஸ் அதிகம். கலகலப்பு, பம்பல்,சிரிப்பு குறைவு. கடந்த 15 ஆண்டுகளாக அவ்வாறு அரசியலை சிரிக்கும் விடயமாக மாற்றும் கார்ட்டூனிஸ்டுகள் குறைந்த ஒரு தமிழ்த் தேசியப் பரப்பில் அர்ஜுனா ஒரு “கார்ட்டூன் கரெக்ராக”,  “கரிக்கேச்சராக” -(caricature) அதாவது கேலிச்சித்திரமாக மேலெழுந்துள்ளார். அவர் எல்லாவறையுமே கரிக்கேச்சர் ஆக்கிவிடுகிறார். தன்னையும் சேர்த்து. அவர் மருத்துவ நிர்வாகத் துறைக்குள் வேலை செய்தவர். ஒரு போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதென்றால், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற ஒழுங்குமுறை தெரியாதவராக இருக்க முடியாது. அதை அவர் மாகாண நிர்வாகத்துக்கு ஊடாக அணுகியிருக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சுக்கூடாக அணுகியிருக்கலாம். இரண்டையும் அவர் செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக தனக்கு மக்கள் அதிகாரம் கிடைத்திருப்பதாக அவர் கருதுகிறார். அது அதிகாரம் அல்ல. அது ஒரு பொறுப்பு. அந்தப் பொறுப்பை உணர்ந்து அவர் நடப்பதாகத் தெரியவில்லை. இதனால் அரச அதிகாரிகள் மீதும் திணைக்களங்களின் மீதும் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அவற்றின் கனதியை இழக்கின்றன. அரச உயர் அதிகாரிகளும் திணைக்களங்களும் கேள்விக்கு அப்பாற்பட்டவை அல்ல. அர்ச்சுனா கேட்கும் கேள்விகளை ஒரு பகுதி மக்கள் ரசிக்கிறார்கள்; ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். ஆனால், அக்கேள்விகளை எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதுபோல, அர்ச்சுனா “மிஸ்ரர்.பீனின்” பாணியில் கேட்கும்போது அக்கேள்விகள் அவற்றின் சீரியஸ்தனத்தை இழந்துவிடுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அவர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்து கொண்ட விதம், அவருக்கும் மருத்துவர் சத்தியமூர்த்திக்கும் இடையிலான முரண்பாடு, அவருக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்றவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது, அவர்,யாருக்கும் பொறுப்புக்கூறத் தேவையில்லாத ஒருவராகத் தன்னை கருதுகிறாரா என்று கேள்வி எழுகிறது. அர்ஜுனாவை மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கும் சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள,ஆங்கில ஊடகங்களும் அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களைத்தான் மறைமுகமாக விமர்சிக்கின்றன. தென்னிலங்கையிலும் மேர்வின் டி சில்வாக்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சுயேச்சைகள் அல்ல. கட்சித் தலைமைக்குக் கீழ்ப்பட்டவர்கள். ஆனால் அர்ஜுனா யாருக்கும் கட்டுப்படாத, யாரையும் பொருட்படுத்தாத ஒருவரா? மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படிப் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதனை அவருக்கு யார் கற்றுக் கொடுப்பது? அல்லது அவர் யாரிடமிருந்தாவது கற்றுக்கொள்ளத் தயாரா? ஒன்றில் சபை நாகரீகம் தெரிய வேண்டும். அல்லது வெட்கம்,அவையடக்கம் இருக்க வேண்டும். இவை எவையுமே இல்லாத ஒருவரை ஏன் தமிழ் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அல்லது அவரைப்போன்ற ஒருவரைத் தெரிந்தெடுக்கும் அளவுக்கு தமிழ்மக்களை நிர்பந்தித்த காரணிகள் எவை? அர்ஜுனா தற்செயலாக மேலெழவில்லை. விபத்தாக மேலெழவில்லை. அவர் தெரிந்தெடுக்கப்படுவதற்கான அகப்புற நிலைமைகளை உருவாக்கிய காரணிகள் உண்டு. தமிழ் அரசியல் சமூகம் அவற்றை ஆராய வேண்டும். தலைமைத்துவ வெற்றிடம்; தங்களுடைய சின்னச்சின்ன அன்றாடப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்க யாராவது வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் சிந்தித்தமை; தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஐக்கியமின்மை, அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் வெறுப்பும் ; தமிழ்த் தேசியக் கட்சிகள் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளைக் கவனிக்கத் தவறியமை ; சமூக வலைத்தளங்களால், யூரியூப்களால் ஊதிப் பெருப்பிக்கப்படும் பிம்பங்கள்….போன்ற பல காரணங்களின் விளைவு அவர். அவருக்கு விழுந்த வாக்குகள் சுமந்திரன், கஜேந்திரகுமார் உட்பட முக்கிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு விழுந்த வாக்குகளைவிட அதிகம். அவர் தன்னுடைய கலகத்தைத் தொடங்கியது சாவகச்சேரி ஆஸ்பத்திரியில். அந்த ஆஸ்பத்திரி வாசலில் இருந்து சிறிது தூரத்தில்தான் ரவிராஜின் சிலை உண்டு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சாவகச்சேரி மக்கள் ரவிராஜின் நினைவுகளை விடவும் அர்ஜுனாவின் நேரலைகளுக்கு அதிகம் வாக்களித்திருக்கிறார்கள். ரவியின் சிலை கண்ணீர் விடுவதுபோல உங்களுக்கு தோன்றவில்லையா? என்று மனோகணேசன் என்னிடம் கேட்டார். அர்ஜுனாவின் சுயேச்சைக் குழுவுக்கு வாக்களித்தது மொத்தம் 27,855 பேர். யாழ்ப்பாணத்தில் விழுந்த செல்லுபடியாகும் வாக்குகளின் தொகை மொத்தம் 358,079. இதில் 8.56விகிதத்தினர் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். “அது ஒரு சிறிய தொகைதான். ஆனால் அந்தத் தொகை அடுத்தடுத்த தேர்தலில் பல மடங்காகப் பெருகும் ஆபத்தை எப்படித் தடுப்பது?” என்று மூத்த,ஊடகச் செயற்பாட்டாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். தேசமாகத் திரட்டப்படாத மக்கள் எதிர்காலத்திலும் அர்ஜுனாக்களைத்தான் தெரிவுசெய்யப் போகிறார்கள் என்று நான் அவருக்குச் சொன்னேன். சமூக வலைத்தள ஊடகச் சூழலும், குறிப்பாக யுரியுப்பர்களும் அந்தச் சிறிய தொகையை பெரிய தொகையாக மாற்றுவதை எப்படித் தடுப்பது? யூரியூப்பர்களின் காலத்தில் தேசத்தைத் திரட்டுவதற்கான புதிய, படைப்புத்திறன் மிக்க உபாயங்களைத் தமிழ்த் தேசியவாதிகள் கண்டுபிடிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை முன்நிறுத்தி, தமிழ் மக்களைத் தேமாகத் திரட்ட முயன்ற தரப்புகளுக்கு எதிராக சில யூரியுப் வெறுப்பர்கள் (haters) தனிப்பட்ட தாக்குதல்களை நடாத்தினார்கள். தமிழக எழுத்தாளர் தொ.பரமசிவன் வெறுப்பர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்… ” இப்ப எழுதும் சிலரின் எழுத்தை வாசித்தால் வெறுப்புதான் முழுமையாய் வெளிப்படும். எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறல்ல. வெறுப்பு என்பது இரு காரணங்களால் வெளிப்படுவது. ஒன்று இயலாமை; மற்றொன்று பொறாமை. இதற்கு மருந்தே கிடையாது”. தமிழ்த் தேசியப் பரப்பில் அவ்வாறு மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாத வெறுப்பர்கள் தொகை அதிகரித்து வருகின்றது. கட்சிகளுக்குள்ளும் கட்சிகளுக்கு வெளியிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் வெறுப்பர்கள் பெருகி வருகிறார்கள். இவ்வாறு கட்சிகளாலும் ஊடகங்களாலும் வெறுப்பர்களாலும் சிதறடிக்கப்படும் ஒரு மக்கள் கூடத்தைத் திரட்டத் தவறிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் எப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்கினார்கள்? அது தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஒரு தண்டனை. அதே சமயம் அர்ஜுனாவுக்கு தமிழ் மக்கள் வழங்கிய வெற்றியை எப்படிப் பார்ப்பது? அது தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிய தண்டனையா? நிலாந்தன்     https://www.nillanthan.com/7018/
    • முடிந்தால் முட்டையை ஆட்டையைப் போட்டுப் பார் . ........!  😂
    • இந்த பொது வெளியில் நான் எழுதிய அரசியல் கருத்தானது  புரிந்து கொள்ளும் ஆற்றல், அறிவு உடையவர்களுக்கானது மட்டுமே. 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.