Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் ஒரு கொலைகாரனை வளர்த்தீர்கள்- புட்டினின் பெற்றோரின் புதைகுழிக்கு அருகில் குறிப்பை வைத்த பெண்ணிற்கு சிறைத்தண்டனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

12 MAY, 2023 | 12:53 PM
image

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பெற்றோரின் புதைகுழிவுகளை  இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் 60 வயது பெண்ணிற்கு ரஸ்ய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

ரஸ்ய ஜனாதிபதியின் பெற்றோரின் புதைகுழிக்கு அருகில் ஒரு அசுரனையும் ஒரு கொலைகாரனையும் வளர்த்தவர்கள் என குறிப்பொன்றை வைத்துவிட்டு சென்ற 60 வயது பெண்ணிற்கு ரஸ்ய நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.

செயின்பீட்டர்ஸ்பேர்க்கை சேர்ந்த இரினா சைபனேவா என்ற 60 வயது பெண்ணிற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

Putins-parents-grave-1-East2west-News.jp

அரசியல் குரோததன்மையால் அவர் இதனை செய்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் குறித்த வெறுப்பே அந்த பெண்ணிண் இந்த நடவடிக்கைக்கு காரணம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

புட்டினின் பெற்றோரின் புதைகுழிக்கு அருகில் குறிப்பிட்ட வெறிபிடித்தவரின் பெற்றோர் என குறிப்பொன்றை விட்டுச்சென்றார் என சுயாதீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புட்டினிற்கு மரணம்,நீங்கள் அசுரனை கொலைகாரனை வளர்த்தீர்கள் துண்டுக்குறிப்பில் தெரிவித்திருந்த அவர் புட்டின் மிகப்பெரும் துயரத்தையும் வேதனையையும் ஏற்படுத்துவதால் அவரை உங்களுடன் எடுத்துச்செல்லுங்கள் எனவும் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவர் உயிரிழப்பார் என முழு உலகமும் பிரார்த்தனை செய்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

https://www.virakesari.lk/article/155122

  • Replies 65
  • Views 3.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

,நீங்கள் அசுரனை கொலைகாரனை வளர்த்தீர்கள் துண்டுக்குறிப்பில் தெரிவித்திருந்த அவர் புட்டின் மிகப்பெரும் துயரத்தையும் வேதனையையும் ஏற்படுத்துவதால் அவரை உங்களுடன் எடுத்துச்செல்லுங்கள் எனவும் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவர் உயிரிழப்பார் என முழு உலகமும் பிரார்த்தனை செய்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்

ஒரு குடிமகளிடம்  இவ்வாறு கேட்டபின்பும்  ஆட்சியில்???

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ.. பிரபாகரனை அமிர்தலிங்கத்தின் மனைவி திட்டியது தான் ஞாபகத்துக்கு வருகிறது. 

பிரபாகரன் எமக்கு விடிவெள்ளியாகத் தெரிகிறார்.. அமிர்தலிங்கம் குடும்பத்திற்கு..??! நாமும் அவர்களும் தமிழர்களே.

2.8 மில்லியன் உக்ரைன் மக்களின் புகலிடமாகவும் இதே புட்டினின் ரஷ்சியா தான் இருக்கிறது. உலகில் தனித்து ஒரு நாடாக இவ்வளவு மக்களை உள்வாங்கி பாதுகாப்பது ரஷ்சியா மட்டுமாகத்தான் இருக்கும். 

வேண்டாத.. மேற்குலக நலன்களை முன்னிறுத்தி உக்ரைனின் கோமாளி ஆட்சியாளரின் தனிப்பட்ட செல்வாக்குக்காக நடக்கும்.. இந்த யுத்தத்தில் ரஷ்சியாவின் பலம் அழிக்கப்படுவது ஒட்டுமொத்த ரஷ்சிய மக்களுக்கும் தான் பாதிப்பு. உலக மக்களுக்கும் பாதிப்பே. அது உலக இராணுவ வல்லாதிக்கச் சமநிலையில் பாதிப்பை உண்டு பண்ணினால்.. அமெரிக்காவின் அடாவடித்தனத்துக்கு முழு உலகும் பலியாக நேரிடலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

ம்..அப்ப பிரபாகரனையும் கொஞ்சம் கொஞ்சமாக புரினுக்குப் பக்கத்தில் நிக்க வைச்சாச்சுப் போல!😂

வல்லாதிக்க அரசுகளின் சமநிலையென்பது ஜனநாயகத்திற்கும் தனிநபர் சர்வாதிகார ஆட்சிக்குமிடையிலான சமநிலையாக இருக்கும் நிலைக்கு உலகம் வரக்கூடாது.

தனி நபர் சர்வாதிகார ஆட்சி (இப்ப இந்த வகை சர்வாதிகாரம் தான் பிரபலம் என்கிறார்கள்) எப்பவும் முடக்கி, ஒதுக்கி அழிக்கப் பட வேண்டிய ஒன்று. இதன் அர்த்தம் ரஷ்யா அழிக்கப் பட வேண்டுமென்பதல்ல, அதற்கு மேல் பெண்மணியே சாட்சி!

  • கருத்துக்கள உறவுகள்

1) சந்தர்ப்பங்கள் மனிதர்களின் உண்மையான முகத்தை வெளிக்காட்டும் என்பதற்கு  மேலே 👆எழுதப்பட்டுள்ள வரிகள் சாட்சி.

2) சனநாயகம்தான் சிறந்ததென்றோ சர்வாதிகாரம்  தீங்கானதென்றோ ஒருவரும் கூறமுடியாது. மக்களுக்கு எது நன்மை பயக்குமோ அதுவே சிறந்தது. 

நான் கனடாவில்  வாழ்வதால் அவர்களின் சித்தாந்தங்கள் மட்டுமே சரியென்று கூறுவேனாகில் நான் ஒரு முட்டாளாவேன. 

😏

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

நான் கனடாவில்  வாழ்வதால் அவர்களின் சித்தாந்தங்கள் மட்டுமே சரியென்று கூறுவேனாகில் நான் ஒரு முட்டாளாவேன. 

😏

சீ சீ

அது நம்ம வசதிக்கேற்ப மாறும் மாற்றிக்கலாம்

இப்போ கனடிய பூர்வீக மக்களை விரட்டி விட்டு அந்த இடத்தில் நீங்கள் உங்கள் வாழ்வாதாரங்களை செய்து இருக்கும் போது பூர்வீகம் சார்ந்த விடயங்களில் முட்டாளாக தானே நடிக்கணும்??

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடிப் போடுங்கோ விதைப்பவரே😂!

"நல்லது தீயது என்று எதுவுமில்லை! எது எனக்கு நன்மை தருகிறதோ அதுவே எனக்கு நல்லது, மற்றவனுக்கு அது தீமை தந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல" - இது அயன் ராண்ட், அலெக்சாண்டர் டுகின் (அலெக்சாண்டர் சொல்செனிற்சின் அல்ல😎!) இரண்டையும் கலந்த நவீன தத்துவம்!  

( "வரலாறு திரும்புகிறது" என்ற ஆக்கத்தில் நாசிகளை ஜேர்மன் மக்கள் எப்படி ஆரத்தழுவிக் கொண்டனர், மிக தாமதமாக உலகம் எப்படி விழித்துக் கொண்டது என்று சுட்டிக் காட்டியிருக்கிறேன்!)

  • கருத்துக்கள உறவுகள்

மனிதகுலத்துக்கு எதிரான பயங்கரவாதியின் பெற்றோரின் கல்லறையில் இதைவிட வேறென்ன எழுதிவிடமுடியும்?!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிக் குறிப்பை வைப்பதென்றால், புஸ்ஸிற்கும் ஒபாமாவிற்கும், பிளேயறிற்கும் எப்போது வைப்பதாம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

இப்படிக் குறிப்பை வைப்பதென்றால், புஸ்ஸிற்கும் ஒபாமாவிற்கும், பிளேயறிற்கும் எப்போது வைப்பதாம் 🤣

ஏன் சோழ சேர  பாண்டியர்களை விட்டு விட்டீர்கள்???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

அது உலக இராணுவ வல்லாதிக்கச் சமநிலையில் பாதிப்பை உண்டு பண்ணினால்.. அமெரிக்காவின் அடாவடித்தனத்துக்கு முழு உலகும் பலியாக நேரிடலாம். 

Ukraine பக்கம் இருக்கும் நியாயங்களை விட மேலே நீங்கள் சொன்ன விஷயம் பெரியது 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஏன் சோழ சேர  பாண்டியர்களை விட்டு விட்டீர்கள்???

பலருக்கு கடந்த காலங்கள் நினைவில் இருப்பதில்லை. ஆனால் நீங்கள் நல்ல  தெளிவாகவே இருக்கிறீர்கள் என்பது உங்கள் எழுத்தினூடாகப் புரிந்துகொள்ளவ்முடிகிறது. 

அதுசரி, ருவாண்டா இனப்படுகொலையில் பிரெஞ்சு இராணுவம் தொடர்புபட்டிருப்பது தொடர்பாக பிரெஞ்சு இராணுவத்தினர் பலர் கைது என வெளிவந்ததுள்ளதுள்ள செய்தி   உண்மையா? 

🤣

கியூபப் புரட்சி வெற்றிபெற்றதிலிருந்து அந்த நாட்டின்மீது பொருளாதாரத் தடை போட்டு அந்த நாட்டை தற்போதைக்கும் மிகவும் வறுமையில் வைத்திருக்கும்....மெரிக்காவிலிருந்து பேசுவதால் மட்டுமே  சனநாயகத்தின் பாதுகாவலராக ஆகலாமா அறுப்பவரே 😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

2) சனநாயகம்தான் சிறந்ததென்றோ சர்வாதிகாரம்  தீங்கானதென்றோ ஒருவரும் கூறமுடியாது. மக்களுக்கு எது நன்மை பயக்குமோ அதுவே சிறந்தது

ஜனநாயகம் என்பது உலக ஆட்சி முறைகளின் ஒரு புதிய பரிணாமம். பிளேட்டோ, அரிஸ்டோட்டல் காலத்தில் இருந்து த்ததுவங்களாக ஆட்சி முறைகள்  பற்றிய தத்துவ கருத்து பரிமாறல்கள் இருந்த போதும் மன்னர் ஆட்சியும் தனிநபர் சர்வாதிகார ஆட்சி முறையே 19 ம் நூற்றாண்டு வரை உலகில் பேணப்பட்டது.  

மிக நீண்ட உலக வரலாற்றில்,  ஜனநாயகத்தில் காலம் மிக குறுகியது என்றாலும்,  ஆட்சி முறையில் இதுவே தற்போதைய நிலையில் சிறந்ததாக உள்ளது.  அந்த ஜனநாயகம் புதிய பரிணாம வளர்சசியில் தனது குறைகளை களைந்து புதிய மேம்பட்ட நிலையை அடையலாமே தவிர தவிர மீண்டும் பழைய சர்வாதிகார ஆட்சிக்கு திரும்ப முடியாது. உலகம் பின்னோக்கி போகவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் என்ன.. ஒரு கட்டத்தில் சர்வாதிகாரம் அதன் எல்லைக்குள் மேல் செல்ல முடியாது. ஆனால் சனநாயகம்.. எந்த வேளையும் கொடிய பாசிச சர்வாதிகாரமாக மாறலாம். அமெரிக்காவின் சனநாயகம்.. சரியான இராணுவ சமபல.. பிற வல்லாதிக்க நாடுகள் இன்றேல்.. இந்த நிலைக்கு தான் போகும். இது மிகவும் ஆபத்தானது. மற்றைய நாடுகளில் காணப்பட்ட சர்வாதிகாரங்கள் போலன்றி.. அமெரிக்காவின் சர்வாதிகாரம் உலகில் மிக மோசமான ஒன்றாக இருக்கும். உலகப் பேரழிவுகளுக்கு இட்டுச்செல்லும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அதுசரி, ருவாண்டா இனப்படுகொலையில் பிரெஞ்சு இராணுவம் தொடர்புபட்டிருப்பது தொடர்பாக பிரெஞ்சு இராணுவத்தினர் பலர் கைது என வெளிவந்ததுள்ளதுள்ள செய்தி   உண்மையா? 

🤣

நான் சின்ன வயதில் சரியான செல்லம் குளப்படி. 

ஆனால் யாரும் என்ர குளப்படி பற்றி கதைத்தால் என்ர பாட்டிக்கு பயங்கர கோபம் வந்திடும். 

சொன்னவன் திறமோ அவன் மனைவி கற்புக்கரசியோ அவன் மகள் எத்தனை பேரிடம் பல்லைக் காட்டுகிறாள் என்று ஊரையே கூட்டி ஒரு வழிபண்ணி என்னை காப்பாற்றி விடுவார். 

ரசியா என்றவுடன் உங்கள் கதறலும் பழையதை எல்லாம் கிளறுவதும் தோண்டி எடுப்பதும் பாட்டியை மீண்டும் ஞாபகத்துக்கு கொண்டு வருகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, island said:

ஜனநாயகம் என்பது உலக ஆட்சி முறைகளின் ஒரு புதிய பரிணாமம். பிளேட்டோ, அரிஸ்டோட்டல் காலத்தில் இருந்து த்ததுவங்களாக ஆட்சி முறைகள்  பற்றிய தத்துவ கருத்து பரிமாறல்கள் இருந்த போதும் மன்னர் ஆட்சியும் தனிநபர் சர்வாதிகார ஆட்சி முறையே 19 ம் நூற்றாண்டு வரை உலகில் பேணப்பட்டது.  

மிக நீண்ட உலக வரலாற்றில்,  ஜனநாயகத்தில் காலம் மிக குறுகியது என்றாலும்,  ஆட்சி முறையில் இதுவே தற்போதைய நிலையில் சிறந்ததாக உள்ளது.  அந்த ஜனநாயகம் புதிய பரிணாம வளர்சசியில் தனது குறைகளை களைந்து புதிய மேம்பட்ட நிலையை அடையலாமே தவிர தவிர மீண்டும் பழைய சர்வாதிகார ஆட்சிக்கு திரும்ப முடியாது. உலகம் பின்னோக்கி போகவில்லை.  

காலத்திற்குக் காலம் புதிய சிந்தனைகள் புதிதாகத் தோன்றுகிறது. தோன்றிக்கொண்டேயிருக்கும். இதில் மாறுபட்ட கருத்து எனக்கு இல்லை. 

ஆனால் மக்களாட்சிதான் சிறந்தது, எனவே மற்றைய ஆட்சி முறைமைகள் எல்லாம் தீயன. அதனால் அவ்வாறான ஆட்சிகள் எல்லாம் கலைக்கப்பட வேண்டும், ஆட்சியாளர்கள் எல்லோரும் அழிக்கப்பட வேண்டும்  என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. 

மாற்றம் என்பது காலத்தால் ஏற்படவேண்டும். மனிதர்கள் ஊக்கிகளாக இருக்கலாமே தவிர அழிப்பவர்களாக அல்ல. 

மாற்றுச் சிந்தனைகளைக் கண்டு பயப்படுபவர்களே மாற்றுச் சிந்தனையாளர்களை மாற்றுக் கொள்கைகளைக் கொண்ட அரசுகளையும் ஆட்சியாளர்களையும் அழிக்கிறார்கள். 

அப்படி இல்லாவிட்டால் கியூபா மீதான தடை என்பது தேவையில்லாமலேயே போயிருக்கும். அந்த நாட்டின் மக்கள் வறுமையில் இருக்க வேண்டிய தேவையே இல்லை. இவ்வாறான செய்கைகள்தான் உலகம்  முன்னோக்கிப் போகும் வேகத்தைக் குறைக்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

சும்மா எழுதவேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள் நேரம் பொன்னானது 

அந்த அந்த நாட்டின் மக்கள் தாமாக முடிவெடுக்க வேண்டும் அது சர்வாதிகாரிகளால் தடுக்கப்படாது சுதந்திரமாக ஐனநாயக வழியில் இருக்கவேண்டும் என்று தான் சொல்கிறேன். 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

நான் சின்ன வயதில் சரியான செல்லம் குளப்படி. 

ஆனால் யாரும் என்ர குளப்படி பற்றி கதைத்தால் என்ர பாட்டிக்கு பயங்கர கோபம் வந்திடும். 

சொன்னவன் திறமோ அவன் மனைவி கற்புக்கரசியோ அவன் மகள் எத்தனை பேரிடம் பல்லைக் காட்டுகிறாள் என்று ஊரையே கூட்டி ஒரு வழிபண்ணி என்னை காப்பாற்றி விடுவார். 

ரசியா என்றவுடன் உங்கள் கதறலும் பழையதை எல்லாம் கிளறுவதும் தோண்டி எடுப்பதும் பாட்டியை மீண்டும் ஞாபகத்துக்கு கொண்டு வருகிறது 

இலங்கையில் மட்டும்தான் பழையதைக் கிண்டுவீர்களா? 

(எனது பாட்டி சர்யைச் சரியென்றும் பிழையைப் பிழையென்று சொல்லு என்று என்னை ஊட்டி வளர்த்தவர். யார் என்ன சொன்னாலும் அதில் நியாயம் இருந்தால் அதைக் கவனத்தில் கொள்ளுவார்)

2 minutes ago, விசுகு said:

சும்மா எழுதவேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள்

அந்த அந்த நாட்டின் மக்கள் தாமாக முடிவெடுக்க வேண்டும் அது சர்வாதிகாரிகளால் தடுக்கப்படாது சுதந்திரமாக ஐனநாயக வழியில் இருக்கவேண்டும் என்று தான் சொல்கிறேன். 

சனநாயக வழியில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று கூற நீங்கள் யார்? உங்கள் சனநாயக வழிமுறைகளை லிபியாவிலும், ஈராக்கிலும்தான் பார்த்தோமே 😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

சும்மா எழுதவேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள் நேரம் பொன்னானது 

அந்த அந்த நாட்டின் மக்கள் தாமாக முடிவெடுக்க வேண்டும் அது சர்வாதிகாரிகளால் தடுக்கப்படாது சுதந்திரமாக ஐனநாயக வழியில் இருக்கவேண்டும் என்று தான் சொல்கிறேன். 

வாக்குப் போட்டும் சனநாயகத்தால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இனப்படுகொலைக்குள்ளான இனத்தில் இருந்து வந்த நீங்கள் சனநாயகம் இந்தக் காலத்திலும் திறம் என்று வாதாடுவது நகைப்புக்கிடமானது.

இன்றைய சனநாயகம்.. சர்வாதிகாரத்திற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல. என்ன இப்ப சனநாயகத்தில் சர்வாதிகாரியை மக்களே தம்மீது திணிக்கப்பட்ட வாக்குளால்.. தேர்வு செய்து தாமே.. அதை அனுப்பவிக்கவும்.. வீட்டுக்கு அனுப்பவும் வேண்டி இருக்கிறது. இது எந்த வகையில்.. சர்வாதிகாரத்தில் இருந்து முன்னேற்றகரமானது..??! சும்மா மக்களை வாக்குப் போட வைச்சு அவர்களாலே ஒரு சர்வாதிகாரியை தேர்வு செய்வது.. முன்னேற்றகரமானதா..??! அந்த வாக்குப் போட்ட மக்களுக்கு ஒரு அதிகாரமும் இல்லை.. தாம் தேர்வு செய்தவர் வழிதவறினால்.. அகற்றுவதற்கு. இதுதான் அமெரிக்காவின் தற்போதைய சர்வாதிகார சனநாயகம். என்ன ஆயுத பலத்தால்.. அதுதான் சிறப்பு என்ற காட்டாயத் திணிப்பையும் பாடமெடுப்பையும் சிறந்தது என்று சொல்ல வேண்டிய நிலையில்.. வைச்சிருக்குது.. அமெரிக்காவின் கொடிய வாக்குச் சனநாயக சர்வாதிகாரம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nedukkalapoovan said:

ஆனால் என்ன.. ஒரு கட்டத்தில் சர்வாதிகாரம் அதன் எல்லைக்குள் மேல் செல்ல முடியாது. ஆனால் சனநாயகம்.. எந்த வேளையும் கொடிய பாசிச சர்வாதிகாரமாக மாறலாம். அமெரிக்காவின் சனநாயகம்.. சரியான இராணுவ சமபல.. பிற வல்லாதிக்க நாடுகள் இன்றேல்.. இந்த நிலைக்கு தான் போகும். இது மிகவும் ஆபத்தானது. மற்றைய நாடுகளில் காணப்பட்ட சர்வாதிகாரங்கள் போலன்றி.. அமெரிக்காவின் சர்வாதிகாரம் உலகில் மிக மோசமான ஒன்றாக இருக்கும். உலகப் பேரழிவுகளுக்கு இட்டுச்செல்லும். 

😂 இங்கே சிரிக்க சிறக்க பகுதிக்கு எழுதுகிறார்களா அல்லது சீரியசாக எழுதுகிறார்களா?

"சர்வாதிகாரம் ஒரு எல்லைக்கு மேல் போகாது, ஆனால் ஜனநாயகம் எல்லையில்லாமல் மிக மோசமான நிலைக்குப் போகலாம், ஆகவே, ஜனநாயகம் சர்வாதிகாரத்தை விட ஆபத்தானது"

🤣எப்படியான ஒரு "குத்தி முறிந்து" சர்வாதிகாரமும், பாசிசமும் முன்னேற்றங்கள் என்று நிறுவும் ஒரு படைப்பாற்றல்?

சிம்பிளாக, நாசிகளின் கொலைவெறியின் "எல்லை" உலகில் இருந்த/இருக்கின்ற சட்ட ரீதியான மக்களாட்சியை விடக் குறைவா? அல்லது ஸ்ராலினிசத்தின் எல்லை அதன் பின் வந்த குருஷே ஆட்சியினை விடக் கட்டுப்பாடான எல்லையா?

 மூளையை, யோசிப்பை எதற்கெல்லாம் பாவிப்பது என்று தெரியாத இந்த நிலையை எப்படி அழைப்பது?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

வல்லாதிக்க அரசுகளின் சமநிலையென்பது ஜனநாயகத்திற்கும் தனிநபர் சர்வாதிகார ஆட்சிக்குமிடையிலான சமநிலையாக இருக்கும் நிலைக்கு உலகம் வரக்கூடாது.

தனி நபர் சர்வாதிகார ஆட்சி (இப்ப இந்த வகை சர்வாதிகாரம் தான் பிரபலம் என்கிறார்கள்) எப்பவும் முடக்கி, ஒதுக்கி அழிக்கப் பட வேண்டிய ஒன்று. இதன் அர்த்தம் ரஷ்யா அழிக்கப் பட வேண்டுமென்பதல்ல, அதற்கு மேல் பெண்மணியே சாட்சி!

உக்ரைன் மீதான ரஷ்ய அக்கிரமிப்பை கண்டித்து நடத்தபட்ட பேரணிகளில் கலந்து கொண்ட ரஷ்ய வம்சாவளியினரும் புரின் சார்வாதிகாரியின் ஆட்சி முடிவையே வேண்டுகின்றனர். மற்றும் படி யாழ்களத்தில் இவர்கள் சுதந்திரமான ஐனநாயகநாடுகளில் வாழ்ந்து உச்சகட்ட சுதந்திர வாழ்வை அனுபவித்தபடி சர்வாதிகாரத்தை ஆதரித்து எழுதுவது எல்லாம் ஒரு நகைச்சுவை பொழுது போக்கிற்காக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, nedukkalapoovan said:

வேண்டாத.. மேற்குலக நலன்களை முன்னிறுத்தி உக்ரைனின் கோமாளி ஆட்சியாளரின் தனிப்பட்ட செல்வாக்குக்காக நடக்கும்.. இந்த யுத்தத்தில் ரஷ்சியாவின் பலம் அழிக்கப்படுவது ஒட்டுமொத்த ரஷ்சிய மக்களுக்கும் தான் பாதிப்பு. உலக மக்களுக்கும் பாதிப்பே. அது உலக இராணுவ வல்லாதிக்கச் சமநிலையில் பாதிப்பை உண்டு பண்ணினால்.. அமெரிக்காவின் அடாவடித்தனத்துக்கு முழு உலகும் பலியாக நேரிடலாம். 

நம்மவர்கள் கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்று சொல்லிக்கொண்டே அமெரிக்க ஆக்கிரமிப்புகளை ஆதரிக்கின்றார்கள்...:beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

சனநாயக வழியில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று கூற நீங்கள் யார்? உங்கள் சனநாயக வழிமுறைகளை லிபியாவிலும், ஈராக்கிலும்தான் பார்த்தோமே 😏

உண்மையில் உங்களுக்கு எழுதுவது நேரவிரயம் 

ஐனநாயக கோட்பாட்டை அறியாதவர் அல்ல நீங்கள். உங்களுக்கு தேவையானபோது அதன் ஓட்டைகளை மட்டும் தேடுகிறீர்கள். 

ஆனால் அது சிறந்த வழி அதன் ஓட்டைகள் திருத்தப்பட்டணும் என்றே நன்மக்கள் விரும்புவர் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, Justin said:

😂 இங்கே சிரிக்க சிறக்க பகுதிக்கு எழுதுகிறார்களா அல்லது சீரியசாக எழுதுகிறார்களா?

"சர்வாதிகாரம் ஒரு எல்லைக்கு மேல் போகாது, ஆனால் ஜனநாயகம் எல்லையில்லாமல் மிக மோசமான நிலைக்குப் போகலாம், ஆகவே, ஜனநாயகம் சர்வாதிகாரத்தை விட ஆபத்தானது"

🤣எப்படியான ஒரு "குத்தி முறிந்து" சர்வாதிகாரமும், பாசிசமும் முன்னேற்றங்கள் என்று நிறுவும் ஒரு படைப்பாற்றல்?

சிம்பிளாக, நாசிகளின் கொலைவெறியின் "எல்லை" உலகில் இருந்த/இருக்கின்ற சட்ட ரீதியான மக்களாட்சியை விடக் குறைவா? அல்லது ஸ்ராலினிசத்தின் எல்லை அதன் பின் வந்த குருஷே ஆட்சியினை விடக் கட்டுப்பாடான எல்லையா?

 மூளையை, யோசிப்பை எதற்கெல்லாம் பாவிப்பது என்று தெரியாத இந்த நிலையை எப்படி அழைப்பது?

அமெரிக்காவுக்கு ஐரோப்பாவில் என்ன வேலை?

அவர்கள் செய்வதும் ஒருவகை சர்வாதிகாரம் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nedukkalapoovan said:

வாக்குப் போட்டும் சனநாயகத்தால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இனப்படுகொலைக்குள்ளான இனத்தில் இருந்து வந்த நீங்கள் சனநாயகம் இந்தக் காலத்திலும் திறம் என்று வாதாடுவது நகைப்புக்கிடமானது.

இன்றைய சனநாயகம்.. சர்வாதிகாரத்திற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல. என்ன இப்ப சனநாயகத்தில் சர்வாதிகாரியை மக்களே தம்மீது திணிக்கப்பட்ட வாக்குளால்.. தேர்வு செய்து தாமே.. அதை அனுப்பவிக்கவும்.. வீட்டுக்கு அனுப்பவும் வேண்டி இருக்கிறது. இது எந்த வகையில்.. சர்வாதிகாரத்தில் இருந்து முன்னேற்றகரமானது..??! சும்மா மக்களை வாக்குப் போட வைச்சு அவர்களாலே ஒரு சர்வாதிகாரியை தேர்வு செய்வது.. முன்னேற்றகரமானதா..??! அந்த வாக்குப் போட்ட மக்களுக்கு ஒரு அதிகாரமும் இல்லை.. தாம் தேர்வு செய்தவர் வழிதவறினால்.. அகற்றுவதற்கு. இதுதான் அமெரிக்காவின் தற்போதைய சர்வாதிகார சனநாயகம். என்ன ஆயுத பலத்தால்.. அதுதான் சிறப்பு என்ற காட்டாயத் திணிப்பையும் பாடமெடுப்பையும் சிறந்தது என்று சொல்ல வேண்டிய நிலையில்.. வைச்சிருக்குது.. அமெரிக்காவின் கொடிய வாக்குச் சனநாயக சர்வாதிகாரம். 

இல்லை தம்பி

எனக்கு ஐனநாயக வழியில் மட்டுமே நம்பிக்கை உண்டு. என்னை மீண்டும் 18ம் நூற்றாண்டுக்கு வழி காட்டவேண்டாம். நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.