Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் ஒரு கொலைகாரனை வளர்த்தீர்கள்- புட்டினின் பெற்றோரின் புதைகுழிக்கு அருகில் குறிப்பை வைத்த பெண்ணிற்கு சிறைத்தண்டனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, இணையவன் said:

நிச்சயமாக. கல்லறையை அவமதித்தது கேவலமானது.

ஆனால் இந்தப் பெண்ணின் நோக்கம் கல்லறையை அவமதிப்பதாக என்க்குத் தோன்றவில்லை. அப்படியானால் யாருக்கும் தெரியாமல் கல்லறையில் கிறுக்கியிருக்கலாம். சுதந்திரமான பேச்சுரிமை மறுக்கப்படும் நாட்டில் தைரியமாக முன்வந்து தான் சொல்லவேண்டியதை உலகிற்குத் தலைநிமிர்ந்து கூறிவிட்டார். ரஸ்யாவில் பலர் மௌனமாக தமக்குள்ளேயே இவரைப் பாராட்டியிருப்பார்கள்.

நன்றி, இணையவன் உங்கள் கருத்திற்கு.

நன்றி அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் மறைமுகமாகவும் நேரடியாகவும் எனது கருத்திற்கு பதிலளித்தமைக்கு, இணையவன் தவிர்த்து பல உறவுகளுக்கு கல்லறைகளில் அவமரியாதை செய்வது மோசமான செயல் என்பது புரியாமல் இருப்பதனை உணரமுடிகிறது.

இதில் எனது தவறும் உண்டு என்னால் அதனை இலகுவாக அனைவருக்கும் விளங்கப்படுத்தமுடியவில்லை, சிறந்த ஆசிரியர் கடைநிலை மாணவருக்கும் புரியுமாறு படிப்பிக்க வேண்டும், நான் ஆசிரியருமில்லை, ஆனால் பெரும்பாலனோர் எனது கருத்தினை உள்வாங்கியுள்ளார்கள் என்பதனை அவர்களது கருத்திலிருந்து அறிய முடிகிறது, இது ஒரு ஆரோக்கியமான விடயம் முதலில் ஒரு விடயத்தினை உள்வாங்கியுள்ளனர், இனி கல்லறைகளை காணும்போது அவர்களது கல்லறை தொடர்பான இதுவரைகாலமும் இருந்த புரிதலில் ஒரு மாற்றம் ஏற்படலாம், சாதாரணமாக கடந்து விடமாட்டார்கள் என நம்புகிறேன்.

  • Replies 65
  • Views 3.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புட்டின் அம்மா அப்பா கல்லறையில்; ஒரு மூதாட்டி காகிதத்தில் எழுதி வைத்த நோட்டுக் குறிப்பை நீங்கள் ஓவர் சென்டிமென்டாய் அணுகுகிறீர்கள் என்பது புரிகிறது. 

அந்த கல்லறைகள் ஒன்றும் ஈழதேச விடுதலைக்காய் இளம் வயதில் தம் உயிரை துச்சமாய் மதித்து மண்ணுக்காய், மக்களுக்காய் உயிர்க்கொடை தந்தவர்கள் உறைவிடம் போல நினைக்காதீர்கள். 🙏

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்புப் போர் ஆரம்பித்த காலத்திலிருந்து யாழ் இணையத்தில் மிகத்தெளிவான இரு பிரிவினர் இருக்கின்றனர் என்பது உறுதியாகிறது. 

ஒன்று, இந்த ஆக்கிரமிப்புப் போரினை எம்மீதான சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புடன் ஒப்பிட்டு, எமக்கு ஏற்பட்ட அவலங்களூடாக இன்று உக்ரேன் மக்கள் அனுபவிக்கும் அவலங்களை உணர்ந்துகொண்டு, இந்த ஆக்கிரமிப்புப் போரை நடத்தும் ரஸ்ஸியாவின் நடவடிக்கையினை விமர்சிப்போர். 

மற்றைய பிரிவினர், இந்த ஆக்கிரமிப்புப் போரை நியாயமானது என்று நிறுவுவதற்காக அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் முன்னாள் செயற்பாடுகளை கொண்டுவந்து நிறுத்தி, அன்று அவர்கள் செய்ததையே இன்று புட்டின் செய்கிறார். ஆகவே, அது தவறில்லையென்றால், இதுவும் தவறில்லை என்று வாதிடுகிறார்கள். மேலும், ஈழத்தமிழர் பிரச்சினையில் அமெரிக்கா ஆரம்பமுதல் எடுத்துவந்த நிலைப்பாடும், இறுதி யுத்த காலத்தில் இலங்கையரசைப் பலப்படுத்திய செயற்பாடுகளையும் ஒப்பிட்டு, இன்று உக்ரேனியர்களின் அவலங்களுக்காக அல்லாமல், தனது சொந்த நலன்களுக்காகவே அமெரிக்கா உக்ரேனிற்குள் நுழைந்திருக்கிறது என்றும் கூறுகிறார்கள். இது முற்றிலுமான உண்மையும் கூட. 

ஆனால், இந்த வாதப் பிரதிவாதங்கள் எமக்குத் தேவையானவை தானா? யாழ் இணையத்தில் உக்ரேன் போரைத் தவிர இன்று வேறு எந்த ஒரு விடயமும் கருத்தாளர்களால் பேசப்படாதது ஏன்? இப்போர் பற்றிய எமது விவாதங்கள் எம்மிடையே நிரந்தரமான பிளவொன்றினை ஏற்படுத்தியிருப்பதை எவராவது உணர்கிறீர்க்களா? அல்லது, இந்தப் போரின் தாக்கம், யாழ் இணையத்தின் எந்தக் கருத்தாடலிலும் ஏதோ ஒருவகையில் பிரதிபலிப்பதையாவது எவராவது உணர்கிறீர்களா? இன்று பல கருத்தாளர்கள் யாழ் இணையத்திலிருந்து ஒதுங்கியிருக்க இந்த உக்ரேன் போர் தொடர்பான குழு வாதங்கள் காரணமாக இருக்கின்றன என்பதை எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? எனக்குத் தெரிந்த பல சிறந்த கருத்தாளர்கள் "அமைதியாகக் கடந்து செல்வதே சரியானது" எனும் நிலைக்கு வந்திருப்பதற்கு இதுவே காரணம். திண்ணை பூட்டப்பட்டதற்கு ஒற்றைக் காரணமும் இந்த உக்ரேன் போரின் திரிகளின் எச்சங்களையும் அங்கும் வந்து தொடர்ந்ததுதான் ( நான் உட்பட) என்று நினைக்கிறேன்.

உக்ரேன் போரினை ஒரு மக்கள் கூட்டத்தின் அவலங்களாகப் பார்க்க முடியாவிட்டால் அதுபற்றி எழுதுவதை நாம் அனைவரும் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால், நலிவுற்ற சமூகமான எமக்கு ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொள்ளும் உக்ரேனியர்களுக்கான அனுதாபத்தினையன்றி வேறு எதையுமே செய்துவிடமுடியாதென்பதை இங்கு கருத்தாடும் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அவலங்களை மறந்துவிட்டு, வெறும் பின்புலங்கள் பற்றியும், சர்வதேச பலச்சமநிலை பற்றியும் பேசும் அட்டவதானிகளாக நாம் மாறியிருக்கிறோம். 

இனியொரு கருத்தினை இந்த உக்ரேன் போர்பற்றி எழுத விரும்பும் எவரும், தான் எழுதப்போகும் கருத்து இன்றிருக்கும் யாழின் அவல நிலையினை மேலும் சீரழிக்காது இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். 

இந்த நச்சுக் கருத்தாடல்களுக்குள் இருந்து எங்களை வெளியே மீட்டுவருவோம்!

Edited by ரஞ்சித்
spelling

  • கருத்துக்கள உறவுகள்

மனதை திறந்து சொல்கிறேன் இந்த ரசிய, உக்ரைன் போரின் பின்னர் யாழ் கள உரையாடல்கள், திரிகள், பின்னூட்டங்கள், கேலிகள், மீம்ஸ் இவையெல்லாம் பார்க்க பார்க்க  நான் வாஞ்சையோடு பல வருடம் கருத்தாடிய உறவுகள் மீதும் கூட என் பார்வையை மாற்றச்செய்துள்ளது, உண்மையில் சொன்னால் பலரோடு அந்நியப்பட்டது போலவும் உணர்கிறேன்.
சொந்த மண்ணில் பேரவலம் வந்தபோது வீழ்த்தப்பட்டவர்களுக்காக தோளோடு தோல் நின்று, உறுதுணையாய் பலம் தந்து கருத்தாடிய உறவுகள் மேற்குலக எதிர்ப்பு என்ற மாயையில்; வீழ்ந்து கிடப்போரை, மண்ணை நேசிப்பவனை  நக்கல், நையாண்டி செய்து பரவசம் காணுகிறார்கள்.
யாழ் களம் இனிவரும் காலங்களில் தொடரும் என்ற நம்பிக்கையும் சற்றே கேள்விக்குறியாகவே .. 😧

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டது சரி என நிறுவுகின்றீர்கள்.

மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அண்ணா

இதற்குள் நீங்கள் சிறீலங்காவை இழுத்தபோதே புரிந்து கொண்டேன் இங்கே தான் வர தூபம் போடுகிறீர்கள் என்று. 

அதற்கு தகுந்த வகையில் உங்களது அடுத்த கேள்விக்கு ஏதுவாகவே அது நாடுகளுக்கான உதவி என்றும் அந்த வகையில் தானே சிறிலங்காவுக்கும் கொடுத்தது இது நடந்தது தானே என்றும் எழுதி இருந்தேன். 

இந்திரா காந்தியின் கொலைக்கு பின்னர் இந்தியாவும் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்காவும் இயக்கங்கள் சார்ந்த தமது கொள்கைகளில் எல்லா அமைப்புகளையும் ஒரே சாக்கில் போட்டு கட்டியது துரதிஸ்டமே.  இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இலங்கை அழிவையும் பொருட்படுத்தாமல் போரால் வென்றதும் எம் கண்முன்னே நடந்தது தானே??

(எனக்கு கீழே உள்ள கருத்துக்களின் அடிப்படையை உக்ரைன் போர் ஆரம்பமான போதே தூரப் பார்வையோடு உணர்ந்து விலகிச் சென்ற என்னை மீண்டும் இங்கே எழுதும் படி இழுத்து வந்தது நீங்கள் தான் என்பதையும் மீண்டும் ஞாபகப் படுத்தி எனக்கு கருதாடலா என் உறவுகளா என்றால் உறவுகள் தான் என் தெரிவு. நன்றி அண்ணா 🙏)

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

நன்றி, இணையவன் உங்கள் கருத்திற்கு.

நன்றி அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் மறைமுகமாகவும் நேரடியாகவும் எனது கருத்திற்கு பதிலளித்தமைக்கு, இணையவன் தவிர்த்து பல உறவுகளுக்கு கல்லறைகளில் அவமரியாதை செய்வது மோசமான செயல் என்பது புரியாமல் இருப்பதனை உணரமுடிகிறது.

இதில் எனது தவறும் உண்டு என்னால் அதனை இலகுவாக அனைவருக்கும் விளங்கப்படுத்தமுடியவில்லை, சிறந்த ஆசிரியர் கடைநிலை மாணவருக்கும் புரியுமாறு படிப்பிக்க வேண்டும், நான் ஆசிரியருமில்லை, ஆனால் பெரும்பாலனோர் எனது கருத்தினை உள்வாங்கியுள்ளார்கள் என்பதனை அவர்களது கருத்திலிருந்து அறிய முடிகிறது, இது ஒரு ஆரோக்கியமான விடயம் முதலில் ஒரு விடயத்தினை உள்வாங்கியுள்ளனர், இனி கல்லறைகளை காணும்போது அவர்களது கல்லறை தொடர்பான இதுவரைகாலமும் இருந்த புரிதலில் ஒரு மாற்றம் ஏற்படலாம், சாதாரணமாக கடந்து விடமாட்டார்கள் என நம்புகிறேன்.

உங்கள் கருத்தை இங்கே யாரும் கனம் பண்ணவில்லை சகோ. 

காவல் நிலையத்தில் காந்தி படமும் கள்ளர் படமும் இருப்பது ஏன் என்பதை புரிந்து கொண்டால்..???

கிட்லரை பெத்தவர்களை எத்தனை கோடி உயிர்கள் திட்டி தீர்த்தது இருக்கும். ஆனால் புட்டினை போற்றி பாடுபவர்களுக்கு இது வலிக்கும்.

(நன்றி தொடர விரும்பவில்லை)🙏

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித்தின் கருத்துடன் ஒத்துப்போகிறேன் ஒரு குறிப்புடன். 

குறிப்பு ; ரஸ்ய படையெடுப்பையோ, உக்ரேன் மக்களின் அவலத்தையோ ஒருவரும் நியாயப்படுத்தவில்லை என்பது என் புரிதல். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அண்ணா

இதற்குள் நீங்கள் சிறீலங்காவை இழுத்தபோதே புரிந்து கொண்டேன் இங்கே தான் வர தூபம் போடுகிறீர்கள் என்று. 

அதற்கு தகுந்த வகையில் உங்களது அடுத்த கேள்விக்கு ஏதுவாகவே அது நாடுகளுக்கான உதவி என்றும் அந்த வகையில் தானே சிறிலங்காவுக்கும் கொடுத்தது இது நடந்தது தானே என்றும் எழுதி இருந்தேன். 

இந்திரா காந்தியின் கொலைக்கு பின்னர் இந்தியாவும் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்காவும் இயக்கங்கள் சார்ந்த தமது கொள்கைகளில் எல்லா அமைப்புகளையும் ஒரே சாக்கில் போட்டு கட்டியது துரதிஸ்டமே.  இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இலங்கை அழிவையும் பொருட்படுத்தாமல் போரால் வென்றதும் எம் கண்முன்னே நடந்தது தானே??

(எனக்கு கீழே உள்ள கருத்துக்களின் அடிப்படையை உக்ரைன் போர் ஆரம்பமான போதே தூரப் பார்வையோடு உணர்ந்து விலகிச் சென்ற என்னை மீண்டும் இங்கே எழுதும் படி இழுத்து வந்தது நீங்கள் தான் என்பதையும் மீண்டும் ஞாபகப் படுத்தி எனக்கு கருதாடலா என் உறவுகளா என்றால் உறவுகள் தான் என் தெரிவு. நன்றி அண்ணா 🙏)

இனி வரும் காலங்களில்  உக்ரேன் பிரச்சனை ஈழத்தமிழருக்கு சோறு போடாது என்பதை நினைவில் நிறுத்தி அதை கடந்து செல்லலாம் என நினைக்கின்றேன்.எங்கேயோ ஆரம்பித்து அது எதிர்பாராத இடத்தில் வந்து நிற்கின்றது.கூட்டுக்குடும்பத்துக்குள்ளேயே நீ பெரிது நான் பெரிது என்ற பிரச்சனையே இந்த உக்ரேன் பிரச்சனை உருவாக்கியுள்ளது.

எனவே  இனிவரும் காலங்களில் விடுதலையை நோக்கிய ஈழத்தமிழராக பயணிப்போம். உக்ரேன் செய்திகளை கடந்து செல்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் பிரச்சனைக்கும் உக்கிரேன் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை. கொடுங்கோலர்களாலும் ஆக்கிரமிப்பு சர்வதிகாரிகளாலும் பல கொடுமைகளை சந்தித்தவர்கள் என்ற வகையில் மனச்சாட்சியுள்ள ஈழத்தமிழர்கள் புட்டீன் என்ற கொடுங்கோல் சர்வாதிகாரியின் உக்கிரேன் ஆக்கிரமிப்புக்கு எதிரான் தமது எதிப்பை பதிவு செய்கிறார்கள்.  அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இனி வரும் காலங்களில்  உக்ரேன் பிரச்சனை ஈழத்தமிழருக்கு சோறு போடாது என்பதை நினைவில் நிறுத்தி அதை கடந்து செல்லலாம் என நினைக்கின்றேன்.எங்கேயோ ஆரம்பித்து அது எதிர்பாராத இடத்தில் வந்து நிற்கின்றது.கூட்டுக்குடும்பத்துக்குள்ளேயே நீ பெரிது நான் பெரிது என்ற பிரச்சனையே இந்த உக்ரேன் பிரச்சனை உருவாக்கியுள்ளது.

எனவே  இனிவரும் காலங்களில் விடுதலையை நோக்கிய ஈழத்தமிழராக பயணிப்போம். உக்ரேன் செய்திகளை கடந்து செல்வோம்.

நன்றி அண்ணா 🙏

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரஞ்சித் said:

உக்ரேன் போரினை ஒரு மக்கள் கூட்டத்தின் அவலங்களாகப் பார்க்க முடியாவிட்டால் அதுபற்றி எழுதுவதை நாம் அனைவரும் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால், நலிவுற்ற சமூகமான எமக்கு ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொள்ளும் உக்ரேனியர்களுக்கான அனுதாபத்தினையன்றி வேறு எதையுமே செய்துவிடமுடியாதென்பதை இங்கு கருத்தாடும் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

உக்ரேன் மக்களின் அவலங்களுக்கு காரணமான ரஷ்ய ஆக்கிரமிப்பு சர்வாதிகாரி புடினையும் அவருடைய செயற்பாடுகளையும் ரஷ்ய அரசு தரப்பு சொல்வதையும்  தமிழில் பிரசாரபடுத்துவதும், ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு தடையாக உள்ள ஜனநாயகநாடுகளை இழிவுபடுத்தும் வேலை  இங்கே நடைபெற்றது.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

உங்கள் கருத்தை இங்கே யாரும் கனம் பண்ணவில்லை சகோ. 

காவல் நிலையத்தில் காந்தி படமும் கள்ளர் படமும் இருப்பது ஏன் என்பதை புரிந்து கொண்டால்..???

கிட்லரை பெத்தவர்களை எத்தனை கோடி உயிர்கள் திட்டி தீர்த்தது இருக்கும். ஆனால் புட்டினை போற்றி பாடுபவர்களுக்கு இது வலிக்கும்.

(நன்றி தொடர விரும்பவில்லை)🙏

நான் உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன், அதனால் பதிலிடவிரும்பவில்லை, ஆனாலும் நீங்கள் மீண்டும் என்னை தவறாகவே புரிந்து கொண்டுள்ளமையாக உணருகிறேன், நீங்கள் என்னை புரிந்து கொள்வதால் எனக்கும் இலாபமில்லைதான் ஆனால் நான் கூறிய கருத்தினை மற்றவர்கள் விளங்கிகொள்வதாலும் எனக்கு  எந்த நன்மையுமில்ல்லை (சரியான கருத்தாக இருந்தால்).

நாம் எவ்வாறிருக்கிறோமோ அவ்வாறே எமது சமூகமும், உலகமும் இருக்கும், நீங்கள் உலகை பார்த்து சிரித்தால் அது உங்களுக்கு பதிலிலுக்கு சிரிப்பை கொடுக்கும், நீங்கள் வேறு ஏதாவதொன்றை கொடுத்தால் அந்த வேண்டாத வேறொன்று உங்களிடமே வந்து சேரும் (கல்லறைகளுக்கான மரியாதையினை பற்றி கூறுகிறேன்).

நாம் எல்லோரும் எதோ ஒரு வகையில் நல்ல விடயங்களை மற்றவர்களிடம் கற்றுகொள்கிறோம், நான் உங்களிடமும் கற்றுக்கொண்டிருக்கிறேன் ஒவ்வோர் யாழ்கள உறவுகளிடமும் கற்றுகொண்டுள்ளேன், மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது யாழ் என்னை மேம்படுத்தியுள்ளது பல வகையில், அதனால் உங்கள் அனைவரின் மேலும் எனக்கு மதிப்புள்ளது, உரிமையும் உள்ளது, சில சமயம் அந்த உரிமையில் எனது கருத்தினை வைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2023 at 09:04, Kapithan said:

எங்கள் வீட்டுக்  கல்லறைகளில் இப்படி எழுதி வைத்தால் எப்படியிருக்கும் எனச் சிந்தித்தால் இந்தச் செயலின் கனம் புரியும். 

மன்னிக்கவும் காலம் தாழ்த்தி பதிலளிப்பதற்கு (சமீப காலமாக வேலைப்பளு காரணமாக இந்த தவறுகள் நிகழ்கிறது). ஒரு சிங்கள தளபதி ஒரு பிராந்தியத்தினை பிடித்து இளைஞர்களை கொன்றும் சிறைப்பிடித்தும் தென்பகுதிக்கு அனுப்பியவேளை அங்கு கூட்டத்தினை கூட்டி அந்த பிள்ளைகளின் பெற்றோரிடம் சொன்னாராம் ஒவ்வொரு 200 இளைஞர்களை கொன்றால் எதிர்காலத்தில் உருவாக இருக்கும் ஒரு புலியினை கொல்லலாம் என்றாராம்.

அந்த இராணுவ அதிகாரி இறந்த பின்னர் அவருக்கான நினைவு சின்னம் ஒன்றினை இராணுவத்தினர் தாம் நிலை கொண்டிருந்த பிரதேசத்தில் அமைத்திருந்தனர், அந்த இராணுவ நிலைகலை அழிக்க சென்ற புலிகளுக்கு அவர்களது தலைமையினால் வழங்கப்பட்ட உறுதியான உத்தரவு சண்டை பிரதேசத்தில் அமைந்திருக்கும் அந்த நினைவு சின்னத்தின் மீது எந்த கீறலும் விழ கூடாது என்பதாக கேள்விப்பட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் எனது கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் (ரஞ்சித்தின் கருத்தினை வாசித்த பின்னர் எனது தவறை உணர்கிறேன்).

  • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2023 at 09:10, Kapithan said:

ரஞ்சித்தின் கருத்துடன் ஒத்துப்போகிறேன் ஒரு குறிப்புடன். 

குறிப்பு ; ரஸ்ய படையெடுப்பையோ, உக்ரேன் மக்களின் அவலத்தையோ ஒருவரும் நியாயப்படுத்தவில்லை என்பது என் புரிதல். 

ரஞ்சித்தின் கருத்து முழுமையாக வாசித்தீர்களா? அல்லது எழுதப்பட்ட உக்ரேனின் மீதான காட்டமான பல பல கருத்துக்களை வாசிக்காமல் போய் விட்டீர்களா?

"ஒன்று, இந்த ஆக்கிரமிப்புப் போரினை எம்மீதான சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புடன் ஒப்பிட்டு, எமக்கு ஏற்பட்ட அவலங்களூடாக இன்று உக்ரேன் மக்கள் அனுபவிக்கும் அவலங்களை உணர்ந்துகொண்டு, இந்த ஆக்கிரமிப்புப் போரை நடத்தும் ரஸ்ஸியாவின் நடவடிக்கையினை விமர்சிப்போர். 

மற்றைய பிரிவினர், இந்த ஆக்கிரமிப்புப் போரை நியாயமானது என்று நிறுவுவதற்காக அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் முன்னாள் செயற்பாடுகளை கொண்டுவந்து நிறுத்தி, அன்று அவர்கள் செய்ததையே இன்று புட்டின் செய்கிறார். ஆகவே, அது தவறில்லையென்றால், இதுவும் தவறில்லை என்று வாதிடுகிறார்கள்"

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

வரிக்கு வரி அர்த்தம் பார்க்காமல் summary என்னவென்று பாருங்கள். 

இல்லாவிட்டால் முட்டையில் ... பிடுங்க வேண்டியதுதான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.