Jump to content

தமிழர் இனப்படுகொலை குறித்து கனடா பிரதமர் விடுத்த அறிக்கைக்கு இலங்கை கண்டனம்- இராஜதந்திர முறுகல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

நன்றி உங்களது தகவலுக்கு, அவுஸ்ரேலியாவில் தமிழர்களின் அரசியல் முயற்சிகளைவிட சிங்களவர்கள் (குறிப்பாக கல்வி சார் சமூகம்) தொடர்ச்சியாக மேலாதிக்கம் செலுத்தினர், பத்திரிகைகளின் ஆக்கங்கள் எழுதுவதிலிருந்து, தமிழர் தொண்டு நிறுவனங்களை முடக்குவது என தீவிரமாக செயல்பட்டனர்.

அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழர்களிடையே (பெரும்பாலான தமிழர்கள்) தாம் மற்ற நாடுகளில் உள்ள தமிழர்களைவிட கல்வியில் உயர்ந்தவர்கள் எனும் எண்ணம் இருந்தது(ஆனாலும் என்னைப்போலவே பல கல்வி சார்பற்ற அகதிகளாக வந்த தமிழர்கள் இருந்தார்கள்) அதனால் மற்ற நாடுகளைபோல இலகுவாக தமிழர் ஓரணியில் நின்று சிங்களத்தின் படுகொலைகளை வெளிப்படுத்தமுடியவில்லை.

இந்த கல்விசார் சமூகம் ஒரு வித்தியாசமான உலகில் வாழ்ந்தார்கள், வாழ்கின்றார்கள், அவர்களது வீடுகளில் சிங்கள கலைப்படைப்புகள் வீட்டு வரவேற்பறைகளில் காணப்படும்.

ஒரு சாதாரண மனித அவலத்தை கூட கண்டும் காணாமல் கடந்த சமூகமாக இருக்ககூடியளவில் இருந்தார்கள்.

ஆனால் முழுக்க முழுக்க அவர்களில் குற்றம் சொல்லி கடந்துவிடமுடியாது,

இரண்டு சமூகமாக தமிழர்கள் இங்குள்ளார்கள் என்பதே இந்த பிரச்சினைகளுக்கு காரணம்.

நன்றி விளக்கத்துக்கு .

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பெருமாள்

கனடா பிரதமரை பணபெட்டி சொகுசு வீடு போன்றவையை வாங்கி கொண்டு பல் இழிக்கும் சுமத்திரன் சம்பந்தன் போல் இலங்கை இந்திய அரசுகள் பார்க்க ********முட்டாள்தனம்  ****** பொருந்திய நாட்டின் அதிபர்   . நடந்தது இனஅழி

ரஞ்சித்

உண்மை, நானும் அங்கிருந்தேன். கெவின் ரட் வெளியில் வந்துகூடப் பார்க்கவில்லை. மேலும், மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு மைதானம் ஒன்றிற்குச் செல்லுமாறு அழுத்தம் கொடுப்பதற்காக கலகம் அடக்கும் பொலீஸாரு

satan

உண்மையை கூறினால்; நல்லிணக்கம் கெடுகிறது. உரிமையை கேட்டால்; நல்லிணக்கம் கெடுகிறது. அப்படி ஒன்று இருந்தாற்தானே கெடுகிறதற்கு? அது கெட்டு பல சகாப்தங்கள் கடந்துவிட்டது, அது இவர்களுக்கு விளங்கவில்லை அது இரு

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

ஆக, இலங்கை அரசு செய்ததை இனப்படுகொலை எனச் சொல்வது ஆர்வக்கோளாறினாலும், உணர்ச்சி பிரவாகத்தினாலுமா? இலங்கை அரசு இனப்படுகொலை யில் ஈடுபடவில்லையா?

 

 

இதை அப்போதைய உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. கனடாவில் சில மாற்றங்கள் தெரிகின்றன. உங்களுக்கு இலங்கை சென்று வர வேண்டிய தேவை இல்லை போல. இலங்கை தொடர்பை பேணுபவர்கள் சமூக ஊடகங்களில் செய்யும் உரையாடல் சம்மந்தமாக கவனமாகவே இருக்கவேண்டும். நாளைக்கு லோயருக்கு காசுகொடுத்துக்கொண்டு நாய்க்குட்டி மாதிரி பின்னால் அலையமுடியாது பாருங்கோ ஏதாவது சிக்கல்கள் வந்தால். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

ஆக, இலங்கை அரசு செய்ததை இனப்படுகொலை எனச் சொல்வது ஆர்வக்கோளாறினாலும், உணர்ச்சி பிரவாகத்தினாலுமா? இலங்கை அரசு இனப்படுகொலை யில் ஈடுபடவில்லையா?

 

யார் சொன்னா அப்பிடி? ஈடுபடவில்லையென்றால் இத்தனை நினைவு கூரல்கள், போராட்டங்கள், அறிக்கைகள், குற்றச்சாட்டுக்கள், காத்திருப்புகள் எதற்கு? எல்லாவற்றுக்கும் மேல் உயிர் பெரிது, நடந்தவைகளை, நடப்பவற்றைகளை உலகறியச்செய்ய. இவ்வளவு இடர்களை தாண்டி காத்த உயிரை இந்தா எடுத்துக்கொள் என்று சொல்ல யாரால் முடியும்? ஒருவேளை தங்களால் முடியுமோ என்னவோ? தாங்கள் முன்னின்று செயற்படுத்தினால் தொடர யாமும் தயார். தங்கள் முகநூலில் பதிவிட துணிவில்லையென்றால் உணர்வுகளுமில்லை என்று அர்த்தமில்லை நிழலியவர்களே! அவர்களது சொந்தங்கள் நசிப்படும் என்பது தாங்கள் அறியாததேனோ?

15 hours ago, நிழலி said:

வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர்களில் எத்தனை பேர் தம் சொந்த பெயரில் இருக்கும் முகனூலிலோ அல்லது தம் சொந்த டுவிற்றர் கணக்கிலோ மே 18 இனை இனப்படுகொலை நாள் என்று துணிந்து பதிவிட்டார்கள்?

துணிவு வேறு, தற்காப்பு வேறு. உலகறியச் செய்தவற்றையே இல்லையென்று சாதிக்குது,  எச்சரிக்குது இலங்கை இதில உறவுகளின் உயிரை பணயம் வைக்கச்சொல்லி நல்ல பழிவாங்கல் நிழலியார்க்கு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்த கனடா பிரதமரின் கருத்து – தூதுவரை அழைத்து எதிர்ப்பை வெளியிட்டது இலங்கை

Published By: RAJEEBAN

20 MAY, 2023 | 10:25 AM
image

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துக்களிற்கு இலங்கைக்கான கனடா தூதுவரிடம் வெளிவிவகார அமைச்சு கடும் ஆட்சேபiணையை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான கனடாதூதுவர்  எரிக்வோல்சினை வெளிவிவகார அமைச்சிற்கு அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நேற்று தூதுவரை அழைத்து எங்களின் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

நாங்கள் 14 வருடங்களிற்கு பின்னர் துன்பகரமான விதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைகூறுகின்றோம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையில்உட்பட  ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் இழக்கப்பட்டன,பலர் காணாமல்போனார்கள் காயமடைந்தார்கள் இடம்பெயர்ந்தார்கள் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் மற்றும் அர்த்தமற்ற வன்முறையால் ஏற்பட்ட துயரத்துடன் தொடர்ந்தும் வாழும் அவர்களின் குடும்பத்தவர்கள் குறித்து எங்கள் சிந்தனைகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் பல சமூகங்களில் நான் சந்தித்த பலர் தமிழ் கனடா பிரஜைகளின் கதைகள் மனித உரிமைகள் சமாதானம் ஜனநாயகம் போன்றவற்றை இலகுவாக கருதமுடியாது என்பதை நினைவுபடுத்தி நிற்கின்றன எனவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாகவே கடந்த வருடம் மே18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவுதினமாக நாங்கள் அங்கீகரித்தோம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் மோதலால் கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் உரிமைக்காகவும்  இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்களிறகாக  குரல்கொடுப்பதை கனடா நிறுத்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த அறிக்கையை கண்டித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்  இது இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகளி;ற்கு உதவியாக அமையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/155721

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ ......இவை, தங்களால் நடத்தப்பட்டதை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த பதினான்கு வருடங்களில் என்ன நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுத்தார் என்று விளக்கி கண்டனத்தை தெரிவித்திருக்கலாம். அவர்களும் தாங்கள் தெரிவித்த கருத்துக்களை வாபஸ் பெற்றிருப்பார்கள். அலியின் முட்டாள்தனத்தை வரட்டுகவுரவத்தை தனக்குள் எண்ணி சிரித்திருப்பார் தூதுவர். அடிதடி, எச்சரிக்கை போதும் இலங்கையில் பதவி பெறுவதற்கு, திறமை ஏதும் தேவையில்லை. தூதுவர், உங்கள் நல்லிணக்கத்தை பட்டியலிடுங்கள் என்று கேட்டிருந்தால்; அவ்வளவுதான், சப்ரி மூஞ்சை அசடு வழிந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஏனப்பு.. தமிழர் இனப்படுகொலை குறித்து என.. வீரகேசரி சரியாகத்தானே எழுதி உள்ளது? 

கவனமாக படித்து பாருங்கள் நான் எதற்கு ஆதங்க படுகிறேன் என்று புரியும் .

யாழில் தவறாக விளங்கி கொள்வதால் பல பக்கம்கள் வீணாவது உண்டு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kandiah57 said:

உண்மை தான்  ...ஆனால் அவர்களை யார்  பாராளுமன்றம் அனுப்பினாங்க??.    உங்கள் தமிழ் மக்கள் இல்லையா   பெருமாள்   ??? 

இப்படி நீங்களும் எத்தனைதரம் கேட்பது நாங்களும் விளக்கம் கொடுப்பது .

மக்கள் வாக்கு போட்டு வென்றவுடன் அவர்கள் ஏதோ கடவுளின் அவதாரம் போல் கொண்டாடுவது விசுகோத்துக்கு படிக்க போன அரைகுறை அறிவாளிகளின் வழக்கம் நீங்கள் அப்படியல்ல என்பது என் எண்ணம் .

பாராளுமன்றம் போன நம்ம தமிழ் அரசியல்வாதிகள்   தேர்தலுக்கு முன் தமிழ் மக்களுக்கு  தீர்வு வாங்கி தருவம் என்று சொல்லி  ஏமாற்றிதான் போனார்கள் போனது மட்டும் அல்ல தமிழ் மக்களுக்கு சார்பாக ஆதரவாக இருக்கவேண்டியவர்கள் கிண்ணியா ஊற்று விடயத்தில் அமைதியாக இருந்ததுக்கு சிங்களவர்களால் கொடுக்கப்பட்ட பரிசு  கொழும்பு சுகபோக வீடு வாங்கி கொண்டு நித்திரை கொள்ள பாரளுமன்றம் போய்வந்தார் மற்றவர் சுமத்திரன் நாடு நாடாய் பறந்து பறந்து கடைசி சண்டையில் இனவழிப்பு நடைபெறவில்லை சிங்களவர்கள் சார்பாக நடந்துகொண்டார் இதெல்லாம் போக தீர்வு அந்தா வருது இந்தா வருது என்று சொல்லியபடியே தான் கடந்த 12 வருடங்களாக இருக்கினம் முதலில் இங்கு இப்படியான கேள்விகளை வைக்குமுன் அவர்களிடம் இவ்வளவுகாலம் என்ன செய்தார்கள் என்று கேட்டுபாருங்கள் ?

இலங்கையில் 6௦ வயது தாண்டினால் சாட்சி கையெழுத்து போடமுடியாதாம் அதாவது வெத்து வேட்டு என்று அரசே முடிவெடுத்த முடிவு ஆனால் உங்கள் பாராளுமன்றத்தில் 6௦ வயது தாண்டிய வெத்து வேட்டுக்கள் தான் முழுவதுமே .

ஒரு கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய படி நடக்கவில்லை என்று அடுத்தமுறை தேர்தலில் நிற்க விடாது தேர்தல் கமிசன் பார்த்துகொண்டால் ஒழுங்கான ஆட்சி கிடைக்கும் ஆசிய மக்களுக்கு .

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்ற கனடாவின் தீர்மானத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் - சரத்வீரசேகர

Published By: RAJEEBAN

09 JUN, 2023 | 03:41 PM
image
 

இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்ற கனடாவின்  பிரகடனத்தை ஏனைய நாடுகளும் அங்கீகரிக்கலாம் என எச்சரித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவின் தலைவருமான சரத்வீரசேகர  கனடாவின் அரசியல்நோக்கம் கொண்ட பொய்யை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் கடற்படை தளபதியின் தலைமையில் நேற்று தேசியபார்வை தொடர்பான கண்காணிப்பு குழுவின் கூட்டத்தில் சரத்வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் முப்படையின் தலைமை அதிகாரிகள் புலனாய்வு பிரிவுகளின் பிரதான அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ள  சரத்வீரசேகர அமைச்சரவையின் அனுமதியை பெற்ற பின்னர் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற கனடாவின் தீர்மானத்தினை கண்டிப்பதற்காக  வெளிவிவகார அமைச்சு நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் தான் தனிநபர் பிரேரணையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கனடாவின் நடவடிக்கைக்கு வெளிவிவகார அமைச்சர் கடும் கண்டனம் வெளியிட்டதை பாராட்டியுள்ள சரத்வீரசேகர கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அடிப்படையிலேயே கோட்டாபய ராஜபக்ச மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக பயணத்தடைகளை விதித்தது என சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஆதாரங்கள் அற்ற யுத்தகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கனடா விதித்துள்ள பயணத்தடைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால்  யுத்தத்தில் வெற்றிபெற்ற இராணுவத்தினருக்கு கடும் பாதிப்புகள் ஏற்படலாம் என தெரிவித்துள்ள சரத்வீரசேகர  இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சவாலுக்கு உட்படுத்தாமல் தொடர அனுமதித்தால் அது தனிநாடு குறித்த கோரிக்கைகள் நியாயப்படுத்தப்படு;ம் நிலையை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இராணுவ அதிகாரிகள் நம்பிக்கை இழப்பார்கள் எதிர்கால யுத்தங்களில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்க முடியாது எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டங்களில் இலங்கை தவறாக கையாளப்பட்டுள்ளது எனவும்  சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளிடமிருந்து தப்பி இராணுவத்தினரிடம் அடைக்கலம் புகுந்தவர்கள் இனப்படுகொலை என்பது கற்பிதம் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர், என குறிப்பிட்டுள்ள சரத்வீரசேகர ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து வெளிவிவகார அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்- எனினும் ஒட்டாவாவில் உள்ள தூதரகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

செப்டம்பர் 11 தாக்குதலிற்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட  ஐநா தீர்மானம் காரணமாக பாதுகாப்புசட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் வடக்கி;ன் பாதுகாப்பை பணயம் வைத்து இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்ககூடாது எனவும் கருத்துவெளியிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/157358

Link to comment
Share on other sites

7 hours ago, ஏராளன் said:

கனடாவின் நடவடிக்கைக்கு வெளிவிவகார அமைச்சர் கடும் கண்டனம் வெளியிட்டதை பாராட்டியுள்ள சரத்வீரசேகர கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அடிப்படையிலேயே கோட்டாபய ராஜபக்ச மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக பயணத்தடைகளை விதித்தது என சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

சரத்வீரசேகராவுக்கும் பயணத்தடையை விதிக்க வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

சரத்வீரசேகராவுக்கும் பயணத்தடையை விதிக்க வேண்டும்.

இலங்கையை தவிர தான் வேறெங்கும் போகப்போவதில்லை, அதற்கு அவசியவுமில்லை என்று நன்றாய் அறிந்தே வீட்டிற்குள் குலைக்கிறார் அவர். பயணத் தடையை எதிர்கொள்வோம் என அஞ்சுவோர் எல்லாம் இவரை ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

சரத்வீரசேகராவுக்கும் பயணத்தடையை விதிக்க வேண்டும்.

சீனா, வட கொரியா, இரான் , ருசியா போன்ற நாடுகளின் விருந்தாளியாக இருக்கும் வரைக்கும் மேட்குலக தடைகள் அவர்களை ஒன்றும்செய்யாது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்ற கனடாவின் தீர்மானத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் - சரத்வீரசேகர

Published By: RAJEEBAN

09 JUN, 2023 | 03:41 PM
 
 

இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்ற கனடாவின்  பிரகடனத்தை ஏனைய நாடுகளும் அங்கீகரிக்கலாம் என எச்சரித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவின் தலைவருமான சரத்வீரசேகர  கனடாவின் அரசியல்நோக்கம் கொண்ட பொய்யை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இவருக்கு ஏற்ற பதவியைத்தான் கொடுத்து இருக்கிறார்கள். சரத் பொன்சேகா இதில் அங்கத்தவராக இருந்தவர் நேற்று இராஜினாமா செய்து விடடார். நிச்சயமாக இந்த சரத் அந்த சரத்தின் கீழ் இயங்க மாடடார் என்று முதலே தெரிந்திருந்தும் அவரை அங்கத்தவராக போட்டிருந்தார்கள்.

ஸ்ரீ லங்கா டெலிகாம் தனியார் மயப்படுத்த இருந்த திடடதயும் இந்த குழு பாதுகாப்பு காரணத்தை காட்டி நிராகரித்திருக்கின்றது. இருந்தாலும் அரசு அதை நடைமுறை படுத்த போவதாக கூறி இருக்கிறது.

எனவே ரணிலுக்கு இந்த குழுவுக்குமிடையில் பிரச்சினை நீடிக்க போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முட்டாளை இயக்குவது ராஜபக்ச குடும்பம் என நினைக்கிறன். 

இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்தை லைக்கா குழுமம் வாங்க இருப்பதாகவும் அதற்கு இனவாதிகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அறிந்தேன். வேறு நாடுகளுக்கு வழங்குவார்கள் அங்கு பாதுகாப்பு பிரச்சனையில்லை, இந்த நாட்டு குடிமக்களுக்கு வழங்கும்போதுதான் பாதுகாப்புப்பிரச்சனை எழுகிறது, பிறகு புலம்பெயர் தமிழர் முதலிடுங்கள், முன்னேற்றுங்கள் என்று கூவுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முறுகின முறுகல்லை கனடாவுக்கு..உதவி வழ்ங்கும் நாடுகள் ..உதவியை  நிறுத்தின...கனடா அல்லோல கல்லோலப் படுகிறது..பெற்றோல் விலை எகிறியது..இன்று 169சதமாக விற்கப் படுகிறது...சரத்வீரசேகராவை சமாளிக்க  சங்கரியை அனுப்பத்திட்டம்...விரைவில் கனடியப் பிரதமரும் இலங்கை விஜயம் செய்வார் என் எதிர்பார்க்கப்படுகிறது..  காணுமா கனடா இன்றைய ரிப்போட்டு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

இராணுவ அதிகாரிகள் நம்பிக்கை இழப்பார்கள் எதிர்கால யுத்தங்களில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்க முடியாது எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

யாருடன். ??என்ன காரணங்களுக்குககா ? யுத்தம். செய்யப்போகிறார்கள்.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

கனடாவின் அரசியல்நோக்கம் கொண்ட பொய்யை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கனடா  எப்பவும் பொய் தான் சொல்லும்......அது தமிழர்கள் வாழ தகுதியான நாடு    அங்கே தமிழ் ஈழம் அமைக்க போகிறோம்    அங்கு வாழும்   சிங்களவரகளை   உடனடியாக   உங்கள் நாட்டுக்கு கூப்பிடுங்கள. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சுண்டைக்காய் நாடு, அதைச்சுற்றிவர மீள முடியா கடனும் தீர்க்கப்படாத பிரச்சனையும். இதுக்குள்ள கனடாவுக்கு கண்டனமாம் ராஜதந்திர முறுகலாம், யாராவது நடந்த படுகொலைகளைப்பற்றி கதைத்தால்  இவர்களுக்கு அடிவயித்தை கலக்க தொடங்கிவிடும். அதுக்குள்ள எங்களுக்கொண்டும் பயமில்லை என்று வெருட்டிப்பாக்கிறது. சிங்கள மக்களை ஏமாற்றி, தாங்கள் ஏதோ இரண்டாம் உலக யுத்தம் செய்து ஜெயித்த கதாநாயகர்போல கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த பிம்பம் கலைந்து அரசியல் கனவு கலைந்து போய்விடுமோ என்கிற கலக்கம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவதைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Published By: DIGITAL DESK 3

23 JUN, 2023 | 02:26 PM
image
 

மக்களை நிம்மதியாக வாழவிடுமாறும், இலங்கைப் பிரச்சினையில் வெளிநாடுகள்  தலையிடுவதைக் கண்டித்தும் இன்று வெள்ளிக்கிழமை (23) காலை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவிற்கு முன்னால் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும்  இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

1687499658321.jpg

பயங்கரவாத பிரிவினைக்கு கனடா ஆதரவா? இதுவா அமைதி ? இதுவா நீதி? ஐ.நாவின் கோட்பாடுகளை மீறி கனடா அரசு இலங்கை உள் விவகாரங்களில் தலையிடுவதை கண்டிப்போம். எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரார்கள் ஏந்தியிருந்தனர்.

1687499658372.jpg

யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து அவலங்களை எதிர் கொண்டவர்கள். யுத்தம் முடிவின் பின்னரே அமைதியான வாழ்க்கை வாழுகின்றோம். இத்தகைய அமைதியை குழப்பாதீர்கள் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோஷங்களை எழுப்பினர்.

1687499658383.jpg

https://www.virakesari.lk/article/158416

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளிடம் பிச்சை மட்டும் வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

On 9/6/2023 at 21:13, Cruso said:

சீனா, வட கொரியா, இரான் , ருசியா போன்ற நாடுகளின் விருந்தாளியாக இருக்கும் வரைக்கும் மேட்குலக தடைகள் அவர்களை ஒன்றும்செய்யாது. 

பிச்சை எடுப்பது மேற்கு நாட்டில். மேற்குலகு தடை ஒன்றும் செய்யாது என்று எப்படி சொல்கிறீர்கள்?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இலங்கைப் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவதைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Published By: DIGITAL DESK 3

23 JUN, 2023 | 02:26 PM
image
 

மக்களை நிம்மதியாக வாழவிடுமாறும், இலங்கைப் பிரச்சினையில் வெளிநாடுகள்  தலையிடுவதைக் கண்டித்தும் இன்று வெள்ளிக்கிழமை (23) காலை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவிற்கு முன்னால் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும்  இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

1687499658321.jpg

பயங்கரவாத பிரிவினைக்கு கனடா ஆதரவா? இதுவா அமைதி ? இதுவா நீதி? ஐ.நாவின் கோட்பாடுகளை மீறி கனடா அரசு இலங்கை உள் விவகாரங்களில் தலையிடுவதை கண்டிப்போம். எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரார்கள் ஏந்தியிருந்தனர்.

1687499658372.jpg

யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து அவலங்களை எதிர் கொண்டவர்கள். யுத்தம் முடிவின் பின்னரே அமைதியான வாழ்க்கை வாழுகின்றோம். இத்தகைய அமைதியை குழப்பாதீர்கள் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோஷங்களை எழுப்பினர்.

1687499658383.jpg

https://www.virakesari.lk/article/158416

இது தமிழர்களின் ஆர்ப்பாட்டமா?...அல்லது சிங்களவரின் ஆர்ப்பாட்டமா. ?. இலங்கை பிரச்சனை தெரியாத கூலிகளின். ஆர்ப்பாட்டமா??....கனடாவில் வேலைக்கு ஆள்கள். வேணுமாம்......வர விருப்பமா???.  சாணக்கியன் சுமந்திரன் சிறிதரன்     எங்கே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kandiah57 said:

இது தமிழர்களின் ஆர்ப்பாட்டமா?...அல்லது சிங்களவரின் ஆர்ப்பாட்டமா. ?. இலங்கை பிரச்சனை தெரியாத கூலிகளின். ஆர்ப்பாட்டமா??....கனடாவில் வேலைக்கு ஆள்கள். வேணுமாம்......வர விருப்பமா???.  சாணக்கியன் சுமந்திரன் சிறிதரன்     எங்கே??

கூலிக்கு மாரடிக்க வந்த தமிழர்களின் ஆர்ப்பாட்டம் போல் தெரிகின்றது.
பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் மற்றும் முஸ்லீம்களின் பங்கும் இதில் இருக்கும்.

என்ன செய்வது… ஒரு இலக்கு அற்ற இனமாக மாறி, எல்லா சந்தர்ப்பங்களையும் இழந்து கொண்டுள்ளோம்.
வடக்கில்…. விகாரை திறப்பு விழாவுக்கு போகுது ஒரு கூட்டம்,
இங்கு இப்படி நிற்குது ஒரு கூட்டம். 😢

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா பிரதமரின் அறிக்கைக்கு எதிராக சிங்கள ராவய ஆர்ப்பாட்டம்

Published By: DIGITAL DESK 3

23 JUN, 2023 | 02:21 PM
image
 

இலங்கை தொடர்பில் கனடா பிராமர் வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (23) கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சிங்கள ராவைய தலைமையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5.png

இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தை இழைக்கவில்லையெனத் தெரிவித்தும் புலிகளே போர்க்குற்றத்தை இழைத்ததாகவும் அதற்கு சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பியதுடன் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

https://www.virakesari.lk/article/158421

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய அரசாங்கத்தின் செயற்பாட்டைக் கண்டித்து கல்குடாவில் எதிர்ப்பு நடவடிக்கை

Published By: DIGITAL DESK 3

23 JUN, 2023 | 08:06 PM
image
 

ஹர்த்தாலும் கடையடைப்பும் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய அரசாங்கத்தின் செயற்பாட்டைக் கண்டித்து குறித்த எதிர்ப்பு நடவடிக்கை கல்குடா மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் குறிப்பாக ஓட்டமாவடி,வாழைச்சேனை பகுதிகளில் விநியோகப்பட்டிருந்தது.

S8090041.JPG

இன்று வெள்ளிக்கிழமை (23) காலை 6.00 மணி தொடக்கம் பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியில் ஹர்த்தாலும் கடையடைப்பும் மேற்கொள்ளப்பட்டது. 

பிரதேசத்தின் பெருமளவான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், கனேடிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக பிரதான இடங்களில் கறுப்பு கொடிகள் மற்றும் பதாதைகள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

குறித்த பதாதைகளில் இலங்கை ஒரு இறைமை கொண்ட நாடு இந்த விடயத்தை கனேடிய அரசு புரிந்துகொள்ள வேண்டும். கனடா உங்கள் சொந்த தொழிலை கவனியுங்கள் நிம்மதியாக வாழ இலங்கையரை விடுங்கள் .உள்ளே விளையாட வேண்டாம். கனடிய அரசாங்கமே இலங்கையர்களை நிம்மதியாக வாழ அனுமதி போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

S8090044.JPG

அத்துடன் மட்டக்களப்பு காந்தி பூங்காவிலும் இது தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

S8090045.JPG

அண்மையில் கனேடிய பிரதமரால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை நடைபெற்றதாகவும், அது குறித்து சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு பொறுப்புக் கூறல் நடவடிக்கை இடம்பெறவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக கனடா தொடர்ந்தும் செயற்படும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/158438

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

   என்ன இலவசத்தை கூறி, ஏமாற்றி கூட்டி வந்தார்களோ? அவர்களும் நிலைமை விளங்காமல் மாரடிக்கிறார்கள். இந்த நாடகங்களையும், கூக்குரல்களையும், கொடி எரிப்புகளையும்  கனடா ஒன்றும் அறியாததல்ல, நாட்டின் முக்கிய தேவைகளுக்காக நீண்ட வரிசையில் இரவுபகலாக தெருக்களில் கிடந்து போலீசாருடன் முரண்டு பிடித்ததையும் உலகம் பார்த்து கருத்துக்களை வைத்து மக்களுக்காக குரல் எழுப்பியதே, கடன் கேட்டு தவம் கிடந்ததையும் தவம் கிடப்பதையும் அறியாததல்ல. இந்த லட்ஷணத்தில போராடி, ஒன்று, மக்களுக்கு பின்னால் ஒளியும் அரசின் தன்மையும், மக்களின் எடுபிடி வாழ்க்கையுமே படம் பிடித்து காட்டுகிறது.. இவர்களின் இந்த முட்டாள்தனத்துக்கு இலங்கை அரசைபோல் உலக நாடுகள் நடக்க வெளிக்கிட்டால்; கடன் உதவிகளை நிறுத்தி, கல்குடாவிலிருந்து கனடாவில் குடியேறியவர்ளை திருப்பி அனுப்பினால் போதும், எல்லா மாயையும் அடங்கும். இவ்வளவு நடந்தும் திருந்தாத முட்டாள்கள்  முன்னேற வாய்ப்பேயில்லை. தங்களுக்கு தாங்களே குழி வெட்டுகிறார்கள். அடாவடியால் சாதித்து பழகியவர்கள் அதிலிருந்து விடுபடுவது கஸ்ரம் எல்லோராலும் கைவிடப்படும்வரை. இதற்குத்தான் சிங்களம் சில தமிழ்க்கூத்தாடிகளை தன்னோடு கூட்டி வைத்திருப்பது. பிச்சைக்காரருக்கும் கூத்தாடி அடிமைகளுக்கும் கோசம் ஒன்றும் புதிதில்லை. இதன்மூலம் சிங்களத்தின் கையாலாகாத்தன்மை, வங்குரோத்து நிலை அப்பட்டமாக வெளியில் தெரிகிறது. விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டமை சொல்லும் உண்மை, வெறும் கண்துடைப்பே! சிங்களம் இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறது தான் உலக நாடுகளை  கெட்டித்தனமாய் வெட்டியாளுகிறேன் என்று அவர்களின் பெருந்தன்மையை வைத்து. தனது பரப்புரைகளை பொய்களையும் உலகம் இன்னும் நம்புகிறது என்று அவர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தாமதிப்பதால். அரசு; பொதுமக்களை பகடைக்காய்களாக பாவிப்பதை நிறுத்தும்வரை  சர்வதேசம் இலங்கைக்கு வழங்கும்  உதவிகளை நிறுத்தி வைக்கவேண்டும்.     

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 3000க்கும் மேற்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து! இந்த வருடத்தில் 3000 க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது உரிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் மொஹமட் மஹிஷ் தெரிவித்துள்ளார். எனவே, வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது அவசியமானது. நாட்டின் வீதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2024/1407734
    • டொனால்ட் ட்ரம்பின்  (Donald Trump) தைரியம் தன்னை ஈர்த்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin)  தெரிவித்துள்ளார். ரஷ்யாவில்(Russia)  நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “டொனால்டு ட்ரம்பை தாமாகவே முன்வந்து தொடர்பு கொள்வதில் எந்த அவமானமும் இருப்பதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், அதை நான் செய்ய விரும்பவில்லை. டொனால்ட் ட்ரம்பின் தைரியம் எவரேனும் ஒருவர் மீண்டும் தம்மை தொடர்பு கொண்டால் அதை தாம் வரவேற்பதாகவும், விவாதிக்க தயார். அது போலவே, டொனால்டு ட்ரம்புடனும் தாம் விவாதிக்க தயாராக இருக்கின்றேன்.   ஜூலை மாதம் ட்ரம்ப் மீதான தாக்குதலின் போது அவரின் செயல்பாடு தம்மை ஈர்த்தது. அவர் ஒரு தைரியமான நபராக மாறியுள்ளார். மட்டுமின்றி, அந்த தருணத்திலும் பொதுவான கொள்கைகளுக்காக போராட வேண்டும் என ட்ரம்ப் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது உண்மையில் வியக்க வைக்கும் செயல். புடினின் வாழ்த்து ஒரு நபர் தனது உண்மையான சுயத்தை அசாதாரணமான சூழ்நிலைகளில் வெளிப்படுத்துகிறார், அங்கு அவர் ஒரு மனிதனைப் போல தைரியமான முறையில் தன்னை நிரூபித்தார். ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் அவரை கேலி செய்தவர்கள் பலர். ஒரு முடிவெடுக்க முடியாமல் அவரை தடுமாற வைத்தார்கள்.தற்போது என்ன நடக்கும் என்பது தமக்கு தெரியவில்லை ” என்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஸ்ய ஜனாதிபதி புடினின் வாழ்த்து மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நேர்காணலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகபூர்வமாக அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/putin-praises-trump-says-russia-ready-for-dialogue-1731016171#google_vignette
    • ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பியோடிய 43 குரங்குகள். அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பி ஓடியுள்ளன. பாதுகாவலரால் தவறுதலாக மையத்தின் கதவு திறக்கப்பட்டதாகவும், இந்த குரங்குகள் தப்பிச் சென்றதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி குறித்த பகுதியில் குரங்கு கூட்டத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், குடியிருப்பாளர்கள் தங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பாதுகாப்பாக மூடி வைக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கரோலினா மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளும் தப்பியோடிய குரங்குகளைக் கண்டால், உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1407752
    • பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டத்திற்குப் பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.    கண்டி தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,    கடந்த காலங்களில் எதுவித அடிப்படையும் அற்ற நிலையில் நண்பர்களுக்கும் னையவர்களுக்கும்  அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.   எதிர்கட்சியில் இருந்து யார் ஆதரவு தருகிறார்ளோ  அவர்களுக்கு அமைச்சர் பதவிகள்  வழங்கப்பட்டன.  அவ்வாறான அமைச்சுக்களுக்கு விஞ்ஞான ரீதியாக தொடர்புகள் இருக்க வில்லை.   உதாரணத்திற்கு உயர் கல்வி, பெருவீதிகள் அமைச்சு என்று ஒன்று இருந்தது. உயர் கல்விக்கும் பெரு வீதிக்கும் விஞ்ஞான ரீதியில் என்ன தொடர்பு எனக் கேட்டதற்கு  உயர் கல்வி மாணவர்கள் எப்போதும் பெருவீதிகளில் இருந்து ஆர்பாட்டம் செய்கிறார்கள், எவேபொருத்தமானது  எனக் கூறப்பட்டது. இவை நகைப்புக்கிடமான விடயங்கள்.  இப்படி யல்லாது எதிர்காலத்தில் கல்வியுடன் தொடர்புபட்ட சகல துறைகளையும் ஒன்றிணைத்த அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.   அதாவது உயர் கல்வி, பாடசாலைக் கல்வி, பாலர் கல்வி, தொழில் நுற்பக் கல்வி,தொழிற் கல்வி,தொழில் நுட்பக்கல்லூரிகள், பல்லைக்கழகங்கள், பாசலைச்சவைகள்  போன்ற கல்வியுடன் தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒன்றாக இணைக்கப்பட  வேண்டும்.  மேலும் தற்போது பரீட்சையை மையமாகக் கொண் கல்வியே உள்ளது. 10 முதல் 12 வயது வரையானவர்கள் கூட புலமைப்பரிசில் என்று பரிட்சையை மையமாகக் கொண்டு போட்டிக்காகப் பயில் கின்றனர்.   இந்த வயதுப்பிரிவு போட்டிப் பரீட்சைக்குறிய வயதல்ல. எனவே நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகள் உருவாகும் கல்வித்திட்டமே தேவை என்றார்.     https://www.virakesari.lk/article/198152
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.