Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எவரெஸ்ட் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த துஷியந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எவரெஸ்ட் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த துஷியந்தன்

Published By: Nanthini

27 May, 2023 | 11:34 AM
image
 

கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டு இந்த ஆண்டுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிலையில், உலக நாடுகள் பலவற்றிலும், குறிப்பாக, தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் இந்த முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டன.

அந்த வகையில், இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் விவேகானந்தன் துஷியந்தன் என்ற 46 வயதான நபர் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது,

நான் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து மலையில் ஏறும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றேன். ஆனாலும், முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை எவரெஸ்ட் மலை சிகரத்தில் அனுஷ்டிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதுக்குள் இருந்தாலும், அதனை சாத்தியப்படுத்த கடந்த காலங்களில் நான் கடுமையாக பாடுபட்டடேன்.

இதற்காக நான் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி எவரெஸ்ட் மலையின் சிகரத்தை நோக்கி ஏற ஆரம்பித்தேன்.

348356545_774509177681023_78220646927803

என்னுடன் 5 பேர் கொண்ட குழுவினர் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி ஏற ஆரம்பித்தனர். இதன் முதல் நிலையாக பேஸ் கேம்ப் (Base camp) 5350 மீற்றர் உயரம் வரை சென்று அங்கு தங்கியிருந்து, மீண்டும் முதலாவது கேம்ப் (Camp 1) 6000 மீற்றர் உயரம் வரை சென்றோம். 

பின்னர் அங்கிருந்து 2ஆவது கேம்ப் (Camp 2) 6400 மீற்றர் உயரம் வரை சென்று, அங்குள்ள காலநிலைக்கேற்ப எம்மை தயார்ப்படுத்திக்கொண்டோம்.

அதன் பின்னர், அங்கிருந்து 3ஆவது கேம்ப் (Camp 3) 7300 மீற்றர் உயரத்துக்கு ஏறினோம். அங்கிருந்து 4ஆவது கேம்ப் ( Camp 4) 7925 மீற்றர் உயரத்துக்கு ஏறினோம். அங்கும் எம்மை காலநிலைக்கேற்ப தயார்ப்படுத்தும்போது கடும் குளிரினால் எமது பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.  

ஆனால், கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் தினமான அன்று நாம் 8849 மீற்றர் உயரமான எவரெஸ்டின் சிகரத்தை அடைந்து அங்கு நான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்தேன் என்கிறார் துஷியந்தன்.

விவேகானந்தன் துஷியந்தன் திருமணம் முடித்து இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்றார். அவருக்கு 3 பெண்பிள்ளைகள் உள்ளனர். 

துஷியந்தன் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரையடுத்து 13 வயதில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளார். 

அத்தோடு இவர் ஒரு விளையாட்டு வீரருமாவார்.  மரதன், சைக்கிளோட்டம் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடும் இவர் மலையேறுவதை ஆரம்ப காலங்களில் பொழுதுபோக்காக கொண்டிருந்தார்.

இந்நிலையில், 2010ஆம் ஆண்டு மலேசியாவின் கொற்றுகினபாலோ, 2016இல் ஆபிரிக்காவின் கிளிமஞ்சாரோ, 2020இல் இங்கிலாந்தின் வேல்ஸ், 2022இல் நேபாளத்தில் ஐலன்பீக், லெபட்ரே, மனசிலு போன்ற மலைகளில் ஏறி பயிற்சி பெற்றுள்ளார்.

ஆரம்பகால மலையேறும் பயிற்சியை இவருக்கு ஜோன்குப்த வழங்கிய போதிலும், எவரெஸ்ட் மலையில் ஏறும்போது இவரது பயிற்சியாளராக யான்தப்பா இருந்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது இலங்கை தமிழனும், இலங்கையைச் சேர்ந்த ஆணும் தானே எனக் கூறும் துஷியந்தன், இதற்கு முன்னர் மலேசிய தமிழர் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளதாக கூறுகிறார்.

தனது இனத்தின் மீதான பற்றும், நாட்டின் மீதான பற்றுமே தன்னை சிகரம் தொடுமளவு சாதிக்க வைத்ததாக கூறும் இவர், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நாம் சாதிக்க வேண்டும் என உறுதிபட தெரிவிக்கிறார்.

349390065_1027929768172530_8887676124976

348356834_1071430467147182_7794397969792

348356294_962084391785186_20216964275049
 

 

https://www.virakesari.lk/article/156282

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் மலை ஏறுகிறார் என்றால் இந்திய அரசு அனுமதித்திருக்குமோ தெரியவில்லை. இந்தியாவினதும் உலக நாடுகளினதும் துரோகத்தாலும் நயவஞ்சகத்தாலும் இடம்பெற்ற இனப்படுபகாலையை இந்தியாவின் தலையில் மீதேறி நின்று கொண்டு சொல்லியிருக்கிறார் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புலவர் said:

இதுக்குத்தான் மலை ஏறுகிறார் என்றால் இந்திய அரசு அனுமதித்திருக்குமோ தெரியவில்லை. இந்தியாவினதும் உலக நாடுகளினதும் துரோகத்தாலும் நயவஞ்சகத்தாலும் இடம்பெற்ற இனப்படுபகாலையை இந்தியாவின் தலையில் மீதேறி நின்று கொண்டு சொல்லியிருக்கிறார் வாழ்த்துகள்.

நேபாளத்திற்கால தானே மலை ஏற்றம்? இந்தியாவிடமும் அனுமதி கோரவேண்டுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

துஷியந்தனுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி துஷ்யந்தனுக்கு பாராட்டுகளும் வாழ்த்தும் உரித்தாகட்டும்......!  💐

  • கருத்துக்கள உறவுகள்


பலபுலம்பெயர் தமிழருக்கு எடுத்துக்காட்டாக உள்ளார். பாராட்டுகள் உரித்தாகுக. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

நேபாளத்திற்கால தானே மலை ஏற்றம்? இந்தியாவிடமும் அனுமதி கோரவேண்டுமோ?

உண்மைதான் இனப்படுகொலை என்றாலே இந்தியா நினைவுக்கு வந்ததால் அவசரப்பட்டு ஏழுதிவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான முயற்சி. ஆபத்தான பயணம். இவர் எவரெஸ்ட் சிகரத்தில் புலிக்கொடியை நட்டு படம் எடுத்து இருந்தால் அதிக பிரபல அடைந்து இருப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்

சிகரத்தில் ஏறிப்போட்டு வந்து முள்ளிவாய்க்கால் நினைவை அனுட்டித்ததாகச் சொல்கிறார்.  அதற்கான எவ்வித அடையாளங்களுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2023 at 12:37, நியாயத்தை கதைப்போம் said:

வித்தியாசமான முயற்சி. ஆபத்தான பயணம். இவர் எவரெஸ்ட் சிகரத்தில் புலிக்கொடியை நட்டு படம் எடுத்து இருந்தால் அதிக பிரபல அடைந்து இருப்பார். 

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் விற்கொடியை நட்டது போல் இவரும் புலிக்கொடியை நட்டு இரண்டாம் சேரன் செங்குட்டுவன் என்று பெயர் பெற்று இருக்கலாம் 😄. தவிர முள்ளிவாய்க்கால் என்பது துயர சம்பவம், இவரின் நிகழ்த்தி இருப்பது சாதனை. இரண்டையும் எப்படி ஒப்பிட முடிகிறது என்று விளங்கவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் துசியந்தனுக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

நம்மைப்போல் விசைப்பலகை வீரர்களாக இல்லாமல் அவர் எதோ செய்கிறார் இறந்த லட்ஷக்கணக்கான தமிழ் மக்களை  நினைவு கூறுகிறார் இங்கு அவருக்கு எதிராக கருத்துக்கள் வைப்பவர்கள் தமிழ் இனத்துக்கு ஏதாவது இனி செய்து விட்டு வந்து அவரில் குற்றம் சொல்லுங்கள் பார்க்கலாம் அதுவரை என்னால் முடிந்த ஒன்று .துஷியந்தனுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். என்று சொல்வது மட்டுமே ............அதென்ன மற்றவரை திட்டும்போது மட்டும் உறங்குநிலை அவதார்கள்  உயிர்ந்தெழுந்து  வரும் அதிசயம் .

  • கருத்துக்கள உறவுகள்

மலையேற்றம் என்பது உலகில் துணிகரமான வீர விளையாட்டுகளில் ஒன்று. உலகின் பல்வேறு மலைச்சிகரங்களில் பலவேறு நாட்டு வீரர்கள்/ வீராங்கனைகள் தமது சாதனைகளை நிகழ்ததியுள்ளார்கள். அந்த வகையில் எம்மவர்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை துஷயந்தன் காட்டியுள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறாக மலையேற்றம் போன்ற வினையாட்டுகளில் எம்மவர்கள் ஈடுபட முன்னோடியாக திகழ்ந்த துஷயந்தனுக்கு வாழ்த்துகள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.