Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

250 மில்லியன் டொலர் முதலீட்டில் இலங்கைக்கு மென்பொருள் - பில் கேட்ஸ் மன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: NANTHINI

04 JUN, 2023 | 10:35 AM
image
 
(லியோ நிரோஷ தர்ஷன்)

250 மில்லியன் டொலர் முதலீட்டில் இலங்கையில் விவசாயத்துறையை தொழில்நுட்பமயமாக்குதல், சமூக பாதுகாப்பு, நிதி கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளை உள்ளடக்கிய திட்டத்தை முன்னெடுக்க பில் கேட்ஸ் நற்பணி மன்றம் முன்வந்துள்ளது. இதற்காக விசேட மென்பொருள் ஒன்றை உருவாக்கவும் மைக்ரோசொப்ட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் விவசாயத்துறையை மேம்படுத்தவும் நவீனமயமாக்கவும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாப தலைவர் பில் கேட்ஸின் நற்பணி மன்றம் முன்வந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பில் கேட்ஸ் நற்பணி மன்ற பிரதிநிதிகள் இலங்கையின் விவசாயத்துறைக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்குவது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

விவசாயத்துறை மற்றும் அதன் உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்தல், போஷாக்குத் தன்மையை அதிகரித்தல் போன்ற விடயங்களில் நவீன தொழில்நுட்பத்தை உட்புகுத்தலுக்கு தேவைக்கமைய, மென்பொருளை அறிமுகம் செய்யவும் பில் கேட்ஸ் மன்றம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் முன்னெடுத்திருந்தனர்.

இந்த திட்டமானது 250 மில்லியன் டொலர்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. விவசாயத்துறையின் தகவல் சேகரிப்பு, அரிசி மற்றும் ஏனைய விவசாய உற்பத்திகளின் போஷாக்குத் தன்மையை அதிகரித்தல் என்பன இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

அதே போன்று சமூக பாதுகாப்புத் திட்டங்களை தொழில்நுட்பமயமாக்குவதற்கு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இலங்கைக்காக உருவாக்கப்படும் மைக்ரோசொப்டின் மென்பொருள்கள் விவசாயம், சமூக பாதுகாப்பு, நிதி கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளை உள்ளடக்கியது என பில் கேட்ஸ் நற்பணி மன்றம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தை ஜனாதிபதி அலுவலம் ஊடாக முன்னெடுக்க பில் கேட்ஸ் நற்பணி மன்றம் கேட்டுக்கொண்டுள்ள நிலையில், தேவையான ஒத்துழைப்புகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/156876

உலகின் மிகப் பெரும் தன்னார்வ நிறுவனம் பில் கேட்சினால் உருவாக்கப்பட்டது. பல தசாப்தங்களாக உலகின்ன் மிகப் பெரிய பணக்காரராக இருந்த இவர் தன் வாழ்நாளில் பணம் சம்பாதிப்பதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டவர். இலவசம் என்ற பெயரில் ஆபிரிக்க நாடுகளில் நுளைந்து பாரம்பரிய விவசாய முறைகளைச் சிதைத்து பெரும் அமெரிக்க விவசாய நிறுவனங்களுக்கு அவற்றை அடிமையாக்கியதாக குற்றச்சாட்டு உண்டு. இது தவிர தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் பாரிய முதலீடுகளைச் செய்துள்ளார். ஏழை மக்களை ஏமாற்றும் இவரது நடவடிக்கைகளில் அவதானமாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு தான் 😭

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, இணையவன் said:

ஆம்.  "பில்கேட்ஸ் நற்பணி மன்றம்" உதவி என்ற பெயரில்,
அடிப்படை கட்டமைப்பையே... சீர் குலைத்து விடுவார்கள்.
அதுகும் விவசாய விடயத்தில், உள்ளூர் சிறு விவசாயிகள்தான் அதிகம் பாதிக்கப் படுவார்கள். 
நம்மூர் அரசியல்வாதிகளுக்கு.. இதனைப் பற்றிய புரிந்துணர்வு இல்லாததால்..
எல்லா வெளிநாட்டு முதலீடுகளையும், டாலர் வருகின்றது என்று அனுமதித்து விடுவார்கள்.

இல்லாவிடில்... சீனாவில் தேடப்படும் குற்றவாளி, 
கள்ள பாஸ்போட்டில் நாட்டிற்கு வந்து பிடிபடும்போது...
அவர் உள்ளூரில் முதலீடு செய்ய வந்த  தொழிலதிபர் என்றும்  
அவரை, விடுதலை செய்யக் சொல்லி.. அமைச்சர் ஒருவர், 
விமான நிலைய அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து   இருப்பாரா.  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஏராளன் said:

250 மில்லியன் டொலர் முதலீட்டில் இலங்கையில் விவசாயத்துறையை தொழில்நுட்பமயமாக்குதல், சமூக பாதுகாப்பு, நிதி கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளை உள்ளடக்கிய திட்டத்தை முன்னெடுக்க பில் கேட்ஸ் நற்பணி மன்றம் முன்வந்துள்ளது. இதற்காக விசேட மென்பொருள் ஒன்றை உருவாக்கவும் மைக்ரோசொப்ட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அவ்வளவுதான்.😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஆம்.  "பில்கேட்ஸ் நற்பணி மன்றம்" உதவி என்ற பெயரில்,
அடிப்படை கட்டமைப்பையே... சீர் குலைத்து விடுவார்கள்.
அதுகும் விவசாய விடயத்தில், உள்ளூர் சிறு விவசாயிகள்தான் அதிகம் பாதிக்கப் படுவார்கள். 
நம்மூர் அரசியல்வாதிகளுக்கு.. இதனைப் பற்றிய புரிந்துணர்வு இல்லாததால்..
எல்லா வெளிநாட்டு முதலீடுகளையும், டாலர் வருகின்றது என்று அனுமதித்து விடுவார்கள்.

இல்லாவிடில்... சீனாவில் தேடப்படும் குற்றவாளி, 
கள்ள பாஸ்போட்டில் நாட்டிற்கு வந்து பிடிபடும்போது...
அவர் உள்ளூரில் முதலீடு செய்ய வந்த  தொழிலதிபர் என்றும்  
அவரை, விடுதலை செய்யக் சொல்லி.. அமைச்சர் ஒருவர், 
விமான நிலைய அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து   இருப்பாரா.  

அவ்வளவுதான் 😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அவ்வளவு தான் 😭

2 hours ago, குமாரசாமி said:

அவ்வளவுதான்.😎

6 minutes ago, Kapithan said:

அவ்வளவுதான் 😎

Lustige Katzen GIFs | katzenwiewir.de

என்னப்பா... இன்றைக்கு "அவ்வளவுதான்" ஸ்பெஷலா? 😂
ஞாயிற்றுக்  கிழமை எல்லாருக்கும், கனக்க  எழுத சோம்பல் போல்  இருக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

Lustige Katzen GIFs | katzenwiewir.de

என்னப்பா... இன்றைக்கு "அவ்வளவுதான்" ஸ்பெஷலா? 😂
ஞாயிற்றுக்  கிழமை எல்லாருக்கும், கனக்க  எழுத சோம்பல் போல்  இருக்கு. 🤣

சிறீலங்கா இப்படி அழிவது சந்தோசமாக இருந்தாலும் என் தேசமும் மக்களும் அதற்குள் 😭

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

சிறீலங்கா இப்படி அழிவது சந்தோசமாக இருந்தாலும் என் தேசமும் மக்களும் அதற்குள் 😭

இதைத் தான் இங்கு பலர் மறந்து விடுகிறார்கள்.உதாரனத்துக்கு பங்களாதேஸ் பாக்கிஸத்தானின் அழிவை கொன்டாடலாம் ஆனால் நாம்..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இணையவன் said:

உலகின் மிகப் பெரும் தன்னார்வ நிறுவனம் பில் கேட்சினால் உருவாக்கப்பட்டது. பல தசாப்தங்களாக உலகின்ன் மிகப் பெரிய பணக்காரராக இருந்த இவர் தன் வாழ்நாளில் பணம் சம்பாதிப்பதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டவர். இலவசம் என்ற பெயரில் ஆபிரிக்க நாடுகளில் நுளைந்து பாரம்பரிய விவசாய முறைகளைச் சிதைத்து பெரும் அமெரிக்க விவசாய நிறுவனங்களுக்கு அவற்றை அடிமையாக்கியதாக குற்றச்சாட்டு உண்டு. இது தவிர தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் பாரிய முதலீடுகளைச் செய்துள்ளார். ஏழை மக்களை ஏமாற்றும் இவரது நடவடிக்கைகளில் அவதானமாக இருக்க வேண்டும்.

நீங்கள் சொன்னது போல குற்றச்சாட்டுகள் உண்டு, ஆனால் சுதேசவாதிகள், மேற்கு எதிர்ப்பு தேசியவாதிகள் தரப்பிலிருந்து வரும் குற்றச்சாட்டுக்கள். நவீன விவசாய முறைகளை பின்பற்றாமல் ஆபிரிக்காவினதோ, உலகினதோ உணவு உற்பத்தியை சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப அதிகரிக்க முடியாது என்பது பல முறை வெவ்வேறு நாடுகளில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. எனவே, இந்தக் குற்றச்சாட்டில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை.

தடுப்பூசிகள் தயாரிப்பில் பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் அமைப்பு முதலீடு செய்தது என்பது உண்மை. இந்த முதலீட்டின் நோக்கத்தை கோவிட் பெருந்தொற்றின் போது பில் கேட்ஸ் சம்பந்தப் பட்ட சதித் திட்டக் கதைகளின் வழியாகத் திரித்து, உண்மை நோக்கத்தைப் புதைத்து விட்டார்கள்.

தொற்று நோய்கள் மூலம் ஏற்படும் மனித வள, பொருளாதார இழப்புகளை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் குறைப்பது தான் உண்மை நோக்கம். இதனால் தான் வட அரைக்கோள நாடுகளில் அதிகம் பாதிப்பு ஏற்படுத்தாத, ஆனால் ஆபிரிக்காவில் ஆண்டுக்கு அரை மில்லியன் பேரைக் கொல்லும் மலேரியா நோய்க்கு எதிரான தடுப்பூசி ஆய்வை பில் கேட்ஸ் அமைப்பு நிதி வழங்கி ஆதரித்தது. இந்த ஆண்டு வெற்றிகரமான மலேரியா தடுப்பூசி வெளிவந்திருக்கிறது. இத்தகைய, கேட்ஸ் அமைப்பின் பல ஆண்டுகாலத் திட்டங்களும், வெற்றிகளும் பொதுச் செய்திகளில் வருவதில்லை, ஆனால் கோவிட் தடுப்பூசிக்கு ஆரம்ப நிதி கொடுத்தது மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

இது conspiracy theory க்கான காலம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

நீங்கள் சொல்வது நிஜம். களநிலை அது தான். இத்தனை கோடி மக்களின் குடியிருப்பும் அதேநேரம் உணவையும் தட்டுப்பாடு இன்றி வழங்குவது என்பது கடினமான காரியம் என்பது புரிந்தாலும்  இயற்கை உணவுகளும் உயிரினங்களும் அருகி வருதல் வேதனை அளிக்கிறது. நன்றி 

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

என்னப்பா... இன்றைக்கு "அவ்வளவுதான்" ஸ்பெஷலா? 😂
ஞாயிற்றுக்  கிழமை எல்லாருக்கும், கனக்க  எழுத சோம்பல் போல்  இருக்கு. 🤣

இல்லை சிறித்தம்பி! :grinning_face_with_smiling_eyes:

அமெரிக்கன் எங்கும் ஆதாயம் இல்லாமல் கால் வைக்க மாட்டான் என்பது வரலாறு. நாம் ஒன்றை எழுத அதற்கு மாற்றுக்கருத்து எழுதி நியாயப்படுத்த ஒரு சிலர் வருவார்கள் என்பது யதார்த்தம் இல்லாத கருத்தாடல் உறவுகளின் கோட்பாடு. :cool:

பில்கேட்சை பற்றி மேற்குலகிலேயே நல்ல அபிப்பிராயம் இல்லை என்பது உலகறிந்த விடயம். இனி வேறு என்னத்தை சொல்ல....வேண்டுமானால் குதர்க்கமாக பதில் வைக்கலாம். :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, விசுகு said:

நீங்கள் சொல்வது நிஜம். களநிலை அது தான். இத்தனை கோடி மக்களின் குடியிருப்பும் அதேநேரம் உணவையும் தட்டுப்பாடு இன்றி வழங்குவது என்பது கடினமான காரியம் என்பது புரிந்தாலும்  இயற்கை உணவுகளும் உயிரினங்களும் அருகி வருதல் வேதனை அளிக்கிறது. நன்றி 

வணக்கம் விசுகர்!

இன்றைய இந்த தொழில்நுட்ப உலகில் எதுவுமே கடினமில்லை. எல்லாமே வியாபார நோக்குடன் இருப்பதால் மட்டுமே இவ்வளவு அலங்கோலங்களும் அவதிகளும்......

கொஞ்சம் யோசித்து பாருங்கள்....
அரசியல் வேறுபாடுகளாலும் உன் கொள்கை பெரிது  என் கொள்கை பெரிது எனும் அகங்காரத்தினாலும் எவ்வளவு இயற்கை வளங்களை அழித்து கொண்டிருக்கின்றார்கள் என...

பணக்கார நாடுகளில் எவ்வளவு உணவுகள் குப்பைத்தொட்டிகளில் வீசப்படுகின்றது என?????  கத்தரிக்காய் தக்காளிப்பழம் கூட சொத்தியாக இருந்தால் வாங்காத உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இதற்கெல்லாம் வழிமுறைகள் சொல்லாத பில் கேட்ஸ் நவீன விவசாயம் படிப்பிக்கப்போறாராம்..

ஹலோ பில் கேட்ஸ்! :cool:

என் வீட்டையும் என் பூமியையும்  சுயமாக வாழ விடு. என்னை நானே பார்த்துக்கொள்கின்றேன்.😎

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

உண்மை அண்ணா

ஆனால் இந்த இரண்டும் மிகவும் கடினமான பணி. 

பரிசுக்கு 2 நாட்கள் சரக்கு புகையிரதம் வராவிட்டால் பரிசில் உணவுத்தட்டுப்பாடு வந்ததை கண்டபின் தான் இதன் தார்ப்பரியம் விளங்க தொடங்கியது எனக்கு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, விசுகு said:

உண்மை அண்ணா

ஆனால் இந்த இரண்டும் மிகவும் கடினமான பணி. 

பரிசுக்கு 2 நாட்கள் சரக்கு புகையிரதம் வராவிட்டால் பரிசில் உணவுத்தட்டுப்பாடு வந்ததை கண்டபின் தான் இதன் தார்ப்பரியம் விளங்க தொடங்கியது எனக்கு. 

 விசுகர்! நான் என்றும் விஞ்ஞானத்தையும் அறிவியலையும்  வெறுக்கவுமில்லை ஒதுக்கவுமில்லை. ஆனால் அந்த அறிவியலும் விஞ்ஞானமும் வியாபாரமாகி பாமர மக்களை தாக்கும் போதுதான் அந்த இடத்தில் நான் நிற்கின்றேன்.
 
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

 விசுகர்! நான் என்றும் விஞ்ஞானத்தையும் அறிவியலையும்  வெறுக்கவுமில்லை ஒதுக்கவுமில்லை. ஆனால் அந்த அறிவியலும் விஞ்ஞானமும் வியாபாரமாகி பாமர மக்களை தாக்கும் போதுதான் அந்த இடத்தில் நான் நிற்கின்றேன்.

இதில் மாற்றுக் கருத்து இல்லை அண்ணா

முதலிலேயே நானும் இதைத்தான் குறிப்பிட்டேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.