Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றம்.

Picsart_23-06-08_17-05-56-753.jpg
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றம்
**********************
 
தாடி வைத்திருப்பதனால் பரீட்சை எழுத விடாமல் கிழக்குப் பல்கலைக் கழக நிருவாகத்தினால் முஹம்மட் நுஸைப் என்ற மாணவர் பரீட்சை அறையில் இருந்து விரட்டப்பட்டுள்ளார்.
 
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் ( Faculty of Health care Science) இறுதியாண்டு படிக்கும் மாணவன் முஹம்மட் நுசைப் தனது மார்க்க நம்பிக்கையை, அடையாளத்தை சுதந்திரமாகப் பின்பற்ற விரும்பும் மாணவன்.அதன் அடிப்படையில் அவர் தாடி வைத்திருக்கிறார்.
 
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மேற் குறிப்பிட்ட பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சதானந்தன் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. ஜனூசா நமச்சிவாயம் ஆகிய இருவரும் இம்மாணவன் தாடி வைத்திருப்பதனைக் கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர்.
 
தாடி வைத்திருப்பதன் காரணமாக பல துஷ்பிரயோகங்களுக்கு குறிப்பிட்ட பீடாதிபதியினாலும் சிரேஷ்ட விரிவுரையாளரினாலும் மாணவன் நுஸைப் கடுமையாக சாடப்பட்டிருக்கின்றார்.
 
இம்மாணவர் விரிவுரைகளுக்கு சென்றிருந்தும் தாடிவைத்திருந்தமை காரணமாக பல சந்தர்ப்பங்களில் விரிவுரைகளில் உட்கார விடாமல் வெளியேற்றப்பட்டிருந்தார். இதனால் பரீட்சைக்கு தோற்றுவதற்கான போதிய வரவு இல்லை என்ற காரணத்தைக் காட்டி தான் பரீட்சை எழுத அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படலாம் என அம்மாணவம் அஞ்சுகிறார்.
 
சென்ற மே மாதம் 31ம் திகதி பரீட்சை எழுதச் சென்ற இம்மாணவன் தாடியுடன் பரீட்சை எழுத முடியாது என்று சிரேஷ்ட விரிவுரையாளர் ஜனூசா நமச்சிவாய திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.இதனால் குறிப்பிட்ட பாடத்தினை அவரால் எழுத முடியாமல் போயுள்ளது.
 
தாடியோடு வந்தால் எதிர்வரும் ஜூன் மாதம் 19ம் திகதி பரீட்சை எழுதவிருக்கும் மாணவர் நுஸைபை பரீட்சை எழுத விடமாட்டோம் என குறிப்பிட்ட பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளரும் கூறியிருக்கின்றனர். இதனால் ஒரு வருடத்தினை இழக்கும் நிலைக்கு இம்மாணவர் தள்ளப்பட்டிருக்கிறார்.
 
இது சம்பந்தமாக மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் சென்ற 1ம் திகதி முறைப்பாடொன்றையும் இம்மாணவர் செய்திருக்கின்றார்.
 
குறிப்பிட்ட மாணவரின் அடிப்படை உரிமை மீறலுக்கு எதிராக நீதி பெற்றுக் கொடுக்கும் பொருட்டு குரல்கள் இயக்கம் Voices Movement நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கலாச்சார அடையாளங்களை அணிவதும் கொண்டிருப்பதும் இலங்கையின் அடிப்படை உரிமைகளில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.
 
வடக்கிலும் கிழக்கும் முஸ்லிம்களின் கலாச்சார உரிமைகளுக்கு எதிரான மீறல்கள் தொடரச்சியாக இடம்பெறுவது வருந்தத்தக்கது.

"தாடி வைப்பது அடிப்படை மனித உரிமை, இதில் கிழக்குப் பல்கலைக்கழகம் தலையிட முடியாது"

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றப்ப‌ட்ட‌தை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிற‌து. 

இச்செய‌லான‌து இலங்கை தேசத்தில் இன்ன‌மும் தமிழ், சிங்கள இரு ப‌க்க‌ பேரினவாதம் நில‌வுவ‌தை காட்டுகிற‌து என‌வும் அக்க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

தாடி வைத்திருப்பதனால் பரீட்சை எழுத விடாமல் கிழக்குப் பல்கலைக் கழக நிருவாகத்தினால் முஹம்மட் நுஸைப் என்ற மாணவர் பரீட்சை அறையில் இருந்து விரட்டப்பட்டுள்ளார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் ( Faculty of Health care Science) இறுதியாண்டு படிக்கும் மாணவன் முஹம்மட் நுசைப் தனது மார்க்க நம்பிக்கையை, அடையாளத்தை சுதந்திரமாகப் பின்பற்ற விரும்பும் மாணவன். அதன் அடிப்படையில் அவர் தாடி வைத்திருக்கிறார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மேற் குறிப்பிட்ட பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சதானந்தன் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. ஜனூசா நமச்சிவாயம் ஆகிய இருவரும் இம்மாணவன் தாடி வைத்திருப்பதனைக் கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர்.

தாடி வைத்திருப்பதன் காரணமாக பல துஷ்பிரயோகங்களுக்கு குறிப்பிட்ட பீடாதிபதியினாலும் சிரேஷ்ட விரிவுரையாளரினாலும் மாணவன் நுஸைப் கடுமையாக சாடப்பட்டிருக்கின்றார் என்று ஊட‌க‌ செய்திக‌ள் சொல்கின்ற‌ன‌.

இம்மாணவர் விரிவுரைகளுக்கு சென்றிருந்தும் தாடிவைத்திருந்தமை காரணமாக பல சந்தர்ப்பங்களில் விரிவுரைகளில் உட்கார விடாமல் வெளியேற்றப்பட்டிருந்தார். இதனால் பரீட்சைக்கு தோற்றுவதற்கான போதிய வரவு இல்லை என்ற காரணத்தைக் காட்டி தான் பரீட்சை எழுத அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படலாம் என அம்மாணவர் அஞ்சுகிறார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றப்ப‌ட்ட‌தை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிற‌து. 

இச்செய‌லான‌து இலங்கை தேசத்தில் இன்ன‌மும் தமிழ், சிங்கள இரு ப‌க்க‌ பேரினவாதம் நில‌வுவ‌தை காட்டுகிற‌து என‌வும் அக்க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

தாடி வைத்திருப்பதனால் பரீட்சை எழுத விடாமல் கிழக்குப் பல்கலைக் கழக நிருவாகத்தினால் முஹம்மட் நுஸைப் என்ற மாணவர் பரீட்சை அறையில் இருந்து விரட்டப்பட்டுள்ளார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் ( Faculty of Health care Science) இறுதியாண்டு படிக்கும் மாணவன் முஹம்மட் நுசைப் தனது மார்க்க நம்பிக்கையை, அடையாளத்தை சுதந்திரமாகப் பின்பற்ற விரும்பும் மாணவன்.அதன் அடிப்படையில் அவர் தாடி வைத்திருக்கிறார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மேற் குறிப்பிட்ட பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சதானந்தன் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. ஜனூசா நமச்சிவாயம் ஆகிய இருவரும் இம்மாணவன் தாடி வைத்திருப்பதனைக் கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர்.

தாடி வைத்திருப்பதன் காரணமாக பல துஷ்பிரயோகங்களுக்கு குறிப்பிட்ட பீடாதிபதியினாலும் சிரேஷ்ட விரிவுரையாளரினாலும் மாணவன் நுஸைப் கடுமையாக சாடப்பட்டிருக்கின்றார் என்று ஊட‌க‌ செய்திக‌ள் சொல்கின்ற‌ன‌.

இம்மாணவர் விரிவுரைகளுக்கு சென்றிருந்தும் தாடிவைத்திருந்தமை காரணமாக பல சந்தர்ப்பங்களில் விரிவுரைகளில் உட்கார விடாமல் வெளியேற்றப்பட்டிருந்தார். இதனால் பரீட்சைக்கு தோற்றுவதற்கான போதிய வரவு இல்லை என்ற காரணத்தைக் காட்டி தான் பரீட்சை எழுத அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படலாம் என அம்மாணவர் அஞ்சுகிறார்.

சென்ற மே மாதம் 31ம் திகதி பரீட்சை எழுதச் சென்ற இம்மாணவன் தாடியுடன் பரீட்சை எழுத முடியாது என்று சிரேஷ்ட விரிவுரையாளர் ஜனூசா நமச்சிவாய திருப்பி அனுப்பினாராம். இதனால் குறிப்பிட்ட பாடத்தினை அவரால் எழுத முடியாமல் போயுள்ளது.

தாடியோடு வந்தால் எதிர்வரும் ஜூன் மாதம் 19ம் திகதி பரீட்சை எழுதவிருக்கும் மாணவர் நுஸைபை பரீட்சை எழுத விடமாட்டோம் என குறிப்பிட்ட பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளரும் கூறியிருக்கின்றனர். இதனால் ஒரு வருடத்தினை இழக்கும் நிலைக்கு இம்மாணவர் தள்ளப்பட்டிருக்கிறார் என‌வும் செய்திக‌ள் சொல்கின்ற‌ன‌.

இது சம்பந்தமாக மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் சென்ற 1ம் திகதி முறைப்பாடொன்றையும் இம்மாணவர் செய்திருக்கின்றார்.

கலாச்சார அடையாளங்களை அணிவதும் கொண்டிருப்பதும் இலங்கையின் அடிப்படை உரிமைகளில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் என்ப‌தால் இது விட‌ய‌த்தில் கிழ‌க்கு ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ நிர்வாக‌ம் த‌லையிட்டு இரு த‌ர‌ப்பாரையும் விசார‌ணை செய்து அம்மாண‌வ‌ருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க‌ வேண்டும் என‌ கோருகிறோம்.

ஊடகப் பிரிவு,

ஐக்கிய காங்கிரஸ் கட்சி.

https://www.jaffnamuslim.com/2023/06/blog-post_607.html

  • கருத்துக்கள உறவுகள்

தாடியோடை… பெடியனை பார்க்க,
“ஒசாமா பின்லாடன்” மாதிரி இருக்கு என்று, பல்கலைக் கழகம் நினைத்திருக்கலாம்.

கண்ட கண்ட இடத்திலை எல்லாம், மயிரை… வெட்டி எறிபவர்கள்,
தாடியையையும் சேவ் எடுக்கிறதுதானே…

இவங்கள்…. ஹிஜாப் போடுறதும், தாடியோடைதான் பாடசாலைக்கு வருவம் எண்டு அடம் பிடிக்கிறதிலையும் தான் நேரத்தை செலவழிக்கிறாங்கள்.
படிக்கிற எண்ணம் துப்பரவுக்கும் இல்லை.
தமிழ் வாத்திமாருடன் தான்… இவர்களின் மோதல் போக்கு அதிகம் உள்ளது.

யாழ். ஒஸ்மானியா கல்லூரி, திருகோணமலை இந்துக் கல்லூரி என்று பிரச்சினைகளை ஆரம்பித்து… மட்டக்களப்பு பல்கலைக் கழகம் வரை பிரச்சினைகள உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்…. பிரச்சினைக்கு பிறந்தவர்கள்.
சிங்களவன் என்றால்… பொத்திக் கொண்டு இருந்திருப்பாங்கள்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

இது ஒரு இன அழிப்பு...நம்ம அரசியல் வாதிகளும் கொடி பிடிக்கப் போகினம்..

  • கருத்துக்கள உறவுகள்
Just now, alvayan said:

இது ஒரு இன அழிப்பு...நம்ம அரசியல் வாதிகளும் கொடி பிடிக்கப் போகினம்..

நம்ம அரசியல்வாதிகள் எப்போ நமக்கு துணையாக நின்றார்கள்.
இருந்து பாருங்கள்….  முஸ்லீம் வாக்குகள், தமக்கு கிடைக்கும் என்ற நினைப்பில்…
நம் அரசியல் வாதிகள்… அவர்களுக்கு சார்பாகவே கதைக்க வருவார்கள்.
அதிலும்… கிழக்கில் உள்ள  ஒரு  தமிழ் எம்.பி. பாய்ந்தடித்து வருவார்.

முஸ்லீம்கள்…. அன்றும், இன்றும், என்றும்… தங்கள் வாக்குகளை மற்ற இனத்தவனுக்கு 
போடும் பழக்கம் அறவே இல்லாதர்கள்.
அது கூடத் தெரியாதவர்கள்தான்… நம் அரசியல் வாதிகள்.
 
  • கருத்துக்கள உறவுகள்

விரிவுரையாளர்களின் சரியான நடவடிக்கை.  அது ஸ்ரைலுக்கு வைத்த தாடி இல்லை மதஅடிப்படைவாத தாடி. தமிழர்களை பரிட்சித்து பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

விரிவுரையாளர்களின் சரியான நடவடிக்கை.  அது ஸ்ரைலுக்கு வைத்த தாடி இல்லை மதஅடிப்படைவாத தாடி. தமிழர்களை பரிட்சித்து பார்க்கிறார்கள்.

ஆம்…. மத அடிப்படைவாத தாடி தான் அது.
பலரும் படிக்கும் இடத்தில்…. வேண்டுமென்றே தமது மத அடையாளங்களை
காவிக் கொண்டு திரியும் குணம் அது.
இதனால்…. விரிவுரையாளர்கள், மற்றைய மாணவர்களின்  கவனம் எல்லாம் சிதறிப் போகின்றது.
மத அடையாளத்தை, காவ வேண்டும் என்றால்… படித்து முடிந்தவுடன் செய்வதை விடுத்து,
படிக்கும் காலத்தில்… மற்ற மாணவர்களுக்கும் அல்லவா, இடைஞ்சல் கொடுக்கிறார்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, தமிழ் சிறி said:

மற்றவர்கள் என்பதில் வேறு இனம் ஒன்றுமில்லை..தமிழனுக்கு மட்டுமே ..சிங்கவருக்கு இந்த சொறிச்சேட்டைஎல்லாம் கிடையாது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தாடிக்கு எதிரானவன் இல்லை. ஆனால் தாடிதான் என் மதம் என்றால்..... முளையிலையே கிள்ளி விடவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

மடவல நியூசு,அக்குரண நியூசு,யாழ்முசுலிம் நியூசு...இவைபாடு கொண்டாட்டம்தான்.....எண்ணேய் ஊற்றுவதற்கென்றே  பார்த்துக்கொண்டிருக்கிறவை..

  • கருத்துக்கள உறவுகள்

எனது சகோதரி படித்த ஒரு  பாடசாலையில் பாடசாலை சீருடை என்கிற ஒழுங்கு இருந்தது. பாடசாலை சீருடை, ஜடையைஒழுங்காக சீவி இரண்டாக பின்னி மடித்து கறுப்புப்பட்டி கட்டவேண்டும். மத கலாச்சார அடையாளங்கள் எதுவும் தேவையில்லை. பாடசாலை சமூகத்துக்குரிய முழு சீருடை அவசியம். அங்கு எந்த பாகுபாடுகளும், அடையாளங்களும் கிடையாது. எல்லா மத மாணவிகளும் எந்த வேறுபாடுகளோ ஏற்றத்தாழ்வுகளோ இல்லாமல் ஒரு சமூகமாய் கற்றார்கள். யாரும் தம்மை அடையாளப்படுத்தவில்லை. ஒரு இடத்திற்கு போகும்போது அதற்கு தகுந்தமாதிரி நம்மை நாம்  மாற்றியோ, தயார் செய்துகொண்டே பங்குபற்றுகிறோம். பொது இடத்தில், நிகழ்வுகளில் எனது கலாச்சாரங்களை திணித்து இது எனது உரிமை என்று குதர்க்கம் பேசக்கூடாது. அதேநேரம் எமது  நிகழ்வுகளில் மற்றவர்களின் விருப்புகளை  உரிமைகளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பதையும் சிந்தித்து திருத்திக்கொள்ள வேண்டும். சில மதங்கள், தங்கள் மதத்தின் பெயரால்   எல்லோரும் தங்களுக்கு விஷேசம் செய்யவேண்டும், விட்டுக்கொடுக்க வேண்டும்,  தனியுரிமை தரவேண்டும் என எதிர்பார்ப்பதும் அதற்காக முரண்பாடுகளை ஏற்படுத்துவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அதுவும் கல்விச்சமூகத்தில்.  அதற்கு வேறு இடங்கள் உண்டு. இது வேண்டுமென்றே பிரச்சனையை உருவாகும் செயல். நாங்கள் இந்த மதத்தை சார்ந்தவர்கள் அதனால் எங்களுக்கு எதிலும் சலுகை அளிக்க வேண்டும் அது நமது மனித உரிமை என்று அடம்பிடிப்பவர்கள் மற்றவர்களின் ஒழுங்குக்கும் கடமைக்கும் இடையூறு ஏற்படுத்துகிறதோடு தேவையற்ற முரண்பாடுகளையும் உருவாக்குகின்றனர். அது தனியுரிமை என்று வாதிடுவதிலும் பார்க்க அது ஒரு கல்விச்சூழ்நிலையை குழப்பும் ஸ்டைல் என்றே கொள்ள வேண்டும். மத உடை அடையாளங்களை மதம் சார்ந்த நிலையங்களோடும், தனிப்பட்ட நிகழ்வுகளோடும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.    

1 minute ago, alvayan said:

மடவல நியூசு,அக்குரண நியூசு,யாழ்முசுலிம் நியூசு...இவைபாடு கொண்டாட்டம்தான்.....எண்ணேய் ஊற்றுவதற்கென்றே  பார்த்துக்கொண்டிருக்கிறவை..

ஆமாம், அங்காலை விகாரை கொடிபிடிக்குது,  இவை இங்காலை தங்கள் பங்குக்கு. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லாபம் அடைபவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கல்விச் சமூகத்திற்கென்று ஒரு ஒழுங்குண்டு, அதை  அங்கு கற்கும் மாணவர் அனைவரும் பின்பற்றி கட்டிக்காக்கவேண்டிய கடமையுமுண்டு. அதுவே மாணவ ஒழுக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

மடவல நியூசு,அக்குரண நியூசு,யாழ்முசுலிம் நியூசு...இவைபாடு கொண்டாட்டம்தான்.....எண்ணேய் ஊற்றுவதற்கென்றே  பார்த்துக்கொண்டிருக்கிறவை..

அலி சபரியின் தங்க கடத்தலையே அஆதரித்த ஊடகங்கள்தான் இவைகள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நான் தாடிக்கு எதிரானவன் இல்லை. ஆனால் தாடிதான் என் மதம் என்றால்..... முளையிலையே கிள்ளி விடவேண்டும். 

முகத்தை 99% மூடிக் கட்டுவார்கள். ஆனால், வெளிநாடுகளுக்குப் போக, உழைப்பதற்காகப் போக, முகத்தைத் திறந்து படம் பிடித்து கடவுச் சீட்டை எடுப்பார்கள். 

மொத்தத்தில் ரசனிகாந்தின் பாடலில் வரும்  "முரண்பாட்டு மூட்டை நீ..""

😁

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு பல முறை அறிவுறுத்தல்  கொடுத்தும் அதற்கு கீழ் படியாதவராக இருந்திருக்கிரார்?

ஒரு முஸ்லீம் விரிவுரையாளர் என நினைக்கிறன் அவரின் விளக்கம் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை

கலாநிதி சமீம் சேர் அவர்களின் அழகான விளக்கம்.
-------------------------------------------------------------------------
தாடியை வைத்துக் கொள்வது #பர்ழா? சமூகத்தில் ஒரு தாதிய உத்தியோகத்தர் உருவாகி வருவது #பர்ழா?
எது அவசியம் ? சமூகமே முடிவு செய்.
எடுத்த எடுப்பில் மோடி, இந்துத்துவம், சிவசேனா என்பதெல்லாம் அபத்தமே.
சம்பவம் இதோ : 
இந்த மாணவன் சம்பந்தமாக பீடாதிபதி , விரிவுரையாளர் இன்னும் பலருடன் கதைத்தேன் .
இந்த மாணவன் தாதியர் கல்வி  பயிலும் மாணவன்.  தாதியர் மாணவர்கள் தாடி  வைக்க முடியாது. ஊனிfஒர்ம் அணிவது கட்டாயம்   இது அனைத்து தாதியர் பயிற்சி நிலையங்களிலும் பின்பற்றும் ஒரு  ஒழுக்கம். நான் பல தாதி பயிற்சிகள் மேட்கொள்ளும்போது அவதானித்த  ஒரு விடயம் கூட.
இந்த மாணவன் வேறு ஒரு பல்கலை கழகத்தில் இருந்து கிழக்கு பல்கலைக்களத்துக்கு மாறுதல் பெற்று வந்தவர். இவர் எந்த விதமான பாதுகாப்பு (Hய்கெனிச்) நடவடிக்கையும் இல்லாமல் உலாவுவதாகவும் இவர் சம்பதமான பல முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் இவருக்கு பலமுறை அறிவுரைகள் கூறப்பட்டதாகவும் அறியக்கிடைத்தது.
இந்த மாணவன் ஒருசில காலம் பல்கலைக்கழகத்துக்கு செல்லாமல் இருந்ததாகவும் அறியக்கிடைத்தது.
இந்த மாணவன் வைத்தியசாலை பயிற்சிக்கு (ப்ரச்டிசல்)  தாடியுடன் சென்றதால் வைத்தியசாலையில் இந்த மாணவனைப்பற்றி முறைப்பாடு கிடைக்கப்பட்டதாகவும் அறியக்கிடைக்கின்றது.  
தாதி கல்வியில் Pரச்டிசல் முக்கியமானது  விரிவுரைகளை செல்லாமல் இருப்பவர்களை இறுதி பரிட்ச்சைக்கு அனுப்ப முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் .
இது ஒரு #கலை அல்லது #முகாமைத்துவம் போன்ற கல்வியாக இருந்தால் ஏதாவது உதவிகளை செய்யமுடியும் ஆனால் தாதியர் பயிச்சியில் கூடுதலாக ப்ரச்டிசல்  இருப்பதால்தான் அவற்றுக்கு சமூகமளிப்பது அவசியம்.
இந்த குழுமத்தில் உள்ள வைத்தியர்கள் மற்றும் வைத்திய துறை சார்ந்த அறிஞர்கள் உள்ளனர் அவர்கள் தாதியர் ஒழுக்கக்கோவை பற்றி குழுமத்துக்கு தெரியப்படுத்தலாம்.
நான் அண்மையில் தாதியர் ஒழுக்கக்கோவை ஒன்றை மீள்திருத்தம் (ஏடிட்டிங்) செய்ததில் பங்குவகித்தேன். ஓரளவு தெரிந்து வைத்துள்ளேன்.
இது சம்பந்தமாக பீடாதிபதி முஸ்லீம் விரிவுரையாளர்கள் முஸ்லீம் வைத்தியர்களை தொடர்புகொண்டுதான் இந்த மாணவனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்
நாம் திடீர் முடிவுகளை எடுப்பதை விட மிகவும் நிதானமாக தீர்மானம் எடுப்பது சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, colomban said:

விரிவுரைகளுக்கு சென்றிருந்தும் தாடிவைத்திருந்தமை காரணமாக பல சந்தர்ப்பங்களில் விரிவுரைகளில் உட்கார விடாமல் வெளியேற்றப்பட்டிருந்தார். இதனால் பரீட்சைக்கு தோற்றுவதற்கான போதிய வரவு இல்லை என்ற காரணத்தைக் காட்டி தான் பரீட்சை எழுத அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படலாம் என அம்மாணவர் அஞ்சுகிறார்.

31 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த மாணவன் ஒருசில காலம் பல்கலைக்கழகத்துக்கு செல்லாமல் இருந்ததாகவும் அறியக்கிடைத்தது.

அப்பவே நினைச்சேன்! தனத்து தவறை விரிவுரையாளர் மீது சுமத்தி, அனுதாபத்தை தேடுவதும் சலுகைகளை பெறுவதும் தான் தப்புவதுமே நோக்கமாயிருக்குமென்று. சரியாய்ப்போச்சு.

35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த மாணவன் வேறு ஒரு பல்கலை கழகத்தில் இருந்து கிழக்கு பல்கலைக்களத்துக்கு மாறுதல் பெற்று வந்தவர்.

ஏன் மாறுதலாகி இங்கு வந்தவர் என்று விசாரித்தால் உண்மை வெளிவந்துவிடப்போகிறது. இங்கு தமிழரை குற்றம் சொல்லி, பிரிவினையை உருவாக்கி தப்பித்துக்கொள்ளலாம் என நினைத்திருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

அப்பவே நினைச்சேன்! தனத்து தவறை விரிவுரையாளர் மீது சுமத்தி, அனுதாபத்தை தேடுவதும் சலுகைகளை பெறுவதும் தான் தப்புவதுமே நோக்கமாயிருக்குமென்று. சரியாய்ப்போச்சு.

ஏன் மாறுதலாகி இங்கு வந்தவர் என்று விசாரித்தால் உண்மை வெளிவந்துவிடப்போகிறது. இங்கு தமிழரை குற்றம் சொல்லி, பிரிவினையை உருவாக்கி தப்பித்துக்கொள்ளலாம் என நினைத்திருப்பாரோ?

இப்படியான செய்திகளை ஊடகங்கங்களே பெரிது படுத்து விடுகிறது இனவிரிசலை ஏற்படுத்துகிறது

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படியான செய்திகளை ஊடகங்கங்களே பெரிது படுத்து விடுகிறது இனவிரிசலை ஏற்படுத்துகிறது

18 hours ago, alvayan said:

மடவல நியூசு,அக்குரண நியூசு,யாழ்முசுலிம் நியூசு...இவைபாடு கொண்டாட்டம்தான்.....எண்ணேய் ஊற்றுவதற்கென்றே  பார்த்துக்கொண்டிருக்கிறவை..

மடவள நியூஸ், அக்குரண நியூஸ், யாழ்முசுலிம் நியூஸ்.... இந்த மூன்று செய்தித் தளங்களையும் 
கவனித்தீர்கள் என்றால்... தமிழருக்கு எதிரான கருத்துக்களையே அதிகம் காண முடியும். 
இவங்கள் தான் சில விடயங்களை... ஊதி பெருப்பித்து குளிர் காய்கிறார்கள்.
இவைகள்...  ஊடக தர்மத்தை, கடைபிடிக்காத  நேர்மையற்ற ஊடகங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

மடவள நியூஸ், அக்குரண நியூஸ், யாழ்முசுலிம் நியூஸ்.... இந்த மூன்று செய்தித் தளங்களையும் 
கவனித்தீர்கள் என்றால்... தமிழருக்கு எதிரான கருத்துக்களையே அதிகம் காண முடியும். 
இவங்கள் தான் சில விடயங்களை... ஊதி பெருப்பித்து குளிர் காய்கிறார்கள்.
இவைகள்...  ஊடக தர்மத்தை, கடைபிடிக்காத  நேர்மையற்ற ஊடகங்கள்.

சிங்களவர்களை தடவுவார்கள் தமிழர்களை சொறிவார்கள் அவ்வளவுதான் 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த மாணவன் வேறு ஒரு பல்கலை கழகத்தில் இருந்து கிழக்கு பல்கலைக்களத்துக்கு மாறுதல் பெற்று வந்தவர்.

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிங்களவர்களை தடவுவார்கள் தமிழர்களை சொறிவார்கள் அவ்வளவுதான் 

தான் சோம்பேறியாய் இருந்துவிட்டு, விரிவுரையாளரை சொறிந்து சாதிப்பதற்குத்தான் கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு மாற்றலாகி வந்தாரோ? ஏற்கெனவே சொறிந்து காயப்படுத்தி, காரியம் சாதித்து பழக்கந்தானே. இவ்வாறு தமிழனை சொறிந்து சொறிந்து தம்மை நிஞாயவாதிகளாகவும் புத்திசாலிகளாகவும் காண்பித்து அனுதாபம் அனுகூலங்கள் பெற்று பழகிப்போச்சு அவர்களுக்கு. அவர்களோ; இனக்கலவரம் வெடிக்கும் நாட்டை கொளுத்துவோம் என்று எச்சரித்தே காரியம் சாதிக்கிறார்கள் என்றால், இவர்கள் இப்படி. இதற்கெல்லாம் எப்போ முடிவு வரும்? இப்படியே அழுந்தி அழிய வேண்டியதா நம் இனம்? 

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில், அவர் தொழில் ஒழுங்கு முறைமைக்குக் கட்டுப்படாத காரணத்தால்தான் பரீட்சையில் பங்குபெறத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 

நானறிந்த வகையில், கல்வியும் நாகரீகமும் வளர்ச்சியடைய அதற்கு நேரெதிராய் கற்காலத்தை நோக்கிப் போவது இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்ரப்படாமல் பொய் கூறி முன்னேற கிளம்பி, தனது எதிர்காலத்தை தொலைத்துவிட்டாரோ எனத் தோன்றுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட மாணவர் நுசைப்பின் குடும்பமும், கல்விப் பின்னணியும் - குதர்க்கமான கருத்துக்களை நிறுத்துங்கள்

கிழக்கு பல்கலைக் கழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் நுசைப் அவர்களின் தந்தை (சம்மாந்துறை) ஓர் உயர்தர கணிதப்பாட ஆசிரியர் (ISA), தாயார் (அக்கரைப்பற்று) ஓர் வைத்தியர், ஒரு சகோதரர் வைத்தியர், மற்றய சகோதரர் பொறியியலாளர். இவ்வாறான ஓர் கல்விப் பின்னணியினை கொண்ட நடுத்தர குடும்பம். 

நடந்த பிரட்சினை என்ன..? 

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின்  பீடாதிபதி கலாநிதி சதானந்தன் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் ஜனூசா நமச்சிவாயம் ஆகிய இருவரும் இம்மாணவன் தாடி வைத்திருப்பதனைக் கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர். 

சென்ற மே மாதம் 31ம் திகதி பரீட்சை எழுதச் சென்ற இம்மாணவன் தாடியுடன் பரீட்சை எழுத முடியாது என்று சிரேஷ்ட விரிவுரையாளர் ஜனூசா நமச்சிவாய திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். இதனால் குறிப்பிட்ட பாடத்தினை அவரால் எழுத முடியாமல் போயுள்ளது.

இவருடைய கற்கைநெறி தொடர்பில்

இவருடைய கற்கை "தாதியர் தொழிற் கற்கை" இல்லை.

இவருடைய கற்கை "Bsc nursing" இது ஒரு தாதிய தொழிற் கற்கை அல்ல. B.Com / BA, / LLB / Bsc போல ஒரு பட்டப் படிப்புதான் இது.

இதற்கு முன்னர் Bsc Nursing முடித்த யாரும் "தாதிய" நியமனம் பெறவுமில்லை. ஒரு பல்கலைக்கழக பட்டம் முடித்தவர்கள் சாதாரணமாக பெறும் ஆசிரியர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்ற தொழில்களிலேயே உள்ளனர்..

Bsc_nursing பட்டப்படிப்பிற்கு ஏதாவது "ஒழுக்க நெறிமுறைக் கோவை" உள்ளதா..? 

ஆசிரியர் தொழிலுக்காக ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நோக்கில், ஆசிரியர் கல்விக் கல்லூரிகள் உள்ளது போல, தாதியர் தொழிலுக்காக தாதியர்களை பயிற்றுவிப்பதற்காக தாதியர் கல்விக் கல்லூரிகள் காணப்படுகிறது.

இவ் இரு கல்லூரிகளிலும் வழங்கப்படுவது டிப்ளோமா சான்றிதழே தவிர, இது ஒரு பட்டப்படிப்பல்ல. இவ்விரு கல்விக் கல்லூரிகளிலும் மாணவர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் போதே குறித்த கற்கை நெறியின் "ஒழுக்க விழுமியக் கோவை" நிபந்தனையாக முன்வைக்கப்படும். குறித்த நிபந்தனைக்கு உடன்பாடானவர்களே இணைந்து கற்க முடியும். ஆனால் பட்டப்படிப்பிற்கு இவ்வாறு இல்லை. 

இது தொடர்பில் குதர்க்கமான கருத்துக்களை பதிவிடும் மகா உத்தமர்கள் நன்கு ஆராய்ந்து கருத்துக்களை பகிரவும்.

Bsc nursing கற்கை நெறியினை தொடரும் மாணவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் உள்ள "ஒழுக்க விழுமியக் கோவையினை" காட்சிப்படுத்த முடியுமா..?

முடிவாக.. 

பல்லின சமூகம் வாழும் நாட்டில் தமது கலாச்சார விழுமியங்களை சுதந்திரமாக பின்பற்ற முடியாத போதே முரண்பாடுகள் எழுகிறது...

Dr. ஷாபியில் தொடங்கி, சண்முகா வரை இனவாதம் சென்று இன்று கிழக்குப் பல்கலை கழகத்திலும் துவக்கப்பட்டுள்ளதா என்ற அச்சம் எழுந்துள்ளது அவ்வளவு ஆரோக்யமானதல்ல. 

எவ்வளவுதான் அனுபவப்பட்டாலும் படிப்பினை வரவில்லை என்றால், எதிர்காலத்தில் எவ்வாறு அரசியல் ரீதியாக இரண்டு சமூகமும் இணங்கி நடப்பது...?

நிலைப்பாடு..

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் மாணவனுக்கு எதிராக இருந்தாலும் தவறுதான்.. 

கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒரு முஸ்லிம் மாணவனுக்கு எதிராக இருந்தாலும் தவறுதான்.. 

யாழ்பாண பல்கலைக்கழகத்தில் ஒரு சிங்கள மாணவனுக்கு எதிராக இருந்தாலும் தவறுதான்.. 

ஜெயபுர பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் மாணவனுக்கு எதிராக இருந்தாலும் தவறுதான்...

MS. Mohamed Azarudeen

https://www.jaffnamuslim.com/2023/06/blog-post_883.html

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2023 at 08:06, Kapithan said:

முகத்தை 99% மூடிக் கட்டுவார்கள். ஆனால், வெளிநாடுகளுக்குப் போக, உழைப்பதற்காகப் போக, முகத்தைத் திறந்து படம் பிடித்து கடவுச் சீட்டை எடுப்பார்கள். 

மொத்தத்தில் ரசனிகாந்தின் பாடலில் வரும்  "முரண்பாட்டு மூட்டை நீ..""

😁

மத்திய கிழக்கு நாடுகளில் முகத்தை மூடி கட்டுவதெல்லாம் வேறு நோக்கத்துக்காக. அதை பிழையாக விளங்கி இங்கே மார்க்கமென்று மூடி கட்டிக்கொண்டு தெரியுதுகள். அங்கு வேலை செய்தவர்களுக்கு என்னவென்று நல்லாகவே தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்கு நாடுகளில் மணற்புயலின் போது மணல், கண், மூக்கு, காது போன்ற உறுப்புகளில் செல்லாதவாறு  காப்பதற்காக மூடுவார்களாக்கும், இங்கு விஷயம் தெரியாமல் முஸ்லீம் நாகரீகம் அது  மற்றவர்கள் தங்களை பார்க்கக்கூடாது என அர்த்தம் பண்ணி   தொடருகிறார்களோ? அப்படித்தான் நான் நினைக்கிறன். கானமயிலாட பாத்திருந்த வான்கோழி தானுமதுவாக பாவித்து தன் பொல்லா சிறகை விரித்தாடியதோ? அப்பிடித்தானோ குருசோ அல்லது வேறு ஏதும் காரணமோ?

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, colomban said:

பாதிக்கப்பட்ட மாணவர் நுசைப்பின் குடும்பமும், கல்விப் பின்னணியும் - குதர்க்கமான கருத்துக்களை நிறுத்துங்கள்

கிழக்கு பல்கலைக் கழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் நுசைப் அவர்களின் தந்தை (சம்மாந்துறை) ஓர் உயர்தர கணிதப்பாட ஆசிரியர் (ISA), தாயார் (அக்கரைப்பற்று) ஓர் வைத்தியர், ஒரு சகோதரர் வைத்தியர், மற்றய சகோதரர் பொறியியலாளர். இவ்வாறான ஓர் கல்விப் பின்னணியினை கொண்ட நடுத்தர குடும்பம். 

நடந்த பிரட்சினை என்ன..? 

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின்  பீடாதிபதி கலாநிதி சதானந்தன் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் ஜனூசா நமச்சிவாயம் ஆகிய இருவரும் இம்மாணவன் தாடி வைத்திருப்பதனைக் கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர். 

சென்ற மே மாதம் 31ம் திகதி பரீட்சை எழுதச் சென்ற இம்மாணவன் தாடியுடன் பரீட்சை எழுத முடியாது என்று சிரேஷ்ட விரிவுரையாளர் ஜனூசா நமச்சிவாய திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். இதனால் குறிப்பிட்ட பாடத்தினை அவரால் எழுத முடியாமல் போயுள்ளது.

இவருடைய கற்கைநெறி தொடர்பில்

இவருடைய கற்கை "தாதியர் தொழிற் கற்கை" இல்லை.

இவருடைய கற்கை "Bsc nursing" இது ஒரு தாதிய தொழிற் கற்கை அல்ல. B.Com / BA, / LLB / Bsc போல ஒரு பட்டப் படிப்புதான் இது.

இதற்கு முன்னர் Bsc Nursing முடித்த யாரும் "தாதிய" நியமனம் பெறவுமில்லை. ஒரு பல்கலைக்கழக பட்டம் முடித்தவர்கள் சாதாரணமாக பெறும் ஆசிரியர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்ற தொழில்களிலேயே உள்ளனர்..

Bsc_nursing பட்டப்படிப்பிற்கு ஏதாவது "ஒழுக்க நெறிமுறைக் கோவை" உள்ளதா..? 

ஆசிரியர் தொழிலுக்காக ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நோக்கில், ஆசிரியர் கல்விக் கல்லூரிகள் உள்ளது போல, தாதியர் தொழிலுக்காக தாதியர்களை பயிற்றுவிப்பதற்காக தாதியர் கல்விக் கல்லூரிகள் காணப்படுகிறது.

இவ் இரு கல்லூரிகளிலும் வழங்கப்படுவது டிப்ளோமா சான்றிதழே தவிர, இது ஒரு பட்டப்படிப்பல்ல. இவ்விரு கல்விக் கல்லூரிகளிலும் மாணவர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் போதே குறித்த கற்கை நெறியின் "ஒழுக்க விழுமியக் கோவை" நிபந்தனையாக முன்வைக்கப்படும். குறித்த நிபந்தனைக்கு உடன்பாடானவர்களே இணைந்து கற்க முடியும். ஆனால் பட்டப்படிப்பிற்கு இவ்வாறு இல்லை. 

இது தொடர்பில் குதர்க்கமான கருத்துக்களை பதிவிடும் மகா உத்தமர்கள் நன்கு ஆராய்ந்து கருத்துக்களை பகிரவும்.

Bsc nursing கற்கை நெறியினை தொடரும் மாணவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் உள்ள "ஒழுக்க விழுமியக் கோவையினை" காட்சிப்படுத்த முடியுமா..?

முடிவாக.. 

பல்லின சமூகம் வாழும் நாட்டில் தமது கலாச்சார விழுமியங்களை சுதந்திரமாக பின்பற்ற முடியாத போதே முரண்பாடுகள் எழுகிறது...

Dr. ஷாபியில் தொடங்கி, சண்முகா வரை இனவாதம் சென்று இன்று கிழக்குப் பல்கலை கழகத்திலும் துவக்கப்பட்டுள்ளதா என்ற அச்சம் எழுந்துள்ளது அவ்வளவு ஆரோக்யமானதல்ல. 

எவ்வளவுதான் அனுபவப்பட்டாலும் படிப்பினை வரவில்லை என்றால், எதிர்காலத்தில் எவ்வாறு அரசியல் ரீதியாக இரண்டு சமூகமும் இணங்கி நடப்பது...?

நிலைப்பாடு..

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் மாணவனுக்கு எதிராக இருந்தாலும் தவறுதான்.. 

கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒரு முஸ்லிம் மாணவனுக்கு எதிராக இருந்தாலும் தவறுதான்.. 

யாழ்பாண பல்கலைக்கழகத்தில் ஒரு சிங்கள மாணவனுக்கு எதிராக இருந்தாலும் தவறுதான்.. 

ஜெயபுர பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் மாணவனுக்கு எதிராக இருந்தாலும் தவறுதான்...

MS. Mohamed Azarudeen

https://www.jaffnamuslim.com/2023/06/blog-post_883.html

Jaffna Muslim கீழே உள்ள கருத்துக்களை வாசிப்பது நல்லது.
சும்மா தேவையில்லாத விடயங்களை பெரிதாக்கி தமிழர் மீது சேறு அடிப்பதை நிறுத்தவும்.
தாடியுடன் தான்… அந்தப் பெடியன் படிக்க அடம் பிடித்தால், போய் உங்கள் மசூதியில் இருந்து படிக்கட்டும். யாரும் எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை.

On 8/6/2023 at 22:28, விளங்க நினைப்பவன் said:

விரிவுரையாளர்களின் சரியான நடவடிக்கை.  அது ஸ்ரைலுக்கு வைத்த தாடி இல்லை மதஅடிப்படைவாத தாடி. தமிழர்களை பரிட்சித்து பார்க்கிறார்கள்.

On 9/6/2023 at 00:15, alvayan said:

மடவல நியூசு,அக்குரண நியூசு,யாழ்முசுலிம் நியூசு...இவைபாடு கொண்டாட்டம்தான்.....எண்ணேய் ஊற்றுவதற்கென்றே  பார்த்துக்கொண்டிருக்கிறவை..

On 9/6/2023 at 03:10, Cruso said:

அலி சபரியின் தங்க கடத்தலையே அஆதரித்த ஊடகங்கள்தான் இவைகள். 

On 8/6/2023 at 23:45, குமாரசாமி said:

நான் தாடிக்கு எதிரானவன் இல்லை. ஆனால் தாடிதான் என் மதம் என்றால்..... முளையிலையே கிள்ளி விடவேண்டும். 

On 9/6/2023 at 00:48, satan said:

கல்விச் சமூகத்திற்கென்று ஒரு ஒழுங்குண்டு, அதை  அங்கு கற்கும் மாணவர் அனைவரும் பின்பற்றி கட்டிக்காக்கவேண்டிய கடமையுமுண்டு. அதுவே மாணவ ஒழுக்கம்!

On 10/6/2023 at 00:36, Kapithan said:

மொத்தத்தில், அவர் தொழில் ஒழுங்கு முறைமைக்குக் கட்டுப்படாத காரணத்தால்தான் பரீட்சையில் பங்குபெறத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 

நானறிந்த வகையில், கல்வியும் நாகரீகமும் வளர்ச்சியடைய அதற்கு நேரெதிராய் கற்காலத்தை நோக்கிப் போவது இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். 

On 9/6/2023 at 09:57, தனிக்காட்டு ராஜா said:

இவருக்கு பல முறை அறிவுறுத்தல்  கொடுத்தும் அதற்கு கீழ் படியாதவராக இருந்திருக்கிரார்?

ஒரு முஸ்லீம் விரிவுரையாளர் என நினைக்கிறன் அவரின் விளக்கம் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை

கலாநிதி சமீம் சேர் அவர்களின் அழகான விளக்கம்.
-------------------------------------------------------------------------
தாடியை வைத்துக் கொள்வது #பர்ழா? சமூகத்தில் ஒரு தாதிய உத்தியோகத்தர் உருவாகி வருவது #பர்ழா?
எது அவசியம் ? சமூகமே முடிவு செய்.
எடுத்த எடுப்பில் மோடி, இந்துத்துவம், சிவசேனா என்பதெல்லாம் அபத்தமே.
சம்பவம் இதோ : 
இந்த மாணவன் சம்பந்தமாக பீடாதிபதி , விரிவுரையாளர் இன்னும் பலருடன் கதைத்தேன் .
இந்த மாணவன் தாதியர் கல்வி  பயிலும் மாணவன்.  தாதியர் மாணவர்கள் தாடி  வைக்க முடியாது. ஊனிfஒர்ம் அணிவது கட்டாயம்   இது அனைத்து தாதியர் பயிற்சி நிலையங்களிலும் பின்பற்றும் ஒரு  ஒழுக்கம். நான் பல தாதி பயிற்சிகள் மேட்கொள்ளும்போது அவதானித்த  ஒரு விடயம் கூட.
இந்த மாணவன் வேறு ஒரு பல்கலை கழகத்தில் இருந்து கிழக்கு பல்கலைக்களத்துக்கு மாறுதல் பெற்று வந்தவர். இவர் எந்த விதமான பாதுகாப்பு (Hய்கெனிச்) நடவடிக்கையும் இல்லாமல் உலாவுவதாகவும் இவர் சம்பதமான பல முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் இவருக்கு பலமுறை அறிவுரைகள் கூறப்பட்டதாகவும் அறியக்கிடைத்தது.
இந்த மாணவன் ஒருசில காலம் பல்கலைக்கழகத்துக்கு செல்லாமல் இருந்ததாகவும் அறியக்கிடைத்தது.
இந்த மாணவன் வைத்தியசாலை பயிற்சிக்கு (ப்ரச்டிசல்)  தாடியுடன் சென்றதால் வைத்தியசாலையில் இந்த மாணவனைப்பற்றி முறைப்பாடு கிடைக்கப்பட்டதாகவும் அறியக்கிடைக்கின்றது.  
தாதி கல்வியில் Pரச்டிசல் முக்கியமானது  விரிவுரைகளை செல்லாமல் இருப்பவர்களை இறுதி பரிட்ச்சைக்கு அனுப்ப முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் .
இது ஒரு #கலை அல்லது #முகாமைத்துவம் போன்ற கல்வியாக இருந்தால் ஏதாவது உதவிகளை செய்யமுடியும் ஆனால் தாதியர் பயிச்சியில் கூடுதலாக ப்ரச்டிசல்  இருப்பதால்தான் அவற்றுக்கு சமூகமளிப்பது அவசியம்.
இந்த குழுமத்தில் உள்ள வைத்தியர்கள் மற்றும் வைத்திய துறை சார்ந்த அறிஞர்கள் உள்ளனர் அவர்கள் தாதியர் ஒழுக்கக்கோவை பற்றி குழுமத்துக்கு தெரியப்படுத்தலாம்.
நான் அண்மையில் தாதியர் ஒழுக்கக்கோவை ஒன்றை மீள்திருத்தம் (ஏடிட்டிங்) செய்ததில் பங்குவகித்தேன். ஓரளவு தெரிந்து வைத்துள்ளேன்.
இது சம்பந்தமாக பீடாதிபதி முஸ்லீம் விரிவுரையாளர்கள் முஸ்லீம் வைத்தியர்களை தொடர்புகொண்டுதான் இந்த மாணவனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்
நாம் திடீர் முடிவுகளை எடுப்பதை விட மிகவும் நிதானமாக தீர்மானம் எடுப்பது சிறந்தது.

18 hours ago, Cruso said:

மத்திய கிழக்கு நாடுகளில் முகத்தை மூடி கட்டுவதெல்லாம் வேறு நோக்கத்துக்காக. அதை பிழையாக விளங்கி இங்கே மார்க்கமென்று மூடி கட்டிக்கொண்டு தெரியுதுகள். அங்கு வேலை செய்தவர்களுக்கு என்னவென்று நல்லாகவே தெரியும். 

இத்தனை பேரும்… அந்தப் பையனின் செயலை பிழை என்று எழுதிய பின்பும்…
மேலே குறிப்பிட்டுள்ள முஸ்லீம் ஊடகங்கள், தமிழர் மேல் விரோத போக்குடனும்,
காழ்ப்புணர்ச்சியுடனும் தொடர்ந்து எழுதி வருவது மிகுந்த கண்டனத்துக்குரியது.
இந்தச் செயலை… இத்துடன் நிறுத்திக் கொள்ளவும்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.