Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளால் நோயாளிகள் உயிரிழப்பு - மருந்துகளின் தரம் குறித்து ஆராய்கின்றது சுகாதார அமைச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளால் நோயாளிகள் உயிரிழப்பு - மருந்துகளின் தரம் குறித்து ஆராய்கின்றது சுகாதார அமைச்சு

Published By: Rajeeban

19 Jun, 2023 | 11:49 AM
image

இலங்கையில் சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட இரு மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்திய பலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ள நிலையிலேயே அந்த மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது என அமைச்சின் செயலாளர் ஜனக சிறீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

இந்தியா வழங்கிய கடன்உதவியை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டஇரு மருந்துகளே நோயாளிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கையின் மருந்து ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டே இந்த மருந்துகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளிகள் பலர் உயிரிழந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகும் தகவல்கள் குறித்து ஆராய சுகாதாரஅமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது.சுகாதார சேவைபணிப்பாளர் நாயகம் இதற்கு தலைமைதாங்குவார்.

மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து நஸ்ட ஈட்டினை பெறுவது குறித்து குறிப்பிட்ட குழுவினர் ஆராய்வார்கள்இஅந்த நிதியை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் என அமைச்சின் செயலாளர் ஜனக சிறீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணி;ற்கு இந்த மருந்தினை கொடுத்ததை தொடர்ந்து அவர் உயிரிழந்தார்.

குடலிறக்க சத்திரகிசிச்சைக்காக மயக்கமருந்தினை கொடுத்தவேளை அவர் உயிரிழந்துள்ளார்
 

 

https://www.virakesari.lk/article/158039

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து நஸ்ட ஈட்டினை பெறுவது குறித்து குறிப்பிட்ட குழுவினர் ஆராய்வார்கள்இஅந்த நிதியை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் என அமைச்சின் செயலாளர் ஜனக சிறீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

ஆசை, தோசை, அப்பளம், வடை….
இந்தியன் நல்லாய்   நட்ட ஈடு கொடுத்தான். 
பிம்பிலிக்கு பிலாக்காய்… 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

ஆசை, தோசை, அப்பளம், வடை….
இந்தியன் நல்லாய்   நட்ட ஈடு கொடுத்தான். 
பிம்பிலிக்கு பிலாக்காய்… 😂 🤣

சுகாதார அமைச்சர், எங்கண்ட கெஹலிய ரம்புக்வெல்ல, மருந்துக்கொம்பனிகளை ஆய்வு செய்யிறன் என்று இந்தியா போகும்போது, டெய்லி மிரர் பத்திரிக்கையில் கமெண்ட் போட்டார்கள்.... பம்மாத்து மன்னார் அன் கம்பெனிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, பாவனைக்குதவாத மருந்துகளை இறக்கப்போறார் எண்டு...

அப்படியே நடக்குது... இன்று தவறான மருந்துகள் காரணமாக இருவர் இறந்துள்ளனர் 

அண்மையில் இலங்கையில் இருந்த போது.... நேரில் கண்டது... ஒரு உறவு அக்காவுக்கு மார்பு தொடர்பில் நோய். அதற்க்கான biopsy எடுத்திருக்கிறார்கள். அதுவும் தனியார் வைத்தியசாலையில்.

அந்த ரிபோர்டினை எடுக்க ஒரு திகதியில் போயிருக்கிறார். சரியான பிஸி. அடுத்த கிழமை வாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். அவ்வாறு சொன்னவரே லஞ்சமாக பணம் 3,000 ரூபா வாங்கிக்கொண்டு உடனே கொடுத்திருக்கிறார். அதில், அவருக்கு ஆரம்ப நிலை புற்று இருக்கிறது என்று தெரிந்தும், பணத்தினை பறித்திருக்கிறார்கள், மனிதாபிமானம் இல்லா மிருகங்கள்.

பலருக்கு இந்த வித வருத்தங்கள் வருவதன் காரணம், மீன் முதல் இறைச்சி வரை, கெட்டுப்போகாமல் இருக்க, அல்லது கெட்டுப்போனது தெரியாமல் இருக்க இரசாயன கலவை சேர்க்கப்பட்டு வருகிறது. அண்மையில் மட்டக்கிளப்பில் கனடா செல்லவிருந்த பெண் மரணித்தத்துக்கும் இதுவே காரணம் என்கிறார்கள். இரசாயன கலவை அதிகமாக சேர்க்கப்பட்ட மீன், அதிகாரிகள் தூரத்தில் வந்தது, கண்டு தூக்கி எறியப்படுள்ளது. அதனை, அட நல்ல மீனாக இருக்கிறதே என்று எடுத்துக்கொண்டு போயிருக்கிறார், தாயார்.

இலங்கை மிக மோசமான எதிர்காலத்தினை நோக்கி நகர்கிறது. ஒருபக்கம் இனவாதிகள், பிக்குகள், இனவாதம் பேசி மீண்டும் அரசியலுக்கு மகிந்தா கோஸ்டியை கொண்டு வர முயல்கிறது.

இன்னொருபக்கம், இந்திய - சீன மோதல். மேலதிகமாக அமெரிக்கா... 

எங்கே போகப்போகிறதோ தெரியவில்லை. 
 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஆசை, தோசை, அப்பளம், வடை….
இந்தியன் நல்லாய்   நட்ட ஈடு கொடுத்தான். 
பிம்பிலிக்கு பிலாக்காய்… 😂 🤣

நக்குண்டார்

நாவிழந்தார்.

எந்தக் காலமும் இந்தியாவிடம் பிச்சை எடுத்துக் கொண்டு எப்படி எதிராக போராட முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

லஞ்சம் ஊழல் இருக்கும் வரைக்கும் இப்படியான நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும். லஞ்சம் பெற்றுக்கொண்டு தரம் குறைந்த பொருட்களை கொண்டுவருவதால் இவைகளை தடுக்க முடியாது. 

Good things are not cheap. Cheap things are not good.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

இலங்கை மிக மோசமான எதிர்காலத்தினை நோக்கி நகர்கிறது. ஒருபக்கம் இனவாதிகள், பிக்குகள், இனவாதம் பேசி மீண்டும் அரசியலுக்கு மகிந்தா கோஸ்டியை கொண்டு வர முயல்கிறது.

இன்னொருபக்கம், இந்திய - சீன மோதல். மேலதிகமாக அமெரிக்கா... 

எங்கே போகப்போகிறதோ தெரியவில்லை. 

இது நூறு வீத உண்மை உண்மையை பல விதங்களில் சொல்ல சிலருக்கு பிடிப்பதில்லை இன்னும் கனவு கண்டு கொண்டு இருக்கினம் .

சிறீ லங்கா தாயே-நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நம தலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே-நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதேர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல் செறி துணிவருளே - நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதார் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெலாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
 
 
இப்படி கனவிலை பாடிக்கொண்டு ஒரு கூட்டம் இன்னும் இருக்குது .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

இது

Just now, பெருமாள் said:

இது நூறு வீத உண்மை உண்மையை பல விதங்களில் சொல்ல சிலருக்கு பிடிப்பதில்லை இன்னும் கனவு கண்டு கொண்டு இருக்கினம் .

சிறீ லங்கா தாயே-நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நம தலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே-நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதேர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல் செறி துணிவருளே - நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதார் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெலாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
 
 
இப்படி கனவிலை பாடிக்கொண்டு ஒரு கூட்டம் இன்னும் இருக்குது .
 
நமோ நமோ நமோ நமோ தாயே
 
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
 
சிறிய மாற்றம். ஈழ சிரோமணி அழிவுறு பூமணி என்று மாற்றினால் சரியாக இருக்கும். 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

நசரேத் ஊரில் இருந்து நல்லது ஏதும் வரக்கூடுமோ? 

😏

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Cruso said:

Good things are not cheap. Cheap things are not good

சீனா இந்தியா ரஷ்யா  தயாரிப்புகள் மட்டமானவை.
மேலே உள்ள தியறி  கட்டுபாடுகளுடன்  தரமான  தயாரிப்புகள் செய்கின்ற சிறந்த நாடுகளுக்கு பொருந்தாது. விலை மலிவாக இல்லாமால் விலைகூடியதாக உள்ளது தான் தரமானதாக இருக்கும் என்று இல்லை என்பது மேற்குலநாடுகளில் இடம்பெற்ற பல ரெஸ்ருகள் நிருபித்துள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீனா இந்தியா ரஷ்யா  தயாரிப்புகள் மட்டமானவை.

அமேசன் காடுகளுக்குள் இருப்பவர்களுக்கு வெளி உலகம் தெரிய வாய்ப்பிலை என்பது உணரக்கூடியதே.

ஆனால், டொலர் யூறோ நாடுகளில் வாழ்பவர்கள் டொலர்க்கடைப் பொருட்களைப் பார்த்துஉற்பத்தி செய்யும் நாடுகளை எடைபோடுவது சரியான கணிப்பாக இருக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

சீனா இந்தியா ரஷ்யா  தயாரிப்புகள் மட்டமானவை.
மேலே உள்ள தியறி  கட்டுபாடுகளுடன்  தரமான  தயாரிப்புகள் செய்கின்ற சிறந்த நாடுகளுக்கு பொருந்தாது. விலை மலிவாக இல்லாமால் விலைகூடியதாக உள்ளது தான் தரமானதாக இருக்கும் என்று இல்லை என்பது மேற்குலநாடுகளில் இடம்பெற்ற பல ரெஸ்ருகள் நிருபித்துள்ளன.

இந்தியாவில் உள்ள பொருட்கள் பொதுவாக மலிவானதுதான்(விலையிலும் தரத்திலும்) மேற்கத்தைய நாடுகளுடன் ஒப்பிடும்போது. ஆனால் இவர்கள் அதிலும் மலிவான தரமற்ற பொருட்களை வாங்குவதுதான் பிரச்சினை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2023 at 16:38, கிருபன் said:

இந்தியா வழங்கிய கடன்உதவியை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டஇரு மருந்துகளே நோயாளிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

வாங்குவது கடன், உதவி. இதில நல்லது கெட்டது.. இதுக்கு கை நீட்டாமலே இருந்திருக்கலாம். மானத்தையும் உயிர்களையும் காப்பாற்றி இருக்கலாம். கடன் வாங்கும்போது, அதனால் வரும் இழப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உதவியும் வேண்டும், நஷ்ட ஈடும் வேண்டும் என்றால்; இனி அவர்ளிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க கூடாது, வாங்க கூடாது. முடியுமா இவர்களால்? சும்மா தாறவர்கள் தரமானதையா தருவார்கள்? ஏற்கெனவே இருமல் மருந்தோ என்னவோ ஒரு நாட்டுக்கு அனுப்பி அந்த நாட்டுக்குழந்தைகள் இறந்ததாக செய்திகள் இருக்கும்போது, அதற்கு முடிவு காணாமல் இவர்கள் போய் அவர்களிடம் இருந்து உதவி பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னால் இவர்களை என்ன சொல்வது? உண்மையில் சுகாதார அமைச்சரே நஷ்ட ஈடு வழங்கவேண்டும்!

On 20/6/2023 at 12:38, Kapithan said:

நசரேத் ஊரில் இருந்து நல்லது ஏதும் வரக்கூடுமோ? 

😏

எப்போதிலிருந்து இந்தியா நாசரேத்தானது? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

எப்போதிலிருந்து இந்தியா நாசரேத்தானது? 

இது வேதாகமத்திலுள்ள வசனம். இந்த ஊரில்(நசரேத்திலிருந்து - இந்தியாவில் இருந்து ) இருந்து நல்லது எதுவும் வரக்கூடுமோ என்பது இதன் அர்த்தம். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இது வேதாகமத்திலுள்ள வசனம். இந்த ஊரில்(நசரேத்திலிருந்து - இந்தியாவில் இருந்து ) இருந்து நல்லது எதுவும் வரக்கூடுமோ என்பது இதன் அர்த்தம். 

சொல்லாமல் கொள்ளாமல் பெயரை மாற்றி விட்டார்களோ என நினைத்துவிட்டேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.